Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:33:48 PM
வியாழன் | 28 மார்ச் 2024 | துல்ஹஜ் 1701, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:17Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:52
மறைவு18:28மறைவு08:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3205:56
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7328
#KOTW7328
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, அக்டோபர் 2, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடும் கே.பி.செய்யித் மர்யம் நகர மக்களுக்கு அறிக்கை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3892 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 4)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கி, 29.09.2011 தேதியுடன் நிறைவுற்றது.

காயல்பட்டினத்தின் நகர்மன்றத் தலைவர் பொறுப்புக்கு 7 பேரும், நகர்மன்ற உறுப்பினர்கள் பொறுப்புகளுக்கு ஏராளமானோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த எஸ்.எம்.எஸ்.சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரின் மனைவி கே.பி.செய்யித் மர்யம் என்பவரும் இம்முறை நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்குப் போட்டியிடுகிறார்.

அனைத்துலக காயலர்களின் கவனத்திற்காக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அன்புடையீர்! அஸ்ஸலாம் அலைக்கும்.

நான் 126னு/278 குத்துக்கல் தெரு> காயல்பட்டினம் குடியிருந்து வருகிறேன். நான் கூஸ் பிஸ்தாமி மகள். என் கணவர் சோனா சுல்தான் ஜமாலுதின். எனக்கு ஊர் மக்கள் ஆதரவு இருப்பதால் நான் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன். வர இருக்கின்ற அக்டோபர் மாதம் 17 தேதி தேர்தலில் நகர் மன்ற தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளேன். அதற்காக நாமினேசன் செய்து உள்ளேன்.

என்னை தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுத்தால் நமதூர் அனைத்துத்தர மக்களுக்கும் அவர்கள் எதிர்பார்க்கின்ற அனைத்து தேவைகளையும் என்னால் முடிந்தவற்றை வாக்கு மாறாமல் செய்து கொடுப்பேன்.

நான் மக்களுக்கு ஆற்ற இருக்கும் பணிகள்:

நமதூல் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ள 2வது பைப் லைன் திட்டத்தை நான் முயற்சி செய்து கொண்டு வந்து 5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணர் வருவதை 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணர் வரும் என்பதை வாக்குறுயளிக்கிறேன்.

நமதூல் மின்சாரம் பற்றாக்குறையால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதை சீர்படுத்தி நமதூல் மின் உபநிலையம் அமைத்திட நான் அயராது பாடுபடுவேன்.

நமதூர் அரசு மருத்துவமனையில் நிரந்தரமாக மருத்துவர் தங்கி மக்களுக்கு வேலை செய்ய மருத்துவமனையின் உள்ளே மருத்துவர்களுக்கு குவாட்டர்ஸ் கட்டிதர பாடுபடுவேன்.

நமதூல் (ஏயுழு) கிராம நிர்வாக அதிகாக்கு என நிரந்தர கட்டிடம் புதிய பேருந்து நிலையத்திற்குள்ளே அமைந்திட பாடுபடுவேன்.

பொதுமக்கள் மாதம் தோறும் மின்கட்டணம் செலுத்தும் தற்போது உள்ள அலுவலகம் மிகவும் சிறியதாக இருப்பதால் நல்ல விசாலமான புதிய கட்டிடம் புதிய பேருந்து நிலையத்திற்குள் கொண்டுவர பாடுபடுவேன்.

புதிய பேருந்து நிலையத்திற்குள் செயல்படாமல் புட்டிக்கிடக்கும் கழிப்பறையை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்க பாடுபடுவேன்.

நமதூல் உள்ள அனைத்துப் பள்ளிகூடங்களுக்கும் குடிநீர் இணைப்பு வசதி ஏற்படுத்தித்தர பாடுபடுவேன். நமதூல் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள குடும்ப அட்டைகள் உள்ள ரேசன் கடையை இனம் கண்டு அதை மக்கள் நீண்ட நேரம் காத்துக்கிடக்காமல் எளிதாக பொருட்கள் வாங்கிச் செல்ல கடையை இரண்டாகப்பித்து செயல்பட பாடுபடுவேன்.

ஒவ்வொரு தெருவிற்கும் பொது குடிநீர் இணைப்பு தேவைக்கு ஏற்ப கொண்டு வர பாடுபடுவேன்.

தமிழக அரசு அறிவிக்கும் அனைத்து சமுதாய நலத்திட்டங்களை நமதூருக்குக் கொண்டுவர பாடுபடுவேன்.

என்னை தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுத்தால் நமதூர் நகராட்சியை ஊழலற்ற நகராட்சியாக மாற்றுவேன். தூய்மையான நகரமாக மாற்றிட முனைப்புடன் பாடுபடுவேன்.

உங்கள் ஆதரவை பெரிதும் எதிர்பார்க்கும்,

கே.பி..செய்யது மரியம்,
க/பெ. எஸ்.எம்.எஸ். சுல்தான் ஜமாலுதின்,
126-D/278, குத்துக்கல் தெரு,
காயல்பட்டினம்.
கைபேசி எண்: 98653 45580


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (Hetang) [02 October 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 9307

அஸ்ஸலாமு அழைக்கும்.

சகோதரி செய்யது மரியம். அவர்களுக்கு கனிவான வேண்டுகோள். நீங்கள் கொடுத்திருக்கும் வாக்குறுதிகள் அத்தனையும் அருமை . அனைத்தும் நமது ஊருக்கு அவசியம் தேவையானதுதான் . ஆனால் இவை அனைத்தையும்விட , நமது ஊருக்கு மிகமிக தேவையானதும் , நமது ஊரில் இல்லாததுமான " ஒற்றுமை " தான் தேவை .

ஆனால் , ஐக்கியப்பேரவை மற்றும் ஊரின் பெரும்பாலானவர்கள் ஒன்று சேர்ந்து , இந்த பொறுப்புக்கு ஒருவரை தேர்வு செய்தாகி விட்டது. அது சரியோ , தவறோ , ஒற்றுமையே பிரதானமாக இருக்க வேண்டும் .ஆகையால் சகோதரி , உங்களுக்கு கனிவான வேண்டுகோள் , தயவு செய்து இந்த போட்டியில் இருந்து விலகி , ஊர் ஒற்றுமைக்கு உதவியாக இருங்கள் . அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் செய்வானாக ..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mohideen72 (INDIA) [02 October 2011]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 9312

காயல் மக்களே : தயவு செய்து பொது வேட்பலார்க்கு வோட்டு போடவும். நமது வோட்டுகள் பிரிந்தால் விளைவுகள்..... உங்கள் அனைவர்க்கும் நன்றாஹா தெரியும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Noohu U (Hongkong) [02 October 2011]
IP: 168.*.*.* Hong Kong | Comment Reference Number: 9319

Where is KAYAL survivor MEGA ?

still ALIVE ?

this is time to react not after October 18.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Kaja Nawas (Bangkok) [02 October 2011]
IP: 125.*.*.* Thailand | Comment Reference Number: 9323

அஸ்ஸலாமு அலைக்கும்,

முதலில் ஊர் ஒற்றுமைக்கு பாடுபடுங்கள் அதன் பிறகு மற்றதல்லாம், ராத்த அவர்களே யார் உங்களிடம் சொன்னார்கள் ஊர் மக்கள் உங்களுக்கு ஆதரவு என்று உங்கள் அறிக்கையை மாற்றி கொள்ளுங்கள். உங்களுடைய முன் உதாரணமே இதன் சான்றாகும் நீங்கள் எதுவும் செய்துதரமாடீர்கள் ஏன் என்றால் ஊர் ஆதரவுக்கு எதிர்த்து நிக்குரீர்கள்.

வல்ல அல்லாஹ் எல்லாம் அறிந்தவன்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. :உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by hasbullah mackie (dubai) [02 October 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9333

உங்களை அறிமுகம் செய்யும்போது நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள் ஏதாவது சமுதாய சேவைகளில் ஈடுபட்டிருக்கிரீர்களா என்பதை தெளிவு படுத்துங்கள்....

பதவி அஆசைகள் இருக்கலாம்.... கொடுக்கின்ற வாக்குகளில் இறைவனின் மீது அச்சம் இருக்க வேண்டும்.....

நாம் எல்லாம் ஒரு நாள் மவுத் ஆக வேண்டியவர்கள். பிறகு விசாரணை க்கு தயாராக வேண்டியவர்கள்....

Moderator: தனிநபர் விமர்சனங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Pirabu Mujeeb (Riyadh-KSA) [02 October 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9338

விளக்கு சொன்ன மாதிரி முதலில் நீங்கள் மனுவை வாபஸ் பெறவேண்டும்.அப்படி நீங்கள் மனுவை திரும்ப பேட்டால் அதுவே உர்மக்களுக்கு சேயும் நன்மையாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by hameed (chennai) [02 October 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 9346

அஸ்ஸலாம்

வோட்டுரிமை பெற்ற அனைவரும் சுதந்திர்மாஹா திறமை மிக்க நபருக்கு வோட்டு போடுங்கள் ஜமாஅத் தேர்தெடுத்த நபர் என்று கண் மூடிபோட வேண்டாம் ஜமாஅத் ஆள் நல்லவர் என்றால் வோட்டு போடுங்கள்

ஜமாஅத் பரிந்துரைத்த ஆளை தெர்தடுத் போதும் அவர் அடித்த கொள்ளை போதும் என்று நாம் கஷ்டத்துக்கு ellai illai ஜமாஅத் பெரியார்கள் கவனிக்க வேண்டியது பேரிந்துரை வேண்டாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [03 October 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9373

சகோதரி செய்து மரியம் அவர்களே நல்ல எண்ணத்துடன் போட்டி இட இருப்பதை எண்ணி மகிழ்கிறோம். என்றாலும் அனைத்து ஜமாஅத் சார்பில் தெரிவு செய்ய பட்டிருக்கும் வேட்பாளர் வெற்றி பெற வேண்டும் என்றால் வாக்கு சிதறாமல் விழ வேண்டும் .

ஆயிரம் குறைகள் நமக்குள் இருந்தாலும் அதை தோண்டி துருவி ஆலோசனை செய்ய வேண்டிய நேரம் இது வல்ல. கழுத்தில் கத்தி தொங்கும் போது கைபுண்ணிற்கு மருந்திட்டது போல் ஆகி விடும் . விட்டு கொடுங்கள் சமுதாய நலன் கருதி. அல்லாஹ் உங்கள் வாழ்வை நலமாக்கி வைப்பன் .ஆமீன்

என்றும் ஊர் நலனில்
M .E .L .நுஸ்கி
மற்றும் காயல் அன்பர்கள்
ரியாத்
சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by mnmiskeen sahib (kangayam) [07 October 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 9825

assalamu alaikum.

dear candidates

pls mention" insha allah "on all ur speech. even prophet sal.does not said insha allah on one time allah stop sending any messages to him.up to 15 days. this is in quran and also in hadith.so careful on saying insha allah. only allah will help us in all activites in here and here after. may allah bless all this ummath.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved