Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:06:45 AM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7815
#KOTW7815
Increase Font Size Decrease Font Size
வியாழன், ஐனவரி 5, 2012
“என் கோரிக்கைகளை கூட்டப்பொருளில் சேர்க்காதது ஏன்...?” நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் அறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4729 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 12)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

30.12.2011 அன்று நடைபெற்ற காயல்பட்டினம் நகர்மன்றத்தின் மாதாந்திர கூட்டத்தில் தன் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை கூட்டப் பொருளில் (அஜென்டாவில்) சேர்க்காமல் புறக்கணித்தது ஏன் என 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் அதே கூட்டத்தில் கேள்வியெழுப்பியதோடு, தான் கேட்ட விபரங்களை தன் வார்டுக்குட்பட்ட பொதுமக்களுக்கும், செய்தி ஊடகங்களுக்கும் கொடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

நகராட்சியின் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களுக்கான அஜெண்டாவில் (கூட்டப் பொருளில்) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய விஷயங்களை மன்ற உறுப்பினர்கள் முற்கூட்டியே ஆணையரிடம் சமர்ப்பித்து, அது கூட்டப் பொருளில் சேர்க்கப்படுவது வழக்கம். அதைப் பயன்படுத்தி, உறுப்பினர்கள் தத்தம் பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள், தேவைப்படும் விளக்கங்கள் குறித்து கோரிக்கை வைப்பர். அவை கூட்டப்பொருளில் இடம்பெறும்.

சென்ற 22.11.2011 அன்று நடைபெற்ற கூட்டத்தில், என் வார்டுக்குத் தேவையான கோரிக்கைகள் அஜென்டாவில் சேர்க்கப்பட்டு, அவை நிறைவேற்றப்படுவதற்கு கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையிலும், அந்த கோரிக்கைகளை நிறைவேற்ற எந்தவித முன்முயற்சியும் மேற்கொள்ளப்படாததால், 30.12.2011 அன்று நடைபெற்ற இந்த மாதக் கூட்டத்தில் 01ஆவது வார்டு சம்பந்தமான எந்தக் கோரிக்கையும் வைக்காமல், பொதுவாக மன்ற உறுப்பினர்களும், பொதுமக்களும் அறிந்துகொள்ளும் பொருட்டு நகராட்சி சம்பந்தமான சில விபரங்களை அஜென்டாவில் சேர்க்கும்படி 23.12.2011 அன்று ஆணையரிடமும், நகர்மன்றத் தலைவரிடமும் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை வைத்தேன்.

அஜென்டாவில் சேர்க்கப்பட வேண்டிய விஷயங்களை ஆணையரும, நகராட்சித் தலைவரும் கலந்துதான் முடிவு செய்வது வழக்கம். ஆனால், என்னுடைய - நியாயமாக மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்களை அஜென்டாவில் சேர்க்காமல் ஆணையர் தன்னிச்சையாக நிராகரித்துவிட்டார்.

ஆகையால், மக்கள் அறிந்துகொள்வதற்காக அந்தக் கோரிக்கைகளை அறிக்கையாக இதன் மூலம் வெளியிடுகிறேன்.

நான் கேட்ட விபரங்கள் பின்வருமாறு:-

வருவாய் பிரிவு:
01. 2010-11ஆம் வருடத்தில் வசூலான வீட்டு வரிகள் எவ்வளவு? நிலுவையில் உள்ள வீட்டு வரி பாக்கி எவ்வளவு?

02. 2010-11ஆம் வருடத்தில் HOUSE PLANக்காக வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு? எத்தனை PLAN பாஸ் பண்ணப்பட்டது? எத்தனை நிலுவையில் உள்ளது என்ற விவரம்.

03. குடிநீர் இணைப்புகள் ஊரில் மொத்தம் எத்தனை உள்ளது? 2010-11இல் வசூலான தொகை எவ்வளவு? வசூலாகாத பாக்கி எவ்வளவு?

04. குடிநீர் இணைப்புக்காக 2010-11இல் வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு? 2011-12இல் நடப்பு மாதம் வரை வசூலிக்கப்பட்ட தொகை எவ்வளவு? எத்தனை இணைப்புக்கள் கொடுக்கப்படாமல் உள்ளது என்ற விபரம்?

05. 2010-11ஆம் ஆண்டில் நகராட்சி கிடைத்த இதர வருவாய்களின் விவரம்? இனம் வாரியாக தெரிவிக்கவும். (கடைகள், மார்க்கெட். ஏலம் போன்றவைகள்)

06. நகராட்சி பெயரில் எந்தெந்த வங்கிகள் கணக்கு உள்ளது. இன்றைய தேதியில் உள்ள மொத்த நிதி இருப்பு எவ்வளவு?

செலவின பிரிவு:
07. 2010-11ஆம் ஆண்டிற்கான செலவினங்கள் பட்டியல் பெயர் விவரத்துடன் தரவும்.

08. தெருவிளக்கு பராமரிப்பு வகைக்காக கடந்த 3 ஆண்டுகளில் செலவான தொகை வருட வாரியாக தெரிவிக்க வேண்டியது. எத்தனை தெரு விளக்குகள் உள்ளது என்ற விபரம் தெரிவிக்கவும்.

09. குடிநீர் வகைக்காக TWAD (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்) க்கு செலுத்தப்படும் வருடத்தொகை எவ்வளவு?

10. குடிநீர் குழாய்கள் பராமரிப்பு வகைக்காக கடந்த ஆண்டு செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு?

11. DEPRECIATION என்ற தலைப்பில் என்னென்ன செலவு இனங்கள் உள்ளது என்பதையும் அதற்காக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும் தெரிவிக்கவும்.

12. 2010-11ஆம் ஆண்டிற்கான நகராட்சியின் ஆடிட்டிங் ரிப்போர்ட்டை மன்றக் கூட்டத்தில் சமர்ப்பிக்க வேண்டியது.

DCW:
13. DCW தொழிற்சாலையிலிருந்து நகராட்சிக்கு எந்தெந்த வகையில் எவ்வளவு வருமானம் வருகிறது?

14. DCW தொழிற்சாலைக்கு நகராட்சி என்னென்ன வசதிகளை செய்து கொடுத்திருக்கிறது?

15. மக்கள் சேவை மையம் ஏற்படுத்தி பொதுமக்களிடமிருந்து பெறப்படும் எல்லா மனுக்களுக்கும் ரசீது கொடுத்து குறிப்பிட்ட காலவரையறைக்குள் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வசதி செய்யப்பட வேண்டும்.

16. நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களின் விபரம் என்ன? அந்த காலியிடங்களுக்கு பணியாளர்கள் நியமிக்க ஆவணம் செய்ய வேண்டும். உள்ளுர்வாசிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

17. சென்ற மாதக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது எடுக்கப்பட்ட மேல்நடவடிக்கை விபரங்கள் தெரிவிக்கவும்.


மேற்கண்டவாறு நான் கோரிய விபரங்கள் அமைந்திருந்தன.


இவ்வாறு காயல்பட்டினம் 01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by siddiq (chennai) [05 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15540

அனைத்து கேள்விவும் அற்புதம். நகராட்சியே கேள்விக்கு பதில் என்ன?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by Musthafa.MIN (chennai) [05 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15542

அஸ்ஸலாமு அழைக்கும்

நியாயமான கோரிக்கை தானையா .......அதே ஏன் யா agenda ல சேர்கள?........இந்த விபரங்கள் கிடைத்தா உறுபினர்கள் எல்லா விபரங்களும் அறிந்தவர்கலஹா செயல்படுவார்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by velli muhaideen (chennai) [05 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15544

அணைத்து கோரிக்கைகளும் அருமையான கோரிக்கை. இந்த கோரிக்கைகள் அனைத்துக்கும் நகர்மன்றம் பதில் அளிக்க வேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by mackie noohuthambi (kayalpatnam) [05 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15545

சகோதரர் லுக்மான் நகரமன்ற உறுப்பினாராக இருப்பதற்கு அருகதை இல்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இப்படி எசகு பிசகாக கேள்வி கேட்டால் ஆணையர் தலைவர் யாருமே பதில் சொல்லமாட்டார்கள். ஆட்சிக்கு வருமுன் தேர்தல் அறிக்கையாக வெளியிடுவதை எல்லாம் நம்பி ஒட்டு போடுவது நமது மக்களின் பண்பாடு. ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதுதான் நமது அரசியல் பண்பாடு.

1967 தேர்தலில் பேரறிஞர் அண்ணா அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம் என்றார்கள். நடந்ததா? எவ்வளவுதான் வருமானம் வந்தாலும் மக்களை பாழாக்கும் மதுவுக்கு துணைபோக மாட்டேன், மது விலக்கு தொடரும் என்றார். கலைஞர் ஆட்சிக்கு வந்தபின் மதுவிலக்கு தளர்த்தப்பட்டது. அது புரட்சி தலைவி ஆட்சியில் புத்தாண்டு தினத்தின் ஒரே நாளில் 150 கோடி ரூபாய்க்கு கொடிகட்டி பறந்திருக்கிறது. யாராவது கேள்வி கேட்டார்களா?

எனவே, லுக்மான் அவர்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் மனு செய்து இந்த விவரங்களை அறிந்து மக்களுக்கு சொல்லுங்கள். சும்மா நகர்மன்றத்தில் கேள்வி கேட்டு உங்கள் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்காதீர்கள்.

புதிய நகர்மன்றம் "புதிய பானையில் ஊற்றப்பட்ட பழைய கள்" அவ்வளவுதான். இதெல்லாம் அரசியலில் சகஜம், MR LOOK MAN! மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by suaidiya buhari (chennai) [05 January 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 15549

அஸ்ஸலாமு அழைக்கம்

நல்லதொரு கோரிக்கை இதுக்கு விரைவில் பதில் அளிக்கவும்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by PIRABU MUJEEB (Kayalpatnam) [05 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15551

ஒன்னாவது வார்டு கஊன்சிலர் அருமையான விளக்கத்தை தந்துள்ளார்.இதற்க்கு சேர்மன் விளக்கம் என்ன????????????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. பூதம் கிளம்புமா புஷ்வானம் ஆகுமா
posted by S.A.Muhammad Ali (Dubai) [05 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15557

லுக்மான் காக்கா கிணறு வெட்ட ஆரம்பிச்சிட்டாங்க. பூதம் கிளம்புமா புஷ்வானம் ஆகுமா என்று பொருத்து இருந்து பாப்போம். 1st Ward Member Always No.1.

After dark all cats are leopards. என்று ஒரு பழமொழி உண்டு. உங்களை போன்ற நல் உள்ளங்கள் நகராட்சி இருண்டு விடாமல் ஒளிர்ந்து கொண்டே இருக்க பாடு படுங்கள். எங்களால் இயன்ற அளவு ஒத்துழைப்பு தருகிறோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by S.A.HABEEB MD. NIZAR (Jeddah) [05 January 2012]
IP: 85.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15560

அதிகாரிகளால்... சரியான அறிக்கை தர முடியாது....

தோண்டினால்...நாற்றம் தான் வரும்....இருந்தாலும் தோன்றிதான் ஆகவேண்டும்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:“பஞ்சாயத்துக்கே பஞ்சாயத்தா?..
posted by OMER ANAS (KAYAL PATNAM) [05 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15564

ஊருக்கே பஞ்சாயத்து பண்ணும் பஞ்சாயத்துக்கே, பஞ்சாயத்து பண்ண லுக்மான் பாய் பொது மக்களிடம் பஞ்சாயத்து வைத்து இருக்கிறார்! என்ன பண்ண, வழமைபோல் நாமும் கமாண்ட் பண்ணிண்டு பேசாமல் இருப்போம்.பொது மக்களும்,பார்த்துவிட்டு சும்மா இருந்து விடுவார்கள்,

சம்பந்தப்பட்டவர்களுக்கோ,ஏதோ>>>>>>>>>>>>>>>>>>>>.மேல மழை பெய்த கதைதான் போங்க! பதில் வருமுண்ணா நினைக்கிறீங்க? வ..........ரும் ஆனா வர்ர்ரர்ர்ர்றாது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by PS ABDUL KADER (JEDDAH) [05 January 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15566

1 வது வார்டு உறுப்பினர் அவர்களின் கோரிக்கை மனுவை மட்டும் கூட்டத்தில் ஆணையர் சமர்பிக்காமல் இருந்தது வருந்ததக்கது. ஒருவேளை ஆணையர்க்கும் வார்டு உறுபினர்க்கும் ஏதும் கருத்து வேறுபாடு இருக்குதா - ஏன் இவருடையதை மட்டும் நிராகரித்துவிட்டார்.

1 வது வார்டு உறுப்பினர் கேட்ட கோரிக்கை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து சேகரிக்க எத்தனை நாள்தான் அவகாசம் வேண்டும். அடுத்த மாத கூட்டத்திலாவது வெளி வருமம்மா. வார்டு உறுப்பினர் கொண்டுவந்த கவன கோரிக்கை அணைத்து நகர மக்களுக்கும் அறியவேண்டியவை.

ஆக நகர தலைவி, மட்டும் அணைத்து வார்டு உறுபினர்களும் துணை நின்று லுக்மான் அவர்கள் வைத்த கோரிக்கைக்கு தீர்வுகாணவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by HAFIL AMEER (DUBAI) [05 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15568

முதல் வார்டு உறுப்பினர் லுக்மான் காக்கா அவர்களுக்கு எனது பாராதுக்கள் மற்றும் நன்றிகள்.

அவரது கோரிக்கைகள் எவ்வித காரணமும் இன்றி நிராகரித்தது, நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

நமதூர் ஆணையர் என் இதனை தனிச்சையாக நிராகரிதார் என்பதற்கு அவர் விளக்கம் தரவேண்டும்.

அப்படி இல்லையென்றால், லுக்மான் காக்காவால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் கடமை ஆணையருக்கு உண்டு.

அப்படி அவர் நிராகரித்தால், அதில் ஊழல் நடந்திருப்பதாக கருதவேண்டிவரும்.

அப்படி ஊழல் நடந்திருந்தால் அதில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அவர்கள் அனைவரின் மேலும் சட்டப்பூர்வமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் லுக்மான் காக்கா அவர்களின் முயற்சி வெற்றியடைய துனைபுரிவனாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by Zainul Abdeen (Dubai) [05 January 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15570

அனைத்து கேள்விகளும் சந்தேகங்களும் நிதி மற்றும் பொருளாதாரம் சம்மந்தமாக இருப்பதால் இதை நிராகரிக்க வேண்டியதாயிற்றோ என்று எண்ண தோன்றுகிறது.

IT 's all in the game .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by masood (calicut) [05 January 2012]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 15573

தன்னுடைய வார்டை விட ஊர் நலனில் அதிக அக்கறை உள்ளவராக செயல்படும் அன்பு சகோதரர் லுக்மான் காக்கா அவர்களுக்கு பாராட்டுக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by Mauroof (Dubai) [05 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15574

Comments Reference # 15545 -ல் "சகோதரர் லுக்மான் நகரமன்ற உறுப்பினாராக இருப்பதற்கு அருகதை இல்லை என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்" என்ற வாக்கியம் படிப்பதற்கு நன்றாக இல்லை.

நகர்மன்ற உறுப்பினர் சகோ. லுக்மான் இந்த அளவிற்கு ஒரு நல்ல நிர்வாகமாக நமது காயல் நகர்மன்றம் இருக்க வேண்டும் என விரும்புகிறாரே இது சாத்தியப்படும் ஒன்றா, அவருக்கு இது தெரியாதா என்ற நோக்கில்தான் அந்த வாக்கியம் அமைந்திருக்கும் என என் போன்றோர் உறுதியாக நம்புகிறோம். இருப்பினும் அவ்வாக்கியம் மாற்றி அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என் போன்றோரின் தாழ்மையான கருத்து.

உறுப்பினரின் கேள்விகளுக்கு நகர்மன்றம் (துல்லியமான, சரியான பதிலை எதிர்பார்ப்பது சரி அன்று) பதிலளிக்க குறைந்தது 6 மாத காலம் ஆகும். தாக்கல் செய்யப்படவேண்டிய இடத்தில் எவ்வித காரணங்களும் கூறப்படாமலேயே நிராகரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையை பொதுமக்கள் அறிவதற்காக இணையத்தில் வெளியிடுவேன் என்பதையும் உறுப்பினர் நகர்மன்றத்திலேயே அறிவித்து வெளியிட்டிருப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று. Congratulations Mr . Lukmaan.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. ஆட்டை பிடித்த பிடியில் புடுக்கை அறுக்க பாக்காதீங்க....!
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [05 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15577

அஸ்ஸலாமு அலைக்கும். நகர்மன்ற உறுப்பினர் ஏ.லுக்மான் காக்கா தான் லஞ்சம் வாங்கமாட்டேன் என்று சத்திய மிட்டு சொல்லி இருப்பதால் எந்த வடிவிலாவது உங்களை லஞ்சம் அண்டாமல் பார்த்து நடப்பதே..... உங்களுக்கு பெரிய போராட்டமாக இருக்கும் நிலையில் இப்படி போட்டு உடைப்பது வீண் சர்ச்சைகளையும், நகர்மன்ற தலைவர், ஆணையரின் நேர்மையான பனியில் தொய்வை ஏற்ப்படுத்தும்.

"வெளஞ்ச கட்டையில் வேல் பாச்சினால் வேல் தான் உடையும்." ஆகையால் பெரிது படுத்தாமல் தாங்களின் கோரிக்கையை பொறுமையுடன் தீர்வு நீங்களே.... காண முடியும். பிஸ்மி சொல்லி இப்பம்தான் ஆட்டை பிடித்துள்ளீர்கள்...... கொஞ்சம், கொஞ்சமா... படிப்படியா.... காயை நகர்த்துங்கள். எடுத்த உடனே.... மேவாசாமானை அறுக்க நினைப்பது புத்திசாலித்தனம் இல்லை. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by Javed Nazeem (Chennai) [05 January 2012]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15578

Brother Lukmaan, you deserve an applause. :clap: clap:

Some body some time back talked about a watch dog, right? This is the time and the agenda to start it.

சாளை பஷீர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Surprise...
posted by Riyath (HongKong) [05 January 2012]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 15579

Looks like, these questions are not taken from 'Out of Syllabus' for Municipality offiers !!!. May be they will get back to Mr.Lukman as soon as found their convenient time. If not, search other way to find this data and spread to people. Everyone will salute for this great hard work.

Nothing will come out of Nothing

**Wasalam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. மக்கள் மன்றத்தின் ஊழியரே கமிசனர்! மக்களின் பிரதிநிதிகளுக்கு கட்டாயம் பதில் தந்தே இருக்கவேண்டும்!!!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [05 January 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15580

அஸ்ஸலாமு அழைக்கும்.

சகோதரர் A . லுக்மான் அவர்கள் மக்களுக்காகவும், பிரிதிநிதிகளுக்கும் மிக மிக அவசியமாக தெரிய வேண்டிய மற்றும் எதிர்கால திட்டங்களை நிறைவேற்ற அடிப்படையான பொருளாதார மற்றும் நிதி நிலைகளை பற்றி மிக அக்கறையுடன் கேட்டுள்ளார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

தலைவியே! தங்களின் நிலைப்பாடு இதன் விசயத்தில் என்ன. கமிசினரின் தணிக்கை காரணமாக அவரின் ஒப்புதல் இல்லாமல் தாங்கள் இந்த நியாயமான கோரிக்கைகளை அனுமதித்து விவாதத்திற்கும், தகுந்த பதில் பெறவும் ஏன் செய்யவில்லை.

நகரமன்ற ஊழியர் முதல் அதிகாரிகள் வரை மக்களுக்காக தான் அவர்கள் வேலை செய்வதை முதலில் நன்கு உணரவேண்டும்.மேலும் இந்த நகர்மன்றம் முன்பு போல் அரசியல் கலந்த நகர்மன்றம் இல்லை மாறாக மக்களுக்காக மக்களின் முழு விருப்பத்துடன் தனி நபர்களாக தேர்ந்து எடுக்கப்பட்டு நான் முன்பு கருத்து பதிந்தது போல் உரிபினர்களுடேன் அதிகாரிகளாகிய தங்களையும் மக்கள் மிக கவனமாக கவனிக்கிறார்கள் என்பதை இந்த கமிசனர் தொடர்சியாக மறந்து வருகிறார் என்பதையே இந்த தணிக்கை நாடகம் நிருபிக்கிறது.

மேலும் இந்த கமிசனர் அவர்கள் பல சமயத்தில் தலைவி மற்றும் உரிபினர்களுக்கு எந்தவித முன் அறிவிப்பும் தெரிவிக்காமல் அவசர அவசரமாக முக்கியமான விசியங்கலாகிய சுனாமி குடியிருப்பு ஆக்கியமிப்பு முதல் இரண்டாம் குடிநீர் திட்டம் வரை, அதிகாரிகளின் கலந்துரையாடலுக்கும் மற்ற பிற செயலுக்கும் தன்னிசையாகவே செயல்படுவதும் இது போல் மக்களுக்கான நியாமான விசியங்களை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு பதில் கூறுவது ஆடிட்டிங் அதிகாரிகளை விட அதிக கடமையும் உரிமையும் உள்ளவர்கள் என்பதை மறந்து செயல் படுவது கண்டனத்துக்குரியது.

தேவைபட்டால் பதில் கூற கூட்டத்தில் உரிபினர்களிடம் கால வாகாசம் கேட்டிருக்கலாம்.

கமிசினரின் செயல் மீண்டும் இது போல் தொடர்ந்தாள்... நகரமன்ற உரிபினர்ல்களே ஒற்றுமையுடன் அனைவரும் ஒன்று சேர்ந்து நல்ல மக்களுக்குக்காக பாடு படும் மிக நேர்மையான அதிகாரிகளை பெற தீர்மானம் இயற்றி முயற்சி செய்திடுங்கள்.

அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளே தாங்கள் அனைவர்களும் மக்களுக்காக நேர்மையாக செயல்பட்டால் இந்த காயல் மாநகர மக்கள் நன்றயுடேன் தங்களின் நல்ல செயலுக்கு பாராட்டி கவ்ரவிப்பார்கள். இல்லையேல் கவிழ்க்கவும் தயங்க மாட்டார்கள்.

Administrator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. கோரிக்கை
posted by சதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia) [05 January 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15581

சகோதரர் லுக்மானுடைய கோரிக்கை, பல தகவல்களை வேண்டியுள்ளது. இவைகளை கேட்டுத்தான் பெற வேண்டுமா? குறைந்தது ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது அதிகாரிகள் நகர்மன்ற கூட்டத்தில் வைக்க வேண்டாமா?

அதிகாரிகளின் பணி சுமையின் காரணத்தால் வெளியிட முடியவில்லையா? என்று தெரியவில்லை. ஆனால் இந்த அடிப்படை தகவல்கள் இருந்தால்தானே நம்மூர் வளர்ச்சி திட்டத்தில் மன்ற தலைவி மற்றும் உறுப்பினர்களால் ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்க முடியும். நகராட்சி அலுவலர்களும் மன்ற உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு நல்கி, காயல் நகரத்தை முன்மாதிரி நகரமாக மாற்ற வேண்டும்.

KAYAL FIRST TRUST-க்கு ஒரு வேண்டுகோள்: நீங்கள் முன்பு பல முக்கியமான விடயங்களை, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்று, இந்த வலைதளம் மூலம் நகர மக்களுக்கு அறிய தந்துள்ளீர்கள். சகோதரர் லுக்மானுடைய கோரிக்கைகள் முக்கியமானது என்பதால், தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இதை பெற முடியுமா? விளக்கம் தந்தால் நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by syedahmed (kayalpatnam) [05 January 2012]
IP: 116.*.*.* Hong Kong | Comment Reference Number: 15584

Find out the solution for all these absolute questions asked from Mr.Lukman, and propagate the true to the kayalties without further delay.Awaiting your good and prompt reply soon.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார் ) [05 January 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15587

சகோதரர் லுக்மான் அவர்கள் உண்மையில் களத்தில் குதித்து விட்டார்கள். இன்ஷாஹ் அல்லாஹ் கண்டிப்பாக வெற்றி நிச்சயம்.

பாராட்டுக்கள். உங்களுக்கும், ஊரின் நன்மைக்கும் அனைவர்களின் ஆதரவும் துஆவும் என்றும் உண்டு.

சகோ.சதக் இப்னு சாகிப் அவர்கள் கூறியபடி, Kayal First Trust இதில் உங்களின் வழமையான ஒத்துழைப்பை கொடுங்களேன்.

தம்பி M.S. ஸாலிஹ் உன்னுடைய சாட்டையையும் சுழல ஆரம்பி. இரண்டு சாட்டையாக இருந்தால் வண்டி சரியாக ஓடும், லுக்மான் காக்கா உடைய சாட்டையையும் சேர்த்து. (இப்படி சாட்டைகள் ஊழலுக்கு எதிராக ஒன்று சேரும் என்று தான் சகோ. S.K.ஷாலிஹை கழற்றி விட்டார்கள் போலும்)


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by mohiadeen (kayalpatnam) [05 January 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15603

1 வது வார்டு கவுன்சிலர் நண்பன் ஹாஜி A .லுக்மான் அவர்கள் ஊர் மக்கள் அறிய கொடுத்த கேள்விகளுக்கு Mr commissioner கண்ணையா முழு பூசனிக்காய சாப்பாட்டில் மறைபவராச்சே ஏன் பதில் சொல்லுவார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by Administrator (Chennai) [06 January 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15623

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர்கள் சதக்கத்துல்லாஹ் மற்றும் சாலை ஜியாயுத்தீன் ஆகியோரின் ஆலோசனைக்கு நன்றி, ஏற்கனவே காயல்பட்டின நகர்மன்றத்திடம் - தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்கப்பட்டு - பதிலுக்காக காத்திருக்கிறோம்.

காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் - நகர்மன்ற செய்திகளில் - RTI மூலம் பெறப்படும் தகவல்கள் - இன்ஷா அல்லாஹ் - முக்கிய அங்கம் வகிக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by mackie noohuthambi (kayalpatnam) [06 January 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15625

தம்பி மவ்ரூப் அவர்கள் சுட்டிக்காட்டியதற்கு நன்றி.

சகோதரர் லுக்மான் அவர்கள் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யும்போது கோமான் ஜமாஅத்தாரிடம் சொன்ன செய்தி, எனது கைக்காசை செலவு செய்து போட்டியிடமாட்டேன். அப்படி செய்தால் நான் அந்த பணத்தை எடுப்பதற்கு நகர்மன்றத்தில் லஞ்சம் வாங்க வேண்டிவரும்,எனவே நீங்கள் செலவு செய்தால் நான் நிற்கிறேன் என்று சொல்லி அதன்பிறகு தான் தேர்ந்தேடுக்கப்பட்டால் என்னென்ன செய்வேன் என்னென்ன செய்யமாட்டேன் என்று முதல் ஆளாக சத்தியம் செய்து தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ஒட்டு மொத்த ஊர் மக்களின் நன் மதிப்பை பெற்றவர்.

ஒரு வேளை ஆண்கள் தலைவராக வரலாம் என்ற முன்னைய விதிமுறை அமுலில் இருந்தால் அவரே தலைவராக வரக்கூடிய தகுதியையும் பாராட்டையும் எடுத்த எடுப்பிலேயே பெற்றிருந்தார்.அத்தகையவர் இப்படி மனம் நொந்து இணையத்தளத்தில் தனது உணர்வுகளை பதிவு செய்திருக்கிறார்.

நேர்மயானவருக்கே இந்த பாடு என்றால் அவர் இந்த மன்றத்தில் பதவி வகிப்பதில் அர்த்தமில்லை என்ற மனவருத்தத்தில் எழுதப்பட்ட வார்த்தைகள், அவரை அவை காயப்படுத்தி இருக்க நியாயம் இல்லை. உங்களை போன்றவர்கள் மனம் புண்பட்டிருந்தால் அதை திருத்திக்கொள்வதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. இந்த இணையதளத்தின் MODERATOR அவ்வளவு சாதாரணமான ஆள் இல்லை, தவறு என்று தெரிந்திருந்தால் உடனே EDIT செய்துவிடுவார்.அரசியல் அதுவும் காயல்பட்டினம் அரசியல் ஒரு வித்தியாசமானது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by naleem (hong kong) [06 January 2012]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 15629

அஸ்ஸலாமு அழைக்கும்

மற்ற உறுப்பினர்கள் இதைபற்றி என்ன சொல்கிறார்கள் என்று உலகில் உள்ள காயளர்கள் எல்லோரும் மிக ஆவலாக காத்துருக்கிரார்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by hasbullah mackie (dubai) [06 January 2012]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15631

சகோதரர் லுக்மான் அவர்கள் கேள்வி கேட்டார்கள்? இப்பொழுது தான் election நடந்து நகராட்சி அமைந்திருக்கிறது .....அதற்குள்ளே எப்படி புதிய தலைவர்கள் விவரம் அளிக்க முடியும்.... ஒரு வருடம் கழித்து இந்த விஷயம் கேட்டிருந்தால் இந்த தலைவரால் பதிலளிக்க முடியும்....இந்த கேள்வியை முன்னாள் தலைவர் அவர்களிடம் கேட்டிருந்தால் விளக்கம் கிடைத்திருக்கலாம்....

சரி நம்ம ஊர் விஷயத்தை விடுங்க இதை போல தமிழ் நாடு விஷயத்தை எடுத்து கேட்டிருந்தால் அம்மா அவர்கள் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு உத்தரவு போட்டு ஒரு தமிழ் குடிமகன் ஒரு உரிமையான விவரம் கேட்டுள்ளார்.. உடனே பதில் அளியுங்கள்...ஒரு நேர்மையான அரசாங்கத்தை நடத்துவோம் என்று சொல்லுவார்....இந்த நிலைமையில் பதில் கிடைக்க விட்டால் சகோதரர் லுக்மான் அவர்கள் ஒட்டு போடமாட்டார்கள? இது என்ன நபியின் ஆட்சியா நடக்கிறது ?

தகவல் அறியும் சட்டத்தில் இந்த கேள்விகளை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் ...
அதன் பிறகு அது முறையாக கிடைக்காவிட்டால் போராடுங்கள்.....

உறுதி மொழி எடுக்கும் பொது சில ரகசியங்களை வெளிபடுத்த மாட்டேன் என்று கூறுகிறீர்கள்....

இந்த ஒரு விஷயத்தை வைத்து நகராட்சியை ஒதுக்கி விட்டு உங்கள் பகுதிக்கு கிடைக்க வேண்டிய நல்ல திட்டங்களை வீணாகி விடாதீர்கள்....

முன்னாள் தலைவரிடம் இதை பற்றிய விவரம் கேட்டு கொள்ளலாம் என்பது எனது வேண்டுகோள்... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:“என் கோரிக்கைகளை கூட்டப்ப...
posted by Mauroof (Dubai) [08 January 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15735

எனது தந்தையின் (Comments Reference # 15625) கருத்துக்கு நன்றி. அதில் மாற்று கருத்து இல்லை.

(Comments Reference # 15631 மற்றும் இன்னும் ஒரு சில கருத்துப்பதிவில் 1 -வது வார்டு உறுப்பினர் "தகவல் அறியும் உரிமை" சட்டத்தின் கீழ் இக்கேள்விகளுக்கு விடை காணலாம் என்று கூறுவது ஏற்புடையதாக தெரியவில்லை. ஏன் எனில் நம்மை போன்ற பொது ஜனம் இது குறித்து நகர்மன்றத்தில் கேள்வி கேட்டு அதற்கு தகுந்த பதில் கிடைக்காத பட்சத்தில் "தகவல் அறியும் உரிமை" சட்டத்தை பயன்படுத்துவதுதான் சரி. இது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாவட்ட ஆட்சியரகம், மாநில அரசு, மத்திய அரசு என்று எல்லாவற்றுக்கும் பொருந்தும்.

ஆனால் ஒரு நகர்மன்ற உறுப்பினர் என்ற வகையில் நகர்மன்றத்திலேயே இக்கேள்விகளை கூட்டப்பொருளில் சேர்க்குமாறு வைக்கப்பட்ட கோரிக்கை எக்காரண காரியமும் இன்றி தள்ளுபடி செய்யப்பட்டது சரி அல்லவே. நபிகளின் ஆட்சி அப்பழுக்கற்ற எல்லா மாந்தர்களுக்கும் நீதமான இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய ஆட்சி படைத்த இறைவனின் ஆட்சி, அது இந்திய துணைக்கண்டத்தில் எங்கும் இல்லை என்பதை எல்லோருமே அறிவர். அதை அறிந்துதானே நபி வழி வந்த கலீபா உமர் (ரலி) அவர்களின் ஆட்சி இந்தியாவிற்கு வேண்டும் என மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி கூறினார்.

இது போன்ற விருப்பங்களை வெளியிட்டதாலேயே பாவிகள் அவருக்கும் முடிவு கட்டினர். வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா~~ வையகம் இதுதானடா~~~ வையகம் இதுதானடா~~~~" என்ற சங்கீத சக்கரவர்த்தி ஜி. இராமநாதனின் பாடல் வரிகள்தான் நினைவில் வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved