| 
 ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபூதபீயில் கடந்த 12 ஆண்டுகளாக இயங்கி வரும் “பாரதி நட்புக்காக” தமிழமைப்பின் சார்பில், வழமை போல இவ்வாண்டும் புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு, இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, அபூதபீயிலுள்ள இந்திய சமூகக் கூடத்தில் (ISC) - ஜூலை 12, சனிக்கிழமை அன்று - நடைபெற்றது. 
  
 
  
 
  
 
  
 
  
அமைப்பின் செயலாளர் ஹலீல் ரஹ்மான் தலைமையில், தலைவர்  ராமகிருஷ்ணன் மற்றும்  ஜகன்நாதன் ஆகியோர் முன்னிலையில் நிகழ்ச்சிகள் துவங்கியது.
  
எஸ்.ஜைனுல்லாபுதீன் துவக்க உரை நிகழ்த்தினார். காயல் மௌலவி  ஹுசைன் மக்கி மஹ்லரி  நோன்பின் மாண்பு பற்றி நீண்ட உரையாற்றினார். நிறைவாக அவரின் துவாயை தொடர்ந்து, நோன்பு துறப்பு நடந்தது.
  
நிகழ்ச்சியில் காயலர்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
மக்ரிப் தொழுகையை ஹுசை மக்கி மஹ்லரி வழிநடத்தினார். தொடர்ந்து புஃபே முறையில் உணவுகள் பரிமாறப்பட்டன.
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
இந்நிகழ்ச்சியில் பதிவு செய்யப்பட்ட புகைப்படங்களின் தொகுப்பினை காண இங்கு அழுத்தவும்.
  
தகவல் & படங்கள்: 
சுப்ஹான் N.M. பீர் முஹம்மத், 
அபூதபீ - ஐக்கிய அரபு அமீரகம்.
  
பாரதி நட்புக்காக ஏற்பாட்டில் 2013ம் ஆண்டு நடந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியை காண இங்கு அழுத்தவும் 
  
பாரதி நட்புக்காக ஏற்பாட்டில் 2012ம் ஆண்டு நடந்த நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியை காண இங்கு அழுத்தவும்
  |