Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:20:19 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7359
#KOTW7359
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 10, 2011
புதுப்பள்ளி ஜமாஅத்தில் நடந்தது என்ன? வேட்பு மனு தாக்கல் செய்திருந்த கலீபா செய்து முகம்மது லெப்பை விளக்கம்!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 5260 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 6)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வார்ட் 16 க்கான வேட்பாளர் தேர்வு குறித்து - புதுப்பள்ளி ஜமாஅத் சார்பாக செய்தி ஒன்று அக்டோபர் 3 அன்று வெளியிடப்பட்டது. அது குறித்து - 16ம் வார்டில் வேட்பாளராக போட்டியிட மனு செய்து வாபஸ் பெற்றுக் கொண்ட கலீபா செய்து முகம்மது லெப்பை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:-

கலீபா செய்து முகம்மது லெப்பை
(16ம் வார்டில் வேட்பாளராக போட்டியிட மனு செய்து வாபஸ் பெற்றுக் கொண்டவர்)
115, தைக்கா தெரு, காயல்பட்டணம்.
Mob : 9487049144

புதுப்பள்ளி ஜமாஅத்தார்களுக்கும், 16வது வார்டு வாக்காளர் பெருமக்களுக்கும் தெரிவிப்பது என்னவெனில், 04-11-2011 தேதியில் புதுப்பள்ளி சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் சகோதரர் ஜனாப். S.A.சாமு சிகாபுத்தீன் அவர்களை 16வது வார்டுக்கான புதுப்பள்ளி ஜமாஅத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக ஒருதலைப்பட்சமாக அறிவித்து இருக்கிறார்கள். மேற்குறிப்பிட்ட ஜனாப் சாமு சிகாபுத்தீன் அவர்களை எந்த முறையில் தேர்ந்தெடுத்தார்கள் என்பதையும் அவர்கள் அதில் குறிப்பிட்டுள்ளார்கள்.

உண்மையிலேயே நடந்தது என்ன?

விளக்கம் இதோ : -
கடந்த 11-09-2011 அன்று புதுப்பள்ளியில் ஜமாஅத் கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டவர்களில் 80% அதிகமானோர், நமது ஜமாஅத் தேர்தல் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்றும், சென்ற தேர்தலில் செய்தது போல ஜமாஅத் நடுநிலை வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். இதை புதுப்பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறதெனில் ஜமாஅத் பொறுப்பில் பதவி வகிக்கும் ஒருசிலர் முற்கூட்டியே ஒரு வேட்பாளரை மனதிற்குள் தேர்ந்தெடுத்துக் கொண்டு அதன்படி செயல்பட்டு இருக்கிறார்கள். ஆதலால் தான் ஜமாஅத்தில் உள்ள 80% பேரின் கருத்துக்கு செவிசாய்க்கவில்லை. பெரும்பாலானோரின் கருத்தை நிராகரித்து விட்டு தன்னிச்சையாக முடிவெடுப்பதற்கு ஜமாஅத் கூட்டம் எதற்கு? இதற்கு ஜமாஅத் பொறுப்பில் உள்ளவர்கள் கூறும் விளக்கம் என்ன?

மேலும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக நடைபெற்ற பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்பட்டிருந்தால் அந்த தீர்மானங்கள் என்ன என்பதையும் அதற்கு பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டதா? விளக்கம் தரவும்.

இது நாள் வரை நமதூரில் உள்ள எந்த ஒரு ஜமாஅத்தும் (கோமான் ஜமாஅத் நீங்கலாக) காயல்பட்டணம் ஐக்கிய பேரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டு ஒரு பொது வேட்பாளரை அந்தந்த வார்டிலோ, ஜமாஅத்திலோ தேர்ந்தெடுக்கவில்லை. அப்படியிருக்க புதுப்பள்ளி ஜமாஅத் மட்டும் ஏன் ஆரம்பத்திலிருந்தே ஒரு பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது?

11-09-2011 அன்று ஜமாஅத் கூட்டம் நடப்பதற்கு முன் வேட்பாளர்களுக்கு ஒரு முச்சரிக்கை வந்தது. அதில் ஜமாஅத் தேர்ந்தெடுக்கும் வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஒரு ஜமாஅத்தின் பொதுக்குழுவோ அல்லது நிர்வாகக்குழுவோ கூடி விவாதிப்பதற்கு முன்பே முச்சரிக்கையில் கையெழுத்து வாங்குவது எந்த விதத்தில் நியாயம்? நாங்கள் ஏற்கனவே கூறியது போல ஒரு குறிப்பிட்ட வேட்பாளரை முதலிலேயே தேர்ந்தெடுத்து விட்டார்கள். அதனால் தான் அந்த முச்சரிக்கையில் அந்த வேட்பாளர் தைரியமாக கையெழுத்து போட்டிருக்கிறார். மற்ற மூவரும் (M.M.மஹ்மூது, கலீபா செய்யது முகம்மது லெப்பை, பாளையம் செய்து முகம்மது) மறுத்துள்ளார்கள். இந்த காரணத்திற்காக எங்களை ஜமாஅத்திற்குக் கட்டுப்படாதவர்கள் போல் சித்தரித்துள்ளார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்க விசயமாகும். ஜமாஅத்தின் கண்ணியத்தை எப்போதும் காப்பேன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

கடந்த 26-09-2011 அன்று மாலை 5 மணிக்கு மேல் அறிவிப்பு பலகை ஒன்றை வைத்து 27-09-2011 அன்று காலை ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று கூறப்பட்டது. 21-09-2011 அன்று நடந்த வேட்பாளர் நேர்காணலில் களத்தில் உள்ள ஐந்து வேட்பாளர்களில் மூன்று பேர் (M.M.மஹ்மூது, கலீபா செய்யது முகம்மது லெப்பை, பாளையம் செய்து முகம்மது) இந்த முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அது மட்டுமல்ல ஓட்டெடுப்புக்கு முந்தைய நாள் 26-09-2011 அன்று புதுப்பள்ளி செயலாளர் ஜனாப் அஷ்ரஃப் அவர்களிடம் நான் உட்பட மற்ற இருவரும் கடிதம் கொடுத்தோம். அதில் இந்த ஓட்டெடுப்பு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எங்கள் மனுவை திருப்பித் தரும்படியும் கேட்டிருந்தோம். மேலும் எல்லா ஜமாஅத்திலும் சம்பிரதாய முறைப்படி வேட்பாளர்கள் பள்ளிவாசலுக்கு மனு கொடுப்பது வழமையான ஒன்று. அந்த முறையையே நாங்களும் பின்பற்றினோம். எங்களைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கவில்லை. விஷயம் இப்படியிருக்க ஒரு முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டு ஒரு சிலரின் விருப்பத்திற்கேற்ப தேர்தலை நடத்தி இருக்கிறார்கள்.

சுமார் 1300 ஆண், பெண் வாக்காளர்களைக் கொண்ட இந்த ஜமாஅத்தில் ஏறத்தாழ 100 பேர் மட்டும் வாக்களித்து இருக்கிறார்கள். அதாவது 8% பேர் வாக்களித்த நிலையில் மீதமுள்ள 92% பேர் இந்த வாக்கெடுப்பை விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

ஜமாஅத் பொறுப்பில் உள்ள ஒரு சில நபர்களின் யோசனையின் காரணமாகவே ஒரு தலைப்பட்சமாக பொது வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த முடிவுக்கு புதுப்பள்ளி ஜமாஅத்தார்களும், 16ம் வார்டு வாக்காளர்களும், வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இதே புதுப்பள்ளி ஜமாஅத்திற்கு கட்டுப்பட்ட மேலப்பள்ளியை உள்ளடக்கிய 15வது வார்டில் ஏன் இன்னும் ஒருமித்த கருத்தை இந்த ஜமாஅத்தில் உள்ளவர்களால் எட்டமுடியவில்லை? 15ம் வார்டில் பொது வேட்பாளரை ஏன் நீங்கள் தேர்ந்தெடுக்கவில்லை. இதற்கு ஜமாஅத் பொறுப்பில் உள்ளவர்கள் தரும் விளக்கம் என்ன?

முழுக்க முழுக்க ஐக்கிய பேரவையின் ஆலோசனையில் இயங்கும் புதுப்பள்ளி நிர்வாகம், நகர்மன்றத் தலைவி தேர்வுக்கு யாரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவித்தார்களோ, அவர்களுக்கு ஏன் இந்த ஜமாஅத் வேட்பாளர் ஓட்டு கேட்கவில்லை. இதிலிருந்து புதுப்பள்ளி நிர்வாகத்தின் இரட்டை நிலையை பொதுமக்களாகிய நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

ஒரு சிலரின் சுயலாபத்திற்காகவும், தேர்தலுக்காகவும் ஜமாஅத்திற்குள்ளேயும், குடும்பத்திற்குள்ளேயும் பிரிவினை ஏற்படுத்த வேண்டாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளரை தவிர மீதமுள்ளவர்களை எதிரிகள் போல் சித்தரிக்கும் கனவு பலிக்காது. இன்ஷா அல்லாஹ் வரும் காலங்களில் ஒற்றுமையை கடைபிடிப்போம்.

'ஒற்றுமை என்னும் கயிற்றை பலமாகப் பற்றிப் பிடியுங்கள்' என்ற இறைமறை வசனத்திற்கேற்ப நாம் நடப்போமாக ஆமீன்.

நன்றி. வஸ்ஸலாம்.

இப்படிக்கு,
கலீபா செய்யது முகம்மது லெப்பை.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:மன அறிப்பு தரும் அறிக்கைகள்...
posted by OMER ANAS (DOHA QATAR.) [11 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10238

இப்படியே ஆளாளுக்கு அறிக்கை வெளியிட்டால், உண்மை அறியும் முன் தேர்தல் முடிந்து விடும். கப்சா சவுதியில் சாப்பிட்டு இருக்கிறேன். ஆனால் இங்கே (நிறைய) கப்சாவே நம்மை சாப்பிட பார்க்கிறது. மீண்டும் ஒரு அம்புலி மாமா கதை ஆரம்பித்துள்ளது. வேதாளம் எப்ப மீண்டும் முருங்கை மரம் ஏறுமோ? அப்புறம் என்ன வந்தாச்சு இல்லே அடிங்கப்பா!!!!!...? வழமை போல் உங்கள் கமாண்டை!!!. வருகிறது நாளை புதுப்பைள்ளியின் 3 ஆவது அறிக்கை.!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by shaik abbul cader (kayalpatnam) [11 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10244

Easy & Difficult Tasks – Life Lessons

Easy is to judge the mistakes of others – Difficult is to recognize our own mistakes.

Easy is to talk without thinking – Difficult is to refrain the tongue.

Easy is to hurt someone who loves us – Difficult is to heal the wound.

Easy is to forgive others – Difficult is to ask for forgiveness.

Easy is to set rules- Difficult is to follow them.

Easy is to dream every night – Difficult to fulfill the dream.

Easy is to stumble with a stone – Difficult is to get up.

Easy is to enjoy life every day- Difficult to give its real value.

Easy is to promise something to someone. Difficult is to fulfill that promise…

Easy is to say we love – Difficult is to show it every day. Easy is to criticize others – Difficult is to improve oneself.

Easy is to make mistakes – Difficult is to learn from them.

Easy is to think bad of others – Difficult is to give them the benefit of the doubt.

Easy to receive – Difficult to give.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by V D SADAK THAMBY (Guangzhou ,China) [11 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 10250

வழக்கமாக உட்தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் விடும் உப்புசப்பில்லாத அறிக்கை தான் இது.இப்போது அறிக்ககை விடும் இவர் இவ்வளவுநாள் என்ன செய்துகொண்டிருந்தார்? இது உண்மையாக இருப்பின், புதுப்பள்ளி ஜமாத் 2 முறை அறிக்கை வெளியிடும் வரை , இவர் ஏன் காத்து இருக்க வேண்டும் ?

இவர் கூற்று உண்மையென்றால் , இவர் ஏன் 16 ம் வார்டு உறுப்பினர் போட்டியிலிருந்து வாபஸ் வாங்க வேண்டும்? அதிலும் நிற்பதுதானே?

புதுப்பள்ளி ஜமாத் என்ன சொல்கிறதோ அதைதான் நாம் நம்ப முடியும் . அதைதான் நாம் ஆதரிக்க வேண்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by Kader Sulaiman (Kayalpatnam) [11 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10252

காயல்பட்டணத்தில் மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி தொடர வேண்டும் என்றால் சமூக சேவகி ஆபிதா மேடத்தை சேர்மனாகவும், லுக்மான் காக்காவை துணை சேர்மனாகவும் ஆக்கவேண்டும். அப்போது தான் இந்த காயல் செழிக்கும். அந்நாள் வெகு தூரத்தில் இல்லை. மக்களே புரிந்து செயல்படுங்கள்.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by Kaleefa Seyed Mohamed (Kayalpatnam) [11 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10255

சகோதரர் சதக் தம்பி அவர்கள் எந்த ஜமாஅத்தைச் சார்ந்தவர் என்பதையும், அந்த ‎‎ஜமாஅத்தின் சார்பாக எந்த வேட்பாளரை தெரிவு செய்திருக்கிறீர்கள் என்பதையும் ‎உள்ளாட்சி தேர்தல் குறித்த தங்கள் ஜமாஅத்தின் நிலைப்பாடு என்ன என்பதையும் தயவு ‎செய்து தெளிவுபடுத்தவும்‎.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by Mahmood Naina (Bahrain) [11 October 2011]
IP: 82.*.*.* Bahrain | Comment Reference Number: 10257

'ஒற்றுமை என்னும் கயிற்றை பலமாகப் பற்றிப் பிடியுங்கள்' என்ற இறைமறை வசனத்திற்கேற்ப நாம் நடப்போமாக... என்று சொல்லிவிட்டு.. ஜாமத்துகுள் பிளவையும்(!).. ஏற்படுத்த நாசுக்காக முயற்சி செய்து அறிக்கை விட வேண்டிய அவசியம் என்ன.. என்னால உங்கள் அறிக்கையை நம்ப முடியவில்லை.. அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்தான்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by Mohideen (Jeddah) [11 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10259

சகோதரர் கலீபா செய்து முகம்மது லெப்பை அவர்களே,

பல செய்தியில் பல சகோதரர்கள் முன்பே சொன்னது போல், ஜமாஅத் தவறு நடந்துரிப்பின் வெளிநடப்பு சைய்ய வேண்டியது தானே? ஒரு வேலை நாம வின் பண்ண மாட்டமா என்று ஒரு நப்ப்பாசை.என்ன செய்ய பதவி ஆசை யாரை விட்டது. இப்பொ தோல்வி அடைந்தவுடன் கூப்பாடு போடுகிரிர்கெல். என்ன உலகமடா இது.

ஒரு வேலை பேரவை,ஜமாத்தில் உண்மையாகவே தவறு நடந்து இருந்தால் அவர்கள் அல்லாவுக்கு பதில் சொல்லுவார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by recaz sulaiman (saudi arabia) [11 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10261

கலீபா செய்து முகம்மது லெப்பை அவர்கள் அவருடைய தாய் மாமா(கோப்பி செய்யது) உடன் போட்டி போடுவது ஏன் என்று விளக்கம் சொல்ல முடியுமா ? குடும்பத்திற்குள் போட்டி ?

இவர் புதுப்பள்ளி ஜமாதினை பற்றி குறை கூற வேண்டிய அவசியம் இல்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by Kader Sulaiman (Kayalpatnam) [11 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10264

கலீபா செய்யது முஹம்மதுவின் அறிக்கை மிக மிக சூப்பர். அன்றைய ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட நபர்களில் நானும் ஒருவன். அவர் கூறியதை போல் 80 சதவீதம் இல்லை 90 சதவீதம் பேர் ஜமாத் தேர்தல் விசயத்தில் தலையிடவேண்டாம் என்றோம். புதுப்பள்ளி ஜமாத் என்பது இருவர் கமிட்டி அல்ல. அப்படி தேர்தலில் தலையிட வேண்டும் என்றால் ஜமாத் மக்களின் ஒட்டு மொத்த முடிவையும் மற்றும் மருத்துவர் தெருவில் உள்ள மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களையும் கேட்டு அதன் பிறகு தான் முடிவெடுக்க வேண்டும். அதுதான் நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு அழகு. ஆனால் இங்கு நிர்வாகத்தில் உள்ள இருவர் மட்டும் புதுப்பள்ளி நிர்வாகத்தை குட்டி ஐக்கியப் பேரவையாக மாற்றி குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார்கள். புதுப்பள்ளியில் ஜமாத் தேர்தல் என்று ஒரு பொய்யான தேர்தலை நடத்திவிட்டார்கள்.

அன்று நடைபெற்ற ஜமாத் கூட்டத்தில் தலைவி தேர்தலைப்பற்றி எந்த பேச்சும் பேசாமல் ஒருதலைபட்சமாக ஜமாத்தில் உள்ள முக்கிய இரண்டு நபர்கள் மட்டும் உங்கள் இஷ்டத்திற்கு ஜமாத்தார்களின் கருத்துக்களை கேட்காமல் தன் இஷ்டத்திற்கு ஐக்கியப் பேரவை நிறுத்திய தலைவிக்கு எப்படி ஆதரவு அளித்தீர்கள். இக்கேள்விக்கு நிர்வாகத்தில் உள்ளவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். அல்லாஹ்விற்கு பயந்து நிர்வாகம் செய்யுங்கள். இந்தியாவில் நடப்பது மக்கள் ஆட்சி மன்னராட்சி அல்ல.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by S.A.Muhammad Ali (Dubai) [11 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10265

எல்லோரும் நகராட்சி தலைவர் பதவியை பற்றி மட்டுமே கார சாரமாக பேசி வருகிறோம். ஆனால் யாரும் கவுசிலர் பற்றி நினைப்பதாக தெரியவில்லை. வார்டுகளில் நிறைய கறுப்பாடுகள் நிற்கிறது. தலைவி மட்டும் நேர்மையாக இருந்தால் போதாது. உறுப்பினர்கள் அனைவரும் கை சுத்தமானவர்களாக இருக்க வேண்டும்.

எரியற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளின்னு கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கு .இப்படியிருக்கேன்னு ஓட்டே போடாம விட்டிரலாம்ன்னா மனசாட்சி வருத்தப்படும் போலிருக்கு.

பெட்டியில் தொடங்கி இயந்திரம் வரைக்கும் மாறவில்லை வாக்குறுதி மாறவில்லை தேர்தல் நம்பிக்கை இழக்கவில்லை. நகராட்சி நலன் கருதி மறக்காமல் வோட்டளிப்போம். மனசாட்சி உள்ளவர்க்கு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by D. SEYED ISMAIL (HONG KONG) [11 October 2011]
IP: 112.*.*.* Hong Kong | Comment Reference Number: 10270

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, இல்லையேல் அனைவருக்கும் தாழ்வு.

முற்றிலும் உண்மை. ஆனால் அந்த ஒற்றுமை நீதியின் நேர்மையின் அடிப்படயில் இருக்க வேண்டும்.

உண்மை கசக்கத்தான் செய்யும், அதற்காக கசப்பான உயிர்காக்கும் மருந்து சாப்பிடுவதை யாரும் வெறுக்க மாட்டோம்.

நம் தெருவிலுள்ள நண்பர்கள் மூலமாக அறிந்த செய்தியை இந்த விளக்கத்தின் வாயிலாக உறுதி செய்துகொள்ள முடிகிறது.

புதுப்பள்ளி செயற்குழு மற்றும் நிர்வாக குழுவிலுள்ள பலர் சென்ற முறை போல இந்த தேர்தலிலும் வேட்பாளர் தேர்ந்தெடுப்பில் பள்ளி நிர்வாகம் தலயிட வேண்டாம் என்ற கருத்துக்கு மாற்றமாக நிர்வாகம் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். இது ஏற்கனவே பிளவுபட்டுள்ள ஜமாத்தில் மேலும் பிளவு ஏற்படுத்தியிருக்கிறது.

எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் முடிவை எடுப்பது மிகக்கடினம், அனால் பலருடைய நியமான கருத்துக்களை புறக்கணித்துவிட்டு தங்களுடய சுய விருப்பத்தின் அடிப்படையில் மனோ இச்சையை பின்பற்றி இருக்கிறார்கள்.

நன்மையை எண்ணி இம்முடிவை எடுக்க நினைத்திருந்தால் பலரின் உணர்வுகளை மதித்திருக்க வேண்டும். அது இத்தகைய கருத்துப்போர் மற்றும் அறிக்கைபோரை தவிர்த்திருக்கும்.

ஆனால் அல்லாவின் முடிவை மற்ற முடியாது

அல்லா மனிதர்களை தவறு செய்பவர்களாக படைத்திருக்கிறான். யானைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி. ஆனால் யார் தம் தவறை உணர்ந்து திருத்திக்கொள்கிரார்களோ அவர்கள் தான் மக்களில் சிறந்தவர்கள்.

இந்த தேர்தலை ஒரு சோதனையாகவே அல்லாஹ ஏற்படுத்தியுள்ளான். இந்த சோதனையின் மூலம் நாம் நல்ல பிடிப்பினை பெறவேண்டும்.

வரும் காலங்களில் தனி மனிதர்களும், ஜமாஅத்களும் தங்களின் செயல்பாட்டில் அல்லாஹ்வுக்கு பயந்து நீதிமிக்க முறையில் செயல்படவேண்டும். இந்த விமர்சங்களை நன்மைக்காக (positive) எடுத்துக்கொண்டு நல்ல நோக்கோடு (proactive ) ஆக செயல்படவேண்டும்.

ஒரு வாரத்தில் தேர்தல் முடிந்து விடும். ஆனால் இதனால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து வெற்றி பெறுகிறவர்கள் அல்லாஹ்வுக்கு பயந்து, ஊழல் இல்லாத மக்கள் தொண்டு ஆற்ற வேண்டும்.

ஒபாமாவும், ஹில்லரி கிளிண்டனும் தேர்தலுக்கு முன் எந்த அளவு முரன்பட்டர்கள், ஒருவொருக்கொருவர் சேற்றை அள்ளி வீசிக்கொண்டார்கள் என்பதை நாம் அறிவோம். ஆனால் தேர்தல் முடிந்த பிறகு இருவரும் சேர்ந்து பணியாற்றுவதில் நாம் படிப்பினை பெற வேண்டும். அவர்களின் பனி உலகின் நன்மைக்கா அல்லது தீமைக்கா என்பது விவாதத்திற்குரியது.

ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நகராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் யார் வெற்றி பெற்றாலும் தேர்தலுக்கு முன்னால் நடந்த கசப்பான நிகழ்ச்சிக்களை மறந்து அல்லாஹுக்கு பயந்து, தங்களுக்கு வழங்கப்பட்ட பதவியை அமானத்தாக நினைத்து செயல்பட வேண்டும். முறைகேடாக நடந்தால் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும் என்ற பயம் மனதில் வேண்டும்.

அற்பமான இந்த பதவிக்காக நிரந்தரமான மறுமையை மறந்தவர்களாக வாழக்கூடாது.

இந்த சோதனையில் பெறும் நடைமுறை அனுபவங்களை உணர்ந்து வரும் காலங்களில் ஆக்கபூர்வமாக செயல்பட அல்லாஹ அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும்.

நன்மையை நாடி

த.செய்யது இஸ்மாயில் (மகுதூம் தெரு)
ஹாங்காங்

குறிப்பு :
ஊரில் உள்ள பல பள்ளிகளில் கொள்கை வேறுபாடுகளை மறந்து ஜாமத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவது கண்டு நம் ஜம்மதிலும் இந்த மாதிரி சூழல் அமைய கனவு கான்கிறேன் .

பள்ளிப்பருவத்தில் நண்பர்களோடு ஒன்றாக புதுப்பளியில் ஜமாத்துடன் தொழுத நாட்களை நினைத்து, அந்த மாதிரி நாட்கள் மீண்டும் வர அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிகிறேன் . இந்த கசப்பான உணர்வுகள் அடுத்த தலைமுறைக்கும் செல்லாமல், கண்ணியமிக்க பெரியவர்கள்l, நண்பர்கள் ஒன்று சேர்ந்து நல்ல முடிவெடுத்து, இன்ஷா அல்லாஹ புதிய பள்ளியில் (புதுபிக்கப்பட்ட பள்ளியில் ) நண்பர்களோடு சேர்ந்து மீண்டும் தொழும் நாளை எதிர்பார்த்து.........

இது நடந்தால், ஊருக்கு நல்ல முன்மாதிரி. நம் ஜாமத்தில் உள்ள அனைவர்க்கும் பெருமை. இன்ஷா அல்லாஹ.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by V D SADAK THAMBY (Guangzhou ,China) [11 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 10285

Ref : Comment Reference Number: 10255

நான் ரெட்டை குளத்து பள்ளி ஜமாஅத்தை சார்ந்தவன். 2 வது வார்டு, எங்கள் ஜமா அத்துக்கு உட்பட்டது. நாங்கள் போட்டியின்றி வேட்பாளரை தேர்வுசெய்துள்ளோம்.

தலைவர் தேர்தலில் , அனைத்து ஜமா அதுக்களின் பொது வேட்பாளரை எங்கள் ஜமா அத் ஆதரிக்கிறது.

நீங்கள் சொல்வதுபோல "கோமான் தெரு ஜமா அத்" மட்டும் தான் பொது வேட்பாளரை ஆதரிக்கிறது என என்ன வேண்டாம். எங்கள் ஜமா அத் ம், அனைத்து ஜமா அத் களும் இணைந்து தான் பொது வேட்பாளரை நிறுத்தி இருக்கிறது.அந்த வேட்பாளரை தான் ஆதரிக்கவும் செய்கிறது.

உங்கள் கூற்றுப்படி,உங்கள் ஜமாத்தில் நடந்த கூட்டத்தில் சுமார் 100 பேர் வரை கலந்து கொண்டு வாக்களித்து, 92 % பெரும்பான்மையுடன் உங்கள் ஜமா அத் வேட்பாளரை தெரிவு செய்துள்ளீர்கள்.அப்படி இருக்க நீங்கள் ஏன் தனியாக வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும்? இது முறையா? சரியா? நீங்களே உங்கள் மனதில் கைவைத்து சொல்லுங்கள்.!

அதோடு நிற்காமல், இவ்வளவு நாட்களுக்கு பிறகு, உங்கள் ஜமாத்தில் நடந்தவைகளை வெளியில் சொல்லி உங்கள் ஜமாத்திற்கு அவபெயரை உண்டாக்குகிறீர்கள்

இவை யாவற்றையும் பார்க்கும்போது .,உங்கள் அறிக்கை சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை..

எல்லாவற்றையும் விட ஒற்றுமைதான் பிரதானம். அதுவும் இந்த நேரத்தில்.

எனவே உங்கள் ஜமாத்துக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதுடன் , உங்கள் ஜமாஅத் மற்றும் அனைத்து ஜமாத்தின் வேட்பாளர்களை நீங்கள் ஆதரிக்க வேண்டியது . அதுதான் சரியான முறையும் கூட.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [11 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10315

ஆஹா ...இந்த "ஒற்றுமை" என்ற வார்த்தை இங்கு நாய் படாதபாடுபடுகிறது. பார்க்கலாம்...

இனிவரும் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல்களில்....இந்த ஒற்றுமை கிழியும் கோலத்தை. அப்போது கருப்பு சிவப்பு துண்டு தோளில் புரள இந்த ஒற்றுமை வியாபாரிகள் வீர நடை போடுவதையும் நாம் பார்க்கத்தான் போகிறோம். (சிலர் பச்சை துண்டும் அணிந்திருப்பார்கள். அது விதி விலக்கு) சகோதரர் விளக்கு.எஸ். எம். எ அவர்களே....!நமது காவல்துறை எல்லா அநியாங்களையும் அட்டூழியங்களையும் செய்து விட்டு "நாங்கள் அப்படி நடக்கவே இல்லை "என்றுதான் சொல்வார்கள். அதையேதான் அரசும் ஊடகங்களும் நம்பி செய்தி வெளியிடுவார்கள்.

கொஞ்ச நாட்களில் அவர்களின் வேஷம் களைந்து உண்மை வெளிப்படும். (சமீபத்தில் வாச்சாத்தி கொடுமை அப்படிதான் வெளியானது.)நீங்களும் அந்த அரசையும் ஊடகங்களையும் போலத்தான். அதிகார அமைப்புகள் சொல்வது மட்டும்தான் உண்மை. தனி நபர்கள் சொல்வதெல்லாம் தவறானது என்ற கருத்து கொண்டவர்கள் போலும். படித்தவர்கள் நீங்கள். துபாயில் வேறு இருக்கிறீர்கள். வேறு என்ன சொல்ல... சீக்கிரம் தெளிவு பெறுவீர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by peena abdul rasheed (Riyadh) [11 October 2011]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10316

அட சண்டபோடதிகப்ப இந்த ஊற பின்பற்றி உலஹம் அமைதியா இருக்கு?

ஐகியஜமாஅத் ஜெயித்தால் வேட்பாளர் ஜாமத்துக்கு அடிமை தங்கை ஆபிதா ஜெயித்தால் ஊருக்கு ஆபிதா அடிமை.

ஊர் நல்ல இருக்க புருஞ்சு ஓட்ட போடுக.

பீனா அப்துல்றஷீத்
பத்ஹ ரியாத்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by K S MUHAMED SHUAIB (KAYALPATINAM) [11 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10319

நான் சற்று முன்பு கொடுத்த தகவலில் ..."விளக்கு எஸ்.எம்.எ என்று தவறாக எழுதி விட்டேன் அதை வி .எஸ் .சதக்கு தம்பி (சீனா)என்று திருத்தி வாசிக்குமாறு வேண்டுகிறேன். டியர் அட்மின் ..தவறுக்கு மன்னிக்க வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by fathima (kayalpatnam) [11 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10331

அஸ்ஸலாமு அழைக்கும்

ஒற்றுமை ஒற்றுமை ஒற்றுமை முதலில் ஒற்றுமை வேண்டும் பதவிக்கு ஆசைப்பட்டு நமக்குள் இருக்கும் ஒற்றுமையை இழந்து விடவேண்டாம்...சிறியவர்கள் பெரியவர்கள் பேச்சை கேடு நடப்பது அந்த காலம் ஆனால் இன்று அது மாறியது காரணம் பெரியவர்கள் சிறுபிள்ளை தனமாக இருப்பது தான்..

புது பள்ளி ஜமாத்துக்கு நா ஒன்று கேட்டு கொள்கிறேன்..புது பள்ளி ஜமாத்தார்கள் முடிவெடுத்து நாங்கள் ஒரு வேட்பாளரை நியமித்து இருக்கிறோம் என்று சொல்கிறீர்களே புது பள்ளி ஜமாத்தில் ஆண்கள் மட்டும் தான் இருக்கிறீர்களா ..? பெண்களே இல்லையா பெண்களிடம் எந்த ஒரு வோட்டு வாங்காமல் நீங்களாகவே முடிவெடுத்து விடீர்கள்..இது சிறுபிள்ளை தனமாக இல்லையா

வெட்க படுகிறோம் வேதனை படுகிறோம்..ஏன் இந்த ஒற்றுமை இல்லாத ஜமாஅத்...ஜமாத்தை இலஞ்சர்களிடம் குடுத்து பாருங்கள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by SYEDOMER KALAMI (COLOMBO) [11 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 10337

KALEEFA YOUR STATEMENT SUPER .YOU ASKED MILLION DOLLAR QUESTION.WILL THEY ANSWER TO THIS? .DON'T WORRY KALEEFA, DAY WILL COME TRUTH ALONE WILL WIN.

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by M.N.ABDUL CADER (chennai) [11 October 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 10343

ASSALAMU ALAIKUM,

KALEEFA REALLY SUPER, SOME HONEST POST WAITING FOR U IN FUTURE ALL THE BEST.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by sholukku.aj (kayalpatnam) [11 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10360

Dear brother salam 2 u.pls avoid like this commands.because your respect also mingled new mosque.so pls. thanks! sholukku.aj


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by Rayyan's Dad!! (USA) [12 October 2011]
IP: 68.*.*.* United States | Comment Reference Number: 10370

என்ன நடந்தது என்று கூட சொல்ல ஒருத்தருக்கு இந்த ஜனநாயக நாட்டில் உரிமை இல்லையா. கலீபா அவர்கள் தானாகவே வந்து இந்த அறிக்கையை கொடுக்க வில்லை...புதுப்பள்ளியின் முதல் அறிக்கையை படித்தபின் அதில் கூறப்பட்டுள்ள செய்தி நடந்ததுக்கு முரணாக (சம்பந்தப்பட்ட தனக்கு) தோன்றியதால் இந்த அறிக்கையை clarify பண்ணுவதற்காக தந்து இருக்கிறார். நமது பேரவை நண்பர்களுக்கு ...பேரவைக்கு யாரல்லாம் சப்போர்ட் பண்ணுகிறார்களோ (புதுப்பள்ளி அல்லது தக்வா/மக்வா ) அவர்களெல்லாம் உண்மை சொல்லுகிறார்கள். யாரெல்லாம் பேரவைக்கோ அல்லது அது சம்பந்தம்பட்ட ஜமாஅத்/அமைப்புகள் பற்றி கருத்து/உண்மையை கூறினால்...அவைகள் அனைத்தும் பொய். ஊர் ஒட்ட்ருமையை குலைத்து விடும் என்ற ஒரு பெரிய மாயை. அவர் என்னதான் சொல்லுகிறார் என்று கேளுங்கள். நாமே எந்த ஒரு உள்நோக்கத்தையும் கட்பிப்பதில் எந்த ஒரு அர்த்தமும் இல்லை.

பேரவை போட்டி வேட்ப்பாளரை விலக வைப்பதுக்கும்...தோற்கடிக்க வைப்பதுக்கும் என்னலாம் முயற்சிகள் சூழ்சிகள் (அவதூறுகள் நோட்டீஸ் மூலமும் ஓர் பணம் பலம் படைத்த அன்பர்கள் influence) செய்து வருகிறார்களோ என்பது ஊரில் உள்ள அன்பர்களுக்கும் போட்டி வேட்பாளர்களுக்கும் மட்டும் தான் தெரியும். அல்லாஹ்வுக்கே வெளிச்சம்.

எந்த ஒரு சூழ்ச்சியும் ரொம்ப நாள் நீடித்ததாக & வெற்றி பெற்றதாக சரித்திரம் இல்லை. அவை அனைத்தும் இறைவன் கிருபையால் தோற்கடிக்கபடும் என்பதனை நாம் நன்றாக அறிவோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:புதுப்பள்ளி ஜமாஅத்தில் நட...
posted by Riyaz Mohamed S H (Hong Kong) [12 October 2011]
IP: 119.*.*.* Hong Kong | Comment Reference Number: 10464

இவரெல்லாம் ஒற்றுமை ஒற்றுமை என்று சொல்கிறார் இறை மறை எல்லாம் சொல்கிறார் ஏன் இவ்வளவு நாள் திரை மறைவில் இருந்து இருக்கிறார், இப்போது ஏன் ஜமாத்தில் கேள்வி கேட்டு பிரிவினை உண்டாக்க நினைக்கிறார். மேலும் ஜமாத்தை கலங்கபடுத்தி கொண்டு இருக்கிறார்.

அன்புள்ள ஜமாத்தார்களே பெரியவர்களே இவருக்கெல்லாம் உங்களது நேரத்தை செலவழித்து பொது விளக்கம் ஊர் முழுக்க தெரிய படுத்தி மேலும் ஜமாத்திற்கு களங்கம் விளைவிக்க தேவை இல்லை என்பது என்னோட தாழ்மையான வேண்டுகோள். தேவை என்றால் இவரையும் இவர் சார்ந்தவர்களையும் ஜமாத்திற்கு கூப்பிட்டு விளக்கம் கொடுங்கள்.

மேலும் ஜமாஅத் & குடும்பம் பிரிவினை என்கிறார், ஏன் இவருக்கு இந்த புரியாத புலம்பல். இவருக்கு பக்குவம் பத்தாது. ஜமாத்திலும் பெரியவர்கள்/சிறியவர்கள், நண்பர்கள், குடும்பங்கள் இடையே சொந்த விருப்ப வெறுப்பு இருக்கலாம் எல்லாம் இருந்தாலும் எல்லோரும் ஒன்று கூடி அனுசரித்து ஒற்றுமையாக முடிவு எடுத்து இருக்கிற போது இவர் தானாக இதை கேட்டிருப்பார் என்று தோன்ற வில்லை. இவரை எல்லாம் யார் எதிரியாக நினைக்கிறார்களாம். சின்ன பிள்ளை தனமாக ஜமாத்தில் பிளவு இருப்பதாக சொல்கிறார்.

இருப்பினும் என்னுடைய கேள்வி இவர் சொந்த தாய் மாமாவையே (பாளையம் செய்யிது முஹம்மது) எதிர்த்தும் மனு தாக்கல் செய்து இருக்கிறார் அப்படி இருக்க இவர் குடும்பத்தில் ஓட்டு யாருக்காம் ? அப்போது குடும்பத்தில் பிரிவு வராதாமோ ???

So Dear NEW MOSQUE JAMAATH elders and brothers/sisters please ignore this questions fm Kaleeba Seyed Mohamed Lebbai and carry on our team work with happily and enjoy our valuable times peacefully. May ALLAH shower his blessings to us.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved