Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:20:15 PM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7237
#KOTW7237
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, செப்டம்பர் 18, 2011
காயல்பட்டினம் நகர்மன்ற தலைமை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது! (செய்தி திருத்தப்பட்டது)
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 6413 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (48) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நகர்மன்றங்கள் (தலைமை) விபரம் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரு நகர்மன்றங்களான - காயல்பட்டினம் மற்றும் கோவில்பட்டி நகர்மன்றங்களின் தலைமை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது.

மாவட்டங்கள் வாரியான விபரம் வருமாறு (பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சிகள்)

தூத்துக்குடி மாவட்டம்
காயல்பட்டினம்
கோவில்பட்டி

ராமநாதபுரம் மாவட்டம்
கீழக்கரை

திருநெல்வேலி மாவட்டம்
அம்பாசமுத்திரம்
கடையநல்லூர்
தென்காசி
விகிரமசிங்கபுரம்

நாகை மாவட்டம்
வேதாரண்யம்
நாகப்பட்டினம்
மயிலாடுதுறை

திருவண்ணாமலை மாவட்டம்
வந்தவாசி
ஆரணி

விருதுநகர் மாவட்டம்
சாத்தூர்
விருதுநகர்
திருவில்லிபுத்தூர்
திருத்தங்கள்

கன்னியாகுமரி மாவட்டம்
குழித்துறை
நாகர்கோயில்
பத்மநாபபுரம்

திருப்பூர் மாவட்டம்
உடுமலைப்பேட்டை
தாராபுரம்

சிவகங்கை மாவட்டம்
தேவகோட்டை
காரைக்குடி

கடலூர் மாவட்டம்
சிதம்பரம்

புதுக்கோட்டை மாவட்டம்
அறந்தாங்கி

ஈரோடு மாவட்டம்
கோபிசெட்டிப்பாளையம்

வேலூர் மாவட்டம்
ஆம்பூர்

ஜோலார்பேட்டை
குடியாத்தம்

தஞ்சாவூர் மாவட்டம்
தஞ்சாவூர்
கும்பகோணம்

அரியலூர் மாவட்டம்
ஜெயங்கொண்டான்

திருவண்ணாமலை மாவட்டம்
திருவாதிபுரம்

திருவாரூர் மாவட்டம்
மன்னார்குடி

திருச்சி மாவட்டம்
மணப்பாறை

தகவல்:
தினமணி (18-09-2011)

[செய்தி திருத்தப்பட்டது]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நாசகார ஆட்சியாளர்களின் சூழ்ச்சிகளில் ஒன்று
posted by Mauroof (Dubai) [18 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8367

(இவ்வசனம் இந்த செய்திக்கு ஏற்றதாக இருக்கும் என்று நம்புகிறேன்) ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது; உங்களுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமையுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன் (3:120).

இந்த சூழ்ச்சியில் இருந்தும் அல்லாஹ்வின் உதவி பெற்று நல்லதோர் "தலைவியை" நகர்மன்றத்திர்க்கு தேர்ந்தெடுப்பது நமது கடமை. நல்லதோர் நகர்மன்றம் அமைவதற்கு பல குழுக்களாக இருந்து செயலாற்றிவரும் அமைப்புகள் அனைத்தும் தாமதமின்றி ஒன்று கூடி ஆலோசித்து வேறுபாடுகளை களைந்து நல்லதோர் முடிவிற்கு வரவேண்டும் என்று பணிவோடு வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [18 September 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8371

நாம் எல்லோரும் ஓன்று இணைந்து நல்ல ஓரூ "தலைவரை" தேர்ந்து எடுப்போம் என்று நினைத்த நிலையில், இது என்ன புது கதையாக உள்ளது ? இனி நடக்க வேண்டியதையும் நாம் பொறுமையுடன் ஓன்று இணைந்து நன்கு யோசித்து நல்ல முடிவை எடுப்போம் . எந்த நிலையிலும் நமக்குள் ஒற்றுமை நிச்சயம் தேவை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by A.R.Refaye (Abudahbi) [18 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8372

ஓஹோ இதுதான் வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் நாழ்லி உடைந்த கதையோ -----

இந்த அரசு அறிவிப்பை எதிர்த்து சட்டப்படி சந்திக்க வாய்ப்பு உள்ளதா சட்டம் படித்தோர் முயற்சி செய்யும் பட்டசத்தில் மாறும் நிலை ஏற்படுமா கோச பெண்கள் என்று கூறி மாற்றலாமா------பேரிடியாக வந்த இச்செய்தி உண்மையில் எல்லோர் மனதையும் சற்று வேதனைக்கு உள்ளாக்கி இருக்கலாம் அதை எல்லாம் மறந்து போர்நடவடிக்கை போல் உடனே அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடகட்டும் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு நல்லவர்களை தர போதுமானவன்.

அன்புடன் A.R.Refaye-Abudhabi


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by Shahul Hameed (Hong Kong) [18 September 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 8373

நெய்னார் தொரு கவுன்சிலர் கித்று பாத்திமா அவர்கள் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [18 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8374

அனைத்து ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புகள் ஒன்றுகூடி ஒரு பொது தலைவரை தேர்ந்தெடுக்க ஆலோசனைகள் நடைபெற்று கொண்டிருக்கும்போது, திடீரென, தான் மீண்டும் போட்டி இட விரும்புவதாக தன்னிலை அறிக்கை விட்ட முன்னாள் தலைவி, http://www.kayalpatnam.com/shownews.asp?id=7217

அதை தொடர்ந்து "காயல்பட்டினம் நகர்மன்ற தலைமை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது!
http://www.kayalpatnam.com/shownews.asp?id=7237
என்கின்ற இன்றைய சூடான தகவல், இன்னுமா உங்களுக்கு புரியல?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by vilack syed mohamed ali (kangxi) [18 September 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 8376

பிறப்பால் நமதூரை சேர்ந்த ஒரு பெண்மணிக்கு இந்த பதவியை தரலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Utter Blasphemy
posted by ahamed mustafa (Dubai) [18 September 2011]
IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8379

It comes as a shock for uttering a blasphemetic word by Bro. Ali in this forum, that the position be given to someone who was born in Kayal. By writing so, it is a challenge to the concept of what Islam has to offer in terms of discrimination.

I do not support any one here by writing so, nor does I back the Ex-chairman, incidentally happened to be my relative. I was very much against that from the begining for the only reason that it may incur silly comments for people like these.

Now that the use of such biassed term here are to be taken with the rudest of shocks & I condemn the brother for having written so. Does Islam advocate any differences in terms of ethnicity,creed or culture. In fact Islam is a great religion which emphasies the reverts & keep them in the highest of the esteems. It's so grateful & dynamic deed of her to be one among our society,despite several odds.

Be proud to say you are a Muslim, but never ever throw arrows or blasphemise people by way of their birth, caste, creed or colour. This is not a position that will bring laurel to anyone being a Chairman or president. It's only a worldly affair.

But guys/Gentlemen, Please mind your language & words you utter.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by Ibrahim Ibn Nowshad (Salem) [18 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8380

Dear Bro,

How it could be if you see a sign in all Aiports of China that "Citizens of china by birth are allowed to work here"?

பெண்களிடம் ஆட்சி பொறுப்பு கொடுக்க வேண்டாம் என வாதிட்டால் வரவேற்றிருக்கலாம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by mohideen (iran) [18 September 2011]
IP: 94.*.*.* Iran, Islamic Republic of | Comment Reference Number: 8382

salaam to all

bro. ah. mustafa not understanding the concept. he just try to mislead. nothing wrong in choosing some body from born nativeor else we can choose who is living in kayalpatnam for longyears with extraordinary qualifications

regards
mohideen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. அப்படி போடு.. இதுதாண்டா நம்ம பாரம்பரியம்..
posted by M Sajith (DUBAI) [18 September 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8384

இப்ப ஒற்றுமை எல்லாத்தயும் ஒடப்புல போட்டுவிட்டு குலப்பெருமை பேச வந்தாச்சு..

காழ்ப்புணர்ச்சி எங்கே இருந்து வருதுன்னு இப்ப தெரியுதா?

கீழே விழுந்தாலும் பரவாயில்லை மீசைல மண்ணு ஒட்டம பார்த்துகறாங்க..

very good.. keep it up

உருப்படும் ஊரு !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah, Saudi.) [18 September 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 8385

பட்டியலை பார்க்கும்போது பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட ஊர்களில் பெரும்பான்மை இஸ்லாமியர்கள் வாழும் ஊர்களாகத்தான் தெரிகிறது, உள்நோக்கத்தோடு அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை மாற்ற சட்டப்படி ஏதும் வழி உள்ளதா?.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by mohd ikram (saudi arabia) [18 September 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8386

இனி நமதூரின் தலைவிதி ஒரு தலைவி இன் கையில் தானா ? நமது முன்னாள் தலைவி வஹிதா தான் மிக பொருத்தமானவர். ஜெயா விற்கும் நெருக்கமானவர் என்பதால் நமதூர் தேவைகளை நிச்சயம் நிறைவேற்றி தருவார் என்பதில் சந்தேகம் இல்லை. நல்ல யோசித்து முடிவை எடுப்பது நமது கடமை. நமதூர் நலன் மட்டுமே நமது குறிக்கோள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by Muslim Abdul Kader (USA) [18 September 2011]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 8387

Salaams,

I second brother Mustafa's/Ibrahim's comments and i strongly condemn ( I don't know if my condemnation is a botheration to the brother at all) brother vilack syed mohamed ali.

Brother Ali, you have to watch out for the words before clickng "Submit" on your response. It is easy to comment about anyone. I think this forum is allowed to submit anyone's opinions, but not such a profiling comment. Administrator will have to monitor such comments!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. தோல்வியாகும் இவர்கள் சூழ்ச்சி இறை அருளால்
posted by K M SHAFEER ALI (CHENNAI) [18 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8389

அஸ்ஸலாமு அழைக்கும்

இது தான் அரசியல் இதில் சுயநலம் மட்டுமே குறிக்கோள் ஊர் நன்மை கேளிக்கை ஆகியது சிலருக்கு நம்மை சுற்றி பின்னப்படும் சூழ்ச்சியை கண்டு காயலர்கலே மனம் தளர வேண்டாம் நம்மோடு சூழ்ச்சியாலர்கலுக்கெலாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ் இருக்கிறான்

இப்போது தேவை நம்முடைய ஒற்றுமை ஓன்றுபடுவோம் வெற்றி பெறுவோம் (இன்ஷா அல்லாஹ் )

அஸ்ஸலாமு அழைக்கும்

K M SHAFEER ALI
CHENNAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இறைவன் அதில் பல நன்மைகளை தரவே நாடி இருக்கிறான்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [18 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8390

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்ற தலைமை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்ற அறிவிப்பு நிறைய மக்களுக்கு அதிர்ச்சியை தரலாம் - ஒரு வேளை இந்த அறிவிப்பு சில காரணங்களால் மாறவும் செய்யலாம் - எது எப்படியானாலும் இறைவன் அதில் பல நன்மைகளை தரவே நாடி இருக்கிறான் என்பதை நினைவில் நிறுத்தி செயல்படுங்கள் அமைதி பெறுவீர்கள்.

------------------------------------------

இந்த மாற்றம் நமது ஊருக்கு மட்டுமல்ல, எனவே அவருடைய சூழ்ச்சி, இவருடைய சூழ்ச்சி என்று அனாவசியமான கற்பனைகளை உருவாக்கி நமக்குள் மனக்கசப்புகளை உண்டாக்க வேண்டாம்.

இது மொத்தத்தில் ஆட்சி , அதிகாரங்கள் உள்ளவர்களாலே ஏற்படுத்தப்பட்ட அநாகரீக செயல் - இதற்கெல்லாம் அவர்கள் மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ - இறைவனால் தண்டனையை அடைந்தே தீர்வார்கள் அதற்கு எவரும் விதிவிலக்கல்ல.

------------------------------------------

நமக்கு வேண்டியதெல்லாம் ஊர் ஒற்றுமை , நேர்மையான நகராட்சி அமைந்து மக்கள் சுபிட்சமாக வாழ வேண்டும் என்பது மட்டுமே.

நமது நகராட்சி தலைமைக்கு ஒரு " பெண் " தான் என்று முடிவாகிவிட்டால் - அதை நாம் ஏற்றுத்தான் ஆக வேண்டும் - அதன் மூலம் நமக்கு இறைவன் நன்மையை நாடியிருக்கிறான் என்பதை ஏற்றுக்கொண்டு செயல்படுவோம்.

நமது ஐக்கிய பேரவை , நமது ஜமாஅத்'துகள் எடுக்கிற முடிவுக்கு கட்டுப்படுவோம். நாம் நமது ஜமாஅத்'துகளுக்கு நல்ல ஒத்துழைப்பைக் கொடுப்போம் - நமது ஜமாஅத்'துகள் ஐக்கியப் பேரவைக்கு நல்ல ஒத்துழைப்பைக் கொடுக்கும் - ஐக்கியப் பேரவை ஊருக்கு ஒரு நல்ல நகர் மன்றத்தை உருவாக்கித்தரும் இன்ஷா அல்லாஹ்!.

--------------------------------------------

மக்களே!

ஊரில் நல்ல திறமையான , ஆர்வமுள்ள , இலஞ்சம் வாங்காத, இலஞ்சம் வாங்க விடாத ,நேர்மையான , மார்க்க பற்றுள்ள ஒரு பெண்ணை தேர்ந்தெடுப்பதற்கு எல்லோரும் முயற்சி செய்யுங்கள் வெற்றிப்பெறலாம்.

மிக முக்கியமாக வார்டு உறுப்பினர்களை நல்ல முறையில் தேர்ந்தெடுத்து அனுப்புங்கள் - உறுப்பினர்கள் நல்லவர்களாக அமைந்துவிட்டால் - நகர் மன்றம் நல்ல முறையில் செயல்பட தொடங்கிவிடும்.

எல்லாம் வல்ல அல்லாஹ்! நம் அனைவர்களுக்கும் ஒற்றுமையை தந்து எல்லோரும் ஒரு குடையின் கீழிருந்து செயல்பட்டு நல்லதொரு நகர் மன்றத்தை உருவாக்கிட கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. தவிர்த்திருக்கலாம் அன்பரே
posted by Mauroof (Dubai) [18 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8391

கருத்துப்பதிவு எண் 6 தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய ஒன்று. இது நல்லதோர் நகர் மன்றம் அமையக்கூடாது என்று ரூம் போட்டு சூழ்ச்சிகள் பல செய்து கொண்டிருக்கும் குள்ள நரி கூட்டத்தினரை நம்மை அறியாமலேயே உசுப்பேற்றி விடுவதற்கு சமம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) [18 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8393

காயல்பட்டினம் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்கிற செய்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.ஏனென்றால் ;கடந்த முறைக்கு முந்தய இரண்டு முறையாக நமதூர் பஞ்சாயத்தில் (அப்போது "பஞ்சாயத்துதான் :)பெண்களே தலைவேர்களாக பதவி வகித்தனர்.

கடந்த முறைதான் அது ஆண்களுக்கான "நகராட்சியாக"மாற்றப்பட்டு ஒரு ஆண் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மறுபடியும் அது பெண்களுக்கான நகராட்சியாக மாற்றப்படுவதை நம்பமுடியவில்லை.

இதில் ஏதோ உள்நோக்கம் இருக்கவேண்டும். என்னக்கு தெரிந்த வரை சுழற்சிமுறையில் இன்னும் பத்தாண்டுகளுக்கு பிறகுதான் "பெண்"தலைவர் வர வேண்டும். அதை ஒரு தவணை முறைலையே பெண் தலைவராக மாற்றிய "சக்தி"எது? எனபது அறியப்பட வேண்டும்.

அதிகமும் முஸ்லீம்கள் வசிக்கும் ஊர்களாக பார்த்து பெண் தலைவேர்களுக்கு ஒதுக்கி இருப்பது அரசின் ஓரவஞ்சனையையே காட்டுகிறது. வேறு என்ன செய்ய ...!நல்ல பெண் தலைவராகபார்த்து தேர்ந்தெடுக்க வேண்டியதுதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by S.A.Muhammad Ali (Dubai) [18 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8394

காயல்பட்டணம், கீழக்கரை, ஆம்பூர், கடையநல்லூர் இது போன்ற முஸ்லிம்கள் வாழும் ஊர்கள் எல்லாம் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது எந்த முறையில் நியாயம்? என்ன அடிப்படையில் இவ்வாறு பிரிக்கிறார்கள்? தகவல் அறியும் சட்டத்தின் கீழ் முறையிட்டு அதில் எதாவது குளறுபடி இருந்தால் அரசிடம் முறையிடலாமே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by ibnunahvi (abudhabi) [18 September 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8395

நகர்மன்ற தலைமைக்கு பெண்கள் வருவது நமது ஊருக்கு ஏற்ப்படும் சோதனை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by Abdul Wahid Saifudeen (A.W.S.) (Kayalpatnam) [18 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8396

பெண்கள் ஆட்சிக்கு வரக்கூடாது என்று (வாதம்) பிடிவாதம் கொள்வோருக்கு இது ஒரு அதிர்ச்சியான செய்திதான்.

கவுன்சிலரை பொருத்தமட்டில் பெண்களுக்கு 2 வரையறைக்காலம் (Terms) என்றால் (33 % = 1/3 ), ஆண்களுக்கு 4 வரையறைக்காலம். அநேகமாக இது தலைவர் பதவிக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். (தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (RTI -Act) கீழ் அரசுக்கு எழுதி உண்மை நிலையை அறிவதற்கான காலம் போதாது). அவ்வாறிருந்தால் அரசின் இந்த முடிவை எதிர்த்து பொது நல வழக்கு - Public Interest Litigation (PIL) உயர்நீதி மன்றத்திலோ அல்லது அதன் மதுரை கிளையிலோ தொடரலாம்.

சட்டத்திலுள்ள ஓட்டைகளை தெரிந்து கொண்டு, நமதூரின் நிலையையும் (அரசியல் வாதிகளுக்கு ஓட்டு இல்லை என்ற நமது மக்களின் முடிவை) அறிந்துகொண்டு, அரசு செய்கின்ற (தந்திர) வேலையாகவும் இது இருக்கலாம்.

தகுதிபெற்ற ஒரு வழக்கறிஞரிடம் ஆலோசனை பெற்று இந்த வழக்கை தொடரலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by vilack syed mohamed ali (Hetang) [18 September 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 8398

அஸ்ஸலாமு அழைக்கும்.

என் வார்த்தை தேர்வுகளில் சிறு தவறு நடந்திருக்கலாம் . நம் நகராட்சிக்கு நமது ஊரை சேர்ந்த தகுதியான பெண்கள் இருக்குமாயின் , அந்த தகுதியான பெண்மணியை அடையாளம் கண்டு , கல்வி தகுதியை கருத்தில் கொண்டு , பகுதி வேறுபாடின்றி முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதே என் உளமார்ந்த கருத்தே தவிர வேறொன்றும் இல்லை .யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இன்றும் இல்லை , என்றும் இல்லை .

சகோதரர் Ibrahim ibn nowshad அவர்களே , அல்லாஹ் ரிஸ்க் அளிக்க போதுமானவன் . விளக்கம் வேண்டுமெனில் என்னுடைய தனிப்பட்ட மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by Ibrahim Ibn Nowshad (Salem) [18 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8401

சகோதரர் அலி அவர்களே!

அதை தான் நானும் சொல்கிறேன். அல்லாஹ் தான் நாம் எங்கு வாழ்கிறோம், இறப்போம் என்பதை நிர்ணயம் செய்கிறான்.

நான் ஒரு எடுத்து காட்டிற்கு கேட்ட கேள்வியை வாழ்கையில் அப்படியே ஒப்பிட வேண்டாம்.

Regrets the faults if any.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Clarity
posted by Ahamed mustafa (Dubai) [18 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8403

Dear fellow kayalites, salams

Personally & in a religious point of view, me or anyone writing here are against women ruling the men, & we are not here to support or back any individual women for that matter. The use of provocative words targetted at an individual was only taken up here & advised to be refrained & as correctly accepted by Bro.Ali. Thanks..

It sounded pathetic to hear umpteen comments about an individual, if she is right or wrong, probably not listening or reading this forum. Nor does her beloved offsprings are interested in this ball game. I reiterate that it is not mine or anybody's agenda to make her or support her sit in the so called coveted seat (more of a hot and bad seat).

In fact I would rather be happy more than anyone else,had our kayalpatnam been awarded to a male. It is agreed that a lots of men & women educated & well talented are there in our town. They need not necessarily be a kayalite by birth. Any Tom,Dick & Harry could fit into this seat. Once again I conclude that I do not back any one up here & Thanks for the guys who understood my point in question & backed me up.

I hope we shall learn from mistakes & not to wound private sentiments of individuals. Lets be silent in what we don't like, definitely not provocative with the personal sentiments of individuals.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by L.A.K.Buhary (Hong Kong) [18 September 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 8404

ஹைர்..நடப்பது போல நடக்கட்டும்..நடப்பவை யாவும் நன்மைக்கே ..இன்ஷா அல்லாஹ்..!

என்ன.. நாமும் இதை ஒரு சவாலாக எடுத்து கொண்டு,தலைவர் பதவிக்கு வேண்டுமானால் பெண் ..அதுவும் ஆளும் கட்சிக்கு தோதுவாக(ஆளும் கட்சியின் அரசியல் சூழ்ச்சியால் தான் இந்த ஒதுக்கீடு? என்று இருக்குமாயின்..)ஒரு பெண்ணை அமர்த்தி விட்டு..துணை தலைவர் மற்றும் அனைத்து உறுப்பினர்கள் பதவிக்கு(அறுதி பெரும்பான்மையுடன்) பேரவை மூலமாகவே ஒருமனதாக தேர்ந்தெடுக்க நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஒரு பலமான மாற்றத்தை கொண்டு வந்து காண்பிக்கவேண்டும்.. அதன் மூலம் நகருக்கு பல நல திட்டங்களை செயல்படுத்தலாம்.!!

இன்னும் சொல்ல போனால் , தலைவர் பதவிக்கு பொறுப்பேற்க இருக்கும் பெண்மணியை கூட பேரவை தெரிவு செய்து கை காட்டும் பெண்மணியைதான் நகர மக்களும் ஒருமனதாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

நம்மில் ஒற்றுமை இந்த நிமிடம் முதல் அவசியம் தேவை என்றாயிற்று. அதை கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் பாடம் படிக்க வேண்டும்...!!

ஆக எந்த சட்ட திருத்தமும்,(அ)ராஜ(க)தந்திர சூழ்ச்சியும் இந்த காயல் மாநகர மக்களின் முன்பு, அதன் தலைமைக்கு முன்பு செயலற்றதாகிவிடும் என்று கால காலத்துக்கும் உணர்த்த வேண்டும்..!!

இத்தருணத்தில் MEGA உள்ளிட்ட நகர தேர்தல் அமைப்புகள், நகரின் பொது நல அமைப்புகள் ஒருங்கிணைந்து விழிப்புடன் செயலாற்றிட ஏக இறைவன் அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்..!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by mackienoohuthambi (kayalpatnam) [18 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8405

நகரமன்ற தலைவரை தேர்ந்தேடுக்குமுன் எத்தனை போட்டிகள் இயக்கங்கள் என்று வரிந்துகட்டிக்கொண்டிருந்தவர்களுக்கு முதல் அடியாக விழுந்துள்ளது நகரமன்ற தலைவராக ஒரு பெண்ணைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்து விட்டது.

நாம் சண்டைபோட போட நமது வாக்குரிமையும் பறிக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அல்லாஹுக்கு பயந்து நாம் காரியம் ஆற்றினால்தான் நமது ஊரை நாமே ஆள முடியும்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by Hameed Mohamed (Cnash) (Kayalpatnam) [18 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8407

ஊர் ஒற்றுமைக்காக இங்கே அனைவரும் விவாதித்து கொண்டிர்க்கும்போது சஹோ. அலி சிவாசேனா தலைவர் பால்தாக்ரே அதே துவேசத்தை கருத்து திணிப்பாக்கி இருக்கிறார்!! அவரும் இதே கருத்தை தான் சொல்கிறார்... மராட்டிய மண்ணில் பிறந்த மண்ணின் மைந்தருக்கே ஆளும் அதிகாரம் என்று!! எங்கிருந்து வந்ததோ இந்த குலவெறி என்று தெரியவில்லை!!

இவர் கருத்து படி பார்த்தல் அன்று மக்காவில் இருந்து ஹிஜ்ரத் செய்து வந்து மதினாவை ஆண்ட அபூபக்ர் (ரலி) முதல் முஆவியா, அப்பாஸிகள் வரை எல்லோரும் முஜஹீரீன்கள் தான் உங்கள் வார்த்தையில் சொல்ல வேணும் என்றாள் வந்தேறிகள்!! அன்று அவர்கள் பார்த்தது ஆள தகுதியானவர் யார்...தக்வாவில் சேரந்தவர் யார் என்பதுதான்!! அரபி அஜமியை விட சிறந்தவன் இல்லை... அஜமி அரபியை விட சிறந்தவன் இல்லை... இறையச்சத்தை தவிர என்ற நபி(ஸல்) இன் சொல்லை தான் தாரக மந்திரமாக கொண்டு தங்கள் தலைவருக்கு பைஅத் செய்தார்கள்!!

எங்கிருந்தோ ஆப்ரிக்கன் பரம்பரையில் பிறந்த ஒபமா அமெரிக்கவை ஆளுகிறார்!! நாம் குலபெருமை இன பெருமை பேசுகிறோம்!! இதே கோசத்தை இங்கே உள்ள மண்ணின் மைதர்கள் வைப்பர்களானால் ..எகிப்தில் இருந்து வந்ததாக நம்மை நாம் பெருமைசாட்டி கொள்ளும் நமக்கும் இந்த மண்ணை ஆள தகுதி உள்ளதா என்று நம்மை நாமே கேட்டு கொள்ளவோம்!! இதே மண்ணின் பிறந்தவருக்குதான் அதிகாரம் என்றால்..நீங்களும் நானும் Hong Kong லோ...சவுதி யிலோ இப்போ வேலை பாக்க முடியுமா!!

ஊரு ஒற்றுமையை நாடி இது போன்ற கருத்துக்களை தவிர்த்து நீங்களே உங்கள் கருத்தை நீக்க சொன்னால் அனைவருக்கும் நல்லது!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by ALS மாமா (kayalpatnam) [18 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8408

அஸ்ஸலாமு அலைக்கும்

காயல்பட்டினத்தில் ஆண் தான் நகராட்ச்சி தலைவராக இருப்பார் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்த ஊர் மக்களுக்கு ஏமாற்றம் தந்துள்ளது 'அரசு'.

அறிவித்த அதிகப்படியான ஊர்களில் முஸ்லிம் பெண்கள் ஆட்சி செய்யும் நகராட்ச்சியாக ஒதிக்கி உள்ளது புரியாத புதிராக உள்ளது, ஆனால் இரண்டு முறை காயல் நகரில் பெண்கள் ஆட்சி செய்து உள்ளார்கள் அதனால் அரசை எதிர்த்து போராடி பயனில்லை, அகவேன்டியாதை ஆய்வு செய்யுங்கள்.

ALS( பொது சேவை, எழுத்தாளர். )., காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. அரசியல் சித்து விளையாட்டு.
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [18 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8411

அஸ்ஸலாமு அழைக்கும்..

நமதூர் நகரமன்ற தலைவர் பதவிக்கு , சென்ற முறை தவிர , மற்ற இரண்டு முறையும் பெண்களுக்கே ஒதுக்க பட்டுள்ளது..ரோஸ்டர் சிஸ்டம் படி பார்த்தாலும், அரசு துறை தவறான முடிவை, எடுத்துள்ளது..நமது மாவட்டத்தில், மற்ற நகர் மன்றங்களின் தலைவர் பெண் இட வோதுக்கீட்டு குறிப்புகளை ஆராய்ந்து, நல்ல வழக்கறிஞர் மூலம், சட்ட பூர்வவமான நடவடிக்கை எடுக்கலாம்.ஒரு புறம் இது.. தேவை பட்டால் தேர்தலுக்கு. தடை கோரலாம்..அந்த சமயம் status quo என்ற இப்போது உள்ள நிலை தொடர வாய்ப்பு உள்ளதா என்று ஆராயப்பட வேண்டும் ( ஏன் என்றால் இந்த நகராட்சியின் ஆயுள் காலம் அடுத்த மாதம் முடிகிறது)...மற்றொரு வகையில் RTI அக்ட மூலம் அரசுக்கு விளக்கம் கேட்கலாம்..

இன்னும் தேர்தல் தேதி அறிவிக்க படவில்லை. நாளை அறிவித்து, தேர்தலுக்கு குறைந்த பட்சம் முப்பத்தி ஆறு நாள் இடைவெளி இருக்கும்.. கடைசி முயற்சியாக..அஆனல் நேகமாக இது வீண் முயற்சி, அரசு அமைச்சர்களை சந்தித்து போர்மல்ட்டிக்காக முறை இடலாம்..

ADMK அரசை மட்டும் குறை கூற முடியாது. முதன் முதலில் நம் ஊருக்கு தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்க பட்ட போது DMK ஆட்சி .. MK STALIN தான் LOCAL ADMINISTRATIVE மினிஸ்டர். அவர் அப்போது நமதூரின் சார்பாக முறைட்டும், நமக்கு சாதகமாக நடக்கவில்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by Abu Rushda (Dubai) [18 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8412

Dear Admin,

After Mr.Ali admitted, there may be some mistake in his comment; it is wise to remove comment # 6 from this section. The comment is bit provocative, unhealthy and has dubious meanings.

One thing is for sure, we are Muslims by chance; our forefathers were Muslims, so we are, and there is nothing special about that. We have no right to talk about Muslims by choice, who choose Islam above all other faiths to lead their life. They need our admiration, definitely not insult.

Moderator: சகோ. அபூ ருஷ்தா அவர்களே... தயவுசெய்து தங்களது அசல் பெயரையும், விரும்பினால் புனைப்பெயரை அடைப்புக்குறிக்குள்ளும் இணைத்து இனி வருங்காலங்களில் கருத்துப் பதிவு செய்து ஒத்துழைக்கவும். சில நிர்வாக வசதிகளுக்காக இந்த வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. ஒத்துழைப்புக்கு மிக்க நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. மம்மிக்கேத்த டம்மி...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ்மைந்தன் (புனித மக்கா.) [18 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8413

திட்டமிட்டு செய்த சதி!முஸ்லீம்கள் பெரும்பாண்மையாக வாழும் ஊர்களில் தினிக்கப்பட்ட கொடுஞ்செயல்!ஊர் தலைவர் பதவியை டம்மி ஆக்க மம்மி எடுத்த முடிவாகக்கூட இருக்கலாம்.உருப்படாத உளவுத்துறையின் உளரல் ரிப்போர்ட் நிச்சயம் அம்மாவுக்குப் போய் சேர்ந்திருக்கும்.அவங்களும் பார்க்க வேண்டியவர்களை கடைக்கண் பார்வையால் பார்த்திருப்பார்.இது தான் உண்மை!சட்டத்தின் கதவைத் தட்டி இவர்களுக்கு சாட்டையடி கொடுக்க காயல் வழக்கறிஞர்களே அணி திரளுங்கள்.சூழ்ச்சிதனின் சூட்சமத்தை சுரண்டிக் களைவோம்.புறப்படுங்கள்!!!

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by M.சுல்தான் (சூடான்) [18 September 2011]
IP: 41.*.*.* Sudan | Comment Reference Number: 8417

அஸ்ஸலாமு அலைக்கும்....

எதெற்கு நமக்குள் இந்த கருத்து சண்டை... ஆண் தலைவரோ, பெண் தலைவியோ ஆக மொத்ததில் ஊர் பயனடைஞ்சா போதும். ஒற்றுமையா இருப்பொம்.. ஒன்றா செயல்படுவோம் நல்லதொரு தலைவியை தேர்ந்தெடுப்பொம்... வல்ல அல்லாஹ் நம்முள் ஒற்றுமையை ஏற்படுத்துவானாக..

Admin க்கு ஒரு வேண்டுகோள் தலைவி பதவிக்கு உரிய நபர்களின் பெயர் பட்டியல் வெளியிடலாமே...

M.சுலதான்..... சூடான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. தலைமையும் சரியாக அமையும் - அதிகாரிகளும் சரியாக அமைவார்கள்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [18 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8418

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நகர்மன்ற தலைமை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருப்பது உள்ளாட்சி தேர்தலை ஒத்திவைப்பதற்குண்டான நோக்கமாகத்தான் தெரிகிறது.

பல ஊர்களையும் பாதிப்பதால் சட்டப்பூர்வ நடவடிக்கையில் சிலர் இறங்குவர் அதனால் - உள்ளாட்சி தேர்தல் காலவரையற்ற தள்ளிவைப்பு என்ற பதில் விரைவில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

தேர்தலுக்கு 6 மாதத்திற்கு முன்பு பெண்களுக்கு என்று ஒதுக்கியிருந்தால் அவ்வளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது - திடீரென்று, தேர்தல் அறிவிப்பு வரக்கூடிய நேரத்தில் இந்த ஒதுக்கீடு வந்ததால் பெரும்பாலானவருக்கு ஏமாற்றம்தான்.

-------------------------------------

ஒரு வேளை தேர்தல் நடக்கும் என்றிருந்தால் கூட அறிவித்திருக்கும் ஊர்களை பார்க்கும்போது முஸ்லிம்களை பாதிக்க வேண்டும் என்ற சூழ்ச்சியில் செய்ததாக தெரிகிறது.

சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் சூழ்ச்சியாளன் அல்லாஹ்! என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

-------------------------------------

மக்களே!

ஒரு வேளை தேர்தல் அறிவித்து ஒரு பெண்ணே தலைமை பதவிக்கு நின்றால்கூட - அந்த தேர்தலை சந்திக்கத்தான் போகிறோம் - இன்ஷா அல்லாஹ்! நம் சமுதாயத்து பெண்ணை தலைமை பதவிக்கு கொண்டு வரத்தான் போகிறோம், அதில் சந்தேகமில்லை.

ஊர் ஒற்றுமையை கருத்தில் கொண்டு எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்பட்டு நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆளும் கட்சி, எதிர் கட்சி என்று அரசியலை சாராதவர்களையே தேர்ந்தெடுப்பது சிறந்தது.

இன்றைய சூழ்நிலையில் நமக்கு எந்த சலுகையோ, திட்டங்களோ அவசியமில்லை - முதலில் ஊழலில்லாத உறுப்பினர்களைக் கொண்ட நகர்மன்றம் அமைய வேண்டும்.

அதன் பின், நம் நகர்மன்றத்தால் இலஞ்சமில்லாத, தக்க காரணமில்லாத தாமதமற்ற மக்கள் சேவை. இந்த இரண்டையும் முதலில் அமுலுக்கு கொண்டு வந்துவிட்டால் மற்றவைகள் எல்லாம் இறைவனருளால் தானாக வந்துவிடும்.

எனவே! மக்களே உங்கள் வார்டு உறுப்பினர்களை நல்லவர்களாக தேர்ந்தெடுங்கள். தயவு செய்து சொல்லாதீர்கள் முதலில் நல்லாத்தான் இருக்கிறாங்க அங்கே போனப்பிறகு மாறி விடுகிறார்கள் என்று.

உண்மையான ஈமான் உள்ளவர்களாக இருந்தால் அங்கே போனாலும் சரி வெளியே வந்தாலும் சரி கெட்டுப்போக மாட்டார்கள்.

ஆகையால் நீங்கள் தேர்ந்தெடுக்கும்போதே அவர்கள் குண நலன்களை நன்றாக பார்த்து தேர்ந்தெடுங்கள்.

வார்டு உறுப்பினர்களை வைத்துதான் தலைமையும் சரியாக அமையும் - அதிகாரிகளும் சரியாக அமைவார்கள் எனவே மிகவும் கவனமாக இருந்து தேர்ந்தெடுங்கள்.

வல்ல அல்லாஹ்! நமது நகர்மன்றம் சிறந்ததாக அமைய கிருபை செய்வானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. நகர் மன்ற தலைவலி
posted by hasbullah mackie (dubai) [18 September 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8420

சொல்லப்போனால் தலைவலி ஆண்கள் தவறுகள் செய்தால் தட்டி கேட்கலாம் பெண்கள் தவறு செய்தால் யார் வாய் திறப்பார்கள் அடங்கி போக வேண்டியது தான்.

நம்ம ஊருக்கு கிடைபதற்காக முயற்சிகள் எடுத்து நிறைவேற்றி தந்ததாக முன்னாள் தலைவி அறிவித்திருந்தார்கள்

ஆளுங்கட்சிக்கு ஆதராவாக இருந்தால் தமிழ் அம்மாவுக்கு (மோடி அம்மாவுக்கு) ஜால்ரா போட்டுட்டு இருக்க வேண்டியது தான்

என்னதான் இருந்தாலும் ஊருக்கு ஒரு சோதனை காலம் தான்

அல்லது அம்மாவை போல அப்பாவின் சொந்தங்களை எல்லாம் பிடித்து அமுக்குவது போல ஊரில் பல அக்கிரமங்கள் செய்தவர்களை பிடித்து அமுக்க வேண்டியது தான்.

கோமான் ஜமத்தில் அறிவித்ததை போன்று உண்மையான உறுதியான வாக்குறுதியை வெளிபடுத்துகிற பெண் வேட்பாளருக்கு ஒட்டு போடுங்கள்....

ஐக்கியப்பேரவை மற்றும் மெகா அமைப்புகள் தங்கள் நிலைமையே குறுகிய காலத்தில் அறிவிப்புகள் வெளியிட்டால் நல்ல முடிவுகளை எடுக்கலாம் இன்ஷா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by s.a.h.dawood naina (doha-qatar) [18 September 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 8423

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

காயல்பட்டினம் நகராட்சி தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது என்கிற செய்தி அதிர்ச்சிதான். அல்லாஹ்வின் நாட்டம் எதுவோ அது நடந்தே தீரும்,இதில் நாம் கவலை பட ஒன்றும் இல்லை, முன்பை விடவும் இன்னும் வேகமான மெகாவின் செயல்பாடும் மற்ற சமூக அமைப்புகளின் செயல்பாடும் இருக்கும் இருக்கணும், ஊரில் நல்ல திறமையான , மார்க்க பற்றுள்ள,நேர்மையான ,ஒரு பெண்ணை நாம் தேர்ந்தெடுப்போம் இன்ஷாஅல்லாஹ்,

எனக்கு தெரிந்தவரை நெய்னார் தொரு கவுன்சிலர் கித்று பாத்திமா அவர்கள் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.மார்க்க பற்றுள்ளவர்,சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர், திறமையாக செயல் பட கூடியவர், அவர்களை தேர்வு செய்வது நலம்.

சாளை s .a .h .தாவுத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [18 September 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 8424

நம் ஊர் ஒற்றுமைக்காக இங்கு கருத்தினை பதிவு செய்யும் சகோதரர்கள், முதலில் அந்த காலம் இந்தக் காலம் இரண்டுக்கும் ஒப்பிடுவதை நிறுத்துங்கள். அப்படிப் போனால், நிறைய விவாதம் தொடர வேண்டி வரும். அதற்க்கு இந்த அட்மின் அனுமதி தராது. சரியா அட்மின்?

நல்ல தலைவர் கிடைக்கும் போது நல்ல மார்க்கப் பற்றுள்ள தலைவியாரும் கிடைப்பார். ஊரில் உள்ளோர் மற்றும் இன்றி MEGA போன்ற அமைப்பும் காயை நகர்த்த ஆரம்பித்து இருக்கும். நல்லதை நாம் நாடுவோம்!

அல்லாஹ் நமக்குள் ஒற்றுமையை நிச்சயம் தருவான். இரண்டு பள்ளி குத்பா கதீப்களின் மார்க்க சம்பந்தமான நோட்டீஸ், இப் பெண்களுக்கும் பொருந்தும். கட்சி பச்சி எல்லாம் அவசியம் இல்லை. ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. கத்தியை தீட்டாதே.... புத்தியை தீட்டு.
posted by zubair (riyadh) [18 September 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8427

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு என் காயல் சகோதரர்களே....

தாங்கள் பலரும் பல வகைகளில் கமாண்டு எழுதி இருந்தீர்கள். எல்லாமே.... சிந்திக்க வேண்டியவைதான். என்றாலும் கத்தியை தீட்டும் முன் புத்தியை தீட்டுங்கள்.

நல்ல ஒரு நகர்மன்றம் அமைய ஒற்றுமையே....... முக்கியம். ஆண் தலைமைதான் ஏற்றது, என்றாலும் நாம் ஒற்றுமையில் ஒரு பெண் தலைவரை தேர்ந்தேடுப்போம்.

"வல்லவனுக்கு புல்லும் ஆயிதம்" என்பார்கள் நாம் தேர்தெடுக்கும் நம் வார்டு மெம்பர்களை நல்லமுறையில் தேர்வு செய்தால் தலைவி பதவி பொம்மைதான்.

கூடுதல் முஸ்லிம் வசிக்கும் ஊர்களில் பெண்களுக்கு ஒதுக்கி இருப்பது....... நரேந்திர மோடியின் உடன் பிறவா சகோதரிக்கு இதுகூடவா சொல்லிக்கொடுக்கணும்.......? எகூதிகளின் தந்திரம்கள் இங்கே..... பிரதிபலிப்பதை காணுகிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by sak shahulhameed (malaysia) [18 September 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 8429

RSS மட்டுமல்ல அய்யாவும் சரி அம்மா ஆண்டாளும் சரி முஸ்லிம்கள் என்றாள் முதுகெலும்பு உடைக்கப்படும் முஸ்லிம்கள் தன்னை உணராதவரை. "உணர்வு" பெறுவோம் உயர்வடைவோம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [19 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8430

அல்ஹம்து லில்லாஹ்.. நடப்பவைகள் அனைத்தும் நன்மையாக இருக்கும்.

இந்த அறிவிப்பு கூட ஒரு வகையில் நல்லது தான்.

நாம் அடிக்கடி கூறும் வார்த்தைகள் ஒற்றுமை, ஜமாஅத், ஒரு தலைமைக்கு கட்டுப்படுதல் போன்றவைகள்.

தற்போது ஊரில் நடந்துகொண்டு இருக்கும் நிகழ்வுகளை பார்த்தால் இந்த மாதிரியான வார்த்தைகள் எல்லாம் பயனற்ற வார்தைகள் ஆக ஆகிவிடுமோ என்ற கவலை உள்ளது.

இந்த தேர்தல் நேரத்தில்தான் தெரிகின்றது நம்முடைய ஒற்றுமையை. ஒவ்வொரு ஜமாத்திலும் நடக்கும் கூட்டத்தை பார்த்தால் மனது கஷ்டமாக உள்ளது. ஒரே சச்சரவு, சண்டைகள், மரியாதை இல்லாமை, நீயா நானா என்ற போட்டி, நீ என்ன சொல்லுவது நான் என்ன கட்டுப்படுவது,, அப்பப்பா.. கஷ்டமப்பா..

முக்குக்கு முக்கு யாரை தலைவராக தேர்வு செய்யலாம் என்ற விவாதத்துடன் கூடிய சலசலப்பு. இருக்கின்ற ஒரு காயலில், அந்த பகுதி ஆள் நின்றால் நாங்கள் போட்டி ஆள் நிறுத்துவோம், இந்த பகுதி ஆள் நின்றால், அவர்களை நிற்க விடமாட்டோம், அவர்கள் தான் நிற்கனுமா, இவர்கள் தான் நிற்கனுமா .... கொடுமையப்பா.

சில சமயம் ஊரில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்தால், இந்த தேர்தலில் நம் ஊர் சென்ற தலைமுறை செய்த தவறை செய்து, ஊரை கூறுகளாக பிரித்து விடுவார்களோ என்ற பயம் எனக்கு இருந்தது. அதற்க்கு விடிவாக தான் இந்த நகர் மன்றத்தை அரசு பெண்களுக்கு ஒதுக்கியதோ!

இதுவரை புரிந்தது, நம்மிடம் (ஒரு சில ஜமாஅத்தை தவிர) எந்த ஜமாத்தும் ஸ்ட்ராங் ஆக இல்லை. முதலில் நம்மிடம் ஒற்றுமையை உண்டாக்கி, ஜமாஅத்தை பலபடுத்துங்கள். ஜமாஅத் தலைவர் கூறினால் அதற்கு மறுப்போ, மாற்று கருத்தோ இருக்கக் கூடாது என்ற நிலைமையை உண்டாக்குங்கள் (மார்க்க கருத்தை தவிர). பின்பு மற்றதை பார்க்கலாம்.

தலைமைக்கு போட்டியிடும் சகோ. வகிதா அம்மையார் அவர்களுக்கு என்ன குறை? அவர்களை தலைமை பொறுப்புக்கு கொண்டுவருவதில் என்ன பிரச்சனை?. நல்லவர், பண்பானவர்,படித்தவர், ஊரின் நலத்தின் மீது அக்கறை கொண்டவர், முன்பும் தலைவராக இருந்த அனுபவம் கூட... நல்ல சிந்தியுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by சாளை நவாஸ் (singapore) [19 September 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 8433

அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாகத்தான் இருக்கு என்று நாம் காய் நகர்த்துவதே சால சிறந்தது. அவசர படாதீர்கள் ஆத்திரபடாதீர்கள்.

பெண்கள் ஆட்சிக்கு வந்தால் ஊர் ஒன்றும் அழிந்து விட போவது இல்லை. உண்மையை சொன்னால் ஆண்கள் ஆட்சியிலேயே அதிகமான கேவலமான நிகழ்வுகள் நடந்துள்ளன.

ஒரு குடும்ப தலைவியே வெற்றிகரமாக ஒரு குடும்பத்தை வழிநடத முடியும் என்பதை சொல்லியா தெரிய வேண்டும். ஆனால் இக்கட்டான முடிவு எடுப்பதில் சிரமபடுவார்கள் என்பது உண்மைதான். அந்த நேரத்தில்தான் ஒரு அறிவு சார்ந்த ஆணின் (எல்லா ஆணும் அல்ல) பக்கபலம் தேவைபடுகிறது.

எல்லா ஆணின் வெற்றிக்கு பின்னால் ஒரு பெண் இருக்கிறாள் என்பதை போலே ஒரு பெண்ணின் வெற்றிக்கு பின்னால் பல ஆண்களின் வழிகாட்டுதல் இன்றியமையாயது என்பதை நிரூபிக்க வேண்டும்.

அந்த வகையில் அதற்க்கு தகுதியான ஒரு பெண்மணியை நாம் தேர்வு செய்து எங்கள் சமுதாய பெண்மனியாலும் சாதிக்க முடியும் என்று நாடே போற்றும் அளவில் சங்கே முழங்குவோம்.

- காயல் மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by Javed Nazeem (Chennai) [19 September 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 8438

ஆன்ட்டி க்ளைமாக்ஸ்!

(Uncles can take care of the home :) )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by Solukku Seyed Mohamed Sahib SMI (Jeddah, Saudi.) [19 September 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 8440

அடுத்தடுத்து பெண்களுக்கே நமதூர் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு எதிர்த்து சட்டப்படி ஏதேனும் முயற்சி எடுக்க வேண்டி வந்தால் புதிதாக வந்துள்ள நல இயக்கங்கள் முன்னின்று செய்யுமா அல்லது ஐக்கிய பேரவைதான் செய்யவேண்டுமா?.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by Mohamed Abdul Kader (AL Khobar) [19 September 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8441

அஸ்ஸலாமு அலைக்கும்

மாஷா அல்லாஹ், நமது ஊரில் வார்டுகளை மிஞ்சும் அளவிற்கு சங்கங்கள். இந்த அளவிற்கு போனால் இன்ஷா அல்லா 2018 ல் தெருவை மிஞ்சும் அளவிற்கு சங்கங்கள் வந்து விடும் போல் தெரிகிறது.

எல்லா சங்கங்களும் ஒருமித்த கருத்துடன் இருக்காது. ஒவ்வொரு சங்கமும் தங்கள் கருத்தில் பிடிப்பாக இருப்பார்கள். இப்படி இருந்தால் எப்படி ஊர் ஒற்றுமையை எதிர்பார்க்க முடியும்.

எல்லா சங்கங்களையும் கலைத்துவிட்டு ஒரு சங்கத்தின் கீழ் வாருங்கள். உங்கள் நல்ல கருத்துகளை தெருவியுங்கள். இதுதான் சால சிறந்தது.

சங்கத்தின் கருத்துக்கள் உங்களுக்கு பிடிக்க வில்லை என்றால், உங்கள் ஆனா முயற்சியை எடுத்து சொல்லி மாற்ற முயற்சி செய்யுங்கள். இல்லை என்றால் போட்டி சங்கங்கள் ஆரம்பிக்காமல் ஒதுங்கி நில்லுங்கள். இது தான் ஒற்றுமைக்கு நல்ல வழி.

கட்சிக்கு அப்பாற்பட்ட ஒரு நல்ல தலைவி வந்தால் நல்லது.

நமது ஊரில் எத்தனையோ நல்ல தலைவிகள் உண்டு. புதிய முகங்களுக்கு வழி கொடுங்கள் பழையவர்களே.

ஜெயா, கருணாநிதி CM போஸ்ட்க்கு பட்டா போட்டதை போன்று நமது ஊர் தலைவி போஸ்ட் பட்டா போடதிங்க?

அல்லாஹ் நம் அனைவருக்கும் ஒற்றுமையை தருவானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by K S Muhamed shuaib (Kayalpatnam) [19 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8443

மச்சான் நவாஸ் என்ன போடு போடுகிறாய். உனக்கு "தாயை காத்த தலைவன்" என்ற பட்டம் கொடுக்கலாமா ?ஆமா அது என்ன "மண்ணின் மைந்தன்"அப்போ நாங்கள் எல்லாம் :வானத்தின் மைந்தர்"கலா? என்ற போதிலும் நீ எழுதிய கருத்து சரியே....!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by Mohamed Noohu (Chennai) [19 September 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 8444

நெய்னார் தொரு கவுன்சிலர் கித்று பாத்திமா அவர்கள் தலைவர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by AHMED MOHIDEEN (dubai) [19 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8451

அஸ்ஸலாமு அலைக்கும்.(வர்ஹ)

நம்ம தலையெழுத்து அம்மா ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் ஊரு எல்லாம் இந்த நிலைதான் .

atleast அரசில் சாயம் பூசாத ஒரு நல்ல பெண்மணி நம் ஜமாஅத் முலமாக வரவேண்டும்

இன்ஸா அல்லாஹ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. அப்படி போடுன்னாணாம்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக். (புனித மக்கா.) [19 September 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8475

மச்சான்.சாளை-நவாஸ்ஸு!நீ இவ்ளோ ஆக்டிவா இருக்கும் போதே நினைச்சேன்!உலகம் சுற்றும் வாலிபனாக இருந்தாலும் அடிக்கடி நீ ஊர் பக்கம் ஏன் தலைகாட்டுறாங்கிற சந்தேகமும் இப்போ தீர்ந்து போச்சு!ஆக மொத்தத்துலெ வீட்லெ மதுரை ஆட்சியா? சிதம்பரம் ஆட்சியாங்கிறதுக்கு சத்தியமா மதுரை ஆட்சியே தான்ணு நிரூபிச்சிட்டப்பா....நிரூபிச்சுட்டே!!! எங்கிருந்தாலும்...வாழ்க!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:காயல்பட்டினம் நகர்மன்ற தல...
posted by OMERANAS (DOHA QATAR.) [19 September 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 8482

சகோ ஜியா இப்ப என்ன கருத்தை சொல்ல வருகிறார்? வகிதாவிர்க்கு ஒட்டு இல்லை. தகுதி பின்னால் கட்சி காரனுக்கு ஒட்டு இல்லை. போட்டி அவசியம் இருக்காது. வேண்டும் என்று நினைப்பவர்கள் தயாராக இருங்கள்.!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. வெளியான ஆதங்கங்கள்
posted by M Sajith (DUBAI) [19 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8486

நிறைய ஆதங்கங்கள் வெளிவந்துள்ளது பலரின் கருத்துக்களில் இருந்து...

வார்டுகளை விட அதிகமாக இயக்கங்கள் நம் ஊரில் என ஓர் வருத்தம் - இவ்வளவு இயக்கங்கள் இயக்கியும் இயங்கமறுக்கும் சமுதாயம் என்கிறது மற்றொன்று.

பல அமைப்புகளை களைந்து, ஒன்றின் கீழ் இருந்தால் தான் நன்மை என ஓர் கருத்து - புதிய இயக்கத்தை வீட்டுக்கு அனுப்பவா, இல்ல இருக்கிற இயக்கத்தை எல்லாம் விழுங்கி ஏப்பம் விடவான்னு ஒரு குழப்பம்.

இப்படி நம்ம ஊரை 'தலைவலி' ஊராகிட்டாங்களேன்னு ஒரு வருத்தம் - கூடவே கேஸ் போடனும் விடக்கூடாதுன்னு ஒரு கோபம் - அப்படியே பூனைக்கு யாரு மணி கட்டுவது யாரு புதுசா வந்த அமைப்புகளா அல்லது ஐக்கிய பேரவைதான் செய்யனுமான்னு ஒரு சந்தேகம்.

அம்மா வேலைதான் இதுன்னு ஒரு குற்றச்சாட்டு; தமிழ் தாத்தா காலத்திலும் இதே நிலமைதான்னு அதுக்கு பதில்..

எது எப்படியோ., இந்த தேர்தல் தூங்கிபோன காயலானை உசுப்பிவிட்டதுதான் உண்மை - யாரையாவது அனுப்பிவிட்டு மீண்டும் உறங்காமல் இருந்தால் சரி..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved