செய்தி: லட்சக்கணக்கானோரது கண்ணீருக்கிடையே கலைஞர் மு.கருணாநிதியின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம்! காயல்பட்டினத்தில் கடைகள் அடைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நன்றியுடன் நினைவு கூறல் வேண்டும்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[09 August 2018] IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 46244
ஒரு சரித்திரம் சரிந்துவிட்டது.சாமான்ய,தாழ்த்தப்பட்ட ,பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் காவல்சிங்கம் தன் கடமையை முடித்துக்கொண்டு வெளிவரமுடியா கூண்டுக்குள் சென்றுவிட்டது!
தானைத்தலைவர் தன் வாக்குறுதியை என்றும் காப்பாற்றுவார் என்பதற்கோர் எடுத்துக்காட்டு, அறிஞர்அண்ணா மறைவன்று சொன்னது, அருமையண்ணா உன் இதயத்தை எனக்கு இரவலாக தந்துவிட்டு செல், அதை நான் வரும்பொழுது உன் காலடியில் சேர்ப்பிக்கிறேன்,
என்ற வாக்குறுதியை காப்பாற்றினார்!
குப்பைமேட்டு காகிதம் கோபுரத்தில் ஒட்டிக்கொண்டு,கோமானுக்கு இடமில்லை என்று இருமாப்புடன்,எகத்தாளம் செய்தது, ஆம் அது தன் ஆசானின் ஆணைக்கேற்ப ஆடியது!
நீதி எதுவோ அதுவென்றது,ஒருவேளை தீர்ப்பு மாறி இருந்தால்,இந்த தமிழகம் என்ன நிலைக்கு ஆளாகி இருக்கும் என்பதற்கு அத்தானைத் தலைவனின் இலட்சசோப இலட்ச இறுதிஊர்வல உணர்ச்சிமிகு மக்கள் கூட்டமே சாட்சி.
அத்தனை ஊடகங்களும் நேரடி ஒளிபரப்பு,கிட்டத்தட்ட அத்தனை பேர்கள்
இடமும் ஆன்ட்ராய்டு கை அலைபேசி,இத்தனை வசதிகள் இருந்தும், அருமைத்தலைவனை அருகே பார்க்கவேண்டுமென அலையலையாய் ஆர்ப்பரித்த கண்ணீர்கடல்!
"இட ஒதுக்கீடு பெறுவதில் எவ்வளவு இடையூறுஇருப்பதென்பதை இப்பொழுதாவது உணர்தாயா உடன்பிறப்பே!
உனக்கு பெற்றுதந்ததில்மட்டுமல்ல எனக்கு நானே பெறுவதிலும்கூட"
என்ற அன்புத்தலைவரின் மானசீககுரல் ஒலித்துக்கொண்டே இருப்பது போன்ற ஓர் உணர்வு!
இதுவரையாண்ட எந்த முதலமைச்சராலும் கொடுக்கமுடியாத, கொடுப்பதற்கு தடையாயும் இருந்த அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்த தானைத்தலைவர் இஸ்லாமியர்களுக்கு 3.1/2 % சதவீதம் இடஒதிக்கீட்டை கொடுத்து நம்மனைவரின் இதயத்தையும் குளிர வைத்த கோமானை,நம் நாடிநரம்பு இதயத்துடிப்பு நிற்கும்வரை நன்றி உணர்வோடு நினைப்பதுதான் ஒவ்வொரு இஸ்லாமியருக்குமோர் அழகாகும்!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[09 July 2018] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46206
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்!
உண்மையிலேயே ஹலீம் ஹாஜியார் அவர்கள் சேவை செம்மல்தான்.எப்பொழுது பார்த்தாலும் சங்கையான தோற்றம்,சிந்தனைகலந்த சிரிப்பு தவழும் முகம்!
இறையில்லங்களாகிய சென்னை அ.நா.தெரு மஸ்ஸிதே மாமூர் பள்ளிவாசல் மற்றும் நம்மூர் தாயும்பள்ளி வாசல்களை தன் தலைமை பொறுப்பேற்று நடாத்தி வந்ததோடு மட்டுமல்ல,மற்றவர்கள் மனமார புகழ்ந்திட அப்பள்ளிகளுக்கு பேரும்,புகழும் சேர்ந்திட ஒரு புண்ணியப்பணி பாலமாக திகழ்ந்த மாமனிதர்!
இன்றய காலகட்டத்தில் ஒருசிலர் ஒரு10ஆயிரம் ரூபாயக்கூட தன் மகனை நம்பியோ,தன் தந்தையை நம்பியோ ஏன் தன்மனைவியை நம்பியோ கூட கொடுக்க தயங்குகிறார்கள் என்ற சூழ்நிலை செய்திகளை நாம் கேட்கிறோம். எவரொருவருக்கும் அந்த எண்ணம் இமியளவும் எழாமல் எல்லாம் வல்ல அல்லாஹ் காப்பாற்றுவானாக ஆமீன்!
ஆனால்தன்னுடைய கோடிக்கணக்கான சொத்துக்களையும்,பணத்தையும், ஹாஜியார் நீங்கள் இதை காபந்துபண்ணி பெறுப்பேற்று அச்சொத்துக்குள்ள வாடகையையும்,அப்பணத்திற்கு பொருத்தமான,பெறுமதியான சொத்துக்களையும் வாங்கித்தாருங்கள் என்று ஒரு சிறு எழுத்து ஆதார நம்பிக்கையைக்கூட பெறவிரும்பாமல் அப்படியே ஹலீம் ஹாஜியார் அவர்களிடம் கொடுத்திட்ட கண்ணியமிகு காயலர்கள் இன்றும் வெளிநாட்டிலும்,உள்நாட்டிலும் இருக்கிறார்கள்!
அத்தனை அமானித சொத்துக்களையும் அவ்வுரிமையாளர்கள் மனம்மகிழ, அவர்களுக்கு சிறு சேதாரம்கூட இல்லாமல்,ஆதாயமாக அள்ளிக்கொடுத்து பரிபாலித்த புண்ணியமிகு கண்ணியைவான்,நற்குண, நேர்மைக்கோர் மேற்கோளாகிய மனிதருல்மாணிக்கமான ஒரு மாணிக்கத்தை இழந்துவிட்டோம்!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லாப்பாவங்களை மன்னித்து,ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[25 June 2018] IP: 51.*.*.* United Kingdom | Comment Reference Number: 46197
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்!
ஓட்டுனர் எவ்வளவு கெட்டிக்காரராக இருந்தாலும்,கண் சொருகுதுமாதிரி உணர்ந்தால்,உடனே வண்டியை ஓரம்கட்டி விட்டு ஒரு 10 நிமிடம்,அல்லது 5 நிமிடமாவது கண்ணுயர வேண்டும்.சமாளித்து கொண்டுபோய் விடலாம் என்றால்,அதுதான் மிகப்பெரிய விபத்துக்கு வித்தாகிவிடும்.5 நிமிடம் அயர்ந்தால் 1/2 மணி நேரமும்,10 நிமிடம் கண் துஞ்சினால் குறைந்தது
2 மணிநேரம் வரை சுறுசுறுப்பாக வண்டியை ஓட்டலாம்!
எல்லா வாகன ஓட்டுனர்களையும் "எமன்" பிடிக்கும் நேரம் அதிகாலை 4.1/2 மணியிலிருந்து 7 மணிவரை. இரவுமுழுதும் ஒட்டிய ஓட்டுனர், இந்த நேரத்திலும் தொடர்ந்து ஓட்டினால்,அவர் அதிர்ஷ்டமாக உயிர்பிழைத்து வாழ்கிறார் என்பதுதான் நிதர்சனமான உண்மை!
செய்தி: அல்ஜாமிஉல் அஸ்ஹர் செயற்குழு உறுப்பினர் சென்னையில் காலமானார்! ஏப். 07 அன்று அஸ்ர் தொழுகைக்குப் பின் காயல்பட்டினத்தில் நல்லடக்கம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜஹூன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[06 April 2018] IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 46116
என் பாசத்திற்கும்,பண்பிற்கும்,மரியாதைக்குரியவரான கியாது சேட் அவர்கள் வபாத்தான செய்தியறிந்து சொல்லணா வேதனையால் வெதும்பினேன்!
அந்த புண்ணியவானைப்பற்றிய ஒருசில உண்மைவரிகள்: நான் இன்றுவரை அரபுநாட்டில் இருந்துகொண்டு பல லட்சங்களை சம்பாத்தித்து என் குடும்பத்தார்கள் அனைவர்களையும் வாழவைத்து நானும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றால்,அதற்கு முதல் முழு காரணகர்த்தாவாக எல்லாம் வல்ல அல்லாஹ்வால் நிமயமிக்கப்பட்ட மகிமைமிகு மனிதரில் ஒருவர் கியாதுசேட் அவர்கள்தான்என்றால் அது மிகையல்ல.
சுமார் 30 வருடங்களுக்கு முன்னாள் அரபுநாட்டிற்க்கு செல்லவேண்டும் என்று பம்பாய்க்கு வரும் நமதூர் பிள்ளைகளை வரவேற்று தங்கள் பல்லாக்கு நிறுவன இல்லத்தில் இலவசமாக தங்க வைத்து, அவர்களை சரியான அரபுநாட்டு ஏஜெண்டு மூலமாக அரபகத்திற்கு அனுப்பி வைக்கின்ற ஒரு புண்ணியமான சேவையை எந்த சத்தமும் இன்றி, எந்த விளம்பரமும் இன்றி, எந்த சுயநலமும் இன்றி செய்து வந்தது பம்பாய் பல்லாக்கு நிறுவனம். அதில் முதன்மையாகவும்.முக்கியமாக செயல்பட்டவர்கள் மர்ஹூம் சேகு ஹாஜியும்,கியாது சேட்டு அவர்களும்.
ஒருசிலருக்கு ஏஜெண்டு பணத்தொகையைக்கூட கடனாக கொடுத்துதவி செய்திருக்கிறார்கள்.அப்படி உதவி பெற்றவர்களில் நானும் ஒருவன்!.
நமதூரில் ஏழை,நடுத்தரகுடும்பங்களை சேர்ந்தவர்கள் அரபுநாடு சென்றால் அவர்கள் குடும்பம் நன்றாக வாழட்டுமே என்ற ஒரு மனிதநேயமிகு மாண்புதவி குறிக்கோளைத்தவிர வேறு எந்த எதிர்பார்ப்பும் அவர்களுக்கு இல்லை!
கியாதுசேட் என்னிடம் பணம் தரும்பொழுது கூறிய வார்த்தைகள்,சுல்தான் உனக்குத்தரும் இந்த தொகையை நீ அனுப்பவாய் என்ற நம்பிக்கை இருக்கிறது, உன்னைப்பற்றி கேவிப்பட்டேன்,உன்னுடைய தவ்ஹீது நடவடிக்கையையும் கவனித்து வந்திருக்கிறேன், ஆகவே,உன் உடன்பிறந்தாரின் சிபாரிசுகளைவிட உன்னை நான்நம்புகிறேன்,நீ சரியாக திருப்பி அனுப்பினால் அந்த பணம் உன்னைபோன்று வேறொருவருக்கு உபயோகமாகும் என்று கூறினார்கள் என்றால் அவர்களின் தொடர்ச்சியான உதவும் உள்ளம்,அந்த உணர்வு எப்படி ஊற்றுக்கண் போல் ஊறுகிறது!
அன்று 30 வருடங்களுக்கு முன்னாள் ரியாத்துக்கு ஒரு கார் கம்பெனிக்கு அவர்களால் அனுப்பப்பட்ட நான்,அக்கம்பெனியில் நமதூர் பிள்ளைகளை சுமார்50 திலிருந்து60 பிள்ளைகள் வரை சேர்க்கக்கூடிய வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தான்.சுமார்10 விசாக்களை நமதூருக்கு அனுப்பி அவர்களையும் வரவழைக்கும் வாய்ப்புக்குரிய பாக்கியத்தையும் பெற்றேன்.
அந்த அனைத்து குடும்பங்களின் துவாவும்,எனக்கும்,என்னை அனுப்பிவைத்த கியாதுசேட் அவர்களுக்கும் அவர்களின் பல்லாக் நிறுவனத்திற்கும் நிச்சியம் கிடைத்திடும் என்ற நம்பிக்கை என்றைக்கும் எனக்குண்டு!
எல்லாம் வல்ல அல்லாஹ் அவருடைய எல்லாப்பிழை களையும் பொறுத்து ஆக்கிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!
அன்னாரின் பிரிவித்துயரில் துவளும் குடும்பத்தாருக்கு எங்கள் குடும்பத்தின் சார்பாக ஆழந்த அனுதாபம் அடங்கிய ஸலாத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.அஸ்ஸலாமுஅழைக்கும்!
புகைப்படங்களின் பூஞ்சோ லை posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[24 February 2018] IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 46024
மாஷா அல்லாஹ்! அனைத்து புகைப்படங்களும் அகம் குளிரும் வண்ணம்அமைந்திருக்கின்றன!
அத்தனையையும் ஆசைதீர அனுபவித்து பார்த்து முடியும் நாளில்,நமதடுத்த ஒன்றுகூடல் நிகழ்வு நாளை நெருங்கிவிடுவோம்போலிருக்கிறது,அவ்வளவு அருமை,அழகு நம்மை அன்றைய தினத்திற்கே அழைத்துச்செல்வது போலுள்ள உணர்வு!
ரசனையுடனும்,ரம்மியம்பொங்க பொறுமையாக சேகரித்து சிறப்புடன் அமைத்த அன்பு சகோதர்களாகிய S.H.அப்துல்காதர் மற்றும் S. A. K செய்து மீரான் ஆகியோருக்கு என் அகம் நிறைந்த வாழ்த்துக்கள்!
வாழ்க நம் ஜித்தா காயல் நற்பணிமன்றம்!வளர்க அதன் புண்ணிய சேவைகள்! அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
மினுமினுக்கும் மொட்டை தலை !! posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[25 July 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45688
எந்த வாகனமும் செல்லவிடாமல்
மட்டுப்படுத்தப்பட்ட பாதையில்
மெய்னாகார் இருசக்கர வாகனம் மட்டும்-விதி
மீறலுடன் செல்கிறது,
மெய்னாகார் நீ செல்லும் பாதயைப்பார்
மேலிருந்து ஒரு கல் உன் மொட்டை
தலையை தழுவுவதற்கு மின்னல்வேகத்தில்
விழுந்தால்,என்னுயிர் நண்பனின்
நிலை என்னாவது?
அல்லாஹ் னைத்தும் அறிந்தவன்!
Rதி.மு.கழகத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது!.. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[03 July 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45641
தி.மு கழகத்திலிருந்து வெளியேறியவர்கள் தாய் கழகத்திற்கு வந்துதான் ஆகணும்.
விளக்கின் வெளிச்சம் நாடி விட்டில்பூச்சிகளாய் சென்றவர்கள், வீழ்ந்தவர்கள்தான் அதிகம்,உண்மைநிலை அறிந்து தங்கள் வீட்டிற்கே திரும்பி வந்தவர்கள் சிலரே!
தி.மு கழகம் அழிந்துவிடும்,அல்லது அழித்துவிடலாம் என்று காமராஜர் காலம் முதல் ஜெயலலிதா வரை கனவுலகில் மிதந்தார்கள்,பல கனாக்கோட்டைகள் கட்டினார்கள்.முடிவு கட்டியவர்கள் எல்லாம் காணாமல் போனார்கள்,அவர்கள் கட்சிகள் கடலில் கரைகின்ற கசாயம்போல் கரைந்து கொண்டிருக்கிறது!
2G ,5G,10G என்ற எந்த பாச்சாவும் பலிக்கவில்லை, பழித்தவர்கள்தான் பாழ்சிறையில் பவ்வியமானார்கள்!
கொள்கை கோட்பாடு ,சீரான சுதந்திரத்தலைமை, எமக்குப்பின் எந்த ஒருவரும் தலைமை தாங்க தகுதியுள்ளவர்கள் என்ற ஜனநாயக மாண்பு, தாழ்த்தப்பட்ட,ஒடுக்கப்பட்ட,சிறுபான்மை சமுதாய நலனுக்காக உழைக்கும் ஒரு வீரிய இலட்சியம் ஆகிய அத்தனை புண்ணிய நோக்கத்தை அடிப்படையாக கொண்ட எந்த அமைப்பும் அழிந்துவிடுவதில்லை,அதே நிலையிலுள்ள தி.மு.கழகத்தை எந்த கொம்பனாலும் அழிக்க முடியவில்லை, அழிக்கவும் முடியாது!
தற்போது நாட்டில் ஒரு பாசிச சக்தி பரவி வருகிறது, சிறுபான்மையினருக்கு எதிராக குறிப்பாக முஸ்லீம் சமுதாயத்திற்கு இது ஒரு சோதனைகாலம். தற்போதுள்ள அரசினால்(எந்த அணி என்று தெரியவில்லை)நமக்கு இமியளவுகூட பாதுகாப்பு இல்லை.!
முஸ்லிம்கள் முழுஉரிமையுடன் நடமாட தடை ,உடையில் கூட கட்டுப்பாடு இன்னும் எந்தெந்த வழியில் நம் சுதந்திரத்தை பறிகொடுக்க முடியுமோ,அத்தனையும் பறிபோகும் அளவிற்கு காவிகட்சி தலைமை ஒரு சட்டம் போட்டால்,அச்சட்டத்திற்கு சாஷ்ட்டாங்கமாய் விழுந்து வணங்கி வரவேற்று ஒப்புதல் அளிக்கக்கூடிய ஒரு கோழை கும்பலின் ஆட்சியின் கீழ்தான் நாம் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம்!
இதற்கு பிறகும் நம்மில் சிலர் இந்த அவல ஆட்சிக்கு ஆதரவாக இருப்பார்களேயானால்,அவர்கள் முற்றிலும் தாங்கள் ஏற்ற இனத்தாலும்,மதத்தாலும்,மார்க்கத்தாலும் முலுமை பெறாத பச்சோந்திகளாகத்தான் இருப்பர்! .
நம் சிறுபான்மையினரின் வாழ்வாதார உரிமையை பெற்றுதர பாடுபடக்கூடிய கட்சியாகவும்,பாசிச கட்சிக்கு ஒரு சிம்ம சொப்பனமாகவும் நிகழக்கூடிய கட்சியாகிய தி.மு கழகத்தை நாம் எந்தெந்த வழியில் வலிவு பெறச்செய்வோமோ,அந்த வழிதான் நம் வாழ்வு செம்மைபெறும் ஒரு வடிகால் வழியாகும்!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்!
செய்தி: விளையாட்டுப் போட்டிகள் & பல்சுவை நிகழ்ச்சிகளுடன் குடும்ப சங்கமமாக நடைபெற்றது தம்மாம் கா.ந.மன்ற பொதுக்குழுக் கூட்டம்! காயலர்கள் திரளாகப் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
நீக்கமர நிறைவாய் நீண்ட ஆயுளுடன் வலிவும் பெற்றுயுர்வீர்களாக! .. posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (yanbu)[04 May 2017] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45506
மாஷா அல்லாஹ்! களிப்பில் தங்களை மறந்து
தாய்த்திரு மண்ணில் உல்லாசக்கூத்தாடுவதுபோல்
தமாம் நகரில்,காயலர்கள் காளையர்கள் முதல்
கனியமுதம் சொட்டும் மழலையர் கூட்டங்கள் வரை
அத்தனை பேர்களையும் பார்க்கும் எங்களனைவர்களின்
உள்ளங்களும் உவகையில் பொங்குகிறது!
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடப்பதென்னவோ ஒருநாள் மட்டும்தான் ஆனால் அந்த ஒருநாள் நிகழவுகளை நினைத்து,நினைத்து நம் மனம் மகிழ்வுடன் அசை போட்டு,உல்லாசம் பீச்சும் உணர்வலைகள்
ஓராயிரத்திற்கும் மேலாகும்!
நாலுசுவர்களுக்குள் உட்கார்ந்து நலியுற்ற நமதூர் மக்களுக்கு
உதவக்கூடிய அந்த உன்னத பணியை செய்துவிட்டு
முடித்துவிடக்கூடிய ஒரு கூட்டத்தை கூட்டி கலையக்கூடிய
ஒரு சம்ப்ரதாய சங்கமமாகத்தான் பலவருடங்கள் தமாம் காயல் மன்றம் இருந்து வந்தது!
அருகிலுள்ள ரியாத்தில் சுமார் 20 வருடங்களுக்குமுன்னதாகவே காயலர்குடும்ப சங்கம மத்தை மிக மிக சிறப்பாக நடத்தேறி உலக காயல் மன்றத்தின் முதலாவதான முத்தான நிகழ்வாக அறிமுகப்படுத்திய பெருமை அப்போதைய ரியாத் காயல் நகர்மன்றத்தையே சாரும்!.
ரியாத் நலமன்றம் அறிமுகபடுத்திய அந்த அற்புத காயலர்கள் குடும்ப ஒன்றுகூடலுக்கு இணையான இன்பம் எதுவும் இல்லை என்ற ஏக்கம் நிறைந்த சுகத்தை இன்றுவரை தமாம் நல்மன்றம் முதல் அனைத்து உலக காயல் சகோதர்களும் கடைபிடித்திருக்கும் முறையறிந்து மிக்க மகிவுறுகிறோம்!
பெருகட்டும் உங்கள் புண்ணியப்பணி-அதை
பருகட்டும் காயல் பிணியுடைய அணி !
உயரிய உத்தம நோக்கம் கொண்டஉங்கள் மன்றம் நீக்கமர நிறைவாய் நீண்ட ஆயுளுடன் வலிவும் பெற்றுயுர
வாலோனை வேண்டியனவனாக உளமார வாழ்த்துகிறேன்!
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!. posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[08 April 2017] IP: 128.*.*.* Romania | Comment Reference Number: 45443
அன்பு மச்சான் மரைக்கார் அவர்களின் மறைவு செய்தி இங்கு பின்னிரவு 3 மணிக்கு கிடைக்கப்பெற்றேன்.
நம்பமுடியா செய்திபோன்று,நிலைகுலைந்து போனேன்!அதிர்ச்சியில் இருந்து மீள மணிக்கணக்கானது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!.
தூக்கத்திலேயே ரூஹு பிரிந்ததாக சொன்னார்கள்!
கார்சா மரைக்கா மச்சானை பொறுத்தவரை,வெள்ளோந்தியான மனதுடையவர்.தன்னால் இயன்ற உதவியை பிறருக்கு செய்ய வேண்டும் என்ற நிரப்பமான நிய்யத்துடைவர்!
அவர் கோபபட்டாலும், அது குமிழ்நீர் உடையும் நேரத்துக் கொப்பானது.அடுத்த சில மணித்துளிகளிலேயே புன்முறுவல் பூக்க பிரியமுடன் ஒன்றிணையும் உள்ளத்திற்கு சொந்தக்காரர்!.
எந்த நேரம் பார்த்தாலும் சிரிப்பை சிந்தியபடி தோன்றும் வழக்கத்தையே வசமாக்கி வாழ்ந்த அருமை மச்சானின் மறைவு, எங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல,எங்கள் நட்பு வட்டாரத்திற்கும் ஒரு பேரிழப்பாகும்!
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் எல்லாப்பாவங்களையும் பொறுத்து ஆக்கிரத்தில் ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ற நற்பதவியை நல்கியருள்வானாக ஆமீன்!
புண்ணியமான சேவை... posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[31 March 2017] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45398
காயலர்களின் நலன் நாடும் கண்ணியவர்களால் ஏற்பாடு செய்யப்படும் ஒரு புண்ணியமான சேவை.
பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் பங்குபெற்று பயனடைவீர்களாக!
இந்த அமைப்புகளின் முயற்சி வெற்றிபெறுவதோடு ,இம்முகாமினால் மனநிறைவடைந்தோரின் துவாவின் பரக்கத்தை படைத்தோனிடம் பெறத்தகுதியுடையவர்களாவீர்களாக! அல்லஹ் அனைத்தும் அறிந்தவன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross