Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:24:01 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7228
#KOTW7228
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 16, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர வாக்காளர்களுக்கு அனைத்து ஜும்ஆ பள்ளிகளது கத்தீப்களின் வேண்டுகோள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3959 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (18) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தலின்போது காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள வாக்காளர்கள் நகர்மன்றத்திற்கான தம் பிரதிநிதிகளை தேர்வுசெய்வதற்கான வழிமுறைகள் குறித்து, நகரின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளின் கத்தீப்கள் வேண்டுகோள் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து, இதற்கான ஏற்பாடுகளைச் செய்த “நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (மெகா)” சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்!

அன்பிற்கினிய காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமு அலைக்கும்!

வாக்காளர்கள் - சிறந்த நகர்மன்ற உறுப்பினர்களை எந்த தகுதிகளின் அடிப்படையில் தேர்வு செய்வது - என்று வழிகாட்டும் பிரசுரம் இன்று நகரில்இரு ஜும்ஆ பள்ளிகளிலும் - நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு (MEGA) ஏற்பாட்டில் விநியோகிக்கப்பட்டது.

இதன் வாசகங்கள், காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீப் மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீப் மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ ஆகியோரின் ஒப்புதல் பெற்று அமைக்கப்பட்டது.

தங்கள் வார்டுகளின் உறுப்பினர்களை தேர்வு செய்வதிலும், நகர்மன்ற தலைவரை/துணைத்தலைவரை அடையாளம் காண்பதில் - இன்ஷா அல்லாஹ் இந்தப் பிரசுரம் நகர மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் என நம்புகிறோம்.

இப்பிரசுரத்தில் அமைந்துள்ள வாசகங்கள் வருமாறு:-

உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்கவுள்ள பொதுமக்களுக்கு நமதூர் ஜும்ஆ பள்ளிகளது கத்தீப்களின் வேண்டுகோள்!

அருளாளன் அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள பொதுமக்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

உங்களிடம் ஆதரவு கேட்கும் வேட்பாளர் ...

----> இறையச்சம் உடையவரா...?

----> ஐவேளை தொழுகையை முறைப்படி பேணுபவரா...?

----> நற்பண்புகளைக் கொண்டவரா...?

----> பொருளாதாரத்தில் தன்னிறைவுடையவரா...? (அதாவது, பொருளீட்டும் நோக்குடன் நகர்மன்ற பொறுப்பை நாடாதவரா ...?)

----> யாரையும் முழுமையாக சார்ந்திருக்காதவரா...?

----> அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்சாதவரா, அடிபணியாதவரா...?

----> மார்க்கத்தில் தடுக்கப்பட்ட வட்டி, விபச்சாரம், மது, சூது போன்ற பெரும்பாவங்களில் ஈடுபடாதவரா...?

----> கடந்த காலங்களில் பொறுப்பிலிருக்கையில் அரசாங்கப் பணத்தை சுரண்டாதவரா...?

----> கடந்த காலங்களில் பொறுப்பிலிருக்கையில் லஞ்சம் வாங்காதவரா...?

----> சுயநலன் பாராது பொது விஷயங்களில் ஈடுபடுபவரா...?

இவற்றை நல்ல முறையில் அவதானித்து, தகுதியுள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து, நல்லோர் நிறைந்த நகர்மன்றத்தை உருவாக்குமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம். உங்களுடைய மேலான பார்வைக்காக பிரசுரத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.




இவ்வாறு “மெகா” செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. மெகா முயற்சி
posted by K M SHAFEER ALI (CHENNAI) [16 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8237

அஸ்ஸலாமு அழைக்கும்

இந்த ''மெகா''முயற்சி வெற்றிபெற அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்

நமதூர் மக்கள் நல்லதோர் நகராட்சியாலரின் கீழ் நல்ல பல திட்டங்கள் பெற்று நமதூரும் நம் மக்களும் நன்மை பெற உங்களின் இந்த ''மெகா''முயற்சி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அழைக்கும்

K M SHAFEER ALI
CHENNAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Welldone MEGA!!
posted by Rayyan's Dad!! (USA) [16 September 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 8238

Good Initiative & appreciate you guys. First time, am seeing a kind of joint statement after both katheeb's approval.

On the side note...it will be great if we create a forum where both Katheebs & aalims/ulemma's in kayal can interact to guide the kayal on commonalities like municipality election or any common issues or even 1 EID's etc. If they come to the common platform, half of the common problems can be eased


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by OMER ANAS (DOHA QATAR.) [16 September 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 8241

அஸ்ஸலாமு அழைக்கும்.. ..

இந்த கருத்தை ஐக்கிய ஜமாத்திடம் காட்டி அவர்களும், இதே மாதிரி நோட்டீஸ் விட்டால், எவ்வளவு அழகாக ஒத்த கருத்தாக இருக்கும். பெரியோர்கள் செய்வார்களா? !!!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Salih (Bangalore) [17 September 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 8245

மாஷா அல்லாஹ்.. மறுபடியும் மெகா மிக சரியாக தனது பங்கை செய்து கொண்டு இருக்கிறது..

நம் ஊரில் எல்லா மக்களும் இதன் படி நடக்க வல்ல இறைவன் அருள் புரிவானாக அமீன் ..

அணைத்து ஆலிம் ஹாலுக்கு மனமார்ந்த நன்றி.

டியர் கவிமன் பிரதர் கலக்குங்க ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack Sd.Md.Ali. (Kangxi) [17 September 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 8252

ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க இவ்வளவு விளம்பரங்கள் , ஆர்ப்பரிப்பு , அறிவிப்புகள் , மூலைக்கு மூலை சங்கங்கள் , இயக்கங்கள் .......... தேவையா ? இந்த லட்சணத்தில் OMEGA என்றொரு இயக்கம் புதிதாக முளைத்திருப்பதாக செய்திகள் .( இது எந்த அளவுக்கு உண்மை எனபது தெரியவில்லை ) . காயல் நகர பெரியோர்களே , தாய்மார்களே , சகோதர , சகோதரிகளே ....... இதெல்லாம் தேவையா ? சிந்தியுங்கள் , செயல்படுங்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சிந்திக்க தூண்டும் மனசு ...
posted by Vilack Syed .Mohamed .Ali (Kangxi) [17 September 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 8291

அல்லாஹ் போதுமானவன் . அன்பார்ந்த காயல் நகர பெரியோர்களே ! தாய்மார்களே ! சகோதர சகோதரிகளே ! நமது மாநிலத்தின் முதலமைச்சரையும் , நாட்டின் பிரதமரையும் கூட எளிதாக தேர்ந்தெடுத்து விடலாம் . ஆனால் இந்த சிறிய நகராட்சிக்கு ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பதில் , நமக்குள் எவ்வளவு ஆர்ப்பரிப்புகள் , விளம்பரங்கள் . தேவையா ? சற்று சிந்தியுங்கள் .

1 . நமதூரின் மொத்த ஜனத்தொகையில் வாக்குரிமை பெற்றவர்கள் என்று சுமார் 25000 பேர் வரைதான் உள்ளனர் . இதில் computer , internet பார்ப்பது ஒருசில ஆயிரம் பேர் மட்டுமே . அதிலும் பெரும்பாலானோர் வெளிநாட்டில் உள்ளனர். தேர்தலில் , ஒருவேளை போட்டி என்று வந்து , ஓட்டு போடும் சூழ்நிலை வந்தால் , இவர்களில் எத்தனை பேர் ஊர் வந்து ஓட்டு போட்டு தாம் விரும்பும் தலைவரை தேர்ந்தெடுப்பர் ?

2 . kayal .com இல் சுமார் ஒரு 50 பேர் வரைதான் மாற்றி மாற்றி கருத்துகளை பரிமாறுகிறார்கள் . ஒருவேளை இவர்களின் கருத்துகள்தான் ஒட்டுமொத்த ஊர் மக்களின் கருத்து என்று நினைத்து விட்டார்களா ? அப்படி நினைத்தால் அது உண்மையாகாது . ஊரில் உள்ள இதர பாமர மக்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் .

3 . அடுத்து மீடியா , இணையதளத்தின் மூலம் மட்டுமே ஊரின் எந்த பிரச்சினையையும் தீர்த்து விடலாம் என்று நினைப்பது தவறு .

4 . ஏற்கனவே நம் ஊரில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களில் பெரும்பாலானோர் , ஊர் மக்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே . அப்போதெல்லாம் இல்லாத ஒற்றுமையும் , விழிப்புணர்வும் இப்போது புதிதாக முளைத்திருக்கும் சங்கங்கள் மூலம் வரப்போகிறதா ?

5 . காயல் ஐக்கிய பேரவை :

---------------------------------------

இதைப்பற்றி உண்மை தெரியாமல் பலரும் , பலவிதமாக கருத்து தெரிவிக்கிறார்கள் . இதில் உள்ள பெரியவர்கள் யாரும் , பணத்திற்காகவோ , புகழுக்காகவோ அல்லது வேறு வேலை இல்லாமலோ இந்த பேரவையில் பணியாற்றவில்லை . சமீபத்தில் இவர்கள் எடுத்த முயர்ச்சியால்தான் , சுமார் 23 லட்ச ரூபாய் செலவில் நிலம் வாங்கி மின்சார வாரியத்திற்கு கொடுத்திருக்கிறார்கள் . ஐக்கிய பேரவையை குறை கூறுபவர்கள் யாராவது இதற்கென தங்கள் பங்கை அளித்துள்ளார்களா ? இது போக , அவர்கள் செய்த சேவைகள் நிறைய உள்ளன . அவர்களும் இந்த பணி சீரிய முறையில் தொடர இளைஞர்களைத்தான் அழைக்கிறார்கள் . நம்மில் எத்தனை பேர் அதில் சேர ஆர்வமாக உள்ளோம் ? அவர்களும் வயது முதிர்வின் காரணமாக இளைஞர்களுக்கு வழிவிட தயாராக உள்ளார்கள் . ஆகவே இணையதளத்தில் கருத்து தெரிவிப்பவர்கள் உண்மை தெரியாமல் எதைப்பற்றியும் குறை சொல்வதை தவிர்க்கவும் .

அந்தந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள் தங்களின் பகுதிக்கு உட்பட்ட வார்டு மெம்பர்களையும் , அனைத்து ஜமாத்துகள் மற்றும் ஐக்கிய பேரவையும் இணைந்து தலைவரையும் தேர்ந்தெடுப்பார்கள். இதில் வழி காட்டுகிறேன் , விழிப்புணர்வு ஏர்ப்படுத்துகிறேன் என்று சொல்லி MEGA என்றோ , OMEGA என்றோ பல்வேறு இயக்கங்கள் பெயரிலோ உள்ளே நுழைந்து சுய விளம்பரம் செய்ய தேவை இல்லை . மாஷா அல்லாஹ் , ஒவ்வொரு ஜமாத்திலும் மார்க்க அறிவு , உலக அறிவு பெற்ற பெரியவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் . அவர்களுக்கு யாரும் புதிதாக வந்து விழிப்புணர்வு செய்ய தேவை இல்லை .

என் அன்பிற்கு உரித்தான பெரியோர்களே , தாய் மார்களே , சகோதர சகோதரிகளே , கவர்ச்சியான பேச்சுக்கள் , விளம்பரங்கள் கண்டு மயங்காதீர்கள் . சுய சிந்தனையுடன் செயல்படுங்கள் . அல்லாஹ் போதுமானவன் .

என்றும் நன்மையை நாடியே துஆ செய்தவனாக ,

விளக்கு செய்து முகம்மது அலி ,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohmed younus (Chennai) [17 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8323

சகோதரர் செய்யத் முஹம்மது அலி அவர்களுக்கு, மெகா(மெகா) விட்ட நோட்டீஸ் எந்த விதத்தில் ஐக்கிய பேரவையின் நோக்கத்தில் இருந்து வேறுபட்டுள்ளது என்பதை விளக்கம் தரவும்.

ஒரு தலைவர்களுக்கு என்ன என்ன பண்புகள் வேண்டுமோ அதை சொல்வது தவறா? அதுவும், மார்க்க மேதைகளின் ஒருமித்த ஒப்புதலுடன் வெளியடப்பட்டது தவறா?

அவர்கள் இனைய தளத்தில் மட்டும் வெளியிடவில்லை. ஊரின் எல்லா பகுதிகளுக்கும் விநியோகித்து விட்டு அதன் நகலை இணைய தளத்தில் வெளியிட்டு இருக்கின்றனர். உங்கள் கூற்றுப்படி, கடந்த காலங்களில் எல்லாம், ஊரின் தலைவர்கள் ஒருமித்த கருத்துடனே தேர்ந்து எடுக்க பட்டார்கள். அப்படி தேர்ந்து எடுக்கப்பட்ட அனைவர்களும் எந்த வித குற்றச்சாட்டும் இன்றி சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால், அவர்கள் நேர்மையுடன் செயல்பட முடியாதவாறு பல வகையில் தடுக்கபட்டார்கள்.

திறமையுடனும், ஊழல் இல்லாத வகையில் நிர்வாகத்தை நடத்துவதற்கு, தேர்ந்து எடுக்கப்பட்ட பல கவுன்சிலர்கள் தடையாக இருந்தார்கள் என்பது கண் கூடான உண்மை. சில மாதங்களுக்கு முன்பு, நம் நகராட்சியின் துணை தலைவர் என்ன ஆனார் என்பது நாம் எல்லாம் வெட்கி தலை குனிய வேண்டிய விஷயம். அவரும் ஒருமித்த கருத்துடனே தேர்ந்து எடுக்கப்பட்டார். ஆனால், ஒரு மாற்று மத சகோதரர் கூட செய்ய கூடாத காரியத்தை செய்து கொண்டு ஹாயாக சுற்றி கொண்டு இருக்கின்றார். அவர் மாதிரி நபர்கள், இந்த தடவையும் சில நபர்கள் கொள்ளை புற வழியாக நுழைந்து விடக்கூடாதே என்பதுதான் mega வின் நோக்கமாகும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. An Imploration to the Administrator:
posted by Abdul Rahim (The U.K.) [17 September 2011]
IP: 87.*.*.* United States | Comment Reference Number: 8327

Bro. Vilack Syed .Mohamed .Ali from China has indeed brought some valuable thoughts to ponder. Similarly Bro. Abdul Kader from the U.S. in his comments {Comment Reference Number: 7863 of News ID # 7204} has clearly stated his interactions with Janab. S.K.

Comments of these sorts would provide added impetus to our elders who are working philanthropically for the betterment of our town with altruistic intentions. Furthermore, in the photographs published in this website, we find luminaries from almost all the Jamaaths sitting in the podiums of functions / events organized by Aikkiya Peravai.

Concisely, people commenting in this forum could well approach their respective Jamaths and censure their respective people for their misdeeds, if any. If they are unable to do so, it is better to refrain from rebuking in public. It is definitely unpleasant to Wash Dirty Linens in Public. Please be reminded of the consequences of “Rumor Mongering” in the hereafter.

Please be reminded gentlemen, we are in the “Google” era. If someone for any reason Google the name of our town, this website appears in the first few search results and would undeniably give a bad impression of our community.

I indubitably believe the patriotic ideals of the administrator towards our cherished town. Hence, I implore the administrator to be more judicious in approving the comments that appear here. Let not this website be a breeding ground for acrimony & rancor.

I would be glad, if the administrator sheds some light on this issue to soothe the seething anguish of aggrieved individuals like us.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M. Sajith (DUBAI) [17 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8337

It is indeed very interesting to read comments across the globe from US to HK to UK all of them commenting and advising fellow kayalites on how to behave in this Google era …

Clearly giving us to understand that none in Kayalpatnam have any right to criticize these gentlemen - No matter what because there are Philanthropists, wisemen , experienced and the only people who wish ‘Unity’ are in this organization. Even if ..

- The traditional principles of Democracy made Democrazy by innovating novel methods of enforcing statements in the name of Unity.

- Paint an image as if they are given “sole rights” to drive and shove the society and the people of kayalpatnam.

- Secure a VETO to ensure their interests are not affected.

- Setup a ground and play all ploys as they did earlier in ‘Tsunami Settlements’

Message is very clear “Admins have to sensor what doesn’t fit this bill” simple, we have traditions to maintain – no matter if justice is killed and that’s it..

May Allah Bless You !!

Note: I have read the news explaining the fate of 25 sent out by AP and understand the Adjustments made.

No, No, No.. I’m not saying anything... the so called UNITY will be affected!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. சொல்ல துணிந்த மனசு ...
posted by vilack syed mohamed ali (Kangxi) [18 September 2011]
IP: 183.*.*.* China | Comment Reference Number: 8346

அஸ்ஸலாமு அழைக்கும் .,

சகோதரர் MOHAMED YOUNUS அவர்களுக்கு , ஒரு தலைவருக்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது வாக்காளரின் விருப்பம். ஒவ்வொருவரின் விருப்பமும் வெவ்வேறாக இருக்கும். இதில் , MEGA என்றோ , OMEGA என்றோ நோட்டீஸ் விட்டு இதில் உள்ள பண்புகள் மூலம் தலைவரை பாருங்கள் என்று யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. நான் விரும்பும் தலைவர் இன்னின்ன தகுதிகள் உடையவராக இருக்க வேண்டும் என்று நான் சிலவற்றை விரும்புகிறேன். உங்கள் விருப்பம் வேறு மாதிரியாக இருக்கலாம்.

ஆக, இதையெல்லாம் தவிர்ப்பதர்க்காகத்தான் போட்டியின்றி தேர்ந்தெடுக்க ஐக்கிய பேரவையை நாடுகிறோம். அவர்களும், வரும் applications பரிசீலித்து ஒரு சிறந்த தலைவரை தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். ஆகையால் தலைவர் இப்படிப்பட்டவராகத்தான் இருக்க வேண்டும் என்று பொது மக்களிடம் சொல்வதைவிட ஐக்கிய பேரவையில் சொல்லுங்கள். எங்களுக்கு சிறந்த குணங்களை உடைய தலைவரை தாருங்கள் என்று கோரிக்கை விடுங்கள். அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். ஆளாளுக்கு நோட்டீஸ் விட்டு , சுய விளம்பரம் தேட முயர்ச்சிக்காதீர்கள்.

அடுத்து , நீங்கள் கூறியதுபோல , நாமெல்லாம் ஒருமித்த கருத்துடன்தான் துணைத்தலைவரை தேர்ந்தெடுத்தோம். அவர் செய்த நன்மைகள் நிறைய இருப்பினும் , ஒரு தீய செயலால் அத்தனை நன்மைகளையும் தொலைத்து விட்டார் . இது நாமெல்லாம் எதிர்பாராத ஒன்று. .நல்லவர் என்று நினைத்தோம், நம்மை ஏமாற்றி விட்டார் . நாம் நன்மையை நாடுகிறோம் , பிறகு ஏற்படும் தீமைகளுக்கு நாம் பொறுப்பாக மாட்டோம் . தீயவர்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்வார்கள். கவலையை விடுங்கள்.

ஆகவே மீண்டும் கூறுகிறேன் , MEGA என்றோ , OMEGA என்றோ மக்களிடம் செல்லாமல் உங்கள் எண்ணங்களை ஐக்கிய பேரவையில் பகிர்ந்து கொள்ளுங்கள் . மக்களே ! நீங்களும்தான் , உங்கள் தலைவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும் என்பதை ஐக்கிய பேரவையில் சொல்லுங்கள் . அவர்கள் மூலம் , நிச்சயம் ஒரு நல்ல தலைவர் கிடைப்பார்.

ஆகவே , என் அன்பிற்கும் , பாசத்திற்கும் உரிய காயல் நகர பெரியோர்களே , தாய்மார்களே , சகோதர சகோதரிகளே ! ஒருவேளை , போட்டி என்று வந்து , ஒட்டு போடும் சூழ்நிலை வந்தால் , கவர்ச்சியான பிரசுரங்கள் , விளம்பரங்கள் , பேச்சுக்களை பார்த்து மயங்காமல் , சுயமாக சிந்தித்து முடிவு எடுங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் பறக்கத் செய்வானாக

. என்றும் நன்மையை நாடி துஆ செய்பவனாக ,
விளக்கு செய்து முகம்மது அலி ,
+ 86 13189682842


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by vilack syed mohamed ali (kangxi) [18 September 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 8348

அஸ்ஸலாமு அழைக்கும்.

சகோதரர் Abdul Raheem , UK , இவர் தனது கருத்தை உணர்ச்சிகளுக்கு இடம் தராமல் , யார் மனதையும் புண் படுத்தாமல் , மிகவும் நாகரீகமாக , தெளிவாக சிந்தித்து வெளியிட்டுள்ளார் . ஆனால் இதே கருத்து பகுதியில் சிலர் , நிதானம் இல்லாமல் , உணர்ச்சி வசப்பட்டு , அந்தந்த தருணங்களில் என்ன தோன்றுகிறதோ அவ்வாறே எழுதுகின்றனர். சிலர்களின் உணர்ச்சி வசப்பட்ட கருத்துக்கள் , எழுதுபவர்களுக்கே , பின்னொரு நாளில் தவறு என்று விளங்கும் .ஆனால் இந்த கருத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலம் பூராவும் அதன் வடு இருந்து கொண்டே இருக்கும். " தீயினால் சுட்ட புண் உள்ளாறும் , ஆறாதே நாவினால் சுட்ட வடு "

கடைசியாக சகோதரர் அப்துல் ரஹீம் , அவர்களின் கமெண்ட்ஸ் இல் admin க்கு ஒரு விளக்கம் கேட்டிருக்கிறார் . அதற்க்கு admin அவர்களின் பதில் என்ன ?

Administrator: As much as possible, Bro.Vilack Syed Mohamed Ali, restrict your comments to the news item on display. If you offer your opinion on other people's comments, this would turn this page into a discussion board.

Comments page is to solicit people's views of the readers on the news item and on the news item only. Please keep that in mind.

Kayalpatnam.com respects freedom of speech. In the past, we have been accused by a handful to be censoring too much. Now - a handful are accusing that we are not doing enough censoring. This is the kind of balancing act we are called to make every day. To lay to rest all such misinformed rumours, we have made the system transparent. Insha Allah, you will see more such transparency in the future.

This Website is run amidst several difficulties - threats, blackmails, insinuations and rumours - for the larger good of the community. Not all the threats we suffer, not all the blackmails we are subjected to - appears as news. Rest assured, Kayalpatnam.com understands its responsibility perfectly well. You need to have no doubt about that.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Thanks
posted by Abdul Rahim (The U.K.) [18 September 2011]
IP: 80.*.*.* United Kingdom | Comment Reference Number: 8352

I thank the administrator for clarifying his standpoint. Yet, a shade of partisan attitude can be felt. While the administrator opines the comments of Bro. Vilack Syed Mohamed Ali comments, he has not used the same yardstick to do so for Bro. M. Sajith’s comment. This comments section has long become a discussion board. And therefore, it, to my view, has lost its purpose.

“Freedom of Speech” is a generalized perspective. You, Mr. Administrator, being a Media Professional know way more than us general public, as to how it could be manipulated. And Muslims all over the world are victimized by this malaise. Gentleman, you are walking a tightrope over a pit of incinerating fire. A slight misstep would endanger our community’s well-being.

Finally, as Bro. M. Sajith has pointed out, I am not advising anyone as how to behave. On the other hand, I am just prompting the need to introspect. It is time that we treasure our town’s centuries old pride and bequeath that honor to our descendants.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Sahuban Ali (Dubai) [18 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8364

இங்கே தனது கருத்துக்களை எழுதியுள்ள விளக்கு முஹம்மது அலி அவர்கள் இதுவரை நகராட்சித் தேர்தல் குறித்து எழுதியுள்ள கருத்துக்களை ஆராய்ந்து பார்த்தால், அதில் அப்பட்டமான உள்நோக்கமும், ஐக்கியப் பேரவையைத் தவிர ஊர்னலனைக் குறித்த அக்கறை வேறு யாருக்கும் இருக்கக் கூடாதது என்ற வக்கிரமான எண்ணத்தை பதிக்கின்றார்.

அதோடு மட்டுமல்லாமல் ,சமூக விரோதிகளாலும், பல்வேறு கிரிமினல்களாலும், அசிங்கமான, கேட்க முடியாத, கெட்ட வார்த்தைகளால் மொட்டைக்கடிதம் மற்றும் மின்னஞ்சலை பரப்பும், எடுபிடிகள் உருவாக்கி வைத்துள்ள OMEGA என்னும் பொதுமக்களால் காரி துப்பப்படும் ஓர் இழிந்த, தன்னை திரைமறைவில் ஒளித்து வைத்திருக்கும் விஷமிகளின் பெயரை ஒவ்வொரு முறையும் மெகா அமைப்போடு இணைத்து எழுதி, மக்களுக்காக உழைக்கும் அவர்களை திட்டமிட்டு களங்கப்படுத்தி வருகின்றார்.

இதில் தீயினால் சுட்டபுண் உள்ளாறும் என்று திருக்குறளுக்கு விளக்கம் வேறு.

இதை எல்லாம் பார்க்கும் போது சில விஷயங்கள் தெளிவாகிறது. அதை எல்லாம் நான் இங்கே எழுதத் துவங்கினால், திட்டமிட்டு மற்றவர்களை காயப்படுத்துபவர்கள், நிம்மதியை இழக்க நேரிடும். சிலர் தானும் சமூகத்திற்கு எதுவும் செய்யாமல், நல்லது செய்கின்றனர் என்று தெரிந்தும், மற்றவர்களை கேவலப்படுத்தும் அசிங்கமான யுக்தியை கையாளுகின்றனர்.

ஊருக்கு யார் நல்லது செய்தாலும் அவர்கள் ஊர் பெரியவர்களுக்கும், பேரவைக்கும் எதிரிகள் என்ற மாயத் தோற்றத்தை திட்டமிட்டு ஏற்படுத்தி வருகின்றார்கள்.

வினை விதைப்பவன் வினையையும், தினை விதைத்தவன் தினையையும்தான் அறுக்க முடியும் என்பதனை இவர்கள் உணர்ந்து திருந்த வேண்டும். அல்லது எங்களைப் போன்றவர்கள், இவர்களின் திரைமறைவு சதிகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து திருத்த வேண்டியது வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by vilack syed mohamed ali (kangxi) [18 September 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 8375

எனது நோக்கம் , உள்நோக்கம் எல்லாமே , நமது நகராட்சி , அரசின் அனைத்து திட்டங்களையும் பெற்று , நமது ஊர் மக்கள் வசதியாக வாழவேண்டும் , நம்முடைய எண்ணங்களை அரசிடம் எடுத்து சொல்ல சரியான தலைவர் ஒருவர் வேண்டும் என்பதே. மேலும் நான் MEGA மற்றும் OMEGA இரண்டையும் compare பண்ணி எந்த கருத்தையும் எழுத வில்லை. இது போன்ற இயக்கங்கள் ஊரில் உள்ளது என்றுதான் எழுதி இருக்கிறேன். நண்பர் Sahuban Ali சரியாக புரிந்து கொள்ளவில்லை போல் தெரிகிறது.

மேலும் OMEGA வில் உள்ளவர்கள் சமூக விரோதிகள் , கிரிமினல்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த வார்த்தைகள் மிகவும் கண்டனத்திற்கு உரியது . Admin அவர்கள் இந்த வார்த்தைகளை உடனடியாக இந்த பதிவில் இருந்து நீக்க வேண்டும் . இல்லையேல் , பிகப்பெரிய பிரச்சினையாக உருவாக வாய்ப்பு உள்ளது.

( எதையெல்லாமோ " கத்திரி " போடும் Admin அவர்கள் இந்த கண்டனத்திற்கு உரிய வார்த்தைகளை எப்படி பதிவு செய்தார் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Ibrahim Ibn Nowshad (Salem) [18 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8378

அட போங்கப்பா.

Always fight..

எழுமிசையோடு சண்டை போட்டாலாவது ஊறுகாய் கிடைச்சிருக்கும்.

Alpha வந்த என்ன? Beta வந்த என்ன?

நம்ம வீட்டுக்கு தண்ணீர் வரணும். நான் சொல்றது அடி பைப்பில், மோட்டார் வைத்து உறிஞ்சு வது இல்லை.

மாத்தியோசிங்க ! We are correct to justify other's qualities to elect as president?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Sahuban Ali (Dubai) [18 September 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8383

சகோதரர் விளக்கு எஸ்.எம்.அலி அவர்களே .

உங்களது கருத்தை படிப்பவர்களுக்கு,உங்களது ஒருதலை பட்சமான,காழ்ப்புணர்ச்சி கொண்ட கருத்துக்கள் விளங்காமல் போய் விடுமா என்ன? தங்களது கருத்துப் பதிவுகளை,நீங்களே ஒருமுறை அமர்ந்து மொத்தமாக,நிதானமாகப் படித்துப் பாருங்கள். அடுத்தது OMEGA என்ற அமைப்பு,பல நல்ல குடும்பத்தைச் சார்ந்தவர்களை,கேவலப் படுத்தும் விதத்திலும்,உலக நலமன்ற தலைவர்கள் மற்றும் இக்ரா தலைவர்கள், அவரது குடும்பத்தைப் பற்றியும் இழிவு படுத்தி,கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சித்து,திருட்டு நோட்டீஸ் அடித்து,மொட்டை மின்னஞ்சல் மூலம்,செயல்படும் சமூகவிரோத கிரிமினல்கள் உண்டாக்கிய ஒரு இட்டுக்கட்டிய அமைப்பு என்று,ஊர் உலகமே காறித் துப்பிக்கொண்டிருக்கும் சம்பவம் உங்களுக்கு உண்மையிலேயே தெரியாதா?

இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,ஊர் மக்களுக்கு அடையாளம் காட்டவேண்டும் என்றும் , இவர்களின் பெயர்ப்பட்டியல் இன்னும் சில நாட்களில் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் பல்வேறு சமூக அமைப்புகள் கொந்தளித்துக் கொண்டிருப்பது தங்களுக்குத் தெரியாதா?

உங்கள் குடும்பத்தை யாராவது கேவலமாக்,இழிவாக,அசிங்கமாக காது கொடுத்து கேட்கமுடியாத நடையில் விமர்சித்து,மொட்டை கடிதம்,மின்னஞ்சல்,திருட்டு டேப் மூலம் உலகம் முழுவதும் பரப்பினால் இவர்களை சமூக விரோதிகள் என்று சொல்லாமல் வேறு எப்படி சொல்வீர்கள்? தெரியாமல்தான் எழுதுகின்றீர்களா? தெரிந்தே நடிக்கின்றீர்களா? அல்லாஹ்விற்கே வெளிச்சம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATNAM) [18 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8397

சகோதரர் இபின் நௌசாத் அவர்களே....!தங்களின் "அலுப்பு"மனம் எனக்கு புரிகிறது. "ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன" என்று நாம் சும்மா இருக்க முடியாது. என்றாலும் இந்த நகராட்சி தேர்தல் வந்தாலும் வந்தது மண்டை சிதறி மூளை வெளிவராததுதான் பாக்கி .அத்தனை கருத்து குழப்பங்கள். முட்டல் மோதல்கள் வசைமொழி பரிவர்த்தனைகள் வீர தீர அறிக்கைகள் அசட்டு ஆலோசனைகள் இன்னும் என்னெனவோ நடந்துவிட்டன. ( எல்லாவற்றுக்கும் மேலாக காயல்பட்டின நகராட்சிக்கு பெண் தலைவர்தான் என அரசு அறிவித்து விட்டது.)கருத்து குழப்பர்கள் இனியென்ன செய்வார்கள் என பொறுத்து இருந்து பார்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Ibrahim Ibn Nowshad (Salem) [18 September 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 8399

கடைசியில் கட்சி காரர்கள் இடையில் விழுந்து படை செய்து நாற்காலியில் அமர்வார்கள். இது நடக்க போகுது என்பது என் கணிப்பு. பொருத்து இருந்து பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved