Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:12:33 AM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9509
#KOTW9509
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 29, 2012
தமிழ்நாடு முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா “உலக சிக்கன நாள்” வாழ்த்துச் செய்தி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2529 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நாளை (அக்டோபர் 30) உலக சிக்கன தினம் (World Thrift Day) அனுஷ்டிக்கப்படுகிறது. இது குறித்து தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

பொது மக்களுக்கு சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் திங்கள் 30-ஆம் நாள் உலக சிக்கன நாளாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு மனிதனும் தனது உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தன் குடும்பத்திற்கும், நாட்டிற்கும் பயன்படும் வகையில் சேமித்தல் மிகவும் அவசியமாகும்.

“சிறுக கட்டி பெருக வாழ்” என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட சிறு வயது முதலே அனைவருக்கும் சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவித்தல் வேண்டும்.

சிறுசேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்வதால் அந்தத் தொகைக்கு உத்தரவாதமும், சிறுக சிறுக சேமிக்கும் தொகை பெருகி அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் பயன்படுகிறது. எனவே, பொது மக்கள் அனைவரும் தமிழக அரசின் சிறுசேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து சேமிக்கும் பழக்கத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டுமென அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன்.

“இன்றைய சேமிப்பே நாளைய பாதுகாப்பு” என்பதால் தமிழக மக்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கை வளம் பெற அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்க வேண்டும் என இந்த உலக சிக்கன நாளில் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஜெ ஜெயலலிதா,
தமிழக முதலமைச்சர்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி – மக்கள் தொடர்புத் துறை,
சென்னை - 9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Cnash (Makkah) [29 October 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23252

வருடத்தில் உள்ள ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தினம் என்று போட்டு கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். சிக்கனத்திற்கு ஒரு தினம் செலவழிக்க ஒரு தினம் என்று கொண்டாட்டம் வேறு!!

இப்படி வாழ்த்து அறிக்கை விடும் அரசு தங்களிடம் இருந்து சிக்கனத்தை மக்களுக்கு கற்று கொடுக்கட்டும். அண்ணா வளைவு கட்ட ஒரு செலவு அகற்ற ஒரு செலவு, மீண்டும் இடிந்த வளைவை ராட்சச கிரேன் கொண்டு தாங்கி பிடிக்க தினமும் லட்ச கணக்கில் வாடகை!!

அண்ணா நூற்றாண்டு நுலகம் இடிப்பு, தலைமை செயலகம் என்று சொல்லி கொண்டே போகலாம்!! அவர்கள் இப்படியென்றால் இவருக்கு முன்னிருந்தவர் " THrift Day" மாதிரி அவர் ஆட்சி காலம் முழுவதும் THEFT DAY கொண்டாடி சாதனை படைத்து விட்டார். அவரோ கட்டி முடிக்காத தலைமை செயலகத்திற்கு தோட்டா தரணியை வைத்து சினிமா பாணியில் செட் போட்டு 3 கோடியை எப்படி சிக்கனமாக செலவழிப்பது என்று வரும் அரசுக்கு பாடம் கற்பித்தார்.. இந்த அரசுகள் தான் நமக்கு சிக்கனம் பற்றி நினைவோட்டுகிறது வருடத்திற்கு ஒரு முறை????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. மின்சார சிக்கனம்......
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [29 October 2012]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 23273

சகோ. CNAS அவர்களே....

ஒருவேளை அவங்க மின்சாரத்த பத்தி சொல்லிருக்கலாம்....
நாம தான் தப்பா புரிஞ்சிக்கிட்டோம்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...சிறுசேமிப்பு
posted by NIZAR AL (kayalpatnam) [29 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 23276

அஞ்சல் வழி சேமிப்பு என்பது மாணவர் பருவத்தில் இருந்தே தெரிந்த செய்தி,முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சிருசேமிப்பில் இனைய சொல்கிறாரே இது எனக்கு புதிய விசயமாக உள்ளது,அது எங்கே இணைவது எப்படி என்பது என்னைப்போல் இதுபற்றி விவரம் தெரியாதவர்கள் இருப்பார்கள் என எண்ணுகிறேன். சிக்கனம் வாழ்வுக்கு இன்றியமையாததும்,உதாரிதனமான செலவு மனிதனை வறுமையில் தள்ளிவிடும் என்பது நிதர்சனமான நாம் காணுகிற ஒன்றாகும்.சிக்கனத்துக்கு முன் மாதிரியாக இருக்கவேண்டிய ஆட்சியாளர்கள் அரசு விழாக்கள் என்ற பெயரில் பல கோடிகளை விரயம் செய்கிறார்கள்,இவர்கள் நாட்டுபனத்தை சிக்கனம் செய்தால் நாடு வளம் பெரும் என்பது நிச்சயம்.காதல்தினம் போன்ற கலுசடை தினங்கள் இருப்பதற்கு சிக்கனனால் என்பது எவ்வளவோ மேலானது .

YOURS,
NIZAR AL


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. prouded one
posted by syedahmed (GZ, China) [30 October 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 23282

Small saving scheme introduced by our CM will be reached highly very soon between the people which cause to avoid the extravagance in life budget. Like such postal scheme as Indra Vikas Patra and other beneficial schemes are obtaining good profit nowadays, and people were aware of these types of small savings continuously and compulsorily for yielding their cost at right level. " SMALL DROPS OF WATER BECOMES OCEAN"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. சட்ட சபையில் நேற்று----
posted by HASBULLAH MACKIE (Dubai) [30 October 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 23285

சிக்கனத்தை பேசும் அம்மா ஒரு விஷயத்தை மறந்து விட்டார் போலும்...

நேற்று சட்ட சபை நிகழ்வில் முக்கியமான ஒன்று புதிய துணை தலைவர் பதவியேற்பு.....

அடேங்கப்பா ! அம்மாவின் புகாலாரமே பிரதானம்...

அதில் நிதியமைச்சர் அறிக்கை வாசிக்கிறார்... 60 ஆம் ஆண்டு வைர விழாவாம்.. அதற்காக ஒரு arch அல்லது ஒரு மணிமண்டபம் கட்டுவதற்கு 8 கோடி ரூபாய் ஒதுக்கீடாம்..

தேவையான மின்சாரம் கிடைப்பதற்கு வழி இல்லை... அதற்க்கான முயற்சியும் இல்லை..

இதற்கிடையில் அம்மாவின் கட்டளை..

தமிழகத்தில் power cut இவ்வளவு மோசமாவதற்கு காரணம் கருணாநிதி தான் என்பதை cable tv யில் காட்டி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமாம். அப்படி செய்தால் power cut இல்லாமல் ஆகி விடுமோ...? என்ன ஒரு அருமையான திட்டம்...

இவர்கள் எல்லாம் சிக்கனத்தை பற்றி பேசுகிறார்கள்....

இலவச மடிக்கணினி , இலவச மின்விசிறி, இலவச தாலி, இலவச மிதி வண்டி, இலவச grinder ,, அப்பப்பா இவ்வளவு இலவசமா...? ஆட்சியின் ஒரு வருடத்தில் எத்தனை நல்ல திட்டங்கள்...? ஆனால் இதனை இலவசங்களையும் உபயோக படுத்து வதற்கு தேவை மின்சாரம்.

சம்சாரம் இருக்கிறது ஆனால் மின்சாரம் இல்லை....

ஒரு மானவளுக்கு இலவச மடிகணினி கிடைத்த சந்தோஷத்தில் தன்னுடைய அம்மாவிடம் சொன்னாளாம்.... அம்மா எனக்கு மடிக்கணினி இலவசமாக கொடுத்திருக்கிறார்கள் என்று... அதற்கு மறுபடியாக அந்த அம்மா, ஏண்டி, battery charge தீர்ந்து விட்டால் மீண்டும் recharge பண்ணுவதற்கு ஒங்க அப்பனா current தருவான் ? என்று கேட்டலாம்.. use & throw ஆக வேண்டுமென்றால் use பண்ணிக்கொள் என்றாளாம்.

பிரமிக்க வைக்கும் ஆட்சி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. New Trend
posted by Riyath (HongKong) [30 October 2012]
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 23287

The Latest trend is advising people whatever the leader cant do or follow. This way to see how would their advise work in the real time.

Knowing about saving with no money is useless, the real problem is struggling to survive in this economic condition with insufficient electricity and water, impure environment, hike in fuel, etc.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved