Re: மகுதூம் தெரு மாணவர் MBBS மருத்துவரானார் posted byS S ABDULLAH (DUBAI)[17 April 2016] IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 43543
மாஷா அல்லாஹ்! அல்ஹம்துலில்லாஹ்!!
தம்பி மொஹுதூமின் மகன் டாக்டர் படிப்பு முடித்து பட்டம் வாங்கும் படங்களை மேலே பார்த்து மிக்க சந்தோசம். நம் குடும்பத்தில் ஒரு மருத்துவர் கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி. எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லா காரியங்களையும் ஹைராக்கி தருவானாக ஆமீன்.
Re:மகுதூம் ஜும்ஆ மஸ்ஜிதில் இஃப்தார் - நோன்பு ........ posted byS S Abdullah (Dubai)[07 November 2014] IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 38041
.......இரண்டாவது நாளில் துபை காயல் நல மன்றம் சார்பிலும் செலவினங்களுக்கு அனுசரணை செய்யப்பட்டிருந்தது. (copy & paste)
துபை காயல் நல மன்றம் சார்பில் அல்ல; துபாய்வாழ் மகுதூம் ஜும்ஆ பள்ளி ஜமாஅத்தினரால் என்பது தான் சரி என நினைக்கிறேன்.
Moderator: துபை காயல் நல மன்ற நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கிணங்க, செய்தி திருத்தப்பட்டது.
வெற்றி! வெற்றி!! மத நல்லிணக்கத்துக்கு வெற்றி!!! posted byS S Abdullah (Dubai)[22 September 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37403
நமதூர் ஒட்டுமொத்த சமுதாய மக்களின் ஒற்றுமை உணர்வுக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துக்கள். அரசியலுக்கு இங்கு வேலையே இல்லை. குறிப்பாக சகோதரர் அஷ்ரப் அவர்களுக்கு வாக்களித்த மாற்று மத அன்பு சகோதரர் அனைவருக்கும் மிக்க நன்றி.
வளர்ப்போம் ஒன்றுபட்ட சகோதரத்துவத்தை! பாதுகாப்போம் ஊரின் நலனை!! பேணுவோம் கட்டுப்பாட்டை!!!
செய்தி: புகாரி ஷரீஃப் 1435: இன்று அபூர்வ துஆ பிரார்த்தனை! பெருந்திரளானோர் குழுமினர்!! நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒலி நேரலையில்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...அபூர்வ துஆ நேர்ச்சை posted byS S Abdullah (Dubai)[31 May 2014] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35128
Re: இன்னொரு காமெடி posted byS S Abdullah (Dubai)[03 May 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27186
*********************
502 வாக்குகளை நான் தேர்தலில் வாங்கினேன். ஆனால் இத்தனை குழப்பங்களோடு அவர்கள் வாங்கிய கையெழுத்தின் எண்ணிக்கை சுமார் 90 மட்டுமே. இதில் இருந்து நான் வார்டு மக்களின் நம்பிக்கையை இழக்கவில்லை என்பது தெளிவாகிறது. இன்ஷாஅல்லாஹ் இழக்கவும் மாட்டேன். (c/p)
************************
அப்படியானால் பல்லாயிரம் வாக்குகள் பெற்று மகத்தான வெற்றி பெற்ற தலைவியை மட்டும் நம் விரல்களின் எண்ணிக்கை அளவு கூட இல்லாத 17 உறுப்பினர்கள் அவர் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி அவரை பதவியிலிருந்து விரட்ட நினைப்பது எந்த வகையில் நியாயம்?
வேண்டுமானால் ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்கள் வார்டு மக்களிடம் நம்பிக்கை வோட்டு பெற்று நிரூபிக்கட்டும் பார்க்கலாம். அதுபோல் தலைவியும் பெறட்டும். தன் செழிப்புக்கு தடையாக உள்ள தலைவியை கூட்டு சேர்ந்து மெஜாரிட்டி காட்டி விரட்ட தயாராகும் உறுப்பினர்களை பதவியிலிருந்து திரும்பபெற மக்களுக்கு என்ன வழி?
நம் நாட்டு சட்டம் ஒரு பெரிய ஓட்டை.. அதனால் பெருச்சாளிகள் வசதியாக ஒளிந்துகொள்கின்றனவே……
(நான் இந்த செய்திக்கு சம்பந்தப்பட்ட ஜமாஅத்தோ/வார்டோ சேர்ந்தவனல்ல)
செய்தி: நகருக்கு நலத்திட்டங்கள் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் நகர்மன்ற சிறப்புக் கூட்டம்! காரசாரமான விவாதங்களுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re: 2013இன் மகா காமெடி.. posted byS S Abdullah (Dubai)[03 May 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27179
அரசியல் நன்றாக விளையாடுகிறது. நேற்று தூற்றியவர்களை இன்று புகழ்கிறார்கள். நேற்று புகழ்ந்தவர்களை இன்று தூற்றுகிறார்கள். என்ன தங்கமான மனசு. இவர்கள் கட்சியில் சேருவதற்கு முன்பே திட்டம் pass ஆனதை மறந்து, கட்சியில் சேர்ந்த பிறகு அமைச்சரை கேட்டார்களாம்... முதல்வரை கெஞ்சினார்களாம்... திட்டம் வந்ததாம். முதல்வரும் இத்திட்டத்தை சட்டமன்றத்தில் அறிவித்தார்களாம்..மக்களாகிய நாமும் நம்பனுமாம். புழுகுமூட்டைகள். துணை தலைவர் ரீல் விடுகிறார்.
இவர்கள் சுயேட்சையாக நிற்பார்களாம், ஜெயிப்பார்களாம். தங்கள் ஜமாஅத் மக்களின் முதுகில் குத்திவிட்டு ஒரு கட்சியில் சுய லாபத்துக்கு சேர்வார்களாம், பின்பு அந்த நகராட்சியே அந்த கட்சியின் கோட்டை ஆகிவிட்டதாம். தைரியம் இருந்தால் கட்சி சார்பில் நின்று ஜெயித்து கோட்டையா or கோட்டை விட்டார்களா என்பதை தன் கட்சி தலைமைக்கு உணர்த்தணும்.
ஆ..மா... நம்பிக்கை இல்லாதீர்மானத்தை வாபஸ் வாங்கினதாக செய்தி வந்ததே அப்படியானால் இந்த கூட்டத்துக்கு கூட தலைவி மீது நம்பிக்கை இல்லாமல்தான் கலந்துகொண்டதாக ஒரு உறுப்பினர் கூறுகிறார். எப்படி...தலை சுற்றுதே... ஒருவேளை இப்படி சொன்ன பின்பு (கட்சியிலிந்து ஆப்பு வந்து உடனே) தலைவி மீது மனதார நம்பிக்கை வந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்தை வாபஸ் வாங்கி இருப்பார்களோ. எல்லாமே இடிக்குதே.. மீதமுள்ள பதவிகாலத்தில் உறுப்பினர்கள் செழிப்பாக இருந்தால் சரி ஆளுங்கட்சியில் சேர்ந்திருப்பதால்.... வாழ்க ஜனநாயகம்..
Re: காயல்பட்டினத்தில் தப்லீக் இஜ்திமா! posted byS S Abdullah (Dubai)[08 April 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26764
செய்தியில் கூறப்பட்டுள்ளதுபோல் பரப்புரைகள் நிச்சயமாக இல்லை என அறிய முடிகிறது. சாலிஹ் அவர்களுக்கு தப்லீக்கில் ஈடுபாடுள்ள நண்பர் or உறவினர் மூலம் மெயில் வந்து இருக்கலாம். கமிட்டி மூலம் வந்திருக்க வாய்ப்பு இருக்காது என்பது என் எண்ணம். எனக்கும் (துபாய்) என் உறவினர் மூலம் போன் அழைப்பு வந்தது. இதெல்லாம் தனிப்பட்டவர்களின் விருப்பம். எனவே இதெல்லாம் ஒரு பெரிய விசயமே இல்லை.
இஜ்திமா சிறப்பாகவும் வெற்றியாகவும் நடை பெற்றதற்கு எல்லாம் வல்ல இறைவனுக்கே புகழனைத்தும். இந்த நல் அமல்கள் மூலம் நமதூருக்கு வளமும் செழிப்பும் சிறக்க பிரார்த்திப்போமாக ஆமீன்!
Re:நகரில் இன்று தப்லீக் இஜ்திமா! posted byS S Abdullah (Dubai)[06 April 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26729
மாஷா அல்லாஹ்! சுப்ஹானல்லாஹ்!!
இந்நிகழ்ச்சி பற்றிய எவ்வித பத்திரிக்கை செய்தி, நோட்டீஸ், போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்கள், நிகழ்ச்சி நிரல் சமந்தப்பட்ட அறிவிப்புகள் ஏதுமின்றி, இஜ்திமா நடப்பதை தானே அறிந்து பெரும் மக்கள் கூட்டம் கலந்துகொள்வது என்பது இந்த விளம்பர யுகத்தில் மிக மிக அற்புதம், அதிசயம். இந்த இஜ்திமா சிறப்பாக அமைந்து வெற்றி பெற வாழ்த்துகள்.
இந்த இஜ்திமாவில் கலந்துகொல்பவர்களுக்கும், நடைபெறும் நம் ஊருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ரஹ்மத்தையும் பரக்கத்தையும் கொடுப்பானாக! அங்கு நடைபெறும் நல் அமல்களின் பொருட்டால் நோயினால் வாடும் மக்களுக்கு பூரண சுகமளிக்கவும், இனியும் நோய் வராமல் பாதுகாக்கவும் இறைவனை பிரார்த்திப்போமாக ஆமீன்!
Re:மங்களவாடி பொதுமக்கள் வேண்டுகோள்! posted byS S Abdullah (Dubai)[04 April 2013] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 26689
வரவேற்கபடவேண்டிய வேண்டுகோள். ஒவ்வொரு ஜமாத்துக்களும் செய்ய வேண்டிய வேண்டுகோள். மீதமுள்ள நகராட்சி காலத்திலாவது உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுத்து ஊருக்கு நல்ல திட்டங்கள் நடைபெற உதவுமாறு வேண்டுவோம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross