Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
9:36:12 PM
செவ்வாய் | 16 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1720, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:07Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:47
மறைவு18:27மறைவு00:54
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7597
#KOTW7597
Increase Font Size Decrease Font Size
திங்கள், நவம்பர் 21, 2011
நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று (நவ.21) காலையில் நடைபெற்றது! தேர்தல் முடிவுகள்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4978 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (36) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகராட்சி வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு தேர்ந்தெடுப்பதற்கான உறுப்பினர்களின் கூட்டம் இன்று (21.11.2011) காலை 09.30 மணிக்கு, நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது.

2006ஆம் ஆண்டு தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின் விதி 98.99இன் படியும் / 1995ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகளின் விதி 73/94இன் படி, காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் தலைமை அலுவலரும், நகர்மன்ற ஆணையரும் (பொறுப்பு) ஆன கண்ணையா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.



வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழு தேர்தல்:
துவக்கமாக வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழுக்கான தேர்தல் நடைபெற்றது. நான்கு உறுப்பினர் பொறுப்பிடங்களைக் கொண்ட இக்குழுவிற்கு போட்டியிட்ட

06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹைதீன் 15 வாக்குகளும்,

07ஆவது வார்டு உறுப்பினர் அந்தோணி 13 வாக்குகளும்,

09ஆவது வார்டு உறுப்பினர் ஹைரிய்யா 07 வாக்குகளும்,

14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கிய ஷீலா 14 வாக்குகளும்,

17ஆவது வார்டு உறுப்பினர் அபூபக்கர் அஜ்வாத் 16 வாக்குகளும் பெற்றனர். இந்த ஐவரில், குறைந்த வாக்குகளைப் பெற்ற 09ஆவது வர்ர்டு உறுப்பினர் ஹைரிய்யாவைத் தவிர மற்ற அனைவரும் இக்குழுவின் நான்கு பொறுப்பிடங்களுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.



பணி நியமனக் குழு தேர்தல்:
அடுத்து பணி நியமனக் குழு தேர்தல் நடைபெற்றது. ஓர் உறுப்பினர் பொறுப்பிடத்தைக் கொண்ட இக்குழுவிற்கு போட்டியிட்ட

01ஆவது வார்டு உறுப்பினர் ஏ.லுக்மான் 07 வாக்குகள் பெற்றார்.

16ஆவது வார்டு உறுப்பினர் சாமு ஷிஹாபுத்தீன் 11 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஒப்பந்தக் குழு தேர்தல்:
இறுதியாக ஒப்பந்தக் குழு தேர்தல் நடைபெற்றது. ஓர் உறுப்பினர் பொறுப்பிடத்தைக் கொண்ட இக்குழுவிற்கு போட்டியிட்ட

10ஆவது வார்டு உறுப்பினர் பத்ருல் ஹக் 13 வாக்குகளும்,

15ஆவது வார்டு உறுப்பினர் ஜமால் 04 வாக்குகளும் பெற்றனர்.

ஒரு செல்லாத ஓட்டும் பதிவானது. இறுதியில் பத்ருல் ஹக் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நேர்மையாக , நீதமாக .......
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [21 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13653

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நமது மன்றத்திலே இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு உறுப்பினர்கள் , பணி நியமனக் குழு உறுப்பினர் - மற்றும் ஒப்பந்தக் குழு உறுப்பினர் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்புகளிலே நீதமாக நடந்து - சிறந்த முறையில் பணி செய்து - அரசுக்கும் மக்களுக்கும் நேர்மையான சேவை செய்திட வேண்டுகிறேன்.

நேர்மையாக , நீதமாக நடக்கும் காலமெல்லாம் இறைவனின் அருள் உங்களுக்கு கிடைக்க வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வாழ்த்துக்கள்
posted by Saalai.Abdul Razzaq Lukman (Dubai) [21 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13655

அஸ்ஸலாமு அலைக்கும்

தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். உங்களுக்கு பதவி கிடைக்க வில்லை. மாறாக பொறுப்பு தர பட்டுள்ளது. இந்த பொறுப்பை அல்லாஹ்விற்கு பயந்து லஞ்ச லாவண்யம், ஊழல் இல்லாமல் ஊர் மற்றும் நம் நகராட்சிக்கு நன்மை பெற்று தருவீர்கள் என்று என்னை போல் உள்ள பொதுமக்கள் நம்புகின்றோம். அந்த நம்பிக்கை வீண் போகாது என்று நம்புகிறோம்.

அல்லாஹ் உங்களின் எல்லா நல்ல முயற்சிகளிலும் உதவியாக நிற்பானாக ஆமீன். உதவி தலைவர் தேர்தலில் நடைபெற்ற கசப்பான சம்பவங்களை மறந்து, ஊர் நன்மைக்காக தலைவிக்கு, அவர் கொண்டுவரும் அனைத்து நலத்திட்டங்களுக்கும் உங்களின் பூரண ஒத்துழைப்பை கொடுத்து காயல்பட்டனத்தை முன் மாதிரி நகராட்சியாக ஆக்குங்கள்.

அடுத்த நகராட்சி தேர்தலிலும் உங்கள் சேவைக்காக உங்களை, உங்கள் வார்டு வாக்காளர்கள் வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி, ஹராம்-ஹலால் பேணி செயல் படுங்கள். அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் உங்களின் தனிப்பட்ட தேவையையும் நிறைவேற்ற போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Mere Spectator ?
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [21 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13656

இரண்டு நாளைக்கு முன் நமதூர்ர் மெயின் ரோட்டிலுள்ள (பஜாரில்) ஒரு பிரபலமானவரின் கட்டிடத்தில் கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. Thanks to the Conspirator who is working shamelessly as a Director for the Financier, has came all the way from Chennai to stage this drama.

5 வேலை தொழக்கூடிய படித்து பட்டம் பெற்ற ஒரு சகோதரரும், சகோதரியும் தோற்றுவிட்டார்கள். Thanks to the Financier

இது துணைத்தலைவர் தேர்தலில் அளிக்கப்பட பொருளாதார வாக்குறுதியின் தொடர்ச்சி (பதவி வாக்குறுதி) இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

Shame on those who have blood (money) in their hands.

இவர்களைப் பற்றி நன்கு அறியாத ஒரு படித்த பெரியவர், இவர்கள் Chicken தருவார்கள் என்று நம்பி அந்த கூட்டத்திற்கு சென்றார். அங்கு இப்பெரியவருக்கு Bone (எலும்புத்துண்டு) (தருவதாக வாக்குறுதி) கொடுக்கப்பட்டது. அதை அவர் தூக்கி எறிந்துவிட்டார். ஆக மொத்தத்தில் படித்த பட்டதாரிகள் அங்கு பொம்மைகளாக்கப்பட்டுவிட்டார்கள்.

நிதி அமைச்சரின் விருப்பபடி எல்லாம் இனிதே நடைபெற்றுவிட்டது. இனி நமது நகராட்சியை சென்னைக்கு மாத்துவது நல்லது. ஏனெனில் நிதியை நேராகவே பெற்றுக்கொள்ளலாம். இடைத்தரகர்கள் தேவையில்லை. ஒரு வேலை ஊரில் நகராட்சி இயங்கும் பட்சத்தில் Remote Control லுக்கு வேலை அதிகம் வரும். இடைத்தரகர்கள் பயன் அடைவார்கள். I mean Bank charges has to be borne by either for transferring the fund from Chennai to Kayalpatnam.

இவர்கள் பங்குக்கு செய்யவேண்டியதை இவர்கள் செய்துவிட்டார்கள். பொதுமக்கள் தங்கள் பங்குக்கு என்ன செய்யப்போகிறார்கள்?

Are we happy being mere spectators like before ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. வெற்றி பெற்றவர்கள் துணை தலைவர் தேர்தலில் விலை போனவர்களா?
posted by Firdous (Colombo) [22 November 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13659

நடைப்பெற்ற நகராட்சியின் சிறப்பு பிரிவு தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் யார்?

இவர்களில் நகர் மன்ற துணை தலைவர் தேர்தளில் விலை போனவர்கள் உண்டா ? அவ்வாறிருப்பின் நகர் மன்றம் மீண்டும் நாறும் மன்றமாக இருபதற்கு சாத்திய கூறுகள் அதிகம் என்று என்னைப்போல் உள்ள பொது எண்ணம் கொண்டவர்களுக்கு ஐயம் ஏற்பட்டுள்ளது.

நாங்கள் பெரிதும் எதிர்பார்த்த சகோதர் லுக்மான் ஹாஜி மற்றும் நண்பர் ஜகாங்கீர் அவர்கள் பதவிக்கு வரமுடியாமல் போனது பெருத்த ஏமாற்றம்! இவர்கள் லஞ்சத்திற்கு எதிராக சூளுரைத்ததுபோல் இப்பொழுது தேர்ந்தெடுக்க பட்டவர்கள் சத்தியம் செய்வார்களா? அவ்வாறு அவர்கள் தடம் புரள்வின் அவர்களை ஆதரித்த ஜமாத்கள் மற்றும் வார்டை சார்ந்த மக்கள் கேள்வி கேட்பார்களா?

சகோதரர் திருதுவராஜ் கடந்த நகர்மன்றம் பற்றி கூறியதுபோல் மீண்டும் உருவெடுத்துள்ளதா!

யா அல்லாஹ்! காயல்பதியை லஞ்ச லாவனியதிளிருந்து காப்பற்றுவயாக! கடந்த நகரமன்ற தலைவர் உறுப்பினர்கள் மூலம் சந்தித்த நெருக்கடி மற்றும் தொல்லைகளிலிருந்து தற்போதைய தலைவரை காப்பாற்றுவயாக! மேலும் நகர்மன்றத்தை காயல் நகர மக்களுக்கு நன்மை விளைவிக்ககூடிய திட்டங்கள் அரங்கேறும் இடமாக ஆக்கிவைப்பாயாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [22 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13661

இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு உறுப்பினர்கள் , பணி நியமனக் குழு உறுப்பினர் - மற்றும் ஒப்பந்தக் குழு உறுப்பினர் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.

அல்லாஹ்விற்கும், மற்றும் உங்கள் மனசாட்சிக்கும் பயந்து உங்கள் சேவைகளை நம் காயல் மக்களுக்கு நல்ல பயன் உள்ளதாக ஆக்கி தாருங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by K S Mohamed shuaib (Kayalpatinam) [22 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13663

வெற்றி பெற்ற உறுப்பினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!. N S E மஹ்மூது காக்காவின் சுருக்கமான பதிவு என்னை வியப்படைய செய்தது. அன்னாருக்கும் எனது வாழ்த்துக்கள்......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [22 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13664

மேஜையின் மீது தனது கையால் அழுத்தமாக தட்டி அல்லாஹுவின் மீது சத்தியமாக லஞ்சம் வாங்க மாட்டேன் நேர்மையாக நகர்மன்றத்தில் தனது பணியை செய்வேன் என மக்கள் முன் கூறியவர்கள் அதன் படி நடந்து கொள்ள வேண்டும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by K.D.N.MOHAMED LEBBAI (JEDDAH) [22 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13665

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்று நமது ஊர் பஞ்சாயதில்"" தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உறுப்பினர் யாவர்களுக்கும் எங்களின் >>>>> நல் வாழ்த்துகள் >> நீங்கள் யாவர்களும் தீரம்பட செயல்படுவீர்கள். இன்ஷா அல்லாஹ். மக்கள்ழகிய நாங்கள் மனதார நம்புகிறோம். >>>>>>> நல் வாழ்த்துக்கள்.<<<<<<<<<<<

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by A.LUKMAN.B.A., (kayalpatnam) [22 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13672

அன்பர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும்.

இங்கு பதவிகள் பங்குவைகப்படுகின்றன.

யார் பதவிக்கு வரவேண்டும் என்பதை விட
யார் வரக்கூடாது என்பதில் அவர்கள் குறி.

அரசியல் பதவிக்கான தகுதிகளே வேறு.
அது இல்லாதது என்னிடம் உள்ள குறைதான். ஒப்புக்கொள்கிறேன்.

இங்கு parellel நகராட்சி மன்றமே நடக்கிறது. அங்கு எடுக்கப்படும் முடிவுகள் இங்கு அமல்படுதப்படுகின்றன. எண்ணிக்கைகள் வேறுபடுவதில்லை.

அது இரவு இது பகல்.

“இரண்டரை ஆண்டு காலக்கெடுவில்
எல்லோருக்கும் பதவிகள்..........”
கேட்க அழகாகத்தான் இருக்கிறது.

விட்டுக்கொடுப்பர்களா பார்ப்போம்.
இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு

மீண்டும் சிலர் காட்டில் மழைபெய்யலாம்.
நீர்க்குமிழிகள் போன்று வாக்குறிதிகள்
நிலைக்குமா பார்போம்.

இவன் தானும் படுக்க மாட்டான்;
தள்ளியும் படுக்கமாட்டன்.
என்னைப்பற்றி ஒரு வுறுப்பினர்
இன்னொரு வுருப்பினரிடம் சொன்னதாக
அவர் என்னிடம் சொன்னார்
அவருக்கு என் நன்றி.

இங்கு சிலர் அமைதியாக இருந்து கொண்டே தங்கள் காரியங்களை நிறைவேட்டுவதில் மொகலாய மன்னர்கள். நெட்டில் நல்லவர்களாக புகழப்பட்டவர் நல்லவர்களாகவே இருக்கலாம்.

ஆனால் அவர் ஊழல் பேர்வழிகளுக்கு துணை போகிறாரே. ஒருவேளை தன்னை விட யாரும் நல்லவர் என்ற பெயர் எடுதுவிடக்கூடதே பயமோ என்னவோ.
அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

மக்கள் மாற்றத்தைதான் விரும்பினார்கள். அதனால்தான் 16 ம பெற்றுபெருவாழ்வு வாழமுடியாமல் 16 ம் போயிற்று.

ஆனால் நாங்கள் மாறவில்லையே...

காத்திருங்கள் மக்களே 2016 வரும்.
பிறகு 2021 ....2026 ...2031 ........

இறுதியில் கியாமத்.....
அப்போது நாம் விரும்பாவிட்டாலும்
நிச்சயம் மாற்றம் உண்டு.

90 -95 % வாக்குபதிவு தேவை இல்லை.
எ இங்கு எந்த பதவிக்கு யார் வரவேன்றும் என்பதை பெரிய மன்னர்கள் முடிவு செய்கிறார்கள்.
அவர்தம் மந்திரிகளும் மச்சான்களும் அமல்படுதுகிரார்கள்.

மக்கள் பார்பதில்லை...
ஆனால் அல்லாஹ் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
result அடுத்த கூட்டத்தில் அல்ல இறுதி கூட்டத்தில்....
ஆம் மறுமையில் மறந்து விடவேண்டாம்.

வாக்களித்த அறுவருக்கும்
வாக்களித்து என் பணிச்சுமையை கூட்ட விரும்பாத பதிநோருவருக்கும்,
அவர்களுக்கு வாக்களித்த கண்ணியமிக்க வக்களர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

இப்போது முடிவு செய்யுங்கள்
நரகத்தின் அடிதட்டா
சொர்கத்தின் மேல்தட்டா.

இன்னும் அவகாசம் இருக்கிறது
வாருங்கள் தோழர்களே தோழியரே
ஒன்றாகக்கூடி நன்றாக செயல்படுவோம். நேர்வழியில்.

A .லுக்மான்
1ஆவது வார்டு கவுன்சிலர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by Seyed Ibrahim (kayalpatnam) [22 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13676

அஸ்ஸலாமு அழைக்கும்

சகோதரர் லுக்மான் காக்கா அவர்கள் இந்த தேர்தலில் என்ன நடந்தது என மறைமுகமாக கூறி இருக்கிறார்கள் நன்றி

அவர்கள் சொன்னது போல் இங்கு parellel நகராட்சி மன்றமே நடக்கிறது. அங்கு எடுக்கப்படும் முடிவுகள் இங்கு அமல்படுதப்படுகின்றன. இது தான் உண்மை நேற்றைய தேர்தல் நடப்பதற்கு முன்பே இந்த நகர் மன்றம் நமது பிரதான வீதியில் உள்ள புதிய நகரமன்ற ?! (துணை தலைவர் தேர்தலுக்கு பிறகு செயல் பட துவங்கியது ) அலுவலகத்தில் கூடியது

தங்களால் துணை தலைவர் தேர்வுக்காக வீசி எறிந்த ரொட்டி துண்டுகளை கவ்வி பிடித்த விசுவாசிகள் அங்கே அழைக்க பட்டார்கள் மேலிடத்து ஆணைப்படி யார் யாருக்கு என்ன பதவி என அங்கே பிரித்து கொடுக்கப்பட்டது இதற்காகவே மச்சான்கள் மதராசிலிருந்து வந்தார்கள் எல்லாம் இனிதே நடந்து முடிந்தது

சும்மா ஒப்புக்காக அரசாங்கத்தையும் பாவப்பட்ட மக்களையும் ஏமாற்றுவதற்காக நகர்மன்றதிலே தேர்தல் நடத்த பட்டது

TAX Comity தேர்தலில் போட்டி இட்ட எழுத படிக்க தெரிஞ்ச பட்டதாரி ஹைரியா லாத்தா தோற்கடிக்க படுகிறாகள் காரணம் லுக்மான் காக்கா சொன்னது தான்

யார் பதவிக்கு வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் அவர்கள் குறி.

அரசியல் பதவிக்கான தகுதிகளே வேறு. அது இல்லாதது என்னிடம் உள்ள குறைதான். ஒப்புக்கொள்கிறேன். Copy Paste

இவ்வளவு நடந்தும் எங்கோ ஒரு ஒளி தெரிகிறது
அது நம்பிக்கை ஒளியாக வருமா
"மெகா" ஒளியாக மாறுமா
மக்கள் காத்திருக்கிறாக்கள் வழமை போன்று .................!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by RECAZ SULAIMAN (saudi arabia) [22 November 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13679

இங்கு பதவிகள் பங்குவைகப்படுகின்றன.
யார் பதவிக்கு வரவேண்டும் என்பதை விட
யார் வரக்கூடாது என்பதில் அவர்கள் குறி.

என்ற ஹாஜி லுக்மான் அவர்களின் வரிகளில் உண்மை உண்டு.

இந்த நிலை மாறாத வரை நமது நகர்மன்றம் அல்ல நமது தமிழ் நாடும், நம் இந்திய திருநாடும் கூட முன்னேற்ற பாதையில் செல்வது கடினம் தான். நம் மக்கள் திருந்தும் வரை நம் நாடும் ஊரும் திருந்த போவதில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Straight from the horse mouth
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [22 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13686

ஆங்கிலத்தில் ஒரு 'சொற்றொடர்' உண்டு.
"Straight from the horse's mouth."
சகோ. லுக்மான் அவர்களுடைய comments அதைத்தான் நினைவு படுத்துகிறது.

----------------------------------

சகோ., லுக்மான் காக்கா அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

உங்களுடைய வார்த்தைகள் என்னை ஆச்சரியப்படுத்தவோ அல்லது அதிர்ச்சிகுள்ளாக்கவோ இல்லை. இந்த முடிவு துணைத்தலைவர் "Selection (Not an Election) நேரத்திலே எடுக்கப்பட்ட ஒன்று.

நீங்கள் 1 வது வார்டு மக்களின் "voice " மட்டுமல்ல. இந்த ஊர் மக்களின் "voice " ம் கூட என்பதை மறந்து விட வேண்டாம். உங்களுடன் இந்த ஊருக்கு நல்லது செய்ய கறைபடாத கரங்களுக்குக் சொந்தக்காரர்கள் சிலர் அங்கு இருக்கின்றனர். அவர்களுடன் சேர்ந்து முயற்சி செய்யுங்கள். இன்ஷா-அல்லாஹ் இறைவனின் உதவி கிட்டும்.

"ஒரு காலம் வரும் என் கடமை வரும் இந்த காக்கையின் கூட்டத்தை ஒழிப்பேன்". என்று இன்னொரு உறுதிமொழி உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இந்த ஊர் உங்களைப் போன்றவர்களை பெரிதும் நம்புகிறது.

-----------------------

"அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு" MGR வாயசைத்தப் பாடல்கள் நினைவுக்கு வருகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ஆள் காட்டி விரலால்??? .
posted by OMER ANAS (DOHA QATAR.) [22 November 2011]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 13688

எ.லுக்மான் காக்காவின் நல் எண்ணத்திற்கும், அவர்தம் மனக் குமுரளுக்கும் அர்த்தம் உண்டு! இது அவர்தன பதவி ஆசை இல்லை. அவருக்கு கிடைக்க வேண்டிய கவுரவ பதவி! அதற்க்கான தகுதி அவருக்கு உண்டு!

அதே நேரம் இன்னாரால்தான் பல உறுப்பினர்கள் ஆட்டி வைக்கப் படுகிறார்கள் என்று அல்லாஹ் நமக்கு தந்த ஆள் காட்டி விரலால் அவரைக் காட்டவோ, அல்லது அவர் பெயரை வாயால் சொல்லவோ தயக்கம் ஏன்? ( அதை விட்டு விட்டு சென்னை தாத்தா என்று துபாய் தாதாக்கள் சொல்வது ஏன்?)

நிச்சயம் லுக்மான் காக்கா இந்த கேள்வி உங்களுக்கு இல்லை! எல்லா உறுப்பினரையும், லஞ்சவாளிகள் என குறிப்பிடுவோர்க்கும், அதற்காக ஒத்து ஊதுவோர்க்கும், படைத்த இறைவன் மேல் பயம் மட்டுமே உண்டு என்றால் உண்மையினை தெளிவாக சொல்லட்டும்!

உண்மை தானாக அப்புறம் வெளி வரும்! நானறிந்து எத்துணையோ உறுப்பினருக்கு பணம் ஒரு பொருட்டே அல்ல அதில் லுக்மான் காக்காவும்,தம்பி ஜகாங்கீரும், மற்றும் சிலரும் உண்டு! பூனை அல்ல புலிதான் என்று போகப் போக காட்டுகிறோம்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by சாளை நவாஸ் (singapore) [23 November 2011]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 13692

லுக்மான் காக்கா, தகுதி இல்லாதவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் போது கியாமத் நாளை எதிர் கொள்ளுங்கள் என்ற ஹதீத்தான் நினைவுக்கு வருகிறது.

அங்கே எதிரிகளை விட நயவஞ்சகர்களே அதிகம். ஆகவே, துஆ கேட்போம், யா அல்லாஹ் நயவஞ்சகர்களிடமிருந்து எங்களை பாதுகாப்பாயாக, எதிரிகளை நான் கவனித்து கொள்கிறேன்.

நீங்கள் மற்றவர்களை பற்றி கவலைபடாமல், எண்ணமே கருத்தாக என்று உங்கள் ஒன்றாம் வார்டை கவனித்து கொள்ளுங்கள். தண்ணீர் தொட்டி மாதம் இருமுறை சுத்தம் செய்யபடுகிறதா என்பதை கவனியுங்கள், நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு உங்கள் வார்டை சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்துங்கள். நகராட்சிக்கு செலுத்தவேண்டிய வரிகளுக்கு உடனே செலுத்த சொல்லுங்கள். எந்த நிலையிலும் லஞ்சம் கொடுக்க சொல்லாதீர்கள், அப்படி அவர்கள் கேட்டால் லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் கொடுக்க கற்றுகொடுங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம் அடிக்கடி தகவல் கொடுத்து முக்கிய தகவல்களை இந்த இணையத்தின் மூலம் எங்களுக்கு அறிய தாருங்கள்.

- மண்ணின் மைந்தன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:எல்லோருக்கும் பதவி கொடுக்க வழி இல்லையே !
posted by V D SADAK THAMBY (Guangzhou ,China) [23 November 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 13695

என்ன செய்வது? மொத்தம் 18 உறுப்பினர்களுக்கு , வெறும் 6 பதவிகள்தானே உள்ளது. எனவே 18 போரையும் திருப்திபடுத்துவது கடினம்தான் !

நல்லவர்கள் என்று சொல்லுபவர்கள் எல்லோரும் முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் பதவியில் இருந்துதான் நன்மைகள் செய்யவேண்டும் என்பதில்லை. பதவியில் இல்லாமலும் ஊருக்கு நன்மைகளை செய்யமுடியும்.

உங்களுக்கு பதவி கிடைத்தால், பதவி கிடைக்காத வேறுசிலர் உங்களைபோன்று இதுமாதிரி அறிக்கை விடலாம். இது எல்லாம் பதவியை எதிர்பார்த்து ஏமாந்தவர்கள் விடும் வழக்கமான அரசியல் அறிக்கைதான்.

Moderator: தனிநபர் விமர்சனம் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

சகோ.வி.டி.சதக் தம்பி அவர்கள் தனது முழு சுயவிபரத்துடன் admin@kayalpatnam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்புகொண்ட பின்னர், அவரது கருத்துக்கள் வருங்காலத்தில் வெளியிடப்படும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by PS ABDUL KADER (jeddah) [23 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13702

தேர்வு செய்யப்பட்ட எல்லா உறுப்பினர்கலும் பதவிக்கு சரியானவர்தான் உருப்படும் நம்ம நாகராச்சி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. ஊமையாய் நிறைவேற்றும் குள்ள நரியை அடையாளம் கண்டு கொள்வார்கள்... அதில் சந்தேகம் இல்லை...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [23 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13722

இங்கு சிலர் அமைதியாக இருந்து கொண்டே தங்கள் காரியங்களை நிறைவேட்டுவதில் மொகலாய மன்னர்கள். நெட்டில் நல்லவர்களாக புகழப்பட்டவர் நல்லவர்களாகவே இருக்கலாம்.

ஆனால் அவர் ஊழல் பேர்வழிகளுக்கு துணை போகிறாரே. copy - paste

ஹாஜி லுக்குமான் அவர்களின் ஆதங்கம் 100 சதவீதம் உண்மையே...! அந்த சிலர் யார் ? என்பதை மக்கள் அடையாளம் கண்டு இருக்கலாம்...! மேலும் சில மக்கள் இனி அமைதியாக இருந்து கொண்டே தனது காரியங்களை ஊமையாய் நிறைவேற்றும் குள்ள நரியை அடையாளம் கண்டு கொள்வார்கள்... அதில் சந்தேகம் இல்லை...

நகர்மன்றத்தில் போடும் மொகலாய மன்னர்கள் வேஷம் சில நாட்கள் தான்... அது பல நாட்கள் பலிக்காது...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by A.Lukman (kayalpatnam) [23 November 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 13727

அஸ்ஸலாமு அழைக்கும்.

என்னுடைய அறிக்கை சில சகோதரர்களுக்கு மன வருத்தத்தை அளிப்பதாக போனில் சொன்னார்கள். நான் யாருடைய மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அதை வெளியிடவில்லை. மன ஆதங்கத்தின் வெளிப்பாடே அது.

நிஜமாகவே அவர்கள் மனவருதப்ப்படும்படி என் வார்த்தைகள் இருந்தால் அதர்க்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் கொள்கைப்படி தேர்தலில் போட்டியிடக்குடதே எண்டார்கள். ஆம் உண்மைதான். ஆனால் நீங்கள் நின்றால் உங்களுக்குத்தான் போட்டிருப்போம் என்று நம் தோழர்களை போய சொள்ளவைத்த பாவம் நமக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திலும் உண்மை வெளிப்படவேண்டும் என்ற அடிப்படையிலும்தான் நான் போட்டியிட்டேன்.

எல்லாம் சரிதான் ஹைரியா தோற்க்கடிக்கபட்டதின் நோக்கம் என்ன? மற்றபடி வெற்றி பெற்றவர்களும் நம் சகோதரர்களே. அவர்களுக்கு முழுமையான முறையில் ஒத்துழைப்பு கொடுப்பேன்.

A .லுக்மான்
1 வது வார்டு உறுப்பினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [23 November 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13729

அஸ்ஸலாமு அழைக்கும்.

வெற்றிபெட்டுள்ள உரிபினர்கலே! இது தங்களின் பதவிக்கும் பொறுப்புக்கும் கிடைக்கபெற்றுள்ள பலபரீட்சை!!இன்று முதல் தாங்கள் அனைவர்களும் மக்கள், மற்ற உறுபினர்கள், மீடியாக்கள், தாங்கள் சார்ந்துள்ள ஜமாத்துக்கள், அரசு அதிகாரிகள், லஞ்ச ஒழிப்பு துறை நிர்வாகிகள் என்ற பலரின் பார்வையில் நீங்கள்!!! மறந்து விடாதீர்கள். அல்லாஹ்வை தவிர மற்ற யாவருக்கும் பயப்பட அவசியம் இல்லை.

வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழு:

17ஆவது வார்டு உறுப்பினர் அபூபக்கர் அஜ்வாத் அவர்களே! 16 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடி உள்ள தாங்கள் இரண்டு முறை நகர்ம்ற தேர்தலில் தோல்வி பெற்று மூன்றாவது முறையாக மக்கள் இந்த முறை வெற்றி பெற வைத்துள்ளது தங்களிடம் உள்ள பொறுப்பின் பரிட்சையில் பாசா, பைலா என்பதை தாங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் விலையும் போகாமல் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்கை நிறைவேற்றினால் மேல்பதவி மற்றும் புகழ் தானாக வரும்.

06ஆவது வார்டு உறுப்பினர் ஏ.கே.முஹம்மத் முஹைதீன் அவர்களே! 15 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள தாங்கள் S.K. ஸாலி அவர்களை வீழ்த்தி வந்துள்ள தாங்களும் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் விளையும் போகாமல் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்கை மனசாட்சி உடன் நிறைவேற்றுங்கள்.

14ஆவது வார்டு உறுப்பினர் பாக்கிய ஷீலா அவர்களே! தங்கள் வார்டின் எண்ணு போல் 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள தாங்களும் தங்கள் சமுதாய மக்களுக்கும் நமது தலைவின் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கும் உறுதுணையாக இருங்கள்!

07ஆவது வார்டு உறுப்பினர் அந்தோணி அவர்களே! 13 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ள தாங்கள் தான் அணைத்து உறுபினர்களை விட அதிகமாக மக்களுக்காக உண்மையாக யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் விலையும் போகாமல் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்கை மனசாட்சி உடன் நிறைவேற்ற வேண்டும். காரணம் தாங்கள் வார்டு மக்கள் இஸ்லாமியர்கள் போட்டியில் அதிகமாக இருந்தும் அவர்களை புறகனித்து தங்கள் மீது நம்பிக்கை வைத்து வெற்றி வாக்கை தந்துள்ளார்கள். நீங்கள் முன்னால் உறுபினர் திரிதுவராஜ் போல் எண்கள் சமுதாய சகோதரர்களை விட அதிகமாக உண்மையுடன் உழைத்து நற்பெயர் பெற்றிடுங்கள். காலம் தங்களை மறக்காது. சாதனை புரிந்து எண்கள் சகோதரர்களுக்கு பாடம் புகட்டுங்கள்.

பணி நியமனக் குழு:

16ஆவது வார்டு உறுப்பினர் சாமு ஷிஹாபுத்தீன் அவர்களே! 11 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றுள்ள தாங்கள் புது பள்ளி ஜமாத்தின் பிரதி நிதி என்பதையும் மனதில் நிறுத்தி கொள்ளுங்கள். தாங்கள் வைத்திருக்கும் பொறுப்பு மிக மிக முக்கியமான நமது காயல் நகர்மன்றத்தில் ஒர் மறு மலர்சியுடன் கூடிய புரட்சி ஏற்படுத்தும் துறை. தயவு கூர்ந்து இந்த ஐந்து ஆண்டுகளில் தங்களால் அதிகமான நமது காயல்ர்கள் காயல் நகரமன்றத்தின் பணிக்கு அமர்த்துங்கள். அது வரலாற்று சாதனையாக இருக்க வேண்டும். அநேகமான மக்கள் ஹாஜி லுக்மான் அவர்களை நினைத்தாலும் தாங்களும் ஜமாத்தின் பிரதி நிதியால் வேறுபாடு ஏதும் இல்லை என்றே கருதிகிறேன். மக்கள் லுக்மான் அவர்களிடம் எதை எதிர்பார்த்தார்களோ அதைவிட அஹிகம் தாருங்கள். தாங்கள் மிகவும் உன்னிப்பான SCANER ள் இருக்கிறீர்கள். கவனம்.

அன்பு லுக்மான் காக்கா மற்றும் தாங்களும் ஒரே பதவிக்கு போட்டி இட்டது எனக்கு வியப்பை தருகிறது. காரணம் இருவருமே ஜமாத்தின் பிரதி நிதிகள். யாரவது ஒருவர் ஒப்பந்த குழுவில் நின்று இருக்கலாம்.

ஒப்பந்தக் குழு :

10ஆவது வார்டு உறுப்பினர் பத்ருல் ஹக் அவர்களே! 13 வாக்குகல் பெற்று தாங்கள் பொறுப்பு வகிக்கும் பதவி மிக மிக முக்கியமான பதவி. தாங்கள் முள் மேல் தான் உள்ளீர்கள். நமது மக்கள் மற்றும் அணைத்து மீடியாக்களும் காமிராகளும் தங்களை நோக்கித்தான்!! மறந்து விடாதீர்கள்.

தாங்களின் துறை ஊழல்களும்,பேரங்களும், கமிசங்களும் மலிவாக நடக்கும்,நல்ல பல திட்டங்களை ஏனோ தானோ என்று திறமையாக இல்லாமல் அவசர போக்கில் முடித்து மக்களின் வரிபணத்தை வீணாகும் துறை. தங்களின் வார்ட் முன்னால் உறுபினர் கஸ்ஸாலி மரைக்கார் அவர்கள் செய்த தவறின் காரணத்தால் தற்போது அவர் அனுபவிக்கும் நிலைமை தங்களுக்க் ஒரு நியபகமாக இருக்கட்டும். அகவே தாங்கள் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் விளையும் போகாமல் மக்களுக்கு கொடுத்துள்ள வாக்கை மனசாட்சி உடன் நிறைவேற்றுங்கள். வஸ்ஸலாம்.

இவன்,
முகியதீன் அப்துல் காதிர்,
ஐக்கிய அமீரக பாராளுமன்றம்,
அபுதாபி.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Fear the Creator, not the creation.
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [23 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13730

வெற்றி பெற்றவர்களுக்கு வக்காலத்து வாங்கக்க் கூடியவர்களே, வெற்றி பெற்ற உறுப்பினர்கள் 21 - 11 - 2011 முன்பு முக்கிய வீதியிலுள்ள அந்த கட்டிடத்தில் (Parallel Municipality Office) மன்னரின் மந்திரியால் நடத்தப்பட்ட அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று ( வெற்றிபெற்ற உறுப்பினர்களை) அல்லாஹ் மீது சத்தியம் செய்ய வைக்க உங்களால் முடியுமா ? (குறைந்த பட்சம் முஸ்லிம் உறுப்பினர்களை)
---------------------------------------
வெற்றிபெற உதவியவர்களுக்கு ..........

மன்னரே! மந்திரியே !!

7 ஆம் வார்டை இழந்து விட்டோம் என்று நமது சமுதாய மக்கள் குறிப்பாக குருவித்துறை பள்ளி ஜமாத்தினர்கள் மன வேதனைப்படும் இந்த வேளையில் அந்த வார்டில் வெற்றி பெற்றவருக்கு பதவி கொடுத்து அழகு பார்ர்கக்கூடியவர்களே, இது நீங்கள் இந்த சமுதாயத்தினருக்கு செய்யக் கூடிய துரோகம் இல்லையா ? வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் இல்லையா உங்களது இந்த செயல் ?

உங்களுக்கும் கோயமுத்தூர் கலவரத்தில் முஸ்லிம்கள் மீது அநியாயமாக துப்பாக்கிசூடு நடத்த ஆணையிட்ட அதிகாரிக்கு தங்கப் பத்தக்கம் கொடுத்து அழகு பார்த்த கருணாநிதிக்கும் என்ன வேறுபாடு ?

இதிலே வேடிக்கை என்னவென்றால், (வேடிக்கை என்று சொல்வதை விட வேதனை என்றே சொல்லவேண்டும்) மன்னரும் அவருடைய மந்திரியும் குருவித்துறை பள்ளி ஜமத்தினராகவே கருதப்படுகின்றனர். தேர்தலுக்குப் பின் நடத்திய சுய பரிசோதனை (introspect) கூட்டத்தில் சகோ., ரபீக் மீது கண்டனம் தெரிவித்த கையேடு இவர்கள் மீதும் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்.

At least வருங்காலங்களிலாவது ஜமாஅதிற்க்காக / பள்ளிக்காக இவர்களைப் போன்றவர்களிடமிருந்து பொருளாதார உதவி பெறக் கூடாதென்று தீர்மானம் நிறைவேற்றவேண்டும்.

Fear the Creator, not the creation.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by MOHAMED ADAM SULTAN (KAYAL PATNAM) [23 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13731

தம்பி ஜகாங்கீருக்கு வாழ்த்துக்கள்.
எந்த பதவிக்கும் போட்டியிடாமல் பெருந்தன்மையோடு தன பெயரை காபாற்றிகொண்டார்.

பத்தாம் தேதிக்குள்ள பரிச்சைக்கு எட்டாந்தேதியே ரிசல்ட்டு வந்து வைட்டிங்கிலே நிற்கிறது என்ற நியூஸ் வந்தபிறகும்

பத்தாம் தேதியில் பரிச்சை எழுத நான் என்ன????????? என்று ஜகாங்கீர் கேட்பது என் மானசீக மனதுக்கு கேட்கிறது. உங்கள் அனைவருக்கும் கேட்க்கும் என்று நம்புகிறேன்.

எந்த திறம்யையும் எந்த பகட காயால் புரட்டி வெற்றி கொண்டாலும்,
படைத்தவன் ஒருவன் அனைத்தையும் பார்த்து கொண்டிருக்கின்றான் என்ற பயம் சிறிதளவு இருந்தாலே போதும். எல்லாம் சீராக செயல்படும். அதற்காக நாம் அனைவரும் துஆ செய்வோமாக! .

விமர்சனம் எழுதும் ஒரு சில சகோதரர்களே. சற்று பொறுத்திருந்து பாருங்கள்.
எல்லோருடைய எதிர்பார்புக்கேற்றவாறு எல்லா உறுப்பினர்களும் செயல்படுவார்கள் என்று நம்புவோமாக!

பொருமையானவர்களுடன் அல்லாஹ் இருக்கிறான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. பத்தாம் தேதி பரிச்சையில் அவர் அது போல் நடந்து கொண்டதாகவும் தகவல் அறிந்தேன்... நான் அறிந்த தகவல் உண்மை இல்லை என்றால் அவர் எனக்கு விளக்கம் தரலாம்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [24 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13742

ஹாஜி லுக்குமான் அவர்களின் ஆதங்க கருத்தின் மூலம் சில நல்லவர்கள் மீது நம்பிக்கையின்மை ஏற்படுகிறது...

ஹாஜி லுக்குமான் அவர்கள் பரிச்சையில் தோல்வியற்ற நிலவரத்தை சில உண்மை நடப்புகளை அவரிடம் தொலைபேசியில் கேட்டு அறிந்து கொண்டேன்..! அதை இதில் எழுதுவது நாகரீகம் அல்ல...!

சகோதரர் ஆதம் சுல்தான் அவர்களே தாங்களின் e.mail ID எனக்கு தரவும்... எனது ID - mtu_ismail @yahoo.co.in

Moderator: தனி நபர் பெயரைக் குறிப்பிட்டு அனுப்பப்படும் (நாகரிகமான - பொதுநலனை மட்டும் கருத்திற்கொண்ட) கருத்துக்கள் வலைதள நிர்வாகக் குழுவினரால் உறுதி செய்ய வாய்ப்பிருந்தால் மட்டும், வெளியிடப்படும். உறுதி செய்ய இயலாத கருத்துக்களை வெளியிட வேண்டும் என கருத்தாளர்கள் எதிர்பார்க்க வேண்டியதில்லை. அதனடிப்படையில் சில வாசகங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by Abdul Azeez (chennai) [24 November 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 13743

பிஸ்மில்லா ஹிர்ரஹுமா நிர்ரஹீம்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

நமது மன்றத்திலே இன்று தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் வரி குறைப்பு மேல் முறையீட்டுக்குழு உறுப்பினர்கள் , பணி நியமனக் குழு உறுப்பினர் - மற்றும் ஒப்பந்தக் குழு உறுப்பினர் அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள்.

முக்கியம் நகர்மன்ற தலைவி உட்பட மன்ற உறுப்பினர் அனைவரது email Id ஐ மக்களுக்கு தெருவித்து மக்களுடன் தொடர்பு எற்படுத்தி,சிறந்த முறையில் பணி செய்து -நேர்மையாக செயல்படும்படி மன்ற உறுப்பினர் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.

மேலும், எமது 6 வது வார்டு உறுப்பினர் A .K . முஹம்மது முஹியதீன் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் . குறிப்பாக அவரின் வார்டு நகரின் முதன்மை வார்டாக திகழ அவரின் பணி சிறக்கட்டும் என்று மீண்டும் வாழ்த்தி, வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

வஸ்ஸலாம்.

A .G . அப்துல் அஜீஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by Jahangir (Kayalpatnam) [24 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13744

காயல்பட்டினம் டாட் காம் வாசகர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

1-வது வார்டு உறுப்பினர் சகோதரர். லுக்மான் அவர்களிடம் 5-வது வார்டு உறுப்பினர் ஜஹாங்கிர் கோரும் விளக்கம்.

இங்கு 1-வது வார்டின் உறுப்பினர் சகோதரர் லுக்மான் அவர்கள் ஒரு அற்பத்தமான கருத்தை பதிந்திருந்தார்கள். இதை வாசிப்பவர்கள் அவரை உண்மையின் உரைகல், அல்லாஹ், ரஸூலுக்கு அடுத்தபடியாக அவர்தான் சத்திய இஸ்லாம் வழியில் செல்கிறார். இவரைப்போல் மற்ற உறுப்பினர்கள் இல்லை என்று நம்புவதற்காக மிகவும் அழுக்கான முறையில் தனது கருத்தை பதிவு செய்து இருந்தார்.

1) இவன் தானும் படுக்க மாட்டான் தள்ளியும் படுக்கமாட்டன். என்னைப்பற்றி ஒரு வுறுப்பினர் இன்னொரு வுருப்பினரிடம் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னார் அவருக்கு என் நன்றி. என்று கூறியுள்ளீர்களே? அப்படி யார் எதை வாங்கினார்? நீங்கள் எதை தடுத்தீர்கள்? அந்த உறுப்பினர் உங்களை இப்படி சொல்வதற்கு? நீங்கள் தான் உண்மையின் உரைகல் ஆகிற்றே அதையும் வெளியிள் கூறலாமே? சும்மா பெயர் வாங்குவதற்காக மற்றவர்கள் மீது குறைகூற வேண்டாமே? அப்படி சம்பவம் உண்மை என்றால் வெளிப்படையாக கூறவேண்டியதுதானே?

2) இங்கு சிலர் அமைதியாக இருந்து கொண்டே தங்கள் காரியங்களை நிறைவேட்டுவதில் மொகலாய மன்னர்கள். நெட்டில் நல்லவர்களாக புகழப்பட்டவர் நல்லவர்களாகவே இருக்கலாம். ஆனால் அவர் ஊழல் பேர்வழிகளுக்கு துணை போகிறாரே. ஒருவேளை தன்னை விட யாரும் நல்லவர் என்ற பெயர் எடுதுவிடக்கூடதே பயமோ என்னவோ.

அப்படி எந்த ஊழல்வாதிக்கு துணை போனார் என்று உங்களால் நிருபிக்க முடியுமா? நகராட்சி துவங்கி இன்னும் பணிகளே சரிவர நடைபெறாத நிலையில் அப்படி யார் ஊழல் செய்து விட்டார்கள்? நீங்கள் பணி நியமனக்குழுவில் போட்டியிட்ட பொழுது உங்களுக்கு வாக்கு அளிக்கவில்லை என்ற காரணத்தினால் ஊழல் பேர்வழிகளுக்கு துணை போனார் என்று கூறுவதா? ஊழல் பேர்வழிகள் என்று கூறுகின்றீர்களே? அப்படி என்றால் உங்களை எதிர்த்து வாக்களித்த 11 உறுப்பினர்களும் ஊழல்வாதிகளா? அவர்கள் செய்த ஊழலை நிருபிக்க முடியுமா ? உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் என்பதற்காக எல்லோர் மீதும் பழி சுமத்துவதா ? இதுதான் நீங்கள் நேர்மையானவர் என்று மக்கள் நம்புவதற்கு கிடைத்த பரிசா ?

சரி தாங்கள் பணி நியமனக்குழுவில் போட்டியிட விரும்பி துணை தலைவர் தேர்வு முடிவுற்றதும் மற்ற உறுப்பினர்களிடம் கூறிய வாக்கு என்ன? நம் சமுதாயத்தவர் யார் போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக போட்டியிட மாட்டேன் என்றுதானே கூறினீர்கள்? தற்போது ஜனாப்.சாமு சிஹாபுத்தீன் அவர்கள் எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்? எதற்காக அவரை எதிர்த்து போட்டியிட்டீர்கள். Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [24 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13745

வரி குறைப்பு மேல் முறையீட்டுக் குழு, பணி நியமனக் குழு, ஒப்பந்தக் குழு ஆகிய இந்த மூன்று குழுக்களையும் நம் மக்கள் நமது நகர்மன்றத்தில் அதன் செயல்பாடுகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறபடும் தகவல்களின் அடிபடையில் சரியாக செயல்படுகிறதா...? என்பதை கவனித்து வருகிறார்கள்..! தனிப்பட்ட யாருடைய சிபாரிசும் இந்த குழுக்களுக்கு செல்லாது... முறையாக அரசு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து அதன் அடிப்படை வரிசை என்னவோ அவருக்கு தான் நமது நகர்மன்றத்தில் பணி கொடுக்க பட வேண்டும் என்பதனில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்...!

இந்த குழுக்கள் தனது பதவியை சரியாக நல்ல முறையில் நமது ஊர் மக்கள் பயன் பெரும் வகையில் நல்லதை செய்வார்கள் என்று நம்புகிறது..! பொறுத்து இருந்து பார்ப்போம்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. சில கமெண்ட்ஸ், சில கேள்விகள்.
posted by Saalai.Abdul Razzaq Lukman (Dubai) [24 November 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13751

அஸ்ஸலாமு அலைக்கும்.

நகராட்சி துணை குழுக்களுக்கு நடந்து முடிந்துள்ள தேர்தல் குறித்து சிலரின் comments எனது கேள்விகள். உரியவர்கள் பதில் அளித்தால் எல்லாரும் புரியலாம்.

நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில், தலைவிக்கு பொறுப்புக்கு, ஐக்கிய பேரவையின் தவறான முடிவால் சகோதரி ஆபிதா, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இது முடிந்து போன சம்பவம்.

ஆனால் அதே மாதிரியான முடிவுகள் தான், நகரமன்றத்தின் மற்ற தேர்தல்களிலும் எதிர்பார்ப்பது விந்தை.

சிலரின் comments

".யார் பதவிக்கு வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் அவர்கள் குறி". comment# 13672

"ஊழல் அதிகம் நடைபெற வாய்ப்புள்ள பணியாளர்கள் நியமன குழுவிற்கு - ஊழலைத் துணிவாக எதிர்கொள்ள உறுப்பினர் லுக்மான் பொருத்தமானவர் என்றும், வார்ட் 13 உறுப்பினர் எம்.எஸ்.எம். சம்சுதீனை அவர் விருப்பப்படி துணைத் தலைவர் பதவிக்கு முன் மொழியலாம் என்றும் அவர்கள் இருவரின் அணிகளும் முடிவு செய்ததாகத் தெரிகிறது." News ID # 7463.

சகோதரர் லுக்மான் காக்கா அவர்களே, உங்கள் அணி முடிவு செய்யலாம், அனால் எதிர் அணியினர் முடிவு செய்ய கூடாதா? "இப்போது முடிவு செய்யுங்கள் நரகத்தின் அடிதட்டா சொர்கத்தின் மேல்தட்டா", comment# 13672

நீங்கள் வெற்றி பெற்றால் சொர்கத்தின் மேல் தட்டு, நீங்கள் தோற்கடிக்கபட்டால், எதிர் அணியினருக்கு நரகத்தின் அடித்தட்டு. நன்றாக இருக்கிறது உங்களின் ஆசை.

அடுத்து என் சாளை தம்பி நவாஸ் உடையது:

"தகுதி இல்லாதவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும் போது கியாமத் நாளை எதிர் கொள்ளுங்கள் என்ற ஹதீத்தான் நினைவுக்கு வருகிறது". Comment# 13692

இங்கே தகுதி இல்லாதவர்கள் (உன் பார்வையில்) யார்? அதற்கான உன் அளவுகோல் தான் என்ன? கடந்த நகராட்சியில் உறுப்பினராக இருந்து இந்த தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்றவர் இருவர். அதில் ஒருவர் தற்போதைய துணை தலைவர்,சகோதரர் மும்பை முகியதீன். மற்றபடி அனைவருமே பரீட்சை வைக்கபடாத புதியவர்கள்.

அடுத்து சகோதரர் வாஹித் அவர்களுடையது. "5 வேலை தொழக்கூடிய படித்து பட்டம் பெற்ற ஒரு சகோதரரும், சகோதரியும் தோற்றுவிட்டார்கள். Thanks to the Financier"; comment# 13656 5 வேளை தொழுகையும் உங்கள் முன்னால் தொழுதால் தான் தொழுகையாளியா?. 5 வேளை தொழுது விட்டு, அல்லாஹ்வின் பெயரை சொல்லி அடித்த பித்தலாட்டங்கள், பொய் சத்தியங்கள், forgery, ஆகியவை அனைவரும் அறிந்ததே.

சகோதரர் ஆதம் சுல்தான் அவர்களின் comments:

விமர்சனம் எழுதும் ஒரு சில சகோதரர்களே. சற்று பொறுத்திருந்து பாருங்கள். எல்லோருடைய எதிர்பார்புக்கேற்றவாறு எல்லா உறுப்பினர்களும் செயல்படுவார்கள் என்று நம்புவோமாக! Comment# 13731.

இவர்களின் நம்பிக்கை நிறைவேற வல்ல அல்லாஹ்விடம் நானும் பிரார்த்திக்கிறேன். முத்தாய்பாக 5 -ம் வார்டு உறுப்பினர், தம்பி ஜகாங்கீர் அவர்களின் கமெண்ட்ஸ்# 13744, குற்றசாட்டு பற்றி, சகோதரர் லுக்மான் காக்கா அவர்கள் விளக்கம் தருவார்கள் என்று நம்புகிறேன்.

நாம் ஆதரிக்கும், விரும்பும், நபர் வெற்றி பெற வேண்டும் என ஆசைபடுவதில் தவறில்லை. அப்படி நிறைவேறாத பட்சத்தில், மாற்று அணியினரை தவறாக சித்தரிக்க வேண்டாம். பொறுப்புக்கு வெற்றி பெற்ற உறுப்பினர்களே! உங்களின் செயல்களை வல்ல அல்லாஹ்வும் பார்த்து கொண்டிருக்கிறான், மக்களும் பார்த்து கொடிருக்கின்றனர்.

கடைசியாக, தற்போது மக்கள் விழிப்புடன் இருக்கின்றனர். மீடியா, வலைத்தளம் கண்கொத்தி பாம்பாக இருக்கிறது. தகவல் அறியும் உரிமை சட்டம் இருக்கிறது. குறிப்பாக சகோதரர் லுக்மான் காக்கா மற்றும் தலைவி போன்று ஊழலை வேரோடு அழிக்க ஆட்கள் இருக்கின்றனர்.

நகராட்சியில், அதிகாரிகள், தலைவி உட்பட அனைத்து உறுப்பினர்கள் யார் தவறு செய்தாலும், ஆதாரத்துடன் மக்கள் மற்றும் சட்டத்தின் முன் நிறுத்துங்கள். அவர்கள் உண்மையிலே தவறு செய்திருந்தால், இவ்வுலகில் சட்டத்தின் முன்பும், மறுமையில் வல்ல அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது. மாறாக நமக்கு பிடிக்கவில்லை என்பதற்காக யார் மீதாவது அபாண்டமான குற்றசாட்டை சொன்னால், அதற்கும் மறுமையில் தண்டனை உண்டு.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. கண்டனம் தெரிவிக்கிறேன்
posted by M.E.L.NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [24 November 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13752

அன்பு அட்மின் அவர்களே அப்துல் வாஹித் அவர்களின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். தேவை இல்லாமல் குருவித்துறை பள்ளி ஜமாத்தை குற்றம் சுமத்த இவர் யார் ? தேவை இல்லாமல் குழப்பம் வுண்டாக காயல் .காம் வெப் மூலம் பழி சுமத்தி இருக்கிறார். நகர் மன்ற தலைவர் தேர்தலில் ஐக்கய பேரவை சார்பில் வேட்பாளர் தெரிவில் கலந்து கொண்டு வாக்கு அளித்து விட்டு வெளியே வந்து அறிக்கை கொடுத்த வார்த்தை சித்தர் நீங்கள். இப்படி பட்ட நீங்கள் தேவை இல்லாமல் எங்கள ஜமாத்தை குற்றம் சாடுவது நன்று அன்று. யாகாவராயினும் நா காக்க. அட்மின்அவர்களே இது போன்ற குழப்பம் வுண்டாகும் கருத்துகளை தயவு செய்து பிரசுரிக்க வேண்டாம். ப்ளீஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. விளங்காத ஊர் மக்களுக்கு தாங்களின் கருத்து பதிவின் மூலம் தெளிவு தந்தமைக்க நன்றி.. நன்றி!
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [25 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13757

நீங்கள் பணி நியமனக்குழுவில் போட்டியிட்ட பொழுது உங்களுக்கு வாக்கு அளிக்கவில்லை என்ற காரணத்தினால் ஊழல் பேர்வழிகளுக்கு துணை போனார் என்று கூறுவதா? இது தம்பி ஜகாங்கீர் அவரின் கருத்து.. அவரின் கருத்து பதிவின் மூலம் ஒரு உண்மை வெளி படுகிறது என்னவன்றால் பணி நியமனக்குழு போட்டியில் ஜனாப் ஹாஜி லுக்குமான் அவர்களுக்கு தம்பி ஜகாங்கீர் அவர்கள் வாக்கு அளிக்கவில்லை என்பதனை இதன் மூலம் தெளிவு படுத்துகிறது...

தம்பி ஜகாங்கீர் அவர்களே..! விளங்காத ஊர் மக்களுக்கு தாங்களின் கருத்து பதிவின் மூலம் தெளிவு தந்தமைக்க நன்றி.. நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by Hameed Rifai (kayalpatnam) [25 November 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 13764

அஸ்ஸலாமு அழைக்கும்

இங்கே கருத்து பதித்துள்ள சகோதரர் Nuski காக்கா அவர்களின் பார்வைக்கு இதை இங்கே பதிவு செய்கிறேன்

சகோதரர் வாஹிது காக்கா அவர்கள் என் சிற்றறிவிற்கு எட்டியவரை நமது குருவித்துறை பள்ளியை குற்றம் சாட்டி தவறாக எந்த கருத்தையும் இங்கே பதிவு செய்யவில்லை என்றே நினைக்கிறன்

எல்லா ஜமாத்களும் ஒதுங்கி கொண்டால் நாளைய நகர்மன்றம் நாசகாரர்களின் கூடாரமாக மாறிவிடுமே என்ற நல்ல எண்ணத்தில் பதிய பட்ட கருத்தாகவே எனக்கு தெரிகிறது இதில் நமது ஜாமத்தை எந்த இடத்திலும் குறை கூறியதாக எனக்கு தெரியவில்லை

அப்படி இருப்பின் மீண்டும் ஒருமுறை தெளிவாக உங்கள் கருத்தை இங்கே பதிவு செய்தால் என்னை போன்றவர்களும் விளங்கிக்கொள்ள வாய்ப்பாக இருக்கும் செய்வீர்களா நன்றி வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. நண்பர் ஜகாங்கிர்க்கு?
posted by Firdous (Colombo) [25 November 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 13775

அஸ்ஸலாமு அலைக்கும். நகர்மன்றம் தொடங்கி ஒரு மாதத்திற்குள் ஊழலுக்கு எதிராக ஒரு அணியிலிருந்து செயல்பட்ட இருச்சகோதரர்களுக்கு இடையில் பனிப்போர்.

என்னைபோன்றவர்களுக்கு மிகவும் மனச்சங்கடம். நண்பரே! நீங்கள் நன்றாக அறீவீர். துணைத்தலைவர் தேர்தலில் யாரெல்லாம் பணம் வாங்கி ஒட்டு போட்டார்கள் என்று.

நீங்கள் இருவரும் ஒரு அணியில் இருந்தால்தான் ஏதும் தடம் புரளும் சம்பவம் நடப்பின் வெளிகொனரே ஏதுவாக இருக்கும். எங்களை விட நீங்கள் நன்றாக அறீவீர்! தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவ்வாறென்று.

இருச்சகோதரர்களுக்கும் அன்புவேண்டுகோள்! உங்கள் இருவரின் கருத்து வேற்றுமையை கலைந்து ஒற்றுமையுடன் செயல்பட அன்புடன் வேண்டுகி(றோம்)றேன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH -KSA) [25 November 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13776

தம்பி ஹாமீத் ரிபாய் இந்த பகுதியில் சகோ .வாஹித் அவர்களின் மற்ற எல்லா கருத்துகளையும் படித்து விட்டு கருத்தை பதிவு செய்யவும். அப்போதாவது விளங்குகின்றத என்று பார்ப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by Abdul Wahid Saifudeen (Kayalpatnam) [26 November 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 13780

Re: Comments # 27 & 31

என்னுடைய எந்த கருத்துப் பதிவில் நான் குருவித்துறை பள்ளி ஜமாத்தினர் மீது குற்றம் சுமத்தியுள்ளேன் என்பதை சகோ., நுஸ்கி அவர்கள் தெளிவாக எடுத்துக்காட்டினால், அவருடைய குற்றச்சாட்டு சரியாக இருக்கும் பட்சத்தில் நான் வருத்தம் தெரிவிக்க தயாராக இருக்கிறேன்.

அனைத்து ஜமாஅத் ஒற்றுமை என்ற போர்வையில் வந்த சில சுயநலவாதிகளுக்கு ஜால்ரா அடிச்ச நிறைய பேர் ஓய்ந்துவிட்டார்கள். ஐக்கிய பேரவை உள்-தேர்தலுக்கு முன் செய்த தவறுகளை சொல்ல வேண்டியவர்களிடம் சொல்லியாகிவிட்டது. 'துண்டு என்று நினைத்து தோளில் போட்டோம் அது பாம்பாக மாறிவிட்டது." என்று சொல்லி புரிய வேண்டிய முக்கியமானவர் புரிந்துகொண்டார்கள்.

எனவே ஐக்கிய பேரவையின் உள் - தேர்தல் சம்பந்தமான எனது நிலைப்பாட்டை நான் உங்களை போன்றவர்களிடம் நியாயப்படுத்த தேவையில்லை.

பணம் படைத்தவர்களின், பதிவியிலுள்ளவர்களின் மனம் கோணாமல், அவர்களுக்கு ஜால்ரா அடிக்கணும் என்ற கட்டாய நிலையில் நான் இல்லை என்று இந்த தருணத்தில் சொல்லிகொள்ளவிரும்புகிறேன்.
------------- END -----------------

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by T.A.S.Meera Sahib (Dubai) [26 November 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 13787

தம்பி சாளை அப்துர் ரஜாகிற்கு அஸ்ஸலாமு அலைக்கும்

துணை தலைவர் வுட்பட மற்ற பதவிகளுக்கும் தேர்தெடுக்க பட்டவர்கள் அரசியல் சட்டத்திற்கு வுட்பட்டு தேர்ந்தெடுக்க பட்டுளார்கள் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் அந்த தேர்தல்களில் பணம் வேலை செய்ததாக சொல்லபடுகிறதே. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் நமது அநேகர்களின் எதிர்பார்ப்பான வூழல் அற்ற நிர்வாகம் என்பதற்கு ஆரம்பத்திலேயே அடி விழுகிறதே என்பதுதான் கவலை.

நேரான நிர்வாகம் நடை பெற வல்லோன் அல்லாஹ்வை பிரார்த்திப்போமாக


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by mak.jainulabdeen (kayalpatnam) [26 November 2011]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 13790

அஸ்ஸலாமு அலைக்கும். ஐந்தாம் வார்டு உறுப்பினர் நண்பர் ஜகாங்கீர் மீது கூறப்பட்டுள்ள அபாண்டமான குற்றசாற்று கண்டு மிகவும் வேதனை அடைந்தேன். ஊழலுக்கு எதிராகவும், ஊர் ஒற்றுமைக்காகவும் இன்றுவரை செயல் பட்டுக்கொண்டிருக்கும் நண்பர் ஜகாங்கீர் அவர்களே, உங்களுடைய பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:சொல்வதை தெளிவாக சொல்!.
posted by OMER ANAS (DOHA QATAR.) [26 November 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 13804

அஸ்ஸலாமு அழைக்கும்.

தம்பி ஜஹாங்கிருக்கும், சகோதரர்,சாளை, அப்துல் ரஜ்ஜாக் லுக்மான் அவர்களுக்கும், ஒரு ராயல் சல்யூட்! நீங்கள் கேட்ட கேள்விக்கு, இவர்கள் பதில் தந்தாலே போதும் லஞ்சம் கொடுத்தவர் யார் வாங்கியவர் யார் என்று பொதுவான மக்களாகிய நமக்கு புரிந்து விடும்! அவ்வளவு உறுப்பினரும் கொடுத்த வேலைகளை தொடங்கும் முன்பே லஞ்சம் வாங்கி விட்டுத்தான், அப்படி செய்தார்கள் இப்படி செய்தார்கள் என்றால், நல்லவர் என்று நாம் நம்பும் லுக்மான் பாய் கூட விமர்சனத்திற்கு ஆளாக நேரிடும்! உண்மை எதுவோ அதை யாருக்கும் பயப்படாமல் சொல்லுங்கள். அப்படி யார் லஞ்சம் கொடுத்தார்? யார் வாங்கினார்? பெயரை சொல்லுங்கள் சகோதரர்களே! அல்லாஹ்விற்கு பயமா? அல்லது பொய்யான கேஸ் என்று கோர்டுக்கு அலைய்யனுமே என்ற பயமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:நகராட்சி வரி குறைப்பு மேல...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [26 November 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 13806

சகோதரர் அப்துல் வாஹித் அவர்களுக்கு,

"குருவித்துறை பள்ளி ஜமாத்தார்கள் 7 வது வார்டை இழந்துவிட்டோம் என மனவேதனையடையும் நேரத்தில் அதே வார்டை சேர்ந்த உறுப்பினருக்கு பதவி கொடுத்து அழகு பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியுள்ளீர்கள்"

இது தங்கள் வார்டு உறுப்பினருக்கு sorry நம் வார்டு உறுப்பினருக்கு அந்த பதவி கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் தொடுத்த கேள்வியாகவே தெரிகிறது. இந்த கேள்வியை மற்றவர்கள் கேட்டால் அர்த்தம் உண்டு. ஏனெனில் 90% ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வாழும் நம்மூரில் துணை தலைவர் பதவியை தாங்கள் யாருக்கு இதே வலைத்தளத்தில் தேர்வு நடப்பதற்கு முன்பே சிபாரிசு செய்தீர்கள் ஞாபகம் உள்ளதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரவு நேரங்களில் சிறுமழை!  (24/11/2011) [Views - 2645; Comments - 1]
நள்ளிரவில் மிதமழை!  (20/11/2011) [Views - 3295; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved