Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:50:26 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7334
#KOTW7334
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 3, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் மிஸ்ரிய்யாவை ஆதரிக்க தக்வா வேண்டுகோள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4109 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (19) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கி, 29.09.2011 தேதியுடன் நிறைவுற்றது.

காயல்பட்டினத்தின் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு 7 பேரும், நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கு ஏராளமானோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நிலைபாடு குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்காக தாய்லாந்து காயல் நல மன்றம் - தக்வா அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில், முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தாய்லாந்து காயல் நல மன்றத்தின் சிறப்புப் பொதுக் குழு கூட்டம் 02-10-11 ஞாயிறு இஷா தொழுகைக்குப் பின் தாய்நாடு டிராவல்ஸ் இல்லத்தில், மன்றத் தலைவர் ஹாஜி வாவு ஷம்சுத்தீன் அவர்கள் தலைமையில், மௌலவி அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி, ஹாஜி அப்துல் கரீம், ஹாஜி விளக்கு நூர் முஹம்மது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.



துவக்கமாக ஹாஃபிழ் மிஸ்கீன் ஸாஹிப் கிராஅத் ஓதினார். சகோதரர் அப்துல் வஹாப் அவர்களின் வரவேற்புரைக்குப் பின் கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் அனைவரின் ஒருமித்த கருத்தோடு கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், நமது காயல்பட்டணம் ஐக்கிய பேரவை, அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்கள் சார்பாக தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டிருக்கும் ஜனாபா மைமூனதுல் மிஸ்ரிய்யா என்ற சகோதரியை ஒரு மனதாக ஆதரித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்வதுடன் மற்றவர்கள் ஊர் ஒற்றுமையைக் கருதி தங்கள் போட்டியிலிருந்து விலகுமாறு தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறது.

இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. இறுதியாக தாய்நாடு சயீது அவர்களின் நன்றி கூற, மௌலவி அப்துல் வதூத் ஆலிம் ஃபாஸி அவர்கள் துஆவுக்குப் பின் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில் மன்ற உறுப்பினர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.






இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by ismail (Hong Kong) [03 October 2011]
IP: 203.*.*.* Hong Kong | Comment Reference Number: 9391

Salam br and sister

Pls vote for Sister Abitha. She is the Right Candidate


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re: ஊர் சர்ச்சையை வுலகுக்கு ஏற்றுமதி யா ?
posted by arabi haja (Hong Kong) [03 October 2011]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 9418

தக்வாவின் தீர்மானம் அறிவார்ந்ததாக தெரியவில்லை !! இது நல்ல முன்னுதாரணமாகவும் தெரியவில்லை! இது மற்ற பேரவைகளுக்கு தேவைற்ற அழுத்ததை கொடுக்கலாம். ஊர் சர்ச்சை ஊரோடு இருக்க அனுமதிக்கவும். வுலகுக்கு எற்றுமதிபன்ன அனுமதிக்க வேன்றாம் என்பது எனது வேண்டுகோள்!!

தக்வா தீர்மானம் ஆரம்பள்ளி தெருவைச்சர்ந்த (சகோதரி மைமூனதுள் மிஸ்ரயா சார்ந்த தெரு என்பதால்) பெருவாரியான பாங்காக் சகோதர்களின் முடிவாக மட்டுமே எடுத்து கொள்ளவும். இது வுனற்சிவயப்பட்டது (தெருவழி) என மட்டும் கொள்க!

மற்ற நாடுகளில் வாழும் காயலர்கள் இது போன்ற முயற்சியில் இறங்குமுன் இருமுறை யோசிக்கவும். தனிப்பட்ட முறையில் அவர்களது ஜனநாயக கடமையை ஆற்ற முயற்சிக்கவும். இவை எனது தாழ்மையான கருத்து என பதிவு செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Abdul Kader (Al Khobar) [03 October 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9430

ஏன் இந்த வாதம், விவாதம், ஏற்றுமதி, இறக்குமதி கமெண்ட்ஸ்.

ஐக்கிய பேரவை தேர்ந்து எடுத்த மிஸ்ரியா அவர்களை தலைவராகவும்,
பொது சேவையில் தன்னை 12 வருடங்களாக ஈடுபடுத்திக்கொண்ட ஆபித அவர்களை உப தலைவராகவும் தேர்ந்து எடுத்தால் இந்த பிரச்னை எல்லாம் தீர்ந்துவிடுமே.

எல்லாரும் ஒற்றுமையாக இருக்கலாமே. ஏன் இந்த வைராக்கியமும் ஆணவமும்.

ஊர் ஒற்றுமையையும், ஊருக்கு நல்லது ஆகவேண்டியதையும் பாருங்க சார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AbdulKader (Abu Dhabi) [03 October 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9436

அஸ்ஸலாமு அழைக்கும்...

நல்ல ஒரு முன் மாதிரி. ஐக்கிய முஸ்லிம் பேரவைக்கு அதரவாக இப்படியோர் அழைப்பு கொடுத்தற்கு நன்றி. மற்ற இதர பல வெளிநாட்டு ஐக்கியமன்றங்கள் .... ஊரின் ஒற்றுமையை கருத்தில்கொண்டு.... இதை போல் ஐக்கிய முஸ்லிம் பேரவைக்கு அதரவாக கருத்துக்கள் வெளியிட்டால் வரவேற்க்கத்தக்கது.

அரபி காஜா காக்கா... நீங்கள் சகோதரி அபிதா அவர்களை தனிப்பட்ட முறையில் ஆதரிக்கும்போது, தக்வா ஒரு கூட்டுஅமைப்பாக ஏன் ஆதரிக்கக்கூடாது?

ஜனநாயகத்தைப்பற்றி பேசும் எல்லோரும் உங்களுடைய கருத்தை மாத்திரம் பதிவு செய்யுங்கள். அன்பர் இஸ்மாயில் HK யில் இருந்து சகோதரி அபிதா அவர்களை சம்பந்தம் இல்லாமல் இந்த செய்தியில் ஆதரித்து கருத்து பதிவு செய்துள்ளார்! அவரை யாரும் ஒன்றும் சொல்லப்போவதில்லை, அவருடைய இஷ்டம் அவர் யாரைவேண்டுமானாலும் ஆதரிக்கலாம்.

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (Hetang) [03 October 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 9445

அஸ்ஸலாமு அழைக்கும் .

" தக்வா " மஷூரா செய்து தங்கள் முடிவை அறிவித்து விட்டார்கள். ஒற்றுமையை விரும்புபவர்களின் , வரவேற்கத்தக்க நல்ல ஒரு முடிவு.

wassalaam Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by salih (Bangkok) [03 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 9455

“கசப்பாக இருப்பினும், பிறர் அதிருப்தியுற்றாலும் உண்மையே பேசுங்கள்”

“Speak Truth even though it is bitter and displeasing to others” - Hadith (Bukhari)

விளையாட்டுகாகக் கூட பொய் சொல்லாதீர்கள், பிறரைச் சிரிக்கவைக்கப் பொய் சொல்லாதீர்கள் என்ற மார்க்கத்தில் இருப்பதாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வெட்கமில்லாமல் பிறரை மகிழ்விக்கவும், பணம், பதவிக்காகவும், அற்ப ஆதாயங்களுக்காகவும் பொய் சொல்வது பரவலாகி விட்டது. நாம் மிகவும் கண்ணியமாக நடத்தும் தலைவர்கள், நடு நிலையான பத்திரிக்கைகள் கூட கூட்டம் சேர்க்கவும் ஆதரவு திரட்டவும் பேச்சிலும் , எழுத்திலும் மக்களை கவர்ந்திழுக்க உண்மையை மறைப்பதும் , பொய் பேசுவதும் சாதாரணமாகிப் போய் விட்டது.

பொய்யர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாவதாக எனும் குர்ஆன் வசனத்தை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok -Thailand ) [03 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 9474

அஸ்ஸலாமு அழைக்கும்,

தக்வா வின் செய்தியை பார்த்து சிரிப்பு தான் வருது,

தக்வா உம் பேரவைஇன் ஒரு அங்கமா , இல்லை தகவா வின் தலைவர் இல்லை என்றால் பதவியல் இருப்பவர்கள் பேரவைஇல் ஒரு அங்கம் வகிகீரீர்கள , உண்மையை சொல்லுங்கள் நீங்களும் ஒன்றுமே தேரியாத ஒரு பெண்மணிகு சப்போர்ட் செய்வது சரி அல்ல ,

என்னுடைய விருப்பமும் , ஊரில் ஒரு சிலரின் விருப்பமும் அபிதா வெற்றி பெறுவதே நல்லது, பணம் படைதவர்களை தோற்கடிக்க வேண்டும் , ஊரில் ஒற்றுமை நியாயம் நடக்க வேண்டும்

இது நடக்க வேண்டும் என்றால் ஆபித வெற்றி பெற வேண்டும்

Seyed Mohamed ( Sayna)

Bangkok


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Shahul Hameed (Hong Kong) [03 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 9475

அரபி மாமா அவர்களின் கருத்தை தவறாக புரிந்து விட்டேன். அதை ஒழுங்காக படிக்கவில்லை. ஆதலால் என்னுடைய முந்திய பதிவை திரும்ப பெறுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Abdul Majeed (Mumbai) [03 October 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 9492

Dear Admin,

Request You to conduct opinion poll 'Who will be the next chairman?' so that we can get the clear views of all kayalpatnam.com visitors rather than publishing decisions of some organization which might be influenced by heads or leaders. The diffrence in opinions inside these orgs weaken the organization which created for other purpose. so kayal orgs in remote place keep yourself away from opinions and let individuals share their support and opinion.

lets wait for results and check is the real kayal voters reflect the views of kayalpatnam.com visitors .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by K S Muhamed Shuaib (Kayalpatnam) [04 October 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 9560

"தக்வா" தக்வா செய்துகொண்டிருந்தால் மட்டும் போதுமானது. பேரவைக்காக "தாவா" செய்ய வேண்டாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Cnash (Kayalpatnam) [04 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9579

இதை ஐக்கிய பேரவையின் தாய்லாந்த் கிளை அமைப்பாக தான் நிக்கிக்க தோணுது!! தங்களுக்கு உள்ள தனித்தன்மையே இழந்து இருப்பது மிகுந்த வருத்தம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. தலைமைக்கு தகுதியா
posted by shahulhameed sak (malaysia) [04 October 2011]
IP: 60.*.*.* Malaysia | Comment Reference Number: 9589

ஐக்ய பேரவையை சேர்ந்தவர் தலைவராக இருந்தால் முடிவு வேறு எப்படி இருக்கும் தக்வா தனது நலபனியோடு இபாதத் செய்தால் அதுவே நல்லது அதை விடுத்து மக்கள் எதிர்ப்பை உண்டாக்கும் வேண்டாத வேலை எதற்க்கு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by SYED OMER KALAMI (colombo) [08 October 2011]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9985

SEE THAKWA MEETING PHOTO MAJORITY SITTING IN MEETING FROM WHICH STREET. SO THEY HAVE TAKEN DECISION TO THEIR WILL. IT IS CO LOURED. SO NOTHING TO EXCITE..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Shahul Hameed (Hong Kong) [09 October 2011]
IP: 180.*.*.* Hong Kong | Comment Reference Number: 9990

ஏன் நீங்கள் சகோதரி ஆபிதவுக்கு ஆதரவு அளிகின்றிர்கள். உங்கள் முஹல்லாஹ் வாசி என்றால்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Nafeela (Kayalpatnam) [09 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 9997

அஸ்ஸலாமு அலைக்கும்

இங்கு கமெண்ட்ஸ் அனுப்பியிருக்கும் ஒரு சில சகோதரர்கள் மாற்று கருத்தை கூறி இருக்கிறார்கள் இதுவும் அவர்களின் தனிப்பட்ட விருப்பம் யாரும் அவர்களை குறை கூற வில்லை ஊரின் ஒற்றுமைக்கு பங்கம் விலைவிக்கும் விதமாக தக்வா அமைப்பினர்கள் மட்டும் என்ன தவறுதலாக பேசிவிட்டார்கள்????? அவர்களின் ஆதரவை தெரிவித்து உள்ளார்கள் அவ்வளவுதான்

ஐக்கியப் பேரவை மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்கள் மூலமாகத்தான் சகோதரி மைமூனத்துல் மிஸ்ரிய்யா நிறுத்தப் பட்டுள்ளார் யாரை ஆதரிப்பது என்பது அவர் அவர்களின் தனிப்பட்ட விஷயம் தக்வா அமைப்பை போன்று வேறு சில அமைப்புகளும் அவர் அவர்களின் கருத்தை கூறி இருக்கலாம் இதில் தவறு ஒன்றும் இல்லை

ஊர் ஒற்றுமயை பற்றி கவலை பட்டால் ஏன் இத்தனை பேர் நிற்கப் போகிறார்கள்????????? தோற்றால் தானாக விலகி விடுவார்கள் அவ்வளவுதான்.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohideen (Jeddah) [09 October 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9999

சகோதரர் சேனா அவர்களே

தங்களுடைய விருப்பமும் , ஊரில் ஒரு சிலரின் விருப்பமும் அபிதா வெற்றி பெறுவதே நல்லது என்று தாங்களே கூருகின்றிர்கள் (comment Ref : 9474)

அப்படிஎன்றால் ஊரில் உள்ள பலரின்....... விருப்பம் ஒன்றுமே தேரியாத மற்ற பெண்மணிகு சப்போர்ட் செய்வதா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohmed younus (CHENNAI) [09 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 10001

பொது வேட்பாளரை முடிவு செய்யும் விசயத்தில், முன்னால் தலைவி நாச்சி தம்பி அவர்களை அணுகிய ஐக்கிய பேரவை, அதே முன்னால் தலைவி வஹீதவை அனுகாததன் காரணம் என்ன? தக்வா ஐக்கிய பேரவையிடம் விளக்கம் கேட்டு சொல்லுமா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by m.a.s hassan shaduly B.TECH (chennai) [09 October 2011]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 10064

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

தக்வாவின் தீர்மானம் அறிவார்ந்ததாக தெரிகிறது !! இது நல்ல முன்னுதாரணமாகவும் தெரிகிறது! இது மற்ற பேரவைகளுக்கு தேவையான நேரத்தில் ஊர்நலனில் தங்கள் ஆலோசனைகளை வழங்க அழுத்ததை கொடுத்துள்ளது.ஊர் நலனுக்காக ஆரம்பிக்கப்பட்ட தக்வா உறுப்பினர்கள் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தக்வா உறுப்பினரகளுக்குள்ள உணர்வை,அக்கறையை வுலகில்லுள்ள அனைத்து காயல்நல மன்றங்களும் இறக்குமதிபன்ன அனுமதிக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்!!

உங்கள் தீர்மானம் உணர்வு பூர்வமானது!

மற்ற நாடுகளில் வாழும் காயலர்கள் இது போன்று தீர்மானம் கொண்டு வந்து வளமான ஒற்றுமையான காயலை உருவாக்க பாடுபடவேண்டும்.இவை எனது தாழ்மையான கருத்து என பதிவு செய்கிறேன்.

அதன் தலைவர் வாவு சம்சுதீன் ஹாஜியாரைப்பற்றி சிறியவானாகிய நான் ஒன்றும் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியதில்லை.நம்மூரில் அவரைப்பற்றி தெரியாதவரே இல்லை என்று அரிதியிட்டு சொல்லலாம். வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் ஒவ்வொரு நொடியும் ஊர் நலனைப்பற்றியும்,சமுதாய நலனைப்பற்றியே தன்னுடய உயிர் மூச்சாக சுவாசித்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.ஊரிலுள்ள பெரியவர்கள் சிறியவர்களிடமும் மாற்றுமத சகோதர்களிடமும் கட்சி பாகுபாடியின்றி ,விறுப்பு வெறுப்பின்றி அன்பாக பழகக்கூடியவர்.

காயல்பட்டணம் ஐக்கிய பேரவை, அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்கள் சார்பாக தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்த நபரை ஊர் ஒற்றுமையைக் கருதி ஆதரிப்பாதாக தக்வா தீர்மானம் இயற்றியிருப்பது வரலாற்று பதிவே!

வாப்பா-உம்மா,காக்கா- தம்பி,மாமா-மாமி,கணவன் மனைவி இவர்களுக்குள்ளேயே எத்தனை கருத்துகள்,கொள்கைகள் முரண்பாடுகள் இருக்கும்போது..........

அவர்களின் ஒற்றுமையைப் பற்றி வாழ்த்த என்னிடம் வார்த்தைகளே இல்லை.அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.

அதன் தலைவர்,அவர்கள் ஏற்றியிருக்கும் தீர்மானம்,அதன் கட்டுகோப்பான உறுப்பினர்கள் அனைவர்களும் பாராட்டுதலுக்கு உரியவர்களே


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by jamal (kayalpatnam) [11 October 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 10263

ஒற்றுமைக்கு உலைவைத்தவர்களும், அதன் வாரிசுகளும் ஒற்றுமையைப் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved