| 
 உறுப்பினரின் தந்தை மறைவுக்கு தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:- 
  
 எமது தக்வா காயல் நல மன்ற உறுப்பினர் ஜனாப் வாவு முஹம்மத் அலீ அவர்களின் அன்புத் தந்தை ஜனாப் ஹாஜி வாவு அப்துஸ்ஸலாம் அவர்கள் இன்று 28.11.2011 திங்கட்கிழமை அதிகாலையில், வல்ல அல்லாஹ்வின் கட்டளைப்படி தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள்... இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். 
  
“அல்லாஹும்மங்ஃபிர் லஹூ வர்ஹம்ஹு...” 
  
அன்னாரின் ஜனாஸா, இன்றிரவு 08.00 மணிக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - குத்பா பெரிய பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 
  
மர்ஹூம் அவர்களின் மஃபிரத் - பாவப்பிழை பொறுப்பிற்காக எம் மன்றம் மனமுருகி துஆ செய்வதோடு, அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர் சுவனம் கிடைத்திட வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக என பிரார்த்திக்கிறது. 
  
அத்துடன், அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக எனவும் எம் மன்றம் துஆ செய்கிறது. 
  
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  
தகவல்  
கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான், 
பாங்காக், தாய்லாந்து.   |