Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:17:53 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
தலையங்கம்
அனைத்து தலையங்கங்களையும் காண|அனைத்து கருத்துக்களையும் காண
Previous EditorialNext Editorial
தலையங்கம் எண் (ID #) 48
#KOTWEDIT48
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 30, 2012
என்றாவது ஒரு நாள் நீதி கிடைத்தே தீரும்!
இந்த பக்கம் 4432 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மினமாட்டா என்பது ஜப்பானில் மீன் தொழில் மேலோங்கிய ஒரு சிறிய கிராமம். அங்கு 1908ஆம் ஆண்டு Chisso Corporation என்ற தொழிற்சாலை நிறுவப்பட்டது. துவக்கத்தில் நைட்ரஜன் (Nitrogen) போன்ற பொருட்கள் தயாரிக்கப்பட்டது. 1932ஆம் ஆண்டு முதல் Acetaldehyde என்ற திரவத்தை Mercury கொண்டு Chisso தயாரிக்கத் துவங்கியது.

ஊரில் பலர் அந்நிறுவனத்தில் சாதாரண வேலைகளுக்குப் பயன்படுத்தப்பட்டனர். அதனால் அக்கிராம மக்கள் தம் வாழ்க்கைத் தரத்தில் உயர்வும் கண்டனர்.

1950களில் நிலமை மாறியது. ஊரில் திடீரென புது விதமான நோய் தோன்றத் துவங்கியது. பிற்காலங்களில் - அந்த நோய், அந்த ஊரின் பெயரில் ‘மினமாட்டா நோய்’ என்றே பரவலாக அழைக்கப்பட்டது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களது உடலின் நரம்பு அமைப்பு பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரித்தனர். அங்கு இருந்த பூனைகள் பைத்தியம் பிடித்தது போல் ஓடித்திரிந்து உயிர் விட்டன. பலரது கண், உதடு, கால் போன்றவை பாதிக்கப்பட்டன. பலர் தங்களையும் அறியாமல் உரக்க சப்தமிடத் துவங்கினர். அதனால் அவர்கள் பைத்தியம் என் முத்திரை குத்தப்பட்டனர்.

1959ஆம் ஆண்டு பல்கலைக்கழகம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், நோய்களுக்குக் காரணம் Chisso நிறுவனத்தின் Mercury என அறிவித்தது. இந்த அறிக்கைக்குப் பின் எதிர்ப்புகள் கிளம்பின. ஊரே கொந்தளித்தபோதும், Chisso நிறுவனம் மினமாட்டாவில் ஏற்பட்ட பாதிப்புகளில் அதன் பங்கு உள்ளது என ஏற்கவில்லை. எதிர்ப்பு தெரிவித்த மீனவர்களை Chisso நிறுவனம் பணிய வைத்தது. சிலர் சிறு தொகை பெற்றுக்கொண்டு தாங்கள் பிற்காலங்களில் நஷ்டஈடு கேட்கமாட்டோம் என கையெழுத்திட்டனர். Chisso நிறுவனத்தைப் பொருத்த வரை, பாதுகாப்பான முறையில் தொழிற்சாலைக் கழிவை வெளியேற்றுவதை விட மீனவர்களுக்கு நேரடியாக பணம் கொடுப்பது சிக்கனமாக தெரிந்தது.

1968ஆம் ஆண்டு தயாரிப்பு முறை பழமை ஆன காரணத்திற்காக Mercury பயன்படுத்துவதை நிறுத்தி, அந்நிறுவனம் வேறு முறைக்கு மாறியது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, 1932 முதல் 1968 வரை - Chisso நிறுவனம் கடலினை Mercury கொண்டு மாசுப்படுத்தியதே ஊரில் ஏற்பட்ட நோய்களுக்குக் காரணம் என நீதிமன்றம் அறிவித்தது. Mercuryயின் மற்றொரு வடிவமான Methyl Mercury மீன்களுக்குள் சென்று, அது பின்னர் உணவாக மனித உடலுக்குள் சென்றுள்ளது.

நீதிமன்றம் மார்ச் 20, 1973 அன்று வழங்கிய அத்தீர்ப்பின் சாராம்சம்...

... ஓர் இரசாயன தொழிற்சாலை கழிவு நீரை வெளியேற்றும்போது மிகவும் அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும்... அக்கழிவை ஆய்வுசெய்து, அதில் என்ன ஆபத்தான பொருட்கள் கலந்துள்ளன என அறியவேண்டும்... அதனால் மிருகங்களுக்கு, தாவரங்களுக்கு மற்றும் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என அறியவேண்டும்... ஆபத்து உண்டு என அறியப்பட்டால் உடனடியாக தொழிற்சாலை செயல்பாடுகளை தானாகவே நிறுத்தி ஆராயவேண்டும்... ஒரு காலமும் அருகில் உள்ள மக்களின் உயிர் மற்றும் உடல் நலனையும் மீறி எந்த தொழிற்சாலையும் நடத்தப்பட அனுமதிக்கக் கூடாது...

நிறுவனத்தினர் Acetaldehyde கழிவினை எந்தவித அக்கறையும் இன்றி கடலுக்கு விட்டிருக்கிறார்கள்... அரசாங்க விதிமுறைகளுக்கு உட்பட்டு மாசு அளவு இருந்தாலும், பிற நிறுவனங்களை விட சிறந்த முறையில் கழிவை சுத்திகரித்தாலும், கவனக்குறைவுக்கான தண்டனையில் இருந்து நிறுவனத்தினர் தப்ப முடியாது...


இதுவே அந்த நீதிமன்றத் தீர்ப்பின் சாராம்சம்.

ஜப்பானில் உள்ள Chisso நிறுவனத்தின் அணுகுமுறையும், செயல்பாடும் காயல்பட்டினத்தில் உள்ள DCW தொழிற்சாலையின் அணுகுமுறையையும், செயல்பாட்டையும் நினைவுபடுத்துவதாகவே உள்ளது என்றால் அது மிகையாகாது.

ஒரு நாட்டின் வளர்ச்சியில் தொழிற்சாலைகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. அத்தியாவசிய பொருட்கள் அத்தொழிற்சாலைகள் மூலம் தயாரிக்கப்படுகின்றன. பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது. அரசு கஜானாவிற்கு வரிகள் மூலம் வருமானம் பெருகுகிறது. இவையெல்லாம் மறுக்கமுடியாத உண்மை. அதே நேரத்தில், இவை தவிர பிற மறுக்கமுடியாத உண்மைகளும் உள்ளன என்பதனையும் நாம் மறந்துவிடக்கூடாது.

ஒரு தொழிற்சாலையின் தரம் - அது ஈட்டும் வருமானத்திலோ, அது தயார் செய்யும் பொருட்களின் முக்கியத்துவத்திலோ மட்டும் அல்ல. மாறாக, அத்தொழிற்சாலை அனைத்து வகைகளிலும் தனது செயல்பாடுகளை எவ்வாறு நியாயமானதாகவும், நேர்மையானதாகவும் அமைத்துக்கொள்கிறது என்பதிலும்தான் உள்ளது. இதில், தான் அமைந்திருக்கும் பகுதியின் சுற்றுச்சூழலை அத்தொழிற்சாலை எவ்வாறு பாதுகாக்கிறது என்பதுவும் அடங்கும்.

காயல்பட்டினத்தில் உற்பத்தியைத் துவங்கிய காலம் முதல் இதுகாலம் வரை DCW தொழிற்சாலை, சுற்றுப்புறசூழலை எந்த வகையிலும் பேணவில்லை.

ஆரம்ப கால Chlorine வாய்வு கசிவுகள், இன்று வரை தொடரும் கடலில் அமில மாசு கலப்பு போன்ற பிரச்சினைகளை மறுத்தும், மழுப்பியுமே DCW தொழிற்சாலை பதில் கூறிவந்துள்ளது.

ஒரு வேதியல் தொழிற்சாலை தான் விரும்பினால், அதற்காக செலவு செய்ய முடிவு செய்தால் - மாசுவினை போதிய அளவில் கட்டுபடுத்த நிச்சயம் இயலும். தொழிற்சாலையின் லாபத்தை முன்னரும், அத்தொழிற்சாலையைச் சுற்றி வாழும் மக்களின் வாழ்வினை பின்னரும் வைத்து செயல்படும் தொழிற்சாலைகள் அந்த மாசுவினைக் கட்டுப்படுத்த முழு மனதுடன் முயற்சியை செய்வதில்லை. DCW தொழிற்சாலையும் அவ்வகையை சார்ந்த தொழிற்சாலையே.

காயல்பட்டினத்தில் இன்னொரு மினமாட்டாவோ, இன்னொரு போபாலோ நிகழ்வதற்கு முன்னர் மக்கள் விழித்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்.

DCW நிறுவனத்தின் 50 ஆண்டு கால செயல்பாடுகளால் சுற்றுச்சூழலுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தெளிவான விளக்கம் வழங்கப்படாமல், அரசாங்கம் - இந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, நவம்பர் 29 அன்று காயல்பட்டினத்தில் நடைபெறும் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் - நீண்ட, நெடிய பயணத்தின் முதல் அடிகளே!

ஜப்பானில் மினமாட்டா மக்கள் பெற்ற தீர்ப்பு நமக்கு தரும் பாடம்: நீதி கிடைக்க காலம் ஆகலாம்; எனினும் என்றாவது ஒரு நாள் அது கிடைத்தே தீரும்!

Previous EditorialNext Editorial
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...நீதி கேட்டு நெடிய பயணம்

ஒரு காலத்தில் சரியாக தெரிந்த விஷயம் இன்னொரு காலத்தில் தவறாக தெரியலாம். முன்னேற்றங்கள் ஏற்படும்போது சாதகங்களுடன் பாதகங்களும் தொடர்ந்தே பயணம் மேற்கொள்ளும். ஆனால் அதற்காக பயணத்தை நிற்பாட்டவும் முடியாது, பாதகங்களை புறந்தள்ளி விட்டு பயணத்தை தொடரவும் முடியாது.

ஜப்பானில் இரண்டாம் உலக யுத்தத்தில் அணு குண்டு வீசி மக்களை கொன்று குவித்த அமெரிக்கா இன்று ஜப்பானின் வளர்ச்சியை கண்டு வியக்கிறது. அணுகுண்டு தயாரிக்கும் நாடுகளே இருக்க கூடாது என்று அமெரிக்காவே சொல்கிறது. மரண தண்டனை வேண்டும் என்று சொன்ன நாடுகள் இன்று தூக்கிலிடும் சட்டம் தவறானது என்கிறது.

சட்டங்கள் மக்களுக்காகத்தானே தவிர சட்டங்களுக்காக மக்கள் இல்லை. மக்களுக்காக மக்கள் நன்மைக்காக மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்துவதற்காக தொழிற்சாலைகள் ஆரம்பிக்கபடுகிறது. ஆனால் நாளடைவில் அதில் லாபம் ஈட்டி கோடீஸ்வரர்களாக பவனி வருபவர்கள் மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் காசேதான் கடவுளடா என்று பணத்துக்கு சாஷ்டாங்கம் செய்ய முற்படும்போது மக்கள் போராட்டம் வெடிக்கிறது.. சாம்ராஜ்யங்களே சரிந்து விழுகின்றன.

சமீப காலங்களில் உலகின் நாலா பக்கங்களிலும் நடந்து வரும் புரட்சிகளை கண்ணுற்ற பின்னும் மக்கள் குரலை ஒடுக்க நினைக்கிறவர்கள் துண்டை காணோம் துணியை காணோம் என்று வெருண்டோடுகிற காட்சிகளை கண்டபின்னும் கண்ணை திறந்து நிதர்சன உண்மைகளை பார்க்க மறுப்பவர்களை என்னென்று சொல்வது?

மயிலாட வான்கோழி தடை செய்வதோ, மாங்குயில் பாட கோட்டான்கள் குறை சொல்வதோ, முயல்கூட்டம் சிங்கத்தின் எதிர் நிற்பதோ அதன் முறையற்ற செயலை நாம் வரவேற்பதோ?

எழுந்து நடந்தால் எரிமலையும் நமக்கு வழி கொடுக்கும். விழுந்து கிடந்தால் சிலந்தி வலையும் நம்மை சிறைபிடிக்கும்.

இப்படை தோற்கின் எப்படி வெல்லும் என்று இளைஞர் கூட்டம் நல்லதை நோக்கி வீறு நடைபோட ஆரம்பித்து உள்ளது. நம் பெரியவர்களை கண்ணியப்படுத்துவோம். . இளைஞர்களை முன்னிலைப்படுத்துவோம். ஊர் கூடி தேரிழுப்போம்

ஐபேடிலும் மடிக்கணினிகளிலும் இணையதளங்களிலும் வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் தங்கள் இளமையை தொலைத்துக் கொண்டிருக்கும் இளைஞர்கள் மத்தியில் இப்படியொரு இளைஞர் கூட்டம் ஊரின் நன்மைக்காகவும் எதிர்கால சந்ததிகளின் நன்மைக்காகவும் போராட புறப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

தெளிவான திட்டம். விடா முயற்சி. கடின உழைப்பு, இறை நம்பிக்கையுடன் சேர்ந்த தன்னம்பிக்கை இவை நான்கும் இருந்தால் வானம் தொட்டு விடும் தூரம்தான். நீதிகேட்டு நெடிய பயணம் போகத்தான் வேண்டும். தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்.தர்மம் மறுபடியும் வெல்லும் வாழ்த்துக்கள்.


posted by: mackie noohuthambi (kayalpatnam) on 30 November 2012
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24241

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Nice Article

The article very clearly highlights the resemblance between the two genocidal factories, which are varying merely in their locations. The attitude of DCW shows that it's not at all concerned about the environmental pollution and the resulting health factors due to the release of their contaminated wastes to the environment in the liquid and gas forms. Now, it is our duty to find out what they are doing with their solid wastes and residues as well.

Thanks for your quality article. Keep it up.


posted by: Zainul Abideen (Dammam) on 30 November 2012
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 24244

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...நரம்பியல் வியாதி எனப்படும் நரம்பு தளர்ச்சி கும் DCW வின் மாசு ஒரு ...

assalmualaikum

1950களில் நிலமை மாறியது. ஊரில் திடீரென புது விதமான நோய் தோன்றத் துவங்கியது. பிற்காலங்களில் - அந்த நோய், அந்த ஊரின் பெயரில் ‘மினமாட்டா நோய்’ என்றே பரவலாக அழைக்கப்பட்டது. இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களது உடலின் நரம்பு அமைப்பு பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரித்தனர்,

தலையங்கதை பார்க்கும் பொழுது இண்டு கான்செர் அதிகமாக பரவுவதை போண்டு, முன் காலம்களில் நம் மக்கள் அதிகமாக "நரம்பு தளர்ச்சி" எண்டு சொல்லும் நோயினால் பல்வேறு சிரமம் களுக்கு வுல்பட்டது, இந்த DCW வினால் வரும் மாசு கூட காரணமாக இருக்கும் என் பதில் சந்தேகம் இல்லை.


posted by: suaidiya buhari (chennai) on 30 November 2012
IP: 101.*.*.* India | Comment Reference Number: 24269

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...

It is time to take the message up to national level and to get the message across to other environmental activists. This is not the problem of kaylpatnam alone, but also for the other villages around this area and particularly it is disastrous for fishermen community.

As insisted in the past, people should avoid consuming the fish comes from this area as much as possible.

It may be advisable for the town to take legal injunction against DCW's expansion project and bring them to compliance. There should also be legal case should the government officials and politicians whoever failed to implement environmental regulations properly.

The untrustworthy public officials don't really care about common people. Politicians surely not going to heed the cry unless they find personal gains. The town should take calculated and collection action and it should be inclusive of neighboring towns as well.

In the due process, you will also find people selling themselves out to the power brokers and also there will be divisive elements make attempts to split the people and make the voice weaker. Therefore, let all the decisions be taken through consensus among all parties - regardless of their religious background and where they come from - without giving rooms for any section to feel them being left out.

As a side note, in my opinion, kayalpatnam people should have backed Koodamkulam people as well. Likewise the concerns of Kayalpatnam, people from Koodamkulam fear similar mismanagement.


posted by: Rilwan (Michigan) on 08 December 2012
IP: 99.*.*.* United States | Comment Reference Number: 24421

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved