Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:33:22 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8078
#KOTW8078
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 29, 2012
குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை நீட்டிக்க மார்ச் 31 வரை அவகாசம் நீட்டிப்பு!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2326 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை நீட்டிக்க அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன்படி புதுப்பிப்பதற்கான கால அவகாசம் - பிப்ரவரி 29 வரை வழங்கப்பட்டிருந்தது. தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள், குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 01.01.2012 முதல் 31.12.2012 வரை ஓராண்டிற்கு நீட்டிக்க உத்தரவிட்டார்கள். மேற்படி உத்தரவின்படி புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளில் வருடம் குறிப்பிடாமல் உள்ள கூடுதல் தாளின் மேற் பகுதியில் 2012 என்று முத்திரையிட்டு செல்லத்தக்கதாக அறிவிக்கப்பட்டது.

புதுப்பிப்பதற்கான கால அவகாசம் 28.02.2012 வரை அளிக்கப்பட்டது. 1,97,70,682 குடும்ப அட்டைகளில் இதுவரை 1,86,58,768 குடும்ப அட்டைகள் நியாய விலைக் கடைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ளன. மேலும் கால நீட்டிப்பு வேண்டுமென்று கேட்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதனை கனிவுடன் பரிசீலித்த மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு மேலும் ஒரு மாத காலத்திற்கு அதாவது 31.03.2012 வரை நீட்டிக்க உத்தரவிட்டுள்ளது.

இதன்படி இருப்பிட ஆதாரமாக வழங்கப்பட்டுள்ள வெள்ளை மற்றும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டை வைத்திருப்போர் மற்றும் அரிசி, சர்க்கரை விருப்ப குடும்ப அட்டைகள் வைத்துள்ள உடல்நல குறைவு காரணமாக நடக்க இயலாதோர், வயது முதிர்வு காரணமாக நியாய விலைக் கடைக்கு வர இயலாத குடும்ப அட்டைதாரர்கள், புனிதப் பயணம் மற்றும் மதம் சார்ந்த உள்ளிருப்பு விரதம் மேற்கொண்டுள்ளோர் மற்றும் புதுப்பித்தல் நடைபெற்ற காலத்தில் தற்காலிகமாக வெளியூர் சென்றவர்கள் ஆகியோர் பயனடையும் வகையில் அவர்களது குடும்ப அட்டைகளை ஆன்-லைன் முறையில் புதுப்பித்துக் கொள்ள இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி http://210.212.62.90:8080/newfcp/cardvalidity.do என்ற இணையதள முகவரிக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். இதில் ரேஷன் பொருள் வேண்டுவோர் 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் இரண்டு நகல்களை எடுத்துக் கொண்டு ஒரு நகலை குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டும், மற்றொரு நகலை உரிய கடைக்காரரிடம் அளித்து ரேஷன் பொருட்களை தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.

ரேஷன் பொருள் வேண்டாதோர் மற்றும் இருப்பிட சான்றாக மட்டுமே வைத்துக் கொண்டுள்ளவர்கள் இணையதளத்தில் உள்ள 2012 ஆண்டுக்கான கால நீட்டிப்பு தாளின் ஒரு நகலை அவர்களுடைய குடும்ப அட்டையில் ஒட்டிக் கொண்டால் மட்டும் போதுமானது. மேற்படி இணையதள வசதி 01.03.2012 முதல் 31.03.2012 வரையில் நடைமுறையில் இருக்கும். மேற்படி இந்த வசதியை பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாண்புமிகு உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை,
தலைமைச் செயலகம், சென்னை.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:குடும்ப அட்டைகளின் செல்லத...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [29 February 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17306

நமது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள், குடும்ப அட்டைகளின் காலத்தை நீடித்ததுகு நமது தமிழக மக்கள் யாவர்களும் நமது நன்றியை கூறி கொள்ள வேணும். நல்ல செயல் பாடு . குறிப்பாக நமது பெண்கள்தான் பாராட்டுவார்கள்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved