Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:47:32 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7353
#KOTW7353
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 9, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: ‘மெகா‘ நடத்திய நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம்! பெருந்திரளான பொதுமக்களிடையே வேட்பாளர் ஆபிதாவுடன் நேர்காணல்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 6246 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (45) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 8)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலையொட்டி, காயல்பட்டினம் நகர மக்களுக்கு நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டலை ஏற்படுத்துவதற்காக துவக்கி செயல்படுத்தப்பட்டு வரும், MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பின் சார்பில், நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் 08.10.2011 (நேற்று) இரவு 07.30 மணிக்கு, காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்திற்கு, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தலைமை தாங்கினார். ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

பின்னர் அனைவரையும் வரவேற்றுப் பேசிய கூட்ட தலைவரும், ‘மெகா‘ செய்தித் தொடர்பாளருமான கவிமகன் காதர், கூட்டத்தின் நோக்கம் குறித்தும், முன்னேற்பாடுகள் குறித்தும் விளக்கிப் பேசினார். அவரது உரையின் சுருக்கம் பின்வருமாறு:-



இத்தேர்தலில் நகர்மன்றத் தலைமைக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர்... ‘மெகா‘ நிலைபாட்டின் படி அவர்களுள் இருவரான - புத்தகம் சின்னத்தில் போட்டியிடும் ஆபிதா, பேருந்து சின்னத்தில் போட்டியிடும் முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா ஆகியோரை நகர பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து, அவர்களில் தங்கள் விருப்பப்படி ஒருவரைத் தேர்ந்தெடுக்க வழிகாட்டுவதன் மூலம், நகர பொதுமக்களின் வாக்குகள் சிதறடிக்கப்படாமல் பாதுகாக்கப்படும் என்ற நல்ல நோக்கத்திலேயே இக்கூட்டத்தை ‘மெகா‘ ஏற்பாடு செய்தது.

நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர்களாக இத்தேர்தலில் பெண்களே களத்தில் நிற்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், அவர்களைக் கொண்டு வெளியரங்கில் நிகழ்ச்சியை நடத்துவதை விட, உள்ளரங்கில் நடத்தினால் நன்றாக இருக்கும் என்று கருதிய ‘மெகா‘ இக்கூட்டத்தை நடத்திட ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸ் நிர்வாகத்திடம் இட அனுமதி கேட்டது. ஒருநாள் வரை அவகாசம் எடுத்துக்கொண்ட அவர்கள், தமது ஜமாஅத்தினருக்கு விருப்பமில்லாததால் இட அனுமதி தர இயலாது என்று தெரிவித்துவிட்டனர்.

பின்னர், ஊருக்குள் வேறு உள்ளரங்கங்கள் இல்லாத நிலையில், வள்ளல் சீதக்காதி திடலிலேயே இக்கூட்டத்தை நடத்திட தீர்மானித்து, அதற்கான காவல்துறை அனுமதியையும் முறையாகப் பெற்று, இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொள்ளச் செய்ய ‘மெகா‘ தீர்மானித்திருந்த நகர்மன்றத் தலைமைக்கான வேட்பாளர்களான சகோதரி ஆபிதா, சகோதரி முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா ஆகியோரிடம் அழைப்புக் கடிதத்தை அளித்து, இக்கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் குறித்து விளக்கப்பட்டதோடு, வேட்பாளர்களிடம் ‘மெகா‘ சார்பில் கேட்கப்படவுள்ள கேள்விகளுக்கு முற்கூட்டியே தேவையான விளக்கங்களை இருவரும் திரட்டி வரும் வகையில் கேள்விகளை முன்னரே தந்துவிடுவோம் என்றும் தெரிவித்தோம்.

அவர்களுள் சகோதரி ஆபிதா இக்கூட்டத்தில் கலந்துகொள்ள அவ்விடத்திலேயே சம்மதம் தெரிவித்தார். ஆனால் சகோதரி மிஸ்ரிய்யா அவர்களின் தரப்பில், ஒருநாள் அவகாசம் கேட்கப்பட்டு, அதன் பின்னர் வேட்பாளர் மிஸ்ரிய்யா அவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள விரும்பவில்லை என அவரது கணவர் ஸலாஹுத்தீன் அவர்கள் கண்ணியமான முறையில் நம்மிடம் தெரிவித்தார்.

அதனையடுத்து, கலந்தாலோசனை செய்த ‘மெகா‘வினர், சிறப்பு அழைப்பாளர்களுள் வருபவர்களைக் கொண்டு கூட்டத்தைத் திட்டமிட்டபடி நடத்துவதென முடிவு செய்ததன் அடிப்படையிலேயே இப்போது இக்கூட்டம் இங்கே நடைபெற்றுக்கொண்டிறது. அதிலும், பெண்களுக்கென முழுக்க முழுக்க தனியிட வசதி செய்யப்பட்டு, அப்பெண்களுக்கு முன்னிலையிலேயே சகோதரி ஆபிதா அவர்களுக்கு மேடை அமைத்துக்கொடுக்கப்பட்டு, அங்கு மறைவிலிருந்தவாறே, தனது சுய அறிமுக உரையாற்றவும், ஆண்கள் பகுதியிலிருந்து ‘மெகா‘ நிர்வாகிகள் கேட்கும் கேள்விகளுக்கு விடையளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் அறியத் தருகிறோம்.

காயல்பட்டினத்தின் நகர்மன்றத் தலைவரை அனைத்து மக்களும் சுதந்திர உணர்வோடு, ஜனநாயக அடிப்படையில் தேர்ந்தெடுக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என ‘மெகா‘வின் நிலைப்பாடுதான் இக்கூட்டத்தை நடத்திட முக்கிய நோக்கமாக உள்ளது.

இது ஒருபுறமிருக்க, நகர்மன்றத் தலைமைப் பொறுப்பு நியாயமின்றி இம்முறை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து ‘மெகா‘ தொடர்ந்துள்ள வழக்கு வரும் 10.10.2011 அன்று விசாரணைக்கு வருகிறது. அவ்வழக்கில் வெற்றி கிடைக்க பொதுமக்கள் அனைவரும் துஆ செய்யுமாறு இக்கூட்டத்தின் மூலம் வேண்டுகிறோம்.


இவ்வாறு கவிமகன் காதர் தனதுரையில் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ‘புத்தகம்‘ சின்னத்தில் போட்டியிடும் ஆபிதா, பெண்கள் பகுதியிலிருந்தவாறு அறிமுக உரையாற்றினார்.



பின்னர், ‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் ஆண்கள் பகுதி மேடையிலிருந்து ‘மெகா‘ சார்பில் கேள்விகளைக் கேட்க, பெண்கள் பகுதியிலிருந்தவாறு வேட்பாளர் ஆபிதா பதிலளித்தார்.



நிறைவாக, ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக் நன்றி கூற, ‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாஜி காழீ முஹம்மத் நூஹ் துஆவுக்குப் பின், ஸலவாத் - கஃப்ஃபாராவுடன் கூட்டம் நிறைவுற்றது.



இக்கூட்டத்தின் வீடியோ ஒளிப்பதிவுகள் விரைவில், வலைதளங்களில் வெளியிடப்படும் என ‘மெகா‘ உள்ளூர் செயற்குழு உறுப்பினர் ஹாமித் ரிஃபாய் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாத மக்கள், ஆண்கள் - பெண்கள் என திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.











கூட்ட ஏற்பாடுகளை, ‘மெகா‘ செய்தித் தொடர்பாளர் கவிமகன் காதர் தலைமையில், அதன் உள்ளூர் செயற்குழுவினரும், செய்யித் இப்றாஹீம், ஹாஃபிழ் இஸ்ஸத் மக்கீ உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

படங்கள்:
‘மெகா‘ சார்பாக,
செய்யித் இப்றாஹீம்,
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம்.


ஒரு படம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (10.10.2011)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by SYED OMER KALAMI (colombo) [09 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 10036

EXCELLENT WORK BY MEGA,CONGRATS.

I HEARD THRO MY FAMILY MEMBERS AND FRIEND THAT MEETING WENT IN GOOD MANNER.SEPARATE COVERED PLACE TO LADIES WITHOUT MINGLING. CANDIDATE ABITHA ANSWERED CLEARLY AND .SHARPLY TO ALL 10 QUESTIONS ASKED BY MEGA AND BY LADIES PRESENTED IN MEETING..

ALSO I HEARD LADIES AND GENTS VAST CROWD CAME TO WATCH MEETING AND GOT CLEAR IDEA TO WHOM TO VOTE. ONCE AGAIN I CONGRAT MEGA FOR GOOD ATTEMPT .

BY

SYED OMER KALAMI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Sahuban Ali (Dubai) [09 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10046

என்ன ஐக்கிய பேரவை அபிமானிகளே !

இந்த கூட்ட நிகழ்வுகளிலிருந்தே எது ஜனநாயகம் என்று கற்றுக்கொள்ளுங்கள். ஐயக்கிய பேரவை என்ற மாய வலைகளிலிருந்து விடுபட்டு ஜனநாயக காற்றை சுவாசிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

கவிமகனாரே ! என்ன ஒரு சொல்லாற்றல் - செயலாற்றல் உங்களுக்கு. மெகா வை பற்றி புரிந்த மற்றும் புரியாதவர்களுக்கும் உங்களின் செய்யலபாடுகள் அதில் உங்களின் நிலைப்பாடுகளை தெளிவு செய்த விதம் மிகவும் அருமை. கண்டிப்பாக உங்களுக்கு பல முனைகளிலிருந்தும் அம்புகள் எய்யப்பட்டு இருக்கலாம். தனி மனித தைரியம் என்ற ஒரு கேடயத்தை மட்டும் வைத்து மெகா வின் ஒருங்கிணைப்பாளர்களை காயலரகள் மத்தியில் தலை நிமிர செய்து விட்டீர்கள். பாராட்டுக்கள்.

ஐயக்கிய பேரவையின் அபிமானிகள் சொல்ல எந்த வார்த்தைகளும் இல்லாமல் வாயடைத்து இப்போது எந்த விவாதத்தை வைத்து தங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது என்று உங்களின் பேச்சை பூதக்கண்ணடி வைத்து ஆய்வு நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். நீங்கள் அப்படியே இருங்கள் தேர்தலில் தங்கை ஆபிதா வெற்றிபெறும் வரை.

கவிமகனாரே, இவ்வளவு வேலைகள் செய்தும் உங்கள் "தொப்பை" குறைய வில்லையே!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Well within the codes
posted by ahamed mustafa (Dubai) [09 October 2011]
IP: 91.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10047

Good to know that the meeting was held with in the allowable Islamic codes.

Would have even been nicer, had the AJ's candidate would have attended the same & to answer the querries raised. This could have helped the common man in ascertaining the ability of the candidates as a hindsight.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mackie noohuthambi (kayalpatnam) [09 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10049

வேட்பாளர் அறிமுக கூட்டம் வரலாற்று சிறப்பு மிக்கது. இப்படி ஒரு ஏற்பாடு செய்ய எப்படி உங்களால் முடிந்தது?

அலுவலகத்துக்குள் உட்கார்ந்துகொண்டு இணையத்தளத்தில் அறிக்கைகள் விட்டுக்கொண்டு இருந்தவர்கள் திடீரென்று சிலிர்தெளுந்து திறந்த வெளியில் மனம்திறந்து பேச வேட்பாளருக்கு வாய்ப்பளித்த நீங்கள், கேள்விகளையும் நீங்களே கேட்டீர்கள். குழுமியிருந்த பார்வையாளர்கள் மனதில் எத்தனை கேள்விகளை சுமந்து வந்திருந்தார்கள் என்பதை நீங்கள் அறியதவறிவிட்டீர்கள். அப்படி ஒரு சந்தர்ப்பம் கொடுத்து ஐந்து நபர்களுக்காவது வாய்ப்பு கொடுத்திருந்தால் மாற்று அணியில் உள்ளவர்களும் அவர்கள் மனதில் உள்ளதை கேட்டு இருப்பார்களே, மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும் என்பதை நீங்கள் உணரத்தவறி விட்டீர்களே.

உங்கள் பணி தொடரட்டும். தேர்தல் முடிந்ததும் மெகா வுக்கு மூடுவிழா செய்துவிட வேண்டாம்." காயல்பட்டணம் மக்கள் விழிப்புணர்வு கழகம்" என்ற பெயருடன் புதிய பரிணாமத்துடன் செயல்படுங்கள்.

தொடர்ந்து கண்காணிப்பு இருந்தால் தவறுகள் குறையும். நேற்றைய நிகழ்ச்சிக்குப்பிறகு மெகா வுக்கு இளைஞர்கள் அங்கீகாரம் நிறையவே கிடைத்திருப்பதை உணர முடிகிறது.

வாழ்த்துக்கள்.

மக்கி நூஹுதம்பி 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by K S Muhamed shuaib (KAYALPATNAM) [09 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10051

நேற்று நடந்த "மெகா"வின் பொது கூட்டத்திற்கு நானும் போய் இருந்தேன். திரளான பொதுமக்கள் அதில் கலந்து கொண்டனர். பெண்களும் கூட அதிக அளவில் வந்திருந்தனர். மிக நல்ல அறிமுகத்தை கவிமகன்காதர் வழங்கினார். அதில் பங்கு கொண்ட வேட்பாளர் ஆபிதாவும் மிக நன்றாக பேசினார்.

வேட்ப்பாளரை எனக்கு முன் பின் தெரியாது என்றபோதிலும் அவரது குரலில் தொனித்த உறுதி அவர் எதையும் செய்து காட்டக்கூடிய ஒரு பெண்மணி என்ற எண்ணத்தை என்னுள் எற்ப்படுத்துயது என்று சொன்னால் அது மிகை அல்ல.

சகோதரி. மிஸ்ரியாவும் அதில் கலந்துகொண்டிருக்க வேண்டும் நல்ல வாய்ப்பை அவர் தவறவிட்டதாகவே தெரிகிறது. ஆபிதா நமதூர் நகராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நமதூருக்கு மிக நல்ல எதிர்காலம் காத்திருக்கிறது எனபது மட்டும் உறுதி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Kudack Mohudoom Mohamed (Kuwait) [09 October 2011]
IP: 213.*.*.* Kuwait | Comment Reference Number: 10059

மீண்டும் அதே தவறு, பெண்கள் போட்டோவை போட்டது, கூட்டத்தை பார்த்து வெற்றி என்று எண்ணி விட வேண்டாம், கடைசியில் சட்டமன்ற தேர்தல் வடிவேலு கதைதான். அவனுக்கு கூட்டம் கூடிச்சு ஆனால் ரிசல்ட் ஊத்திக்கிட்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே ...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [09 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10062

மாஷா அல்லாஹ் ..!! மிக தெளிவான பதில்கள் , மிகவும் அருமையான நிகழ்ச்சி . மெகா முதலில் இரண்டு வேட்பாளரில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் என்று கூறி அறிக்கைவிட்ட பொழுது நான் மிகவும் ஆத்திரப்பட்டு மிகவும் காட்டமாக கருத்து கூட பதிவு செய்தேன் . ஏனென்றால் நான் மெகா மீதும் காதர் காக்கா மீதும் மிகுந்த மரியாதை வைத்திருந்தேன் அவர்கள் அவ்வாறு அறிவித்ததை என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. ஆனால் இன்று அவர்கள் நடத்திய இந்த நிகழ்ச்சியை பார்க்கும் பொழுது முன்பு இருந்ததை விட அவர்கள் மீது கொண்ட மதிப்பு கூடிவிட்டது . மெகாவிற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் . தொடரட்டும் தங்களின் பணி .

மக்களே சற்று சிந்தியுங்கள் நான் ஐக்கிய பேரவை என்ன சொல்லுகிறதோ அதை மட்டும் தான் கேட்பேன் , அவர்கள் என்ன கேள்வி கேட்கின்றார்களோ அதற்கு மட்டும் தான் பதில் சொல்வேன் . மக்களை எல்லாம் சந்திக்க மாட்டேன் . தேர்தலுக்கு முன்னே இந்த நிலை என்றால் ஒருவேளை அவர்கள் வெற்றி பெற்றால்...??? இத்தகைய வேட்பாளர் உங்களுக்கு தேவையா ...????

அல்லது மக்களின் முன்னே மக்களோடு மக்களாக ,மக்கள் கேட்ட கேள்விக்கு அழகான முறையில் பதில் கூறிய இந்த வேட்பாளர் வேணுமா ..???

சிந்தித்து வாக்களியுங்கள் மக்களே ...உங்கள் பொன்னான வாக்குகளை சிதற விட்டுவிடாதீர்கள் ...

காயல் நகர மக்களே வரும் அக்டோபர் 17 அன்று உங்கள் வாக்கு என்னும் பொன்னான கவிதையை மறக்காமல் எங்கள் புத்தகத்தில் பதிவு செய்யுங்கள் . நாளைய வரலாற்று புத்தகத்தில் உங்கள் பெயரும் இடம் பெற கூடும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Thaika Ubaidullah (Macao) [09 October 2011]
IP: 182.*.*.* Macau | Comment Reference Number: 10066

MEGA should have given chance to all the candidates whoever willing to address the gathering, only then the public will be in a position to determine which one is the best amongst the contestants. Pre-determining the probable winning canditas by you would be rathar discouraging and unfair to other candidates. Did MEGA atleast done any public exit polls to determine the probable winners?

MEGA has not pointed out who is the best (as you have said from the very beginning of their formation that they would guide the public the best choice) but only had put the ball on to the public. I agree that they too as any other organisation or committee, might have their limitations,then atleast should have done right by giving all the candidates the right to put forward their cases to the public and LET THE PUBLIC decide who to select. THIS IS CERTAINLY UNFAIR TO OTHER CANDIDATES - YOU HAVE NOT DONE JUSTICE TO THEM. Give respect to other candidates and ask them what they feel about not inviting them.

IN AN DEMOCRACY, as all of us very well know, people are the one to choose and the collective force will win. Any one such as you, KWT, aikiya jamath or x,y,z commttee for that matter - can guide (as you supposed to but you have not done so). Aikiya Jamath has shown the public who is their candidate but you should have atleast created A LEVEL PLAYING FIELD FOR ALL . By doing this you have done an unfair advantage to one (or could have been two) against the other. Honestly, just reflecting the feelings, if my wife is running for the race, i and she would have felt so. If you are honest, i expect you to post your comments publically - so that other contestants and their supporters feel that they have not be deprived of the oppertunity to go to public.

Again, we are all doing things in good faith but are we doing the right thing at the right time? Only our cocious will tell us and if we have our great leader - Our prophet's (sal) life as a model. Could any one quote us any instances how our beloved prophet could have handled this - doing the best for the ummah without creating a division.

Allah knows best and all our prayers as a common man is 'PLEASE GIVE US THE RIGHT LEADER AND A RIGHT GOVERNING COMMITTE that does good to the ummah.

Allah will accept all our Duas and bless us with the best team


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (Hetang) [09 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 10067

இந்த செய்தியை பார்க்கும்போது " ஆமை , முயல் பந்தைய கதை " மட்டுமே நினைவுக்கு வருகிறது .

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohiadeen (Phoenix) [09 October 2011]
IP: 71.*.*.* United States | Comment Reference Number: 10068

I appreciate Sister Abitha courage on Q&A infront of public. What else we can expect from leadership skill? Also she has administration skill by running school for 12 years.

Sister Misiriya you missed this opportunity, you are thinking you avoid MEGA, actually you avoid the public who anticipated your leadership skill before the election.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by A.M Syed Ahmed (Riyadh) [09 October 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10069

அழகான ஏற்பாடுதான் - இதை சிம்பிள் ஆக - மெகா கட்சியின் வேட்பாளர் அறிமுக கூட்டம் என்று சொல்லலாம், ஏன் மற்ற வேட்பாளர்கள் வரவில்லை, அவர்களுக்கு தகுதி இல்லையா? இல்லை அழைக்கவில்லையா? மிஸ்ரியா வெற்றி பெற்றால் , நீங்கள் போட்டிருக்கும் கேஸ் மூலம் Supreme Court வரை வெற்றியை எதிர்த்து செல்வீர்களா? இப்போதே மக்களிடம் சொல்லுங்கள்....

உங்களின் திட்டத்தை அல்லாஹ் நன்கு அறிந்தவன்...

நீங்கள் என்ன மறைப்பு போட்டலும், அங்கு நகர்மன்றத்தில் அனைவரையும் நேருக்கு நேர் சந்திக்க வேண்டும்.

MLA or MP Electionil NAAN MUSLIMUKKU வோட்டு போடும்போது கூட இப்படி எல்லாம் நீங்கள் ரூம் போட்டு யோசிக்கவில்லை? நம்ம கம்மா மாருக்கு சொல்லுங்கள் சூரியன் சின்னம் இல்லை என்று வோட்டு போடாமல் திரும்பி வந்து விடபோகிரார்கள்??????

LET US MEET ON 17TH OCT - IN மக்கள் மன்றம் GUYS WAIT ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Nafeela (Kayalpatnam) [09 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10076

அஸ்ஸலாமு அலைக்கும்

கேள்வியை கொடுத்து பதிலை தயார் செய்ய சொன்னார்களாம் இதென்ன காமெடி???

இப்படி கொடுத்தால் தான் சிறு பிள்ளைகள் கூட தெளிவாகவும் தைரியமாகவும் பதில் சொல்லுவார்களே இதில் என்ன ஆச்சர்யம்????

கேள்வியை முன்னரே கொடுத்த மெகாவை என்ன சொல்வது? அந்த கூட்டத்தில் மக்கள் கேள்விக்கு தெளிவாக பதில் சொல்லி இருந்தால் பாராட்ட வேண்டிய விஷயம்

தேர்தல் முடிந்து ஆட்சி பீடத்தில் அமர்ந்த பிறகுதான் தெரியும் என்ன செய்ய போகிறார்கள் என்று சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம் என்பதெல்லாம் அந்த காலம் இப்போது எல்லாம் வடிவேலு காமெடிதான் ஒர்க் ஆகும்

வரும் ஆனா............??????????????அதேதான் கடைசியில் ஏமாளிகள் என்னவோ மக்கள்தான் போங்க!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Thaika Ubaidullah (Macau) [09 October 2011]
IP: 182.*.*.* Macau | Comment Reference Number: 10077

MEGA brothers, sorry i forgot to mention one more comment in my previous posting. You should have atleast put forward the credentials and profiles of Sis. Misriya also as she too as the other candidate proclaim to give good governance to our town.

From your news posting you have also mentioned that through her husband she declined to be part of this meeting in a very dignified manner. From this ,she has also shown some respect to you all. Have you done any research on her profile and ability or could have got the answers for your questinaire answered and then given it to the public or read it at the meeting, so that it could have been easy for the public to know both these candidates.

I think this was the only purpose of this meeting. We should respect her decision not to participate in this meeting may be for any reasons that might even be personal. if your duty was to interduce the two candidates, YOU SHOULD HAVE DONE SO, even if the other could not participate or SHOULD HAVE ALLOWED all those interested to participate and given equal chance to all and the PUBLIC would decide.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by amzedmoosa (dammam) [09 October 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10078

அருமைநண்பர் குடாக் புஹாரி அவர்களே! வடிவேலு காமெடி பீசு இவங்க சீரியஸ்? புரிந்தால் சரி பொருத்து இருந்து பார்போம் யார் வந்தாலும் நடக்கட்டும் நல்லது! இவங்க படித்தவங்க இவர்களே (ஆபிதா) வந்தால் மிக்க நன்று. வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Shahul Hameed (Hong Kong) [09 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 10083

அம்ஜத் மூசா அவர்களே இவிங்க படிச்சவங்க அவங்க படிக்க வில்லையோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [09 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10085

பசுந்தோல் போத்தின புலி, பால் பாக்கட் வாங்குன கரடின்னு இந்த கூட்டத்துக்கு முன்பும்.

இப்போ கூட்டத்த பார்த்து வடிவேலு, கருணாநிதிக்கு வந்த கூட்டம் போலன்னும் அவங்களுக்கு அவங்களாவே ஆறுதலும் சொல்லிக்கிறாங்க.

10ந் தேதி பேரவையின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடக்குதாம்..

மார்க்க அறிஞர்கள், நகர பிரமுகர்கள் அரசியல் கட்சியினருடன் என்ற பீடிகையுடன் நோட்டீஸ் வெளிவந்துள்ளது - வெளியில் இருக்கும் எத்தன பேருக்கு இது தெரியுமோ தெரியல..

செய்தியும் போட்டோவும் வந்த பிறகு பாக்கலாம், இவங்க சொன்ன ஷரீயத்து, பையத்து அவங்களுக்கும் உண்டா இல்லே உபதேசம் எல்லாம் வழமைபோல ஊருக்கு தானன்னு..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [09 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10086

Ubaidullah Kakka, this is what many of us were asking in posting ever since she was declared as peravai's candidate.

This seem to be the SECRET like many other things they maintained 'Confidentiality' - hopefully Peravai will release this on 10 oct meeting !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. என்ன வெடி என்று சொல்லுவீர்கள் ...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [09 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10088

சகோதரி நபிலா அவர்களே ...

கேள்வியை கொடுத்து பதிலை தயார் செய்ய சொன்னார்களாம் இதென்ன காமெடி??? என்று கூறும் நீங்கள் பொது வேட்பாளர் தேர்வில் விடை தாளையே கையில் கொடுத்து இந்த பதில் தான் அணைத்து ஜமாத்தினரும் போட வேண்டும் என்ற அந்த அவையின் செயலை என்ன வெடி என்று சொல்லுவீர்கள் ....?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by kudack buhari (doha-qatar) [09 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10089

நண்பர் amzedmoosa (dammam) அவர்களே!

இந்த செய்தியில் காமெடி இருக்கோ இல்லயோ அது வேறு விஷியம் உங்கள் கருத்து ரொம்ப காமெடியா இருக்கு இந்த கட்டுரைக்கு நான் எந்த கமெண்ட்ஸ்ம் இதற்கு முன்னால் எழுதவில்லை,சரி பார்த்துகொள்ளுங்கள்,ஹையோ ஹையோ ரொம்ப தான் காமெடிபன்னுறியோ கூடவே குழம்பி போயும் இருகிறியோ

நமது சின்னம் பேருந்து (பஸ்)

மக்களுக்கு சேவை செய்ய வெறும் ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது, தன்னம்பிக்கை வேணும் அது அவர்களுக்கு (ஆபிதா) இல்லை என்றே நினைக்கிறான், பேரவை முட்செரிகையில் கையொப்பம் கேட்டதும் எங்கே தோற்றுவிடுவோமோ என்று பயந்து கூடவே தன்னம்பிக்கையும் இழந்து கையொப்பம் இடாததை தான் பார்த்தோமே,

பெரியோர்களை மதிக்கும் பண்பு வேண்டும் ,இதுவும் அவர்களிடம் (ஆபிதா) இருப்பது சந்தேகமே ,தான் சார்ந்த ஜமாத்தார்கள் மற்றும் ஊர் பெரியோர்கள் சொல்லியும் கேட்காமல் நடப்பது.

சிந்தியுங்கள் செயல்படுங்கள். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ishakibnunahvi (abudhabi) [09 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10090

காயல் நகரின் பாரம்பரியம் பாதுகாக்க பட வேண்டும் பெண்கள் போட்டோ போடா வேண்டாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by zainab (kayalpatnam) [09 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 10091

அஸ்ஸலாமு அழைக்கும்

ஆபிதா அவர்கள் மக்களை ...., அனுபவத்தை..... இப்படி பட்ட படிப்புகளை படிச்சவங்க ..... அங்க எப்புடி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohamed faiz (CHENNAI) [09 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10092

MEGA-வின் மெகா முயற்சி பாராட்டுக்குரியது. சகோதரி மிஸ்ரியா அவர்கள் மெகாவின் வேட்பாளர் அறிமுக கூட்டத்திற்கு வராததால் மெகாவும் ஆபிதாஷேக் அவர்களை ஆதரிக்க வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது. சகோதரி ஆபிதாஷேக் அவர்களின் திறமையான பேச்சும், கேள்விகளுக்கு தந்த பதிலும் திறம்பட பணிசெய்வார்கள் என்று நமதூர்மக்கள் மத்தியில் பரவலாக காண முடிகிறது.

சகோதரி ஆபிதாஷேக் அவர்கள் வெற்றிபெற்று நமதூருக்கு சேவைகள் பல செய்ய வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by fathima (kayalpatnam) [09 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10095

அஸ்ஸலாமு அழைக்கும்

மிகவும் அருமை சஹோதரி ஆபிதா பேசியது எனக்கு மெய்சிலிர்த்து விட்டது... என் வீடு சூழ்நிலையால என்னால வரமுடியுமான்னு ரொம்ப குழம்பி பொய் இருந்தேன் அப்புறம் ஆபிதா அவர்களின் பேச்சை எப்படியாவது கேக்கணும் என்று ரொம்ப ஆவலா இருந்தேன் அல்லாஹ் உதவியால் என்னால அங்கு சென்று பார்க்க முடிந்தது அல்கம்துலியால்லாஹ்.. எல்லா புகழும் இறைவனுக்கே...

அட அட அட என்ன ஒரு அருமையான பேசு யாரோ சொல்வது போல் கேள்வி முன்னதே கொடுத்து பதிலை சேகரித்து வைத்து பேசினால் சின்ன குழந்தை கூட பேசும் என்று சொன்னார்கல் தனியாக எல்லார் மத்தியிலும் நின்று பேசுவதற்கு ஒரு தைரியம் வேணும் அது ஆபிதா அவர்களிடம் நிறையவே இருக்கிறது யாருக்கு வரும் இந்த தைரியம்.

"சும்மா உள்ள இருந்து கொண்டு என்ன வேண்டாலும் பேசலாம் எங்கே வெளிய வந்து பேச சொல்லுங்க பார்போம் நடு நடுங்கும்ல ...."

வலிவேலு சொன்ன மாதுரி பில்டிங் ஸ்ட்ரோங் ஆனா பேஸ் மட்டம் ரொம்ப வீக் ....." அந்த மாதுரி இருக்கும்...

மாஷா அல்லாஹ் அவர்கள் ஆசைபோல் ஆட்சி மகுடத்தில் அமர்ந்து இந்தைஎல்லாம் செய்து காட்டிய பின் தான் புரியாதா மக்கள் நம்புவார்கள் போலும்... ஆனால் எங்கள் வேட்பாளர் எதிரிக்கு கூட உதவும் மனப்பான்மை கொண்டவர்.. கண்டிப்பா அவர்களை நீங்கள் பாராட்டுவீர்கள்.. இந்த மாதுரி ஒரு நல்ல வேட்பாளரை குறை கூறி ஏசி பேசி விட்டோமே என்று கண்டிப்பாக வருந்துவீர்கள்...

பின்னால் நடக்கபோவதை நினைக்காமல் முன்னாள் யாரையும் பலி பேச கூடாது... பேசிவிட்டால் அந்த வார்த்தைகலை அல்ல முடியாது ...

யா அல்லாஹ் எங்கள் வேட்பாளர் ஆபிதா அவர்களுக்கு நி வெற்றியை தந்து இந்த ஊரையும் ஊர் மக்களையும் காப்பாத்து....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Cnash (Makkah) [09 October 2011]
IP: 62.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10100

சகோ. நபீலா அவர்களே அங்கே என்ன IAS தேர்வா நடந்தது எதோ QUESTION பேப்பர் அவுட் ஆயிட்டு, கேள்வி தெரிஞ்சிட்டு வந்து பதில் சொன்னார் என்றெல்லாம் சொல்லி நீங்க காமெடி பண்ணி இருக்கீங்க? செய்ய போகிற திட்டங்கள் என்ன என்ற கேள்விக்கு.. அவருடைய பதில். இதை மற்ற வேட்பாளர் சகோ. மிஸ்ரியா கூட வீட்டில் இருந்தே தயார் செஞ்சி அனுப்பி இருக்கலாமே... அட்லீஸ்ட் வாசித்தாவது இருப்பார்களே.... அதற்கும் அவர்களுக்கு ஐக்கிய பேரவையின் அனுமதி வேணுமோ!!!

சரி அதெல்லாம் இருக்கட்டும்!!!
பேரவையின் வேட்பாளர் எந்த முறையில் தேர்வு செய்யப்பட்டார்?
அவருடைய profile என்ன்ன?
ஒட்டு நடக்கும் முன் வேட்பாளர் பெயரை இறுதிவரை ரகசியமாக வைத்த ரகசியம் என்ன?
ஒட்டு போட்டவர்களுக்கு கூட கடைசி நேரத்தில் தெரிவித்த ரகசியம் என்ன?
எந்த முறையில் ஒட்டு போட சங்கங்கள் தேர்வு செய்யபட்டன?
மாற்று வேட்பாளராக திடீர் என்று வேட்பாளரின் உம்மா வந்ததும் பின்பு வாபஸ் வாங்கிய ரகசியம் என்ன?
அடுத்த வேட்பாளர் வாஹிதா ஓரங்கட்டபட்ட காரணம் என்ன?

இப்படி பல கேள்விகளை உள்ளடக்கிய ஒரு QUESTION பேப்பர் லீக் ஆகி பல வாரங்கள் ஆகிறதே...? கேள்விகள் என்ன என்று தெரிஞ்சா சின்ன புள்ளையும் தெளிவாகவும் தைரியமாகவும் பதில் சொல்லும் என்று சொன்னீங்களே.... அங்கே பல பெரிய புள்ளைகள் (புள்ளிகள்) பதில் தெரியாமல் முழிச்சிட்டு இன்னும் மௌனம் காக்கிறார்களே கொஞ்சம் நீங்களாவது கேட்டு சொல்லுங்கள்?

ஷரியத் கலாசாரம் என்று கத்தி முடிச்சாச்சி.... இப்போ நடந்த இந்த கூட்டத்தில் ஷரியதுக்கும் கலாச்சாரத்துக்கும் என்ன கேடு வந்ததோ தெரியவில்லை? வேட்பாளர் பெண்கள் பகுதியில் நின்றுதானே பதில் சொன்னார்? பெண்கள் எல்லோரும் ஷரியத் பேணிதானே வந்து சென்று இருகிறார்கள்?

ஏன் கடந்த காலங்களில் நம் ஊருக்கு கருணாநிதி வரும் பொது மாடிகளில் இருந்து பூ போட்ட கலாச்சாரம் எல்லாம் மாறி மக்கள் இப்போ சிந்தித்து செயல்படுகின்றனர் என்ற வருத்தமா?

கருணாநிதி கூட்டத்திற்கு படை எடுத்த நம் பெண்களை தடுக்க முற்படாத நீங்கள் இன்று பெண்கள் கூடுவது பற்றி கலாசாரம் ஷரியத் என்று பேசுகிறீர்கள்!!

அங்கே மற்றொருவர்!! அபிதா வோட்டு கேட்பது சம்பந்தமா போட்டோ போட்ட உடன் இது தான் சாக்கு என்று கண்டிக்க புறப்பட்டு விடுவார்!!!

சரி இது கூடாது என்றால் அன்றைக்கு கருணாநிதியின் மகள் கனிமொழி ஊருக்கு வரும் பொது ஜலாலியாவில் வைத்து பெரிய கூட்டம் ஒன்று பெண்களை வைத்து நடத்தபட்டதே!!
அப்போ இதே வெப்சைட் லே பக்கமா பக்கமா போட்டோக்கள் வந்ததே!!
அதை எல்லாம் வரிந்து கட்டி கொண்டு கண்டித்தால் உங்கள் நடுநிலை பாராட்டலாம்!!

ஏன் கனிமொழி என்ன ஷரியத் எழுர்ச்சி மாநாட்டுக்கா வந்தார்...?

நேற்று கூட நமது KMT இல் நடந்த கேன்சர் வெளிபுணர்வு கூட்டம் பற்றிய செய்தியில் பெண்கள் படம் போட தான் செய்தார்கள்!! கூடாது என்றால் எல்லாம் கூடாதுதானே? இப்படி பல நிகழ்சிகள் பற்றிய போட்டோஸ் பல தடவை இதே இணைய தலத்தில் வந்திருக்கு அப்போலாம் ஏன் கண்டிக்கவில்லை? இதில் ஏன் பாகுபாடு!!

குறை சொல்லன்னும்து முடிவு பண்ணி கமெண்ட் எழுதும்போது உங்ககிட்டே இருந்து இந்த நியாயங்கள் எதிர்பாக்க நினைப்பதும் எங்கள் குறையே!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Ali (Madinah Al Munawwara) [09 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10102

அஸ்ஸலாமு அலைக்கும்,

சற்று சிந்தியுங்கள். தயவு செய்து இதுதான் ஜனநாயகம் என்ற ரீதியில் மெகவுடைய செயலை வரம்பு மீறி புகழாதீர்கள். Democratic என்ற ஒரு சொல்லை வைத்துக்கொண்டுதான் இன்றைய அதிகார பலமுடைய பல நாடுகள் ( so called super power countries )இஸ்லாத்தை சூறையாட நினைக்கின்றன இந்த ஜனநாயகம் என்ற weapon வைத்துதான் . (அல்லாஹு பாது காப்பானாக ). பெண்களை ரோட்டுக்கு இழுத்த மேகாவின் செயலும் அவ்வாறே உள்ளது ( ஐக்கிய பேரவை பெரிதா அல்லது மெகா பெரிதா என்று காண்பிக்க விளையாடிய புது விளையாட்டுதான் இந்த மோசமான நாடகம்) innovative thoughts -thinking out of the box என்று மார் அடித்துக்கொள்ளும் செயல்.

ஐக்கியப் பேரவையின் சில செயல்பாடுகள் அதிருப்தி தரும் பட்சத்தில், அதை களைந்திட வெளியே நின்று குரல் கொடுப்பதைவிட உடன் இருந்து சுட்டிக் காட்டுவது அத்தவறை நீக்கிட இலகுவான வழியாகும். அதுவே சமயோசிதமும் ஆகும். wassalam. Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:எங்கோ கேட்டது,:...
posted by OMER ANAS. (DOHA QATAR.) [09 October 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 10104

பாதி சேர் காலியாக உள்ளதே? துள்ளி வந்த கூட்டமா தெரியலையே!!! ரிக்சா போட்டு அள்ளி வந்த கூட்டமா தெரியுதே!

ஒரு சகோதரி அழகா கேள்வி கேட்டு இருக்காங்களே? ஒரு வேலை விடைத்தாள் வெளியாகி விட்டதோ? இருக்கும், இருக்கும்! அது போட்டும்.

தம்பி கவிமகனாருக்கு, 60 வதுக்கும்,30 பதுக்கும்,, மத்தியில் நீர் மாட்டிக் கொண்டீர்.! ரிசல்ட் யாருக்கு வந்தாலும், வாழ்த்துவீர்களா? அப்படி என்றால் ருத்தம்மாளுக்கு, வாழ்த்து மடல் ரெடி பண்ணவும். இது தமாஸ் இல்லை!!!!!!!!!! உண்மை. Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Meera Sahib (Kayalpatnam) [10 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 10108

அஸ்ஸலாமு அழைக்கும் !

மிகவும் வேதனைக்குரிய கருத்து சிதறல்கள்!

கேள்விகளை கொடுத்து பதிலை கேட்பது தவறா? இது வேட்பாளரை வாக்களர்களுக்கு அறிமுகப்படுத்தும் கூட்டமே தவிர வேட்பாளரை பரீட்சை செய்யும் கூட்டம் அல்ல. அல்லது அந்த வேட்பாளரது பிரச்சார கூட்டமும் அல்ல.

சகோதரி மிஸ்ரியவை அழைக்காமல் இருந்தால் தவறு. அனால் அழைத்தும் அவர் கலந்துகொள்ளததற்கு மெகா எப்படி பொறுப்பாக முடியும்? அவர் கலந்து கொண்டிருந்தால் இதே கேள்விகளைத்தான் அவரிடமும் கேட்கப்பட்டிருக்கும். மெகாவின் செயல்பாட்டிலே எந்த தவறையும் நான் காணவில்லை.

இந்த வெப்சைட்டை கருத்து மேடையாக கருதாமல் வெறும் பொழுது போக்கு மற்றும் பிறர் கருத்தை கேலி செய்யும் மேடையாக பயன்படுத்துவது சரியா?

வேட்பாளர் தேர்வில் நிறை குறைகள் இருந்தாலும் அதனை எல்லாம் தள்ளிவிட்டு நமது நகராட்சியை அடுத்தவருக்கு தரை வார்க்காமல் தடுப்பது என்பதை பற்றி சிந்தியுங்கள் Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ISMAIL(KTM) (Hong Kong) [10 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 10110

MA SHA ALLAH

I HEARD HER SPEECH AND Q&A LIVELY, WHAT A COMMANDING SPEECH, AMAZED WITH HER KNOWLEDGE. SHE IS VERY CLEAR ABT THE KAYAL PRBS AND ALSO OTHER MAJOR PRBS (EG LIKE GLOBAL WARMING WHICH IS THE MAJOR ISSUE WORLD WIDE) .SHE IS TALENTED AND SKILLED CANDIDATE THERE IS NO DOUBT.
KAYALS DON’T MISS THIS IS LEADER SHIP CANDIDATE “PLS VOTE FOR BOOK” SHE KNOWS WHAT SHE IS GOING TO DO, (NOT LIKE AIKIYA PEERAVAI CANDIDATE FOR EVERTHING SHE HAS TO RELY ON SO CALLED ELDERS AND EXPERIENCED (GOD ONLY KNOWS IN WHAT THEY ARE EXPERIENCED) SISTER U SHOULD FULLFILL THESE ENTIRE THINGS (NOT LIKE NORMAL POLITICIAN) WHEN U COME TO POWER.

“பெரியோர்களை மதிக்கும் பண்பு வேண்டும் ,இதுவும் அவர்களிடம் (ஆபிதா) இருப்பது சந்தேகமே ,தான் சார்ந்த ஜமாத்தார்கள் மற்றும் ஊர் பெரியோர்கள் சொல்லியும் கேட்காமல் நடப்பது” THIS GUY IS ADVISE AMBUJAM MAMI SORRY NO AMBUJAM MAMA (VOMMITTING)

UMMA/VAPPA/MAMA/MAMI/MACHI/MACHAN /KAKA/LATHA/THANGACHI/THANBI /APPA/KAMMA/ UNKAL VOTTTU: BOOKKU KA PLS DIAL ALL UR RELATIVES AND FRIENDS IN KAYAL TO VOTE FOR SISTER ABITHA
SYMBOL IS: BOOK
DON’T WASTE TIME WITH THESE ADVICE

AMBUJAM MAMA AND MAMI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack Seyed Mohamed Ali (kangxi) [10 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 10113

( வேட்பாளர்களிடம் ‘மெகா‘ சார்பில் கேட்கப்படவுள்ள கேள்விகளுக்கு முற்கூட்டியே தேவையான விளக்கங்களை இருவரும் திரட்டி வரும் வகையில் கேள்விகளை முன்னரே தந்துவிடுவோம் என்றும் தெரிவித்தோம் ..) கவிமகனார் உரையில் இருந்து ......

இதில் இருந்தே புரிந்து கொள்ளலாம் , மேடை ஏறிய வேட்பாளரின் அறிவாற்றலை . நன்றாக படித்து , சுய புத்தியுடன் பரீட்சை எழுதி தேற வேண்டும் . இப்படி கேள்விகளை கொடுத்து , பரீட்சை எழுத சொன்னால் " சின்ன புள்ள கூட மேடை ஏறும் " .

பார்வையாளர்களிடம் மைக் கொடுத்து , கேள்விகளை கேட்க செய்திருக்க வேண்டும் . அதுதான் நேர்மையான வழி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Mega Rocks!!
posted by Rayyan's Dad!! (USA) [10 October 2011]
IP: 63.*.*.* United States | Comment Reference Number: 10117

மேகாவுக்கு பாராட்டுக்கள்.... நல்லதொரு திங்கிங். ஆபிதா ஷேய்க் அவர்களின் தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சு மற்றும் அறிக்கைகள்... பேரவையையும் அதன் பொதுவேட்பாளர் மற்றும் பேரவை அபிமானிகளை ஆட்டம் காண செய்திருக்கும் என்று சொன்னால் அது மிகையாகது. பொருத்து இருந்து பார்க்கலாம்... அவிங்க என்ன செய்யுறாங்கன்னு. நடக்கிறதே எல்லாத்தையும் பார்த்தா.... ஆபிதா ஷேய்க் பக்கம் தான் பலமான மக்களின் பாசக்காற்றும்... ஒளி வட்டம் அடிக்கிறது என்பது நம் அனைவருக்கும் மிக தெளிவாக தெரிகிறது.

யார் வெற்றி பெற்றாலும்.... ஐக்கிய பேரவை அனைவரும் விரும்பும் பேரவையாக மாற வேண்டும் என்பதில் எந்த ஒரு சந்தேகம் இல்லை. உடனடியாக அது முறையாக தேர்தல் நடத்தி, நல்லதொரு தலைமையை ஏற்படுத்தி .... அனைவரும் அங்கம் வகிக்கும் மகா பேரவையாக, நியாத்துக்கு மட்டும் தலை வணங்கும் மக்களின் மாமன்றமாக விளங்க வேண்டும். அதற்க்கு நாம் அனைவரும் தேர்தல் முடிந்தவுடன் அதற்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும் என்பதே நம் அவா!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. :உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Hasbullah Mackie (dubai) [10 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10122

MEGA வின் வழக்குகள் வாபஸ் ஆகி விட்டதா ? SUPPOSE வழக்கு வெற்றிபெற்றால் தலைவர் யார்?

ஆபிதா சகோதரி தோல்வியடைந்தால் MEGA வின் ஆதரவு OR நிலை பாடு என்ன ?

அதே போன்று ஆபிதா சகோதரி வெற்றிபெற்றால் ஐக்கியபேரவையின் நிலை பாடு என்ன?

இந்த தேர்தலிலும் '049' OR '069' APPLICABLE ஆகுமா?

பண வேட்டை இந்த வாரம் முதல் ஆரம்பமாகும் கடுமையான போராட்ட மாகவும் இருக்கும்...

சகோதரி ஆபிதா வைப்பற்றி மக்கள் அறிந்துள்ளார்கள் சகோதரி மிஸ்ரயா வைப்பற்றி அறிய ஐக்கியப்பேரவை அறிமுக கூட்டத்தின் பின்பு தான் தெரியவரும்.

ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்....

தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடாதீர்கள்

அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்

ஏனென்றால் இதெல்லாம் ஒரு TEMPORARY உலகத்திற்காக வேண்டி தான் . மறுமை நாளில் தான் செய்த செயல்களுக்கு பதில் சொல்லி ஆக வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்

யார் வெற்றி பெற்று வந்தாலும் தேர்தலுக்கு பிறகு ஊர் ஒற்றுமைக்காக ஆதராவாக இருங்கள்...

அது ஐக்கியப்பெரவையாக இருந்தாலும் சரி அல்லது மற்றவர்கள் வெற்றி பெற்றாலும் சரியே.

AIADMK - DMK போட்டி நடைபெறுவதாக நினைக்க வேண்டாம் பழிவாங்கும் எண்ணம் வேண்டாம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. மாமியார் உடைத்தால் மன்சட்டி
posted by Sahuban Ali (Dubai) [10 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10123

VSMA இது வரை கமெண்ட் அடிக்க வில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தேன்.

வந்துட்டான்யா வந்துட்டான்..

எழுத ஒன்றும் இல்லை, குறை காண முடியா கூட்ட ஏற்பாடுகள், முதல் பெண்களா என்று கூக்குரல், இரண்டாவது கலாசாரம் என்ற கருமாதி, இப்போ கூட்டத்தை பார்த்த பிறகு ஓஹோ எழுதி வைதுக்கேட்டர்கலாமே என்று எக்காலம். என்ன்டங்கடா கூத்து இது?

இது வேட்பாளர் அறிமுக கூட்டம் - இதில் அவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்று தான் எல்லார் மனதிலும் பொதுவான கேள்விகள் எழும். அதன் பிரதிபலிப்பு தான் கூட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விகள். இதே கேள்விகள் தான் ஐக்கிய பேரவை வேட்பாளரிடமும் கொடுக்கப்பட்டது. ஒரு அன்பர் இங்கே பதிவு செய்தது போல், சகோ மிஸ்ரியா அவர்கள் எழுதி கொடுத்து இருந்தாலும் MEGA படித்துக்காட்டி இருக்கலாம்.

அது தவிர, கூட்டத்தில் என்ன நடந்தது என்று தெரிய முன்பே பதிவுகளை தயாராக எழுது வைத்திருக்கும் VSMA , சகோதரி ஆபிதா அவர்கள் பெண்கள் பகுதியில் பெண்கள் நேரடியாக கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொல்லி இருக்கிறார் - இது உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும். உங்கள் கண்ணாடிகளுக்கு AP மட்டும் தானே தெரியும்.

எப்பொருள் யார் யார் வாய் காணினும்
அப்பொருள் மைப்பொருள் நோக்குகுங்கடா

இது புது வள்ளுவர் குரல்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohiadeen (Phoenix) [10 October 2011]
IP: 199.*.*.* United States | Comment Reference Number: 10124

Brother MAC Mohammed, I agree with your comment.Its time to change Ikkiya peravai, members should be elected rather than permanent.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Let's wait till night falls...
posted by M Sajith (DUBAI) [10 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10126

I'm reserving all comments till Peravai's candidate intro-meeting tonight.

Knowing their caliber and their timely-‘mess', they will make another 100 goof-ups, that will as usual make their own loyalists repent for their comments.

Alims are called in for Qirath/Duas and no contributions further, politicians are called in for praising the Peravai which normally they do for money.

Let us see what we can hear from the candidate as what she has to say (she had enough time to prepare with her lawyer brothers and counter).

Technically she should have been a ‘choice’ candidate, now look she can’t even publish her profile on her own waiting for Peravai to decide…

And, why Peravai is not publishing it, another million dollar question.

Probably they lost the Batteries for their remote controls!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Nafeela (Kayalpatnam) [10 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10133

சகோதரரே! IAS தேர்வில் என்ன கேள்வியை கொடுத்து பதில் ரெடி பன்னவா சொல்ராங்களா?அப்படி ஒன்னும் தெரிலயே?? கேள்வி பேப்பர் அவுட் ஆகி எத்தனை பேர் இன்னைக்கு IAS ஆகி இருகாங்க?

மெகா ஒன்னு பன்னிருக்கலாமே ஆபிதாவையும் மிஸ்ரியாவையும் அழைத்ததற்க்கு பதிலாக ஐக்கிய பேரவையை அழைத்து நீங்கள் கேட்ட கேள்விகளை நீங்கள் சொன்ன அந்த புள்ளிகளிடம் கேட்டிருக்கலாமே???

என்ன நேர்ந்தது மெகாவிற்க்கு??

வேட்பாளர் நோட்டீஸ் விடுத்துள்ளார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பு வேறு பிறகு எதற்க்கு வெட்பாளர் அறிமுகக் கூட்டம்??இதில் மெகாவின் உள் நோக்கம் என்ன???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. ஒரு ஆட்டோனாவது சொல்லி இருக்க வேண்டாமா ...??
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [10 October 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10134

சேர் சில காலியாக இருப்பது தெரிந்தவர் கண்களுக்கு .. பல பேர் கால் வலிக்க நின்று கொண்டிருப்பது தெரியாமல் போனது ஏனோ ....

நீங்க ஒரு 61 பேரை கூட்டி வச்சுட்டு . இது தான் ஊர் கூட்டம் , இவர்கள் சொல்பவர்கள் ஊர் வேட்பாளர் என்று நீங்களே உங்களுக்குள் சொல்லி

ஒரு கூட்டத்தை கூட்டின அது கூட்டம் ,ஐக்கியம் ,அவை இங்கு உண்மைக்காக ,நீதிக்காக, அநீதிக்கு எதிராக ,ஓர வஞ்சனைக்கு எதிராக தானாக சேர்ந்த கூட்டத்தை ரிக்சா போட்டு அள்ளி வந்த கூட்டமான்னு சொல்லுறது என்ன சார் நியாயம் . ஒரு ஆட்டோனாவது சொல்லி இருக்க வேண்டாமா ...?? நீங்க ரிக்சானு எழுதும் போதே தெரிஞ்சு போச்சு நீங்களும் அந்த அவை மாதிரியே பழைய காலத்துலேயே இருக்கீங்கன்னு . கொஞ்சம் துள்ளி குதிச்சு நிகழ் காலத்துக்கு வாங்க ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Ismail (Chennai) [10 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 10136

Hats off to MEGA.. Its a good effort. My wishes to MEGA.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack Seyed Mohamed Ali (kangxi) [10 October 2011]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 10165

நண்பர் sahuban ali , கூட்டத்தில் என்ன நடக்கும் என்பதை , முற்கூட்டியே அறிந்து , கருத்துக்களை எழுதி தயாராக வைக்கும் அளவுக்கு , நான் ஒன்றும் ஜோஸ்யக்காரன் இல்லை . ஆனால் உங்களுடைய எழுத்து ஒவ்வொன்றிலும் இது பிரதிபலிக்கிறது என்பதை வாசகர்கள் அறிவார்கள் .

மேலும் , நீங்கள் குறிப்பிட்ட இந்த " கருமாதி " கத்திரிக்காய் , கூட்டத்தை பார்த்து மிரள்வது .......... அதை உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள் . தெருவில் வித்தை காட்டும் " கலைக்கூத்தாடி " க்கும் கூட்டம் வரும் .

நீங்கள் உங்கள் comments எப்படி வேண்டுமானாலும் எழுதுங்கள் . நீங்கள் உபயோகிக்கும் வார்த்தைகள் அவ்வளவு அருமை . வாசகர்கள் கண்டுகொண்டால்தானே !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by S.A.MUHAMMAD ALI (Dubai) [10 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10172

Aikiya Peravai is like an expired medicine in a Pharmacy. They are thinking as if they are in 1950's. Let them give way to youth (MEGA) and sit outside as watchers. They never think these many questions will arise from our people. Let's see what they will tell other than 'OOR Otrumai' in the meeting.

It is not possible to please everyone. But you should be true to yourself and answer the people's question.

இருக்கிற பாதையில் (ஊழல்) செல்வதை விட புதிய பாதை அமைத்து பிறருக்கும் நேர்மையான வழி காண உதவிடுவோம்.

ஊழலை ஒழிக்க
உரிமையை காக்க
உண்மையாய் உழைக்க
உங்கள் வோட்டை புத்தகம் சின்னத்தில் பதிவு செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by fathima (kayalpatnam) [10 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10174

அஸ்ஸலாமு அழைக்கும்

திருமதி ஆபிதா அவர்களின் பேச்சு மிகவும் அருமை நம் முதலமைச்சர் திரு ஜெய்யலலிதா அவர்களின் பேச்சை போல கம்பீரமாகவும் அருமையாகவும் இருந்தது வெற்றி பெற வாழ்த்துகள் ஆபிதா அவர்களுக்கு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohideen (Jeddah) [10 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10201

VSMA காக்கா commt Ref : 10113

என்னதான் கேள்வியை கொடுத்து பேச சொன்னாலும், இவ்வுளவு கூட்டத்துக்கு மத்தியில் மேடையில் பேச வேண்டும் என்றால் அதற்கு ஒரு பேச்சுதிறமை வேண்டும். அதை நாம் மறுக்க கூடாது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Cnash (MAKKAH) [10 October 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10216

நபீலா அவர்களே!! கொஞ்சம் நிதானத்துடனும் பொறுமையாகவும் கமெண்ட்ஸ் வாசித்துவிட்டு பதில் சொல்லுங்களேன்!!! அங்கே ஒன்னும் IAS தேர்வு நடக்க வில்லை!! Question தெரிஞ்சிட்டு வந்து பதில் எழுதி கள்ளதனமா பாஸ் பண்ணிடாங்க என்று சொல்ல!! என்று தான் சொல்ல வந்தேன்!! அதே உல்டா பண்ணி நீங்களே தப்சீரும் பண்ணிட்டியோ!! இதுக்கு பிறகு விளக்கம் சொல்ல தெரிய வில்லை!!

சரி அங்கே ஒரு எக்ஸாம் ஹால்லே ஒரு மாணவிக்கு ...மெடிக்கல் காலேஜ் அட்மிசன் எல்லாம் கொடுத்த பிறகு சும்மா ஒரு என்ட்ரன்ஸ் எக்ஸாம் வச்சாங்களே..... அவங்க கிட்டேயா கேள்வி கேக்க சொன்னீங்க!! அது ஒன் வே டிராபிக் லோ அங்கே இருந்து பதில் ஏதும் எதிர்ப்பாக்க முடியாதே!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [10 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 10226

Dear Admin: Please publish my comment 10167 along with this one..

Some people like VSM Ali are spreading a rumor that I'm writing as Sahuban Ali. Please note I don't have any reason to hide behind anyone else.

I hail from Maraikar Palli Street and hold a responsible position in Industrial Automation is one of 'The' most popular industry in UAE (shoot a email and I'll be happy to exchange phone number)

Neither I represent any organization nor do I intend in future. I’m and will remain a strong critic of AP until they go for an election of their executive body. The only way to get UNITED in Kayalpatnam.

If anyone is interested in knowing who Sahuban Ali is please send him an email and contact him.

Though I share some of his view towards AP - I don't surrender myself to the MEGA thinking as he seem to be in. I had been and will remain a citric of them too if the slip off..

M Sajith / DUBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. எழுத்தறிவித்தவள்..நீ
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், ராபியா மணாளன். (புனித மக்கா.) [11 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 10269

என் அருமை வாரிசுகளுக்கு உயிர்,மெய் எழுத்துக்களை முதன் முதலில் சொல்லிக்கொடுத்தவள்,இன்று நகர் மன்றத்தின் தலையெழுத்தையே மாற்றியமைக்கப் போகிறாய்!

கரும்பலகை வெறும் பலகையாய் இல்லாமல்,அதில் ஆக்கமெனும் உயிரெழுத்தைப் பதித்துவிட்டுச் செல்! மழலைகளுக்கு மதிப்பெண் போட மட்டுமே உதவிய உன் கையெழுத்து இன்று காயலின் தலையெழுத்தையே மாற்றும் தகுதியைப் பெறப் போவது உறுதி!

வெற்றிக் கிரீடத்தின் வெளிச்சம் உன் நெற்றியில் இப்போதே ஒளிர்கிறது,அதைச் சூடி நீ,அரியனையில் அமரப்போகும் நன்நாள் வெகு தொலைவில் இல்லை! நகர் நலம் காக்க,ஊர்வலம் வந்த நீ,ஊர் நலம் காக்க,தேர்வினில் வெல்வாய்! தேர்ச்சியும் பெறுவாய்!!!

குசும்பு:
ஆபிதா மிஸ் வந்துட்டாங்கன்னா? மிஸ்ரியா “மிஸ்”ஸாகிடுவாங்கல்லே...? அப்படீன்னு குழந்தைங்க பேசிக்கிறாங்க...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (kangxi) [11 October 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 10314

அஸ்ஸலாமு அழைக்கும் sajith சார் , நீங்க இப்படி ஒரு responsible position இல் இருப்பது அறிந்து மனதுக்கு ரொம்ப சந்தோசம் . ( அப்ப , மத்தவங்கல்லாம் எந்த மாதிரி position ல இருகிறார்கள் என்று தெரியவில்லை ) .

அப்புறம் , சார் , இந்த election news ல நாமெல்லாம் அடிக்கடி சந்தித்து , ரொம்ப போர் அடிச்சு போச்சு . இதுனால , சண்டை சச்சரவுகள் வந்து , நமக்குள்ள இருக்கும் " தாய் புள்ள " உறவு முறைல விரிசல் வந்துடுமோன்னு பயமா இருக்கு சார் . அதுனால , ஸாலிஹ் காக்காட்ட சொல்லி , வேற ஏதாவது உருப்படியான செய்தியா , அதாவது வயலுக்கு தண்ணி பாய்ச்சுவது எப்படி ? கரண்ட் பில்லை கரெக்டா கட்டுவது எப்படி ? ன்னு நியூஸ் போட சொல்லுங்க . ( அட , சும்மா தமாசுக்கு சொன்னேன்பா , இதுக்கும் வரிந்து கட்டிக்கொண்டு அம்புகளை விட்டுடாதீங்கோ )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved