| 
  இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், இம்மாதம் 21ஆம் நாள் திங்கட்கிழமை மாலையில், காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது. 
  
நகரின் அனைத்து ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் வட்டார நலக் கமிட்டிகள், நகர்மன்ற அங்கத்தினர், அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கத்தினர் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். 
  
காயல்பட்டினம் தொடர்வண்டி நிலைய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான முக்கிய தகவல்கள் இந்நிகழ்ச்சியின்போது தெரிவிக்கப்படவுள்ளது. 
  
தகவல்:  
எஸ்.கே.ஸாலிஹ் 
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர் 
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
  
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
  |