Twitter hasthagas in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Weddings Special Page in Kayalpatnam.com
Current Kayalpatnam Time
4:45:53 PM
புதன் | 26 அக்டோபர் 2016 | துல்ஹஜ் 55, 1437 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:0815:2818:0419:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்02:38
மறைவு17:57மறைவு15:08
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:1905:44
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1818:4319:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: எழுத்து மேடை கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
கருத்துக்கள்
எண்ணிக்கை
1295
பக்க எண்
1/130
பக்கம் செல்ல
எழுத்து மேடை: தலாக்! தலாக்!! தலாக்!!! - வெறிக்கூச்சலும் வெளிச்சமான உண்மையும்!!! [ஆக்கம் - எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அஸ்தஃஃபிருல்லாஹுல் அழீம்.
posted by Sheikh Abdul Qader (Riyadh ) [19 October 2016]
IP: 93.*.*.* Romania | Comment Reference Number: 44820

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு. இறையருள் நிறைக.

அஸ்தஃஃபிருல்லாஹுல் அழீம். எல்லா மதங்களும்,மார்க்கங்களும் மனித,உலகஜீவராசிகளின் வாழ்விற்கும் நன்மைகிடைக்கவேண்டும் நல்லவை நடக்கவேண்டுமென்றே வகுக்கப்பட்டது அதனால்தான் அவரவர்வேதங்களின்படியும்,உபந்நியாசங்களின்படியும் வாழவழிவகைசெய்கிறது,

ஆனால் இந்தியா ஒருஜனநாயகநாடு என்பதைமறந்து இன்றைய இந்தமத்தியஅரசு பொதுசிவில் சட்டம் என்ற ஆயுதத்தைக்கயியலெடுத்து மற்றவர்களின் நம்பிக்கையில்தலையிட்டு அதில்குளிர்காயநினைக்கிறது அல்லது விளம்பரம்தேடுகிறது இந்தியா ஒரு சுதந்திரகுடியரசுநாடுதானா? என்றுசந்தேகம்வருகிறது எங்களின் இந்த ஷரீஅத் விஷயத்தில் உங்களுக்கு ஏதாவது சந்தேகமிருந்தால் அதற்கான விளக்கங்கள்தர மார்க்கஅறிஞர்களிருக்கிறார்கள் (ஆன்,பெண் இருபாலருக்கும்) அவர்களுக்குத்தெரியப்படுத்தி ஒருஆலோசனைக்குழுஅமைத்து அவர்களின்கருத்துக்களைக்கேட்டு அதன்படிசெயல்படுங்கள் அதைவிட்டுவிட்டு இஸ்லாமெனும் மகாசமுத்திரத்தில் அஸ்தஃஃபிருல்லாஹுல் அழீம்.

ஏதோசில இறால்குஞ்சுகள் தனதுஅலகில் மலத்தைவைத்துக்கொண்டு உலகமே துர்நாற்றமடிக்கிறது என்றுபிதற்றுவதைக்கையிலெடுத்துக்கொண்டு அதற்குஆதரவாக அந்தமகாசமுத்திரத்தில் ஒருகுச்சியைவிட்டுகலக்கி களங்கம்விளைவிக்கலாமென்று நினைப்பது எந்தவிதத்தில் அறிவைச்சாரும்.

நீங்கள் படித்தவர்கள் குர்ஆனைப்படியுங்கள்,நபியின் போதனைகளையும் அவர்கள்வாழ்ந்த வாழ்க்கைவரலாற்றையும் படித்துப்பாருங்கள் இன்ஷா அல்லாஹ் தெளிவுகிடைக்கும் பிறகுசொல்லுங்கள் ஷரீஅத் சரியா/பிழையா அப்பொழுதுதான் இறையான்மை,நெறியோடுசேர்ந்த ஆட்சிசெய்யமுடியும் இல்லையென்றால் விரைவிலேயே அஸ்திவாரம்வலுவிழந்து வீழ்ந்துவிடும்

இந்தவிஷயத்தில் குறிப்பாக பெண்கள் மிகமிக விழிப்புணர்வோடுசெயல்படவேண்டும் காரணம் வெகுவாகப்பெண்கள்தான் பகடைக்காய்களாகப்பயன்படுத்தப்படுகிறார்கள் ஷரீஅத் பெண்களுக்கு நிச்சயமாக ஹிஜாபாக பாதுகாப்பாக செயல்படுகிறது எனவே நமது உரிமைகளில்,உணர்வுகளில் கைவைக்கநினைப்பவர்களுக்கு நமது எதிர்ப்பைக்காண்பிக்கவேண்டும் நமது உரிமைகளுக்கு பங்கம் வராமல் வாதாடிதக்கவைத்துக்கொள்வதும் ஈமானின் முக்கிய அங்கமாகும் நமக்குள் கருத்துவேறுபாடுகளிருக்கலாம், ஆனால் நமது புனித கலிமாவாகிறது "லாயிலாஹ இல்லல்லாஹு முகம்மதுர்ரஸூலுல்லாஹ்" என்பதிலும் ஈமான்கொள்வதிலும் கடமைகளிலும் எந்தமாற்றமுமில்லை

எனவே தாய்மார்களும் சகோதர,சகோதரிகளும் நிலைமையிப்புரிந்துகொண்டு ஒற்றுமையாக எல்லோரும் இணைந்து நமதுக்கருத்துக்களைப்பதிவிட்டு எதிர்ப்பைக்காட்டி ஷரீஅத்தைப்பேணுவோம் இன்ஷா அல்லாஹ் அல்லாஹு தஆலா என்றும் நம்முடனிருக்கிறான் ஆமீன் அல்லாஹு அக்பர்

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: தலாக்! தலாக்!! தலாக்!!! - வெறிக்கூச்சலும் வெளிச்சமான உண்மையும்!!! [ஆக்கம் - எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காலத்தின் அவசியம்
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டினம்) [19 October 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44818

ஷமீம் காக்காவின் இவ்வழகிய ஆக்கம் காலத்தின் அவசியம். வேற்றுமையில் ஒற்றுமைக் கண்ட இத்தேசத்தின் இழி நிலை மாறிட இறைவனை பிரார்த்திப்போம்.

எவருக்கும் எளிதாய் புரியும் வண்ணம் அழகுற எழுதப்பட்ட இதனை காயலுக்கு வெளியிலும் கொண்டு சேர்க்கும் பொருப்பை அரசியல் கட்சிகளின் அபிமானிகளும் இஸ்லாமிய அமைப்புகளை சார்ந்தவர்களும் (தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளை மறந்து) ஏற்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: சாம்பல் மலர் [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அவசியமான பங்கேற்பு
posted by அ.ர.ஹபீப் இப்றாஹீம் (காயல்பட்டினம்) [19 October 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 44816

பயணங்கள் நமது சிறந்த ஆசான்களாக மாறுகிறது. அவை தரும் படிப்பினைகள் வாழ்வின் பல இக்கட்டான தருணங்களில் பேருதவி புரியும்.

காந்திய சிந்தனைகளை தேடிய இப்பயணமும் அதற்கான கல்வியை முறையாக அளிக்காமலில்லை. நாட்டின் பொருளாதாரத்தை காந்திய சிந்தினையோடு ஒருங்கிணைத்து அழகுபார்த்த ஜே.சி.குமரப்பாவின் வாழ்வை அறிந்துக்கொண்தே ஓர் அழகான கல்வியாய் அமைந்தது. அவரது ஆசிரமத்தில், எங்களின் வழிகாட்டியாக ஓர் ஓய்வுப்பெற்ற கிராம அலுவலர் (பெயரை மறந்துவிட்டேன்) உதவினார்.

அம்மதிப்பிற்குரிய பெரியவர், “முஸ்லிம்களதான் தீவிரவாதினு சொல்லுரானுவோ. அவங்கதான் காந்தியையும் குமரப்பாவையும் தேடி வந்திருக்காங்க”, எனும் தொணியில் கூறிய அவ்வார்த்தைகள் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

சுமார் முப்பது பேர் கலந்துகொண்ட இப்புத்தக வெளியீட்டு விழாவில், என்னையும் சேர்த்து நால்வரே இஸ்லாமியர். அய்யா நம்மாழ்வாரின் வானகத்து அன்பர்கள் எங்களை கண்டதும் ‘காயல்பட்டினமா?’ என விசாரிக்கும் அளவிற்கு பரிச்சயம் ஆனது மனதிற்கு மகிழ்ச்சி அளித்தது.

இறைவனின் மார்க்க விஷயங்கள் மீது நாம் காட்டும் அக்கறையும் ஆர்வமும், அவன் படைத்த இப்பூமியின் இன்ன பிற பொது விஷயங்களிலும் இருத்தல் அவசியம். மனித குலத்திற்கே பொதுவான இம்மாதிரியான நல்ல நிகழ்வுகளில் நம்மவர்களின் தலைகள் குறைவாக தென்படுவது மிகவும் வேதனையான ஒன்றே!

முஸ்லிம்களுக்கு எதிரான ஓர் போலியான பிம்பத்தை உருவாக்கி வரும் தீயவர்களுக்கு, சத்தியத்தையும் அறத்தையும் மனிதநேயத்தையும் போதிக்கும் பொதுவான நல்ல நிகழ்வுகளில் நம்மவர்கள் அதிகமதிகம் பங்கேற்பதே தக்க பதிலாக அமையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: தலாக்! தலாக்!! தலாக்!!! - வெறிக்கூச்சலும் வெளிச்சமான உண்மையும்!!! [ஆக்கம் - எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...குர் ஆன் ஹதீத் வெளிச்சத்தில் மிக அருமையான கட்டுரை
posted by mackie noohuthambi (kayalpatnam ) [19 October 2016]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 44815

வெறுமனே கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறோம். என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. பிஜேபி காரர்கள் பொது சிவில் சட்டம் கொண்டுவர துடிக்கிறார்கள். முஸ்லிம்கள் வெகுண்டெழுந்து எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் நான் உட்பட. ஆனால் தலாக் விஷயத்தில் இஸ்லாம் என்ன சொல்கிறது பிஜேபி என்ன சொல்கிறது என்ற செய்திகளை மிக தெளிவாக இந்த கட்டுரை எனக்கு விளக்கிக் காட்டுகிறது. அல்ஹம்து லில்லாஹ் ஷமீமுல் இஸ்லாம் அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.

இப்போதைய தேவை இந்த இணைய தளத்தில், வாட்சப்பில் மக்கள் பார்க்க கேட்க வேண்டிய செய்தி அல்ல இது. ஒவ்வொரு இஸ்லாமியரின் வீடுகளிலும் பெண்களுக்கு விரிவாக சொல்லப்பட அறியவைக்க பட வேண்டிய செய்தி இது. எல்லோரும் காலையில் எழுந்து தொழுவது ஒத்துவதுபோல் இந்த செய்தியில் உள்ள நியாயங்கள் குர் ஆன் ஹதீத் விளக்கங்களை தெரிந்து அதன்படி தங்கள் மனநிலையை சரி செய்துகொள்ள வேண்டிய நிகழ்வு இது. இந்த நேரத்தில் அவர்கள் மனங்களில் வேரூன்ற செய்ய வேண்டிய எண்ணங்கள் இது இதை ஒரு கை ஏடாகவே வெளியிட மருமகன் ஷமீமுல் இஸ்லாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு அற்புதமான விஷயம் இரண்டு மரங்கள் பேசிக் கொள்ளும் செய்தி. தங்களை வெட்டுவதற்கு அளிப்பதற்கு புறப்பட்டிருக்கும் விறகு வெட்டியின் கையிலுள்ள கோடரிக்கு அழுத்தம் கொடுப்பது துணை நிற்பது எல்லாமே தன் இனத்தை சேர்ந்த மரமேதான்.

சல்மான் ருஷ்ட்டி, தஸ்லீமா நஸிரீன் போன்றவர்கள் இந்த மார்க்கத்தில் இருந்து கொண்டு செய்யும் சேட்டைகளை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். சரித்திரகாலங்களில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது, தமிழனை இன்னொரு தமிழனே காட்டிக் கொடுப்பது, உறவினர்களை எதிர்த்து மற்றொரு உறவினர் பகை கொண்டு இன்று நீதிமன்றங்களில் முஸ்லிம்களுக்கெதிரான வழக்குகள் இன்னொரு சகோதர முஸ்லிமுக்கு எதிராக தொடுக்கப் பட்டுள்ள வழக்குகள்தான் அதிகம் உள்ளன.

சாதாரண முடுக்கு பிரச்சினை முதல் பாகப் பிரிவினை வரி எல்லாமே நாம் குர் ஆன் ஹதீதுகளை அதன் வழி முறைகளை புறக்கணித்து நீதி மன்றங்களின் நெடிய படிகளில் வருடக்கணக்காக நமது இளமை, நேரம் பொருள் இவற்றை வீணடித்துக் கொண்டிருக்கிறோம். இதை நன்கு உணர்ந்து கொண்ட நமது எதிரிகள் மிக சாதுரியமாக காய் நகர்த்த தங்களுக்கு 5 வருடங்கள் அளிக்கப் பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்த துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்கு ஒரு உண்மை தெரியவில்லை. அல்லாஹ் நாடினால் யானைப் படையை அபாபீல் பறவைகளின் சொண்டிலிருந்து விழும் பொடிக் கற்களாலேயே கொன்றொழிப்பான். மலைகளை தூளாக்குவான் எரிமலையை உருவாக்குவான் பனிக்கட்டிகள் மழையாகப் பொழியும். பூமி வெடிக்கும் பூகம்பங்கள் ஏற்படும் இவர்களை நாசமாக்கி விடும் என்ற உண்மை குர் ஆனில் மிக தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் ஆணவமாக இருந்து எதையும் செய்துவிடலாம் என்று நினைத்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டார்கள் என்பதுதான் நிதர்சன உண்மை.

எனவே பிஜேபி அரசு இந்த துருப்பை கையில் எடுத்துக் கொண்டு முஸ்லிம்களை கருவருக்கவும் முடியாது. அப்படி மனப்பால் குடிப்பவர்கள் ஆட்சியும் நிலைக்காது. ஆனாலும் முஸ்லிம்கள் பிரிந்திருந்தால் நாம் வலுவிழந்து விடுவோம் என்ற குர் ஆன் செய்தியையும் சீர்தூக்கி பார்த்து நம் வாழ்வை அமைத்துக் கொள்வோமாக. அல்லாஹ் எல்லோருக்கும் தௌபீக் செய்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஒரு மஞ்சள் பையும், முழுக்கை சட்டையும், மூக்கு கண்ணாடியும்! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கட்டுரை அல்ல.... படிப்பினை.
posted by kavimagan kader (BAHRAIN) [18 October 2016]
IP: 78.*.*.* Bahrain | Comment Reference Number: 44814

சமூக அக்கறையுள்ள நல்ல மனிதர், நல்ல எழுத்தாளரும் கூட... இந்த அளவில்தான் நான் மாமா அவர்களைக் குறித்து அறிந்து வைத்திருந்தேன்...

ஹிஜாஸ் மைந்தனின் கட்டுரை, இத்தனை காலம் எத்தனையோ வாய்ப்பிருந்தும் அவருடன் பழகி, நட்பு பாராட்டாமல் போய் விட்டேனே என்ற சுய குற்ற போதத்தை எனக்குள் விதைக்கிறது.

மொத்தத்தில் நண்பன் வடித்தது வெறும் கட்டுரை அல்ல...

மனிதம் நிறைந்த ஓர் உன்னத மனிதனின் வரலாற்றுத் துளி...

படிப்பதற்காக மாத்திரமல்ல இந்தக் கட்டுரை...

வரும் கால சந்ததியினரின் படிப்பினைக்காக பாதுகாக்கப்பட வேண்டிய ஆவணம்...

அன்னாரின் மறு லோக நல் வாழ்விற்காக இரு கரமேந்தி இறைவனை இறைஞ்சுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: தலாக்! தலாக்!! தலாக்!!! - வெறிக்கூச்சலும் வெளிச்சமான உண்மையும்!!! [ஆக்கம் - எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அவசியமான கட்டுரை...
posted by M.N.L.Mohamed Rafeeq (Singapore) [18 October 2016]
IP: 180.*.*.* Singapore | Comment Reference Number: 44813

இன்றைய கால சூழலில் நம்மையும் நமது உயரினும்மேலான இறை சட்டங்ளை புறந்தள்ளி குளிர்காய நினைக்கும் பாசிச கும்பலுக்கு குறு குறுப்பு இன்னும் தீர்ந்தபாடில்லை. எப்படியாவது தமது ஆட்சி காலத்திலேயே இந்த சட்டதை நடைமுறைப் படுத்திவிட துடிக்கின்றனர்.

தலாக், பலதாரமனம் பற்றி விரிவாக விளக்கிய கட்டுரை ஆசிரியர் குலா மற்றும் அது குறித்த சட்டங்களையும் சற்று தெளிவு படுத்தியிருக்கலாம். சுயநலத்திற்காக மனிதன் இயற்றிய சட்டங்கள் யாவும் இறை சட்டத்தின்முன் மண்டியிட்டு மங்கிவிடுவதை பல்வேறு சரித்திரங்கள் மற்றும் அனுபவத்தில் நாம் உணர்ந்திருக்கின்றோம். தக்க சமயத்தில் தரமான கட்டுரையைத் தந்த அருமை நண்பர் ஷமீமுல் இஸ்லாமிற்கு நன்றி..!

-ஹிஜாஸ் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: தலாக்! தலாக்!! தலாக்!!! - வெறிக்கூச்சலும் வெளிச்சமான உண்மையும்!!! [ஆக்கம் - எஸ்.கே.ஷமீமுல் இஸ்லாம் M.A., M.Phil.,] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kulam mohamed salih k.k.s (seychelles) [18 October 2016]
IP: 197.*.*.* | Comment Reference Number: 44812

கட்டுரை மிக அருமை ..

மிக தெளிவான விளக்கம் ..

என்றும் அன்புடன் ,
குளம் முஹம்மது ஸாலிஹ் கே.கே.எஸ்
சீசெல் தீவில் இருந்து


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஒரு மஞ்சள் பையும், முழுக்கை சட்டையும், மூக்கு கண்ணாடியும்! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kulam mohamed salih k.k.s (seychelles) [17 October 2016]
IP: 197.*.*.* | Comment Reference Number: 44810

மிக அருமையான கட்டுரை...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஒரு மஞ்சள் பையும், முழுக்கை சட்டையும், மூக்கு கண்ணாடியும்! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அருமையான நினைவஞ்சலி..
posted by அகிலா (கோயம்புத்தூர் ) [17 October 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 44809

கட்டுரை படித்தேன் ரபீக். உங்க எழுத்தின் வளமை அவருக்கு கொடுக்கும் சன்மானம். அருமை.

நடை குறித்த உரையாடலும், பெண் பிள்ளைகளின் உடை சார்ந்த விஷயங்களும், இளைஞர்களை நல்வழிப்படுத்தும் விதமும் அவரின் தனிசிறப்பாகவே கொள்ளலாம் போல.

இவர்கள் போன்றோரை நாம் சில காலங்களில் கடக்கிறோம் அருமைகள் அதிகமாய் அறிந்துக் கொள்ளாமல். நிச்சயமாய் பார்க்கும் மனிதர்களுக்குள் இருக்கும் நல்ல குணங்களை நாம் அடையாளம் காணும்பொழுதே, நாமும் அவற்றை கற்றுக் கொள்கிறோம்.

புகைப்படங்களும் அருமை.

நன்றியும் மகிழ்ச்சியும் ரபீக்.. :)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: ஒரு மஞ்சள் பையும், முழுக்கை சட்டையும், மூக்கு கண்ணாடியும்! [ஆக்கம் - எம்.என்.எல். முஹம்மது ரபீக் (ஹிஜாஸ் மைந்தன்)] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...கருத்து
posted by Vijayakumar Velmurugan (Chennai) [17 October 2016]
IP: 42.*.*.* India | Comment Reference Number: 44808

ஆகா..ஆகா..

அருமையான கட்டுரை என்பதை விட ஒரு சிறந்த மனிதரின் வாழ்வின் வரலாற்றினை கண்முன் தந்தீர்கள்.. பாதுகாக்க வேண்டிய பொக்கிசங்களை மற்றவர்களுக்கு ALS மாமா அவர்கள் விட்டுச்சென்றுள்ளார்கள்..

அதனை பாதுகாப்பதில் உங்களுக்கு முக்கிய பங்கு உண்டு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
1295
பக்க எண்
1/130
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersThai Nadu Tours and Travels
Plots for SaleFathima Jewellers
DanubeWavoo Jewellers
Dubai GoldFaams
Cathedral Road LKS Gold Paradise
Aynaz Construction Advertisement

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2016. The Kayal First Trust. All Rights Reserved