Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:11:25 AM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7226
#KOTW7226
Increase Font Size Decrease Font Size
வியாழன், செப்டம்பர் 15, 2011
மரைக்கார்பள்ளி, அப்பாப்பள்ளி, குட்டியார் பள்ளி, ரெட் ஸ்டார் சங்கம் சார்பாக ஐக்கியப் பேரவைக்கு கடிதம்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4088 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் நகர்மன்ற தேர்தலில் - தலைவரை தேர்வு செய்யும் விஷயமாக, தேர்தல் குழு ஒன்று அமைக்க காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை முடிவுசெய்துள்ளது. ஜமாஅத்துகளுக்கு தலா இரு பிரதிநிதிகள் என்றும், பொதுநல அமைப்புகளுக்கு தலா ஒரு பிரதிநிதி என்றும், ஐக்கியப் பேரவை தேர்வு மூலம் 25 பிரதிநிதிகள் என்றும் அக்குழுவில் அங்கம்வகிப்பர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து - ஐக்கியப் பேரவை சார்பாக நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், பல சமூக அமைப்புகளுக்கும் - செப்டம்பர் 10 தேதியிட்ட கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் - ஐக்கியப்பேரவை அமைக்கும் தேர்தல் குழுவிற்கு பிரதிநிதிகளின் பெயரினை அனுப்பும்படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

அக்கடிதத்திற்கு - மரைக்கார்பள்ளி, அப்பாப்பள்ளி, குட்டியார் பள்ளி மற்றும் ரெட் ஸ்டார் சங்கம் நிர்வாகங்கள் சார்பாக பதில் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்),

10.09.2011 தேதியிட்ட தங்கள் கடிதம் கிடைக்கப்பெற்றோம். நன்றி. எமது ஜமாஅத் சார்பாக எடுக்கப்பட்ட சில முடிவுகளை தங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.

(1) எமது ஜமாஅத் மற்றும் சங்கத்தின் சார்பாக தேர்வு செய்யும் நபர்கள் குறித்த விவரத்தினை இன்னும் ஓரிரு நாளில் தங்களுக்கு அறியத் தருகிறோம்.

(2) செப்டம்பர் மாதம் 03 - ம் தேதி நடைபெற்ற எமது ஜமாஅத்தின் கூட்டத்தில் ஊர் தலைவரைத் தேர்வு செய்வது சம்பந்தமாய் போடப்பட்ட தீர்மானம் எண் - 6 கூறுவதாவது, நகர்மன்ற தலைவர் தேர்வு விசயத்தில் அனைத்து ஜமாஅத்தினரும் முறையாகக் கலந்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நாம் அனைத்து ஜமாஅத்தினருக்கும் தெரிவிக்க வேண்டும். அதற்காக அனைத்து ஜமாஅத் தலைவர்கள் கூட்டத்தினை ஏற்பாடு செய்யவேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இக்கருத்தினை ஒத்து ஐக்கிய பேரவை கடந்த 08.09.11 ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் வைத்து நடத்திய அனைத்து ஜமாஅத் மற்றும் பொது நல சங்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எமது பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். ஆனால் அக்கூட்டத்தில் எந்த விதமான ஆலோசனைகளையும் யாரிடமும் கேட்காமல் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த தீர்மானங்கள் படிக்கப்பட்டன. அப்போது கூட அவை தீர்மான முன்வடிவுகள் தான் எனவும், அவை அனைத்து ஜமாஅத் மற்றும் பொது நல சங்கங்களுக்கு அனுப்பப்பட்டு அவர்களின் ஆலோசனைகள் கருத்துக்கள், மாற்றங்கள் இருப்பின் அனைத்தும் சேர்க்கப்பட்டு அல்லது மாற்றங்கள் செய்யப்பட பின்தான் அவை தீர்மானங்களாக அங்கீகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வந்தக்கடிதத்தில் அவை தீர்மானங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

(3) கடந்த 08.09.11 அன்று நடைபெற்ற கூட்டத்தின் 4 - வது தீர்மானம், ஒவ்வொரு ஜமாஅத்திலும் தலைவர், மற்றும் உதவி தலைவர் அல்லது ஜமாஅத்தின் அனுமதிப் பெற்ற இருவர் மற்றும் பொது நல அமைப்புகள் சார்பாக ஒருவர், மேலும் காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவையால் தேர்வு செய்யப்படும் நகர பிரமுகர்கள் 25 பேர் ஆகியோர் கொண்டத் தேர்வுக்குழு அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டதாக கூறுகிறது.

ஆனால் அறிவிக்கப்பட்டது போல் 26 ஜமாஅத்துக்கள் சார்பாக 52 பேர் மற்றும் 15 பொது நல சங்கங்கள் சார்பாக 15 நபர் ஆக 67 பேர் ஊர் மக்களின் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டப்பிறகும் 25 நபர்கள் பேரவை சார்பாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது எங்கள் ஜமாஅத்தினருக்கு உடன்பாடானதாக இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அவ்வாறு 25 நபர்கள் தேர்வு என்பது எந்த தேவையின் அடிப்படையில் என்பதும் அதற்கு என்ன அவசியம் என்பதும் எங்களுக்குப்புரியவில்லை. வேண்டுமானால் அனைத்து ஜமாஅத் மற்றும் பொது நல அமைப்புகளின் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்படுவது போல், ஐக்கியப் பேரவை சார்பாகவும், அதன் நிர்வாகிகளில் இருந்து 5 பேர்கள் அதிகப்பட்சமாக தேர்வு செய்யலாம் என்பது எங்கள் நிலைப்பாடு.

எனவே 25 நபர்களை தன்னிச்சையாக தேர்வு செய்வதால் ஏற்படும் வீண் பிரச்சனைகளை தவிர்க்கும் பொறுட்டும், தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் முழுக்க, முழுக்க அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள் தான் என்ற உயரிய ஜனநாயக மரபினை போற்றும் விதமாகவும் தாங்கள் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்வீர்கள் என முழுமையாக நம்புகிறோம்.

இன்ஷா அல்லாஹ், அனைத்துத் தரப்பு மக்களோடும் பாகுபாடு இன்றி பழகக்கூடிய, பொது நலம் பேணக்கூடிய, மார்க்கப்பற்றுடைய, நாணயமிக்க, எளிமையான ஒரு நல்ல மனிதரை பாரபட்சமற்ற முறையில் நம் ஊர் தலைவராக தேர்வு செய்ய தாங்கள் எடுக்கும் முயற்சிக்கு எங்கள் முழு ஒத்துழைப்பு உண்டு என்று உறுதி கூறி முடிக்கிறோம்.

வஸ்ஸலாம்.

இவண்,

ஹாஜி S. மூஸா
தலைவர், மரைக்கார்பள்ளி

ஹாஜி M.S.K.S. மரைக்கார்
தலைவர், அப்பாபள்ளி

ஹாஜி M. சேகு அப்துல் காதர்
தலைவர், ரெட் ஸ்டார் சங்கம்


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
எஸ். அப்துல் வாஹித்,
கொச்சியார் தெரு.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மரைக்கார்பள்ளி, அப்பாப்பள...
posted by M Sajith (Dubai) [15 September 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8192

That is the way.. The usual Red Star way..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:மரைக்கார்பள்ளி, அப்பாப்பள...
posted by hasan (Khobar) [15 September 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8198

அல்ஹம்துலில்லாஹ்,

உலக கல்வியும் மார்க்க கல்வியும் சரிவர படித்தவர்கள் இவர்கள். அதன் வெளிப்பாடே இந்த கடிதம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:மரைக்கார்பள்ளி, அப்பாப்பள...
posted by sak shahulhameed (malaysia) [15 September 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 8201

அனைத்து ஜமாத்தும் இணைந்துதானே ஐக்யபேரவை அல்லது தனி அமைப்பா விளக்கம் தாருங்களேன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:மரைக்கார்பள்ளி, அப்பாப்பள...
posted by mfsalih (Hong Kong) [16 September 2011]
IP: 220.*.*.* Hong Kong | Comment Reference Number: 8204

Assalamu alaikum

It's Right & Good Statement. May Almighty Allah Show Us Right Path. Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:மரைக்கார்பள்ளி, அப்பாப்பள...
posted by Abu Rushda (Dubai) [16 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 8206

Excellent…..hope this is the unanimous voice of kayalyts who loves freedom, respect social equality and never wish to budge under any undue pressure and autocratic practices. Great job!!!...MashaAllah…


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. ஐக்கியப் பேரவையே... (25 நபர்கள் தன்னிச்சை தேர்வு) இதனால் ஏற்படும் பிரச்சனைக்கு நீங்கள் ஆளாகாதீர்கள்...!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [16 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8208

25 நபர்களை தன்னிச்சையாக தேர்வு செய்வதால் ஏற்படும் வீண் பிரச்சனைகளை தவிர்க்கும் பொறுட்டும், தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகள் முழுக்க, முழுக்க அனைத்து ஜமாஅத் பிரதிநிதிகள் தான் என்ற உயரிய ஜனநாயக மரபினை போற்றும் விதமாகவும் தாங்கள் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்வீர்கள் என முழுமையாக நம்புகிறோம். இந்த வாசகம் வீண் பிரச்சனைகளை வளர விடாமல் நியாயமான முறையில் தீர்வு ஏற்பட வேண்டும் என்கிற நோக்கத்தோடு மரைக்கார்பள்ளி, அப்பாப்பள்ளி, குட்டியார் பள்ளி, ரெட் ஸ்டார் சங்கம் சார்பாக ஐக்கியப் பேரவைக்கு கடிதம் கொடுக்கபட்டு இருப்பது பாராட்டுக்கள்....

பேரவையின் இந்த 25 நபர்களை தன்னிச்சையாக தேர்வு செய்வது என்ற தீர்மானத்தை ஊர் மக்கள், அமைப்புகள், ஜமாத்துக்கள் 99.9 சதவீதம் யாரும் ஏற்று கொள்ளவில்லையே....

ஐக்கியப் பேரவையே... பின்பு ஏன் நீங்கள் பிரச்சனைக்கு வழி வகுக்கிறீர்கள்.. !

ஐக்கியப் பேரவையே... இவர்களின் கடிதத்திற்கு சரியான முடிவு காணுங்கள்...!

ஐக்கியப் பேரவையே... (25 நபர்கள் தன்னிச்சை தேர்வு) இதனால் ஏற்படும் பிரச்சனைக்கு நீங்கள் ஆளாகாதீர்கள்...!

ஐக்கியப் பேரவையே... ஊரில் உள்ள அணைத்து ஜமாத்துகளின் எதிப்பை வாங்காதீர்கள்...!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:மரைக்கார்பள்ளி, அப்பாப்பள...
posted by omarabdullatif (Riyadh) [16 September 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 8216

it seems there are many unfair people in ஐக்கிய பேரவை . Favouring for pasrticular jamath and group . We have strictly dissolve that and to be reelected the members democaraticaly .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:மரைக்கார்பள்ளி, அப்பாப்பள...
posted by சாளை S.I. ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [16 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 8219

சூப்ப்ப்ப்ப்பர்....... ரெட் ஸ்டாருக்கு, நட்சத்திர பாராட்டுக்கள்.

மக்களுடைய என்னத்தை பிரதிபலித்து விட்டீர்கள்.

எல்லாம் நன்மையாக அமைய துஆ செய்கிறேன்.

சாளை S.I. ஜியாவுதீன். காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இணையத்தளம் FOR ஐக்கிய சபை
posted by Noohu Thambi (Maana Paana) [16 September 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 8221

ஐக்கிய சபைக்கு இணையத்தளம் இருந்தால் நன்னா இருக்கும். அதன் மூலம் சபையின் கருத்துக்கள் மற்றும் இன்ன பிற செயல் பாடுகள் மக்கள் அறிந்து கொள்வார்கள்.

மேலும் கருத்துக்களை அதன் இணையத்தளதில் பொது மக்கள் பதிவு செய்ய எதுவாக இருக்கும்.

இங்கு ஐக்கிய சபையை வறுத்து எடுப்பதால் மேலும் குழப்பம்தான் மிஞ்சும். (சபைக்கு இணையத்தளம் இருந்தால் தயவு செய்து தெரெய்ய படுத்தவும் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:மரைக்கார்பள்ளி, அப்பாப்பள...
posted by SADAK V D THAMBY (Guangzhou(China)) [16 September 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 8228

காயல் ஐக்கிய பேரவையை விமர்சித்து வெளியிடப்படும் கருத்துக்கள் நம் சமூக ஒற்றுமைக்கு ஆரோக்கியமானதில்லை.

ஐக்கியபேரவை இல்லாமல், பிற பொதுநல மன்றங்களால் நகர்மன்ற தலைவரை ஒருமனதாக தெரிவுசெய்ய இயலாது.
இணையதளங்களில் வெளிவரும் கருத்துகள் மொத்த காயல் மக்களின் கருத்துகளை பிரதிபலிப்பதாக கருதமுடியாது.
வெறும் 5 % காயலர்களே இணையதளங்களில் கருத்துக்களை பதிவுசெய்கின்றனர் என்பதை நினைவிற்கொள்க.

மொத்தம் 26 ஜமாத்களில், ஒன்றிரண்டு ஜமாஅத்தை தவிர, பெரும்பாலான ஜமாத்தினர் காயல் ஐக்கியபேரவையின் தீர்மானகளை எதிர்த்து விமர்சிக்கவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

மேலும் சில நுணுக்கமான விஷயங்களுக்கு காயல் ஐக்கியபேரவை, இணையதலங்கல் வாயிலாக பதலளிக்க இயலாது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:மரைக்கார்பள்ளி, அப்பாப்பள...
posted by Mohamed Salihu (Kayalpatnam) [17 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 8248

ஐக்கிய பேரவை எடுக்கும் நல்ல முடிவுகளை தட்டிக்கொடுத்து பாராட்டுபவர்களும், அது எடுக்கும் தவறான முடிவுகளை சுற்றி காட்டக்கூடியவர்க்களும்தான் ஐக்கிய பேரவைக்குத் தேவை. இது போன்றவர்களால்தான் ஐக்கிய பேரவை தனது பொது சேவையின் தரத்தை உயர்த்த முடியும்.

பேரவைக்கு ஜால்ரா போடகூடியவர்களாலும், பேரவை எடுக்கும் முடிவை கண்மூடித்தனமாக ஆதரிப்பவர்களாலும் பேரவைக்கு எந்த நன்மையையும் கிடையாது. பேரவை தனது தவறான நடவடிக்கையை தவறு என்று உணரவும் முடியாது, தனது போக்கை மாற்றவும் முடியாது.

பேரவை போன்ற பொதுநல அமைப்புகள் தவறான முடிவுகளை சில சமயம் எடுப்பது இயற்க்கை. அனால் தவறுகள் சுற்றிக்காடப்ப்படும்பொழுது, அந்த தவறை உணர்ந்து தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும்பொழுதுதான் அது உயர்ந்த நிலையை அடையும், மக்களின் அபிமானத்தை பெரும். சேவையின் தரத்தையும் உயர்த்த முடியும்.

பேரவையின் செல்வாக்கு (Influence) சில அமைப்புகளில் இருப்பதால், அந்த அமைப்புகள் தனது நிலையை வெளிபடையாக அறிவிக்க முடியாமல் இருக்கலாம். (பேரவையில் அங்கம் வகிப்பவர்களில் சிலர் சில ஜமாஅத்களிலும் and or சங்கங்களிலும் முக்கிய பொறுப்பில் இருக்கலாம்) அதற்காக பேரவையின் முடிவை அவர்கள் (ஜமாத்தினர்/அமைப்புகள்) ஆதரிக்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவது அறியாமையின் வெளிப்பாடு.

11 தீர்மானங்களில் அதிக நபர்களால் விமர்சனத்திற்கு உள்ளாகியது தீர்மானம் எண் 4 மட்டுமே.

அந்த தீர்மானத்தை மறுபரிசிலனை செய்வது பேரவையின் தார்மீகக் கடமை. இல்லை. அதை மறுபரிசிலனை செய்ய முடியாது! நாங்கள் எடுத்த முடிவை மாற்ற மாட்டோம் !!என்றிருக்கும் பட்ச்சத்தில், அந்த தீர்மானத்தை தகுந்த காரணங்களுடன் நியாயப்படுத்த வேண்ட்டியது பேரவையின் கடமை. இதில் எந்த ஒரு நுணுக்கமும் இல்லை.

இவை இரண்டில் ஒன்றையும் செய்யாமல் அமைதியாக இருப்பது பேரவை போன்ற ஒரு பொது அமைப்புக்கு அழகல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:மரைக்கார்பள்ளி, அப்பாப்பள...
posted by K S Muhamed shuaib (Kayalpatnam) [17 September 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 8289

மாறி மாறி நடைபெறும் விவாதங்களை பார்க்கும் போது ஐகிய பேரவை எல்லா ஜமாத்துக்களையும் உள்ளடக்கிய ஒரு அமைப்புதானா? என்பதிலேயே சந்தேகம் வருகிறது. ஒரு அமைப்பு அது சார்ந்திருக்கும் ஊர் மக்களின் முழு நம்பிக்கையையும் பெறாவிட்டால் அது எப்படி செயலாற்ற முடியும்?சில ஜமாத்துக்கள் வெளிப்படையாகவே "தாங்கள் ஐகிய பேரவைக்கு உட்பட்டவேர்கள் அல்ல"என்று சொல்ல்வது பேரவைக்கு தெரியுமா? பேரவை தன்னை முழுமையாக நிலை நிறுத்திகொண்ட பிறகுதான் வேறு எந்த பொதுப்பணியிலும் ஈடுபடலாம் போலும். ஐகிய பேரவை "ஐகிய நாடு சபைகள்"போல் குறிப்பிட்ட நபர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட கூடாது. பேரவை தனது உள்கட்டமைப்பை முதலில் சரி செய்து கொள்ளட்டும். பிறகு வெளி வேலை பார்க்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved