Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:46:46 PM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9983
#KOTW9983
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஐனவரி 20, 2013
அபுதாபி காயல் நல மன்ற பொருளாளரின் தகப்பனார் மறைவிற்கு துபாய் காயல் நல மன்றம் இரங்கல்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2689 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்ற பொருளாளர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீயின் தந்தை ஹாஜி கத்தீப் எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ என்ற மக்கி புகாரீ வியாழன் (ஜனவரி 17) அன்று காலமானார். அவர் மறைவுக்கு துபாய் காயல் நல மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:

அருளாளன் அன்புடையோன் இறையேகன் திருப்பெயரால் ....

எங்களது பெருமதிப்பிற்குரிய மௌலவி ஹாபிழ் எஸ் எம் பி ஹுசைன் மக்கி மஹ்லரி (பொருளாளர், அபுதாபி காயல் நல மன்றம்) அவர்களின் அன்பிற்குறிய தகப்பனார் ஹாஜி கத்தீப் எம் எம் செய்யித் முஹம்மத் புஹாரி அவர்கள் ஜனவரி 17ம் தேதி அன்று வபாஃ த் ஆன செய்தி அறிந்து வருந்துகிறோம். இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை அங்கீகரித்து, அவர்களது பிழைகளை மன்னித்து, அவர்களது கபூரை சுவனத்துப் பூங்காவாக அலங்கரித்து மேலான சுவனபதியில் நுழைந்திடச் செய்வானாக என பிரார்த்திக்கிறோம்.

மர்ஹூம் அவர்களது பிரிவால் துயருற்றிருக்கும் மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் துபாய் வாழ் காயலர்கள் அனைவரின் சார்பில் எங்களின் இதயமார்ந்த ஸலாமினை உரித்தாக்கிகொள்வதோடு இப்பேரிழப்பை பொருந்திக்கொள்ளக்கூடிய மேலான பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் கொடுத்திடவும் துஆ செய்கிறோம். ஆமீன்.

இவண்,
துபாய் காயல் நல மன்றம்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
சாளை ஷேக் ஸலீம்,
துணை தலைவர், துபாய் காயல் நல மன்றம்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்..
posted by mackie noohuthambi (kayalpatnam) [21 January 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25155

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேரிருக்கும் உள்ளம் என்றொரு ஊரிருக்கும் அந்த ஊருக்குள் எனக்கொரு பேரிருக்கும் என்று ஒரு கவிஞன் அன்று பாடினான். அது இன்று "மக்கி" என்ற பெயரிலும் "புகாரி" பெயரிலும் ஊரில் பேசப்படுவதற்கு எனதருமை மச்சான் அவர்கள் காரணியாக இருப்பதை அறிந்து பெருமையாக இருக்கிறது அல்ஹம்து லில்லாஹ். அவர்கள் மறைவுக்காக இந்த மாமன்றம் து ஆ செய்வதை அல்லாஹ் கபூல் செய்வானாக மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக. அடுத்தவர்களுக்கு ஓடோடி சென்று உதவி செய்யும் அவரது நல்ல பண்பை நம் எல்லோருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் ( காயல்பட்டினம் ) [22 January 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 25180

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜ்வூன்.

இவர்களின் மரணம் என்னில் ஒரு பாதிப்பை உண்டு பண்ணியுள்ளது.

என் மாமா என்னிடம், சொளுக்கார் தெருவில் மக்கி புகாரீ அவர்கள் மரணம் அடைந்து விட்டார்கள், சென்று பார்ப்போம் என்று அழைத்து சென்றார்கள். சென்றோம். பார்த்தோம். ஆனால் எனக்குள் ஒரு சிறு நெருடல், பார்த்த முகமாக இருக்கின்றதே... என்று மீண்டும் கூர்ந்து கவனித்ததில் அதிர்ச்சி.

முந்திய நாள்தான், நானும் என் மனைவியும் இவர்களின் கடைக்கு இனிப்பு பண்டங்கள் வாங்க சென்று இருந்தோம். இவர்களை அன்றுதான் முதல் முதலாக சந்தித்தேன். எங்களை கண்டதும் 25 வருடம் பழகிய மாதிரி விசாரித்தார்கள்.

நான் அவர்களிடம், (வியாபார தந்திரமோ என்று நினைத்து!!) இப்படி விசாரிக்கின்றீர்களே. என்னை தெரியுமா? என்றதும்,

அவர்கள், வாப்பா.... நான் என்ன மௌலா இஸ்லாமா...? இது காலிகட்.. அலாவுதீனுடைய லாத்தா மகள், நீ இவங்க கணவர். சவுதியில் இருக்கின்றாய்.. என்று ரேஷன் கார்டில் இருக்கும் அனைத்து விபரங்களையும் சொன்னதும் ஒரு அதிர்ச்சிதான்.

-கடையில் தனி ஆளாக இருந்து இந்த சாமானை எடுங்க, இது புதியது, இது நல்ல ஐட்டம் என்று பம்பரமாக ஒவ்வொரு சாமானையும் அடுக்கி காட்டியது - அவர்களின் சுறுசுறுப்பை.

- ஒவ்வொரு பண்டத்தையும் உடைத்து இதை சாப்பிடு பிள்ளை, இது நன்றாக இருக்கும், இதை சாப்பிடு என்று தைரியமாக முழு பொட்டலத்தையும் உடைத்து சாப்பிட கொடுத்தது கட்டியது - இவர்களின் வியாபார உத்தியை.

- பேச்சு பூராவும் இனிமையாகவும், ஜோக்காகவும் இருந்ததை காட்டியது -இவர்களின் நகைச்சுவை உணர்வை.

- கடையில் தனியாக பரபரப்பாக இருந்தவர், மொபைலை எடுத்து " சீக்கிரம் வாங்கப்பா.. கடையில் கஸ்டமர்கள் இருக்கின்றாகள்.. ஒருத்தனால் முடியவில்லை" என்று கூறிவிட்டு, மூச்சு வாங்க உட்கார்ந்து, வயசாகிவிட்டது. முன்பு போல ஆடி ஓடி வேலை செய்ய முடியவில்லை என்று கலைத்து சொன்னது - அவர்களுக்கு உடம்பில் பிரச்சனை உள்ளது என்பதை என்னால் அறிய முடிந்தது அவர்களின் மரணத்தை பார்த்த பின்பு.

முந்திய நாள் க்ளோஸ் ஆக உறவாடிய ஒருவரை ,இப்படி கண்டதில் என் மனம் க்ளோஸ் ஆகிவிட்டது.

மனைவிக்கு போன் போட்டு விபரம் சொன்னதில்.... என்னங்க சொல்லுறீங்க என்று அதிர்ச்சியில் பேச முடியாமல் மௌனமாக இருந்தது காட்டியது " - நிகழ்வின் பாதிப்பை.

வல்ல அல்லாஹ் இவர்களின் அனைத்து பாவங்களையும் மன்னித்து சுவனத்தை அருள்வானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், காயல்பட்டினம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseAKM Jewellers
Fathima JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved