காயல்பட்டினம் நகராட்சியின் புதிய ஆணையராக திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம் சேர்ந்த எம்.காந்தி ராஜ் இன்று பொறுப்பேற்றார்.
18.07.1977 அன்று பிறந்த இவருக்கு தற்போது வயது 36. எம்.பி.ஏ. பட்டதாரியான இவர், நெல்லை கூட்டுறவுத் துறை ஆய்வாளராகவும், பின்னர் கடந்த 6 மாதங்களாக ஊட்டி நகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இன்று காலை 10.00 மணியளவில் காயல்பட்டினம் நகராட்சியின் புதிய ஆணையராகப் பொறுப்பேற்றுக் கொண்ட அவருக்கு, காயல்பட்டினம் நகராட்சி ஆணையர் பொறுப்பிலிருந்து வாலாஜாபேட்டை நகராட்சி ஆணையராகப் பணியிட மாற்ற உத்தரவில் விடைபெற்றுச் செல்லும் ஜி.அஷோக் குமார், நகராட்சி கோப்புகளை முறைப்படி கையளித்தார்.

காந்திராஜ் உட்பட 14 புதிய ஆணையர்கள் தேர்வு செய்யப்பட்டு, கடந்த செப்டம்பர் 17, 2013 அன்று வெளியிடப்பட்ட அரசாணை





கள உதவி:
‘தமிழன்’ முத்து இஸ்மாஈல்
[Adminsitrator: செய்தி திருத்தப்பட்டது @ 3.20 pm / 12.02.2014] |