காலம் கடந்த ஞானம்! posted byS.K.Salih (Kayalpatnam)[08 June 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46429
மறைந்த எழுத்தாளர் தோப்பில் முஹம்மத் மீரான் நம் சமூகத்தின் சொத்து. ஆனால், நான் உட்பட பலருக்கும் அவர் என்றாவது ஒரு நாள் எங்கேயாவது, எப்போதாவது கேள்விப்படும் நிலையிலானவர் ஆகிவிட்டார். அது எங்கள் கைசேதம்.
திறமை வாய்ந்த இப்பெரியவரை - காயல்பட்டினத்தில் எழுத்து மேடை மையம் அமைப்பால் நடத்தப்பட்ட முதலாவது புத்தகக் கண்காட்சிக்கு வரவழைக்க, அவரும் தயங்காமல் வந்து, சிறப்புரையாற்றினார்.
காயல்பட்டினத்தில் பல பள்ளிவாசல்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும், அவற்றின் பழமை பாதுகாக்கப்படாதமை கைசேதத்திற்குரியவை என்றும் அவர் - தனது வயது முதிர்ந்த உதடுகளின் வழியே ஈட்டி முனையை விடவும் கூரிய சொற்களால் தாக்கியதன் வடு நிறைய மாதங்கள் கழிந்த நிலையிலும் இன்றளவும் என் நெஞ்சில் நீங்காதிருக்கிறது.
புத்தகக் கண்காட்சிக்குப் பிறகு அவரை அடிக்கடி காணச் சென்ற இக்கட்டுரையின் ஆசிரியர் நண்பர் சாளை பஷீர் அவர்கள் என்னையும் அழைக்கத் தவறவில்லை. ஆனால் நானோ அவரைச் சந்திப்பதை விட எனது வேறு சில பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவு, இன்று சந்திக்க நினைத்தும் வாய்ப்பற்று நிற்கிறேன்.
கருணையுள்ள அல்லாஹ் அவர்களது எழுத்துச் சேவை, சமூகச் சேவைகளை ஏற்றுக்கொள்வானாக...
அவரது மண்ணறை, மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைப்பானாக...
அவரது பிரிவால் துயரிலிருக்கும் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையையும், சிறந்த கைமாறையும் தந்தருள்வானாக, ஆமீன்.
செய்தி: இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்றப் பொதுக்குழு!! உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புரிதலுக்கு நன்றி மாமா...! posted byS.K.Salih (Kayalpatnam)[07 June 2019] IP: 117.*.*.* India | Comment Reference Number: 46428
மாமா... தங்கள் முதல் கருத்தின் தொணி குற்றஞ்சாட்டுவது போல் இருந்ததாலேயே - அம்மன்றத்தினர் மனம் வருந்தும் முன் என் மனப்பதிவை வெளிப்படுத்தினேன்.
அதையே தாங்கள், “நின்றுகொண்டு சாப்பிட்டிருந்தால் அது தவிர்க்கப்பட வேண்டும்” என்ற தொணியில் கூறியிருந்தால் இத்தனை கருத்துப் பரிமாற்றங்களுக்கு அவசியமிருந்திருக்காது.
தங்களது இரண்டாவது கருத்திலேயே தங்கள் மனப்பதிவு தெளிவாக வெளிப்பட்டுள்ளது.
எனினும் - நிறைய வாசிப்பும், பட்டறிவும் கொண்ட தாங்கள் சிறியவனான எனது கருத்தையும் கருத்திற்கொண்டு, புரிதலை வெளிப்படுத்தியிருப்பது தங்களது பெருந்தன்மை.
செய்தி: இஃப்தார் – நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடன் நடைபெற்றது அபூதபீ கா.ந.மன்றப் பொதுக்குழு!! உறுப்பினர்கள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விளக்கம் கேட்ட பின் விமர்சித்திருக்கலாம்! posted byS.K.Salih (Kayalpatnam)[03 June 2019] IP: 117.*.*.* India | Comment Reference Number: 46421
இச்செய்தியின் கீழ் மக்கீ நூஹுத்தம்பி மாமாவின் கருத்தைப் படித்தேன். “பஃபே முறை கிறிஸ்துவ கலாச்சாரம்... நின்றுகொண்டு சாப்பிடுவது நமக்குத் தடுக்கப்பட்டது” என்றெல்லாம் கூறியிருக்கிறார்கள்.
நானும் நமதூரில் பல திருமணங்களில் நடத்தப்பட்ட எத்தனையோ பஃபே முறை உணவு ஏற்பாடுகளில் பங்கேற்றிருக்கிறேன். பஃபே என்பது எனக்குப் பிடித்த உணவுப் பதார்த்தத்தை நானே தேர்ந்தெடுத்து உட்கொள்வது என்றுதான் நான் புரிந்திருக்கிறேன். அப்படி பங்கேற்ற எந்த விருந்திலும் நான் நின்றுகொண்டு சாப்பிட்டதில்லை. காரணம், அங்கேயே அலங்கரிக்கப்பட்ட மேசைகளும், அதைச் சுற்றி இருக்கைகளும் இருந்தன.
மறந்து விட்டேனே.... posted byS.K.SALIH (காயல்பட்டினம்)[05 January 2019] IP: 106.*.*.* India | Comment Reference Number: 46357
நமதூரில் ஜனாஸா நல்லடக்கத்தில் தன்னார்வத்துடன் சேவையாற்றும் பலரை இக்கட்டுரையில் பட்டியலிட்ட நான், என் நெருங்கிய உறவினர் அன்புச் சகோதரர் நஹ்வி முத்துவாப்பா, எங்கள் குருவித்துறை பள்ளியின் முன்னாள் இமாம் மர்ஹூம் ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாம் அவர்களது மருமகனார் தாஹா காக்கா (உடல் நலக் குறைவால் வீட்டில் ஓய்வில் இருக்கும் அவருக்கு அல்லாஹ் நல்ல உடல் நலனை வழங்குவானாக!), தைக்கா தெருவில் சதக்கத்துல்லாஹ் காக்கா, புகாரீ (48) காக்கா, ஐ.எல்.எஸ்.முஹ்யித்தீன் காக்கா ஆகியோரைக் குறிப்பிட மறந்து விட்டேன்.
நண்பரும், பாடகருமான எஸ்.ஏ.காஜா அவர்கள் நினைவூட்டியதையடுத்து தற்போது இணைத்துள்ளேன்.
இன்று காலையில் நமதூர் பெரிய குத்பா பள்ளியில் ஒரு ஜனாஸாவை அடக்கிவிட்டுத் திரும்பியபோது, நல்லடக்கச் செலவினங்கள் தொடர்பாக ஒரு விவாதம் வாட்ஸ்அப் குழுமங்களில் ஓடிக் கொண்டிருப்பதாக அறிந்து, என்னிடம் வாட்ஸ்அப் இல்லாததால், அதை வைத்துள்ளவர்கள் மூலம் பார்த்து அறிந்துகொண்டேன்.
உடனடியாக, சகோதரர் எஸ்.கே.ஸாலிஹ் இடம் இதுகுறித்த எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி, “நானும் பல முயற்சிகளை மேற்கொண்டு விட்டேன். இதுவரை எந்தப் பயனையும் காணவில்லை. எனவே, நீங்கள் உங்கள் எழுத்தின் மூலமாவது விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்” என்று கேட்டுக்கொண்டேன்.
சம்மதித்துச் சென்றவர், சிறிய வாசகத்தைப் பதிவிடுவார் என்று பார்த்தால், ஒரு கட்டுரையையே தந்துவிட்டார்.
சரி, நான் இன்று பெரிய குத்பா பள்ளி மையவாடியில் மய்யித்தை அடக்கிய பின், அங்குள்ள மக்களிடையே பேசியதை அப்படியே கீழே தருகிறேன்:-
ஒரு வீட்டில் மரணம் நிகழ்ந்துவிட்டால், அடுத்தடுத்துச் செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து எதுவுமே புரியாமல் - கவலையில் மரணித்தவரின் குடும்பத்தார் எதையும் கவனித்துச் செய்ய முடியாத நிலையில் இருப்பார்கள். அப்படியான நேரங்களில், அந்த மய்யித்தை அடக்கும் ஜமாஅத் நிர்வாகத்தின் சார்பில், அவர்களது சார்பில் நின்று பொறுப்பேற்று காரியங்களைச் செய்து கொடுக்க வேண்டியது நமது தார்மிகக் கடமை.
நமதூரில் 32 பள்ளிவாசல்கள் உள்ளன. அவற்றுள் மையவாடிகளைக் கொண்ட பள்ளிவாசல்கள் 18. இந்த 18 பள்ளிகளிலிருந்தும் தலா இரண்டே பேர் இந்த நல்லடக்கப் பணிகளைத் தெரிந்துகொண்டு, செய்திட முன்வந்தாலே நமதூரில் 36 பேர் இதற்காகக் கிடைப்பார்கள். அவர்களைக் கொண்டு தங்குதடையின்றி நல்லடக்கக் காரியங்களைச் செய்து, மரணித்தவர் குடும்பத்தினருக்கு ஆறுதல் அளிக்கலாம்.
இதன் நன்மையை உணர்ந்திருந்தால் இதற்குத்தான் போட்டி போட வேண்டும். ஆனால் பரிதாபம்! 18 வார்டுகளுக்கும் கவுன்சிலராய் நிற்பதற்கு நான் நீ என போட்டி போடும் மக்கள், இதுபோன்ற நற்காரியங்களுக்கு நேரில் சென்று அழைத்தாலும், தலைமறைவாகி விடுகின்றனர்.
இதுபோன்று பொறுப்பெடுக்க அந்தந்தப் பகுதிகளில் சமூக ஆர்வலர்களாக யாரும் முன்வராத காரணத்தால்தான் - கட்டுரையில் குறிப்பிட்டுள்ள படி, நேற்று நடைபெற்ற நல்லடக்கத்தில் 7,560 ரூபாயும், இன்று நடைபெற்ற நல்லடக்கத்தில் 5,800 ரூபாயும் காண்பிக்கப்பட்டுள்ளது. வித்தியாசம் 1,760 ரூபாய். இந்தத் தொகை வசதியுள்ளவர்களுக்கு ஒன்றுமே இல்லை. ஆனால் வசதியற்றவர்களுக்கோ சுமார் 15 நாட்கள் வாழ்க்கைச் செலவைப் பூர்த்தி செய்யும்.
இந்தப் பிரச்சினையை யார் கையிலெடுப்பது? பூனைக்கு யார் மணி கட்டுவார்?
இங்கு எல்லா ஜமாஅத்துகளைச் சேர்ந்த - எல்லாக் கொள்கைகளைச் சேர்ந்தவர்களும் வந்திருக்கின்றீர்கள். பலமுறை நானும் எல்லா ஜமாஅத்துகளையும், பொதுநல அமைப்புகளையும், ஐக்கியப் பேரவையையும் தொடர்ந்து வலியுறுத்திக் கேட்டுக்கொண்ட போதிலும் இதுவரை எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
இப்போது இறுதியாக உங்கள் அனைவரையும் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்...
இதுபோன்ற மரண நிகழ்வுகளில், அந்தந்த ஜமாஅத்துகள் பொறுப்பெடுத்துக் கொண்டால் மட்டுமே சம்பந்தப்பட்ட குடும்பத்தாருக்கு உதவியாக இருக்கும். எனவே, இனியேனும் காலம் தாழ்த்தாமல் இதுகுறித்து கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், இதுகுறித்து ஐக்கியப் பேரவையைத் தொடர்ந்து வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கத் தூண்டுமாறும் இங்கு வந்திருக்கும் அனைத்து ஜமாஅத்துகளைச் சேர்ந்த மக்களாகிய உங்களை நான் அன்போடு வேண்டிக் கொள்கிறேன்.
இதைச் செய்வது ஈருலகிலும் நமக்கு நிறைவான நன்மையைப் பெற்றுத் தரும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்திய மேலான சுன்னத்தைப் பின்பற்றிய பாக்கியசாலிகளாக நாம் ஆவோம்.
எல்லாம்வல்ல அல்லாஹ் அதற்கு அருள் புரிவானாக, ஆமீன்.
செய்தி: ஜன. 14 அன்று சென்னை புத்தகக் கண்காட்சியில் எழுத்தாளார் சாளை பஷீரின் ‘மலைப்பாடகன்’ நூல் - பூவுலகின் நண்பர்கள் சார்பில் வெளியீடு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
காயல்பட்டணம்.காம் ஆசிரியர் குழுவில் ஒருவர்! posted byS.K.Salih (Kayalpatnam)[15 January 2018] IP: 106.*.*.* India | Comment Reference Number: 45980
இச்செய்தியை வெளியிட்டுள்ள தம்பி அ.ர.ஹபீப் இப்றாஹீம், இப்புத்தகத்தின் ஆசிரியர் குறித்த மேலுமொரு தகவலை மறந்துவிட்டார் போலும்!
எழுத்தாளர் சாளை பஷீர் அவர்கள் நமது காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் ஆசிரியர் குழுவினருள் ஒருவர் என்பதே அது!
எம்மோடு இணைந்த எழுத்தாளர் சாளை பஷீர் அவர்களின் ஆக்கங்கள் தனியொரு நூலாக வெளியாகி, உலகப் புகழ் பெற்ற சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட்டுள்ளதை நினைத்துப் பார்க்கையில் எனதுள்ளம் மிகவும் பூரிக்கிறது.
நமதூரில் மாற்று வாழ்வியல் சிந்தனையின் துவக்கம் அவர்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகமில்லை. அவரது முயற்சிகள் இன்று வேர் விட்டு விழுதுகளாகிப் பல்கிப் படர்ந்து வருவது நம் கண் முன் சாட்சி!
எல்லாம்வல்ல இறைவன் அவரது எழுத்தாற்றலை இன்னும் உயர்த்தி, உலகம் முழுக்கவுள்ள தமிழ் பேசும் மக்களுக்குத் தேவையான அரிய பல நற்கருத்துக்களைக் கொண்டு சேர்க்க உதவியருள்வானாக... அதன் பலன்களை இப்பூவுலகிலும், மேலுலகிலும் நிறைவாக வழங்கியருள்வானாக, ஆமீன்.
ஓசிப் பயணம்! posted byS.K.Salih (Kayalpatnam)[20 December 2017] IP: 106.*.*.* India | Comment Reference Number: 45948
சாளை பஷீர் அவர்களின் கட்டுரை, ஒற்றைப் பைசா செலவின்றி பல ஊர்களைச் சுற்றிக்காண்பிக்கிறது. எழுத்தோட்டமும், காட்சிகளை அவர் அவதானித்ததற்கேற்ப ஆங்காங்கே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகளும் கவனத்தைக் கவர்ந்தன.
எனினும்.....
\\.....பொதுவாகவே வடகிழக்கில் கூடுதலாக மழை பொழிவதால் வீடுகளை அதற்கேற்பவே அமைத்துள்ளனர். நான்கு கம்பை நட்டு அதன் மேல் மரப்பலகைகள் அமைத்து மூங்கில் படல், தகரம், ஒட்டுப்பலகை போன்ற ஏதாவது ஒன்றினால் பக்கவாட்டு சுவர்களை அமைக்கின்றனர். கூரைக்கு தகரம் போடுகின்றனர். மிகச்சில இடங்களில் மட்டுமே காங்கிரீட் வீடுகளை பார்க்க முடிகிறது.
இந்த மாதிரி வீடுகளினால் மழை நீர் வீட்டுக்குள் ஒழுகுவதில்லை. மழை நீர் தேக்கம், வெள்ளத்தினாலும் வீடுகள் பாதிக்கப்படுவதில்லை. வடகிழக்கு மக்கள் எளிய வறிய வாழ்க்கை உடையவர்கள். அதனால் வீட்டில் கனமான தளவாடங்கள் இருப்பதில்லை, எனவே பலகை தளங்கொண்ட வீடுகளின் தாங்கும் திறனைப் பற்றி கூடுதல் கவலை கொள்ள வேண்டியதில்லை. வடகிழக்கின் கிட்டதட்ட அனைத்து மாநிலங்களிலும் மியான்மர் வரையிலும் இம்மாதிரி வீடுகளையே அமைக்கின்றனர்.....//
C&P
இதுபோன்ற இடங்களில், அந்த வீட்டையும் காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் மெருகேறியிருக்கும். சொல்லாமல் விடுபட்ட பல தகவல்களை ஒற்றைப் படம் சொல்லியிருக்கும்.
அடுத்தடுத்த பதிவுகளில் கவனத்தில் கொள்வாராக, ஆமீன்!
செய்தி: முஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், மூன்று மாதங்களில் 25 வகையான நாட்டு மரக்கன்றுகள் & செடிகள் என 150-க்கும் மேற்பட்டவை நடப்பட்டு பராமரிப்பு!! பள்ளி நிர்வாகம் தகவல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
உடையவன் இல்லாட்டி ஒரு முழம் கட்டை! posted byS.K.Salih (Kayalpatnam)[27 November 2017] IP: 106.*.*.* India | Comment Reference Number: 45925
தம்பி ஹபீப் இப்றாஹீமின் வடிவமைப்பிலான இச்செய்தியைப் பார்த்து, என் கண்கள் குளிர்ந்துவிட்டன. மனமார்ந்த பாராட்டுக்கள்!
பொதுவாகவே, நமதூரில் மரம் வளர்ப்பைப் பலரும் செயல்திட்டங்களாகக் கொண்டு நிறைவேற்றியும், எல்லோருக்கும் உரிய பலன் கிடைப்பதில்லை. காரணம், பராமரிப்புக்கு அடுத்தவரை நம்புவதே!
இங்கோ நிலைமையே வேறு! யார் பராமரிக்க வேண்டுமோ அவர்களே தன்னார்வத்துடன் முன்வந்து, செயல்திட்டங்களுக்குத் துணை நின்று, இந்தளவில் சாதித்திருக்கின்றனர். இன்ஷாஅல்லாஹ் விரைவில் இவ்விடம் பசுமைத் தோட்டமாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இதை முன்னுதாரணமாகக் கொண்டு, இதர பொது நிறுவனங்களும், பொதுமக்களும் தம்மாலான முன்முயற்சியை மேற்கொண்டால் எல்லோருக்கும் பயனளிக்கும்!!!
செய்தி: சிங்கை கா.ந.மன்றத்தின் வருடாந்திர பொதுக்குழுவை & குடும்ப சங்கமத்தை முன்னிட்டு மகளிருக்கான சிறப்புப் போட்டிகள்: சமையல் போட்டி முடிவுகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
புதுசு புதுசா... posted byS.K.Salih (Kayalpatnam)[15 November 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45903
சிங்கை காயல் நல மன்றத்தின் புதுப்புது நடவடிக்கைகள் அனைத்தும் போற்ப்பட வேண்டியதே!
நகர்நலனுக்காக நிதி திரட்ட உறுப்பினர் சந்தா பொதுவான ஒன்றாக இருக்க, உண்டியலை அறிமுகப்படுத்தியது...
மன்றத்தால் திட்டமிடப்படும் ஒவ்வொரு செயல்திட்டத்திற்கும் என சிறப்புக் குழுவினரை நியமித்து, நிர்வாகம் வெறும் செயற்குழு உறுப்பினர்களோடு சுருங்கி விடாமல், பொதுக்குழு உறுப்பினர்களையும் நாள்தோறும் உற்சாகத்திலும், மன்றத் தொடர்பிலும் தொடர்ந்து வைத்து வருகிறது...
வருடாந்திர பொதுக்குழுவை குடும்ப சங்கம நிகழ்ச்சியாக்கி, அதில் புதுப்புது போட்டி & விளையாட்டு அம்சங்களைப் புகுத்தி, “ஆம்பளைங்க எல்லாம் கலகலப்பாக இருக்காங்க... எங்களுக்குத்தான் ஒன்னுமில்லே...” என எங்கேயோ நம் பெண்கள் மனதில் எண்ணியதைக் கூட பூனைக் காதால் கேட்டு, அவர்களையும் ஆண்டுதோறும் உற்சாகப்படுத்தி வருகிறது இம்மன்றம் என்றால் அது மிகையாகாது!
அந்த வரிசையில், தற்போது மகளிருக்கான கேரம் விளையாட்டுப் போட்டியை முடித்து, சமையலையும் செய்ய வைத்துள்ளது. (ஆம்! வழமைக்கு மாற்றமாக இப்போட்டியில் மகளிர் சமைத்திருப்பது பாராட்டத்தக்க முயற்சிதானே...? தந்தைக்குலங்களுக்கு ஒருநாள் ஓய்வு!!!)
எனதன்பு இளவல்! posted byS.K.Salih (Kayalpatnam)[10 August 2017] IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 45717
மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இறைவனின் விதியைப் பொருந்திக்கொள்வோம்...
2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் 01ஆம் நாளன்று இவனது திருமணம், காயல்பட்டினம் மகுதூம் பள்ளியில் நடைபெற்றது. அடியேன்தான் நிகழ்ச்சித் தொகுப்பு. இளவல் ஷீதுடன் இடையிடையே கொஞ்சிப் பேசிய படியே நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியது கண்களிலேயே நிழலாடுகிறது.
தனது பிஞ்சுப் பருவத்தில், காயல்பட்டினம் ஐ.ஐ.எம். தீனிய்யாத் பிரிவில், இந்த இளவல் என்னிடம் மார்க்கக் கல்வி பயின்ற மாணவன்.
இவனது
பிறப்பு ஆகஸ்ட் 06, 1989.
திருமணம் ஆகஸ்ட் 01, 2015.
மரணம் ஆகஸ்ட் 09, 2017.
மொத்தத்தில் எனது மாணவனாகவும், என் அன்பிற்கு என்றும் உரித்தானவனாகவுமான இவனது பிரிவு என்னைப் பெரிதும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
எனக்கே இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றால், அவனது தாய் - தந்தை, சிறிய தந்தை, பெரிய தந்தை, உற்றார் - உறவினருக்கு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
கருணையுள்ள ரஹ்மான், மறைந்து வாழும் இளவலின் பாவப் பிழைகளைப் பொறுத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் - நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீனுடன் இணைந்திருக்கச் செய்வானாக...
இந்த அன்பு இளவலின் பிரிவால் மீளாத் துயரிலிருக்கும் அவனது தந்தை எனதன்பிற்குரிய ஹுமாயூன் காக்கா, பெரிய தந்தை சாளை ஸலீம் காக்கா, சிறிய தந்தை பொதுநல ஊழியர் சாளை நவாஸ் காக்கா உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் கருணையுள்ள அல்லாஹ் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக, ஆமீன்.
அன்புடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
உள்ளிட்ட
எஸ்.கே.குடும்பத்தினர்,
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross