Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:59:46 PM
வியாழன் | 18 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1722, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:24
மறைவு18:27மறைவு02:24
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:17
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7323
#KOTW7323
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 30, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளரை ஆதரிக்குமாறு நகர பொதுமக்களுக்கு ஐக்கியப் பேரவை வேண்டுகோள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3672 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் நியமனம் செய்யப்பட்ட நகர்மன்றத் தலைவர் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொது வேட்பாளரை ஆதரிக்குமாறு நகர பொதுமக்களை காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து, ஐக்கியப் பேரவை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

நடைபெறவுள்ள நகராட்சித் தேர்தலில், காயல்பட்டினம் நகராட்சித் தலைவர் பொறுப்பிற்கு, ஊர் சார்பில் ஒரு பொது வேட்பாளரைத் தேர்ந்தெடுக்க தேர்வுக்குழுக் கூட்டம் 26.09.2011 அன்று திங்கள் பின்னேரம் 07.00 மணி அளவில் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் நடைபெற்றது.

காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில், ஊரின் ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். தலைவர் பொறுப்புக்கு பொது வேட்பாளராக பரிந்துரை செய்ய வேண்டுமென பேரவையில் விருப்பமனு அளித்தவர்களின் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

நிறைவாக, ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த சகோதரி ஹாஜ்ஜா எல்.எஸ்.எம்.முத்து மைமூனத்துல் மிஸ்ரியா பி.காம் அவர்கள் நகராட்சித் தலைவர் பதவிக்கு ஊரின் பொது வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இத்தேர்வு குறித்து நமது சகோதர சமுதாய மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களது ஒத்துழைப்பும், ஆதரவும் கோரப்பட்டுள்ளது.

நகராட்சித் தலைவர் தேர்வுக்குழு கூட்டத்திற்கு பிரதிநிதிகளை அனுப்பித் தந்து, பெரும் ஒத்துழைப்பு நல்கிய நகரின் ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளுக்கும், கூட்டத்தில் பங்கேற்ற நகரப் பிரமுகர்களுக்கும் இதயமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இத்தேர்தல் சம்பந்தமாக பேரவை மூலம் எடுக்கும் முடிவுகளுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் தருவோம் என எழுத்து மூலம் ஒப்புதல் தந்திருக்கும் நம் நகரின் அரசியல் கட்சியினருக்கு மீண்டும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஊரின் பொது வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டவரை வெற்றி பெறச் செய்வது நமது தார்மீகக் கடமையாகும். எனவே, நாம் அனவைரும் ஒன்றிணைந்து செயல்பட்டு ஊர் ஒற்றுமையை நிலைநாட்டுவோம்.

நகராட்சித் தலைவர் தேர்வுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற ஜமாஅத்துகளின் பட்டியல்:

(01) குத்பா பெரிய பள்ளி
(02)குத்பா சிறு பள்ளி
(03) குருவித்துறைப் பள்ளி
(04) அப்பா பள்ளி
(05) மரைக்கார் பள்ளி

(06) தாயிம்பள்ளி
(07) ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி
(08) ஷெய்கு ஹுஸைன் பள்ளி
(09) செய்கு ஸலாஹுத்தீன் (மேலப்) பள்ளி
(10) மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி

(11) அரூஸிய்யா பள்ளி
(12) புதுப்பள்ளி
(13) முஹ்யித்தீன் பள்ளி
(14) மொகுதூம் பள்ளி
(15) மொட்டையார் (கோமான்) பள்ளி

(16) செய்யிதினா பிலால் பள்ளி
(17) கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி
(18) மீக்காஈல் பள்ளி
(19) அஹ்மது நெய்னார் பள்ளி
(20) ஆறாம்பள்ளி

(21) ஹாஜி அப்பா தைக்கா பள்ளி
(22) குட்டியா பள்ளி
(23) பெரிய சம்சுதீன் (ஒலி) பள்ளி

நகராட்சித் தலைவர் தேர்வுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பொதுநல அமைப்புகளின் பட்டியல்:

(01) ஐக்கிய விளையாட்டு சங்கம் (USC)
(02) ரிஜ்வான் சங்கம்
(03) ஃபாயிஸீன் சங்கம்
(04) கவ்திய்யா சங்கம்
(05) மஜ்லிஸுல் கரம் சங்கம்

(06) ஜலாலிய்யா சங்கம்
(07) கே.ஏ.டி.சங்கம்
(08) காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு
(09) மன்பவுல் பறகாத் சங்கம்
(10) அல்அமீன் இளைஞர் நற்பணி மன்றம்

(11) காயல் ஸ்போர்ட்டிங் கிளப்
(12) இளைஞர் ஐக்கிய முன்னணி (YUF)
(13) ரெட் ஸ்டார் சங்கம்

(14) மஜ்லிஸுல் கவ்து சங்கம்
(15) காக்கும் கரங்கள்

வல்ல இறைவன் நம் நன்னோக்கங்கள் நிறைவேற அருள் புரிவானாக, ஆமீன். நன்றி, வஸ்ஸலாம்.

ஓரணியில் ஒன்றுபடுவோம்! ஊர் ஒற்றுமையை நிலைநாட்டுவோம்!!

இவண்,
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை
(நகரின் அனைத்து ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு)
கே.டி.எம். தெரு, காயல்பட்டணம்
தொலைபேசி எண்: 04639 - 285200
மின்னஞ்சல்: kayalpatnamperavai@gmail.com
நாள்: 30.09.2011.


இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை பிரசுரமாக அச்சடிக்கப்பட்டு, நகரின் இரண்டு ஜும்ஆ பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டதோடு, சிறிய குத்பா பள்ளியில் ஜும்ஆ தொழுகை நிறைவுற்றதும் வாசிக்கப்பட்டது.

[செய்தியில் தவறுதலாக விடுபட்ட பள்ளிகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by AbdulKader (Abu Dhabi) [30 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9197

அஸ்ஸலாமு அழைக்கும்...

இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சியை தொகுத்து நேர்மையுடன் செயலாற்றிய ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத் அங்கத்தினர்களுக்கு என்னுடைய்ய மனமார்ந்த நன்றிகள்.

எத்தனைபேர் உங்களை இகழ்ந்தாலும், ஊரின் ஒற்றுமைக்காக பாடுபடும் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ் மேலான பறக்கத் செய்தருல்வனாக... ஆமீன்.

இந்த கூட்டத்தில் எல்லா ஜமாஅத்தார்களும் கலந்துள்ளார்கள். ஏக மனதாக தேர்ந்து எடுத்த சகோதரியை நாம் எல்லோரும் ஆதரிப்போமாக.

மேலும்... ஊரின் ஒற்றுமைக்காக ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத்தின் தீர்மானத்தை ஏற்று....போட்டியில் இருந்து விலகிக்கொண்ட (குறிப்பாக முன்னால் நகர் மன்ற தலைவி வஹீதா) சகோதரிகளுக்காக நான் அல்லாஹ் இடத்தில் துஆ செய்கிறேன்.

வஸ்ஸலாம்
அப்துல்காதர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed thamby (Kayalpatnam) [30 September 2011]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 9210

Assalamu alaikum! Nan anupukira entha comment porutham ilathatu tan eruntalum anupu kiraen namathu kayal maanagaril pala thaerukalil road sariyaga ila nengaltan atai kavanika vendum (e.g) sithan st,azad st,kathutaika st....pondra thaerukalil road sariyaga ilai namathu kayal maanagara jamath mulamagavo (or)kayal maanagara sangam mulamagavo athanai sari saiyum maru kethu kolkiraen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [30 September 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9218

"நகரின் அனைத்து ஜமாஅத் மற்றும் பொதுநல அமைப்புகளின் கூட்டமைப்பு" - இது நப்பாசை தான். இதை சீரியசாக எடுத்து போட்டி வேட்பாளர்கள் மீது அவர்களின் ஜமாத் ஏதாவது நடவடிக்கை எடுத்தால் அது ஆங்கீகாரம் - அதுவரை இதுவும் லிஸ்டில் உள்ள ஒரு பொய் பிரச்சாரம் தான்.

இந்த தேர்தலில் சகோதரர் அபுதபி அப்துல் காதர் சொன்னது போல நன்றாக தொகுத்து வழங்கியுள்ளீர்கள் - (திரைகதை, வசனம் மற்றும் நிறைய ஸஸ்பென்ஸுடன்) - GREAT

ஓரு சந்தேகம்: இந்த லிஸ்ட்டில் இல்லாத அமைப்புக்கள் எல்லாம் சுயநல அமைப்புகளா?

_______________________________________________

கருத்துவேறுபடுகள் அதிகம் உள்ள மார்க்க விஷயங்கள் தவிர்த்த, பொது விஷயங்களில் நம்மை ஒன்றுசேர்க்க பொது அமைப்பு அவசியம் என்பதுதான் என் நிலைபாடும்.

ஐக்கியப்பேரவையின், தற்போதைய அமைப்பு இதற்கு தகுதியானதாக இல்லை என்பதுதான் என் கருத்து. என் பதிவுகளில் இதைத்தான் சொல்ல முயற்சி செய்தேனே தவிர யாரையும் தனிமைபடுத்த இல்லை.

இந்த அமைப்பு, ஒரு குறிப்பிட்ட காரணத்தால் உருவான வரலாறு நமக்குத்தெரியும். அதில் நமக்கிருந்த ஒத்தகருத்து வெற்றியை தந்தது.

இப்போது அதன் செயல்பாடுகள் விரிவாக்கம் செய்வதானால் அதற்கு தகுந்த மாற்றங்கள் வேண்டும்.

சுனாமி குடியிருப்பு விஷயத்திலும், இந்த தேர்தல் சூழலிலும் நமக்குள் எற்பட்டு இருக்கும் இந்த கருத்துவேறுபாடுக்கு பேரவையின் இப்போதய நிர்வாகம் தான் காரணம், பொறுப்பு எல்லாமே.

பேரவை வெளிப்படையாக நடக்கவில்லை, சூழ்ச்சிகளும், சூழ்நிலைகளும் அங்குள்ள நல்லவர்களையும் சந்தேகிக்க செய்துவிட்டது.

அத்துனையும் மூடகமாக செய்ய என்ன காரணம். யாரிடம் மறைக்க இந்த முயற்சி. நல்லவர்கள் இதற்குத் துணை போவது ஏன்?

கூட்டதிற்குமுன்னால் வேட்பாளரை அறிவித்து இருக்கலாம், அறிக்கையாக இல்லவிட்டலும் ஜமாத்துகளுக்கு கடிதமாக அல்லது வாய்வழிச்செய்தியாக.

கையெழுத்திடாதுதான் தகுதியின்மைக்கு காரணம் என தெரிவித்து இருந்தால் சகோதரி ஆபிதாவையும் மற்ற வேட்பாளர்களையும் அவரவர் ஜமத்துக்கள் மூலம் சரிகாணச்செய்திருக்கலாம்

அதிகாரபூர்வ வெட்பாளரின் தாயார் வேட்புமனு தாக்கல் பேரவையின் ஏற்பாட்டில் இல்லை என்றால் யார் வேலை? (கேள்வியும், கேலியும் வந்த பிறகும்)இதை கண்டிக்கவோ அல்லது மக்களுக்கு தெரிவிக்கவோ வேண்டாமா?

காதில் கேட்கும் செய்திகளை 'வதந்தி' என ஒதுக்குவதானால் விளக்கம் தந்தால் தானே முடியும். இதற்காக எடுத்த முயற்சி அனைத்தும் வீண்போனால் விரக்தி ஏற்படுவதுதானே நியாயம்.

எண்ணங்களுக்கு இறைவன் கூலி கொடுப்பான், செயலை மட்டுமே பார்க்கத்தெரிந்த மறைவான ஞானங்கள் இல்லாத மனிதர்கள் நாங்கள் என்ன செய்வோம்? கேட்டுத்தானே தெரிய வேண்டும்.

மொத்தத்தில் பேரவை சிலரின் எடுப்பார் கைபிள்ளையாகிவிட்டதுதான் நமக்கு புரியும் உண்மை. இதில் நல்லவர்களுக்கு பங்கில்லை என்பதையும் அவர்கள் சொன்னால்தான் தெரிய முடியும். தடுக்க(இயல)வில்லை என்பது தெளிவு.

பேரவையின் இந்த முறைத்தவறிய செயல்பட்டால் வேதனை அடைந்தோர் எதிராகவும், அதேசமயம் இந்த தகிடு தாலங்களால் பயனடைய எண்ணுவோர் அதற்கு அனுசரனையாகவும் வாதிடும் நிலமை ஏற்பட்டு விட்டது.

சந்தர்ப்ப வாதத்தை ஒற்றுமை என்றும், அதிகார துஸ்பிரயோகத்தை ஊர் பெருமையின் பேரிலும் அரங்கேற்றுவதை உணரமுடியாதவர்கள் கண்டிப்பாக இல்லை.

இத்துனையும் தெரிந்த பின்னரும் குறைந்த பட்ச சிந்தனையுள்ள எவரும் நடுநிலையாக இருக்க இயலாது.

ரிசல்டு மாறிவந்தால் எழும் கேள்வியை தவிர்க்க இன்னும் என்னென்ன நாடகமெல்லாம் நடத்தனுமோ? ஆண்டவனுக்குத்தான் தெரியும்.

தூங்குபவனைத்தான் எழுப்ப முடியும்..!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இது என்ன குதர்க்கம்?
posted by Shaik Dawood (Hong Kong) [01 October 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 9222

தேர்வு குழு முடிவை பற்றிய செய்தியில் 23 ஜமாத்களும் 15 பொது நல அமைப்புகளும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இப்ப என்னடான்னா... 20 + 12 ன்டு நோட்டீஸ் வந்துருக்கு?

அது எப்படிப்பா?? ஒரே வாரத்துல 3 + 3ஐ முழுங்கியாச்சா என்ன?

நான் ஐக்கிய பேரவைக்கு எதிரானவன் அல்ல... எனினும் தகவல் அறியும் உரிமையில் எனக்கு எழுந்த சந்தேகம் என்னை கேள்வி கேட்க்க தூண்டுகிறது. என்னுடைய முந்தைய கருத்தில் கூட பேரவையால் தேர்ந்தெடுக்கப் பட்டவர் என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே மிஸ்ரியா லாத்தா is my first choice என்றேன்.

ஊர் நலம் நாடும்

தாவூது - ஹாங்காங்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (காயல்பட்டினம்) [01 October 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 9227

சகோதரர் M . சாஜித் அவர்களுக்கு பாராட்டுக்கள். நன்றாக எழுதுகிறார். தொடரட்டும். ஆனால் இந்தமாதிரி எல்லாம் குறை கூறி எழுதக்கூடாது

ஆமாம். அப்புறம் அவிங்க கோபப்படுவாக.. அவிக எல்லாம் கேள்வியே கேட்கக்கூடாது என்ற நிலையிலும், விமர்சனம் பண்ணக்கூடாது என்ற தரஜாவிலும் இருக்கும் ஒரு அமைப்பு.

நாம் ஏதாவது கேட்டால் துரோகிகள், ஊரின் ஒற்றுமை மேல் அக்கறை இல்லாதவர்கள் என்று சொறிந்து விடவும், கமெண்ட்ஸ் அடிக்கவும் ஆள் இருக்கின்றார்கள்.

கொஞ்சம் உங்களின் டெலிபோன் நம்பரை பதிவு செய்து பாருங்கள், அம்புட்டு அனாமத்து போன் வரும், எல்லாம் மிரட்டல்தான் போங்க, செம காமடியா இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Vilack SMA (Hetang) [01 October 2011]
IP: 69.*.*.* United States | Comment Reference Number: 9236

சகோதரர் ஜியாவுதீன் அவர்களே ! தொடரட்டும் ....ஆனால் இந்த மாதிரியெல்லாம் குறைகூறி எழுதக்கூடாது. உங்களுடைய காமெடி கலந்த விமர்சனங்கள் , படித்து ரசிக்கலாமே தவிர , ருசிக்க முடியாது.

ஐக்கியப்பேரவையின் நடவடிக்கைகளை யார் வேண்டுமானாலும் விமர்சனம் பண்ணலாம் . அவர்கள் ஒருபோதும் கோபிப்பதில்லை . கோபிக்கிறார்கள் என்று நீங்கள் நினைப்பது ஐக்கியப்பேரவையின் அங்கத்தினர்கள் இல்லை. இங்கே கமெண்ட்ஸ் எழுதிக்கொண்டிருக்கும் ஒருசில வாசகர்கள்தான் இப்படி நினைக்கிறார்கள்.

ஒரு இயக்கத்தையோ அல்லது அமைப்பையோ வெளியில் இருந்து சுலபமாக நாம் விமர்சித்து விடலாம், ஆனால் அதன் உள்ளே இருந்து பார்த்தால்தான் அதில் உள்ள சிரமங்கள் நமக்கு தெரிய வரும்.

இனி வரும் உங்களுடைய நகைச்சுவை கலந்த கருத்துக்கள் , நம்முடைய புதிய நகர்மன்றத்திர்க்கு அறிவுரை கூறுவதாக இருந்தால் நல்லது.

என்ன ஜியாவுதீன் காக்கா , கோவிச்சுக்காதீங்க , உங்களை பார்த்துதான் ஒருசில நேரங்களில் நானும் காமெடியா எழுத பழகிட்டேன். அல்லாஹ் போதுமானவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by M Sajith (DUBAI) [01 October 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9237

Moderator: சகோ. ஸாஜித் அவர்களுக்கு, வாக்கெடுப்பில் கலந்துகொண்ட சில ஜமாஅத்துகள் மற்றும் பொதுநல அமைப்புகளின் பெயர்கள் தவறுதலாக விடுபட்டுள்ளது. அவை தாமதமாக சேர்க்கப்பட்டுள்ளன.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Salih (Bangalore) [01 October 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 9251

என் மனமார்ந்த வாழத்துக்கள் ..

ஊரின் ஒற்றுமைக்காக ஐக்கிய முஸ்லிம் ஜமாஅத்தின் தீர்மானத்தை ஏற்று போட்டியில் இருந்து விலகிக்கொண்ட முன்னால் நகர் மன்ற தலைவி வஹீதா சகோதரிகளுக்காக நான் அல்லாஹ் இடத்தில் துஆ செய்கிறேன்.

போட்டியில் இருந்து விலகி மக்கள் மத்தியில் தலை நிமிர்ந்து நிற்கும் மாணிக்க கிரிடம் .. உங்களுக்கு மீண்டும் ஒரு சல்யுட் ... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by salih (bangkok) [01 October 2011]
IP: 203.*.*.* Thailand | Comment Reference Number: 9254

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

முஸ்லிம்கள் இம்மை, மறுமை வெற்றிக்காக உழைப்பதை விட்டு குழப்பமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகிறார்கள்.

தங்களுக்காக மெகா உதயமாகிவிட்டது என மகிழ்ந்து (மெகாவின் தாரக மந்திரமான அந்தந்த வார்டின் நகர்மன்றத்தின் ஊழியரை அந்தந்த ஜமாஅத்தே ஒன்றுகூடி முடிவெடுத்து நகர்மன்றத் தேர்தலில் வெற்றி பெறச்செய்து ஊழலில்லாத நகர்மன்றத்தை அமைக்க வேண்டுமென்பதே) நாம் ஜெயிக்கப்போகிறோம் என்ற உணர்வோடு இருந்த நேரத்தில்.

மக்களை ஏமாற்றுவதையே தொழிலாக கொண்ட அரசியல் கட்சிகளின் பினாமிகளாக தேர்தல் களத்தில் எதிரணியில் இருக்கும் நமது மக்களின் பரிதாபத்தையும், சூழ்ச்சி வலை பின்னப்பட்டிருப்பதையும் கண்டு நானும் என்னைப்போல் பலரும் மனம் நொந்து வருந்தி கொண்டிருக்கிறோம், அதை நீங்கள் உணரவில்லையா?

நமது இலக்கு அதனை அடையும் வழி முறையும் தூய்மையாக இஸ்லாமிய வழிமுறைகளுக்குட்பட்டு இருக்கவேண்டும் என்பதை மறந்து, இலக்கு மட்டும் சரியாக இருந்தால் போதும் என்று, நபி (ஸல்) வழிக்கு மாறாக கேடுகெட்ட அரசியல் தலைவர்களை முன்னுதாரணமாகக் கொள்கிறீரகளே, இது சரியா?

ஆதாரத்தின் அடிப்படையில்தான் விளங்கி செயல்படவேண்டும் ஒழிய ஆதாரமில்லாமல் பிறர் சொல்வதை கேட்டு, ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வசைபாடுகிறீரகளே, இது சரியா?

சமுதாய உட்பூசலில் சிக்கி நீங்கள் பணி செய்யவேண்டிய ஆக்கப்பூரவமான நேரத்தை வீணடிக்கிறீர்களே. இதற்கு படைத்த இறைவனிடம் என்ன பதில் கூறப்போகிறீர்கள்? குறையில்லாதவன் அல்லாஹ் ஒருவனே.

எந்நிலையிலும் ஜமாஅத்துக்கு கட்டுபட்டு ஒற்றுமை என்னும் கயிற்றை பற்றி பிடிங்கள். நாம் ஐக்கியமானால் என்ன நடக்கும்?. நபி (ஸல்) சொன்னது போல் முதலில் நமக்கு கண்ணியமும் சுயமரியாதையும் கிடைக்கும். நாம் ஐக்கியமானால் அனைத்துக் கட்சியினரும் நம்மைத்தேடி வருவார்கள். அடுத்து நாம் நமது கோரிக்கைகளை நிபந்தனைகளை நியாயமாகவும் நேர்மையாகவும் பெறமுடியும்.

நல்லவர்கள் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் நல்லவர்கள் ஒன்றுபடாவிடில் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தாழ்வு. அல்லாஹ்வுக்காக சிந்திப்பீர் செயல்படுவீர். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by V D SADAK THAMBY (Guangzhou (China)) [01 October 2011]
IP: 59.*.*.* China | Comment Reference Number: 9257

வார்டு வாரியாக ஐக்கிய பேரவையின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களின் பெயர்களை அறியத்தந்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மக்கள் எளிதில் புரிந்துகொண்டு வாகளிக்கமுடியும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Prabu Jailani (Jeddah) [01 October 2011]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9262

what about Kadiria Kodimara Siru Nainar Palli, Mahboob Subhani Sangam, Al Jami ul Azhar and Kadaippalli.?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. அன்பர் ஜியா அவர்களே.....
posted by AbdulKader (Abu Dhabi) [01 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9263

அஸ்ஸலமு அழைக்கும்....

நான் எப்பொழுதும் அன்பர் ஜியா உடைய கருத்தை ரசித்து படிப்பேன்! அவருடைய கருத்தில் நகைச்சுவை கூடிய உபதேசம் இருக்கும். அதற்க்கு மாறாக இந்த செய்தியில் விஷம் கலந்த நகைச்சுவையாக கருத்து பதிவு செய்துள்ளீர்கள்.

தவறு என்று ஏற்றுக்கொண்டால்... இப்படிப்பட்ட கருத்தை பதிவு செய்வதை தவிர்க்கவும். நீங்கள் எழுதியது சரி என்றால்..... அல்லாஹ் போதுமானவன்.

குழப்பம் செய்பவர்களை ஒருபோதும் அல்லாஹ் விரும்புவது இல்லை. வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Seyed Mohamed (Sayna) (Bangkok -Thailand ) [02 October 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 9317

செய்தியை படிக்கும் பொது சிரிபதா இல்லை சிந்திபதா , கம்மேன்ட்சை படிக்கும் பொது , சிந்திபதா இல்லை சிதற விடுவதா ஒன்னுமே புரியவில்லை ,

நாம ஊரு தேர்தலை பார்க்கும் பொது , பேரவை யை யாரும் மதிக்கவில்லை போலதரிகிறது. கரணம் பேரவை மக்களோடு கலந்து ஆலோசனை செய்யவில்லை போல தோன்றுகிறது ,

பேரவை நிறுத்திய வேட்பாளரை எதிர்த்து ஆறு வேட்பாளர்கள் நிக்கிறார்கள் , ஜமாஅத் நிறுத்திய வேட்பாளர்களை எதிர்த்து இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்கள் நிக்கீரர்கள் . ஆகா மொத்ததுல ஊருல எதுலயுமே ஒற்றுமை இல்லை ,

அல்லாஹ தான் நாம ஊரையும் நமலையும் கபத்த வேண்டும் , நம் அனைவர்களும் ஒற்றுமையா இருக்க அல்லாஹ விடம துஆ செய்ஓம்மாஹா

வர்ததுடன் உங்கள் அன்பு சந்கோதரன்

Seyed Mohamed Sayna
Bangkok


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. நகரமன்றத்தின் வெற்றியும் ஒற்றுமையும் அணைத்து அரசியல் வாதிகளின் பார்வையும் காயலின் பக்கம்!!! மறவாதீர்கள்.!!!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [03 October 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9461

அஸ்ஸலாமு அழைக்கும்.

அன்பார்ந்த காயல் பெருமக்களே. MEGA மற்றும் அணைத்து அமைப்புகளின் முயற்சியால் நமது நகராட்சின் தேர்தல் இம்முறை அரசியல் கலப்பிடம் இல்லாததாக இருக்கும் அதே வேளையில் அணைத்து அரசியல் கட்சிகளும் மிக மிக உன்னிப்பாக இந்த முறை கிடைக்கும் வெற்றி ஒற்றுமையின் பிரதிபலிப்பாக காணவும் இனி காலங்களில் நாம் அரசை நோக்கி சென்றதை மாற்றி நம்மை நோக்கி வரவைக்கும் மிக பெரிய பலபரீட்சை.

அகவே தயவு கூர்ந்து அனைவர்களுடைய வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையுடன் ஒரே தலைவியாகிய ஐக்கிய பேரவையின் போதுவேட்பாலரை ஆதரித்து எதிர்கால சந்ததிகளுக்கு நல்லதை செயுங்கள்.

அதற்காக அவருடன் போட்டிபோடுபவர்களை குறைத்து மதிப்பிடவில்லை, எனது வேண்டுகோள் பெரும்பான்மையான ஜமாஅத் மற்றும் அமைப்புகளின் ஆதரவுடன் நிற்கும் காயலின் ஒற்றுமை நிருபிக்கும் வகையில் நடந்து கொள்ளுங்கள்.

ஐக்கிய பேரவை மற்றும் அணைத்து ஜமாதுகளுக்கும் அன்பான வேண்டுகோள்!

தற்போதுள்ள கமிட்டிகளை கலைத்து எதிர்காலத்தில் தங்களின் பிரதிநிதிகளை ஜனநாயக முறையில் தேர்ந்தெடுத்து ஜமாத்தின் ஒற்றுமை மற்றும் ஐகியதையும் நிருபித்து எதையுமே வெளிப்படையாக செயல் படுவதுடன் தலைவரையும் உறுப்பினர்களையும் தேர்ந்தெடுத்து அனுப்பிவிட்டு வீட்டில் உறங்காமல் அவர்களின் நடவடிக்கைகளை கண்காணிப்பதுடன் அறிவுரைகளையும் வழங்கி நேர்வளிபடுதுங்கள்.

வஸ்ஸலாம்.

முகியதீன் அப்துல் காதிர்.
ஐக்கிய அரபு அமீரக பாராளுமன்றம்.
அபுதாபி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved