Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:56:05 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7624
#KOTW7624
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 27, 2011
நகரில் ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் நேரில் ஆய்வு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3855 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (22) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒருவழிப்பாதை செயலாக்கம் அவசியம் என பொதுமக்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை உள்ளிட்ட நகரின் பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் பல்வேறு முயற்சிகள் கடந்த காலங்களில் மேற்கொள்ள்ப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அண்மையில் சோதனை அடிப்படையில் ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டு, அதிலுள்ள நிறை-குறைகள் ஆராயப்பட்டது.

இந்நிலையில், இந்த ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக திருச்செந்தூர் கோட்டாட்சியர் (சப்-கலெக்டர்) பொற்கொடி நேற்று காயல்பட்டினத்திற்கு வந்திருந்தார். அவருடன் காவல்துறை மாவட்ட துணை கண்காணிப்பாளர் எம்.ஞானசேகரன், ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் டி.பார்த்திபன் ஆகியோரும் வந்திருந்தனர்.

அவர்கள் காயல்பட்டினம் தாயிம்பள்ளி அருகிலிருந்து, மூப்பனார் ஓடை குறுக்கிடும் சாலை வழியாக ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கு ஆலோசிக்கப்பட்டு வரும் பெரிய நெசவுத்தெரு வரை நேரில் ஆய்வு செய்தனர்.

பின்னர் கருத்து தெரிவித்த வட்டார போக்குவரத்து அலுவலர் பொற்கொடி, ஒருவழிப்பாதை இந்நகரில் மிகவும் அவசியம் என்றும், அதனை நிறைவேற்றுவதற்கான அனைத்து சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் ஒருவழிப்பாதை நடைமுறைப் படுத்தப்படுவதற்கு ஆவன செய்யப்படும் என்றார்.

அப்போது அங்கிருந்த நகர்மன்ற உறுப்பினர்கள் சிலர், நகராட்சி மூலம் ஒரு தீர்மானம் நிறைவேற்றினால் இத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படுமா என்று அவரிடம் வினவினர். அதற்கு விடையளித்துப் பேசிய வட்டார போக்குவரத்து அலுவலர், இது வேறு துறை சார்ந்த நடவடிக்கை என்பதால், நகராட்சி தீர்மானத்தை மட்டும் கொண்டு அதை நடைமுறைப்படுத்துவதென்பது சாத்தியமற்றது என்றும், ஒருவேளை அவ்வாறு தீர்மானம் இயற்றப்பட்டால், அதையும் துணை ஆவணமாக வைத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.



காயல்பட்டினம் நகர்மன்ற உறுப்பினர்களான ஏ.லுக்மான், எம்.ஜஹாங்கீர், ஏ.கே.முஹம்மத் முகைதீன், பத்ருல் ஹக், ரெங்கநாதன் என்ற சுகு, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன், இ.எம்.சாமி ஆகிய உறுப்பினர்களும், பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வின்போது உடனிருந்தனர்.



தகவல்:
எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆப்தீன்,
காயல்பட்டினம்.


[செய்தி திருத்தப்பட்டது]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஒருவழி பாதை நல்ல தீர்வு.
posted by M.S.ABDULAZEEZ (G Z ) [27 November 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 13831

அய்யா முதல்ல அத செய்ங்க புன்னியமாபோகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஒருவழிப்பாதைக்கு, ஓ....போடுங்க...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், (புனித மக்கா.) [27 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13834

இன்றைய சூழலில் நமதூருக்கு ஒர்வழிப்பாதை மிக முக்கியமானதும், மிகமிக அவசியமானதும் ஆகும். சில வேளைகளில் பேரூந்துகள் ஒன்றையொன்று கடந்து செல்ல இயலாமல் ஒட்டி உறவாடுவதைப் பல முறை பார்த்திருக்கின்றேன்.

காயல் புகழ் கட்ட காக்கா, ஓர் முறை இரண்டு பேரூந்து ஓட்டுநரிடமும் “அண்ணே!இப்போதைக்கு வண்டியெ எடுக்க முடியாது! நீங்க போய் கடையிலெ காப்பி சாப்பிட்டு விட்டு சவுரியம் போலெ வாங்க! மச்சான் நீ என்னை ஜாமிஉல் அஸ்ஹகர் முக்குலெ இறக்கி விட்டுடு”, என்று என் பைக்கில் ஏறிக்கொண்டது நினைவுக்கு வருகின்றது.

ஓர் வழிப் பாதைக்கு, ஓ...போடலாம்!!!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [27 November 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13837

ஒரு விடிவெள்ளி தென்படுகிறது. கூடிய சீக்கிரம் இந்த ஒன்-வேயை கொண்டுவாருங்கள்.

சிலருக்கு சிற்சில சிரமங்கள் இருக்கும், ஊரின் நன்மையைக் கருதி, அல்லாஹ்விடம் நற்கூலி கிடைக்கும் என்று ஒத்துழைப்பு கொடுங்கள்.

அட்மின் அவர்களே, காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் எம்.ஞானசேகரன் என்பது தவறு, அவர் மாவட்ட துணை கண்காணிப்பாளர் தான்.(D.S.P)- மூன்று நட்சத்திரமும்,கருப்பு கயிறும் அணிந்துள்ளார்கள்.

Moderator: Corrected. Thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நகரில் ஒருவழிப்பாதை
posted by abdul gaffoor (kayalpatnam) [27 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13847

நம் ஊருக்கு வெளியூரில் இருந்து பேருந்துகளில் ஏறும் போது காயல்பட்டினம் வழியாக செல்லாது என்று கூறுகின்றனர் பேருந்து நடத்துனர்கள். பல சண்டைகளை அவர்களிடம் போட்டு தான் பஸ் ஏற வேண்டியுள்ளது. காரணம் கேட்டால் நம்மூரில் கடுமயாக டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் நம் ஊர் வழியாக வருவதற்கே எரிச்சல் படுகின்றனர்.

எதிர்காலத்தில் நம் ஊருக்கு அனைத்து பேருந்துகளும் வரவேண்டுமானால் நாம் கண்டிப்பாக ஒருவழிப்பபாதையை அமுல்படுத்தியே ஆக வேண்டும். இல்லையெனில் நம் ஊருக்குள் பேருந்துக்ளை பார்ப்பதே அரிதாகிவிடும். இதில் நகராட்சி தலைவி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by Ahamed (Chennai) [27 November 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 13849

ஒரு வழிபாதைப்பற்றிய ஓர் அலசல் ....

1. பொது கூட்டத்திருக்காக வள்ளல் சீதக்காதி திடலை மறந்து விட வேண்டும்

2 LK லெப்பை தம்பி சாலையில் அமைந்துள்ள ELKAY தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சற்று இடையூறுதான்.

3 கூலக்கடை பஜார்-ல் இனி இரு நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்க முடியாது.

4 நெசவு தெரு குழந்தைகள் இனி தெருவில் விளையாட முடியாது.

5 சிறமம் இன்றி பஸ் திரும்புவதர்க்கு தாயும் பள்ளி வழியாக வரும் வளைவில் இருக்கும் இரு வீடுகளை உடைக்க வேண்டியது இருக்கலாம்

6 சில வருடங்களுக்கு பிறகு , ரோட்டை அகல படுத்துவதற்காக பலர் வீட்டின் ஒரு பகுதியை இழக்க நேரிடலாம்.

7 கூலக்கடை பஜார்-ல் உள்ள மளிகை கடைக்கு வரும் மளிகை சாமான்களை இறக்க லாரிகள் வெகுதுளைவில் நிறுத்த நேரிடும்.

8 திருமண நிகழ்ச்சிக்கு இனி ரோட்டை அடைக்க முடியாது.

9 அத்தெருவில் உள்ளவர்கள் இனி KTM தெரு அல்லது வன்னார்குடியைச் சுற்றிதான் தங்களது வீட்டிற்கு செல்ல முடியும்.

10 வீடுகளுக்கிடையே அத்தெருவில் முடுக்கு இல்லாததால் நடந்து செல்பவர்களுக்கும் இடையூறுதான்.

11 அரசு இடத்தில் தற்போது கட்டிடங்களை கட்டி இருப்பவர்கள் அல்லது ரோட்டை அகலப்படுத்த அரசு கேட்கும் இடங்களுக்கு உரிமைக்காரர்கலே தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி பாதையை ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்ற கருத்தும் உள்ளது

12 அல்லாஹ் பாதுகாப்ப va ன் , விபத்துகளும் நேரிட வாய்ப்பு உள்ளது.

13 கால்நடைகள் வளர்ப்பு அழியலாம்.

14 வயதான சில மரங்களை வெட்ட வேண்டியது இருக்கும்

15 வீடு கட்டுபவர்கள் கல், மண் , செங்கலை போடுவதற்கு இடம் தேடவேண்டியது இருக்கும் .

இது என் தனிப்பட்ட கருத்து, இதை விரும்பாதவர்கள் தயவு செய்து இதற்கு கமெண்ட்ஸ் அடிக்காதீர்கள்....

Moderator: சகோ. அஹ்மத் தனது முழு சுய விபரத்துடன் admin@kayalpatnam.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொண்ட பின்னர் வருங்காலங்களில் கருத்துப்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by sulaiman N.T. YANBU (YANBU) [27 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13850

நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து இந்த ஒரு வழி பாதையை கொண்டுவர முயற்ச்சி எடுத்தால் நமதூர் MAIN ROAD தில் நெரிசல் குறையும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by ISMAIL( KTM) (Hong Kong) [28 November 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 13852

Dear Br. Ahmed Salam

hope all the points what u have mentioned should apply for KTM st also. Think positvely.

ur personal veiws pls share with ur friends and relatives not in the public web.

One Way should come ASAP. Now this is must for kayalpatnam.

Ma Salam
ismail (KTM St)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகரில் ஒருவழிப்பாதை தவிற்க முடியாததுதான்
posted by V D SADAK THAMBY (Guangzhou ,China) [28 November 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 13853

நம் ஊருக்கு நிரந்தரமான போக்குவரத்து/பேருந்து வசதி வேண்டுமெனில் நாம் ஒருசில வசதி குறைவுகளை பொறுத்துதான் ஆக வேண்டும்.

கூலக்கடை பஜாரையும் பேருந்து போக்குவரத்திற்கு திறந்து விடவேண்டும். மெயின் ரோட்டையும் நாம் விரிவுபடுத்துவதற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றியே ஆகவேண்டும். அப்போதுதான் எழிதான வாகன போக்குவரத்து நம் ஊரில் அமையும். அனைத்து பேருந்துகளும் நம் ஊர் வழியாக செல்லும் வாய்ப்பு நிரந்தரமாக ஏற்படும்.

இல்லையெனில், துளிர் ஸ்கூலில் இருந்து தெற்கு நோக்கி பிரிந்து ஓடக்கரை தாண்டி வந்து சேரும் விதமாக மற்றொரு byepass சாலை அமைக்கலாம். இதனால் இப்பகுதி தனியார் நில சொந்தங்களுக்கு மட்டுமே பாதிப்பு இருக்கும். இது குறைவான பாதிப்புதான்.

இதற்கும் நாம் சம்மதிக்கவில்லை எனில், அனைத்து விரைவு பேருந்துகளும் அடைக்கலாபுரம் வழியாக இயக்கப்படும் சாத்தியமுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by M.S.ABDULAZEEZ (G Z) [28 November 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 13854

திருவிழா என்றால் நாலு ஆடு அருபடத்தான் செய்யும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by A.M.Syed Ahmed (Kayalpatnam) [28 November 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13856

Dear Ahmed

All the 15 points you said is valid & the same will be applicable for the people living in KTM street also.

Hence your petition is dismissed for the interest of kayal public.... One way will be amended very soon.

Otherwise we will take a short film - STREET999 - LIKE - DAM999 to educate the people to get support........

வாழு வாழ விடு....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by mackie noohuthambi (kayalpatnam) [28 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13857

ஒரு வழிப்பாதை சம்பந்தமான பேச்சு சுமார் 10 வருடங்களாக நம் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கின்றது. ஆட்சி மாற்றங்கள் நடந்துகொண்டே இருக்கின்றன. மாநிலத்திலும் சரி, நகர்மன்றதிலும் சரி இதற்கான முயற்சிகளுக்கு தடையாக இருப்பது அரசியல் லாபமும் ஓட்டு வங்கியும் தான். அடுத்து நெசவுதெரு பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் சொல்லப்பட்டது. இப்போது நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாலும் மக்கள் ஒருவழி பாதையின் அவசியத்தை நன்கு உணர்ந்திருப்பதாலும் புதிய நகர்மன்றம் ஏக மனதாக தீர்மானம் போட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பினால் அடுத்த ஆட்சி வருமுன் அதை செய்து முடிக்கலாம்.

மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்பதை நாம் நிதர்சனமாக கண்டுகொண்டிருக்கிறோம்.சில துணிச்சலான புத்திசாலிதனமான முடிவுகளை புதிய தலைவர் மேற்கொள்ள வேண்டும்.செய்வார்களா?

எதிர்பார்புகளுடன், மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by M.N.Sulaiman (Bangalore) [28 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13860

ஒருவழிப்பாதை - காயல் நகரில் அவ்வப்போது பேசபடுவது ஓர் வாடிக்கையாகி விட்டது. இப்படியே பேசிக்கொண்டு இருப்பதால் நமக்கு கிடைக்க வேண்டிய அணைத்து வசதிகளும் நம்மைவிட வருவாயில் பின்னுள்ள குறைந்த மக்கள் வாழும் அடைகலாபுரதிற்கு செல்கின்றன என்பது தான் உண்மை.

குறிப்பாக, மதுரை to திருசெந்தூர் வழிதடத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பெரும்பாலானவை அடைகலாபுரம் வழியாகத்தான் செல்கின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இதனால் நமக்கும், ஓட்டுனருக்கும் வாக்குவாதம் நடப்பது தான் மிச்சம்.

இப்பிரச்சனைக்கு தீர்வு காண, நகர் மன்ற தலைவர், ஒருப்பினர்கள், சமுதாய பெரியவர்கள் என அனைவரும் ஒரினைந்து சம்மந்தப்பட்ட மக்களிடம் ஊர் நலன்கருதி பண்பாக எடுத்துரைக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்...நல்ல முடிவு கிடைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by m.parthipan (tuticorin) [28 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13861

நான் தூத்துக்குடியில் இருந்தாலும் உங்களது வலைத்தள செய்தியை நாள்தோறும் கண்டு வருகிறேன். தங்களது இந்த செய்தியில் பிழை உள்ளது. பொற்கொடி திருச்செந்தூர் கோட்டாட்சியர்(சப்-கலெக்டர்) ஆவார். தாங்கள் அவர்களை வட்டார போக்குவரத்து அலுவலர் என்று தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள். நன்றி

Administrator: Thanks for pointing out the mistake. It has been corrected


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [28 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13862

அன்பு சகோதரர் ஒரு குறிப்பிட்ட தெருவை சார்ந்தவர் என நினைக்கிறன், இது போல் தற்போது நாம் இரு வழி பாதையாக உபயோகபடுதிக்கொண்டிருக்கும் K.T.M தெருகாரர்கள் இதை விட பல தியாகங்களை செய்து அனுமதித்தால் தான் இன்று நமதூருக்குள் போக்குவரத்து சென்று கொண்டிருக்கிறது.

இல்லையெனில் ரயில்வே ஸ்டேஷன் எப்படி ஊரை விட்டு ஒதுங்கியதோ அந்த சூழ்நிலை தான் ஏற்பட்டிருக்கும்.

ஏற்கனவே L.K.பள்ளியின் ENTRANCE மெயின் ரோட்டை முன்ன்னோக்கியிருந்ததையும் சுற்றிக்காட்ட கடமைபட்டுள்ளேன்.

மெயின் ரோட்டில் கடைகள் இல்லாமல் இல்லை. சரக்கு வாகனங்கள் நிறுத்தி சாமான்கள் இறக்கபடாமல் இல்லை........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by Cnash (KTM Street) (Makkah ) [28 November 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13865

சஹோ.அஹ்மத் அவர்களில் மிக சுயநலமான கருத்துக்கு நன்றி!! உங்கள் கருத்து தவறு சுயநலமானது என்று உங்களுக்கே தெரியும் அதனால் தான் எதிர்கருத்து யாரும் கொடுக்க வேணாம் என்று ரெம்ப முன்னெச்சரிகையாக குறிப்பு கொடுத்தும் இருக்கிறீர்கள்!! நீங்கள் தனிப்பட்ட முறையில் உங்கள் நண்பரிடம் இந்த கருத்தை சொல்லி இருந்தால் நான் மறுப்பு எழுதி இருக்க மாட்டேன், இது தளத்தில் வந்ததால் மறுப்பு எழுதி தான் தீர வேண்டும்.!!!

உங்கள் கருத்துக்கு ஒரு அலசல்.

1 . ஊர் மக்களில் தேவைகளும், சீரான போக்குவரத்தும்தான் முக்கியமே ஒழிய, சீதக்காதி திடலில் அரசியல் மீட்டிங் நடக்காமல் எந்த குடியும் மூழ்கிவிட போவதில்லை. 4 விபத்துக்கள் தடுக்கப்படும் போது இந்த சீதக்காதி திடல் கூட்டம் ஊரில் வேறு 100 திடல்களில் நடத்தினால் ஒன்றும் தப்பில்லை. .

2 . எந்த ஆசிரியர் மாணவருக்கும் இதனால் இடையூறு வர போவதில்லை, வேணும்டா அவங்க ஈசியா அங்க இருந்து கூட அவங்க ஊருக்கு பஸ் பிடிச்சி ஏறி போய்டலாம்.

3 . எதற்கு 4 சக்கர வாகனங்களை கூலக்கடை பஜாரில் நிறுத்தி வைக்கணும். அது என்ன டாக்ஸி ஸ்டாண்டா?

4 . அப்போ KTM தெரு, ஹாஜி அப்பா தைக்கா தெருவில் எல்லாம் குழந்தைகளே இல்லையா. இல்லாட்டி அவர்கள் விளையாட மாட்டார்களா?.

5 . எந்த சிரமனும் இல்லாமல் இப்போதும் தாயும் பள்ளி முனையில் லாரி, ஸ்கூல் பஸ் எல்லாம் திரும்பிட்டு தான் இருக்கு. எதையும் உடைக்க தேவை இல்லை (ஹை-வே நிலம் ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் தவிர)

6 . எங்க வாப்பா உம்மா பொறந்த காலத்தில் இருந்து எங்க KTM தெரு வழிய பஸ் போயிட்டு தான் இருக்கு எந்த வீடும் விரிவாக்கம் என்ற பேரில் இடிக்க பட வில்லை.

7 . அதே போல மெயின் ரோட்க்குவரும் லாரி எல்லாம் சாமான் இறக்கிட்டு தான் இருக்கு..வீணா பயம் வேண்டாம்.

8 . திருமண நிகழ்ச்சிக்கு ரோட்டை அடைக்க இயலாதாம், ரெம்ப முக்கியமான விவாதம்...அப்போ எங்க தெருவில் கல்யாணமே நடக்க வில்லையா?

9 . அத்தெருவில் உள்ளவர்கள் KTM தெருவை சுற்றிதான் போகணுமாம். ...நடந்து போறவருக்கு ஒன் வே ப்ரோப்ளம் இல்லை பிரதர்... பைக் கார் லே போகும் பொது தான் one -way ..காரில் போகும் போது KTM வழி சுற்றி போனால் ஒன்னும் கேட்டு விட போவதில்லை.

10 . முடுக்கலாம் இருக்கு KTM தெருவில் இருந்து போக 100 முடுக்கு இருக்குது.. டோன்ட் வொர்ரி .

11 . அரசு இடத்தில யாரும் கட்டிடம் கட்டி KTM தெருவில் இருக்க வில்லை.. யாருக்கும் பயமும் இல்லை....வீண் பயம் உங்களுக்கு தான். அதை இடிப்பான் இதை இடிப்பான் என்று!!

12 . விபத்து - பேருந்து போகும் மற்ற இடங்களில் எல்லாம் விபத்து டபுள் ஆகா நடந்தால் உங்களுக்கு பரவா இல்லை? அப்படி தானே.!!

13 . கால்நடை வளர்ப்பு அழியுதாம்.. இப்போ வீட்டுக்கு வீடு வாழ்ந்துகிட்டு இருக்கு இல்லையா?

14 . வயதான மரங்கள் அழிந்தால்... இளம்கன்றுகள், வாலிப மரங்களை வீட்டுக்கு பின்னால் நாட்டி வையுங்கள்!! நாளை வயதான மரமாக காட்சி அளிக்கும்.

15 . வீடு கட்ட கல் மண் செங்கல் போட முடியாதாம்....என்ன கவலை உங்களை சொல்லி வேலை இல்லை இதுக்கு இடம் கொடுத்த நம்ம பஞ்சாயத்தை சொல்லணும்... ஆமா எங்க தெருவில் எல்லாம் வீடே கட்டவில்லை பாருங்கோ!! நாங்கள் எல்லாம் கற்கால மக்கள் இன்னும் களிமண் வீட்டில் தானே இருக்கோம்..

எதோ நல்லது நடக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று இருக்கும் பொது எதையாவது சொல்லி அரசியல்வாதி போல குழப்பிக்கொண்டு இருக்காதீர்கள்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by K S muhamed shuaib (Kayalpatinam) [28 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13867

ஒருவழி பாதை என்னும் இந்த கனவுத்திட்டம் எப்போது நிறைவேறும் என்பதே இங்கு அனைவரின் எதிர்ப்பார்ப்பாகும்

போக்குவரத்துநெரிசலில் நமதூர் மெயின் பஜார் சிக்கித்தவிப்பதும், பேருந்து ஓட்டுனர்கள் அவர்களுக்குள்ள சிரமம் காரணமாக பல்லை நற நற வென கடிப்பதும் நமதூருக்கு இனி பேருந்தே வராதோ என்று பயப்படக்கூடியாதாக உள்ளது. குறிப்பாக மக்ரிபுக்கும் இஷாவுக்கும் உள்ள அந்த இடைப்பட்ட நேரத்தில் தினம்தோறும் போக்குவரத்துநெருக்கடி கட்டாயம் நிகழ்கிறது. அந்த நேரம் சென்னை அண்ணாசாலையை கூட ஒருவன் கடந்துவிடலாம். நம்ம பஜாரை கடந்து செல்வது அவ்வளவு கஷ்ட்டமாக உள்ளது.

இந்த சிரமத்தின் காரணமாக நிறைய பேருந்துகள் நமதூருக்கு வராமல் அடைக்கலாபுரம் வழியாக சென்றுவிடுகின்றன. எனவே ஒருசிலருக்கு இதில் சிரமம் இருந்தாலும் பொதுமக்களின் வசதிக்காக விட்டுக்கொடுத்தால்இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு இறைவனின் நற்கூலி உண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [29 November 2011]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13908

சகோதரர் அஹ்மத் அவர்களிடமிருந்து கீழ்க்கண்ட பதில் எனது சொந்த ID க்கு வந்தது.

"சரி சந்தோசம். கருத்து வேறுபாடு வரும் என்று கருதியே அடி குறிப்பு எளிதினேன் . என் கருத்தில் தவறு இருந்தால் அட்மின் கத்திரி போட்டு இருப்பாரே ? சிந்திக்க வில்லையா சகோதரே ???

என் கருத்துடன் உங்கள் கருத்தை ஒரு அலசல்.

1. பொது கூட்டத்திருக்காக வள்ளல் சீதக்காதி திடலை மறந்து விட வேண்டும்

1 . ஊர் மக்களில் தேவைகளும், சீரான போக்குவரத்தும்தான் முக்கியமே ஒழிய, சீதக்காதி திடலில் அரசியல் மீட்டிங் நடக்காமல் எந்த குடியும் மூழ்கிவிட போவதில்லை. 4 விபத்துக்கள் தடுக்கப்படும் போது இந்த சீதக்காதி திடல் கூட்டம் ஊரில் வேறு 100 திடல்களில் நடத்தினால் ஒன்றும் தப்பில்லை. .

1 100 திடல்???? நீங்கள் சென்ற 10 திடல்களை இங்கு சொல்ல முடியுமா ?

***************************************

2 LK லெப்பை தம்பி சாலையில் அமைந்துள்ள ELKAY தொடக்க மற்றும் மேல்நிலை பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு சற்று இடையூறுதான்.

2 . எந்த ஆசிரியர் மாணவருக்கும் இதனால் இடையூறு வர போவதில்லை, வேணும்டா அவங்க ஈசியா அங்க இருந்து கூட அவங்க ஊருக்கு பஸ் பிடிச்சி ஏறி போய்டலாம்.

2 உங்க ஊருக்கு நீங்கள் பஸ்லதா போவீர்களா ???

*****************************************

3 கூலக்கடை பஜார்-ல் இனி இரு நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தி வைக்க முடியாது.

3 . எதற்கு 4 சக்கர வாகனங்களை கூலக்கடை பஜாரில் நிறுத்தி வைக்கணும். அது என்ன டாக்ஸி ஸ்டாண்டா?

3 ஊருக்கு சென்று கூலக்கடை பஜார் ஐ சென்று பார்த்தால் தானே தெரியும். டாக்ஸி ஸ்டாண்டா? அல்லது கூலக்கடை பஜாரா என்று ?

*******************************************************

4 நெசவு தெரு குழந்தைகள் இனி தெருவில் விளையாட முடியாது.

4 . அப்போ KTM தெரு, ஹாஜி அப்பா தைக்கா தெருவில் எல்லாம் குழந்தைகளே இல்லையா. இல்லாட்டி அவர்கள் விளையாட மாட்டார்களா?.

4 ஆமாம். விளையாட முடியாது.

*******************************************************

5 சிறமம் இன்றி பஸ் திரும்புவதர்க்கு தாயும் பள்ளி வழியாக வரும் வளைவில் இருக்கும் இரு வீடுகளை உடைக்க வேண்டியது இருக்கலாம்

5 . எந்த சிரமனும் இல்லாமல் இப்போதும் தாயும் பள்ளி முனையில் லாரி, ஸ்கூல் பஸ் எல்லாம் திரும்பிட்டு தான் இருக்கு. எதையும் உடைக்க தேவை இல்லை (ஹை-வே நிலம் ஆக்கிரமிப்பு செய்து இருந்தால் தவிர)

5 தாயும் பள்ளி வழியாக வரும் வளைவில்... தாயும் பள்ளி அருகேயே நிற்காதிர்கள். சற்று மேலே நகர்ந்து வந்து பாருங்கள்.

********************************************************************

6 சில வருடங்களுக்கு பிறகு , ரோட்டை அகல படுத்துவதற்காக பலர் வீட்டின் ஒரு பகுதியை இழக்க நேரிடலாம்.

6 . எங்க வாப்பா உம்மா பொறந்த காலத்தில் இருந்து எங்க KTM தெரு வழிய பஸ் போயிட்டு தான் இருக்கு எந்த வீடும் விரிவாக்கம் என்ற பேரில் இடிக்க பட வில்லை.

6 இடிக்கப்பட்டு இருந்தால் அல்லது இடிக்க படாமல் இருக்கவே நீங்கள் இங்கு பேசுகிறீர்கள்.

****************************************************************

7 கூலக்கடை பஜார்-ல் உள்ள மளிகை கடைக்கு வரும் மளிகை சாமான்களை இறக்க லாரிகள் வெகுதுளைவில் நிறுத்த நேரிடும்.

7 . அதே போல மெயின் ரோட்க்குவரும் லாரி எல்லாம் சாமான் இறக்கிட்டு தான் இருக்கு..வீணா பயம் வேண்டாம்.

7 மெயின் ரோட்க்குவரும் லாரி எல்லாம் சாமான் இறக்கிட்டு தான் இருக்கு.அதனால் தான் ட்ராபிக் என்பதை தெளிவாக கூறி உள்ளீர்கள்.

KPM உள்ள பிரதான மளிகை கடைக்கு வரும் லாரியை நீங்கள் எங்கு நிறுத்த சொல்வீர்கள் ????

**************************************************

8 திருமண நிகழ்ச்சிக்கு இனி ரோட்டை அடைக்க முடியாது.

8 . திருமண நிகழ்ச்சிக்கு ரோட்டை அடைக்க இயலாதாம், ரெம்ப முக்கியமான விவாதம்...அப்போ எங்க தெருவில் கல்யாணமே நடக்க வில்லையா?

8 நீங்கள் திருமணம் மட்டும் தான் அங்கிருந்து முடிப்பீர்கள். குழந்தை வளர்க்க பொண்ணு வீட்டுக்கு போய்விடுவீர்.

*********************************************************************

9 அத்தெருவில் உள்ளவர்கள் இனி KTM தெரு அல்லது வன்னார்குடியைச் சுற்றிதான் தங்களது வீட்டிற்கு செல்ல முடியும்.

9 . அத்தெருவில் உள்ளவர்கள் KTM தெருவை சுற்றிதான் போகணுமாம். ...நடந்து போறவருக்கு ஒன் வே ப்ரோப்ளம் இல்லை பிரதர்... பைக் கார் லே போகும் பொது தான் one -way ..காரில் போகும் போது KTM வழி சுற்றி போனால் ஒன்னும் கேட்டு விட போவதில்லை.

9 பெட்ரோல் இருக்கும் விலைக்கு ஊரை சுத்தி போக நாங்கள் சவுதியில் ஒன்றும் இல்லை.

*************************************************************

10 வீடுகளுக்கிடையே அத்தெருவில் முடுக்கு இல்லாததால் நடந்து செல்பவர்களுக்கும் இடையூறுதான்.

10 . முடுக்கலாம் இருக்கு KTM தெருவில் இருந்து போக 100 முடுக்கு இருக்குது.. டோன்ட் வொர்ரி .

10 தாங்கள் ஊருக்கு வரும் சமயம் வந்து முடுக்கை எண்ணி பார்த்த பின்பு பேசுங்கள். எதையாவது சொலனும் என்று சொல்லாதீர்கள்

********************************************************************************

11 அரசு இடத்தில் தற்போது கட்டிடங்களை கட்டி இருப்பவர்கள் அல்லது ரோட்டை அகலப்படுத்த அரசு கேட்கும் இடங்களுக்கு உரிமைக்காரர்கலே தங்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு வழி பாதையை ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்ற கருத்தும் உள்ளது

11 . அரசு இடத்தில யாரும் கட்டிடம் கட்டி KTM தெருவில் இருக்க வில்லை.. யாருக்கும் பயமும் இல்லை....வீண் பயம் உங்களுக்கு தான். அதை இடிப்பான் இதை இடிப்பான் என்று!!

11 KMt - தாயிம் பள்ளி & தாயிம் பள்ளி - அல்ஜாமில் அஸ்கர் வரை உள்ள ரோட்டின் அகலம் உங்களுக்கு தெரியுமா ?

மூப்பனார் ஓடை எங்கு இருந்து எங்கு வரை என்று தெரியுமா ?

***********************************************************

12 அல்லாஹ் பாதுகாப்பவன் , விபத்துகளும் நேரிட வாய்ப்பு உள்ளது.

12 . விபத்து - பேருந்து போகும் மற்ற இடங்களில் எல்லாம் விபத்து டபுள் ஆகா நடந்தால் உங்களுக்கு பரவா இல்லை? அப்படி தானே.!!

12 அல்லாஹ் பாதுகாப்பவன். தங்களை போன்று யாரும் நினைக்க மாட்டார்கள்... அது உங்களால் மட்டுமே முடியும்.

******************************************************************

13 கால்நடைகள் வளர்ப்பு அழியலாம்.

13 . கால்நடை வளர்ப்பு அழியுதாம்.. இப்போ வீட்டுக்கு வீடு வாழ்ந்துகிட்டு இருக்கு இல்லையா?

13 நீங்க ஊருக்கு வந்து பார்த்தால் தானே தெரியும். கோழி வேண்டாம் கோழி முட்டை மட்டும் வேண்டும் ???

*************************************************

14 வயதான சில மரங்களை வெட்ட வேண்டியது இருக்கும்

14 . வயதான மரங்கள் அழிந்தால்... இளம்கன்றுகள், வாலிப மரங்களை வீட்டுக்கு பின்னால் நாட்டி வையுங்கள்!! நாளை வயதான மரமாக காட்சி அளிக்கும்.

14 பசுமை காயலை பற்றி பேசுகிறிரீகள் ??? எங்கள் வீட்டில் இளம்கன்றுகள், வாலிப மரங்களை வீட்டுக்கு பின்னால் நட்டி வைத்து உள்ளோம். உங்கள் வீட்டில் உள்ளதா ?

**************************************************************************

15 வீடு கட்டுபவர்கள் கல், மண் , செங்கலை போடுவதற்கு இடம் தேடவேண்டியது இருக்கும் .

15 . வீடு கட்ட கல் மண் செங்கல் போட முடியாதாம்....என்ன கவலை உங்களை சொல்லி வேலை இல்லை இதுக்கு இடம் கொடுத்த நம்ம பஞ்சாயத்தை சொல்லணும்... ஆமா எங்க தெருவில் எல்லாம் வீடே கட்டவில்லை பாருங்கோ!! நாங்கள் எல்லாம் கற்கால மக்கள் இன்னும் களிமண் வீட்டில் தானே இருக்கோம்..

15 நீங்கள் வீடு கட்டி பார்த்த பின்பு சொல்லுங்கள். உண்மையை சொன்ன ஒத்துகொள்ள வேண்டும் நண்பரே!!!

எதோ நல்லது நடக்கும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என்று இருக்கும் பொது எதையாவது சொல்லி அரசியல்வாதி போல குழப்பிக்கொண்டு இருக்காதீர்கள்!!

எதோ நல்லது...அரசியல்வாதி போல குழப்பம் செய்வது நீங்களா ?அல்லது நானா ?

இதற்கு தான் நான் கருத்து வேண்டாம் என்றேன் கேட்டிங்களா ?

*****************************************************************************************

அஹமது

----------------------------------------------------------------------------------------------------

மேலே குறிப்பிட்ட பதில் எனது சொந்த e -mail Id க்கு வந்துள்ளது சகோதரர் அஹ்மத் அவர்களிடமிருந்து. படித்து பார்த்து அவரது சுய நலத்தை புரிந்து கொள்ளலாம்.

ஒரு வழி பாதையாக்கினால் சீதக்காதி திடலிலும் கூட்டம் நடத்தலாம் அதற்கு ஒன்றும் இடைஞ்சலில்லை , அது போக ஊரில், Y.U.F திடல் உள்ளது, சுலைமான் ஒலியுல்லாஹ் திடல் உள்ளது,கடற்கரை பூங்கா திடல், ஜலாலியா, பெரிய சதுக்கை அருகில் , U.S.C, K.S.C இப்படி எத்தனையோ இடத்தில பொதுக்கூட்டம், நடைபெறுகிறது. மார்க்க சம்பத்தப்பட்ட கூட்டங்கள், ஜாவியா, மஹ்லரா, புஹாரிஷரீப், IMM, இப்படி பலஇடங்களில் நடக்கிறது தெரிந்துகொள்ளுங்கள்.

சில மாணவர்கள் தற்போதும் நமதூரின் கடையக்குடி, கோமான் தெரு போன்ற இடங்களுக்கு செல்ல டவுன் பஸ்ஸை உபயோகிக்காமலில்லை.

இருவழி சாளையாக உள்ள மெயின் ரோட்டையே இருசக்கர வாகனகள் சரக்கு லாரிகள் நிறுத்தும் போது இங்கும் இது ஒன்றும் தடை படாது எல்லாவற்றிற்கும் மேலாக இரு சக்கர வாகனங்களுக்கு தனி பார்க்கிங் பேருந்து நிலையத்தோடு உள்ளது, தெரிந்து கொள்ளுங்கள்.

பாயிண்ட் 4 ல் ,தங்கள் பதில் தாங்கள் ஒரு சுய நலத்தோடும் அகங்கார தோடும் பதிலளிப்பது தெரிகிறது மெயின் ரோட்டிலும், ஹஜியாப்பா தைக்கா, K.T.M. தெருவிலும் குழந்தைகள் இருப்பதை ஊர் சென்று பாருங்கள், குழந்தைகள் மருத்துவ மனையும் உள்ளது என்பதனை உணருவீர்கள்.

K.T.M,தெருவிலும், MAIN ரோடிலும், ரோட் போட்ட சமயத்திலும், மரம் விழுந்து போக்கு வரத்து தடைபட்ட நேரத்திலும், தாங்கள் குறிப்பிடும் நெசவு தெரு வழியாக தான் பேருந்துகள் சென்றன, அதுவும் இருவழி தடமாக. அப்போது தாயிம் பள்ளி ஒன்றும் இடிபட வில்லை.

நாங்கள் திருமணம் முடித்து பெண்வீட்டிற்கு சென்று விட்டாலும் எங்கள் தங்கை மார்களின் கணவர் (மச்சான்மார்) எங்கள் வீட்டிற்கு வந்து மருமக்களோடு சுபமாக வாழ்கிறார்கள். பூனை கண்ணை மூடி விட்டால் உலகமே இருட்டாகிவிட்டது என நினைக்குமாம்.

உங்களுக்கு மட்டும் தான் பெட்ரோல் விலை, இன்றுவரை அனுபவிக்கும் கொச்சியார் தெரு, சொளுக்கார் தெரு, நெய்னார் தெரு, கோமா தெரு இவர்களெல்லாம் என்ன பாடு படுகிறார்கள். ஆட்டோ விற்கு பணம் கொடுத்து. அப்படி தாங்கள் கஷ்டப்பட தேவையில்லை, பல சந்துகள் (முடுக்குகள்) இன்றும் உள்ளது.

K.T.M தெருவில் என்க்ரோச்மென்ட் என சமீபத்தில் சில வீட்டு பால்கனிகள் மட்டுமே உடைக்க பட்டன தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று தாங்கள் பதிலில் குறிப்பிட்டது எல்லாம் சுய நல கருத்துக்களே!

எனவே ஊரின் நலன் கருதி தாங்களே முன்னின்று தங்கள் தெரு வாசிகளுக்கு எடுத்துக்கூறி ஒருவழி பாதை அமைய துணை புரிந்து மக்களுக்கு நன்மை புரிய அன்பாய் வேண்டுகிறேன் - செய்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்- சாதிக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [29 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13917

** மேடம் பொற்கொடி அவர்கள்.
** ப்ளீஸ் இந்த விசியதில் முழு கவனம் செலுத்தி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டியது .

** பொதுவாக மேடம் எங்க ஊருக்கு >>>>
ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்து தான் சரியானது. ஊர் மக்களாகிய நாங்கள் ரொம்ப கஷ்ட படுகிறோம்.

** மேடம் உங்கள் முயற்சி வெற்றி பெற """ எங்கள் நல் வாழ்துகள்""".


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by VNS SHAIKNA (chennai) [29 November 2011]
IP: 113.*.*.* India | Comment Reference Number: 13926

உண்மையில் இது மிகவும் நல்ல யோசனை. .விரைவில் நடைமுறை படுத்த வாழ்த்துக்கள். நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by saburudeen (dubai) [29 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13931

ஒரு வழி பாதை திட்டம் கண்டிப்பாக வேண்டும் .ஊர் மக்களுக்கு நன்மையான விஷயம் என்று வந்து விட்டால் சுயநலத்தை எல்லாம் கலைத்எரிந்து விட்டு பொது நலத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும், இல்லையெனில் பேருந்துகள் நமது ஊரை முற்றிலும் புறக்கணிக்கும் சூழ்நிலை ஏற்படும் .இதனால் பாதிக்க படுபவர்கள் ஏழைகள் தான் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.சம்பந்த பட்ட அதிகாரிகள் விரைந்து செயல் பட்டு தடைகள் அத்தனையும் தகர்த்தெறிந்து இத்திட்டத்தை அமுல் படுத்த வேண்டுகிறேன். இச்செய்தி புகைபாடத்தில் உள்ள நம் சகோதரர்களின் ஆர்வத்தை பார்க்கும் பொழுது திட்டம் இன்ஷா அல்லாஹ் விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by seyed mohamed (KSA) [30 November 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13937

KPM உள்ள பிரதான மளிகை கடைக்கு வரும் லாரியை நீங்கள் எங்கு நிறுத்த சொல்வீர்கள் ????*********

பிரதான மாளிகை கடை? அது என்ன? அந்த கடைக்காக ஒரு வழி பாதை கூடாதோ? அந்த கடை அடிக்கடி ரோட்டை அடைத்து தன சொந்த வேலை பார்க்க நம் நகராச்சிக்கு பணம் கொடுக்கிறதா? நம் ஊரில் உள்ள எல்லா கடையும் பிரதானம் தான்.

***********************************************

8 நீங்கள் திருமணம் மட்டும்தான் அங்கிருந்து முடிப்பீர்கள். குழந்தை வளர்க்க பொண்ணு வீட்டுக்கு போய்விடுவீர்********

KTM தெருவில் மனுஷ மக்கள் இல்லையா?



*************************************************

9 பெட்ரோல் இருக்கும் விலைக்கு ஊரை சுத்தி போக நாங்கள் சவுதியில் ஒன்றும் இல்லை.**********

கார், பைக் வைக்க முடியும் போது பெட்ரோல் ஊத்தி தான் ஆகணும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:நகரில் ஒருவழிப்பாதையை நடை...
posted by uvais zul karani (clombo) [18 December 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 14814

ராஜா, நம்ம ஊர் வரலாறு படி மரைக்கார் பள்ளி தெருதான் கடற்கரை சாலை. பேசாம அங்கே ரோடு போட்டால், கேடிஎம் நெசவு ப்ராப்ளம் எல்லாம் சால்வ் ஆயிடும். வரலாற்றைப் பாதுகாதது இதை செய்வாங்களா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved