எனது ஆழ்ந்த இரங்கல் posted byHameed.S.A.C (Abu Dhabi)[16 December 2015] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42450
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜி'ஊன்.
எல்லாம் வல்ல இறைவன் சகோதரி அவர்களின் நற்செயல்களை ஏற்பானாக,
அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத் தருள்வானாக! ஆமீன்.
மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் இந்திய யூனிய முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் அன்பு சகோதரர் K.A.M. அபூபக்கர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் வலிமையைத் தந்தருள்வானாக! ஆமீன்.
எனது ஆழ்ந்த இரங்கல்கள் posted byS.A.C.ஹமீத் (அபு தாபி)[15 June 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35323
கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் அனைத்துப் பிழைகளையும் மன்னித்து, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர் சுவனத்தில் நல்லோருடன் இணைந்திருக்கச் செய்வானாக...
அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார்களுக்கும் சகோதரர்கள் அப்துல் காதிர், மஹ்மூது நெய்னா, மகுதூம், அபு பக்கர், அஹமது நெய்னா, அன்புத் தம்பி இஸ்மாயீல் யாவருக்கும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன் எனது அன்பும் சலாமும்.
யாதோன் கீ பராஅத்.... posted byS.A.C.ஹமீத் (அபூ தாபி)[21 June 2013] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 28195
ரஃபீக், மொபைலில் Reminder வைத்து, இன்று வெள்ளிக்கிழமையாதலால் தங்கள் கட்டுரையை பொறுமையாக நிதானமாக ர்சித்து படித்து முடிந்தது. கட்டுரையை படிக்க படிக்க ஏனோ என் நினைவுத் திரைகளில் தங்கள் ஒவ்வொரு பாராவும் படமாக ஓடியதை என்னால் தவிர்க்க முடியவில்லை. (நான்காம் வகுப்பு வரை நானும் எல்கே ஸ்கூல் மாணவன்).
மொத்தத்தில் நம்மை கடந்து சென்று விட்ட காலத்தினை கச்சிதமாக கண் முன்னே நிழலாடச் செய்துள்ளீர். யாதோன் கீ பராஅத் (நினைவலைகளின் ஊர்வலம்). சபாஷ்!
எனது ஆழ்ந்த இரங்கல் posted byS.A.C.ஹமீத் (அபுதாபி)[04 May 2013] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27201
நண்பர் ரிஃபாயி அவர்களது மாமியாரின் மரணச் செய்தி மிகுந்த கவலை அளிக்கின்றது. (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்).
ஏகவல்லோனாகிய இறைவன் மர்ஹூமா அவர்களை பொருந்திக்கொள்வானாக. அவர்களுக்கு அழகிய சுவனபதியை நசீபாக்குவானாக. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினர் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக. ஆமீன் வஸ்ஸலாமு அலைக்கும்
அய்மான் சங்கத்தின் அனுதாபச் செய்தி posted byஅய்மான் சங்கம் (அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகம்)[18 January 2013] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25096
நமது அய்மான் சங்கத்தின் மார்க்கத்துறை செயலாளர் சகோதரர் ஹாஃபிழ் எஸ்.எம்.பி.ஹுஸைன் மக்கீ மஹ்ழரீயின் தந்தை ஹாஜி கத்தீப் எம்.எம்.செய்யித் முஹம்மத் புகாரீ நேற்று மாலை காலமானார்கள் என்ற செய்தி அறிந்து மிக்க துயருற்றோம். (இன்னாலில்லஹி வஇன்னா இலைஹி ராஜி’வூன்) .
செய்தி அறிந்தவுடன் அய்மான் தலைவர் மற்றும் நிர்வாகிகள் மக்கி ஆலிம் அவர்களை அபுதாபி இல்லத்தில் சந்தித்து ஆறுதல் கூறினர். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழை பொறுத்து உயர்வான சுவர்க்கபதியை அன்னாருக்கு அருள்வானாக. தங்கள் அருமை குடும்பத் தலைவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையையும் தைரியத்தையும் அருள்வானாக என இருகரமேந்தி பிரார்த்திக்கிறோம்.
எஸ். எ. சி ஹமீத்
பொதுச் செயலாளர்
அய்மான் சங்கம், அபுதாபி
நல்ல மனிதரை இழந்தோம்... posted byS.A.C. ஹமீத் (அபிதாபி)[12 September 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22050
அல்ஹாஜ் முஸ்தஃபா மாமா அவர்களது திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஹஜ் செய்வதற்கு பூரணமாக தயாரான நிலையில் வல்ல ரஹ்மான் அன்னாரை தன் புறத்தில் அழைத்துக்கொண்டு விட்டான்.
அன்னார் அருமையான குணநலன்களும், இர்க்க குணமும் பரந்த சேவை மனப்பான்மையும் கொண்டவர்கள் . அல்லாஹ் அவர்களை கருணையை கொண்டு பொருந்திக் கொள்வானாக.. அவர்களை இழந்து தவிக்கும் எனதருமை மைத்துனர் ரிஃபாயி, ஹாஃபிழ் குத்புதீன், ஜமால் ஆகியோருக்கும் ஏனைய குடும்பத்தினருக்கும் வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையையும் தைரியத்தையும் தந்தருள்வானாக.இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னரின் அன்பு குடும்பத்தாருக்கும், ஜெய்ப்பூர் காவா சங்கத்தினருக்கும் அபுதாபி அய்மான் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபத்தினை பதிவு செய்கிறது.
செய்தி: மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையில் மதரஸா கல்வி மேம்பாட்டுக்கான தேசிய ஆலோசனைக்குழு அமைப்பு உறுப்பினராக கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் நியமனம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...மனமார்ந்த வாழ்த்துக்கள் posted byS.A.C. ஹமீத் (அபுதாபி. )[04 September 2012] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21826
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் சகோ.அபூபக்கர் அவர்களுக்கு என் சார்பாகவும், அபுதாபி அய்மான் சங்கத்தின் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சுறுசுறுப்பும், துடிப்பும், ஆற்றலும், கண்ணியமும், சிந்தனை தெளிவும் மிக்க சகோ.அபூபக்கர் அவர்களே! தங்களது இந்த நியமனம் என்பது, ஏற்கனவே சமுதாயப் பணியில் பம்பரமாக சுழன்று கொண்டிருக்கும் தங்களுக்கு கூடுதல் சுமை மற்றும் பொறுப்புமாகும் என்பதனை நான் நன்கறிவேன்.
அவற்றையெல்லாம் தாண்டி அரசியல் மற்றும் சமுதாய வானில் தாங்கள் மென்மேலும் சாதனைகள் படைக்க எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு என்றென்றும் உதவி செய்வானக!
காயலர்களே! வருங்கால தேசியத் தலைவரை அடையாளம் கண்டு கொள்க! அவரை முழுமையாக ஆதரியுங்கள்.
Re:நீங்கள் எத்தனை மதிப்பெண்க... posted byHameed S.A.C. (Abu Dhabi)[28 June 2012] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19660
A. AUNG SAN SUU KYI
B. BORIS GELFAND
C. CROWN
D.DLF
E. EDISON, THOMAS ALVA
F.FACE BOOK
G. GREENWICH (MEAN TIME)
H. HEMISPHERE
I.ITALY
J.JAYARAM
K. KZ
L. LUXEMBURG
M.MITT ROMNEY
N.NEPHROLOGY
O.OMEGA
P.PUDUKOTTAI
Q.QIBLA
R.RAJ BHAVAN
S.SATYAMEV JAYATEY
T.TRANSIT OF VENUS
U.UNITED NATIONS ORGANIZATION
VINYL CHLORIDE
WIMBLEDON
X-RAY
YES
ZOOLOGY
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross