Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:56:20 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9162
#KOTW9162
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 17, 2012
ஹாஃபிழ் உறுப்பினர்கள் தமது திருக்குர்ஆன் மனனத்தை வலிமைப்படுத்திக்கொள்ள சிங்கை கா.ந.மன்றம் சிறப்பேற்பாடு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3266 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருமறை குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள ஹாஃபிழ்கள் தமது மனனத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில் சிறப்பேற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் காயல் நல மன்ற உறுப்பினர்களில் 8 பேர் திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள ஹாஃபிழ்களாவர். அவர்கள் தமது திருக்குர்ஆன் மனனத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக, அம்மன்றத்தின் நிறுவனரும் - ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் இல்லத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் 16.00 மணி முதல் 21.00 மணி வரை தமது திருக்குர்ஆன் மனனத்தை மீள்பார்வை செய்யவும், மீள்பார்வை செய்த பாடங்களை ஒப்புவிக்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

16.09.2012 ஞாயிற்றுக்கிழமை முதல் இந்நிகழ்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்துவக்க நிகழ்வில் 5 ஹாஃபிழ் உறுப்பினர்கள் பங்கேற்று தமது பாடங்களை மீள்பார்வை செய்து ஒப்புவித்தனர்.





தற்கால அவசர உலகத்தின் வேகத்திற்கிடையில், தமது திருக்குர்ஆன் மனனத்தை வலுப்படுத்திக்கொள்ள இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்தியளித்தமைக்காக மன்ற ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களுக்கு ஹாஃபிழ் உறுப்பினர்கள் தமது நன்றியைத் தெரிவித்துக்கொண்டதுடன், இவ்வரிய வாய்ப்பை தாங்கள் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கும் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.

தகவல்:
ஹஸன் மவ்லானா


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ماشاء الله
posted by Moulavi Hafil M.S.Kaja Mohideen Mahlari (Singapore.) [17 September 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 22215

மாஷாஅல்லாஹ்! ஒரு அருமையான ஏற்பாடு.

அல்ஹம்துலில்லாஹ். தீனை(ரிஸ்க்) பெறுவதற்காக கடல் கடந்து வந்து, தனது தொழில் துறைகளில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் ,இப்படி தீனை (மார்க்கம்) யும், பெறுவதற்க்காக ஒரு வாய்ப்பை ஏற்பாடு செய்துள்ள இம்மன்றத்தின் முயற்சிகள் தொய்வின்றி ,தொடர அல்லாஹ் அருள்புரிவானாக !

வாரத்தில் ஓய்வு நாளான 'ஞாயிற்றுக்கிழமை" களில் நமது பொன்னான நேரத்தை அவசியமற்ற வழிகளில் செலவு செய்யும் சூழலை தவிர்த்துவிட்டு ,அவசியமான ,இந்த அருமையான சந்தர்பத்தை "சிங்கை வாழ் காயல் ஹாபிழ்கள்" நன்கு பயன்படுத்திக்கொள்ளவும்.

முதன் முறையாக (என எண்ணுகிறேன்) துவங்கப்பட்டுள்ள இந்த "ஏற்பாட்டை" போல் உலகில் வாழும் காயல் ஹாபிழ்கள் இதுபோன்ற ஒரு முன்மாதிரியை பின்பற்றி நாம் வாழும் காலமெல்லாம் இறைமறையை இதயத்தில் இறுதிவரை பாதுகாக்க அவசியம் பாடுபடவேண்டும் .

அதற்க்கான வசதி, வாய்ப்பை உரியவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என அன்புடன் வேண்டுகிறேன் !

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது இம்மை,மறுமை முயற்சிகளை கபூல் செய்து ஈருலக சகல சௌபாக்கியங்களையும் தந்தருள்வானாக ! ஆமீன்! வஸ்ஸலாம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Fuad (Singapore) [17 September 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 22219

அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் ஹசன் எடுத்திருக்கும் இந்த நல்ல முயற்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.

நமது ஹாபிழ் உறுப்பினர்கள் இந்த நல்ல வாய்ப்பினை நன்கு பயன்படுத்தி தங்களின் பாடத்தை என்றென்றும் இதயத்தில் பதிய வைத்துக் கொள்ளலாம். அனைத்து ஹாபிழீன்களும் தவறாமல் இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்துவார்கள் என நம்புகிறேன்.

உலகில் உள்ள அனைத்து காயல் நகர நல மன்றங்களுக்கும் எமது சிங்கபூர் காயல் நகர நல மன்றம் முன் மாதிரியாக இருக்கும். அனைத்து காயல் நகர மன்றங்களும் இது போன்ற நல்ல முயற்சியில் ஈடுபட்டு நமது காயல் மாநகருக்கு நல்ல பேரையும்,புகழையும் காணிக்கையாக்குவோம்.

சகோதரர் ஹசன் ரமழான் மாதத்தில் இப்படி ஒரு திட்டம் இருப்பதாக என்னிடம் சொன்னார். எந்த ஒரு நல்ல திட்டத்தையும் உஅடனடியாக அமல் படுத்துவதில் அவருக்கு நிகர் அவரே. கிருபையுள்ள அல்லாஹ் சகோதரர் ஹசனுக்கு நோயற்ற வாழ்வையும், நீடித்த ஆயுளையும் கொடுப்பானாகவும். ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [17 September 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22220

வெல்டன்.. வெரி குட்... வெரி நைஸ்..

மனதார பாராட்டலாம்..!

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. கொடுத்து வைத்தவர்கள் சிங்கை ஹாஃபிழ்கள்!
posted by S.K.Salih (Kayalpatnam) [17 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22222

உள்ளமெல்லாம் உண்மை வேதமாம் திருமறை குர்ஆனின் வாசம் கமழும் காயல்பதியிலிருந்துகொண்டு, “பாடம் பார்க்க நேரமே கிடைக்கலை...” என்று (அறிந்தோ - அறியாமலோ) எல்லா நாட்களிலும் இப்லீஸுக்குப் பிடித்தமான சொற்களையே உதிர்த்துக்கொண்டிருக்கும் என் போன்றவர்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் நமதூர் காயல்பட்டினத்தில் கிடைத்தால், இதை ஏற்பாடு செய்தோரை அகமகிழ வாழ்த்தி துஆ செய்வோம்...

ஹும்... நாங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான்! எனதன்பிற்குரிய சிங்கை காயலர் ஹாஃபிழ்கள் கொடுத்து வைத்தவர்கள்!

என் அன்பிற்குரிய உஸ்தாத் ஹஸன் சாருக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! சிங்கப்பூரிலிருந்து சிறப்பித்தது போதும்! உடனே புறப்படுங்கள் பிறப்பிடம் நோக்கி!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. உள்ளம் பூரிக்கிறது. பொறாமைப்படுகிறது............
posted by S.K.Shameemul Islam (Chennai) [17 September 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22223

ஹசன் காகா,

இப்படி நல்ல விஷயங்களில் முந்தி செயல் பட்டு நண்மைகளைக் கொள்ளையடிப்பதைப் பார்க்கும் போதும் படிக்கும் போதும் உள்ளம் பூரிக்கிறது. பொறாமைப்படுகிறது.

இறை வழியில் எதைச் செலவிட்டாலும் அதை அவருக்கு உடனே திரும்பக் கொடுக்கப்பட்டு விடும் என்ற இறைவசனத்திற்கேற்ப அல்லாஹ் நீங்கள் செலவிடும் நேரத்திற்கும் பொருளாதாரத்திற்கும் உரிய பிரதிபலனை உடனே தந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு வாழ்த்தி மகிழ்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by NMZ.Ahamedmohideen (KAYALPATNAM) [17 September 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22224

ஹபுளுல்லாஹ் என்று சொல்லப்படக்கூடிய திரு குருஆனை இதயத்துள் பதித்துள்ள ஹாபிழீன்களின் ஹிபுழை வலுப்செய்துள்ளபடுத்திக் கொள்வதற்காக சிறப்பேற்பாடு செய்துள்ள சிங்கை கா.ந.மன்றத்தார்கள் அனைவருக்கும் அனைத்து ஹாபிலீன்கள் சார்பாக முதற்க்கன் ஜஜாகுமுல்லாகுல்ஹைரா!

மாஷாஅல்லாஹ்! மிக மிக போற்றுதல் குரிய விஷயம் . இன்ஷா அல்லாஹ் !இதனைப்போன்று எல்லா காயல் நல மன்றங்களும் ஹாபிலீன்களுக்காக இந்த மாதிரி சிறப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்க முன்வர வேண்டும்.

இச்சிறு வனும் இந்தவருடம் புனித குருஆனை ஹிபுழு செய்ய இணைந்து உள்ளேன். தாங்கள் யாவரும் எனது முழுமையான ஹிப்ழு பாக்கியத்திற்காக துஆ செய்யவும் . ஹாஃபிழ் உறுப்பினர்கள் தமது பாடங்களை மீள்பார்வை செய்து ஒப்புவிக்க இடம் வழங்கி இருக்கும் அம்மன்றத்தின் நிறுவனரும் - ஆலோசகருமான ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் அவர்களுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றிகள் !ஜஜாகுமுல்லாகுல் ஹைரா!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Cnash (Makkah) [17 September 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 22229

அல்லாஹ் உங்களுக்கு அளப்பரிய கிருபை செய்வானாக. ..இருலோக நன்மையை சேவையில் மட்டுமல்ல... இறைவனின் அருள்மறையை மனனத்தை நம் ஹாஃபிழ்களுக்கு வலுப்படுத்துவதிலும் நன்மையை முந்தி பெற்று மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறீர்கள். அல்லாஹ் உங்கள் நல்லறங்களை பொருந்திகொள்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:.. ஜஜாகல்லாஹ்
posted by Seyed Ismail (Singapore) [17 September 2012]
IP: 218.*.*.* Singapore | Comment Reference Number: 22234

அல்ஹம்துலில்லாஹ்.. ஜஜாகல்லாஹ் ஹசன் காகா, இந்த வாய்ப்பை எங்களுக்கு ஏற்படுத்தி தந்த உங்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் நீடித்த ஆயுளையும் நோயில்லா வாழ்வையும் வழங்குவானாக. ஆமீன்

இந்த ஏற்பாடு எனக்கும் இதர சிங்கை ஹாபிழ்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதில் துளி அளவும் சந்தேகம் இல்லை. அல்ஹம்துலில்லாஹ்.

எங்கள் குர்ஆண் பாடத்தை மென்மேலும் வலுபடுத்துவதற்கான ஆர்வமும் வந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ். ஜஜாகல்லாஹ் HASAN காகா..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Seyed Mohamed Sayna (Bangkok) [18 September 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 22263

அஸ்ஸலாமு அழைக்கும்

ஹசன் காக்கா
மாசாஅல்லாஹ்
நல்வாழ்த்துக்கள், இன்றைய ஹாபில்கள் திருக்குர்ஆணை மனனம் செய்து விட்டு மறந்து கொண்டு இருக்கீறார்கள் இந்த சமயத்தில் இப்படி ஒரு முயற்சி

ஹாபில்களுக்கு உங்களால் முடிந்தால் நம் காயல் சகோதரர்கள் Quaran ஓத தேரியாமல் இருகிறார்கள் அவர்களுக்கு ஓத கற்று குடுங்கள் ஓத தேரிந்த வர்களுக்கு மனனம் செய்ய முயற்சி செய்யுங்கள் மனனம் செய்ய வயது வரம்பு இல்லை

நீங்கள் முயற்சி எடுங்கள் அல்லா வெற்றியை தருவானாக
ஆமீன்
இப்படிக்கு
Seyed Mohamed Sayna
Kayal Ikiya Mandram
Bangkok Thailand


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved