Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:26:11 AM
வியாழன் | 2 மே 2024 | துல்ஹஜ் 1736, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:10
மறைவு18:27மறைவு13:11
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9024
#KOTW9024
Increase Font Size Decrease Font Size
சனி, ஆகஸ்ட் 25, 2012
காயல்பட்டினம் நகராட்சியைக் கண்டித்து முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5559 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (30) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தண்ணீர் நிறுத்தப்பட்டு விடும் என்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அபாய அறிவிப்பைக் கண்டுகொள்ளவில்லை என்றும், 10 நாட்களுக்கு ஒருமுறை கூட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்காததற்காகவும் காயல்பட்டினம் நகராட்சியைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் இன்று மாலை 05.00 மணியளவில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நகர தலைவர் ஹாஜி வாவு கே.எஸ்.முஹம்மத் நாஸர் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். நகர பொருளாளர் ஹாஜி எம்.ஏ.முஹம்மத் ஹஸன் முன்னிலை வகித்தார்.



மாவட்ட துணைத்தலைவர் ஹாஜி மன்னர் பாதுல் அஸ்ஹப் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். நகர துணைச் செயலாளர் அரபி ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். நகரச் செயலாளர் ஏ.எல்.எஸ்.அபூஸாலிஹ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். மாவட்ட செயலாளர் எஸ்.ஜே.மஹ்மூதுல் ஹஸன், நகர துணைச் செயலாளர் ஹாஜி என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.



இந்நிகழ்ச்சியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மகபூப் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு, ஆர்ப்பாட்ட உரையாற்றினார்.



மழையின்றி வறட்சி காணப்படும் இத்தருணத்தில், தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு நகர மக்களுக்கு தண்ணீர் வழங்க நகராட்சி தவறி விட்டதாகவும், ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டவுடன் அவசர அவசரமாக லாரியில் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுவதாகவும் தெரிவித்த அவர், இரண்டாம் பைப் லைன் திட்டத்தை, போதிய அனுபவமோ - கட்டமைப்போ இல்லாத நிலையில் நகராட்சியே எடுத்து செய்திட தீர்மானித்திருப்பது இத்திட்டத்தை பயனற்றதாக்கி விடும் என்று தெரிவித்தார்.

முந்தைய காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட நேரத்தில் அப்போதிருந்தவர்கள் செய்த முயற்சிகள் இன்றைய நகராட்சியால் செய்யப்படவில்லை என்று அவர் மேலும் குற்றஞ்சாட்டினார். இக்குறைபாடுகள் விரைந்து சரிசெய்யப்பட்டு நகர மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகிக்கப்படாவிட்டால், நகராட்சி வளாகத்திற்கு முன்பாக மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

பின்னர், நகராட்சி நிர்வாகத்திற்கெதிராக முழக்கங்கள் முழங்கப்பட்டது. நன்றியுரை - துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், முஸ்லிம் லீக் நகர மூத்த நிர்வாகிகளான ஹாஜி வாவு சித்தீக், ஹாஜி மொகுதூம் கண் ஸாஹிப், ஹாஜி எஸ்.டி.வெள்ளைத்தம்பி, மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.இப்றாஹீம் மக்கீ, நகர நிர்வாகிகளான ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை, ஆர்.பி.ஷம்சுத்தீன், ரஹ்மத்துல்லாஹ், மாவட்ட செய்தி தொடர்பாளர் எஸ்.கே.ஸாலிஹ், எம்.எச்.அப்துல் வாஹித் உட்பட நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. இது குடிநீர் பற்றாகுறை ஆர்பாட்டமாக தெரியவில்லை...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல்) [25 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21486

இந்த ஆர்பாட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஜனாப் காயல் மகபூப் அவர்களின் ஆர்பாட்ட உரை மிக கம்பீரமாக உணர்ச்சி பொங்க உரை அமைந்து இருந்தன..! பாராட்டுக்கள்..

இந்த ஆர்பாட்ட உரை ரோட்டில் போவோர்...! வருவோர்...! (நான் உட்பட) வழிப்போக்கன்...! இவர்கள் அல்லவா தாங்களின் வீர உரையை கேட்டு பின்பு சில நிமிடத்தில் மறந்தும் போய்விட்டார்கள்...! இந்த வீர உரை பேச்சு நமது நகராட்சி அதிறும் + திகைக்கும் வகையில் அமைந்து இருக்க வேண்டும்...

அப்போது தான் நமது நகராட்சி அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து இருக்கும் ஆணையர் - தலைவி - உறுப்பினர்கள் மற்றும் மக்கள் சர்வென்ட்கள் வெளியில் என்ன பிரச்சனை...? சத்தமாக இருக்கிறதே.. என்ன..? ஏது... என்று உள்ளே இருந்து வெளியே வருவார்கள்...!

மக்கள் அனைவர்களுக்கும் பொருந்தும் விதமான மிக அவசியமான இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்து இருக்கும் அனைவர்களும் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்து கோசம் போட்டு நகராட்சியின் கவனத்தை ஈர்ப்பார்கள் அல்லவா..? ஈர்க்க முடியும்...

இது குடிநீர் பற்றாகுறை ஆர்பாட்டமாக தெரியவில்லை...!

கட்சியின் (முஸ்லீம் லீக் ஜிந்தாபாத்) (பெயர்) விளம்பர ஆர்பாட்டமாகவே அமைந்து இருந்தன...

ஒரு பொதுவான ஆர்பாட்டத்தில் ஒரு அமைப்பை ஆதரிக்கும் வகையில் பேசுவது பொதுவான ஆர்பாட்டத்திற்கு உகந்தது அல்ல...

ஐக்கிய பேரவை நிறுத்திய வேட்பாளரை ஆதரிக்க வில்லை என்ற ஆதங்கம் மேலோங்கி இருந்தன...

ஐக்கிய பேரவை நிறுத்திய வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெற்று இருந்தால் இன்று ஐக்கிய பேரவை பெரியவர்களிடம் இந்த தண்ணீர் பிரச்சனையை கூறி இருக்கலாம்.. -இது உரையின் ஒரு துளி...

என்ன செய்ய...? ஊரின் தலைவிதி..! ஊர் மக்களின் ஆதரவு ஐக்கிய பேரவைக்கு இல்லையே... ஊரின் மொத்த வாக்கு பதிவு 18,128 - அதில் தாங்கள் கூறிய ஐக்கிய பேரவைக்கு ஊர் மக்களின் எதிர்ப்பு வாக்கு 12,464 அல்லவா..! ஏன்...? காரணம் என்ன..? ஏன் இந்த எதிர்ப்பு...? ஐக்கிய பேரவைக்கு..!

இதை யார்.. திருத்துவது...? இதை யார்.. சரி செய்வது...? அதற்க்கு யார்.. யார்.. காரணம்...

காரணம் அதை கண்டுபிடித்து சரி செய்து...! எல்லாம் சரியாகும் பட்சத்தில் வரும் அடுத்த நகரமன்ற தேர்தலில் சந்திப்போம்... அணைத்து ஜமாத்தும் நீதியாக செயல் படும்பட்சத்தில் இன்சாஹ் அல்லாஹ்...

உங்களை போல் ஊர் ஒற்றுமையை என்றும் விரும்பும்..
உங்களின் ஒருவன்...

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.

அட்மின் அவர்களுக்கு தாழ்மையான குறிப்பு - இது தனி நபர் தாக்குதல் அல்ல... பொதுவான கருத்து கத்திரி போட வேண்டாம்...

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by S.A.C. Salih (Kayalpatnam) [25 August 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 21487

பானையில் தண்ணீர் இருந்தால்தான் குவளையில் தண்ணீர் வரும் என்பது சாதாரண அறிவுள்ளவர்களுக்கே தெரியும்.

(காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.

அணையின் இன்றைய (ஆகஸ்ட் 25) நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:

அணையில் நீர்மட்டம்: 40.55 அடி (40.90 அடி) நீர்வரத்து (Inflow): 261 Cusecs (317 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): 405 Cusecs (407 Cusecs)

ஒரு Cusec என்பது வினாடிக்கு 28.31 லிட்டர். )(நன்றி -kayalpatnam.com)

அரசியல் சுய லாபத்திற்காக கூப்பாடு போடுகிறவர்களை மக்கள் நன்கறிவார்கள்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...nagaratchiyaikanndithu
posted by samsudeen (kayalpatnam) [25 August 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 21491

நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினால் அதை சார்ந்தே கண்டன உரையும் அமைய வேண்டும். அதை விடுத்து தேவை இல்லாமல் தனிப்பள்ளி அது இதுன்னு...

எங்கள சொரிஞ்சதான் அங்க பொழப்பு ஓட்ட முடியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...போராட்டத்தின் வெற்றி எதில்?
posted by Husain Noorudeen (Abu Dhabi) [25 August 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21492

போராட்டத்தோட நிறுத்திக்காம, இந்த பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது, இன்றைய சூழலில் தண்ணீர் தட்டுப்பாடை போக்குவதற்குரிய வழிமுறை என்ன என்பதை குறித்து நகராட்ச்சிக்கு அறிவுரை வழங்கி இருந்தீர்கள் என்றால் இந்த போராட்டத்திற்கு ஒரு முழு அர்த்தம் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்!
posted by OMER ANAS (DOHA QATAR.) [25 August 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 21495

பிறைக்கொடி எமது ஒரேக்கொடி
பட்டொளி வீசி பறக்குது பாரீர் தீன் கொடி.தீன் கொடி!
நாரே தக்பீர் அல்லாஹு அக்பர்!
முஸ்லிம் லீக் ஜிந்தா பாத்!

ஊருக்கு ஒண்ணுன்னா இப்படித்தான் எல்லோரும் ஒண்ணா சேரணும். இந்த நிகழ்ச்சியில் தலைவியும் மக்களோடு மக்களாக தன்னை இணைத்து இருக்கலாமோ?
காரணம், தமிழ் நாட்டின் இந்த வரட்ச்சிக்கு அவர் மட்டும் எப்படி பொறுப்பாவார்?

ஏதோ கேட்க்கணும் என்று தோணியது கேட்டுவிட்டேன்! நிவர்த்திக்கு ஏதாவது வழி இருப்பின், தலைவி இடமே சொல்லவும்.

அப்புறம் தாய்க் கழகத்தில் தன்னை தீவிரமாக இணைத்துக் கொண்ட எனது அருமை தம்பி கவிமகனார் காதரை தேடினேன் தேடினேன் தேடிக்கொண்டே இருந்தேன். இங்கே எங்கும் கிடைக்கவில்லை. ஆள் ஊரில் இல்லையோ.......?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Vilack SMA (Singapore) [25 August 2012]
IP: 203.*.*.* Singapore | Comment Reference Number: 21496

இருக்கும் தண்ணீரை முறையாக விநியோகித்தாலே போதும், குறைந்தபட்சம் குடிக்கவாவது தண்ணீர் கிடைக்கும்.

நகராட்சியின் குறைகளை சுட்டிக்காட்டினால் , அதற்கும் வக்காலத்து வாங்கி , பசாது பண்ணாதே என்கிறார்கள். முந்தைய நகர்மன்றத்திலும் தண்ணீர் பிரச்சினை இருந்தது. ஆனால் அனுபவம் வாய்ந்த தலைமை. அனைவருக்கும் தண்ணீர் சீராக கிடைத்தது . ஆனால் தற்போது, "தவிச்ச வாய்க்கு தண்ணீர்கூட இல்லை ".. இதுதான் இன்றைய நகரமன்றத்தின் உண்மை நிலை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by saburudeen (dubai) [26 August 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21497

வேடிக்கை பார்க்கும் மக்கள் கூட்டத்தை பார்த்தல் போராட்டத்தின் உள் நோக்கம் அறிந்து மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்பது மட்டும் உணர முடிகிறது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. பயனற்ற நகராட்சி நிர்வாகம்.
posted by V D SADAK THAMBY (Guangzhou-China.) [26 August 2012]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 21498

நமது நகராட்சி நிர்வாகம் பயனற்றது.

இதே வேகத்தில் தலைவி இன்னும் செயல்படுவாறேயானால் 10 நாட்கள் என்ன, 30 நாட்களுக்கு ஒருமுறை கூட பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க இவர்களால் முடியாமல் போகும் சூழ்நிலை கூட வரலாம்.

இரண்டாம் பைப் லைன் திட்டத்தை, போதிய அனுபவமோ - கட்டமைப்போ இல்லாத காயல்பட்டனம் நகராட்சியே எடுத்து செய்வதைவிட நன்கு அனுபவமுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் செயல்படுத்தலாம்.

நான் முன்பே கூறியதுபோல இரண்டாம் பைப் லைன் திட்டத்தை சீரழிக்கபோகிரார்கள்.

சரியான தலைமை நமக்கு கிட்டாதது நம்முடைய தலைவிதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...அல்ஹம்துலில்லாஹ்
posted by Ruknudeen Sahib (China) [26 August 2012]
IP: 116.*.*.* China | Comment Reference Number: 21499

அஸ்ஸலாமு அலைக்கும்.

நம் நகருக்காக பல நல்ல விஷயங்களை பெற்று தருவதற்காக போராடி கொண்டிருக்க கூடிய தாய் சபையாம் முஸ்லிம் லீகின் பிறை கொடியின் கீழ் ஒற்றுமையுடன் ஒன்று திரளுவோம். எல்லாம் வல்ல நாயன் அந்த ஒற்றுமையின் பயனாக நம் ஊருக்கு நல் அருள் புரிவானாகவும் ஆமீன்.

ஹாஜி மொஹ்தூம் ஹான் சாஹிப் அவர்கள் நம் தாய் சபை கட்சிக்காக எந்த பதவியும் எந்த பயனையும் எதிர் பாராது ஏறதாழ ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தனது 78 வது வயதிலும் கொடியே பிடித்து ஒரு அடி மட்ட தொண்டனாக ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டதை பார்த்து மெய் சிலிர்த்து விட்டேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரது தன்னலம் பாரா பொது தொண்டினை ஏற்று கொண்டு அன்னாருக்கு சுகத்துடன் கூடிய நீடுடிய வாழ்கையும் ஈருலக பாக்கியத்தையும் தந்தருள துஆ செய்கிறேன். வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by theak (kayalpatnam) [26 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21500

காயல்பட்டினத்தில் நிலவும் குடிநீர் வினியோகக் குறைபாடுகளைக் கண்டித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய சகோதரர் மஹபுப் காக்கா அவர்கள் ஆர்ப்பாட்டத்திற்க்கு வந்தவர்கள் அனைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் சுன்னத் ஜமாஅத்தை சேர்ந்த சகோதரர்கள் என்று நினைத்து தங்களுடைய கண்டன உறையில் போரப்போக்கிள் அரசியலுடன் கொஞ்சம் ஆன்மிகத்தை தொட்டுப் பேசியது சரியானதுதானா ? என்று காக்கா கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

அன்புடன் தேக்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by Zainul Abdeen (Dubai) [26 August 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21501

நல்ல ஒரு ஆட்டம் சாரி ஆர்ப்பாட்டம்.

செய்தியாளர் ஒரு இடத்தில் "லாலியில்" என்று தவறுதலாக தட்டச்சு செய்துள்ளார் திருத்திகொள்ளவும்.

Moderator: Corrected. Thanks!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Kader K.M (Dubai) [26 August 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21502

இதைத்தான் எதிர் பார்க்கின்றோம்! கேளுங்கள் தரப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும்! திறக்கவில்லையா........ நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்! அழும் பிள்ளையே பால் குடிக்கும்! அனைவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by salai s nawas (singapore) [26 August 2012]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 21503

நகராட்சி வேறோ அல்லது காயல்பட்டினம் வேறோ இல்லை, அது நம்முடைய நகராட்சி. தட்டி கேட்பது உங்கள் உரிமை. நீங்கள் உங்கள் கட்சியின் சார்பில் நேராக நகராட்சி சென்று தலைவி மற்றும் உறுப்பினர்கள் யாவரிடம் ஒரு கூட்டம் போட்டு அவர்களுக்கு நீங்கள் அறிவுறுத்தி இருந்தால் அது நீங்கள் ஊர் மக்களிடம் காட்டும் அக்கறை உங்களுக்கும் ஒரு சபாஷ் போட்டு இருப்போம், அதை விட்டு விட்டு ரோட்டில் நின்று நகராட்சிக்கு சவால் விடுவது எந்த விதத்தில் நியாயம்?

நம்மூருக்கு வருகின்ற தண்ணீரை DCW என்னும் அரக்கன் 40 விழுக்காடு தண்ணீரை உறிஞ்சி, ஊருக்குள் விஷத்தை கக்கி பல உயிர்களை கொள்ளை கொண்டுள்ளதே, அதை எதிர்த்து ஒரு நாலாவது போராட்டத்தில் உங்கள் கட்சியில் சார்பில் இறங்கி இருகீறீர்களா?

வேண்டாம் பிரிவினை. என்றும் சகோதத்ருவதை கடை பிடிப்போம். ஒற்றுமை என்னும் கையிற்றை பற்றி பிடிப்போம். வெற்றி நமதே!!!!!!

- மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Please Shed some light
posted by Abdul Wahid S. (kayalpattinam) [26 August 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 21506

"தண்ணீர் நிறுத்தப்பட்டு விடும் என்ற தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அபாய அறிவிப்பைக் கண்டுகொள்ளவில்லை".

I presume from the above statement that a warning notice was sent to our municipality by TAMILNADU WATER SUPPLY AND DRAINAGE BOARD. When was this notice issued by TWAD, what was the exact warning and why?

Can kayalpatnam.com shed some light on this issue?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. குற்றம் சாற்றுவதே குறிக்கோளா ?:...
posted by hasbullah mackie (dubai) [26 August 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21507

இங்கே நடத்தப்பட்ட கண்டன ஆர்பாட்டம் எல்லாம் நல்ல விஷயம் தான்.. இந்த விஷயத்தில் இவர்கள் ஒரு உருப்படியான ஆலோசனையை தலைவியிடம் தெரிவித்து இருந்து அதற்கு மறுப்பு தெரிவித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தால் வரவேற்கத்தக்கது.

ஆனால் தங்கள் கட்சியின் வளர்ச்சியை அதை பற்றி பேசுவதாக, வெளிப்படுத்துவதற்காக இது நடந்திருந்தால் அவசியம் இல்லாத கூட்டம் என்றே நினைக்கத் தோன்றுகின்றது...

அல்லாஹ் யாவரின் உள்ளங்களை அறிபவனாக இருக்கிறான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Opportunism
posted by Abdul Wahid S. (Kayalpatnam.) [26 August 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 21509

" இரண்டாம் பைப் லைன் திட்டத்தை, போதிய அனுபவமோ - கட்டமைப்போ இல்லாத நிலையில் நகராட்சியே எடுத்து செய்திட தீர்மானித்திருப்பது இத்திட்டத்தை பயனற்றதாக்கி விடும் என்று தெரிவித்தார்". (Copy & Paste)

ஆர்பாட்டத்தில் பேசப்பட்ட அந்த பேட்சு, பேட்ச்சாளரின் அடிமனதிலிருந்து வந்த்திருந்தால், அவர் நகரமன்ற உறுப்பினர்களை கண்டித்திருக்க வேண்டும். பேசியவர் அவரை அறியாமலே இது விஷயமான நகராட்சி தலைவியின் நிலைப்பாட்டை ஆதரித்துள்ளதை உணர முடியும். இது சம்பந்தமாக இதே இணையதளத்தில் வந்த செய்தியை (17 - 11 - 2011 / News Id # 7579) ஐ பார்க்கவும்.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=7579

மேலும் அப்பொழுது கருத்து (comments) எழுதிய ஒரு மேதை இப்போது என்ன கருத்துக்களை பதிவு செய்துள்ளார் என்று ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த கருத்து புலியின் தரம் புரியும்.

A tiger can not change its stripe"
OR
"A leopard can not change its spot".

Opportunism is the right word I guess.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by OMER ANAS (DOHA QATAR.) [26 August 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 21510

நகராட்சி வேறோ அல்லது காயல்பட்டினம் வேறோ இல்லை, அது நம்முடைய நகராட்சி. தட்டி கேட்பது உங்கள் உரிமை. நீங்கள் உங்கள் கட்சியின் சார்பில் நேராக நகராட்சி சென்று தலைவி மற்றும் உறுப்பினர்கள் யாவரிடம் ஒரு கூட்டம் போட்டு அவர்களுக்கு நீங்கள் அறிவுறுத்தி இருந்தால் அது நீங்கள் ஊர் மக்களிடம் காட்டும் அக்கறை உங்களுக்கும் ஒரு சபாஷ் போட்டு இருப்போம், அதை விட்டு விட்டு ரோட்டில் நின்று நகராட்சிக்கு சவால் விடுவது எந்த விதத்தில் நியாயம்?

நம்மூருக்கு வருகின்ற தண்ணீரை DCW என்னும் அரக்கன் 40 விழுக்காடு தண்ணீரை உறிஞ்சி, ஊருக்குள் விஷத்தை கக்கி பல உயிர்களை கொள்ளை கொண்டுள்ளதே, அதை எதிர்த்து ஒரு நாலாவது போராட்டத்தில் உங்கள் கட்சியில் சார்பில் இறங்கி இருகீறீர்களா?

வேண்டாம் பிரிவினை. என்றும் சகோதத்ருவதை கடை பிடிப்போம். ஒற்றுமை என்னும் கையிற்றை பற்றி பிடிப்போம். வெற்றி நமதே!!!

(காப்பி&பேஸ்ட்)

பாஸ் பாஸ் சபாஷ் சாளை நவாஸ்!

தம்பி இதே கேள்வியை ஊர் எலக்சனில் நீங்கள் உங்கள் கட்சி வேட்ப்பாளர். (நீங்களே உங்கள் கட்சி என்று பிரித்ததால் கேட்க்கிறேன்) திருமதி ஆபிதா மேடம் இடம் வேண்டாம் பிரிவினை,

நம் நகராட்ச்சி வேறு காயல் பட்டினம் வேறு இல்லை என்று ஏன் எடுத்து சொல்லவில்லை?

தட்டிக்கேட்ப்பது மக்கள் உரிமை. அப்படின்னா, அந்த உரிமையோடு ஊர் பெரியோர்களை நீங்கள் ஏன் அணுகவில்லை? போராடாமலா வெற்றி இவருக்கு கிடைத்தது? இதே அறிவுரையை நீங்களும் அன்று செய்து இருந்தால், நாங்களும் நம்புவோம் உங்களின் ஊர் மீது உள்ள அக்கறையினை!
அதை விட்டு விட்டு வீதி வீதியாக புறம் பேசி ஒட்டு கேட்டது எந்த விதத்தில் நியாயம்?

இன்றல்ல அன்றும் சுதந்திரத்துக்காக மக்கள் வீதிக்கு ஒன்றாக வந்ததனால்தான், இந்தியா இன்று சுதந்திர தினம் கொண்டாடுகிறது!

வாருங்கள் நீங்களும் பச்சிளம் பிறைக்கொடியை தாங்கி ! போராடுவோம் நம்தூருக்காக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. அக்காவுக்கு சொக்கன் அண்ணன் தம்பி முறை!
posted by M.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.) [26 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21512

அரசியல் லாபத்திற்கான சுயவிளம்பரம் சூப்பர்...! மொத்தத்தில் ரூம் போட்டு நல்லா யோசிச்சிருக்காங்க நம்ம தாய்ச் சபையினர்.

இ.யூ.மு.லீக் காயல்பட்டினம் கிளை வேறு, ஐக்கிய பேரவை வேறு என யாராவது எண்ணியிருந்தால் அவர்களின் எண்ணம் தவறானது! அக்காவுக்கு சொக்கன் அண்ணன் தம்பி முறை! அப்புறம் எப்படி ஆர்ப்பாடம் பண்ணாமெ இருப்பாங்க....அடேங்கப்பா....?

-ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Suggestion is better than condemn
posted by Riyath (HongKong) [27 August 2012]
IP: 171.*.*.* United States | Comment Reference Number: 21513

Good effort by IMUL. At the same time, if really concern about our town, spend sometime to visit head of municipality with best suggestions for water distribution, bus stand facilities and come up with the united solution instead of breaking parts in the name of condemn.

**Wassalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Vilack SMA (Nha Bay , Vietnam ) [27 August 2012]
IP: 113.*.*.* Vietnam | Comment Reference Number: 21514

Response to Mr . Tamilan

< அட்மின் அவர்களுக்கு தாழ்மையான குறிப்பு - இது தனி நபர் தாக்குதல் அல்ல... பொதுவான கருத்து கத்திரி போட வேண்டாம் >

தங்களது புள்ளிவிபர கணக்குகளை படித்தேன் . இதற்குமுன் புள்ளி விபரங்கள் அளித்தவர்கள் தற்போது உண்மை அறிந்து அமைதியாக இருக்கையில் தாங்கள் மீண்டும் அதை நினைவுபடுத்தி இருக்கிறீர்கள் .

நீங்கள் சொன்ன " ஊரின் தலைவிதி " உண்மைதான் . தலைவிக்கு ஆதராவாக , எதிராக வாக்களித்த அனைவரும் குறைந்தபட்சம் குடிப்பதற்கு கூட தண்ணீர் இன்றி கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். என்னுடைய வாழ்நாளில் இதுபோன்ற ஒரு அவல நிலையை , நமதூரில் நான் கண்டதில்லை . தண்ணீர் பஞ்சம் என்பது நமக்கு புதிதல்ல . ஆனால் ஒரு குவளை தண்ணீருக்காக கைஏந்துகிறோமே , இது உங்களுக்கு அசிங்கமாக தெரியவில்லையா ?

நண்பரே , இருக்கும் தண்ணீரை முறையாக விநியோகித்தால் அனைவருக்கும் குடிப்தற்கு போதுமானதுதான் . ஆனால் அனுபவமற்ற தலைமையால் இந்த வேலையை சரியாக செய்ய முடியவில்லை . ஒருவேளை தண்ணீர் திருடர்களை தலைமை ஆதரிக்கிறதா ? இதற்குமுன் இருந்த தலைமையில் , கொடிய தண்ணீர் பஞ்சத்திலும் , ஊர்மக்கள் அனைவரும் சமமாக தண்ணீர் குடிப்பதற்கு வழிசெய்தார்கள் .

நண்பரே , தலைவி நல்லவர்தான் , ஆனால் வல்லவர் இல்லை . துதிபாடிகளைவிட்டு ஒதுங்கினால் மட்டுமே அவர் வல்லவராகவும் திகல முடியும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by HAMZA (KAYALPATNAM) [27 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21515

Dear Admin...

நம் நகர்மன்ற தலைவர் தண்ணீர் பிரச்சினை சம்பந்தமாக விட்ட விளக்க நோடிசையும் நீங்கள் நம் வெப் சைடில் போட்டிருக்கலாமே?

Administrator: துண்டுப் பிரசுரம் தனி செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
http://kayalpatnam.com/shownews.asp?id=9028


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by M Sajith (DUBAI) [27 August 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 21523

சகோதரர் தேக் மற்றும் சம்சுத்தீன் காக்கா அவர்களுக்கு,

கொள்கை என்று ஏதாவது இருந்தால் தானே பரப்ப... அதானல போகிற போக்கில் இரண்டு மூன்று பெருநாள் என்று ஒரு சாராரையும், தனிப்பள்ளி என மறு சாராரையும் சொரிந்து தன் அரிப்பை தீர்த்து இருக்கிறார் போலும்...

தண்ணீர் பிரச்சினையை கையில் எடுத்திருப்பது ஒரு அவசியமான செயல்தான் - அதே ஆர்பாட்டத்தில் ஒரு நாளுக்கு 12 மணி நேரம் வரை இல்லாமல் போகும் மின்சார பற்றக்குறையையும் எடுத்திருக்கலாமே? - ஏன் எடுக்கலே - அதுல தலைவி வரமாட்டாங்களே அதுனாலயா... அல்லது IUML நிர்வாகிகள் எல்லாருமே ஜெனரேட்டரும், இன்வெர்டரும் மாட்டிவிட்டதாலா.?

உணர்ச்சி வசப்பட்டு "இரண்டாம் பைப் லைன் திட்டத்தை, போதிய அனுபவமோ - கட்டமைப்போ இல்லாத நிலையில் நகராட்சியே எடுத்து செய்திட தீர்மானித்திருப்பது இத்திட்டத்தை பயனற்றதாக்கி விடும்" என்ற ஒரு உண்மையும் சொல்லியிருக்கார், இதை மாற்ற வேண்டும் என ஒரு போராட்டம் அறிவித்தால் மிகவும் (ஊருக்கு) பிரயோஜனமாக இருக்கும்!!

எல்லாம் (நகரவை தேர்தல்) பழைய காட்டம்..!! - இப்போ தெரியுதா சொரிஞ்ச காரணம்? - நீங்க என்ன ஐக்கிய பேரவைக்கு என்ன ஆதரவாகவா நடந்தீங்க... அப்ப சொரியாம என்னதான் செய்வாங்க...

இடையிடையே இப்படி ஏதாவது நடத்துங்க, ஊருல பாக்கமுடியாத 'காயல' படத்தில்யாவது பாக்கலாம்!!

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. உங்களின் தாகம் தீர்க்க ...?????
posted by முத்துவாப்பா..... (அல்-கோபர் ) [27 August 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21529

இது தண்ணீர் பஞ்சத்தினால் வந்த போராட்டமா...?
இல்லை தலைவியின் வெற்றியை தாங்க முடியாமல் தினம் தினம் வடித்த கண்ணீர் பஞ்சத்தினால் வந்த போராட்டமா..?

ஊருக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள்
பதவியில் இருந்துதான் செய்ய வேண்டும்
என்ற அவசியம் இல்லை .....

பதவியை மட்டுமே பற்றி பேசுபவர்கள் ஊருக்கு நன்மை செய்ய நினைப்பவர்கள் அல்ல ...

எங்களின் தாகம் தீர்க்க தண்ணீர் மட்டும் போதும் உங்களின் தாகம் தீர்க்க ...?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...
posted by P.S.ABDUL KADER (kayal patnam) [27 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21534

ஆர்ப்பாட்டம், நகர மக்களையும், கூட்டணி அரசியல் கட்சி மக்களையும் ஓன்று திரட்டி நகரமன்றம் வாயில் முன் நடந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Hameed Rifai (Yanbu (KSA)) [28 August 2012]
IP: 84.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21546

தேய்பிறை போன்று தென்பட்ட தாய்ச்சபை இன்று நமதூரின் இளைஞர் அபூபக்கர் காக்கா போன்றோர்களால் மீண்டும் எழுச்சி அடைவதை எண்ணி மனதார மகிழ்ச்சியடைந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால், அவ்வப்போது இப்படி திருஷ்டி கழிக்கும் சம்பவங்கள் நடப்பதுதான் வேதனையாக உள்ளது.

நமதூரில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தென் மாவட்டங்களிலும் - ஏன் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மழை பொய்த்த காரணத்தால் வறட்சி காணப்படும் நிலையில், இங்கு மட்டும் ஆர்ப்பாட்டம் செய்வதால் என்ன வந்து விடப் போகிறது என்ற கேள்வியெல்லாம் நம்மைப் போன்றவர்களுக்குத்தான்! இது, மேடையில் உரக்க கர்ஜித்த சிங்கங்களுக்கு இல்லை. காரணம், அவர்களின் நோக்கம் நிறைவேற அவர்கள் பாடுபடுகிறார்கள். பாவம், அவர்களும் மக்கள் குட்டி உள்ளவர்கள்தானே?

சிறப்புப் பேச்சாளரும், இருப்புப் பேச்சாளர்களும் பேசியது குறித்து நான் அறிந்த தகவல்களைக் கொண்டு, என் மனதில் தோன்றிய சில கேள்விகளை இங்கே நான் கேட்க விரும்புகிறேன்:-

(1) அவரவர் குடிக்கவே தண்ணீரில்லாமல், ஜம்ஜம் தண்ணீரை சிறிய குடுவையில் வைத்து குடிப்பது போல் குடிதண்ணீரைக் குடித்துக் கொண்டிருக்க, இந்த சிறப்புப் பேச்சாளருக்கு மட்டும் குளிக்கவும் நல்ல தண்ணீர் கேட்டதாமே? அது கிடைக்காததால் அவர் அலுத்துக்கொண்டாராமே? நியாயம்தானா?

(2) இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த திட்டமிடும் முன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரியை சந்தித்து பேசியதாக ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதே? தண்ணீர் பம்பிங் குறித்து அவரிடம் தகவல்கள் கேட்டதில் தவறில்லை. நகரில் தண்ணீர் வினியோகிக்கப்படுவது குறித்து நகராட்சி தலைவரிடம் கேட்க வேண்டுமென்று இவர்களுக்கு தோன்றாமல் போனது ஏனோ? ஓ.... இந்த தலைவி இந்த “காயல”ர்களுக்கு கத்துக்காரி என்பதாலா?

(3) அடிச்சாலும், புடிச்சாலும் நம்மவர்தான் கவுன்சிலர் என்ற நிலையிலுள்ள வார்டு ஒன்றில் போட்டியிட்ட ஒருவரைத் தோற்கடிக்க இந்த “காயல”ர்களின் எஜமானர் செலவழித்த தொகையோ பல லட்சங்கள். அத்தொகையில் பாதியைத்தானே 7ஆவது வார்டில் முன்னாள் கவுன்சிலர் கேட்டார்? கொடுத்திருந்தால், இன்று 7ஆவது வார்டிலும் நம் சமுதாயத்தவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பாரே? (இது கற்பனையல்ல! எங்கள் முஹல்லா குருவித்துறைப் பள்ளியில், உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பின் நடைபெற்ற கூட்டமொன்றில், ஆலிம் ஒருவர் தெரிவித்த ஆதாரப்பூர்வமான தகவல்.)

என்னைப் பொருத்த வரை, என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மெஜாரிட்டியாக உள்ள இடத்தில் என் சமுதாயத்திலிருந்து பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நம் அறிவீனத்தால் இன்று சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார். அதற்காக, அவரை இப்படி பச்சையாக கீறிக் கிழிப்பதா?

இப்படி ஆர்ப்பாட்ட பொது மேடையில் அவரை “குடிகாரன்... தண்ணி அடிச்சிட்டு படுத்து கிடப்பான்” என்று திருவாய் மலர்ந்தருளியுள்ள “காயல”ரே? மனிதனாகப் பிறந்தவன் பாவம் செய்யும் இயல்போடுதான் படைக்கப்பட்டுள்ளான். செய்த தவறை எண்ணி திருந்தி வாழ்பவனே நல்லவன் என்ற நபிமொழியை பல மேடைகளில் பேசியிருப்பீர்களே? இப்போது மறந்துவிட்டதோ?

யாரும் நெஞ்சை நிமிர்த்தி நான் தப்பே செய்யாதவன் என்று சொல்ல முடியாது. இப்படியிருக்க, ஒருவரை பொது மேடையில் “குடிகாரன்” என்று சொல்ல தங்களுக்கு எப்படி மனம் வந்தது? அவரை நிரந்தர எதிரியாக்கி, தீவுத்தெரு - கீழ நெய்னார் தெரு - ஏன், சிங்கித்துறையிலுள்ள முஸ்லிம் மக்களுக்குக் கூட எதையும் செய்யக்கூடாது என்ற மனநிலைக்கு அவரை மாற்ற முடிவா?

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய என்.டி.ஸலாகுத்தீன் காக்கா அவர்கள் தேவையற்ற முறையில் உரையாற்றி தனது ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டதாகக் கேள்விப்பட்டேன். பாவம், அவர் என்ன செய்வார்? அவருக்குத்தான் கொடுத்து வைக்கவில்லையே? ஸபூர் செய்யுங்க காக்கா!

மனதில் பட்டதைக் கேட்டுவிட்டேன். அட்மின் அவர்களே, இது தனிநபர் விமர்சனமல்ல! பொது மேடையில் செய்யப்பட்ட தனிநபர் விமர்சனம் குறித்து கேள்விப்பட்டு நான் பதிவு செய்யும் கருத்து மட்டுமே! எனவே, அவ்வாறு பொது மேடையில் பேசப்படவில்லை என்று இருந்தால் மட்டும் எனது கருத்தை தள்ளுபடி செய்யவும். இல்லையெனில், இதனை வெளியிடவும். நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [28 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21560

ஒருவர் திறமையானவர் என்றோ அல்லது திறைமை குறைந்தவர் என்றோ, இன்னொருவரோடு ஒப்பிட்டு பேசுவதே முதலில் அபத்தம்.

காமராசரும் அண்ணாவும் அவரவர் வழியில் திறமையானவர்கள். எம்.ஜி.ஆறும், கலைஞ்சரும் தனித்தனி வழிகளில் திறமையானவர்கள். ஜெயலலிதா ஒரு மாதிரி, மம்தா இன்னொரு மாதிரி. எனவே அவரை மாதிரி இவர் இல்லை என்றோ, இவரைக் காட்டிலும் அவர் மோசம் என்பதோ, அவரவர் சொந்த மனப்போக்கு. அதை பொது மக்களிடம் வலுக்கட்டாயாமாக திணிக்கக்கூடாது.

பொதுமக்களின் தேவை சார்ந்து அல்லது அவர்களின் துயரங்களை முன் நிறுத்தி ஒரு அரசியல் கட்சி போராடுவது இயல்பானது. நமதூரில் பல கட்சிகளும் பல்வேறு சமயங்களில் இவ்வாறு போராடியுள்ளன.

ஆனால் முஸ்லிம் லீக்கின் போராட்டம் குறித்து அவ்வாறான இயல்பான ஒரு மன நிலை என்போன்றோருக்கு ஏற்ப்படவில்லை. ஏனெனில் முஸ்லிம் லீக்கில் அங்கம் வகிக்கும் பலரும் இன்றளவும் நகரமன்ற தலைவியை அரசியல் ரீதியாக எதிர்த்து செயல்படுபவர்கள். அதிலுள்ள பலரும் ஐககிய பேரவையில் அங்கம் வகிப்பவர்கள். எனவே தலைவிக்கு எதிரான இவர்களின் போராட்டத்தை மக்கள் சார்பானது என்பதை விட வேறு ஏதோ ஒரு "எதிர்நிலை" எடுத்து இவர்கள் போராடுகிறார்களோ... என்றுதான் எண்ணவேண்டியுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறையால் நகர மக்கள் படும் சிரமங்களை நான் குறைத்து மதிப்பிடவில்லை. நிச்சயம் அது நகர்மன்றத்தால் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். பருவ மழை பொய்த்து போனதால் குடிநீர் பற்றாக்குறை நமதூரில் மட்டுமல்ல, மாநிலத்தின் பல பகுதிகளிலும் இன்று இதுதான் நிலை. எனவே இது நமது நகருக்கு மட்டும் ஏற்பட்ட தனி சாபமல்ல. இதை நகராட்சி நல்ல முறையில் எதிர் கொண்டு தீர்க்கவேண்டும்.

காயல் மகபூப் அவர்களின் சர்ச்சைக்கு இடமான பேச்சு குறித்து இங்கு பலரும் எழுதியுள்ளார்கள். அவர் அதை பேசியஇடம்தான் தவறே தவிர அவரது அரசியல் நோக்கின்படி அது தவறான பேச்சு அல்ல.

ஆட்சியை இழந்து நாற்ப்பது ஆண்டுகள் ஆகிய பிறகும் கூட ஊருக்கு ஐம்பது பேர் இன்றும் காங்கிரஸ் கட்சியில் இருக்கத்தான் செய்கிறார்கள். சில பெரிய பணக்கார தனவந்தர் குடும்பங்களும் இதில் அடக்கம். நமதூரிலும் கூட இதைக் காணலாம். பழைய பெருங்காய டப்பாதான் என்றாலும் வாசனை இன்னும் இருக்கத்தான் செய்யும். லீக்கும் அது போல ஒரு காலியான டப்பாதான் (தம்பி அபூபக்கர் என்னை மன்னிப்பாராக.. )

ஆர்ப்பாட்டத்தின் படங்களை கொஞ்சம் உற்று நோக்குங்கள் அடடா... அல்ஹாஜ்கள்... அல்லாமாக்கள், ஊரின் பணக்கார பெருந்தலைகள்.. பச்சை நிற பட்டொளி வீசும் கொடிகளை பிடித்து நிற்கும் அழகுதான் என்ன....

இதெல்லாம் லீக் கலைஞ்சர் பெம்மானோடு கூட்டணி இருக்கும் வரைதான்... இன்னொரு கட்சியோடு லீக் கூட்டணி சேர்ந்தால் இவர்களில் பலரை லீக் மேடையில் பார்க்க முடியாது. ஆ.ராசா கட்சி பக்கம் நடையைக் கட்டி விடுவார்கள்.

இங்கு தாய்சபை, தந்தை சபை என்றெல்லாம் குரல்கள் கேட்க்கின்றன. எல்லா வெந்த சபை.. வேகாத சபை எல்லாவற்றையும் பார்த்து விட்டுதான் அலுத்துப்போய் இருக்கிறோம். வேறு ஜோலி இருந்தால் பார்க்க பொங்கல்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. காழ்ப்புணர்வே காரணம். .
posted by syed omer kalami (CHENNAI) [28 August 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 21571

ஊரின் குடிநீர் பிரச்சனைக்காக IUML நடத்திய போராட்டம் ஊர் நண்மைக்காக நடந்தது போல தெரியவில்லை. தலைவியின் மீதான தனிப்பட்ட காழ்ப்புணர்வை வெளிப்படுத்துவது போல் உள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் IUML இயக்கத்தின் பெயரில் வேறொரு எசமானின் தூண்டுதலாலும் பொருளுதவியாலும் நடந்தது போல் தெரிகிறது.

ஒட்டுமொத்த தமிழகத்தையே ஆட்டி அசைக்கும் இந்த தண்ணீர் பிரச்சனைக்கு நகர் மன்ற தலைவி எப்படி பொறுப்பாக முடியும் என்பது தெரியவில்லை.

காயல் மாநகர மக்களுக்கு இது ஒரு புதிய பிரச்னையும் அல்ல. எல்லா காலமும் எல்லா தலைமையின் கீழும் சந்தித்துக்கொண்டு இருக்கும் பிரச்சனைதான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. சகோதரரே அது மறியல் அல்ல முற்றுகை போராட்டம்
posted by Habeeb Mohamed Nasrudeen (Kayalpatnam) [29 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21583

இக்குறைபாடுகள் விரைந்து சரிசெய்யப்பட்டு நகர மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகிக்கப்படாவிட்டால், நகராட்சி வளாகத்திற்கு முன்பாக மாபெரும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். (Copy & Paste )

அருமை சகோதரரே உங்கள் செய்தியில் மறியல் என்ற வார்த்தை எழுதி உள்ளீர்கள். அசையும் பொருட்களைத்தான் மறியல் செய்ய முடியுமே தவிர நகராட்சி போன்ற கட்டிடங்களை (அசையாத கட்டிடம் போன்ற பொருட்களை) முற்றுகைதான் செய்யமுடியும்

அந்த கூட்டத்தில் பேச்சாளர் பேசும்போது மறியல் என்ற வார்த்தை, நமதூர் ரயில் நிலைய பணிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டால் விரைவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்ற வார்த்தையை தாங்கள் தவறாக புரிந்து திரித்து பதிந்துள்ளீர்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:...
posted by Cnash (Makkah ) [29 August 2012]
IP: 212.*.*.* Switzerland | Comment Reference Number: 21585

எங்கள் கட்சியும் இந்த ஊரில் உள்ளது என்பதற்கும்... நாங்க இந்த நகர்மன்றத்திற்கு குறிப்பாக இந்த தலைவியை தலைமையாக கொண்டு இயங்கும் நகராட்சிக்கு எதிரானவர்கள் என்பதை காட்ட நடத்தப்பட்ட இந்த ஆர்பாட்டம் உரியவர்கள் கவனத்தை சென்று அடைந்ததோ என்னவோ தெரியவில்லை .. ஆனால் வேண்டியவர்களை அடைந்து இருக்கும்.

நீங்கள் சொல்லும் இந்த அனுபவம் இல்லா நகராட்சி தலைமைக்கு ஆர்பட்டதுடன் சேர்த்து உருப்படியான ஆலோசனை வழங்கி முன்னர் இருந்த அனுபவசாலிகள் எப்படி இதை கையாண்டார்கள் என்பதையும் சேர்த்து சொல்லி இருந்தால் (அன்பளிப்பு கொடுப்பது போல உள்ள யோசனை இல்லை) இப்போது ஆளும் தலைவிக்கும்... கேட்கும் எங்களை போன்ற பாமர மக்களுக்கும் பயனாக இருந்து இருக்கும்....

அதை விட்டு விட்டு நீங்கள் இப்போது பேசி இருப்பது தே. மு. க. தலைவர் விஜயகாந்த் பேசுவது போல என்னிடம் மின் தட்டுபாட்டை தீர்க்க, வறுமையை ஒழிக்க.....இப்படி பல திட்டம் உள்ளது .. யாருக்கும் சொல்ல மாட்டேன்.. நான் ஆட்சிக்கு வந்தால் செய்வேன் என்று போன தேர்தலில் சொன்னது தான் நினைவுக்கு வருது..

கூட்டத்தில் பேசிய கொள்கை பரப்புரையாளர்... இந்த பிரச்னை குறித்த உண்மை நிலவரத்தை நோட்டீஸ் ஆகா ஆர்பாட்டம் நடந்த இடத்திற்கே வந்து விநியோகித்ததை ..படித்த பெண்ணுக்கு அழகா என்று கேட்டு இருக்கிறீர்களே... இதற்கான விளக்கத்தை ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத்தில தெரிவிக்காமல் ஆறுமுகநேரியிலா தெரிவிக்கணும்? என்ன உங்கள் வேதாந்தமோ?

அனுபவம் இல்லாதா நகராட்சி.. இரண்டாம் பைப்லைன் திட்டதை எடுத்து நடத்த கூடாது என்றும் ஆர்பாட்டத்தில் பேசி இருகிறீர்கள்.. நல்லது .. இதை தான் அங்கே தீர்மானமாகவும் போட்டு இருந்தார்கள் .. இதோ உங்கள் பார்வைக்கு ..

இரண்டாவது தீர்மானமான 2ஆவது பைப்லைன் திட்டத்தை நகராட்சி மூலமே செயல்படுத்தும் விஷயத்தில் தேவைப்படும் பொறியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் பெற்றே நிறைவேற்றிடவும், அவ்வாறு பெறப்படாதபட்சத்தில், அத்தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யலாம் எனவும் அனைத்து உறுப்பினர்களும் - நகர்மன்ற தலைவி கேட்டுக்கொண்டதற்கு இணங்க - எழுத்துப்பூர்வமாக இசைவு தெரிவித்தார்கள். (பழைய செய்தி)

இது பற்றி அன்று கருத்து தெரிவித்த உறுப்பினர் லுக்மான் .. இரண்டாம் பைப் லைன் திட்டத்தை தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மூலம் நிறைவேற்றுவதற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி நகர்மன்றமே நிறைவேற்ற நீண்ட யோசனைக்கு பிறகு தலைவி ஒப்புக்கொண்டார்கள்.. இப்போது சொல்லுங்கள் யாரு கிட்டே நீங்கள் இதை சொல்ல வேண்டும் என்று?

ஆர்பாட்டதிற்கு சம்பந்தமே இல்லாத மார்க்க பிரச்சனையான பெருநாள் கொண்டாடியது.. தனிபள்ளி இது எல்லாம் எதற்காக பேசப்பட்டது .. கூட்டதை திருப்தி படுத்தவா? இதுதான் கொள்கைபரப்பா?

கடந்த தேர்தலின் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த வேட்பாளரின் கணவர் பேசும் போது.. தலைவி நகராட்சி கமிசனர் அறையை அபகரித்ததாக பேசி இருக்கிறார். இதில் இருந்து தெரிகிறது ஆர்பாட்ட நோக்கம்.. தண்ணீர் தாகமா? பதவி போன சோகமா என்று?

இந்த ஆர்பாட்டத்தை இப்படி கேலி கூத்தாக நடத்தியதற்கு பதிலாக .. இந்த கூட்டத்தை வைத்து மழைக்காக தொழுகை நடத்தி இறைவனிடம் கையேந்தி இருந்தால் .இறைவனில் அருள் மழையாக கிடைத்து நீர்மட்டம் உயர்த்து இருக்கும்.... உங்கள் இயக்கத்தின் கொள்கையும் நீர்மட்டத்தை விட மேலே உயர்த்து நிற்கும்...இப்படியே பேசி கொண்டு இருந்தால் போரிங் போட்டு உறிஞ்சினாலும் இந்த இயக்க கொள்கை வெளியவராது!

சரி இதற்கு முன் கூடங்குளம் அணு மின் நிலையத்தை திறந்தால் மின்சாரம் எந்த தடையும் இல்லாமல் நமக்கு கிடைக்கும் என்று சொல்லி கடையடைப்பு நடத்துநீர்களே..தடை இல்லாமல் இப்போது கிடைக்கிறதா? அதையும் உங்கள் ஆர்பாட்டத்தில் சேர்த்து இருக்கலாமே .. அதை சேர்த்தல் நகராட்சி தலைவியை குறை சொல்ல முடியாது என்றா?

நல்ல வேலை சுனாமி வரும் போது இந்த தலைவி ஆட்சியில் இல்லை .. இருந்து இருந்தால் நகருக்குள் சுனாமியை தடுக்க தவறிய தலைவி என்றும் ஆர்ப்பாட்டம் நடந்து இருக்கும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:...
posted by கம்பல்பக்ஷ் அஹ்மத் இர்ஃபான் (பாங்காக், தாய்லாந்து.) [30 August 2012]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 21600

we never work for us, we always serve for the benefit of our community.

Even in Chennai water supply for Rs 800 only but in kayalpatnam we forced to buy Rs2400. If our panchayat board do like this how can the middle & lower class people servive. what they are doing? Does they actively work or work for the namesake? whatever it may be if there is a problem arise, Insha Allah IUML will be there at their earliest


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
பிறந்தது ‘நிகழ்காலம்’!  (28/8/2012) [Views - 4654; Comments - 25]
நகரில் சிறுமழை!  (24/8/2012) [Views - 2932; Comments - 5]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved