Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:46:05 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9505
#KOTW9505
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 29, 2012
அல்அமீன் துவக்கப்பள்ளி நிர்வாகி ஆசிரியர் செய்துல்லாஹ் காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4224 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (36) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் அல்அமீன் துவக்கப்பள்ளியின் நிர்வாகியும், எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி நிறைவு பெற்ற ஆசிரியருமான ஹாஜி ஏ.சி.செய்துல்லாஹ் இன்று காலை 09 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 70.

காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரைச் சேர்ந்த இவர், மர்ஹூம் ஏ.சி.எஸ்.அப்துல் காதிர் என்பவரின் மகனும்,
ஏ.சி.மஹ்பூப் அலீ என்பவரின் சகோதரரும்,
ஏ.சி.ஷாஹுல் ஹமீத், மர்ஹூம் எஸ்.ஏ.மன்ஸூர் ஆகியோரின் மச்சானும்,
எஸ்.அஜீஸுல்லாஹ், எஸ்.ஹிதாயத்துல்லாஹ், எஸ்.ஹமீத் பாதுஷா ஆகியோரின் தந்தையும்,
செலக்ஷன் கபீர், பஷீர், காஜா நிஜாமுத்தீன், செய்யித் இப்றாஹீம் ஆகியோரின் மாமனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் - மாலை 06.30 மணியளவில் காயல்பட்டினம் தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

[செய்தியில் கூடுதல் தகவல்கள் இணைக்கப்பட்டது @ 14:21 / 29.10.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by M.S.ABDULAZEEZ (Gz) [29 October 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 23229

inaalilaahia va ina ilaihi rachi on yaa allaah anaarin pavapilai poruthu suvana pathi nalkidi vaayaka aameen. kudumpathinarkal yaavarukkum en assalaamu alikum.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
posted by kazhi Alaudeen (Hong Kong) [29 October 2012]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 23230

மரியாதைக்குரிய ஆசிரியர் சைதுல்லாஹ அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாக .............

மேலும் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவன பதியையும் தந்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by mohamed abdul kader (dubai) [29 October 2012]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23232

இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜுஹூன் மர்ஹூம் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருல்வானாக ஆமீன்

M.A.K.SHAHUL HAMEED IRSHAD & FAMILY
ALIYAR STREET


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. எனது கண்ணீர் அஞ்சலி !!!!
posted by Salai Sheikh Saleem (Dubai) [29 October 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23235

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.....

என்றென்றும் எனது மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரித்தாகிய எனது ஆசான் செய்துல்லாஹ் சார் அவர்களின் வாபாத்து செய்தி அறிந்து மிகவும் கவலை அடைந்தேன்.

எப்போதும் கலகலப்பு , சிரித்த முகம், இஸ்லாத்தின் மேல் பற்றுதல் அதேசமயம் எங்களின் மேல் கண்டிப்பு நாங்கள் நல்லவர்களாக மட்டும் இல்லாமல் நல்ல மார்க்குகள் எடுத்து தலை தூக்கி நிற்கவேண்டும் என்ற முனைப்பு, இவையெல்லாம் எங்களுக்கு வழிகாட்டிய உங்களின் நற்குணங்கள்.

ஒரு நல்லாசிரியர் அதைவிட ஒரு நல்ல மனிதர்.

எனக்கு அவர்கள் ஏழாம் வகுப்பாசிரியர், நான் அவர்களிடம் தான் ட்யூஷனும் படித்தேன். விடுமுறைக் காலங்களில் கூட தனது குடும்பத்தை ஒதுக்கிவைத்து விட்டு எங்களை படிப்பதற்காக உங்கள் வீட்டிற்கு அழைத்து, வீட்டில் இருக்கும் பண்டங்களையும் எங்களோடு பகிர்ந்து கொள்வீர்களே !

அப்படிப்பட்ட ஒரு மாமனிதரை இழந்து நிற்கும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த அனுதாபங்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழைகளை பொருத்தருழ்ந்து மறுமையில் சுவனபதியில் தரித்திருக்க அருள் புரிவானாகவும். ஆமீன்.

குடும்பத்தார்களுக்கு சப்ர் என்ற பொறுமையை கொடுத்தருள்வானாகவும் ஆமீன்

இவன்
உங்களின் ஆயிரக்கணக்கான மாணாக்கர்களில் ஒருவன்
சாளை ஷேக் ஸலீம் & குடும்பத்தார்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அஸ்ஸலாமு அழைக்கும்
posted by Muhammad Shameem (Hong Kong) [29 October 2012]
IP: 202.*.*.* Hong Kong | Comment Reference Number: 23236

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by Tariq (Jeddah) [29 October 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23239

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழைகளை பொருத மறுமையில் சுவனபதி கொடுத்து அருள் புரிவானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Faizal Rahman (Doha - Qatar) [29 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23240

இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜுஹூன்

அன்னாரின் பிரிவால் வாடும் அவர் தம் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினரின் ஸலாம்.மேலும் அல்லாஹ் தங்களுக்கு அழகிய பொறுமையை கடைபிடிக்கசெய்வானாக..

இப்படிக்கு
பைசல் ரஹ்மான்
தோஹா- கத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Noohu Sahib (DUBAI) [29 October 2012]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23241

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .நல்ல ஒரு ஆசானை இழந்து விட்டோம் .அல்லாஹுதஆல அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை அளிப்பனாஹா ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by b.a.buhari (chennai) [29 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23243

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...எல்லோருக்கும் இனியவரே,எங்கள் ஆசிரியரே...
posted by K .V A ..T .புஹாரி ஹாஜி அறக்கட்டளை, (கத்தார் ) [29 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23245

எல்லோருக்கும் இனியவரே,எங்கள் ஆசிரியரே...

கண்ணியத்திற்குரிய - எங்கள் வழிகாட்டியும் - ஆசிரியருமானவரே ,கல்வியோடு எங்களுக்கு , மாரக்கத்தையும் - பள்ளிப்பருவத்திலேயே போதித்த ஆசானே - உங்களின் கல்விப்பட்டரையில் தீட்டப்பட்டு வெளிவந்தவர்கள் - நாங்கள் ...

நீண்ட நெடுங்காலத்திற்குப் பிறகு - கே .வி .ஏ .டி. புஹாரிஹாஜி அறக்கட்டளையின் சார்பில் - தங்கள் அல்-அமீன் பள்ளி மாணவர்களுக்கு - சீருடை வழங்க வந்தபோது - ....:

என் மாணவர்களிலேயே K .V .A .T .கபீரும் - இவரின் சகோதரர்களும் , மாணிக்கங்கள் ....." என்று தங்கள் வாயால் வாழ்த்தியது , என் வாழ்வில் மிகப்பெரிய - சந்தோஷமான தருணமாக நினைக்கிறேன் ..

கருனயுல்லாஹ் அல்லாஹ் - எங்கள் ஆசிரியருக்கு , பிர்தாவ்சில் அஅலா எனும் , உயர்ந்த சுவனபதியை கொடுத்தருள்வானாக,ஆமீன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு - சபூர் எனும் பொறுமையை கொடுத்தருள்வானாக , ஆமீன்.

கே .வி .ஏ .டி . குடும்பத்தினர் மற்றும்
K .V A ..T .புஹாரி ஹாஜி அறக்கட்டளை,
கத்தார் & காயல்பட்டணம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. .இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜுஹூன் .
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [29 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23247

இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜுஹூன் மறியாதைக்குறிய ஆசிரியர் சைதுல்லா சார் அவர்கள் மறைவு கல்வித்துறைக்கோர் இழப்புதான்.

சைதுல்லா சார் அவர்கள் பாடம் நடத்துகிற பாங்கை நினைத்து பார்க்கிறேன்.சில சரித்திர உண்மைகள் எதிர் காலத்தில் இப்படிதான் இனம் மாறி, உருமாறி தோன்றும் என்ற அவர்களின் கணிப்பு எத்தனையோ உண்மையானதை என் அனுபவத்தில் கண்டேன், அதில் ஒன்று பாபரை பற்றிய பாடத்தை கற்பித்தபோது, அவர் கணித்த உண்மை, நடைமுறையாக நிகழ்ந்து கொண்டிருக்கின்ற நிகழ்சிகளை நினைக்கும் போது சைதுல்லா சாரை நினைத்து மனம் நெகிழ்ந்து போனேன்!

அன்னாரின் பிரிவு துயரில் துவளும் அவரின் குடும்பத்தார்களுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய சலாதினை தெருவித்து கொள்கிறேன். அஸ்ஸலாமுஅழைக்கும்! அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by AM.NOORMOHAMEDZAKARIYA (KAYALPATNAM) [29 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23250

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் .....

என்றென்றும் எனது மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரித்தாகிய எனது ஆசான் செய்துல்லாஹ் சார் அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாக .............

மர்ஹூம் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருல்வானாக ஆமீன் !!! ஒரு நல்லாசிரியர் அதைவிட ஒரு நல்ல மனிதர். அப்படிப்பட்ட ஒரு மாமனிதரை இழந்து நிற்கும் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும்.......

இப்படிக்கு
அன்புடன்,
தாங்கள் மாணவர்; ஏ.எம் .நூர் முஹம்மது ஜகரிய்யா ..,காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Samu.A.B (Dubai) [29 October 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23251

இன்னல் லிள்ளஹி வா இன்ன இல்லைய்ஹி ராஜிஊன். May Allah Almighty rest his soul in peace. Heartfelt condolences.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Haddadh-Thrissur (Thrissur) [29 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23253

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Shaik Dawood (MALDIVES) [29 October 2012]
IP: 27.*.*.* Maldives | Comment Reference Number: 23256

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்" எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழைகளை பொருத மறுமையில் சுவனபதி கொடுத்து அருள் புரிவானாகவும். ஆமீன்.

இப்படிக்கு
G M ஷேக் தாவூது
MALDIVES


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by mhsalih (Antananarivo) [29 October 2012]
IP: 41.*.*.* Madagascar | Comment Reference Number: 23257

மரியாதைக்குரிய ஆசிரியர் சைதுல்லாஹ அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையையும்,மேலும் மர்ஹூம் அவர்களுக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் மேலான சுவன பதியையும் தந்தருள்வானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by N.S.BUHARY (al jubail.saudi arabia.) [29 October 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23258

'' இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் "

ஹாஜி.ந.சா.புஹாரி ,
AL JUBAIL.SAUDI ARABIA.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by mohamed azib (holy makkah) [29 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23260

மரியாதைக்குரிய ஆசிரியர் சைதுல்லாஹ அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாக ............. இன்னா லில்ளாகி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Kithuru Mohamed Abbas (Dammam) [29 October 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23261

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைகி ராஜிஹூன் நல்ல அருமையான ஆசிரியர் சைதுல்லாஹ் அவர்கள். இவரின் பிரிவால் வாடும் அவரின் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையையும் ஆசிரியர் அவர்களுக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவன பதியையும் தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by ATC ABUBACKER (Dubai) [29 October 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23263

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

இறைவன் அன்னாரது பாவங்களை மன்னித்து, குடும்பத்தார் அனைவர்க்கும் பொறுமையை தந்தருள்வானாக...

S.M.B. MOHAMED ABUBACKER & FAMILY


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. To Allah We Belong, And To Him We Shall Return !
posted by Salai.Mohamed Mohideen (USA) [29 October 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 23265

Inna lillahi wa inna ilaihiya raajioon. Everything must return to Allah !

Remembering my school days in Elkay. Very nice & wonderful teacher. May Allah forgive the deceased sins, grant him peace and the highest place in Jannah, Al Firdous. Ameen!

May Allah give the deceased family & his friends the 'sabran Jameela' during this difficult time and accept the 'qadr' of Allah.

On remembering death of our beloved ones, let us vow to cleanse ourselves by distancing from sins (of any kind)... turn to Allah before we return to him. May Allah guide & help us to prepare ourselves to the final destination Ameen!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:... இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்
posted by sayed peer bhamin (dubai) [29 October 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23270

மரியாதைக்குரிய ஆசிரியர் சைதுல்லாஹ அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாக .............

மேலும் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவன பதியையும் தந்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...இரங்கல்
posted by NIZAR AL (kayalpatnam) [29 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 23271

இறுதிவரை கல்விபணியாற்றிய மரியாதைக்குரிய ஆசிரியர் அவர்களை இழந்து வாடும் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன்.

அல்லாஹுக்காக சபூர் செய்து அவர்களின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம். அல்லாஹ் அவர்களுக்கு நல்ல உயர்ந்த இடத்தை அளிப்பானாக ஆமீன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by S.A. புஹாரி (smb) (makkah) [29 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 23272

அஸ்ஸலாமு அலைக்கும் <
br> ஏழைகளையும் அனாதைகளையும் ஆத்ரியுங்கள் என்ற இறைவாக்கை உண்மைப்படுத்தி அனைத்து சமுதாய மக்களும் கல்வி ஒளி பெற்று முன்னேற வேண்டும் என்பதற்காக அரும்பாடு பட்ட மரியாதைக்குரிய இரக்கமுள்ள ஆசிரியர் செய்துல்லா சார் அவர்களுக்கு மறுமை வாழ்வை ஒளிமயமாக ஆக்கி ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சுவன வாழ்வை வல்ல இறைவன் கொடுப்பானக. ஆமின் ........

ஆயிஷா ஜின்னீரா
ஐதுரூஸ் ஆலிம் குடும்பத்தார்கள்
ஆலியார் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by shaikfazil (riyadh) [29 October 2012]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23278

மரியாதைக்குரிய ஆசிரியர் சைதுல்லாஹ அவர்களின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாக .............

மேலும் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவன பதியையும் தந்தருள்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by A.H. Mohamed Ismail (Hyderabad) [30 October 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 23279

இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜுஹூன் மர்ஹூம் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருல்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by N.ABDUL KADER (COLOMBO) [30 October 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 23284

இன்னலில்லாஹி வஇன்னஇலைஹி ராஜுஹூன் மர்ஹூம் அவர்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவனபதியை கொடுத்தருல்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by Sulthan (Dubai) [30 October 2012]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23288

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. ஆரோக்கியத்துடன் இருந்த மனிதர் திடீரென மரணமாகி விட்டார்..............
posted by S.K.Shameemul Islam (Chennai) [30 October 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23290

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

நேற்று IIM உள்ஹிய்யா பணிகளில் பங்கேற்று விட்டு குட்டியாப்பள்ளியிலிருந்து திரும்பும்போது காலை 10.15 மணிக்கு மரணச்செய்தி கிடைத்தது. வீடு சென்றதும் அல் அமீன் பள்ளியில் பயின்று வரும் என் மருமக்கள் பள்ளி விடுமுறை விடப்பட்டு விட்டதாகக் கூறி 'செய்துல்லாஹ் சார் மவுத்தாயிட்டாங்க' னு காரணத்தையும் சொன்னார்கள்.

'ரெம்ப நல்ல சாருங்கோ' என்றாள் மூன்றாம் வகுப்பில் படிக்கும் என் மருமகள். அவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கம் கொடுக்க துஆ செய்யுங்கள் என்றேன் நான். என் தாயார் ' அந்த ஸ்கூலை நன்றாக உருவாக்கி கட்டிக் காத்தார்; இனி இதர நிர்வாகிகள் அப்பணியை இன்னும் சிறப்பாக செய்யவேண்டும்' என ஆதங்கப்பட்டார்கள். அவரைப்போல நிர்வாகத்தில் உள்ள பிறருக்கு அந்த பொறுப்பை அல்லாஹ் உணர்த்துவான், அவர்கள் முன்வருவார்கள் என்றேன்.

எல்.கே. மேனிலைப்பள்ளியில் பயிற்றுவித்த ஆசிரியர்களுள் இவரும் ஒரு மாணிக்கம்.

மாணவர்களின் வளர்ச்சிக்காக அரும்பாடு படுவார். நல்லொழுக்கத்தை வளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் சிறந்து விளங்கி தாமே ஒரு முன்மாதிரியாகவும் திகழ்ந்தார். தமது சொந்த பிள்ளைகளையும் அதுபோலவே உருவாக்கினார். மார்க்கத்தைப் பேணுவதிலும் தொழுகையை குறித்த நேரத்தில் தொழுவதிலும் எப்போதுமே குறிப்பாக இருப்பார். சுகம் விசாரிப்பதிலும் இவர் விசாரிப்பில் ஒரு தனி அழகுண்டு. என் தந்தை எஸ்.கே. அவர்களுக்கு மிகவும் பிடித்தமான என் ஆசான்களுள் ஒருவர்.

நேற்று சென்னைக்குப் புறப்படும் முன் அவரது உடலை அவரின் வீட்டில் சென்று பார்த்தேன்.

எப்போதும் போல சாந்தமான முகமாகவே எனக்கு அது தென்பட்டது. (அல்லாஹ் மிக அறிந்தவன்). அழுது கொண்டிருந்த அவரது குடும்பத்தவருக்கு ஆறுதல் கூறி வந்தேன். ஒரு வாரமாக உடல் நலம் சரியில்லாததாகவும் திருநெல்வேலியில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் வைத்து பரிசோதித்ததாகவும் எல்லாமே நன்றாகி காய்ச்சல் மட்டும் நிற்காததால் நெஞ்சுவலி ஏற்பட்டுவிட்டதாகவும் அவர்களின் குடும்பத்தில் ஒருவர் கூறினார்.

ஒருவரின் முடிவுக்கு ஏதாவது ஒரு காரணம் வேண்டும் அவ்வளவுதான். மொத்தத்தில் ஆரோக்கியத்துடன் இருந்த மனிதர் திடீரென மரணமாகி விட்டார்.

வல்ல ரஹ்மான் அவரது பிழைகளைப் பொறுத்து பாவங்கள் அனைத்தையும் மன்னித்து மண்ணறையிலும் மறுமையிலும் உயர்பதவியைக் கொடுத்தருள்வானாக. சுவர்க்கத்தில் ஜன்னத்துல் பிர்தவ்ஸில் அ'லாவில் சேர்த்தருள்வானாக. ஆமீன்.

கவலையுடன்,
எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம்,
மற்றும் குடும்பத்தினர், காயல்பட்டணம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by kulam (bangalore) [30 October 2012]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 23292

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by sayed abdul bari (kaalpatnam) [30 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23294

செய்துல்லாஹ் சார் அவர்களின் வபாத்து அறிந்து ஆழ்ந்த கவலை. அவர்கள் கல்விக்காக் தன்னை அர்பனித்து கொண்டவர். ஆண்டவன் அவர்கலுக்கு நற் பதவியை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...
posted by L.A.K.BUHARY (Hong kong) [30 October 2012]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 23296

இன்னலில்லாஹி வ இன்னா இலிஹி

ராஜிவூன்....கண்ணியத்திற்குரிய ஆசிரியப் பெருந்தகை அல்ஹாஜ் செய்துல்லாஹ் சார் அவர்கள் வபாத் செய்தி அறிந்து மனம் வேதனை அடைந்தது. சாந்த குணமும் ,கல்விப்பணியில் அர்ப்பணிப்பும் மறைந்த எமது ஆசிரிறரின் தியாக உள்ளங்களை அறிய முடியும்.

சுமார் இருவாரங்களுக்கு முன்பு துபையில் பிரபல நகை நிறுவனத்தில் பணியாற்றும்அன்னாரது தம்பி மகனாரிடம் தொலைபேசியில் ஆசிரியரை பற்றி விசாரித்து நினைவு பகிர்ந்தோம்.இறைவனிடம் சேர்ந்துவிட்டார்கள் இன்று ...!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜென்னத்துல் பிர்தௌசே இல் சேர்த்தருல்வானாக ..ஆமீன்.. மர்ஹூம் அன்னாரது குடும்பத்தினர்க்கும்.. குறிப்பாக அஜீசுல்லாஹ் காக்கா அவர்களுக்கும் எங்களது ஸலாம்.அல்லாஹ் தங்களுக்கு அழகிய பொறுமையை கடைபிடிக்க செய்வானாக..ஆமீன்

எல்.ஏ.கே.ஸல்ஸபீல் &
எல்.ஏ.கே.புஹாரி .
எல்.கே.காலனி .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...
posted by mohideen thambi s a m (jeddah) [30 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23297

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. அன்புக்குரிய ஆசானின்...அகால மரணம்.
posted by M.N.L.முஹம்மது ரபீக், (புனித மக்கா.) [31 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23319

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்ஜியூன்....

அல்-அமீன் பள்ளியின் நிர்வாகி என்றது யாரோ என இருந்து விட்டேன். என் அன்புக்குரிய ஆசானே! என்னை மன்னித்து விடுங்கள். கடந்த வாரம் தான் எல்.கே. பள்ளியின் காவலர் சுடலை அண்ணன் மறைவுக்கு கருத்தெழுதும் போது உங்கள் பெயரை குறிப்பிட்டிருந்தேன். எம்மிடம் இருந்து பிரியா விடை பெறுவதற்காகத் தான் அன்று என் நினைவில் வந்தீரோ...?

ஒழுக்கம், மார்க்கப்பற்று, தொழுகை இப்படி அனைத்திலும் சிறந்து விளங்கினீர்களே...? வரலாறு பாடம் எடுத்து வரலாறு காணாத வாத்தியாராக செயல் பட்டு சென்று விட்டீர்கள். உங்கள் வீட்டில் நான் ட்யூஷன் படிக்கும் போது பண்ணாத அட்டகாசம் இல்லை! மன்னித்து விடுங்கள். அறியாத பருவத்தில் (சிறு வயதில்) சிறு பிள்ளைத்தனமாக ஏதேனும் நான் செய்திருந்தால் பொருத்தருள வேண்டுகின்றேன்.

இறைவா! எங்கள் ஆசான் அவர்களின் எல்லா அமல்களையும் நீ அங்கீகரித்து அதற்கான நற்கூலியை அதிகமாக மறுமையில் வழங்கி அண்னாரை சுவனபதியில் பிரவேசிக்கச் செய்தருள்வாயாக...ஆமீன். கனத்த நெஞ்சோடு,
-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. வரலாறைத் தந்த வரலாறு!
posted by S.K.Salih (Kayalpatnam) [31 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23321

பள்ளியில் பயிற்றுவிக்கப்படும் வரலாறு பாடங்களில் - குறிப்பாக இளநிலை மாணவர்களுக்கான வரலாற்றுப் பாடங்களில், பல திரிபுகள் தயக்கமின்றி வெளியிடப்பட்டிருக்கும்.

எடுத்துக்காட்டாக, மொகலாய அரசு குறித்து சொல்லப்படும் பாடத்தில், அக்பர் மகாசக்கரவர்த்தி என்றும், அவர் மத நல்லிணக்கத்தைப் பேணியவர் என்றும், தீனே இலாஹி என்ற புதிய சமயத்தைத் தோற்றுவித்தவர் என்றும் இருக்கும்.

அது உண்மை! இருந்துவிட்டுப் போகட்டும்!!

அதே பாடத்தில், அவுரங்கசீப் மன்னர் குறித்து குறிப்பிடப்படும்போது, அவர் தொப்பி விற்றும், கையால் திருக்குர்ஆனை எழுதி பிரதிகளை விற்றும் வாழ்ந்தார் என்பது போன்ற ஒரு சில உண்மைகளைத் தெரிவித்துவிட்டு, அவர் இந்துக்களின் கோயில்களை இடித்தார்... இந்துக்களிடம் ஜிஸ்யா வரியை கட்டாயமாக வசூலித்தார்... என்பன போன்ற பல பொய்கள் சொல்லப்பட்டிருக்கும்.

இப்பாடங்களை அனைத்து முஸ்லிம் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் அப்படியே நம்பிப் படித்து வந்த நிலையில், எங்களது - குறிப்பாக எனது இளம்பருவத்திலேயே இதுகுறித்து அலசி ஆராய்ந்து சிந்திக்க வைத்த காரணிகள் மூன்றே மூன்று!

(1) எனது தந்தை மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) அவர்கள்... (2) நான் மார்க்கக் கல்வி கற்ற என் மத்ரஸா ஹாமிதிய்யா...

(3) எனக்கு பள்ளியில் வரலாறு பாடம் நடத்திய மதிப்பிற்குரிய செய்துல்லாஹ் சார் அவர்கள்...

என் அன்பு ஆசான் அவர்கள் அந்தப் பாடங்களை நடத்தும்போதே அதன் உண்மை நிலையையும் விளக்கி, இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகள் செய்யப்படுவதற்கான காரணம் - அவற்றைச் செய்வது யார் என்பன போன்றவற்றையும் தெளிவாக விளக்கிப் பாடம் நடத்துவார்.

இவர்களது இந்தப் பாடம் நடத்தலின் மூலமாக, என்னைப் போல மார்க்கக் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லாத மாணவர்கள் கூட உண்மையை உணர்ந்துகொள்வார்கள்.

இன்று அந்த நல்லுள்ளம் நம்மோடு இல்லை. ஆனால் அவர் தந்த கல்வி ஆயிரக்கணக்கான மாணவர்களின் நெஞ்சங்களில் ஆழப்பதிந்துள்ளது. அதன் மூலம் அவர் நம்மோடு வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார் என ஆறுதல் கொள்வோம்.

கருணையுள்ள அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப் பொருத்தருளி, அவர்களின் நற்கருமங்களை கபூல் செய்து, மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தை நற்கூலியாக நல்கியருள்வானாக, ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தார், உற்றார் - உறவினர், எல்.கே.மேனிலைப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், அல்அமீன் துவக்கப்பள்ளி நிர்வாகிகள் - ஆசிரியர்கள் - மாணவ-மாணவியர் என அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம். அல்லாஹ் உங்கள் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.

அன்புடன்,
ஆசிரியரது அன்பு மாணவன்
எஸ்.கே.ஸாலிஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:...
posted by mohideen (empuli) (kayalpatnam) [31 October 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 23348

இன்னா லில்லஹீ வஇன்ன இலை ஹி ராஜிஹூன்,அன்னாரை பிரிந்து வாடும் குடும்பத்தில் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளவும் .அவர்கள் கல்வி சேவைகள் சதகத்துல் ஜரியாக அக எல்லாம் வல்ல இறைவன் அக்குவனாக அமீன் .மேலும் அவர்கல் மேற்கொண்ட பனி மேலும் சிறப்பா நடக்க இறைவனிடம் பிராத்தனை செய்வோம் அமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved