Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:20:44 AM
வியாழன் | 25 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1729, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்19:38
மறைவு18:27மறைவு06:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1419:39
Go to Homepage
எழுத்து மேடை
அனைத்து எழுத்து மேடை ஆக்கங்களையும் காண|எழுத்து மேடை வாசகர் கருத்துக்களை காண
எழுத்து மேடை ஆசிரியர்கள்
Previous ColumnNext Column
ஆக்கம் எண் (ID #) 149
#KOTWEM149
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 20, 2014
சமுதாயம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?

இந்த பக்கம் 4300 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சமீபத்தில் விஜய் டிவியில் ‘நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்’ என்ற நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் முஸ்லிம்களில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஓர் இளம் முஸ்லிம் பெண் போட்டியின் பங்கேற்பாளராக அமர்ந்திருக்க, எதிரில் நிகழ்ச்சியை நடத்தும் நடிகர் பிரகாஷ்ராஜ், கேள்விகளுக்கு நடுவே அந்தப் பெண்ணைப் பார்த்து, “உங்களுக்கு எந்த நடிகரைப் பிடிக்கும்?” என்று கேட்கிறார். உடனே “சூர்யா…!” என்று பதில் வருகிறது. இதனைக் கேட்ட பிரகாஷ்ராஜ் பார்வையாளர் இருக்கையில் அமர்ந்திருக்கும் அந்தப் பெண்ணின் தாயாரைப் பார்த்து “உண்மையாம்மா?” என்று கேட்கின்றார். புர்கா அணிந்திருந்த அந்தத் தாயார் மகிழ்ச்சிப் பூரிப்பில் வாயெல்லாம் பற்களுடன் “ஆமாம்” என்கிறார்.

“எனக்கு சூர்யா மாதிரி மாப்பிள்ளை பாரும்மான்னு என் அம்மாட்ட சொன்னேன். ஆனா நான் ஜோதிகா மாதிரி இல்லாததனால அந்த எண்ணத்தை ட்ராப் பண்ணிட்டோம்” என்று சொல்ல அரங்கமே அதிர்ந்து ஆர்ப்பரித்தது.

மீண்டும் பிரகாஷ்ராஜ் அம்மாவைப் பார்க்க அவரோ பெருமிதம் தாங்காமல் முகத்தை மூடிக்கொண்டு தலையைக் குனிந்து சிரித்தார். அவரால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இதோ அடுத்த அதிர்ச்சிக்கு வருவோம்.

அந்தத் தாயாரின் அருகே அந்தப் பெண்ணின் தங்கை அமர்ந்திருந்தார். பிரகாஷ்ராஜ் அவரைப் பார்த்து, “உனக்கு யாரப் போலம்மா மாப்பிள்ளை வேணும்?” என்று கேட்டார். “சிவகார்த்திகேயன்” என்று பொட்டிலறைந்தாற் போல் பட்டென்று பதில் வந்தது.

மீண்டும் அரங்கம் அதிர்ந்தது. மீண்டும் அந்தத் தாயாரின் பூரிப்பு. அவருக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. முகத்தை கீழே குனிந்து நிமிர்ந்தார். “சிவகார்த்திகேயன்னா உனக்கு ரொம்பப் பிடிக்குமாம்மா?” என்று பிரகாஷ்ராஜ் கேட்க, “ஐயோ உசிரு....” என்று அந்தப் பெண்ணிடமிருந்து ஏக்கக் குரலில் பதில் வந்தது.

மீண்டும் அரங்கம் அதிர்ந்தது. புர்கா அணிந்த அந்த அம்மையார் மீண்டும் முகத்தை கீழே குனிந்து நிமிர்ந்தார். அவரது முகத்தில் மகிழ்ச்சி என்றால் அப்படி மகிழ்ச்சி. மொத்த அரங்கத்தையும் தன் இரு மகள்களும் சிறிது நேரத்திலேயே கலகலக்க வைத்து விட்டார்களல்லவா...!

இது அவலத்தின் ஒரு பக்கம். இன்னொரு பக்கத்திற்கு வாருங்கள்...

முஸ்லிம்கள் நிறைந்த ஊர்களில் நடக்கும் அவலங்கள். இன்று இந்த ஊர்களில் வளர்ந்து வரும் சீரழிவுக் கலாச்சாரத்தை அறிந்தால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக இருக்கிறது.

எம்பெருமானார் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை முன்மாதிரியாக்கி, ஏற்றமிகு ஸஹாபாக்களை இதயத்தில் ஏந்தி, தூய்மையாக வாழ வேண்டிய பாசமிகு பாவையர் உள்ளங்களில் சூர்யாக்களும், சிவகார்த்திகேயன்களும், இன்னும் இவர்களைப் போன்ற கூத்தாடிகளும், விபச்சாரிகளும் குடி கொண்டிருக்கின்றனர்.

ஐவேளை அல்லாஹ்வை வணங்கி, அணுதினமும் திக்ரு சொல்ல வேண்டிய நாவுகள் இன்று ஆபாசங்களை பேசிக் கொண்டு அலைகின்றன. அன்னிய ஆண்களுடன்/பெண்களுடன் அல்ல, நிச்சயித்து வைத்திருக்கும் ஆண்களுடன்/பெண்களுடன் கூட தனிமையிலோ, போனிலோ பேசக் கூடாது என்று டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி போன்ற உலகறிந்த மார்க்க அறிஞர்கள் ஃபத்வாக்கள் கொடுத்துள்ளார்கள்.

“நிக்காஹ்” என்னும் திருமண ஒப்பந்தம் முடியும் வரை ஒருவருக்கு பேசி வைத்திருக்கும் இணை என்பது அன்னியர் என்பதே இஸ்லாத்தின் நிலைப்பாடு. மூன்றாவது ஒரு ஆள் இல்லாமல் பேசினால் அங்கே இருவருடன் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்பது தெள்ளத் தெளிவான ஹதீஸ்.

இவற்றையெல்லாம் மீறி நமது சமுதாயத்தில் எத்தனையோ பேர் தங்களுக்கு பேசி வைத்திருக்கும் இணைகளிடம் மணிக்கணக்கில் போனில் பேசுகிறார்கள். (இப்படி மணிக்கணக்கில் அளவுக்கு மீறி பேசி நிச்சயிக்கப்பட்ட இணைகள் முறிந்ததும் உண்டு).

இப்படிப் பேசும்பொழுது அவர்கள் கூட முழுவதுமாக ஷைத்தான் இருக்கின்றான். பின் அந்த உரையாடல்களில் எப்படி பரக்கத் இருக்கும்? இப்படிப்பட்டவர்களின் உறவுகள் ஷைத்தானியத்துடன் தொடங்கும்பொழுது அவர்களது மண வாழ்க்கையில் எங்கே அமைதி நிலவும்? எங்கே நிம்மதி தவழும்? சந்தேகங்களும், சறுக்குகளும் மணவாழ்க்கையின் துவக்கத்திலேயே துவங்கிவிடும்.

இதில் மனவருத்தத்திலும் மனவருத்தம் என்னவெனில் இத்தகைய பெண்களைக் கண்டித்து, கல்லூரிகளிலிருந்து உடனே நீக்கி, வீட்டுக்கு அழைத்து வராமல், தன் மகள் விரும்பிய ஆடவனையே மாப்பிள்ளை பேசச் செல்லும் தாய்மார்களும் உண்டு. இதனை யாரிடம் போய்ச் சொல்வது? எங்கே போய் முட்டிக் கொள்வது?

இப்படி தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் மார்க்கத்திற்கு முரணாக நடந்துகொள்வதற்கு துணை போகிறார்கள் என்றால் பிரச்னை மகளிடமிருந்து துவங்கவில்லை. தாயிடமிருந்து துவங்கிறது. தாய்க்கு மார்க்கப் பற்று இல்லை. மார்க்க ஞானம் இல்லை. எத்தனை சேனல்களில் இன்று மார்க்க சொற்பொழிவுகள் ஒளிபரப்பபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் பார்ப்பதற்கு இவர்களுக்கு மனம் வருவதில்லை.

வக்த் தவறாமல் வணங்குகிறார்களோ இல்லையோ, வரும் சீரியல்களைப் பார்த்து விடுகிறார்கள். சினிமாக்களை தன் மக்களுடன் விடாமல் பார்க்கும் தாய்மார்களும் உண்டு.

புனிதமிக்க நமது சமுதாயம் இப்பொழுது எங்கே சென்று கொண்டிருக்கிறது? முன்போ அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட சம்பவங்கள் இன்று நல்ல மார்க்கப் பின்னணி கொண்ட குடும்பங்களில் கேட்கின்றனவே! அந்தத் குடும்பங்களிலெல்லாம் மார்க்கம் எடுபட்டுப் போய்விட்டதா? அன்னியக் கலாச்சாரங்களுக்குள் அமுங்கிபோய் விட்டோமா? கால ஓட்டத்தில் கரைந்து விட்டோமா?

மார்க்கத்தை மார்பில் ஏந்திய முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் மாற்றங்கள் வருமா? இதயங்களில் இடி விழும் இப்படிப்பட்ட இகழ்வுகள் இனியாவது நடக்காதிருக்குமா? நம் இளைய சமுதாயம் இஸ்லாத்தின் பிடிக்குள் இனியாவது தலையெடுக்குமா?

வட இந்தியாவில் எங்கோ ஒரு கிராமத்தில் இளம் பெண்களுக்கு மொபைல் போனையும், ஜீன்ஸ் பேண்டையும் தடை செய்திருக்கிறார்கள் கிராமத் தலைவர்கள். தற்காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் அத்தனை சீரழிவுகளுக்கும் மொபைல் போனும், ஜீன்ஸ் பேண்டும்தான் காரணம் என்று அந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். எங்கோ ஒரு மூலையில் மாற்றாருக்கு ஏற்பட்ட சிந்தனை நமக்கு ஏன் ஏற்படவில்லை?

ஆம்! அப்படியெல்லாம் தொழில்நுட்ப வளர்ச்சியை தடை செய்திட முடியாது என்று நாம் எண்ணலாம். அப்படியானால் இந்தச் சீரழிவுகளுக்கெல்லாம் தீர்வுதான் என்ன?

தீர்வு ஒன்றே ஒன்றுதான். அதுதான் தக்வா என்ற இறையச்சம்!

தாய்ப்பாலை ஊட்டும்பொழுதே தக்வாவையும் சேர்த்து ஊட்ட ஆரம்பித்து விட்டால் இந்த இழிநிலைகளை தவிர்க்கலாம்.

இன்று அவர்களிடம் நீங்கள் செல்போனைத் தடை செய்தால் நாளை வேறு ஒரு நவீன கருவியை கையில் வைத்திருப்பார்கள். அது இதைவிட மோசமாக இருக்கலாம். ஆனால் தக்வா என்னும் இறைத் தடையை ஏற்படுத்தி விட்டால் எப்பேற்பட்ட நவீன கருவிகள் வந்தாலும் அவை அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.

நம்மையெல்லாம் நம் தாய்மார்கள் எப்படி இறையச்சத்தோடு வளர்த்தெடுத்தார்களோ அதே இறையச்சத்தோடு இப்போதைய தாய்மார்கள் இளைய தலைமுறையை வளர்த்தெடுக்க வேண்டும்.

தடுக்கி விழுந்தால் தனியோனை வணங்கும் தலங்கள் வாழும் பகுதிகளில் இது சாத்தியமில்லையா? எத்தனை மார்க்க நிறுவனங்கள் உள்ளன? எத்தனை மதரஸாக்கள் உள்ளன? எத்தனை மக்தபுகள் உள்ளன?

ஆண் குழந்தைகளுக்கு எப்படி மார்க்கக் கல்வி கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளனவோ அதே போன்று பெண் குழந்தைகளுக்கும் மார்க்கக் கல்வி கிடைக்கும் வாய்ப்புகளை அதிகப்படுத்த வேண்டும்.

ஆக, இஸ்லாத்தை இதயங்களில் ஏற்றினால் ஏற்றம் பெறுவது இம்மையில் மட்டுமல்ல; மறுமையிலும்தான்!

Previous ColumnNext Column
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: zakariya (chennai) on 20 August 2014
IP: 115.*.*.* India | Comment Reference Number: 36530

நண்பர் அப்துல் ஹமீது அவர்களின் கருத்திலிருந்து நான் மாறுபட வில்லை ஆனால் எளிதாக தக்வா என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டால் கண்டிப்பாக பத்தாது. இந்த மாதிரி பிரச்சினைகளுக்கெல்லாம் காரணம் நாம் நம்முடைய சமுதாயத்திற்கு நேரங்களை எவ்வாறு பயனுள்ள வழியில் சிலவழிக்க சொல்லிகொடுக்க வில்லை. இதனால் ஏற்படும் விளைவுகள் தான் இவை.

நான்கு பெண்கள் கூடினால் அதிகம் பேசுவது சொந்த பந்தங்கள் மற்றும் நம்ம ஊர் பற்றிய கழுவல்கள் தான் இல்லையென்றால் சீரியல் மற்றும் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்கள் தான். இந்த வட்டத்தில் இருந்து நம்மால் வெளிவர முடியவில்லை.

ஒரு நல்ல லைப்ரரி ஒரு விளையாட்டு மற்றும் பொழுது போக்கு கூடம் அறிவியல் துறை சார்ந்த ஒரு சின்ன மீசியம் எதையும் நாம் பெண்களுக்கு செய்து கொடுக்காமல் நாம் மீண்டும் மீண்டும் அவர்களை குறை கூறுவதால் எந்த பயனும் விளையாது என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து. அதற்காக இவற்றையெல்லாம் நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் கொள்ள வேண்டாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...அடி வயிற்றில் அமிலம் சுரக்கிறது
posted by: mackie noohuthambi (chennai) on 20 August 2014
IP: 180.*.*.* India | Comment Reference Number: 36533

அப்துல் ஹமீது அவர்களின் ஆக்கம் அடிவயிற்றில் அமிலம் சுரக்க வைக்கும் மிக பெரிய சமூக இழுக்கு.

சூரியாவைப் போல் மாப்பிள்ளை வேண்டும் என்று சொன்னது கூட ஆச்சரியம் இல்லை. தான் ஜோதிகா போல் இல்லையே என்று தன்னை தானே நொந்து கொள்கிறாளே - சிவகார்த்திகேயன் போல் மாப்பிள்ளை வேண்டும் என்று சொன்னது ஆச்சரியம் தரவில்லை - "ஐயோ உசிரு" என்று உருகி நெளிந்தாள் என்கிறீர்களே, நவூது பில்லாஹ். இத்தகைய பெண்கள் நாவில் கலிமா எப்படி வரும்.

விஜய் டிவி யில் நீயா நானா, லக்ஷ்மியின் உண்மை சொல்கிறேன் இன்னும் பல நிகழ்ச்சிகள் வீட்டின் அந்தரங்கங்களை அம்பலத்தில் அலசும் தெப்பக்குளமாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன, அதற்கு ரசிகர்கள் வட்டம் அதிகம். கலாசார சீரழிவுக்கு வெள்ளி திரை கால்கோள் விழா நடத்தியது என்றால் சின்னத்திரை அதற்கு திறப்பு விழா செய்தது. இந்த உண்மையை சொல்லப் போனால் சீமான்கள் கொதித்து எழுவார்கள் - கமலா ஹாசன்கள் விசுவரூபம் எடுப்பார்கள்.ஊடகங்கள் நம் உயிருக்கு விலை வைப்பார்கள். அவர்களின் தொழில் இதுதான். கொலை கொள்ளை பாலியல் வன்முறை வன்கொடுமை தற்கொலை இவைகளின் ஊற்றுக் கண்ணே வெள்ளித்திரையும் சின்னத்திரையும்தான் இது இல்லாத சேனல் ஏது. இரவு 12 மணிக்கு மேல் ஒரு சேனல் adults only 16வயதை தாண்டியவர்களா adults ?

"16 வயதான பின்னாலே எல்லோர்க்கும் மலரும் காதல் அதிசயம்..அதிசயமே அசந்து விடும் நீ எந்தன் அதிசயம்" என்று எப்போது ஒரு பாடல் வெளி வந்ததோ அப்போதே இந்த கும்மாளங்கள் ஆரம்பித்து விட்டன. கொழுந்து விட்டும் எரியும் நெருப்பு வளையத்துக்குள் கொளுத்தப்படாத கற்பூரமாக நம் இஸ்லாமிய சமுதாய பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள்..

இதற்கு காரணம் ஆண்கள்தான்.

இப்போதெல்லாம் வீட்டில் தொழுகை இபாததுக்கள், சமையல் வேலைகள் என்று இருக்கும் பெண்களை நாம் மணப் பெண்களாக தேர்ந்தெடுப்பதில்லை. பெண் என்ன ஓதி இருக்கிறாள் ஐவேளை தொழுகை தொளுகிராளா , நோன்பு வைக்கிறாளா என்று கேட்பதில்லை. எடுத்த உடன் என்ன படிக்கிறாள் என்று கேட்கிறோம். SSLC படித்து விட்டு உம்மாக்கு உதவியாக இருக்கிறாள் என்றால் நாம் நாக்கை சப்பிக் கொள்கிறோம், படிப்பு இல்லையாமே, அப்ப வேற பொண்ணை பாரு உம்மா என்று சொல்கிறோம்.

நான் ஒரு பெண்ணை பார்த்து பேட்டி கண்டு எனது மருமகனுடைய மகன் இஞ்சினியர்(அப்படி ஒன்றும் அழகோ, பெரிய சம்பளமோ இல்லை). அவனுக்கு அவளது போட்டோவை அனுப்பினேன். வீட்டில் எல்லோரும் சம்மதம், அடக்க ஒடுக்கமான பெண், மார்க்க பக்தியுள்ள பெண். இவர் சொன்ன வார்த்தை என்ன தெரியுமா, எனக்கு பெண்ணை பிடிக்கவில்லை, நான் நினைக்கிற மாதிரி பெண் இல்லை. நீ நினைக்கிற மாதிரி என்றால்.? என்னுடன் ஒன்றாக வரவேண்டும். வேலை பார்க்க வேண்டும் etc etc பெண்ணை cancel செய்தோம். பெண்ணின் பெற்றோர் மனம் என்ன பாடு பட்டிருக்கும். இது எனது அனுபவம். இப்படி எத்தனை பேருக்கு அனுபவங்கள் இருக்கும்.

இந்த நிலைமைக்கு மத்ரசாவையோ மக்தப்களையோ குறை சொல்லுவதில் அர்த்தமில்லை. அவர்கள் இஸ்லாமிய வாழ்க்கை முறையை சொல்லிக் கொடுக்காமல் இல்லை, கதீஜா நாயகி ஆயிஷா நாயகி இன்னும் உம்முஹாதுல் முமிநீன்கள் - நபிகள் நாயகம் திருமண விஷயங்கள் சொல்லப் படாமல் இல்லை. இதை எல்லாம் மீறி ஒரு நவீன கால சக்கரத்தின் சுழற்சியின் அடியில் சிக்கி தவிக்கிறது இந்த சமுதாயம்.

விழிப்புணர்வு கலந்துரையாடல்கள்- பெண்கள் மத்தியில் நடத்தப் பட வேண்டும் இணையதளங்களை எத்தனை பேர் பார்க்கிறார்கள். உங்கள் ஆக்கம் ஒவ்வொரு வீட்டு கதவையும் தட்டும்படி ஒரு booklet அடித்து கொடுக்கப்பட வேண்டும். பெண்களின் கருத்துக்கள் கோரப்பட வேண்டும். இதற்கு நிறைய முயற்சிகள் தேவைப் படுகிறது.

நமது இஸ்லாமிய சேனல்களில் இவற்றைப் பற்றிய கருத்துக்கள் பரிமாறப் பட வேண்டும். தீர்வுகள் முன்வைக்கப் பட வேண்டும். இஸ்லாமிய சேனல்களில் வரும் செய்திகள் வெறும் விவதாங்களாக மாறி, ஆளுக்கு ஆள் கேள்வி பதில் சொல்லிக் கொண்டிருக்கும் நிலை மாற வேண்டும். நிதர்சன உண்மைகள் இந்த மாதிரி சமூக அவலங்கள் அலசப் பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அல்லாஹ்விடம் அதிகம் அதிகம் நெஞ்சுருகி து ஆ கேட்க வேண்டும். அல்லாஹ் உங்கள் நல்ல முயற்சிகளுக்கு எல்லோரும் துணை நிற்க அருள் புரிவானாக. உங்கள் உணர்வுகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.என்னால் முடிந்த ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக இருக்கிறேன்.

"நீ நடப்பதற்கு பாதை தேடாதே, நீ நடந்தால் அதுவே பாதையாகும்" என்று ஒரு அறிஞர் சொல்கிறார். தீர்வு உங்கள்டமிருந்து ஆரம்பிக்கட்டும்.

LAA THAWFEEQA ILLAA BILLAH.

மக்கி நூஹுத்தம்பி 9865263588


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by: hameedfaizal (dubai) on 20 August 2014
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36534

முஹம்மதின் சமூகமா இது பார்த்தாலே ...கேவலமாக இருக்கிறது அத்துணை பேருக்கும் மத்தியில் மகள் எனக்கு சூர்யா வேண்டும் என்கிறாள்..தாய் இன்னொருத்தி எனக்கு இன்னொரு நடிகன் உசிரு என்கிறாள் இதை அவர்கள் வீட்டு ஆண்களும் அனுமதி அளித்திருக்கிறார்கள் என்றால் ...அந்த வீட்டின் நிலை எப்படி இருக்கும் என்று நாம் சிந்திக்க கடமைப் பட்டுள்ளோம்.... இன்று அந்நிய ஆண்களுடன் பெண்கள் வீட்டை விட்டு ஓடுகிறாள் என்றால் அதற்க்கு இதுபோன்ற காரணங்கள்தான் ..குடும்பத்தோடு உட்கார்ந்து டிவி ..பார்த்து..நமது பெண்களின் வெட்க உணர்வு இன்று வெளியாகிவிட்டது என்கிற கவலை நமக்கு வந்து விட்டது வெளியே பர்தாவை போடுவதால் பிரோயோசனம் இல்லை..தக்வா உள்ளத்தில் இல்லையென்றால் எனவே இதற்கு காரணம் நம் வீட்டு ஆண்கள்தான் பெண்கள் வீட்டில்தானே இருக்கிறார்கள் என்பதல்ல ...அந்நிய ஆண்களோடு அவர்கள் டிவிக்கு முன்னே இருக்கிறார்கள் ..எனவே இந்த விசயத்தில் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

கீழை பைசல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by: P.N.N. Zainul abdeen (DUbai) on 26 August 2014
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 36735

நானும் இந்த நிகழ்ச்சியின் பதிப்பை முக நூல் மூலம் பார்க்க நேர்ந்தது. உண்மையிலேயே மிக கேவலமான விசயம் அரேங்கேரியது . உலகம் எங்கும் பார்க்கும் தமிழர்கள் அனைவரும் முஸ்லிம் பெண்களும் இப்படிதான .. என்று வியக்கும் வண்ணம் உள்ளது. நடிகனை போன்று ஒரு மாப்பிள்ளை வேண்டும் என்றும் தன்னை ஒரு நடிகையாக இல்லையே என்று நொந்தது போவதும் அதை கேட்ட அவர்களின் தாயார் வெட்கி தலை குனியாமல் சந்தோச பூரிப்பை வெளிபடிதியதும் அவர்களின் மார்க்க அறியாமையை காட்டியது.

இதுக்கெல்லாம் முதல் காரணம் மார்க்க கல்வி அவர்களிடத்தில் இல்லாமல் போனதே கரணம்.

இப்படி பட்ட கீழ்த்தரமான செயல்களுக்கு நம்ம ஊரு பெண்களும் விதிவலக்கல்ல . எத்தனையோ பெண்கள் மதரசாக்கள் ஊரில் இருந்தும் என்ன பயன்??? வீட்டில் தொலைகாட்சி பெட்டி இப்போது தொல்லைகாட்சியாகிவிட்டதே . அதை பார்பதற்கு வீட்டில் உள்ளவர்கள் முறையான கண்டிப்பை திணிக்க வேண்டும். சீரியல் தானே பார்க்கிறாள் என்று விட்டு விட கூடாது இது சினிமாக்களை விட மிக கேவலமாக சித்தரிக்க படுகிறது. சீரியலை பார்த்து நம்ம பெண்கள் முதலில் உடை அலங்காரத்தை ரசிக்க தொடங்கி பின்பு எல்லா கேட்ட செயல்களுக்கும் இதுவே அச்சாரமாக விளங்குகிறது.

முன்பெல்லாம் நம்மதூரில் குறிப்பிட்ட பெண்களே கல்லூரி சென்று பயில்வார்கள். அநேகமானோர் மதரசாவில் இணைந்து சில பல மார்க்க கல்விகளை கற்று தன பிள்ளைகளுக்கும் கற்றுகொடுத்து மார்க்க நெறியில் வாழ்ந்தார்கள். இப்போதுள்ளவர்கள் நம்மதூரிலேயே கல்லூரி வந்துவிட்டதால் கல்லூரி மோகம் கூடிவிட்டது. கல்லூரி என்று சென்றுவிட்டால் என்னமோ தாங்கள் தான் எல்லவற்றையும் தெரிந்தவர்கள் தாங்கள் எதிர்பார்க்கிற மாதிரிதான் மாப்பிள்ளை வேண்டும் என்று பெற்றோர்கள் பார்க்கும் வரனை தட்டி கழிகிரார்கள் என்பதை நாம் நம்ம ஊரிலேயே கேள்வி பட முடிகிறது.

சமீபமாக கூட ஒரு சில நமதூர் கல்லூரி மாணவிகள் தாங்கள் படித்த கல்லூரி சென்று சக மனைவிகளை சந்தித்ததின் வெளிபாடு புகை படங்களை எடுக்க தொடங்கினர் . கல்லூரி வளாகத்திலும் , வளாகத்தில் வெளியுலும் , ரோடுகளிலும் நின்று வித விதமாக போஸ் கொடுத்து எடுத்தார்கள். எடுக்க வேண்டியது தான் தங்கள் சக தோழிகளோடு அதை அவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் முக நூலில் போட என்ன தேவை வந்தது. சந்தி சிரித்தது. விசாரிக்கையில் அது மேல தெரு மக்கள் என்றும் படித்து முடித்த மாணவிகள் ஒன்று சேர்ந்து கல்லூரி சென்ற போத நிகழ்ந்தது என்றும் தெரிய வந்தது.

இவ்வாறான செயல்களுக்கு வீட்டில் உள்ள பெரியோர்களே பொறுப்பு.

ஏக இறைவன் நம்மை மார்க்கம் தெரிந்த, மார்க்க நெறி போதிக்கின்ற ஊரில் பிரக்கவைத்ததே மாபெரும் கிருபை. மார்க்கம் கற்று தந்த வழியில் நம் பிள்ளைகளை வளர்த்து அல்லாஹுக்கும் ரசூலுக்கும் பிடித்தமானவர்களாக வாழ்வாங்கு வாழ்வோமாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved