Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:08:50 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13695
#KOTW13695
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, மே 11, 2014
ஹாங்காங் பேரவை செயலரின் தந்தை ஹாங்காங்கில் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5880 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (39) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.ஜெ.முஹம்மத் பாக்கர் (கைபேசி எண்: +852 6079 7474) தந்தை - காயல்பட்டினம் எல்.எஃப். வீதியிலுள்ள புளியங்கொட்டையார் குடும்பத்தைச் சேர்ந்த ஹாஜி ஜெ.ஏ.செய்யித் முஹம்மத் ஜலீல் என்ற (J.A.S.M.Jaleel), இன்று (மே 11 ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு 02.30 மணியளவில் - ஹாங்காங்கில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. அன்னார், மர்ஹூம் ஏ.கே.பாக்கர் ஆலிம் அவர்களின் சகோதரர் மகனும், மர்ஹூம் ஏ.கே.ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் மகனும்,

மர்ஹூம் எம்.எஸ்.எம்.இக்பால் அவர்களின் மருமகனாரும்,

சமூக ஆர்வலர் ஜெ.ஏ.முஹம்மத் லரீஃப் (கைபேசி எண்: +91 98421 83419) அவர்களின் சகோதரரும்,

காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயலாளர் எஸ்.எம்.ஜெ.பாக்கர், எஸ்.எம்.ஜெ.ஜெய்னுல் ஆபிதீன், எஸ்.எம்.ஜெ.முஹம்மத் இக்பால் ஆகியோரின் தந்தையும்,

ஊண்டி எம்.ஓ.செய்யித் முஹம்மத் என்பவரின் மச்சானும்,

ஹாஜி எம்.ஐ.முஹம்மத் ஷம்சுத்தீன், ஹாஜி எம்.ஐ.ஷேக் முஹம்மத் ஸாலிஹ், வழக்குரைஞர் எச்.எம்.அஹ்மத் ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும்,

எஸ்.ஏ.முஹம்மத் உமர், எஸ்.ஏ.அப்துல் காதிர் ஆகியோரின் மாமாவும்,

எம்.பி.செய்யித் முஹம்மத் ஜலீல் என்பவரின் பாட்டனாருமாவார்.

நல்லடக்கம் ஹாங்காங்கில் நடைபெறும். நேரம் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

தகவல்:

காயல்பட்டினத்திலிருந்து...
ஹாஃபிழ் S.M.S.மஹ்மூத் ஹஸன்
J.A.லரீஃப்


ஹாங்காங்கிலிருந்து...
ஹாஃபிழ் B.S.முஹம்மத் அல்அமீன்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 19:54 / 11.05.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by syedahmed (GZ,China) [11 May 2014]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 34879

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தையும் நல உயர் பதவியையும் அருள்வானாக ஆமீன். அன்னார் குடும்பத்தாருக்கு என் ஆறுதல் சலாம் தெரிவித்துகொள்கிறேன். அஸ்ஸலாமுஅலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. السلام عليكم ورحمة الله وبركاته
posted by M.S.Kaja Mahlari (Singapore) [11 May 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 34880

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் . ஹாஜி ஜெ.ஏ.செய்யித் முஹம்மத் ஜலீல் அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலைப்பட்டேன் .

மர்ஹூம் அவர்கள் எல்லா மக்களிடமும் சிரித்த முகத்துடனும், இனிமையாகவும் பழகும் சிறந்த நற்குண சீலர் . அவர்களை இழந்து வாடும் அன்னாரின் குடும்பத்தினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அல்லாஹ்விற்காக சப்ர் எனும் பொறுமையை கடைபிடிக்கும் படி அன்புடன் வேண்டுகிறேன் .

எல்லாம் வல்ல நாயனாகிய வல்ல அல்லாஹுத்தாலா அன்னாரின் குற்றங்கள், குறைகளை மன்னித்து , அவர்களின் கப்ரை ஒளிமயமாக்கி , கேள்விகணக்கை இலேசாக்கி , நாளை மறுமையில் அண்ணல் நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் சபாஅத் எனும் பரிந்துரையைப் பெற்று அன்னாருடன் ஜன்னத்தில் குடியமர நல்லருள் புரிவானாக ! ஆமீன் !!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Shaik Dawood (Sharjah) [11 May 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34881

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Wafath of Jaleel Kaka
posted by Ziaudeen Mahmood (HK) [11 May 2014]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 34882

Innaa lillaahi wa innaa ilaihi rajioon.

May the Almighty forgive his sins and place him in Jannathul Firdaus. Ameen.

I convey my salam to the family members.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கடும் அதிர்ச்சி...
posted by S.K.Salih (Kayalpatnam) [11 May 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 34883

மிகவும் அன்பானவர். இயல்பாகப் பேசக் கூடியவர்.

பொதுவாக ஒருவரது முகவோட்டத்தை வைத்து அவரது உணர்வுகளைக் கணித்து விடலாம். இந்த நல்லவரிடத்தில் அவ்வாறு கணிப்பது கடினம். அவர்களின் குரலில் இருக்கும் ஏற்ற இறக்கத்தை வைத்துதான் உணர்வுகளைக் கணிக்க இயலும். முகத்தை வைத்து கணிக்க நினைத்தால், எப்போதும் அவர்களது முகத்தில் நிலைத்திருக்கும் புன்னகையை மட்டுமே கண்டு ஏமாந்து போவோம்...

எல்லோரையும் மதிக்கத் தெரிந்தவர். குரலுயர்த்திப் பேசத் தெரியாதவர். நம் ஊரில் பெரும்பாலும் அனைவரது குடும்ப உறவுகளையும் நன்கு அறிந்து வைத்திருந்தவர். தொடர்புடைய குடும்பத்தினருக்கே அது தெரியாவிட்டாலும், விளக்கித் தெரியப்படுத்தி இன்பம் காண்பவர்.

நமதூரில் ஒற்றுமை தழைக்க தனது எண்ணங்கள், பேச்சு, செயல் ஆகியவற்றால் ஒத்துழைத்தவர். அதே நேரத்தில் நியாயமான புரட்சிகளுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளையும் அளித்தவர்.

நமதூரோடு என்றென்றும் பின்னிப் பிணைந்திருந்தவர். அதன் காரணமாகத்தான், ஊரை விட்டு ஹாங்காங் சென்ற நிலையிலும், நேற்று நண்பகல் - அதாவது அவரது இவ்வுலக வாழ்வின் கடைசி நாள் வரை காயல்பட்டணம்.காம் -இல் செய்திகளுக்குக் கருததுப்பதிவு செய்துகொண்டிருந்தார். சுருங்கக் கூறின், நேற்று வரை ஊடகவழியே என்னோடு உரையாடிக் கொண்டிருந்தவர்...

அண்மைக் காலமாக, இந்த இணையதளத்தில் நான் செய்தியை வெளியிட்டதும் துவக்கமாக அவர்களது கருத்துதான் அச்செய்தியை அலங்கரிக்கும். அவரது ஒவ்வொரு கருத்திலும் சமூக ஒற்றுமை - நல்லிணக்கத்தின் மீதான ஏக்கம் தெளிவுற தென்படும்.

அவர்கள் ஹாங்காங் சென்ற நாள் முதல் இத்தளத்தில் தொடர்ந்து கருத்து வெளியிடுவதைக் கண்டு பழகிப்போன எனக்கு, நேற்று வரை நான் ஒவ்வொரு செய்தியையும் வெளியிடும்போதெல்லாம் - அவர்களின் கண்ணியமிகுந்த கருத்து எப்போது வரும் என மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது... இனி அவை கனவில் மட்டுமே சாத்தியம்.

தனிப்பட்ட முறையில் எனக்கு பல நல்ல விஷயங்களை - காணும்போதெல்லாம் போதித்துக் கொண்டே இருந்தவர். நமது நகர்மன்றத் தலைவர் சகோதரி ஆபிதா ஷேக் அவர்களின் தந்தையார் மர்ஹூம் பாளையம் இப்றாஹீம் மாமா அவர்களைப் போலவே இவர்களும் என்னைக் காணும்போதெல்லாம் அழைத்தழைத்துப் பேசி மகிழ்ந்தவர் - மகிழ்வித்தவர்.

தானத்தில் சிறந்த குடும்பத்திற்குச் சொந்தக்காரர். நமதூர் பேருந்து நிலையம், கால்நடை மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம் அமைந்துள்ள இடங்கள் இவரது குடும்பத்தினர் நகர்நலன் கருதி பிரதிபலன் எதிர்பாராமல் தானமாக அளித்தவை.

காயல்பட்டினம் அரசு மருத்துவமனையின் மேல் பாதி நிலத்தை, எனது பாட்டனார் (எனது தந்தை மர்ஹூம் எல்.எல்.ஷாஹுல் ஹமீத் எஸ்.கே. அவர்களின் தந்தை) மர்ஹூம் எஸ்.கே.முஹம்மத் லெப்பை மற்றும் அவர்களது சகோதரர்களால் தானமாக வழங்கப்பட்ட செய்தி இன்று கல்வெட்டுகளில் காணக்கிடைக்காதபோதினும், இவர்களும், மர்ஹூம் பாளையம் இப்றாஹீம் மாமா அவர்களும் வாய்ப்பு கிடைத்த இடங்களிலெல்லாம் உரக்கச் சொல்லி மகிழ்ந்தவர்கள்.

“நமது சரித்திரங்களை நாம் பாதுகாக்கத் தேவையில்லை என்று நினைத்தால் அதைப் பெருந்தன்மை எனலாம்... நமது தாய் - தந்தையர், பாட்டனார் உள்ளிட்ட முன்னோர் செய்த சேவைகளை நம் காலத்தில் நாம் பதிவு செய்வது நமது கடமை. அதன் காரணமாக, பலருக்கு நம் குடும்பத்தின் மீது பாசமும், அன்பும் ஏற்படும்... இந்நகரில் நமது பாரம்பரியம் நிலைபெறும்... எல்லாவற்றையும் தாண்டி, அவர்கள் துஆ செய்தால் - ஏன், முன்னோர்களின் தானங்களால் பெறப்பட்ட இடங்களில் நின்று அவர்களை நினைத்தாலே, அதன் நன்மைகள் நம் முன்னோர்களுக்குச் சென்று சேரும்...

இதை செய்யத் தவறினால், நம்மை வளர்த்து ஆளாக்க தம் வாழ்நாட்களையெல்லாம் அர்ப்பணித்த முன்னோருக்கு நாம் நன்றி கெட்டவர்களாகிவிடுவோம்” என அச்சமூட்டி எச்சரித்தவர்கள்தான் இவ்விருவரும்.

எழுத, எழுத சொற்கள் முடிவுக்கு வர மறுக்கிறது... ஜலீல் மாமா அவர்கள் இறைக்கட்டளையை ஏற்று இவ்வுலகை விட்டும் மறைந்துவிட்ட செய்தியைக் கேள்வியுற்றதும் என்னையுமறியாமல் என் கண்கள் பணித்தன... மனம் அதை நம்ப மறுக்கிறது...

எனக்கே இப்படியெனில், அவர்களது இரத்த உறவுகளின் மனம் என்ன பாடுபடும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அல்லாஹ்தான் அனைவருக்கும் பொறுமையைக் கொடுக்க வேண்டும்.

மர்ஹூம் ஜலீல் மாமா அவர்கள் தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளை வல்ல அல்லாஹ் பொருத்தருளி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீனோடு இணைந்திருக்கும் பாக்கியத்தை அவர்களுக்கும், நமக்கும் வழங்கியருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார் உள்ளிட்ட அனைவருக்கும் அல்லாஹ் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை வழங்கியருள்வானாக...

அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்...

கண்ணீருடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எம்.எல்.ஷாஹுல் ஹமீத் (எஸ்.கே.) குடும்பத்தினர்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்னா லில்லாஹி ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [11 May 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34884

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்

வல்ல நாயன் , அன்னாரை இழந்து வாடும் அவரது சகோதரர் J.முஹம்மது லரீப் , மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் சபூர் எனும் பொறுமையை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...திக்கு தெரியாத காட்டில்...
posted by mackie noohuthambi (chennai) [11 May 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34885

அன்புள்ளம் கொண்ட ஜலீல் அவர்களின் வபாத் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. நேற்று முன்தினம் வரை அவரது விமர்சனங்கள் இந்த இணையத்தளத்தில் வெளிவந்து கொண்டிருந்தன.

1983ம் ஆண்டு. எனது சவூதி பயணத்தின் ஆரம்ப காலம். திக்கு தெரியாத காட்டில் திசை தெரியாமல் நின்றபோது என் தோளில் கைபோட்டது ஒரு உருவம். அது வெள்ளிக் கிழமை ஜும்மா தொழுகை நாள்தான் ஆனால் எனக்கு இங்கு யாராவது நமதூர் பிள்ளைகள் வந்திருக்க மாட்டார்களா என்ற ஏக்கப் பெருமூச்சு நாள். என் தோள் பற்றிப் பிடித்தது நண்பர் ஜலீல் அவர்கள்தான்.

நான் சவூதியில் தம்மாமில் காலெடுத்து வைத்த நாளில் முதலாவது சந்தித்தது அவரைத்தான். எங்கள் நட்பு அன்று முதல் தொடர்ந்தது. எங்கு கண்டாலும் என்னுடன் ஒரு உரையாடல். அது ஊர் நலம் பற்றி அல்லது காயல் நல மன்றம் பற்றி அல்லது என்னுடைய இணையதள கருத்துக்கள் பற்றிய பாராட்டுக்கள்.

நீதி கேட்டு நெடிய பயணம் வந்த கலைஞரின் காயல்பட்டின வருகையின்போது "என் தந்தை கலைஞருக்கு கைத்தடி கொடுக்க முயற்சி செய்தவன் நான்" என்ற செய்தி எனக்கு எப்போதோ மறந்து விட்டது. இதே இணைய தளத்தில் அந்த ரகசியத்தை நினைவு கூர்ந்து தேர்தல் கால நினைவலைகளில் என்னை ரகசிய கண்காணிப்பு கேமரா மூலம் உன்னிப்பாக கவனித்தவர்.

பேசுவதும் மென்மை - பேச்சிலும் மென்மை -கனிவு -இவற்றைக் குழைத்து எனக்கு ஊட்டிய நண்பர். புளியங் கொட்டையார் குடும்ப பெரியவர்கள் நமதூருக்கு செய்துள்ள சேவைகளை - வாரி வாரி வழங்கிய வளமிக்க நிலங்களைப் பற்றி அவர் என்னிடம் நிறையவே சொல்லி அதிசயிக்க வைத்தவர். எங்கள் வாப்பா மக்கி ஆலிம் அவர்களுக்கும் இந்த குடும்பத்துக்கும் இருந்த நெருக்கம் நான் கண்டியில் படித்தபோது HUSSAINIYA JEWELLERY போகும்போதெல்லாம் வெளிப்படும்.

வேறு எதுவும் எழுத தோன்றவில்லை.

மர்ஹூம் அவர்களின் பிழைகளை அல்லாஹ் பொறுத்து அருள்வானாக. அவர்களின் நற்செயல்களை பொருந்திக் கொள்வானாக. அவரது மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக. மேலான சுவன பதியில் வாழ செய்வானாக. இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by MOHAMED ABDUL KADER K.M. (Dubai - UAE) [11 May 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34886

It is indeed shocking news to hear about the sudden demises of Jaleel Kaka. Inna Lillahi Wa Inna Ilaihi Raajioon.

May Almighty Allah forgive his sins and accept his good deeds and grant jannah. May his soul rest in eternal bliss. May Allah give enough strength and SABRAN JAMEELA to the bereaved family members to bear this irreversible loss. AMEEN.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH- KSA) [11 May 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34887

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைதனை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by Mauroof (Dubai) [11 May 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34889

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by சாளை S.I. ஜியாவுத்தீன் (அல்கோபார்) [11 May 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34890

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை S.I. ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்
posted by Abdulkader ThaikaSahib MSS (Riyadh (KSA)) [11 May 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 34891

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களது பிழைகளைப் பொறுத்து, அவர்களுக்கு மேலான சுவனப்பதியினை அளித்திட பிராத்தனை செய்கிறோம்.

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினர்கள் யாவருக்கும் எமது ஸலாம் السلام عليكم و رحمت الله و بركاته

M .N . சதக்கத்துல்லாஹ் மற்றும் குடும்பத்தினர்
தைக்கா தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by MN ABDUL CADER (chennai) [11 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34892

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தையும் நல உயர் பதவியையும் அருள்வானாக ஆமீன். அன்னார் குடும்பத்தாருக்கு என் ஆறுதல் சலாம் தெரிவித்துகொள்கிறேன். அஸ்ஸலாமுஅலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by Eassa Zakkariya (Jeddah) [11 May 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 34893

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தையும் நல உயர் பதவியையும் அருள்வானாக ஆமீன். அன்னார் குடும்பத்தாருக்கு என் ஆறுதல் சலாம் தெரிவித்துகொள்கிறேன். அஸ்ஸலாமுஅலைக்கும்

கிருபை உள்ள ரஹ்மான் அன்னவர்களின் கப்ரை ஒளி பெரசெயவனாக- ஆமின்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [11 May 2014]
IP: 5.*.*.* | Comment Reference Number: 34894

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by S.H. SEYED IBRAHIM (RIYADH. K.S.A.) [11 May 2014]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34895

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

ஆழ்ந்த இரங்கலுடன்,

சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. மர்ஹூம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு , மிகவும் வருத்தப்படுகிறோம்
posted by Hussain Hallaj (Qatar) [11 May 2014]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 34896

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்…

மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை அல்லாஹுதஆலா கொடுப்பானாக… ஆமீன்…


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by A.S.KALEELUR RAHMAN (AL-HASA- K.S.A.) [11 May 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34898

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [11 May 2014]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 34899

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [11 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34900

انالله و انا اليه راجعون

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவனபதியாகிய ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக- ஆமீன்

மர்ஹூம் அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by abdul jaleel (JEDDAH SAUDI ARABIA) [11 May 2014]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34901

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by Meera Sahib (kayalpatnam) [11 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34902

இன்னலிள்ளஹி வ இன்னா இலஹி ராஜிஊன் . இனிய நண்பரது மறைவு அறிந்து அதிர்ச்சி அடைந்தேன் . இறை நாட்டத்தை ஏற்று நாம் சபூர் செய்வோம் . அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...ஜலீல் காகா
posted by hylee (colombo) [11 May 2014]
IP: 220.*.*.* Sri Lanka | Comment Reference Number: 34903

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. இன்னாலில்லாஹி
posted by NIZAR (KAYALPATNAM) [11 May 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 34904

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக ஆமீன்,,,

அன்னாரை இழந்து வாடும் அவரது மக்கள் மற்றும் சகோதரர் J.முஹம்மது லரீப், அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெர்வித்து கொள்கிறேன்.

இறைவன் சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை அவர்கள் குடும்பத்துக்கு கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Muhammad Ibrahim (Guangzhou (China)) [11 May 2014]
IP: 107.*.*.* United States | Comment Reference Number: 34905

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...மக்பிரத்துக்கஹா துஆ செய்யுங்கள்.
posted by Mohamed Abul Qasim S I (Ahmedabad) [11 May 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34906

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி வூன் . எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களுடைய மன்னரை வாழ்வை ஒளிமயமாக்குவானாஹா ஆமீன்.

அவர்களுக்கு சொர்கத்தை பரிசளிபபானஹா ஆமீன்.

அன்னாரது குடும்பத்தார்ஹலுக்கு பொறுமையை கொடுப்பனஹா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by sithi katheeja (kayal patnam) [11 May 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 34915

அன்புக்குரிய ஜலீல் காக்காவின் மரனச் செய்தி கேள்விப்பட்டு மிகுந்த கவலை அடைந்தோம். அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து சபூர் செய்து கொண்டோம் .யா அல்லா மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான சுவனப் பதியில் நுலையச் செய்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:...
posted by S.M.B Faizal (Doha-Qatar) [11 May 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 34916

அஸ்ஸலாமு அழைக்கும்

إنّـا لله وانّـا اليـه راجعـــون

أللّـهـــم اغفـر له وارحمـــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் நல்லமல்களை ஏற்று மேலான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்து வைப்பானாக, ஆமீன்.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by M.I.மூசா நெய்னா (காயல்பட்டணம்) [11 May 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34918

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹீம் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. நல்ல பண்பாளரை நாம் இழந்தோம்..
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [11 May 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34920

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

நல்ல பண்பாளரை நாம் இழந்தோம்.. நல்ல பல விசியங்களை மனம் திறந்து பேசக்கூடியவர்.

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவனபதியை கொடுத்து அருள்வானாக. ஆமீன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:...
posted by Mohamed Azib (Holy Makkah) [11 May 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 34921

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தையும் நல உயர் பதவியையும் அருள்வானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:...condolence
posted by s.d.segu abdul cader (quede millath nagar) [12 May 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34927

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJ

IOON. May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter.v
அஸ்ஸலாமு அலைக்கும் 

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

_ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே! 

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ 

20:55. இப் பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்;அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம். 

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

Wassalam.

S.D.Segu Abdul Cader.
Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:...
posted by V D SADAK THAMBY (Chennai) [12 May 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 34931

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் . அன்னாரின் குடும்பத்தினருக்கு அல்லாஹ் சபூர் என்னும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:...
posted by Shaikna Lebbai (Singapore) [12 May 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 34932

Inna lillahi wa inna ilaihi raajiyun. May Allah forgives his sins and grant him jannathul firdhouse.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. இன்னா லில்லாஹி
posted by KADER SHAMUNA (VIJAYAWADA) [12 May 2014]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 34933

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக ஆமீன்,,,

அன்னாரை இழந்து வாடும் அவரது மகன் நண்பன் முஹம்மது பாக்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் என் குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தை தெர்வித்து கொள்கிறேன்.

இறைவன் சபுரன் ஜமீலா என்ற அழகிய பொறுமையை அவர்கள் குடும்பத்துக்கு கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:...
posted by ceylon fancy kazhi (Thiru valla , kerala) [12 May 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 34938

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, ஆமீன்.

சிலோன் பேன்சி காழி ,
திருவல்லா ,
கேரளா ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:...
posted by mohamed salih (chennai) [12 May 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 34942

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்கத்தையும் நல உயர் பதவியையும் அருள்வானாக ஆமீன். அன்னார் குடும்பத்தாருக்கு என் ஆறுதல் சலாம் தெரிவித்துகொள்கிறேன். அஸ்ஸலாமுஅலைக்கும்.
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ்
மற்றும் ஊண்டி குடும்பத்தார்
காயல்பட்டணம் .. நைனா தெரு ..
மர்ஹூம் ஊண்டி சாலிஹ் அப்பா குடும்பத்தார் ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha) [12 May 2014]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 34943

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை வசந்தமாக - ஒளிமயமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் லரீஃப் காக்கா மற்றும் மர்ஹூம் அவர்களின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக! ஆமீன். அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
posted by yahya mohiadeen (dubai) [12 May 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 34944

"எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களை அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் வீற்றிருக்க செய்வானாக ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, அல்லாஹ் அவனது மேலான பொறுமையை வழங்குவானாக ஆமீன்.

யஹ்யா முஹியத்தீன்
சொளுக்கார் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved