Re:... posted byI.M.Abdur Rahim (Kayalpatnam)[22 December 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 32152
இந்த கட்டுரை மிகவும் பயனுள்ளது. சில காலங்களுக்கு முன்னால் நான் மதுரையில் பணியாற்றிய போது , காயல்பட்டினம் முன்னோர்கள் ஐய்யங்கார் சமூகத்தை சேர்ந்தவர் என்று ஒரு ஆடிட்டர் என்னிடம் கூறினார். அதன் பேரில் மேலும் தவகல் வரும் என்று காத்திருக்கிறேன்.
செய்தி: பெரிய நெசவுத் தெரு வழியே ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரு மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம்! நூற்றுக்கணக்கானோர் கைது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:பெரிய நெசவுத் தெரு வழியே ... posted byI.M.Abdur Rahim (MADURAI)[14 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 16801
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊர் நலனில் அக்கறை இல்லாதவர்கள் அவர்கள் என்று எத்தனை நபர் எத்தனை முறை தான் சொல்ல போகிறோம்?. இதில் என்ன வேதனை என்றால், ஊர் நன்மைக்காக போராடும் ஜனாப் இப்னு சவ்த் காக்கா போன்றவர்கள் இதில் கலந்திருப்பதுதான். எனன் இருந்தாலும் அரசாங்க அனுமதி அளித்துவிட்டால் யார் என்ன நினைத்தாலும் நடக்காது. ஆரம்பத்தில் சிற்சில நிகழ்சிகள் நடக்கத்தான் செய்யும். அதை எல்லாம் பொருட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இம்மாதிரி நிகழ்வுகளை இணைய தளங்கள் புறக்கணிக்க வேண்டும். நம் சார்புள்ள நிகழ்வுகளை மாத்திரமே பதிவேற்ற வேண்டும். நான் சொல்வது பத்திரிக்கை தர்மத்துக்கு விரோதமாக இருக்கலாம். ஆனால் புறகணிப்பு என்பதே ஒரு பெரிய போராட்டம்.
குறிப்பு : போராட்ட முறைகளை காணும் பொது ஏதோ ஒரு இயக்கத்தின் சாயல் தெரிகிறதே? அல்லாஹ் அனைத்தயும் அறிந்தவன்.
Re:காயல்பட்டணத்தின் வேர்கள்!... posted byI.M.Abdur Rahim (MADURAI)[10 February 2012] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20507
அன்பு நண்பர் அப்துல் ஹமீது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். தங்கள் கட்டுரை அதி அற்புதம். உங்களை போல் நானும் நமது காயல் பட்டணம் வரலாற்றை தேடி தேடி சில அறிய தகவலை இணைய தளத்தின் வழியாக பெற்றுள்ளேன். மேலும் பல தகவல்கள் பெற எண்ணியுள்ளேன். இன்ஷா அல்லாஹ்!
Re:காயல்பட்டினத்தில் ஓர் அக்... posted byI.M.Abdur Rahim (MADURAI)[25 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 20386
அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.
தங்களின் தலையங்கம் மிகவும் கவனத்துடனும், அக்கரையுடனும் வரைய பெற்ற ஓர் காவியம். மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட ஆட்சியோ அல்லது தனிப்பட்ட நிர்வாகமோ எப்போதெல்லாம் தவரிழைகின்றதோ, அப்போதெல்லாம் அதனை மக்கள் மிக கடுமையான முறையில் தண்டிக்க தவறுவதில்லை. அதன் எதிரொலிதான் தற்போது நிகழ்ந்த சம்பவம். நமது அரசியல் அரங்கில் பல முறை நாம் கண்ட நிகழ்வுகள் நம்மை சிந்திக்க தூண்டி செம்மை படுத்திட வேண்டும்.
எமர்ஜன்சி காலத்து இந்திரா முதல் நேற்றைய கடாபி வரை பற்பல அரசியல் அரங்கேற்றத்தை நாம் நிறையவே கண்டு கொண்டிருக்கிறோம். எனவே எப்போதெல்லாம் மக்களுக்கு ஆட்சியாளர்கள் மீது அல்லது நிர்வாகத்தின் மீது வெறுப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மக்கள் கொதித்தெழுந்து அந்த ஆட்சியாளர்களுக்கு / நிர்வாகத்திற்கு முடிவு கட்டுவது ஓர் இன்றியமையாத நிகழ்வாகும். எனவே இந்த வரலாற்று பதிவை மனதில் நிறுத்தி இந்த புதிய ஆட்சியாளர்களும் சஹோதரி ஆபிதாவின் தலைமையில் இறைவனுக்கு பயந்து ஓர் அற்புதமான ஆட்சியை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம். அதற்க்கு நாம் அனைவரும் ஒற்றுமையுணர்வுடன் ஒன்று சேர்ந்து அவர்களக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமையாகும்.
பஸ் எங்கே போச்சு???? posted byI.M.Abdur Rahim (MADURAI)[21 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 11592
அன்பர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்த தோல்வி , சஹோதரி மிஸ்ரியாவுக்கு கிடைத்த தோல்வி இல்லை. பேரவையின் சில சுயநலவாதிஹளுக்கு கிடைத்த தோல்வி. சஹோதிரி மிஸ்ரியா நிச்சயம் நல்லவங்கதான்; அனால் அவங்கள சப்போர்ட் பண்ணியவங்க நல்லவங்க இல்லையே! எனினும் , அடுத்த முறை நீங்கள் சஹோதிரி ஆபிதவை போல் , தனித்து நின்று வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்.
சஹோதிரி ஆபிதாவின் இந்த மாபெரும் வெற்றி யாருமே எதிர்பாராதது என்று என்ன வேண்டாம்; ஐயக்கிய பேரவை என்று ஐக்கியம் இல்லாது போனதோ , அன்றே இந்த வெற்றி எதிர்பார்த்ததுதான். எப்ப வாஹிதா மேடத்திற்கு பதில்
வேட்பாளரின் தாயாரை நியமனம் செய்தார்களோ , அப்பவே எதிர்பார்த்ததுதான். கள்ள வோட்டு போட எப்ப முயற்சி நடந்ததோ அப்பவே எதிர்பார்த்ததுதான். பணம், மது எப்ப கொடுக்க எப்ப ஆரம்பம் ஆனதோ , அப்பவே எதிர்பார்த்ததுதான். எனவே தயவு செய்து , இனியாவது நல்ல பாடம் படியுங்கள். இப்ப பஸ் எங்கே போச்சு ????? சென்னைக்கு மீண்டும் காலியாக போச்சு. உங்க புகழ், பதவி
எங்கே போச்சு, பஸ் விட்ட புகையில், போயே போச்சு. இட்ஸ் கான்!
ஆடிய ஆட்டம் என்ன? பாடிய பாட்டும் என்ன ???? என்ன ??? என்ன ??? அறிந்தும் தெரிந்தும் கொள்ளுங்கள், இறைவனின் மகிமையை!
Re:இன்று காலை வாக்கு எண்ணிக... posted byI.M.Abdur Rahim (MADURAI)[21 October 2011] IP: 122.*.*.* India | Comment Reference Number: 11467
அல்ஹம்துலில்லாஹ்!
சஹோதிரி ஆபிதா வெற்றி பெற்றதுக்கு வாழ்த்துக்கள்! நம் கயல் பதியின் பெருமை பொங்கும் ஓர் புதிய சரித்திரம் தொடங்கட்டும். அந்த வல்லோனுக்கே எல்லா புகழும் புகழ்ச்சியும். எந்த தனி நபரின் செல்வாக்கும் , மக்கள் செல்வாக்கு முன்னால் நிற்காது என்பதற்கு ஓர் உன்னத எடுத்துக்காட்டு இந்த முடிவு.
இனியாவது நம் காயல் நகரின் பெருமை மிக்க ஓர் நல்ல உண்மையான ஐயக்கிய பேரவை அமைந்திட அந்த வல்லோனை வேண்டியவனாக ........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross