Re:... posted byzakariya (chennai)[05 November 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 38013
சில விஷயங்கள் மிகைபடுதபட்டு எழுதப்பட்டு இருந்தாலும் பயனுள்ள கட்டுரையை எழுதிய ஆசிரியருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
எதை தவிர்க்க வேண்டும் என்று கூறியவர் எவ்வளவு உன்ன வேண்டும் எனவும் கூறி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
இதற்கு நாம் எங்கு சென்றும் ஆராய தேவையில்லை நம்முடைய மார்க்கம் வலியுறுத்திய இரண்டு மடங்கு உணவு ஒரு மடங்கு தண்ணீர் ஒரு மடங்கு வெற்றிடம் என்பதை ஒவ்வொரு வேலை உணவு உண்ணும்போதும் கடைபிடித்தாலே போதும் நமக்கு எந்த நோயும் வராது.
இதை நம்முடைய பழக்கத்திற்கு கொண்டு வருவது சற்று கடினம் என்றாலும் ஒருவாரத்தில் நமக்கு பழகி விடும் ஆரம்பத்தில் இவ்வாறு உணவை சாப்பிடும் பொது உணவு உட்கொண்ட திருப்தியே இருக்காது. ஆனால் நம்முடைய நடைமுறைக்கு இந்த உணவு பழக்கம் வந்து விட்டால் அதிகமாக சாப்பிடுவதை நாம் வெறுக்க ஆரம்பித்து விடுவோம். காரணம் அளவோடு சாப்பிடும்போது கிடைக்கும் புத்த்யுயிற்சி அதிகமாக சாப்பிடும்போது கிடைபதில்லை தூக்கமும் வராது
Re:... posted byzakariya (chennai)[20 August 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 36530
நண்பர் அப்துல் ஹமீது அவர்களின் கருத்திலிருந்து நான் மாறுபட வில்லை ஆனால் எளிதாக தக்வா என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டால் கண்டிப்பாக பத்தாது. இந்த மாதிரி பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் நாம் நம்முடைய சமுதாயத்திற்கு நேரங்களை எவ்வாறு பயனுள்ள வழியில் சிலவழிக்க சொல்லிகொடுக்க வில்லை. இதனால் ஏற்படும் விளைவுகள் தான் இவை.
நான்கு பெண்கள் கூடினால் அதிகம் பேசுவது சொந்த பந்தங்கள் மற்றும் நம்ம ஊர் பற்றிய கழுவல்கள் தான் இல்லையென்றால் சீரியல் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான். இந்த வட்டத்தில் இருந்து நம்மால் வெளிவர முடியவில்லை.
ஒரு நல்ல லைப்ரரி ஒரு விளையாட்டு மற்றும் பொழுது போக்கு கூடம் அறிவியல் துறை சார்ந்த ஒரு சின்ன மீசியம் எதையும் நாம் பெண்களுக்கு செய்து கொடுக்காமல் நாம் மீண்டும் மீண்டும் அவர்களை குறை கூறுவதால் எந்த பயனும் விளையாது என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. அதற்காக இவற்றையெல்லாம் நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம்
Re:... posted byzakariya (chennai)[23 July 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 36077
தற்போது பாலஸ்தீனத்தில் நடந்து கொண்டுருக்கும் இனபடுகொலையை செய்தியாக இணைய தளத்திலோ அல்லது பத்திரிகைகளிலோ படிக்கும் போது நம்மால் ஒன்றும் செய்ய முடிய வில்லையே எனும் குற்ற உணர்வு நம்மை கொள்கிறது
இஸ்ரேலை சுற்றி பல அரபு நாடுகள் இருந்தும் அவைகள் ஒருதுரும்பைகூட பாலஸ்தீனத்திற்கு ஆதரகவாக எடுத்து போடாதது மிகவும் வருத்தப்படவேண்டிய விஷயம்.
அதைவிட கேவலமானது நம்மில் சிலர் சவுதிக்கு வக்காலத்து வாங்குவது. கேட்டா அந்த அரபியோட மருமகன் நேற்று சிரியாவில் சஹீதாஹிவிட்டான் தெரியுமா இந்த அரபியோட மச்சான் முந்தா நாள் ஆப்கானிஸ்தானில் சஹீதாகிவிட்டான் என நல்லாவே தங்களுடைய சவூதி விசுவாசத்தை காட்டுகின்றனர்.
சரிப்பா சவூதி அரசாங்கம் என்ன செய்தது என்று கேட்டால் அதை செய்தது இதை செய்தது என வாயால் வடை சுடுகின்றனர். சவூதி அரசாங்கம் செய்வதாக கூறும் உதவிகள் எல்லாம் சவூதி மன்னர் குடும்பத்தினர் மென்று துப்பும் எலும்புத்துண்டுகள் தான். பல ஆண்டுகள் நம்முடைய சகோதரன் அடிமை பட்டு கிடக்கிறானே அதற்கு நம்ம சவுதி அரசாங்கம் என்ன செய்தது என்றால் பதிலை காணோம். இடைப்பட்ட காலத்தில் நம்பிக்கை நட்சத்திரமாய் தோன்றிய மோர்சியின் ஆட்சியை கவிழ்க்க உதவியதை தான் சவூதி அரசாங்கம் செய்த சாதனையாக சொல்லலாம்
சவுதியில் இருந்துகொண்டே துணிவாக இக்கட்டுரையை எழுதிய நண்பர் சுஹைப் அவர்களை மனமார பாராட்டுகிறேன்
Re:... posted byzakariya (chennai)[11 July 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 35884
தலைப்புக்கும் உள்ள செய்திக்கும் பெரிய அளவு சம்பந்தம் இல்லையென்றாலும் சிறிய வயதில் அனுபவித்த விசயங்களை மிக அழகாக கோடிட்டு காட்டுகிறார் நண்பர் சாலிஹ்
அன்று என்னமோ எல்லோருடைய மனதும் மஞ்சளை எண்ணித்தான் ஏங்கியது. ஆனால் இன்று அதனுடைய சுவை நம்மை இழுக்கிறது. எதுமே இருக்கும் போது அதனுடைய அருமை தெரிவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம்
அது என்னமோ தெரிய வில்லை பணத்துக்கும் ஆரோகியதிற்கும் ஒட்டவே மாட்டேன்கிறது இவ்வாறு தான் இறைவனே ஏற்படுதிவிட்டானோ என என்ன தோன்றுகிறது
Re:... posted byzakariya (chennai)[09 July 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 35859
காயல்பட்டினத்தின் குப்பை மேடுகளையும் மாட்டின் கழிவுகளையும் புகைப்படங்களாக பார்த்த எங்களுக்கு நண்பர் பசீர் விருந்து படைத்தது இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். அற்புதம் விவரிக்க வார்த்தைகள் இல்லை. பொய்யும் புரட்டும் திருட்டும் பித்தலாட்டமும் நிறைந்த நமதூரின் மீது கோப பார்வையை வீசுகிறதா இல்லை, நோன்பை சுமந்து இருக்கும் நம்முடைய மக்களை பார்த்து பூரிப்படைகிறதா? என்ன வென்று சொல்வது. அருமை வாழ்த்துக்கள்
Re:... posted byzakariya (chennai)[04 July 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 35781
கஞ்சியில் கூட இருபது வருடங்களுக்கு முன்னர் பள்ளிவ்வாசல்களில் பரிமாறப்படும் வெள்ளை கஞ்சி தான் உடலுக்கு நல்லது. இப்போது அந்த கஞ்சி எந்த பள்ளியில் போடுகிறார்கள் என தேடும் நிலை ஏற்பட்டு விட்டது.
கஞ்சிக்கு combination வடை என்பதை மாற்றுவது என்பது நம்மை பொறுத்த வரையில் மிக கடினமான விசயமாகிவிட்டது ஒரு குடி ஒரு கடி என்பதை ஏதோ ஆத்திசூடி போல பெருசுகள் கூட மனதில் வைத்து செயல் பட்டதினால் பரலோகம் பொய் சேர்ந்தவர்கள் பலர்.
நம்முடைய உடல் என்பது நமக்கு நம்மை பொறுத்தவரையில் அமானிதம் அதை பாது காக்க வேண்டியது நம்முடைய கடமை என்பதை நாம் மறந்து விடக்கூடாது
Re:... posted byzakariya (chennai)[15 June 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 35293
kayalpatnam .com எங்கே செல்கிறது? யார் என்ன சொன்னாலும் நாங்கள் கட்டுரையை வெளியிடத்தான் செய்வோம் என்றால் Adults only போட்டாவது வெளியிடுங்கள் என்னுடைய கமெண்ட்ஸ் யை reject பன்னுவற்கு முன்னால் இந்த கட்டுரையை reject செய்யுங்கள்
Re:... posted byS.M.I.Zakariya (chennai)[17 February 2014] IP: 115.*.*.* India | Comment Reference Number: 33201
மஹரம் பேணாத மாமா மற்றும் மாமி மகள்களும் நமக்கு வெட்டுவதில்லை நாமும் அதை கண்டிப்பது இல்லை. சிலர்கள் கண்டிக்க முற்படும்போது அவர்கள் குடும்ப வட்டத்திலேயே வில்லனாக ஆக்கபடுகிறார்கள் என்றால் மற்றொரு பக்கம் காலை மாலை பால் போடுபவர்களும் காய்கறி வியாபாரிகளும் வீட்டில் உள்ள உறுப்பினர்கள் போல பாவிக்க படுகிறார்கள் இதனால் அசம்பாவிதங்கள் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்தாலும் நாம் பாடம் கற்றதாக தெரியவில்லை
வீட்டில் இருக்கும் டிவி யில் வரும் சீரியல் மூலம் தினமும் அந்நிய ஆடவர்கள் நம்முடைய படுக்கை அறைவரைக்கும் வந்தாலும் நாம் அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை நம்முடைய பெண்களுக்கு அது வெட்கமாக தெரிவது இல்லை
நிச்சயம் பண்ணி வைத்த காரணத்தை வைத்து ஆணும் பெண்ணும் நமதூரில் அடிக்கும் கூத்து சொல்லி மாளாது இரு பாலருமே இதற்கு வெட்கபடுவது இல்லை. இதனால் சில நிச்சயதார்த்தங்கள் நின்று போன சம்பவங்களும் உண்டு
நடுத்தர வயது பெண்கள் பக்கத்து வீட்டு வாலிப வயசுப்பில்லைகளிடம் வெட்கம் பேணுவது இல்லை.பெண்கள் வேணுமென்றால் அந்தப்பய்யனை சிறுவனாக பாவிக்கலாம் ஆனால் அவன் அவ்வாறு பார்ப்பானா என்பது நிச்சயமில்லை
வெட்கம் என்பது பெண்களுக்கு மட்டும்தானா ஆண்களுக்கு இல்லையா தோட்டத்தில் குளிக்கும் காட்சியை facebook ல் போடுவது எந்தவிதத்தில் நியாயமாகும்.குற்றாலத்தில் பெண்களை குளிக்க தடை போடும் ஆண்கள் வெற்றுடம்போடு அருவியில் குளிப்பது என்ன நியாயம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross