| 
 
 
  
 காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்தில் இயங்கி வரும் மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் இவ்வாண்டு மார்க்க விழாக்களை, வரும் ஜூன் மாதம் 06, 07, 08 (சனி, ஞாயிறு, திங்கள்) நாட்களில் நடத்திட - இம்மாதம் 18ஆம் நாளன்று 21.00 மணியளவில், மஜ்லிஸ் வளாகத்தில் நடைபெற்ற கலந்தாலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. 
  
இக்கூட்டத்திற்கு ஒய்.எஸ்.முஹம்மத் ஃபாரூக் தலைமை தாங்கினார். ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவு ஆசிரியர் ஹாஃபிழ் எஸ்.எச்.ஷேக் தாவூத் கிராஅத் ஓதி, கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். 
  
வழமை போல, மத்ரஸாவின் மார்க்க விழாக்களை வரும் ஜூன் மாதம் 06., 07, 08 (சனி, ஞாயிறு, திங்கள்) நாட்களில் நடத்திடவும், அது தொடர்பான துணை அம்சங்கள் குறித்து விவாதித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
  
ஹாமிதிய்யா திருக்குர்ஆன் மனனப் பிரிவில் பயின்று - நடப்பாண்டு 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வெழுதும் மாணவர்களின் சாதனை வெற்றிகளுக்காக இக்கூட்டத்தில் பிரார்த்தனை செய்யப்பட்டது. 
  
மத்ரஸா ஹாமிதிய்யா - உலக முடிவு நாள் வரை மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் வளாகத்திலேயே இயங்கும் என்று, இம்மாதம் 04ஆம் நாளன்று நடைபெற்ற மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் பொதுக்குழுக் கூட்ட த்தில் தீர்மானித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்தும் இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
  
மத்ரஸா ஹாமிதிய்யாவின் கவுரவ ஆசிரியரும், இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் இமாமுமான மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. 
  
மத்ரஸா ஹாமிதிய்யாவின் கடந்தாண்டு (2014) மார்க்க விழாக்கள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
  
மத்ரஸா ஹாமிதிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!  |