அல்லாஹ் உங்களுக்கு வாழ்வில் எல்லா நலமும் புரியட்டும் சேவை மனதுடன் உங்கள் பயணத்தை தொடங்குங்கள் . இன்று மருத்துவத்துறை சேவை மனப்பான்மையில் இருந்து விலகி வெறும் காசே குறிக்கோள் என ஆகி விட்டது . இதற்கு விதிவிலக்காக உள்ளவர்களை நாம் சொல்ல வில்லை . ஆகவே உங்கள் மருத்துவங்கள் மக்களுக்கு சேவை மனப்பான்மையாக இருக்க வாழ்த்துகிறேன் . உங்கள் சேவை முதலில் நம் ஊருக்கும், பிறகு அணைத்து இடங்களுக்கும் வளர எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக ! ஆமீன் ! .
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அன்பு தம்பி அல்அஸ்ரார் மாத இதழின் ஆசிரியரும், காயல்பட்டினத்தைச் சேர்ந்த மார்க்க அறிஞருமான மவ்லவீ ஹாஃபிழ் டி.எஸ்.ஏ.செய்யித் அபூதாஹிர் மஹ்ழரீ ஃபாழில் ஜமாலீ, “அஷ்ஷெய்க் முஹம்மத் இஸ்மாஈலுன் நஹ்வீ ஹயாத்துஹு வகித்மாத்துஹு அத்தீனிய்யா வல்லுகவிய்யா” (மஹான் நஹ்வீ முஹம்மத் இஸ்மாஈல் அவர்களின் வாழ்க்கைச் சரிதம், உலகுக்கும் - அரபு மொழிக்கும் அவர்கள் ஆற்றிய சேவை) எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தமைக்காக, M.Phil. பட்டம் வழங்கப்பட்டார். என்ற செய்தி அறிந்து மற்றற்ற மகிழ்ச்சி . அல்ஹம்துலில்லாஹ்.
வல்ல ரஹ்மான் மென்மேலும் அவரின் அறிவை விரிவாக்கி இன்னும் பல்வேறு ஆய்வுகளை அரங்கேற்றி தானும் , பிற மக்கள் அனைவரும் பலன்பெற பேரருள் பாலிப்பானாக ! ஆமீன் !
செய்தி: அதிக எடை கொண்ட மரத்தைச் சுமக்க இயலாமல் பொக்லைன் இயந்திரம் கவிழ்ந்தது! காயல்பட்டினம் - திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
பாடிகாட் மிசின் பின்னால் செல்லவேண்டும் posted byM.S.Kaja Mahlari (Singapore)[22 June 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 28217
மிசின் தானே என நினைத்த மாதிரி எடைகளை ஏற்றுவதையும் கவனிக்க வேண்டும். இந்த வித முன்யோசனைகளையும் கவனத்தில் கொள்ளவேண்டும். எதுக்கும் இந்த வித பொக்லைன் இயந்திரம் பாரம் ஏற்ற செல்லும்போது அது கீழே விழுந்தால் அதனை தூக்கி நிறுத்த அதற்கு பின்னாலேயே அதிக சக்திவாய்ந்த மிசின் ஒன்று பின்னாலேயே செல்வது நல்லது.
இது எந்தக் காலத்து பூனை ? posted byM.S.Kaja Mahlari (Singapore)[28 April 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 27095
பூனை ! ஆம் ! ஹழ்ரத் அபூ ஹுரைரா (ரலி ) அவர்களின் பெட்அனிமல். எப்போதும் தங்களின் சட்டை ஜெப் பையில் சிறிய பூனைக் குட்டியை வைத்து செல்லமாக வளர்த்து வந்தார்கள் . மிகவும் ஆவலுடன் பூனை குட்டியை அன்புடன் வளர்த்து வந்ததை அவதானித்த அண்ணல் நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் அவர்களைப் பார்த்து " யா அபா ஹுரைரா ! சிறிய பூனைக் குட்டியின் தந்தையே ! என அன்புடன் செல்லமாக அழைக்க " அதுவே அவர்களின் நிக் நேமாக (பட்டப்பெயராக ) மாறி விட்டது . இவர்களின் இயற் பெயர் "அப்துர்ரஹ்மான் " என்பதே !
அது சரி ! பூனைகள் வீட்டில் வளர்ந்தாலும் " 1, 2, டாய்லேட் வெளியில் சென்றே நிறைவேட்டும் என கேள்விப்பட்டுள்ளோம் . ஆனால் அப்படியா செய்கிறது ? அதேல்லாம் அந்தக் காலப்பூனைகள் . இந்த காலமல்ல !
நடைபெற்ற இந்த தப்லீக் இஜ்திமாவில் இந்த இயக்கத்தின் தலைவர்கள் அவர்களின் நூற்களில் எழுதி வைத்திருக்கும் தவறான கொள்கை பற்றி "அஹ்ளுசுன்னாஹ் வல் ஜமாஆ " அறிந்சர்கள் கூறிய குற்றத்க்சாட்டுக்களுக்கு ஒரு தெளிவான விளக்கங்களை , மறுப்புரைகளை மாநாட்டின் இறுதியில் தீர்மானமாக அறிவிப்பார்கள் என அதிகம் பேர்கள் எதிர்பார்திருந்தார்கள் . ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது !
ஏன் ? இந்த இயக்கத்தின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிப்பதை தவிர்த்தே வருகிறார்கள் என்பது இன்னும் புரியாத ஒரு புதிராகவே இருந்து வருகிறது!
நல்லெண்ணத்தில் அடிப்படையில் posted byM.S.Kaja Mahlari (Singapore)[08 March 2013] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 26092
ஒருவேளை தமிழ்நாட்டின் மின்சார தேவை நிறைவுபெற்று மேல்மிச்சமாக "மின்சாரம்" கையிருப்பில் இருக்கலாம். அதான் பொதுமக்களுக்கு பகலிலும் மின்சேவை செய்யலாம் என நல்லெண்ணத்தில் அடிப்படையில் இருக்கலாம்!
அஸ்ஸலாமு அலைக்கும். சிங்கை காயல் நல மன்றத்தின் குடும்ப சங்கம நிகழ்வுகள் பார்த்து மிகவும் சந்தோசம். அல்ஹம்துலில்லாஹ்.
வெளிநாட்டில் பணிபுரிந்து கொண்டு ஏதும் விடுமுறை நாட்கள் கிடைக்கும்போது அதிலே "ஊர் நலன்களுக்காக " சிறிது நேரத்தையும், சிரமத்தையும் செலவழித்து பிறர் சிரமங்கள் போக்க ,உதவி,ஒத்தாசைகள் நல்க நமது அணைத்து சிங்கை வாழ் காயலர்களின் "பொது நலப் பணிகள்" போற்றத்தக்கவை ! அல்ஹம்துலில்லாஹ்.
நமது பணிகள் ,சேவைகள் அனைத்தையும் வல்ல அல்லாஹ் அங்கீகரித்து அதற்க்காக பாடுபடும் அனைவருக்கும் இம்மை,மறுமை அனைத்து நற்பேறுகள் குன்றாது, குறையாது கிடைக்க அவனிடம் இருகரமேந்தி இறைஞ்சிகிறேன் ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !
السلام عليكم ورحمة الله وبركاته மதிப்புமிக்க மஹ்லரா அரபிகல்லூரியின் முதல்வரும், எனது சங்கைக்குரிய உஸ்தாதும் ,மிகச்சிறந்த நாடறிந்த நாவலரும், சுன்னத்து வல் ஜமாஅத் கொள்கை கோட்பாடுகளில் மிக உறுதி மிக்கவருமான கண்ணியத்துக்குரிய அல்ஹாஜ் மௌலானா, மௌலவி கலந்தர் மஸ்தான் ஆலிம் ரஹ்மானி காதிரி ஹஸ்ரத் அவர்களின் "வபாத்" செய்தி அறிந்து அதிர்ச்சியும்,மிக்க கவலையும் அடைந்தேன். அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். குறிப்பாக மஹ்லரா அரபிகல்லூரிக்கும், சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைக்கும், மொத்த சமுதாயமும் அடைந்துள்ள பேரிழப்பாகும்.
அவர்களின் குடும்பத்தினர், மஹ்லராவின் நிர்வாகிகள்,உஸ்தாத்மார்கள், மாணவர்கள்,மற்றும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகள், குற்றங்கள், குறைகளை மன்னித்து ,அவர்களின் கப்ரை சுவன சோலையாக ஆக்கி, நாளை மறுமையில் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் மேலான சபாஅத்தை பெற்று அவர்களோடு ஜன்னதுல் பிர்தொவ்சில் குடியிருக்க நல்லருள் புரிவானாக ! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !
செய்தி: DCW ஆலை விதிமீறல் குறித்து ஆய்வுக்குப் பின் நடவடிக்கை! காயலர்கள் முன்னிலையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அல்ஹம்துலில்லாஹ் . நாம் அனைவரும் இணைந்து எடுத்திருக்கும் இந்த முயற்சியின் வெற்றியில் ஒரு ஆரம்பம் தெரிகிறது ! இதையே விடாமல் தொடரவேண்டும் . அடிக்க,அடிக்க இந்த அநியாய அம்மி நகர்ந்தே தீரும்.
நமது முயற்சிகள் தொடரவும், சிரமங்கள் தீரவும், நோயப்பினிகள் அகலவும், DCW வின் அணைத்து விதமான சுயநலபோக்கும், அராஜகமும், அநியாயங்கள் ,நிரந்தரமாக துடைத்தெரிய எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ! ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross