Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:26:25 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 6895
#KOTW6895
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஆகஸ்ட் 9, 2011
உச்சநீதிமன்றத் தீர்ப்புப்படி சமச்சீர் கல்வி நடப்பாண்டிலேயே அமல்படுத்தப்படும்! -ஜெயலலிதா
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3789 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபடி நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டிலேயே அமல்படுத்த வேண்டும்... இன்னும் 10 நாட்களில் இத்திட்டத்தை அமல்படுத்தி புத்தகங்களையும் வழங்க வேண்டும்... என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து தமிழக அரசின் நிலை குறித்து அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்தநிலையில், இன்று சட்டசபையில் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வாசித்தார் முதல்வர் ஜெயலலிதா.

அப்போது அவர் கூறுகையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடப்பாண்டிலேயே தமிழகத்தில் அமல்படுத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவை தமிழக அரசு ஏற்கிறது. அதன்படி நடப்பாண்டிலேயே சமச்சீர் கல்வித் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by A.W.S. (Kayalpatnam) [09 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6742

JJ shot herself in the leg. I sincerely believe that this women will learn something from this judgement. Shame on those who supported her in this regard.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [09 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6743

ஜெயாவின் தேவை இல்லாத வீண் பிடிவாதினால், அருமை மாணவ, மாணவிகளின் பொன்னான மூன்று மாதங்கள் வீனடிக்கபட்டுள்ளது என்பது தான் தெளிவாகி உள்ளது. இனி வரும் காலங்களில் நம் அருமை மாணவ & மாணவிகள் வெற்றி பாதையில் அவர்களது கல்வி பயணத்தினை நல்ல முறையில் துவங்கி பல வெற்றிகளை பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.வல்ல நாயன் உங்கள் வாழ்வை வளம் பெற செய்வானாக.ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. புரிந்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே.
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [09 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6748

இதை முதலிலே அமுல்படுத்தி இருக்கலாம் அல்லவா. எவ்வளவு பண விரயம், கால விரயம், மண உளைச்சல்.

அம்மாவின் ஆசையில் சற்று சறுக்கல் வந்து உள்ளது. உண்மையில் அம்மாவின் ஆசையே சமச்சீர் கல்வியை ஒழிப்பது தான்..(ஆனால் சொல்லுவது வேறு...). அது எப்படி கார்பரேசன் பள்ளி மாணவர்களும், சர்ச் பார்க் கான்வென்ட் மாணவர்களும் ஒரே பாடத்தை படிப்பது.. எல்லாம் ராஜாஜி உடைய கல்விக்கொள்கை தான் அம்மாவின் மனதில்..

இதே கொள்கை தான் MGR அவர்களுக்கும் இருந்தது.

- 1960 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஐயா காமராஜர் அவர்கள், ‘ஆண்டு வருமானம் 1200 ரூபாய்க்கு கீழ் இருந்தால் உயர்கல்வி வரை இலவசம்’ என்று அறிவித்தார்.

- பின்பு 1962 இல் அனைவர்களுக்கும் உயர்நிலைப் பள்ளி வரை இலவச கல்வி என்று ஐயா அவர்கள் மாற்றம் செய்து 1978 வரை இதே நிலையே இருந்தது.

கட்டண கல்விமுறையை ஒழித்து, அனைவர்களுக்கும் இலவச கல்வி கொடுத்தது கடமை வீரர் காமராஜ் அவர்கள் தான்.

பின்பு புண்ணியவான் எம்.ஜி.ஆர் அவர்கள் 1978 இல் ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக, நிரந்தர இரண்டாம் நிலை தலைவராக இருந்த நெடுஞ்செழியன் துணையோடு கமாராஜர் திட்டத்தை ஒழித்தார். மீண்டும் கட்டண கல்வி முறை வந்தது.

சென்ற தலைமுறை தமிழர்களின் தலையில் எம்.ஜி.ஆர் அடித்த ஆப்பு தான், இந்த தலைமுறை வரை தொடர்கிறது. ஆரம்ப கல்வி முதல் உயர்க்கல்வி வரை தீவிர வியாபாரம் ஆனது புண்ணியவான் ஆட்சியில் தான்.

மருத்துவக்கல்லூரி தனியார் மயம் ஆனது (ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி), பொறியியல் கல்வியை வியாபாரமாக ஆக்கி சூதாட்ட களமாக ஆக்கியது எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சி.

இவரின் காலத்தில் ரவுடியாக இருந்தவர்கள், வாரியத் தலைவராக இருந்தவர்கள், மந்திரிகள் பலர், கல்வித் தந்தையாக உருமாற்றம் செய்யப்பட்டார்கள். உதாரணமாக ஆர்.எம். வீரப்பன், ஏ.சி. சண்முகம், ஐசரி வேலன், ஜி. விஸ்வநாதன், ஜேப்பியார், ஜெகத்ரட்சகன், ராஜா முகம்மது இப்படி ஒரு கும்பலே புறப்பட்டு இன்றுவரை கல்வியை சூதாட்ட களமாக நடத்திக்கொண்டு வருகிறார்கள்.

இதே எம்.ஜி.ஆர் பாணியை, பின்பு வந்த முத்தமிழ் காவலர் கலைஞர் கருணாநிதி அவர்களும் பின்பற்றி வந்தாரே தவிர, கட்டண கல்வி முறையை ஒழிக்க எந்த முயற்சியும் செய்யவில்லை.

இவரின் சகாக்கள் அனைவர்களும் வழமை போல ஆளாளுக்கு என்று பல மருத்துவ கல்லூரி, பொறியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி என்று கல்வித்தந்தையாக அவதாரம் எடுத்து நடத்தி வருகிறார்கள்.

(பொன்முடி, எ.வ. வேலு, ரகுபதி, கே.என்.நேரு, துரைமுருகன், வீரப்பாண்டி ஆறுமுகம், M.R.K. பன்னீர் செல்வம், ஆற்காட்டார் குடும்பம், பொங்கலூர் பழனிச்சாமி, ஸ்டாலின் குடும்பம்..அப்பப்பா.. அடாப்பு போட்ட மாதிரி வந்துக்கொண்டே இருக்கிறது …எண்ணிக்கையே ஒரு பக்கம் வரும் போல உள்ளது).

இது தான் நிதர்சனமான உண்மை. யாரும் நல்லவர்கள் கிடையாது. இதை புரியாமல் தான், நாம் நமக்குள் அடித்துக்கொண்டு இருக்கிறோம்.நல்ல சிந்தியுங்க.

நம் சமுதாயத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி தேவை என்று திட்டங்கள் நடந்துக்கொண்டே இருக்கிறது..எவ்வளவு கஷ்டப்படுகிறோம் நாம்... என்று இந்த இனிய உதயம் வரும் என்று ஆவலுடன் இருக்கிறோம்...புரிந்துக்கொள்ளுங்கள் சகோதரர்களே.

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by Imran (hongkong) [09 August 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 6750

இது தான் முதல் அடி,,,தொடரும்,,,ஆல் தி பெஸ்ட் ஜெயலலிதா....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [09 August 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6751

அம்மா அவர்களே தங்களின் அதிகார மற்றும் ஆணவ போக்கு இனி மக்களிடம் செல்லாது.

இது முதல் சறுக்கல்...........
இன்னும் தொடரும்...................


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by mumthaj (kayalpatnam) [09 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6753

welcome 2 samacheer system!! students can learn this system without any difficulties. But amma has wasted pupil's time and expectations. They are very eager to learn this education system!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by Ashika (kayalpatnam) [09 August 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 6754

முடிவு இப்படி வருமுன்னு எதிர் பார்த்ததுதான். சரி....மாணவர்கள் கல்வி சுமையில் மூழ்கி தள்ளாடாமல் இவ்ளோ நாள் சுதந்திரமாக இருக்கணும்னு அம்மாவுக்கு ஆசை போல!! ஆனா கடைசிலே போட்டு அமுக்கிடுவாங்க....அது தெரிஞ்ச உண்மைதான்!! அதனாலே மாணவர்களே உஷார்!! இன்னும் என்னென்ன இடர்பாடுகள் வரபோவுதோ அந்த அல்லாஹ்வுக்கு வெளிச்சம்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by வெள்ளி முஹியத்தீண் (சென்னை) [09 August 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 6755

ஹி...ஹி....... கடைசியில காமெடியா போயிட்டு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by subhan (Abu Dhabi) [09 August 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6756

இனியாவது இதுபோன்ற பிரச்னைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு நாட்டு நலன்கருதி தன்னுடைய அணுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. உச்சநீதிமன்றம்:- கருணாநிதிக்கு குdட்டு.... ஜெயாவுக்கு குட்டு.
posted by zubair (riyadh) [09 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6757

நண்பர்களே...... நம் தமிழக முதல்வர் மூன்று மாதம்களாக மக்களுக்கு எதிராக ஆடின சூதாட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. மக்கள் வெற்றியை அடைந்துள்ளனர். அம்மா அவர்களே.... என்னா..... விளையாட்டை நிறுத்தி விட்டீர்கள்? நமக்கு தோல்வி என்பதே... வரக்கூடாது அல்லவா...? இனியும் ஆட்சியை பினயமாக வைத்து விளையாடி பார்க்க வேண்டியதுதானே.....? பயமா....? சூதாட்டத்தில் ஆட்சியை இழந்து விடுவோம் என்று? புலி பதுங்குவது பாய்வதுக்கு என்பார்கள். ஆனால் எப்பவுமே... பாய்ந்து கொண்டு இருந்த புலியை சமச்சீர் கல்வி திட்டத்தால் அடக்கிஉள்ளார் கருணாநிதி. மூக்கணாம் கயிறு உள்ள மாட்டை யார் வேண்டுமானாலும் அடக்கிவிடலாம். ஆனால் மூக்கணாம் கயிறு இல்லாத மாட்டை அடக்கிஉள்ளார் கருணாநிதி.

இந்த கோபத்தை அம்மா அவர்கள் நம் மக்களின் பாட புத்தகத்தில் காண்பிப்பார். இனி அளித்தல், திருத்தல், ஒட்டல், கிழித்தல் இதை செய்ய மறுக்கும் ஆசிரியர்களை உருட்டல், மிரட்டல் எல்லாம் நடக்கும். அவர்களை ஆடவிட்டிருக்கிறது நம்மளை பார்க்க விட்டுள்ளது. ஆகையால் பார்த்துக்கொண்டே... இருப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [09 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6758

அல் ஹம்திலில்லாஹ் பிள்ளைகள் படிப்புக்கு ஒரு நல்ல காலம் பொறந்தது. இதற்க்குமேலே நீதிமன்றம் இல்லையாகையால் ஜெயலலிதா பணிந்து தான் ஆகவேண்டும்.பொறுமைக்கு கிடைத்த வெற்றி. பொறாமைக்கு கிடைத்த வீழ்ச்சி, அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by saburudeen (dubai) [09 August 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6759

முதல்வர் அவர்கள் தரமான கல்வி நமது தலைமுறைக்கு கிடைக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில்தான் உச்ச நிதிமன்றம் வரை போய் போராடினார் தவிர அதிகார மற்றும் ஆணவ போக்கு அல்ல.

பல சறுக்கல்களை கடந்துதான் அமோக வெற்றி பெற்று முதல்வர் ஆகி இருக்கிறார். தற்போது உச்சநிதி மன்றத்தின் தீர்ப்பை ஏற்று கொண்டு சமச்சீர் கல்வியை அமல் படுத்தியது வரவேற்கதக்கது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by kavimagn (dubai) [09 August 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6760

அன்பான நண்பர்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!

உங்கள் அனைவருக்கும் ஒரு செய்தியை தெரிவித்துவிட்டு தலைப்புக்குள் செல்லலாம் என்று எண்ணுகின்றேன்.

எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தலில் வெளிநாடுவாழ் காயலர்கள் ஆற்றவேண்டிய பணிகளை ஒருங்கிணைக்கும் முகமாக, உலகம் தழுவிய அளவில் ஒரு குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் வேறு தலைப்புகளை குறித்து எழுதி கருத்து வேறுபாடுகளை உருவாக்க வேண்டாம் என்ற நல்லவர்களின் உத்தரவிற்கு இணங்கி, தரப்பட்ட பணியில் மும்முரமாக இருக்கும் இந்த வேளையில், இந்த தீர்ப்பு வந்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசு செயல்படுத்தியே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எதுவும் இல்லை எனினும் (இதற்கு எத்தனையோ முன் உதாரணங்கள் இருப்பதை நண்பர் ஜியா போன்றோர் அறிந்திருக்கக்கூடும்), தீர்ப்பை ஏற்று அதனை அமுல்படுத்த உத்தரவு பிறப்பித்திருக்கும் அம்மாவின் முடிவு வரவேற்கத்தக்கது.

இலவச கல்வி குறித்த ஜியா அவர்களின் கருத்து மற்றும் செய்திகள் குறித்த மாறுபாடான விஷயங்களை விவாதிக்க ஆரம்பித்தால் அது நம்மை வெகுதூரத்திற்கு அழைத்துச் சென்றுவிடும் என்று அஞ்சி எம்.ஜி.ஆர்.. ஆட்சிக்காலத்தில் அவருடன் இருந்ததாக நண்பர் குறிப்பிட்ட அனைவரும் இன்று கலைஞரின் தம்பிகளாக மாறிவிட்டதை மாத்திரம் பதிவு செய்கிறேன்.

நீதிமன்றத்தில் கிடைப்பது தீர்ப்புதானே ( judgement ) தவிர நீதி( justice ) அல்ல. சமச்சீர் கல்வி என்பது கருணாவின் திட்டம் அல்ல என்பதை இதே வலைதளத்தில் பலமுறை ஆதாரப்பூர்வமாக நிரூபித்த பிறகும் மூக்கணாங்கயிறு, தூக்கணாங்குருவி என்று எதுகை மோனையாக எழுதுவது பாதி குடும்பத்தை சிறைச்சாலைகளில் வைத்திருக்கும் கருணாநிதியை ஆறுதல் படுத்தாது.

உள்ளாட்சித் தேர்தலில் சமூக அக்கறையற்றவர்கள் வராமல் தடுப்பது எப்படி என்ற நமது கருத்து விவாதத்தை துவங்குவோம்.

அட்மின் சார்!

நான் விரும்பும் நகர்மன்றம் கட்டுரைகள் என்னவானது? நகர மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த இதுவே சரியான தருனம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by SyedAhmed (HK) [09 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6762

பார்பனர்களின் கைப்பாவை இருந்து சமசீர் கல்வியை எடிர்ததர்க்கு சரியான சம்மட்டி அடி. metriculation கல்வி ஒழிந்தது தமிழ் நாட்டு மாணவர்களுக்கு கிடைத்த வெற்றி.

கருணாநிதியின் குடும்ப சரிதைகள், கட்சி வரலாறு போன்றவற்றை நீக்கி விட்டு உண்மையான தரமான CBSE போன்ற கல்வி தமிழக மாணவர்களுக்கு கிடைக்கவேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [10 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6765

நண்பர் கவிமகன் இது தீர்ப்புதான் நீதி அல்ல என்று {குழப்பி உள்ளார்} குறிபிட்டுள்ளார். அவர் என்னதான் சொல்ல வருகிறார். சமசீர் கல்வி தேவையில்லை என்கிறாரா? அதை தைரியமாக அடித்து சொல்ல வேண்டியதுதானே.

ஒரு தலைவரை ஆதரிப்பது என்பது வேறு, சீரான கல்வி நம் பிள்ளைகளுக்கு கிடைக்க நன்மையான செயலை நடுநிலைமையோடு ஆதிரிப்பது என்பது வேறு. சர்ச் பார்க் கான்வென்ட் மாணவனும், கார்பரேசன் பள்ளி மாணவனும் சரி சமம் என்று சொல்வது தவ்ரா? அது தவறு என்றுதானே நீதி மன்றம் சென்றார் ஜெயலலிதா.

கருணாநிதியார் பாதி குடும்பம் சிறைசாலைக்குள் இருப்பதற்குரிய ஆறுதல் என்று கூறுகிறீர்கள். நீதிமன்ற தீர்ப்பையே விமர்சிக்கும் நீங்கள், விசாரணை சிறை கைதியாக இருப்பவர்களை குற்றவாளிகல்போல் தீர்பெழுதி, தமிழக தற்போதைய சம்பவம் கருணாநிதிக்கு சற்று ஆறுதல் என்ற உங்களின் உள்நோக்கத்தின் உணர்வை ஓட்டுமொத்த சகோதரர்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறேன். நீங்களெல்லாம் பங்குபெறும் ஓட்டுமொத்த கருத்துகுழு எந்த அளவிற்கு வெற்றிபெறும் என்று நடுநிலையானவர்கள் அஞ்சுவதில் அர்த்தமுண்டு. அல்லாஹ் அனைத்தையும் அறிந்தவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. தன் பிள்ளைகளை சத்துணவு திட்டத்திலும் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.
posted by முத்துவாப்பா (அல்-கோபர்) [10 August 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6766

பலே.. பலே சமச்சீர் கல்விக்கு எவ்வளவு ஆதரவு...! வந்திருக்கின்ற கருத்துக்களை எல்லாம் பார்க்கும் பொழுது அனைவரும் தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து மேலும் அவர்கள் ஏனைய மாணவர்களுடன் சமச்சீராக கல்வி பயில தன் பிள்ளைகளை சத்துணவு திட்டத்திலும் சேர்ப்பார்கள் என்று நம்புகிறேன்.

ஏற்கனவே செம்மொழி... செம்மொழின்னு சொல்லி நம்மள தேசிய மொழி கூட தெரியாத மூடர்களாக ஆக்கியாச்சு.. இப்பொழுது சமச்சீர் கல்வி என்ற போர்வையில் கல்வியின் தரத்தை குறைத்து நம்மளை முட்டாள்களாக ஆக்கும் முயற்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by A.W.S. (Kayalpatnam) [10 August 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 6767

"நீதிமன்றத்தில் கிடைப்பது தீர்ப்புதானே ( judgement ) தவிர நீதி( justice ) அல்ல" என்பது கவிமகனின் முடிவு. நீதிபதிகள் சமசீர் கல்வி விஷயத்தில் நீதமாக நடக்கவில்லையா? அப்படி என்றால் நீதிக்கு எங்கே போவது?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. உச்சநீதிமன்றத் தீர்ப்பு சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிரானது
posted by N.A. Thymiah -9444202562 (chennai) [10 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6768

சமச்சீர் கல்வியின் நோக்கம் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே கல்வி திட்டம். ஆனால் CBSE syllabusயை தடை செய்ய supreme court தயாரா? ஒரிஎண்டல் அரபிக் ஸ்கூலுக்கு மூடு விழா. உருது & அரபிக் மொழியை கற்க முடியாது. இதை தான் முஸ்லிம்கள் ஆதரிக்கிறார்களா? உச்சநீதிமன்றத் தீர்ப்பு சிறுபான்மை சமுதாயத்திற்கு எதிரானது. இதே சமச்சீர் கல்வியை இந்தியா முழுக்க உச்சநீதிமன்றம் அமுல்படுத்த தயாரா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by mohammed ikram (saudi arbia) [10 August 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6769

ஜெயா ஒரு திட்டத்தை எதிர்கிறார் என்றால் அது நிச்சயம் சிறுபான்மை மக்களுக்கு பயன்பட கூடியதாகத்தான் இருக்கும். ஏன் என்றல், ஜெயாவிற்கு ஆலோசனை கூறுபவர்கள் சோ ராமசாமி & நரேந்திர மோடி போன்றவர்கள் தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. மூக்கணாம் கயிறு.... கவிமகனின் தூக்கணாம் குருவி.....
posted by zubair (riyadh) [10 August 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 6770

வானரம் மழை தனில் நனைய தூக்கணம் (தூக்கணாம் குருவி)

தானொரு நெறி சொல்லி தாண்டி பீத்திடினும்.....

ஞானமும், கல்வியும், நவின்ற நூல்களும்

ஈனருக்கு உரைத்தால் (நமக்கு) எடயூருதல் ஆகுமே.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. கருணாநிதியும்,ஜெயலலிதாவும் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக பிஜேபி யோடு கூட்டணி வைத்தவர்கள் தான்.
posted by N.A. Thymiah (Chennai) [10 August 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 6771

சமச்சீர் கல்வியை பற்றி கருத்து தெரிவிப்பதால் ஜெயலலிதாவை ஆதரிப்பதாக நினைத்து விடக்கூடாது. கருணாநிதியும், ஜெயலலிதாவும் தங்களுடைய அரசியல் லாபத்திற்காக பிஜேபி யோடு கூட்டணி வைத்தவர்கள் தான். நரேந்திர மோடிக்கு விருந்து கொடுத்தவர் ஜெயலலிதா என்றால், குஜராத்தில் முஸ்லிம்களை படுகொலை செய்த நரேந்திர மோடிக்கு ஆதரவாக பாரளுமன்றட்டில் வாக்களித்தவர் தான் கருணாநிதி & பிஜேபி யோடு மத்தியில் அமைச்சரவையில் பங்கு பெற்றவர் தான் கருணாநிதி என்பதை மறந்து விடாதீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by mohamed abdul kader (dubai) [10 August 2011]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6772

அம்மணிக்கு முதல் அடி இது. இனியும் ஐந்து வருடங்களுக்கு தொடருமோ !!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:உச்சநீதிமன்றத் தீர்ப்புப்...
posted by SyedAhmed (HK) [10 August 2011]
IP: 121.*.*.* Hong Kong | Comment Reference Number: 6773

சகோதரர் தைமியவின் கருத்து அறிவுக்கு பொருந்தாது அது அவர் சார்ந்திருக்கும் கட்சியின் கொள்கையா?

ஜெயலலிதாவும் கருணாநிதியும் சமுதாய எதிரிகள் என்பதை அவர் ஒப்புக்கொள்ள தயாரா?

சமசீர் கல்வி என்பதையும் பொது பாடத்திட்டம் என்பதையும் குழப்புகிறார். CBSE பள்ளிகள் உண்மையான சமசீர் கல்வியை அளிக்கின்றன, பொது பாடத்திட்டமும் சமமான உல் கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக CBSE பள்ளிகள் இருக்கின்றன.

Matriculation oriental பள்ளிகள் மாட்டு தொழுவமாக இருப்பதை நாம் எல்லாரும் அறிவோம் இந்த சமசீர் கல்வி அவற்றை ஒழிக்கிறது, இந்த கல்வி திட்டத்திலும் அரபி உருது மொழிகள் படிக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்துவதில் எந்த தடையும் இல்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. குரங்கும்,குருவியும் .
posted by kavimagan (dubai) [10 August 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 6779

ஓர் அடிப்படை உண்மையை விளங்காமல், எனது கருத்தையும் சரியாகப் படித்துப் பார்க்காமல் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்புகின்ற நண்பர் முஹம்மத் ஆதம் சுல்தான் அவர்களே!

ஜெயலலிதா சமச்சீர் கல்விக்கான கொள்கைத் திட்டத்திற்கு எதிராக நீதிமன்றம் சென்றாரா? அல்லது அ.தி.மு.க.உட்பட ஏராளமான இயக்கங்கள் ஐம்பது ஆண்டுகாலம் கோரிய ஒரு திட்டத்தில், தனது சொந்த கதைகளை புகுத்திய கருணாவின் பாடத்திட்டங்கள் தரம் குறைந்தது என்றும், அதனால் பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு சிறந்த பாடங்களுடன் முறையாக சமச்சீர் கல்வி அமுல்படுத்தப் படவேண்டும் என்று நீதிமன்றம் சென்றாரா? கடந்த இரண்டு மாத செய்தித் தாள்களை புரட்டிப் பாருங்கள்.

நீதிமன்றத்தீர்ப்புகள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதல்ல என்று உச்சநீதி மன்றமே ஒப்புக் கொண்டிருக்கும் போது தங்களுக்கு என்ன பிரச்சனை? சாபானு வழக்கும், அலஹாபாத் தீர்ப்பும் எவ்வளவு பெரிய விமர்சனத்தையும், எதிர்ப்புகளையும் சந்தித்தது என்பதை தாங்கள் அறிவீர்களா? முல்லைபெரியார் மற்றும் காவிரி பிரச்சனையில் கேரளா மற்றும் கர்நாடக அரசுகள் நீதிமன்றத் தீர்ப்புகளை தங்களது மாநிலத்தின் நலனுக்கு எதிரானது எனக்கூறி தூக்கி வீசியது வரலாறு இல்லையா?

நாங்களெல்லாம் இடம்பெறு குழு நம்பகத்தன்மையாக இருக்க முடியாது என்ற தங்களது கருத்தைப்பற்றி எனக்கு கொஞ்சமும் வருத்தம் இல்லை. காரணம் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக நான் இடம்பெற்றிருந்த குழுக்கள், நகர மக்களுக்கான களப்பணியில் எப்படியெல்லாம் செயலாற்றியது என்பதை, அந்தந்த குழுவில் இடம் பெற்றிருந்த நண்பர்களும் நல்லவர்களும் அறிவார்கள். அனைத்தையும் அறிந்தவன் இறைவன் ஒருவனே!

வாஹித் காக்கா! முறையான, நெறிபடுத்தப்பட்ட, முத்துக்குமரன் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்ட நூற்றி நான்கு குறைகளும் களையப்பட்ட சமச்சீர் கல்வியை ஆதரிக்கின்றேன். எனது கடந்தகால பதிவுகள படித்துப் பாருங்கள். நன்றி!

அறிந்தோ,அறியாமலோ குரங்கு மற்றும் குருவி கவிதையை எழுதி எனது வாதத்திற்கு வலுசேர்க்கும் நண்பருக்கு நன்றியும்,வாழ்த்துக்களும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved