Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:39:48 PM
திங்கள் | 7 அக்டோபர் 2024 | துல்ஹஜ் 1894, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:1215:2918:1219:22
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்09:26
மறைவு18:05மறைவு21:16
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:44
உச்சி
12:05
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2618:5019:15
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6887
#KOTW6887
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஆகஸ்ட் 8, 2011
பாதாள சாக்கடைத் திட்ட தீர்மானத்தை திரும்பப் பெறாவி்ட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்! நகர தே.மு.தி.க. அறிவிப்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3283 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக காயல்பட்டினம் நகர்மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைத் திரும்பப் பெறாவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் காயல்பட்டினம் கிளை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நகர துணைச் செயலாளர் எம்.ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

காயல்பட்டினத்தில் பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு நகர்மன்றத்தில் தீர்மானம் இயற்றியுள்ளனர். காயல்பட்டினம் நகருக்கு சிறிதும் தேவையில்லாத ஒரு திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம், இந்நகரைச் சுற்றியுள்ள இதர பகுதிகளைப் போல துர்நாற்றம் வீசும் பகுதியாகவும், நாய் - பன்றிகள் பெருக்கத்திற்கு வழிகோலும் வகையிலும் இந்நகரும் மாறும் என்பதில் சந்தேகமில்லை.

அதுமட்டுமின்றி, இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், காயல்பட்டினம் மற்றும் இதர ஊர்களின் அனைத்து சாக்கடைகளும் காயல்பட்டினம் கடலில் கலக்கச் செய்யப்படும் வாய்ப்புள்ளது. அவ்வாறு செய்யப்பட்டால், இதுவரை சுத்தமாகக் காணப்படும் காயல்பட்டினம் கடற்கரையும் முற்றிலும் மாசடைந்து, மக்கள் பயன்பாட்டிற்கு சிறிதும் தகுதியில்லாத நிலையிலாகிவிடும். அது மட்டுமின்றி, சாதாரண மக்கள் தாங்க முடியாத அளவுக்கு வரிவிதிப்பும் செய்யப்படும்.

பெரும்பான்மை இல்லாமல் நகர்மன்றத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எமக்கு வியப்பளிக்கிறது. இத்தீர்மானத்தை எமது தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தீர்மானத்தை உடனடியாக திரும்பப் பெறாவிட்டால், எங்கள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்பதை அறியத் தருகிறோம்.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:பாதாள சாக்கடைத் திட்ட தீர...
posted by SyedAhmed (HK) [10 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6786

பாதாழ சாக்கடை திட்டதின் அடிப்படை நம்மில் பலருக்கு தெரிவதில்லை. கால ஓட்டத்திற்கு தஹுந்தாற்போல் விஞ்ஞானம் இந்த துறையிலும் மிகவும் வளர்ந்து உள்ளது. கானை தொறந்து ரோட்டில் விடுவது அல்ல பாதாள சாக்கடை பண்ணியும் நாயும் பெருகுவதற்கு.

100 - 200 மீட்டர் முடுக்கு உள்ள நமது ஊரில் இந்த திட்டம் மிகவும் அவசியமானதே காரணம்.

1. மனித கழிவுகளை மனிதன் அகற்றும் வர்ணாசிரம மனு நீதியை இது ஒழிக்கும். இஸ்லாம் கூறிய மனிதனை மனிதன் மதிக்கும் மாண்பை ஆதரிக்கும்.

2. ராட்சத குலைகள் பொருத்தப்பட்டு அந்த குலைகளுக்கு உள்ளே அமிலம் ஊற்றினாலும் உருகாத கிளாஸ் பைபர் சாப்ட் டியுபே மாட்டப்படும். இதனால் இயந்திரம் கொண்டு அல்லது அமிலம் கொண்டு அடைப்புகளை நீக்க முடியும். இதின் ஆயுள் 80 வருடம்.

3. கழிவுகள் மொத்தமாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும்.

4. அங்கு கழிவுகள் பிரித்து எடுக்கப்பட்டு ஏரடோர் என்னும் கருவி கொண்டு ட்கரைக்கப்படும்.

5. கரைத்து எடுக்கப்பட்ட மக்கும் கழிவுகள் Treatment செய்த பின்னர் கடலில் கரைக்கப்படும். இதனால் கடல் வளம் பாதிக்காது பெருகும். கடலில் உள்ள தாவரங்கள் வளரும்.

6. பிரித்து எடுக்கப்பட்ட கழிவுகளில் பிளாஸ்டிக் இருந்தால் அவை மறு சுழற்சிக்கு அனுப்பப்படும் அவற்றில் இருந்து non-foodgrade பூத்கள் தயாரிக்க முடியும்.

7. இதனால் மறு சுழற்சி செய்த தண்ணீர் கடல் ஓர விவசாயத்திற்கு பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

8. உப்பளத்திற்கு உபயோகம் செய்யும் tarpaulin மேலே மக்கும் கழிவுகள் புல்டோசர் கொண்டு பரப்ப பட்டு, சூரிய ஒளியில் காய வைக்கப்படும். அது மிகச்சிறந்த இயற்கை உரமாகும் அதை இன்று சந்தையில் உள்ள செயற்கை உரத்தின் விலையில் இரண்டு மடங்கிற்கு விற்கலாம். வருட Contract போட நிறுவனங்கள் முன் பணம் தந்து போட்டி போடும்.

9. Aeration செய்யும் பொழுது அதில் இருந்து மின்சாரமும் தயாரிக்கலாம்.

இவ்வளவு பயன் உள்ள திட்டத்தை ஆதரிப்பது நமது கடமை. பன்றி நாய் எல்லாம் பூமிக்கு மேல் வாழும் உயிரினங்கள் அவை பூமிக்கு அடியில் காற்று கூட நுழையாத glass - fibre tube உள்ளே வாழ்வதும் இனப்பெருக்கம் செய்வதும் சாத்தியம் அற்றது

sewage treatment இல் கட்சி கட்டம் chlorination என்பது ஆகும், cholorine கொண்டு நாற்றத்தையும் பக்டீரியா வையும் சுத்தம் செய்த பின்னர் கடலில் கலக்கப்படும். நம்மூர் கடலில் DCW கலக்கும் chlorine இல் 60 - 80 % இதனால் கரைந்து போகும்.

சுத்திகரிப்பு நிலையமே தனக்கான மின்சாரத்தை தயாரித்து கொண்டு மீதம் உள்ளதை அரசுக்கு விற்க முடியும். BSc வேதியல், BE வேதியல், BE சிவில், Microbiology , Envronmental இன்ஜினியரிங், ஏலெக்த்ரிகல் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலைவாப்பை உருவாக்கும், ஊர் பிள்ளைகளுக்கு முன்னுரிமை கிடைக்கும்.

CFFC இதை ஒரு case study ஆகா எடுத்து படித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.

சீனாவின் பெரும் தலைவர் மாவ் செய் துங் சொன்னது போல வெற்று இடத்தை காற்று நிரப்புகிறது. படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும் அப்பொழுது தான் உண்மையான அறிவு சார்ந்த சமுதாயத்தை கட்டி எழுப்ப முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:பாதாள சாக்கடைத் திட்ட தீர...
posted by koman babu (chennai) [10 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6787

இந்த திட்டம் ஹாங்காங்விற்கு அல்ல. நம் ஊருக்கு... ரோடு போடவே காசு இல்லை. இவ்வளஹு மேட்டருக்கு காசு எப்படி அண்ணே......... கொஞ்சம் அங்கு இருந்து ஐடியா இருந்தா சொல்லஹும்..... காசுக்கு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையை போல....
posted by zubair (riyadh) [10 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6788

சகோதரர் செய்யித் அஹமத் அவர்களே...... தாங்கள் தெரிவித்த விளக்கம்களுக்கு பல கோடி நன்றிகள். இவ்வளவு விளக்கமா எழுதின உங்களுக்கு நம் இந்தியாவின் நிலையை புரிய முடியாத்தது ஆச்சரியமாகவும், அர்ப்புதமாகவும் உள்ளது. நாட்டிற்கு ஏற்ற, நடக்ககூடிய ஐடியாவை கொடுங்கள். தாங்களுக்கு ஒரு ஸ்பெசல் நன்றி.... தாங்கள் எங்களுக்கு இனி ஒரு 500 வருட காலத்திற்கு பின்னுள்ள இந்தியாவை கண்முன்னே காட்டி இருக்கிறீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:பாதாள சாக்கடைத் திட்ட தீர...
posted by SyedAhmed (HK) [10 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6789

பாபு காக்கா,

காசு topic தலைவர் பர்துகொல்லுவாரக இருக்கும் அது தான் இந்த திட்டத்தை insist செய்கிறார்கள்.

நமது ஊரின் மொத்த sewage ஒரு நாளுக்கு 2.5 லட்சம் CBM இது அரசு உதவி பெரும் திட்டம் என்றால் சாத்தியமே.

உங்கள் கருத்து உரிமைக்கு மதிப்பு அளிக்கிறேய்ன். இது தேவை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:பாதாள சாக்கடைத் திட்ட தீர...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [11 August 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6790

அஸ்ஸலாமு அழைக்கும்.....

சகோ. செய்து அஹமது அவர்களின் சீரிய விளக்கத்திற்கு நன்றி....... ஆனால் அநேக மக்களின் கருத்து இத்திட்டம் தேவையா இல்லையா என்பதில்லை....... இத்திட்டம் நமதூருக்கு நடைமுறை சாத்தியம் இல்லை என்பதே. தாங்கள் கூறிய "Sewage Treatment Plant " எல்லாம் நிறுவி சாக்கடையை சுத்திகரித்து கடலில் கலப்பார்கள் என்று கனவு காணாதீர்கள். நகரில் சாலைகள் அமைக்கும் பணிகளே இன்னும் நிறைவேற்ற படாத நிலையில் "Sewage Treatment Plant "அமைத்து "பாதாள சாக்கடை திட்டம்" செயல் படுத்துவார்கள் என்று நம்புகின்றீர்களா?

ஏற்கனவே வெளியான செய்தியை மீண்டும் ஒருமுறை வாசியுங்கள்...... http://www.kayalpatnam.com/shownews.asp?id=6826

இதில் கருத்து எண் 11 மற்றும் 15 ஒருமுறை படித்து பார்க்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. நகர் மன்ற தலைவரின் பதில் என்ன ?
posted by SyedAhmed (HK) [11 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6799

ஒரு ஆரோக்கியமான விவாதம் பாதாள சாக்கடை திட்டத்தை பற்றி சென்றுகொண்டு இருக்கிறது, இதற்க்கு நல்ல தளம் அமைத்து கொடுத்த காயல்பட்டினம்.காம் இற்கு நன்றி.

நகரமன்ற தலைவர் அரசியல் பொருளாதார ஆதாயம் தேடதவர் என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை. கவுன்சிலர்களின் ஆதரவு எதிர்ப்பு என்பதை விட்டு விட்டு தேவையா இல்லையா? சாத்தியமா இல்லையா? என்பதை நாம் விவாதப்பொருளாக கொள்ள வேண்டும்.

இது சாத்தியமில்லை என்று நம்மில் மிகப்பெரும்பனவர்கள் கருத்து கூறி இருக்கிறார்கள் அவர்களின் நியாயமான பல கேள்விகளுக்கும் கவலைகளுக்கும் காயல்பட்டினம்.காம் நகர் மன்ற தலைவரிடம் என்ன பதில் இருக்கிறது என்று கேட்டு அதை செய்தியாக வெளியிட வேண்டும்.

1 மழை நீர் வடியும் வசதி இல்லாத நம் ஊரில். மழை நீரை எப்படி பாதாள சாக்கடையுடன் கலக்க செய்வது.

2 எந்த முறையில் சுத்திகரிப்பு செய்வது

3 இதற்க்கு ஆகும் செலவு எவ்வளவு அதை யார் ஏற்பது

4 கால அளவு எவ்வளவு, ஆள் பற்றாக்குறை உள்ள நகராட்சியில் இதை எப்படி சமாளிப்பீர்கள்

5 சுகாரதிர்ர்க்கு கேடு வராது என்று எப்படி சொல்கிறீர்கள்

6 ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளுக்கு எப்படி இணைப்பு கொடுப்பீர்கள்?

இது போன்ற பல மக்களின் நியாயமான சந்தேகங்களை கேட்டு அதற்கான பதிலை வெளியிட வேண்டும். நகரமன்ற தலைவர் பதில் சொல்லும்படியான ஒரு discussion board தொடங்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.

மக்கள் ஆகிய நாம், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் முற்றுகை இடப்படும் போன்ற அறிக்கைகள் வந்தால் அவை தங்கள் கட்சிக்கு ஆள் சேர்க்கும் வேலை என்பதை புரிந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமும் அவசியமும் ஆகும். அது தன்னலமற்ற நமது ஒர்ர் பெரியவர்கள் நமது நகர் மன்ற தலைவர்களாய் வருவதற்கு நாம் போடும் தடை கல்லாய் ஆகி விடும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. எங்குமில்லை முழுமையான பாதாள சாக்கடை திட்டம்
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [12 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6808

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர் செய்து அஹ்மது அவர்களின் கருத்துக்களை விமர்சிக்கவில்லை (செய்தி ID 6887 கருத்து எண் 1 )அதே நேரத்தில் விளக்கம் தர விரும்புகிறேன். பாதாள சாக்கடை திட்டம் என்பது நீங்கள் விளக்கமாக , விலாவாரியாக எழுதியிருக்கும் - பூமிக்கடியில் காற்றுக்கூட புகாத - இடத்தில் அமைக்கப்படும் சாக்கடை ஓட்டம்தான் அதிலே கருத்து வேறுபாடு இல்லை.

இதை என்னுடைய வேறு ஒரு பதிவில் தாங்கள் எழுதியிருப்பது போன்றே ஓரளவு விளக்கமாக கூறியிருக்கிறேன் ( செய்தி I.D.6826 வாசகர் கருத்து எண் 11 ) தாங்கள் அதை படித்துப் பார்ப்பது நல்லது.

என்னுடைய விளக்கம் நம் நாட்டிலே போடக்கூடிய திட்டத்திற்கானது - உங்களுடைய விளக்கம் உலக (International) அளவிலே செயல்படக்கூடிய முறையான திட்டம்.

-------------------------------------------

சகோதரரே! உங்களுடைய விளக்கப்படி " முறையான திட்டம் " நம்ம ஊருக்கு நீங்கள் கூறி இருக்கும் அத்தனை அம்சங்களையும் சேர்த்து அமல் படுத்த வேண்டும் என்றால் அதற்கு தேவையானவை :

திட்டத்திற்கான மொத்தத் தொகை தோராயமாக = 13 ஆயிரம் கோடி ரூபாய்.

திட்டத்திற்கான ஆய்வு பணியின் காலம் ...............= 2 - 3 வருடங்கள் ஆகும்.

திட்டம் அனுமதி, திட்டத் தொகைக்காக அரசாங்கம் மற்றும் வெளிநாட்டுக்கடன் பெற ஏற்பாடு இப்படியாக அதிலிருந்து இன்னும் 2 வருடம்.

ஆக ஐந்து வருடம் கழித்து பணிகள் துவங்கிய பின் அதை அரசாங்கம் சில காரணங்களுக்காக நிறுத்தி மீண்டும் தொடங்கி, அதன் பின் பொது மக்கள் சில காரணத்தை காட்டி பணியை நிறுத்த இப்படியாக அதிலே குறைந்தது ஐந்து அல்லது ஆறு வருடமாகும் ஆக மொத்தம் பத்து அல்லது பதினோரு வருடமாகும்.

அப்படி காலதாமதம் ஆனாலும் பரவாயில்லை ஊருக்கு நல்லதுதானே என்கிறீர்களா ? ஆனால் நம்ம ஊருக்கு அவ்வளவு தொகையை அரசாங்கம் தராதே. ஏன் என்றால் மொத்த தமிழகத்துக்கும் அந்த தொகைக்குள் திட்டத்தை நிறைவேற்ற போகிறார்களே!!.

--------------------------------------------

இப்பொழுது நம் அரசாங்கம் அறிவித்து இருக்கின்றபடி பாதாள சாக்கடை திட்டம் - " முறையாக ,முழுமையாக " - செயல்படவேண்டும் என்றால் அதற்கு தேவையானவை :

திட்டத்திற்கான மொத்தத் தொகை தோராயமாக (நம்ம ஊர் அமைப்புக்கு) = 150 - 200 கோடி ரூபாய்.

திட்டத்திற்கான ஆய்வு பணியின் காலம் = 1 வருடம்

திட்டம் அனுமதி, திட்டத் தொகைக்காக அரசாங்கம் மற்றும் கடன் பெற ஏற்பாடு இப்படியாக அதிலிருந்து இன்னும் 2 வருடம். ஆக மூன்று வருடம் கழித்து பணி துவங்கினாலும் பல இடர்பாடுகளுக்குப் பிறகு எப்படியும் "அரைகுறையாக" முடிவடைய ஏறத்தாழ நான்கு வருடங்களாகும்.

ஆக மொத்தம் ஏழு வருடங்கள் பாதாள சாக்கடையை பற்றி மக்கள் முணு,முணுத்துக் கொண்டே இருப்பார்கள்.

---------------------------------------------

நம்ம ஊருக்கு 200 கோடியை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்குவார்களா? என்பது கேள்வி குறி ?

காரணம் பக்கத்தில் உள்ள திருச்செந்தூருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது 14 கோடியே 48 இலட்சம் ; கடலூருக்கு 65.14 கோடி ; இராமநாதபுரம் நகராட்சிக்கு 30 கோடி ; சேலம் மாநகராட்சிக்கு 149.39 கோடி ; நாகர்கோவிலுக்கு 76.04 கோடி ; விருதுநகர் நகராட்சிக்கு 23.25 கோடி ; பல்லாவரம் நகராட்சிக்கு 72.10 கோடி மற்றும் ஈரோடு மாநகராட்சிக்கு (பெரியசேமூர், வீரப்பன்சத்திரம், காசிபாளையம், சூரம்பட்டி ஆகிய 4 நகராட்சிகளை இணைத்து) ரூ.209.22 கோடி என்று இப்படியாக ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் நம்ம ஊருக்கு இந்த பெருந்தொகை கிடைக்குமா? என்பது கேள்விக் குறியே.

அது மட்டுமல்ல இந்த பெருந்தொகை இல்லாமல் ஊர் முழுவதும் அரைகுறையாக கூட பாதாள சாக்கடை போட முடியாது என்பது கண்கூடு.

ஏன் என்றால் இதுவரை தமிழகத்திலே எந்த ஊரிலும் ஊர் முழுக்க முழுமையாக பாதாள சாக்கடை போடப்படவில்லை என்பது நிதர்சனம்.

மேலும் எங்கும் ஒதுக்கப்பட்ட தொகையோடு பணியை முடிக்க முடியவில்லை. உதாரணத்திற்கு கடலூரை எடுத்துக்கொள்ளலாம் - கடலூருக்கு முதலில் ஒதுக்கப்பட்ட தொகை 40 கோடி இப்பொழுது அது 65.14 ஐ தாண்டி 70 ஐ எட்டிக்கொண்டிருக்கிறதாம். இன்னும் முடிந்தபாடில்லை.

-----------------------------------------------------

இந்த திட்டத்தை மக்கள் ஏன் எதிர்க்கிறார்கள் ???.........

அரசாங்கம் மக்களுடைய நன்மைக்காக , சுகாதாரத்திற்காக வேண்டி இந்த திட்டத்தை கொண்டு வருகிறது என்பதில் மாற்று கருத்துக் கிடையாது.

ஆனால் அதை முறையாக மக்களுக்கு பயனளிக்கும் விதத்தில் பூரணமான திட்டமாக தரவில்லையே என்பதும், எல்லாத் தரப்பு மக்களுக்கும் கஷ்டத்தையும் , மன உளைச்சலையும் கொடுத்து மக்களின் வரிப்பணம் வீணாக்கப்படுகிறதே! என்பதுதான் மக்களின் ஆதங்கம்.

முதலிலே இந்த திட்டம் எங்கும் முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை.

சென்ற அரசு அல்ல அதற்கு முந்திய அரசே! திட்டத்தைத் துவக்கி வைத்தது அதைத் தொடர்ந்து வந்த அரசும் முழுமைப் படுத்தாமல் மீண்டும் தொடங்கி வைத்த அரசே ஆட்சிப் பொறுப்புக்கு வந்திருக்கிறது.

திட்டம் தோல்வியடையக் காரணம் ஆட்சியாளர்களே! முறையான வாரியம்/காண்ட்ராக்டர்களிடம் இந்த திட்டம் கொடுக்கப்படவில்லை.

கொடுக்கப்பட்ட திட்டம் ஒப்பந்தங்களின் விதிகளின்படி பூர்த்தியாகவில்லை அல்லது பூர்த்தி செய்ய முடியவில்லை - இதை அடியேன் மிகைப்படுத்தவில்லை காரணம் நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய கடலூர் திட்டம் முடியடையவில்லை என்பதும் ; விருதுநகரில் பணி தொடங்கி ஐந்து ஆண்டுகளாகியும் இன்னும் முடிக்கப்படவில்லை;தாம்பரம் மற்றும் பல்லாவரம் போன்ற நகரங்களிலும் நிறைவு பெறவில்லை.

இவைகளெல்லாம் ஏன் ? தாமதமாகிறது அதனுடைய உண்மை நிலை என்ன என்பதை அரசாங்கம் அறிந்து அதை களைய முற்படுவதில்லை ஏன்???.

அதற்கு மக்களின் பதில் " தகுதி வாய்ந்த - பாதாள சாக்கடை அமைப்பதில் திறமை வாய்ந்த - எவரையும் அரசாங்கம் நியமிக்கவில்லை என்பதுதான்".

----------------------------------------------------

வேலையை திட்டமிட்டு செய்யத் தொடங்குவதில்லை காரணம் பாதாள சாக்கடை அமைக்க குழி தோண்டும்போது அதிலே பல குழப்பங்கள் குடி நீர் குழாய்கள் உடைபட்டு தண்ணீர் வருவதில்லை பல மாதங்களாக ஏன் வருடங்களாகவும் வருவதில்லை.

டெலிபோன் வயர்கள் பூம்மிக்கடியில் செல்வதால் நிறைய லேண்ட் லைன்கள் கட்டாகி இருக்கிறது.

போக்குவரத்து மொத்தமும் வருடக்கணக்கில் பாதித்திருப்பது மட்டுமின்றி - பாத சாரிகளுக்கும்கூட மிகுதமான இடையூறுகள்.

இதன் காரணமாக பல இடங்களில் கடை அடைப்பு, போராட்டம் , கைது.

பாதாள சாக்கடை திட்டம் செயல்படப்போகுது என்ற காரணத்திற்காக ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள ரோட்டை வருடக்கணக்கில் சீர் படுத்தாமல் மக்கள் அவதி உதாரணத்திற்கு : இராமநாதபுரம் ; தாம்பரம் ; கடலூர் ; விருதுநகர் இன்னும் பல ஊர்களில் மக்கள் இதற்காக போராட்டம் நடத்துகின்றனர்.

மேலும் இந்த திட்டத்தினால் தமிழ் நாட்டிலே மிகவும் பாதிக்கப்பட்டது கடலூர் நகராட்சிதான் இங்கே தோண்டப்பட்ட குழியில் விழுந்து இறந்தோர் 8 நபர்கள். திட்டத் தொழிலாளி 3 பேர்உட்பட. ஆனால் இந்த குழிலே விழுந்து காயமடைந்தவர்களோ இரு நூறுக்கும் மேற்பட்டவர்கள்.

-------------------------------------------------

கடந்த ஜூலை மாதம் கடலூரில் காவல்துறை களத்தில் இறங்கியது செய்தி :

பொதுமக்கள், மாணவ மாணவியர் படும் அவதி, சொல்லி மாளாது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதில் காவல் துறையினருக்கு ஏற்பட்டு இருக்கும் சிரமங்களும் ஏராளம்.

சாலைகளை சரிசெய்து கொடுங்கள் என்று, குடிநீர் வாரியத்தையும், நெடுஞ்சாலைத் துறையையும் கெஞ்சிக் கேட்டும் பயனில்லை, என்ற நிலைக்குக் கடலூர் காவல்துறை தள்ளப்பட்டது.

இனி இவர்களை நம்பிப் பயனில்லை என்ற நிலையில், கடலூர் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் வனிதா, ஞாயிற்றுக்கிழமை களத்தில் இறங்கினார்.

தனியார் பொக்லைன் இயந்திரம் ஒன்றை வாடகைக்கு எடுத்து வந்து, சாலை சீரமைப்புப் பணியில் ஈடுபட்டார். அவரே நேரில் பார்வையிட்டு, பணிகளைக் கண்காணித்தார். இதனால் சாலைகள் பளிச்சென ஆகாவிட்டாலும், குறைந்த பட்சம் தடையற்ற போக்குவரத்துக்கு ஏதுவாக, மேடு பள்ளங்களாவது சரிசெய்யப்பட்டு உள்ளதை, பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

---------------------------------------

கடந்த ஜூன் மாதத்தில் வந்த செய்தி: பாதாள சாக்கடை நீர் கலப்பு : துர்நாற்றத்துடன் பவனி வரும் நெல்லை கால்வாய்

பாசனத்திற்காக பாதாள சாக்கடை நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் துர்நாற்றத்துடன் நெல்லை கால்வாய் நகரில் பவனி வருகிறது,இதனால் காலரா பரவும் அபாயம் ஏற்ப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பட்டு வருகிறது, கழிவு நீர் அனைத்தும் தச்சநல்லூர் அருகே உள்ள புறவழிச்சாலை பம்பு ஸ்டேசனில் பம்ப் செய்யப்பட்டு ராட்சத குழாய் மூலமாக ராமையன்பட்டி தனியார் பழப் பண்ணைகளுக்கு பயன்படுகிறது ,

கடந்த சில தினங்களாக நெல்லை கால்வாயில் பாசனத்திற்காக பாதாள சாக்கடை நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் குடலை புரட்டும் நாற்றத்துடன் நெல்லை கால்வாய் ஊருக்குள் பவனி வருகிறது.

இதனால் பால பாக்கியாநகர்,தெற்கு பால பாக்கியா நகர், பாலாஜிஅவென்யூ உடையார்பட்டி, மணி மூர்த்திஸ்வரம்,போன்ற ஊர்களில் கடுமையான துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொது மக்கள் சிலருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து விசாரித்த போது பம்ப் ஸ்டேசன் மோட்டார் பழுதடைந்துள்ளது அதை சரி செய்து வருகிறோம் என ஊழியர்கள் கூறுகின்றனர் ,கழிவு நீர் கலக்கும் நெல்லை கால்வாயை நம்பி விவசாய நிலங்கள் அதிகம் உள்ளது உண்மை.

தற்போது கோடை நேரம் என்பதால் கால்வாய் வறண்டு உள்ளது.இந்த வறட்சியை பயன்படுத்தி பாதாள சாக்கடை நீரை வாய்க்காலில் மாநகராட்சி ஊழியர்கள் திறந்து விட்டுள்ளனர் ஆனால் பொது மக்கள் நிலையோ மிகவும் பரிதாபமானது.

நெல்லை கால்வாய் வழியாக கழிவு நீர் தாமிரபரணி ஆற்றில் சென்று கலப்பதால் தண்ணீர் மாசுபடுகிறது.எனவே இதில் மாவட்ட நிர்வாகம் தலையிடுமா? என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

--------------------------------------------------

கடந்த 7.8.2011 மாலை முரசு நெல்லை பதிப்பில் வந்த செய்தி:

"கழிவறையில் புகுந்த பாதாள சாக்கடை நீர்" - நெல்லை உடையார்பட்டி பகுதியில் பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக அங்குள்ள ஒரு வீட்டின் கழிவறையில் கொப்பளிக்கும் பாதாள சாக்கடை நீரை படத்தில் காணலாம் - என்று செய்தியை எழுதி படமும் போட்டு இருந்தார்கள்.

-------------------------------------------------

கடந்த ஜனவரியில் வெளியான செய்தி:

விருதுநகரில் பாதாள சாக்கடைத் திட்டத்​தில் நடந்த குளறுபடிகள் காரணமாக, விருதுநகர் நகராட்சிகமிஷனர் ஜான்சன், இன்ஜினீயர் கருப்பையா இருவரையும் நகராட்சி நிர்வாக கமிஷனர் செந்தில்குமார் அரசு சஸ்பெண்ட் செய்து உள்ளது. எதனால் என்பதை அறிந்து கொள்ள மேலும் படியுங்கள் ...

விருதுநகரில் வீடுகள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்​களில் இருந்து கழிவு நீரை பாதாளச் சாக்கடை மூலம் ஊருக்கு வெளியே கொண்டு​வந்து, புதிதாக நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, வெளியேற்றுவதுதான் திட்டம்! இதற்காக 23.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதை நிறைவேற்றும் பொ​றுப்பு குடிநீர் வடிகால் வாரியத்​​திடம் ஒப்படைக்கப்​பட்டு, கடந்த 2006 டிசம்பரில் தொடங்கி, 2008 டிசம்பருக்குள் முடித்துத் தரவேண்டும் என்று காலக்​கெடுவும் விதிக்கப்​பட்டது.

'ப்ரியா கன்ஸ்ட்ரக்ஷன், சேகர் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனங்களுக்கு கான்ட்​ராக்ட் விடப்பட்டது. ஆனால், பல பிரச்னைகளினால் சுணக்கம் ஏற்பட்டு, முயல் வேகத்​தில் ஆரம்பித்த பணி, நத்தை வேகத்​துக்குப் போனது! பல இடங்களில் குழிகள் தோண்டப்​பட்டு அப்படியே பாதியில் விடப்​பட்டது.

இந்த நேரத்தில், விருதுநகர் நகராட்சி நிர்வாகம் திடீரென ஒரு காரியத்தில் இறங்கியது. வீடு, தெருக்களில் உள்ள கழிவு நீர்க் குழாய்களைப் பாதாள சாக்கடையில் இணைத்து, அதை அருகே ஓடும் கவுசிகா நதியில் கலக்க வைத்தது. இந்த முறைகேட்டினை, விருதுநகர் நகர்நல அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் ஆதாரத்துடன் புகார் அனுப்பியது. அதனால், 'பாதாள சாக்கடை திட்டம் முடிவடை​யாத நிலையில், வீடுகளுக்கு இணைப்பு கொடுப்​பது தவறு. உடனே இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும்’ என்று நகராட்சி நிர்வாக கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். ஆனால், 'கனெக்ஷனை கட் பண்ணினால்... கழிவு நீர் ரோடுகளில் ஓடும்’ என்பதால் நகராட்சி நிர்வாகம் செயலற்று நின்றது. இதனால் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டதாக விருதுநகர் நகராட்சி கமிஷனர் ஜான்சன், இன்ஜினீயர் கருப்பையா இருவரையும் நகராட்சி நிர்வாக கமிஷனர் செந்தில்குமார் அரசு சஸ்பெண்ட்செய்து உள்ளது ...''

-------------------------------------

இவைகளெல்லாம் பிறபகுதிகளில் மக்கள் அவதியுறும் பாதாள சாக்கடை திட்டம் பற்றிய செய்திகள்.

எனக்கு தெரிந்த சிலதை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன், இது கருத்துப் பகுதி இதை கட்டுரைப் பகுதிபோல் ஆக்கி விட்டேன் இதற்கு மேலும் தொடர்ந்தால் "நாவல்" போன்றாகிவிடும் மக்கள் சலிப்படைந்து விடுவார்கள் என்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.

எனவே மக்களே! இவ்வளவு சிரமும், சிக்கலும் இருக்கையில் இந்த திட்டம் நமது ஊருக்கு தேவையா? என்பதை சிந்தியுங்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:பாதாள சாக்கடைத் திட்ட தீர...
posted by SyedAhmed (HK) [12 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6809

மாமா உங்க கட்டுரை நன்றாக இருந்தது (கோவம் பட்டுவிடாதீர்கள்)

மேலே உள்ள செய்திக்கு எனது கமெண்ட் நான் பதிவு செய்தேன், நியாயமான சந்தேகங்களையும் அறிவு சார்ந்த கேள்விகளையும் எழுப்பி திட்டத்தை எதிர்க்காமல் போராட்டம், முற்றுகை என்று அறிவிப்பது கட்சிக்கு ஆள் சேர்க்கும் செயல், நம் கையால் நம் கண்ணை குத்துவது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து

பல நடைமுறை சாத்தியங்களும் நியாயமான சந்தேகங்களும் உள்ள இந்த திட்டத்தை எப்படி செயல் படுத்த முடியும் என்று தலைவர் கருதுகிறார்கள் என்பதை கேட்டு செய்தியாக வெளியிட வேண்டும் என்றும் காயல்பட்டினம்.காம் இற்கு நான் கோரிக்கை வைத்தேன். காயல்பட்டினம்.காம் அந்த முயற்சியில் ஈடுபடும் என்று கருதுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. அடியேன் யாரையும் கோபிக்கவில்லை
posted by N.S.E. மஹ்மூது (Kayalpatnam) [12 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6813

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

சகோதரர் செய்து அஹ்மது அவர்களே! அடியேன் யாரையும் கோபிக்கவில்லை. தாங்கள் குறிப்பிட்டீர்களே அதுதான் உண்மையான பாதாள சாக்கடை திட்டம் அதை மக்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகத்தான் உங்கள் பெயரையும் கருத்து எண்ணையும் குறிப்பிட்டேன்.

மற்றபடி என்னுடைய விளக்கங்கள், எடுத்துக்காட்டுகள், பத்திரிக்கை செய்திகள் எல்லாமே பொதுவாக நாம் அனைவரும் இந்த திட்டத்தை பற்றி தெரிந்துக் கொள்வதற்காக கொடுக்கப்பட்ட பொதுவான விஷயங்கள்.

---------------------------------------------------

தங்கள் கருத்து எண் 6 ல் சிந்திக்க வேண்டிய , விவாதிக்க வேண்டிய பல விஷயங்களை குறிப்பிட்டிருக்கிறீர்கள் அதையே விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு நல்ல பல கருத்து பரிமாற்றங்களை தொடங்குவோம் வெற்றி பெறுவோம். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved