செய்தி: நாடாளுமன்றத் தேர்தல் 2014: கட்சிக்குள் உள்குத்து வேலை செய்வோர் ஓரங்கட்டப்படுவர்! ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்துப் பேசிய திமுக மாவட்ட செயலாளர் எச்சரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byM.I.மூசா நெய்னா (காயல்பட்டணம்)[29 March 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 34028
சபாஷ்.!!!. சகோதரர் உமர் அனஸ் அவர்களே. நெத்தியடி. ஊழலை பற்றி பேச குறைந்தபட்ச அருகதை வேண்டும். திருவாரூரில் இருந்து வெறும் கையை வீசி கொண்டு வந்த குடும்பத்துக்கு, இன்று விமான சர்வீஸ் விடும் அளவுக்கு வளம் வந்தது என்ற விஞ்ஞான ரீதியான உண்மையை திமுகவின் தலைவரோ அல்லது தளபதியாரோ சொன்னால் மக்கள் தெளிவுபட வசதியாக இருக்கும்.
இப்புனித பாரம்பரிய ஊரான காயல்பட்டினத்தை கலைஞர் பட்டினம் என்று பிதற்றுவதற்கு கட்சி பாகுபாடின்றி என்ன எதிர்ப்புகள் இருந்தது என்பதை முன்காலத்தில் வளைதளத்தில் மூலம் நன்கு அறிய முடிந்தது. மேலும், 90 சதவீத வாக்காம். நகைச்சுவை நடிகர் வடிவேலையும் மிஞ்சி விட்டார்கள்.
Re:... posted byM.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா)[01 February 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32925
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் தஆலா மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌவ்ஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வனாக ஆமீன்!!!.
மர்ஹுமா குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
செய்தி: எதிர்ப்பையும் தாண்டி ‘தந்தி டிவி’யில் டி.சி.டபிள்யு. ஆலை குறித்து நேரலை நிகழ்ச்சி! இன்றிரவு மறு ஒளிபரப்பு!! இணையதளத்திலும் காணலாம்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byM.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா)[01 February 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32904
தந்தி டிவி நிறுவனத்திற்கு முதலில் நன்றியை தெரிவிக்க வேண்டும். கிட்டதட்ட 1 மணி நேரம் நேரடி ஒளிபரப்பாக மிக விரிவாக ஒளிபரப்பினார்கள்.
உண்மையிலேயே KEPA நிர்வாகிகளுக்கு மனப்பூர்வமான நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவிக்க வேண்டும். அவர்களின் தொடர்ச்சியான அயராத உழைப்புக்கு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லையோ என்று தோன்றுகிறது.
ஏனெனில், அங்கு கூடி இருந்த கூட்டம் மிக குறைவாக இருந்தது. இது போன்ற ஊடகங்களின் நேரடி ஒளிபரப்பின் மூலம் நமது மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிப்பதற்கு நல்லதொரு தருணம். அதை நாம் தவற விட்டு விட்டோம் என்று என்ன தோன்றுகிறது.
KEPA நிர்வாகிகள் மிக தெளிவாக நமது ஊரின் பாதிப்புகளை ஆதாரத்துடன் தெரியபடுத்தினார்கள். பாராட்டுக்கள்.
KEPA நிர்வாகிகளே!!! தொடர்ந்து உங்கள் சேவையினை உங்கள் பாதையிலேயே பயணியுங்கள். வருங்கால சந்ததியினர் நிச்சயம் உங்களை நினவு கூறுவர்.
Re:... posted byM.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா)[31 January 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32897
கட்டுரையாளருக்கு அரசியல் ஞானம் இன்னும் தேவை என்பது தெளிவாக தெரிகிறது. அவரது ஒற்றை குறிக்கோளான தமிழக முதல்வரை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிட வேண்டும் என்ற எண்ணம் அவரது அரசியல் முதிர்ச்சியற்ற கட்டுரையின் மூலம் தெளிவாகிறது.
அவர் பி.ஜெ.பி யின் செல்வாக்கை பற்றி அலசும் போது, ஊடகங்களில் வரும் செய்திகளை மையமாக வைத்து கருத்தை சொல்லியுள்ளார். மோடி அலை என்பதெல்லாம் சுத்த ஹம்பக். 4 மாநில தேர்தலை வைத்து அப்படி கணித்துள்ளார் என்று எண்ணுகிறேன்.
பி.ஜெ.பி.க்கு அந்த 4 மாநிலங்களில் மட்டும் தான் செல்வாக்கு. கூட குஜராத்தையும் சேர்த்து கொள்ளுங்கள். அந்த 5 மாநிலங்களில் உள்ள எம்.பி க்களின் கூட்டு தொகை கிட்டதட்ட 120 தான். ஆக அந்த 120 சீட்டும் 100% கிடைக்கும் என்று எண்ணுகிறீர்களா?.
மாநில தேர்தல் என்பது வேறு, பாராளுமன்ற தேர்தில் என்பது வேறு. தே.மு.தி.க வுக்கு 10% வாக்கு உள்ளது என்பதும் சுத்த ஹம்பக். தே.மு.தி.க - பி.ஜெ.பி யுடன் சேர்ந்தாலும் அக்கூட்டணி ஒரு இடத்தில் கூட ஜெயிக்காது. பி.ஜெ.பி க்கு முன்பைவிட கூடுதல் சீட் வரும் என்று சொல்கிறீர்களே!!!. அது எந்த அடிப்படையில் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
தங்கள் வாதபடி, ஒரு வேளை பி.ஜெ.பி. ஆட்சி அமைக்க முற்படுமானால், ஜெயலலிதா ஒருபோதும் ஆதரவு அளிக்க மாட்டார். ஆனால் கருனாநிதி ஆதரவு கொடுக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், சமீபத்தில் தான், மோடி நல்லவர், திறமையானவர் என்றெல்லாம் மோடிக்கு நற்சான்றிதல் அளித்தார். அவரது அமைச்சரவையில் பங்கு பெற்றவர் தான்.
குஜராத் கலவரம் நடக்கும் போது, அமைச்சரைவில் இருந்து கொண்டு, அச்சம்பவம் ஒரு மாநிலம் சம்பந்தபட்ட விவகாரம் அதில் எனது கருத்தை கூற முடியாது என்று சப்பைகட்டு கட்டியவர் தான். கட்டுரையாளர் ஏன் குஜராத் கலவரத்தையும் அதனால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை பற்றியும் கணிக்கவில்ல. ஆனால் அதிமுக பி.ஜெ.பி க்கு ஆதரவு அளிக்காது. ஏனெனில் பி.ஜெ.பி யின் ஆட்சியையே கவிழ்த்து காட்டி சாதனை படைத்தவர் ஜெயலலிதா அவர்கள்.
ஜெயலலிதா என்றைக்குமே நான் பிரதமராக வருவேன் என்று சொன்னதில்லை. நமது சொல்படி நடக்கும் ஆட்சி அமையும் என்று தான் சொல்லியுள்ளார். பொதுகுழுவில் தீர்மானம் போட்டது உண்மை. அது தொண்டர்களின் ஆசை. ஏன் அவருக்கு பிரமராக வருவதற்கு தகுதி இல்லையா? அல்லது வாய்ப்பு தான் இல்லையா?
தேவகௌடா, குஜரால், சரண்சிங், வி.பி.சிங், மொரார்ஜிதேசாய் போன்றோர் எப்படி பிரதமர் பதவிக்கு வந்தார்கள். இத்தேர்தலில் மாநில கட்சிகளின் ஆதிக்கம் தான் மேலோங்கும். ஜெயலலிதா பிரதமராக வரவும் வாய்ப்புள்ளது.
செய்தி: தி.மு.க. நகர முன்னாள் பொறுப்பாளர் காலமானார்! ஜன.14 காலை 10.30 மணிக்கு நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byM.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா)[13 January 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32473
அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
செய்தி: ஊண்டி ஆலிம் காலமானார்! ஜன. 11 காலை 11.30 மணிக்கு சிறுநெய்னார் பள்ளியில் நல்லடக்கம்!! திரளானோர் பங்கேற்பு!!! (திருத்தப்பட்ட செய்தி!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byM.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா)[10 January 2014] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32369
அஸ்ஸலாமு அலைக்கும்.
ஆலிம் பெருந்தகையின் வஃபாத் செய்தி அறிந்து மிக்க கவலை அடைந்தோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.
மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.
Re:... posted byM.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா)[27 December 2013] IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 32196
நண்பர் ஷுஐபுவின் ஆக்கம் மிக எதார்த்தமாகவும், நகைச்சுவை கலந்ததாகவும் இருந்தது. வாழ்த்துக்கள். பல கல்யாண சோத்து கார்டு தனக்கு வரவில்லை என்ற அங்கலாய்ப்பு, மனக்குறை இருப்பதாக தெரிகிறது. கவலை வேண்டாம் நண்பா.... இனி வரும் காலங்களில் எல்லா கல்யாண சோத்து கார்டும் சேர்ந்தே வரும் என்ற நம்பிக்கை உண்டு. ஹா.. ஹா... ஹா....
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross