செய்தி எண் (ID #) 13917 | | |
ஞாயிறு, ஜுன் 15, 2014 |
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகக் குழு உறுப்பினர் பிரபு தம்பி காலமானார்! |
செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 6408 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (61) <> கருத்து பதிவு செய்ய |
|
காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிர்வாகக் குழு உறுப்பினர் - காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சேர்ந்த ஹாஜி பிரபு முஹ்யித்தீன் தம்பி என்ற பிரபுத்தம்பி ஹாஜியார், இன்று நண்பகல் 12:00 மணியளவில் காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 68. அன்னார்,
மர்ஹூம் பிரபு எம்.ஏ.மஹ்மூத் நெய்னா அவர்களின் மகனும்,
மர்ஹூம் எம்.ஏ.முஹம்மத் முஹ்யித்தீன் அப்துல் காதிர் அவர்களின் மருமகனாரும்,
ஹாஜி பிரபு எம்.என்.முஹம்மத் அபூபக்கர் மிஸ்கீன் ஸாஹிப், பிரபு செய்யித் அப்துர்ரஹ்மான் ஆகியோரின் சகோதரரும்,
ஹாஜி பி.எம்.டி.முஹம்மத் அப்துல் காதிர் (கைபேசி எண்: +91 97901 76850), ஹாஜி பி.எம்.டி.மஹ்மூத் நெய்னா, ஹாஜி பி.எம்.டி.மொகுதூம் முஹம்மத் (கைபேசி எண்: +91 94431 11325), பி.எம்.டி.முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக், ஹாஜி பி.எம்.டி.அஹ்மத் நெய்னா, பி.எம்.டி.செய்யித் இஸ்மாஈல் ஆகியோரின் தந்தையும்,
ஹாஜி எம்.எம்.எஸ்.அஹ்மத் முஹ்யித்தீன் என்பவரின் மாமனாரும்,
மர்ஹூம் அம்பலம் செய்யித் ஹுஸைன் மரைக்கார் ஸாஹிப், ஹாஜி ஹிட்லர் கத்தீப் ஷாஹுல் ஹமீத், மர்ஹூம் ஏ.எஸ்.அப்துல் ஹமீத் ஆகியோரின் மைத்துனரும்,
ஹாஜி கே.எஸ்.எச்.மஹ்மூத் நெய்னா (கைபேசி எண்: +91 94434 16029), ஓமன் காயல் நல மன்ற தலைவர் ஹாஜி கே.எஸ்.எச்.அப்துல் காதிர் (பாதுல் அஷ்ஹப்), அம்பலம் மொகுதூம் நெய்னா, ஏ.எச்.முஹம்மத் அபூபக்கர் ஸித்தீக், ஏ.எச்,மஹ்மூத் நெய்னா ஆகியோரின் தாய்மாமாவும் ஆவார்.
அன்னாரின் ஜனாஸா, இன்று (ஜூன் 15) இரவு இஷா தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
செய்தி & படங்கள்:
A.R.ஷேக் முஹம்மத்
[செய்தியில் கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 15:51 / 15.06.2014] |