|
கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் செயல்பட்டு வரும் மலபார் காயல் நல மன்றம் (MKWA) சார்பில், 14.08.2011 அன்று இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பறிக்கை பின்வருமாறு:-
அன்பின் மலபார் காயல் நல மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து காயலர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நமது மலபார் காயல் வெல்ஃபேர் அசோசியேஷன் சிறப்பு செயற்குழுக் கூட்டம் 07-08-2011 அன்று, மன்றத் தலைவர் ஜனாப் மஸ்ஊத் தலைமையில் மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஏற்கனவே அறிவித்தபடி, எதிர்வரும் 14-08-2011 அன்று இஃப்தார் (நோன்பு துறப்பு) நிகழ்ச்சியை மன்றத்தின் சார்பில் நடத்துவதெனவும்,
அதற்கான நிகழ்ச்சி நிரல்களும் மற்றும் இந்த நிகழ்சிகளுக்கு என்று உணவு கமிட்டி அமைப்பது பற்றியும் விரிவாக பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோழிக்கோடு புதியரா ஸ்டேடியம் சாலையில் அமைந்துள்ள கே.எம்.ஏ. ஹாலில் நடைபெறும் இந்த இனிய இஃப்தார் நிகழ்ச்சியில்,.மலபார் (கேரளா) சுற்றுவட்டாரங்களில் வசிக்கும் காயல்வாசிகள் குடும்பத்துடன் தவறாமல் வந்து கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இவ்வாறு அந்த அழைப்பறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
S.E.செய்யித் ஐதுரூஸ் (சீனா),
செய்தித் தொடர்பாளர்,
மலபார் காயல் நல மன்றம் (MKWA). |