Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:54:59 AM
வெள்ளி | 26 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1730, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்20:32
மறைவு18:27மறைவு07:32
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7318
#KOTW7318
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 30, 2011
உள்ளாட்சித் தேர்தல் 2011: காயல்பட்டினம் நகர்மன்ற தலைவர் பொறுப்பிற்கு நேற்று (29/09) மட்டும் மூவர் வேட்பு மனு தாக்கல்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3830 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறவுள்ளது. காயல்பட்டினம் நகர்மன்றத் தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் 22.09.2011 அன்று துவங்கியது. இம்மாதம் 29ஆம் தேதி (நாளை) வரை வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம்.

காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பு இம்முறை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று (செப்.29) வேட்பு மனு அளிக்க கடைசி நாளாகும். இறுதி நாளான நேற்று மட்டும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பிற்கு பின்வருமாறு மூன்று பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்:-

காயல்பட்டினம் ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த அபூ முஹம்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி ஆயிஷா பர்வீன் (வயது 30) நேற்று காலை 11.15 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.



ஓடக்கரையைச் சார்ந்த ஆல்பர்ட் நாடார் என்பவரின் மனைவி ஏ.ருத்தம்மாள் (வயது 52) நேற்று காலை 11.45 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.



ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த செய்யித் முஹம்மத் என்பவரின் மனைவி நஃபீஸத்து தாஹிரா நேற்று வேட்பு மனு நேரம் நிறைவுறும் வேளையில் மதியம் 02.35 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.



இவர், காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவையின் நகர்மன்றத் தலைவர் தேர்வுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டு, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ள முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யாவின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்பு மனுக்களை, நகர்மன்றத் தேர்தல் துணை அலுவலர் சக்தி குமார் பெற்றுக்கொண்டார். பெண்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் பொறுப்பில் போட்டியிட மொத்தத்தில் இதுவரை 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

நகர்மன்றத் தேர்தல் தலைவர் பொறுப்பிற்கு இதுவரை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்களின் பட்டியல் பின்வருமாறு:-

(1) காயல்பட்டினம் குத்துக்கல் தெருவைச் சார்ந்த இறைச்சிக்கடை சுல்தான் ஜமாலுத்தீன் என்பவரின் மனைவி கே.பி.செய்யித் மர்யம்.



(2) ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த என்.டி.அஹ்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி முத்து மைமூனத்துல் மிஸ்ரிய்யா.



(3) காயிதேமில்லத் நகரைச் சார்ந்த சிங்கப்பூரார் முஹ்யித்தீன் அப்துல் காதிர் என்பவரின் மனைவி எச்.எம்.முஹம்மத் இப்றாஹீம் உம்மா.



(4) மகுதூம் தெருவைச் சார்ந்த ஷேக் அப்துல் காதிர் என்பவரின் மனைவி ஆபிதா ஷேக்.



(5) ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த அபூ முஹம்மத் ஸலாஹுத்தீன் என்பவரின் மனைவி ஆயிஷா பர்வீன்.



(6) ஓடக்கரையைச் சார்ந்த ஆல்பர்ட் நாடார் என்பவரின் மனைவி ஏ.ருத்தம்மாள்.



(7) ஆறாம்பள்ளித் தெருவைச் சார்ந்த செய்யித் முஹம்மத் என்பவரின் மனைவி நஃபீஸத்து தாஹிரா.



படங்களில் உதவி:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Pirabu Mujeeb (Riyadh-KSA) [30 September 2011]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9153

யாரும் வந்தாலும் அல்லாஹுக்கு பயந்து மக்களுக்கு நல்லதை செய்யவேண்டும்.குறிப்பாக ஆட்டம் போடகூடாது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Mohamed Cnash (Kayalpatnam) [30 September 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 9154

என்ன கூத்து நடக்கிறது ...உம்மாவிற்கும் மகளுக்கும் போட்டியா...அங்கே ஐக்கியம் இல்லையா !!! இல்லை இது ஒரு அரசியல் விளையாட்டா!!! ஐக்கிய பேரவைக்கும் ஆண்டவனுக்கும் தான் வெளிச்சம்!!

நிர்வாக திறமையும் ஆற்றலும் மிக்க சஹோதரி ஆபிதா ஷேக் வெற்றி பெற வைக்க நாம் ஒர்ற்றுமையோடு ஒரு அணியில் நிற்போம்!! ஐக்கிய பேரவையின் ஈகோ நமக்கு முக்கியம் இல்லை ...ஊரு நன்மையே விட!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by zeenath katheeja (kayalpatnam) [30 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 9162

ஆபிதா ஷேய்க் வெற்றி பெற வாழ்த்துக்கள் zeema


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. நல்லா யோசிக்கணும்....
posted by Shaik Dawood (Hong Kong) [30 September 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 9183

வாப்பாமார்களா..... உம்மாமார்களா....

இப்ப இவங்கதான் best அவங்கதான் bestன்டு விவாதிக்கிற நேரம் இல்லை.... நல்லா யோசிங்க.... இப்ப போட்டி அப்படி போயிடுச்சு.... புரியுதுங்களா.... அதுனால சீக்கிரமா சட்டு புட்டுண்டு Egoவ உட்டுட்டு ஒற்றுமையா ஊரை மட்டும் மனசுல வச்சி புத்திசாலி தனமா முடிவை எடுங்கப்பா.

எனக்கு என்னவோ மிஸ்ரியா லாத்தாவே correct ன்டு தோணுது... in case அவங்க மனு reject ஆச்சுன்னா ஆபிதா லாத்தா is next choice. மத்தவங்கல்லாம் தயவு செய்து ஊர் நலனை கருத்தில் கொண்டு வாபஸ் வாங்கிருகோ.

வல்லோன் அல்லாஹ்வை மட்டும் அஞ்சுங்கள். அவன் நல்லவர்களையே நேசிக்கிறான். தீயவர்களை வெறுக்கிறான்.

ஊர் நலனை பற்றி கவலையுடன்

உங்கள் அன்பு தம்பி

தாவூது - ஹாங்காங்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by OMER (CHENNAI) [30 September 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 9190

ஆபிதா அவர்களுக்கு என் மனமார வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by SHAIK (colombo) [30 September 2011]
IP: 124.*.*.* Sri Lanka | Comment Reference Number: 9194

ருத்தம்மால் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

நம் சமுதாய ஒற்றுமை ஓங்குக
சகோதரத்துவம் வாழ்க


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. :உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by habeeb (Dammam) [30 September 2011]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 9217

ஆபிதா லாத்தா வெற்றி பெர வாழ்த்துக்கள், May Allah give victory Aameen


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:சபாஸ்!...
posted by OMERANAS. (DOHA QATAR.) [01 October 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 9267

சகோ, சேக்.கொழும்பு குசும்பு மாறாமல்,சிறிதாக சொன்னாலும், மனதார மக்களை வாழ்த்தி உள்ளார்! எப்படி மனம் நொந்து போய் இருந்தால், இவரை இப்படி எழுத வைத்து இருக்கும்? சப்பாஸ்யா!!! சேக். ஊரை சிரிக்க வைக்கும் நம் சமுதாயத்திற்கு, இதுவாவது, உரைக்கட்ட்டும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:உள்ளாட்சித் தேர்தல் 2011:...
posted by Zainul Abdeen (Dubai) [02 October 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 9310

நம்மவர்கள் தங்களின் ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் நம் அனைத்து (max ) ஜமாத்தின் ஆதரவு பெற்ற மிஸ்ரிய அவர்களுக்கு தந்து அவர்களின் வெற்றிக்கு உறுதுனையாக இருக்க வேண்டுகிறேன்.

கடந்த உள்ளாட்சி தேர்தலில் <--5 /18 ,--> கோட்டைவிட்டது இந்த மதுரியனே வீண் போட்டிகலால்தான் என்பதை மணதில் கொண்டு செயல்பட வேண்டும்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நன்றி மாடரேட்டர்
posted by Shaik Dawood (Hong Kong) [02 October 2011]
IP: 58.*.*.* Hong Kong | Comment Reference Number: 9322

Kind attention to moderator...

Thank you for edit my comment No.: 9183... I was willing to request you to remove the avoidable wordings which I've posted by emotionally...

Ref. 9228 / 9301. which was posted by Br. Haja A.? from Hong Kong... Everybody thinking of Mr. Haja Arabi Kaka has posted it.... but he confirmed with me as he haven't posted it. Somebody misuse the name.... I request the moderator not to post the comments without clear names.

Thank you once again.

Moderator: தங்கள் கருத்து கவனத்திற்கொள்ளப்பட்டது. Haja A. என்பவர் தனது முழு விபரத்தை admin@kayalpatnam.com என்ற மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கும் வரை இனி அவரது கருத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved