| 
 மேல ஆத்தூரில் இருந்து காயல்பட்டினத்திற்கு தினமும் குழாய்கள் வழியாக அனுப்பப்படும் தண்ணீர், நகரில் உள்ள உயர்நிலை தொட்டிகளில் 
ஏற்றப்பட்டு, பிறகு அட்டவணைப்படி இல்லங்களில் உள்ள இணைப்புகளுக்கு அனுப்பப்படுகிறது. பகுதி வாரியாக குடிநீர் விநியோகம் மேற்கொள்ள, 
நகர் முழுவதும், சுமார் 100 வால்வுகள்  அமைக்கப்பட்டுள்ளது.  இந்த வால்வுகளை - திறந்து, மூடுவது மூலம் - எந்தப்பகுதிக்கு, எவ்வளவு 
நேரம், எவ்வளவு அளவு தண்ணீர் அனுப்புவது என்று   கட்டுப்படுத்தலாம். 
  
இந்த வால்வு தொட்டிகள் பழுதடைந்ததால், அவைகளை புதுப்பிக்க - நீண்ட கால தாமதத்திற்கு பிறகு - 
சமீபத்தில் பணிகள் துவங்கியது. 8.5 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான  - இப்பணிகளை  ஒப்பந்ததாரர் 
தலவாணிமுத்து செய்து வருகிறார். 
  
 
  
 
  
ஒப்பந்தப்புள்ளிகள் ஆவணங்கள் தெரிவிக்கும் தகவல்படி, நகரில் உள்ள சுமார் 100 வால்வுகளில், தற்போது 40 வால்வுகளுக்கு புதிதாக இரு 
அளவுகளில் தொட்டிகள் அமைக்கப்படவேண்டும். 
  
 
  
 
  
நகரின் சிலபகுதிகளில் சில வால்வு தொட்டிகளின்  பழுது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் - அவை, ஒப்பந்தப்புள்ளி விபரங்கள்படி அமையவில்லை என 
தெரிகிறது. 
  
ஒப்பந்தப்புள்ளிகள் - 40 வால்வு தொட்டிகளுக்கும், இரும்பு மூடி அமைத்திட  கூறியுள்ளது. 15 மூடிகள், தலா 6000 ரூபாய் மதிப்பீட்டில், 75 செ.மீ. * 60 செ.மீ. அளவிலும், 25 மூடிகள், தலா 5000 ரூபாய் மதிப்பீட்டில், 60 செ.மீ. * 60 செ.மீ. அளவிலும் இருக்கவேண்டும். இப்பொருட்களுக்கான மதிப்பீடு, சுமார் 2.15 லட்சம் ரூபாய். 
  
 
  
ஆனால் - நிறைவுற்றுள்ள வால்வு தொட்டிகளில், இரும்பு மூடிக்கு பதிலாக பூசப்பட்ட கான்க்ரீட் மூடி வழங்கப்பட்டுள்ளது. அதன் நடுவில்  - எப்போதும் திறந்திருக்கும் வகையில் - வால்வினை திறப்பதிற்கு இடம் விடப்பட்டுள்ளது.  இதன் மூலம் - மழைக்காலங்களில் மழை நீர் - தொட்டியில் தேங்க நேரிடும். மேலும் - வால்வில் ஏதேனும் பழுது ஏற்பட்டால், கான்க்ரீட் மூடியினை, உடைத்தே - பணிகளை மேற்கொள்ள இயலும்.
  
நகராட்சி அலுவலகம் அருகில்...
   
 
  
   |