Re:... posted byCnash (Makkah)[27 April 2016] IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43638
போட்டியிடும் வேட்பாளர்களில் ஒப்பீடு அடிப்படையில் அனிதா ஒரு நல்ல வேட்பாளர்.. நமது ஊருடன் தொகுதி மக்கள் உடன் எப்போதும் தொடர்பில் இருப்பவர்.. மாற்று வேட்பாளரை விட எந்த விதத்திலும் குறைந்தவர் இல்லை ...வென்றாலும் தோற்றாலும், வேறு கட்சிக்கு போனாலும் நம் மக்களுடன் இருப்பவர் என்ற முறையில் அனிதாவை மீண்டும் நாம் ஆதரிக்கலாம் ..காட்சி பாகுபாடு அற்ற முறையில்...
மேலே காக்கா கருத்தில் சொல்லுவது போல் ஆஹா, ஓஹோ என்று அவரையும் அவர் சார்ந்துள்ள தலைமையையும் புகழ்வதற்கு ஏதும் இல்லை . அதிலும் குறிப்பாக உண்மையான முஸ்லீம்கள் அவரை தான் ஆதரிப்பார்கள் என்று அவரை ஆதரிக்காதவர்களை பொய் முஸ்லிம்கள் என்று முத்திரை குத்தும் அதிகாரம் உங்களுக்கு யாரும் தரவும் இல்லை .. அதற்கான உரிமை யாருக்கும் இல்லை ..
தாரளாமாக அள்ளி கொடுத்து அழகு பார்த்தவர் என்றால் 1977 இல் இது வரை யாரும் கொடுக்காத அளவுக்கு ..திமுக காயிதே மில்லத் அவர்களிடம் பிடுங்கிய சீட்டை தந்து ..அப்துல்சமது தலைமையிலான முஸ்லீம் லீக் கட்சிக்கு கொடுத்து அழகு பார்த்தவர் அன்றைய முதல்வர் .. அசைக்க முடியாத முதல்வராக இருந்த எம்ஜியார் அவர்கள் தான் .ஆனால் நம்மவர்களின் திமுக பாசம் பசப்பு வார்த்தை ஜாலங்களில் மதி மயங்கிய சமுதாயம் அன்று ஒரு தொகுதி தவிர அனைத்து தொகுதிகளிலும் முஸ்லிம் லீக்கை தோற்கடித்து திமுகவை வெல்ல உதவியது ..பெரும்பான்மையுடன் எம்ஜியார் வென்ற போதும் .. அவரில் கூட்டணி முஸ்லிம் லீக்கை தோற்கடித்த பெருமை நம்ம சேரும்.. அப்போதெல்லாம் நாம அள்ளி தந்தார் ..கிள்ளி தந்தார் என்று பார்க்க மாட்டோம் . திமுக விற்கு ஆதரவு என்றால் கொடுத்து விட்டு போங்க .. அது உங்கள் உரிமை .. உண்மையான முஸ்லிம் ஆதரிப்பான் ..என்று சொல்ல உங்களுக்கு யார் உரிமை தந்தது ..
ஏன் இதே நடிகை அன்று திமுகவுடன் இருக்கும் போது ஊரில் ஓட்டு கேட்டு வர வில்லையா .. நீங்களும் பின்னால் செல்ல வில்லியா... அந்த நடிகையின் கணவரும் நாட்டமை நாயகனுக்கு அரசியல் அந்தஸ்து கொடுத்தது யார்.. அவரை திருநெல்வேலி தொகுதி எம்பி ஆக்கி நடிகன் என்பதை தவிர எந்த தகுதியும் இல்லாதவரை பார்லிமென்ட் க்கு கொண்டு சென்ற கட்சி எது என்று உங்களுக்கு தெரியாதா.. இன்று அவர் உங்கள் கட்சியில் இல்லை என்றால் அவர் இன்றைக்கு நடிகன் நடிகை .
யார் என்றே தெரியாத நெப்போலியன் என்ற நடிகனை நேருவின் மருமகன் என்ற காரணத்தால் மத்திய அமைச்சர் ஆக்கியது யாரு என்று தெரியாதா..?
ஏன் இந்த மச்சான் நடிகை தானே பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்ற பெயரில் குத்தாட்டம் போட்டு தலைவர் உக்காந்து ரசித்தரே .. அவர் கட்சிக்கு வந்து இருந்தா உங்க தலைவர் வேணாம் என்று சொல்லி இருப்பாரா..
ஒட்டு கேட்பதற்கும் ஆதரவு தெரிவிப்பதற்கும் ஆயிரம் காரணம் இருக்கும் போது தேவை இல்லாமல் மதம் மார்க்கம் இதை எல்லாம் இணைத்து பேச வேண்டாம் .. எவனும் நம் சமுதாயத்தை காக்க போவதில்லை .. அரசியல் அரசியல் தான் .. ஒட்டு வாங்கும் வரை . .ஏதோ நம்மை இவரால் வரும் .. தீமை இல்லை என்று நினைத்து ஆதரவு தெரிவித்து ஒட்டு போட்டு விட்டு போங்க .. வீணா அவன் உண்மையான முஸ்லிம் இவன் முஸ்லிம் இல்லை என்கிற வீண் சர்ச்சை செய்ய வேண்டாம் எனபது தாழ்மையான கருத்து ...
Re:... posted byCnash (Makkah)[20 August 2015] IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 41692
நேற்று முளைத்த கட்சி எல்லாம் எப்படியோ வளர்ந்து கொண்டு இருக்க ..நுற்றாண்டு பாரம்பரியம் மிக்க லீக் ஏன் எப்போதும் வீக்கா இருக்குது என்று யோசிக்கும் போது இது போன்ற வெத்து ஆர்பாட்டங்களை யாரையோ திருப்தி படுத்த அடிக்கடி செய்வதை நினைத்து விடை தெரிந்து கொள்வோம் .. இது தான் காரணம் இவர்கள் போன்றவர்கள் தான் காரணகர்த்தா என்று !!!
Re:... posted byCnash (Makkah )[16 April 2015] IP: 213.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40158
இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் .
அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மேலான ஜன்னத்துல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக
அவர்களை இழந்து வாடும் நண்பன் சர்ஜூன் மற்றும் குடும்பத்தார்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை கொடுத்தருள்வானாக .
இம்மையில் அவர் காத்த பொறுமைக்கும், பட்ட கஷ்டங்களுக்கும் அல்லாஹ் இவரின் மறுமை வாழ்வை சிறப்பாக்கி வைத்து உயர்த்த நிலையை சுவர்க்கத்தில் அளிப்பானாக! ஆமீன் ..
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்று, பிழைகளை பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.
நண்பன் ஹத்தாத் உடைய அன்பு தந்தையின் பாவங்களை அல்லாஹ் மன்னித்து அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த மறுமை வாழ்வை அளிப்பானாக ஆமீன்.
ஒழுக்க விஷயத்திலும் மார்க்க விஷயத்திலும் மிகவும் கண்டிப்பான தந்தை, அவன் வீட்டு முன் நாங்கள் அரட்டை அடித்து கொண்டு இருக்கும் போது அவர்களை கண்ட உடன் சைக்கிள் திருப்பி கொண்டு ஓடி விடுவோம்.. கண்ணியமான மனிதர் ..
அல்லாஹ் அவர்கள் மண்ணறையை பிரகாசமாக்கி வைப்பானாக ஆமீன் . நண்பன் ஹத்தாத் மற்றும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக! ஆமீன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross