Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:10:37 PM
திங்கள் | 9 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1957, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0012:1315:3318:0419:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:21Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:52
மறைவு17:59மறைவு00:23
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0605:3205:58
உச்சி
12:10
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2118:4819:14
Go to Homepage
தலையங்கம்
அனைத்து தலையங்கங்களையும் காண|அனைத்து கருத்துக்களையும் காண
Previous EditorialNext Editorial
தலையங்கம் எண் (ID #) 49
#KOTWEDIT49
Increase Font Size Decrease Font Size
வியாழன், பிப்ரவரி 28, 2013
சமாதான முயற்சியும், வரலாறு சொல்லும் பாடமும்!
இந்த பக்கம் 15552 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (12) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தில் தலைவர் - உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவது புதிதல்ல. கடந்த நகர்மன்றத்தின் (2006 - 2011) ஆரம்ப மாதங்களில் இதே சூழல் நிலவியது. அக்காலகட்டத்தில் பல தலைப்புகளில் செய்திகளும், தலையங்கங்களும் காயல்பட்டணம்.காம் இணையதளத்தில் வெளியாயின.

பார்க்க:-

(a) நகர்மன்றத்தில் சுமூகம்! நலத்திட்டப் பணிகளுக்கு அடித்தளம்!! பொதுநல அமைப்புகள் பாராட்டு!!! [23-11-2007]

(b) நகர்மன்றத் தலைவர் ராஜினாமா! முழு விபரம்!! [28-11-2007]

(c) ஐக்கியப் பேரவை வற்புறுத்தலால் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா வாபஸ்!!! [28-11-2007]

(d) நகர்மன்றத் தலைவர் ராஜினாமா - தினகரன் விளக்கம்! [29-11-2007]

(e) நகர்மன்றத் தலைவர் மீது அதிருப்தி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு! [1-12-2007]

(f) ஊழலின்றி செயல்படுங்கள்! இல்லாவிடில் நகராட்சியைக் கலைக்கக் கோருவோம்!! -ஐக்கியப் பேரவை [10-12-2007]

ஊழலுக்கு எதிரான நகர்மன்றத் தலைவர், ஊழலுக்கு ஆதரவான / கண்டுகொள்ளாத நகர்மன்ற உறுப்பினர்கள், நகர்மன்ற உறுப்பினர்களுக்கு பக்க பலமாக காயல்பட்டினத்தைச் சார்ந்த சென்னை வாழ் தொழிலதிபர்.

இது அன்றைய நிகழ்வு மட்டுமல்ல, இன்றும் அதே நிலைதான். அன்று நிலவிய சூழலிலும் சில சமாதான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அம்முயற்சிகள் குறித்து பிப்ரவரி 27, 2008 அன்று Peace returns to Municipality? என்ற தலைப்பில் காயல்பட்டணம்.காம், தலையங்கம் ஒன்றும் வெளியிட்டிருந்தது.

அதன் பின் நகராட்சியில் நிலவிய அமைதி எந்த வடிவில் இருந்தது என்பதற்கு கடந்த ஐந்தாண்டுகளாக நகர்மன்றத்தில் நடந்தது என்ன? என்ற தலைப்பில், காயல்பட்டினம் ஐ.ஐ.எம். வளாகத்தில் - வார்டு 01 முன்னாள் உறுப்பினர் திருத்துவராஜ், செப்டம்பர் 25, 2011 அன்று, ஆற்றிய உரை சான்று.

முடிந்தது அக்டோபர் 2011 தேர்தல். வந்தது ஏறத்தாழ (இருவரைத் தவிர) புதிய நகர்மன்ற அங்கத்தினர்கள். திரும்பியது ஐந்தாண்டுகளுக்கு முன் ஓடிய அதே திரைக்கதை.

நகராட்சியில் மீண்டும் அசாதாரண சூழல். மீண்டும் சமாதானக் குழு அமைக்கப்படுகிறது. அசாதாரண சூழலுக்கு முக்கிய காரணம் யாரோ, அவரும் குழுவில் ஓர் அங்கம். அவரும் இருந்தால்தான் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்கும் என்று பிந்தைய விளக்கம். காயல்பட்டினம் ஒரு சிலருக்கு விளையாட்டு மைதானம். கேள்விகள் கேட்கக் கூடாது. ஆட்டத்தை மட்டும் ரசிக்க வேண்டும். (?)

ஆங்கிலத்தில் Elephant in the room என்று ஒரு நேர் சொற்பொருளாகாத மரபுக்கூறு (Metaphorical Idiom) உண்டு. அந்த மரபுக்கூறுக்கு - ஒரு நிதர்சன உண்மை கண்டுகொள்ளப்படாமலும், எதிர்கொள்ளப்படாமலும் இருப்பது என்று பொருள். பிப்ரவரி 27, 2013 அன்று வெளியிடப்பட்ட சமாதானக் குழுவின் பரிந்துரைகளும் அந்த நிலையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தனது பரிந்துரையின் துவக்கத்தில் பிரச்சனைகளாக அடையாளம் காட்டப்பட்ட

நகராட்சி தலைவர் மற்றும் மன்ற உறுப்பினர்கள் உறவு,
காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை நிலை,
ஊடகங்களின் செயல்பாடு,
தனி நபர்களின் குறுக்கீடு

ஆகிய நான்கில், மூன்று அம்சங்களுக்கு மட்டும் சிறப்புக் கவனம் செலுத்தி, தனது பரிந்துரையை சமாதான குழு வழங்கியுள்ளது. முக்கிய மற்றும் தலையாய பிரச்சனையான தனி நபர் குறுக்கீடு - முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விதமாக அணுகப்பட்டுள்ளது. இதே அணுகுமுறைதான் ஐந்தாண்டுகளுக்கு முன்பும் கையாளப்பட்டது. அதன் விளைவுதான் - அதே பிரச்சனைகள், அதே நபர் மூலம் மீண்டும் தற்போது திரும்பியுள்ள சூழல்.

மாவட்ட நகராட்சிகள் சட்டம், 1920 - நகர்மன்றத் தலைவரையும், உறுப்பினர்களையும் சரி சமமாகப் பார்க்கவில்லை. நகர்மன்றக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் பெருவாரியான ஆதரவு அடிப்படையில் இருக்கவேண்டும் என்று கூறும் அச்சட்டம், கூட்டங்களில் எழும் ஒழுங்கு பிரச்சனைகளில் (Points of order) நகர்மன்றத் தலைவரின் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது.

தலைவருக்கான உரிமைகள் என்னென்ன என்பதை நகராட்சிகள் சட்டம் - பிரிவுகள் 13, 13B, 14, 18 உட்பட பல பிரிவுகள் தெரிவிக்கின்றன. மேலும், நகராட்சிகளின் சட்டம் - பிரிவு 19, தலைவருக்கும், நிர்வாக அதிகாரிக்கும் வழங்கப்பட்டுள்ள தனி உரிமைகளில் மன்றம் குறிக்கிட அனுமதி இல்லை என்றும் தெளிவுற கூறுகிறது.

அது தவிர, தனிப்பட்ட உறுப்பினர்களின் பொறுப்புகளும், அதிகாரங்களும் என்னென்ன என்பதையும் நகராட்சிகளின் சட்டம் பிரிவு 20 தெளிவுபடுத்துகிறது.

சமாதானக் குழு நகர்மன்ற அங்கத்தினருக்கு வழங்கியுள்ள பரிந்துரைகளில் துவக்கமாக, நகராட்சி சட்ட விதிகளை உணர்ந்து தலைவரும், உறுப்பினர்களும் செயல்படவேண்டும் என பரிந்துரைத்துவிட்டு, இந்திய அரசிய சாசனத்திற்கு புறம்பாக - ஒருங்கிணைப்பு குழு என்ற பெயரில், 12 பேர் கொண்ட புதிய அதிகார மையத்தை உருவாக்கவும் பரிந்துரை செய்கிறது. அப்படியெனில் தேர்தல்கள் எதற்கு?

தங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பதில் கூற, அவர்களிடமிருந்து கருத்துக்கள் பெற, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்ற அங்கத்தினர் கடமைபட்டவர்கள். ஆனால், மக்கள் பிரதிநிதிகளை - அசாதாரண சூழலில் உருவான ஒரு குழு உருவாக்கும் மற்றொரு குழு கட்டுப்படுத்தும் என எதிர்பார்ப்பது சட்டத்தோடு விளையாடும் ஒரு செயல்.

“வெறும் பரிந்துரைதான்... கட்டுப்படுவது அவசியம் இல்லை” என விளக்கங்கள் கூறினாலும், பரிந்துரை ஆவணத்தின் இறுதியில் (அனைவருக்கும் பொதுவாக),

இந்த யோசனைகளை ஏற்று நடப்பவர்களுக்கு ஊரின் அனைத்து ஜமாஅத்தினரும், சர்வ சமய அமைப்புகளும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்

என்று கூறியிருப்பதை, இந்தப் பரிந்துரைகளை - பல நியாயமான காரணங்களுக்காக - முழுமையாக ஏற்றுக்கொள்ள விரும்பாதவர்களுக்கு விடுக்கப்படும் மறைமுக எச்சரிக்கை என்றே எடுத்துக்கொள்ள முடியும்.

சமாதானக் குழுவின் - ஊடகங்கள் குறித்த பரிந்துரைகள் பெருமளவில் விவாதிக்கக் கூடியதாக இல்லை. இருப்பினும், இணையதளங்களும் இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதே. அவை குறித்த தீர்வுகளும் சட்ட விதிகளுக்கு உட்பட்டே இருக்கவேண்டும் என்பதனையும் மறந்து விடக்கூடாது.

நகராட்சி நடவடிக்கைகளில் யாரேனும் தவறு செய்வதாக அறிந்தால் அவர்களை அணுகி, நளினமாக உண்மையை உணர்த்தி, அனைவரையும் ஊரின் நலனில் தன்னலம் கருதாமல் ஈடுபடச் செய்ய முயற்சிக்கும் பணியில் ஊடகங்கள் செயல்பட வேண்டும் என்ற சமாதானக் குழுவின் பரிந்துரையானது - ஊடகங்கள் தங்கள் எல்லையைத் தாண்டி செயல்படக் கூறும் பரிந்துரை. இது, பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது. மாறாக, புதிய பிரச்சனைகளைத்தான் உருவாக்கும். ஊடகங்களின் கடமை செய்திகள் உண்மையா என ஊர்ஜிதம் செய்து வெளியிடுவதே.

சமாதானக் குழுவின் - காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை குறித்த பரிந்துரைகள் மேலோட்டமாக வரவேற்கப்பட வேண்டியவை. மாற்றங்கள் மேலோட்டமாக மட்டும் இல்லாமல், முழுமையானதாகவும், ஆழமானதாகவும் இருத்தல் வேண்டும். மேலும் கடந்த சில ஆண்டுகளாக சில வணிகர்கள் / வணிகக் குடும்பங்களின் ஆதிக்கத்தில் இவ்வமைப்பு செயல்பட்டு வருவதிலிருந்து முற்றிலும் விடுபடவேண்டும்.

இறுதியாக, சமாதானக் குழுவின் முயற்சி வரவேற்கத்தக்கது. இதில் ஈடுப்பட்டுள்ள பலர், பல சமூக நலக் காரியங்களில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளவர்கள். அவர்களின் பரிந்துரைகள் முழுமையாக நிராகரிக்கத்தக்கவை அல்ல என்றாலும், முழுமையாக ஏற்றுக்கொள்ளத்தக்கவையும் அல்ல. தற்போது அவர்கள் வெளியிட்டுள்ள பரிந்துரைகளை துவக்க ஆவணமாக எடுத்துக்கொண்டு, பிற முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

பிரச்சனைக்கான மூல காரணியை நேரடியாக எதிர்கொள்ளாமால், ஐந்தாண்டுகளுக்கு முன் செய்த அதே தவறை மீண்டும் செய்ய வேண்டுமா?

இந்த கேள்விக்கான விடையை - இதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளவர்கள் மட்டுமன்றி, பொதுமக்களும் காண வேண்டிய தருணம் இது!

Previous EditorialNext Editorial
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு அழுத்தவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...

நல்ல முயற்சி ஒன்று நடக்கிறது... இனியாவது சுமூக நிலை ஏற்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த எனக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது சமாதானக் குழு அளித்துள்ள பரிந்துரைகள்.

இதில் என் மனதில் தோன்றிய சில கேள்விகளை சமாதானக் குழுவினருக்கு பணிவுடன் முன்வைக்க விரும்புகிறேன்:-

கேள்வி 1:

நகரில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு முக்கிய காரணங்களாக,
(1) நகர்மன்ற தலைவர் - உறுப்பினர்களிடையே உள்ள கருத்து வேறுபாடு,
(2) நகர்மன்றத்தினர் - ஐக்கியப் பேரவை இடையே புரிந்துணர்வு இல்லாமை,
(3) நகராட்சி நடவடிக்கைகளில் ஊடகங்களின் சில செயல்பாடுகள்,
(4) நகராட்சி நடவடிக்கைகளில் தனிநபர் குறுக்கீடு
ஆகிய நான்கு விஷயங்கள் சமாதானக் குழுவால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், முதல் மூவருக்கும் பரிந்துரை அளித்துள்ள சமாதானக் குழு ஆதிக்கம் செய்யும் தனி நபரைக் கண்டுகொள்ளாமல் விட்டது ஏன்?

கேள்வி 2:

சமாதானக் குழுவின் நகராட்சிக்கான பரிந்துரையில், லஞ்சம் - ஊழலுக்கு எதிராக நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் தலைவிக்கு, நகர்மன்ற உறுப்பினர்களின் கருத்தை அறிந்துகொண்டு பல பரிந்துரைகளை முன்வைத்த சமாதானக் குழு, தலைவியின் கருத்துக்களையும் அறிந்துதானே இருப்பீர்கள்? அதன்படி உறுப்பினர்களுக்கு வைத்த பரிந்துரைகள் என்று எதையும் அடையாளம் காண முடியவில்லையே?

கேள்வி 3:

ஐக்கியப் பேரவைக்கு சமாதானக் குழு அளித்துள்ள பரிந்துரையால், இத்தனை நாளாக ஐக்கியப் பேரவை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் இனி ஒவ்வொரு பள்ளிவாசலிலும் நடக்கும் என்பதைத் தவிர வேறென்ன புதிதாக நடந்துவிடப் போகிறது?

ஒவ்வொரு ஜமாஅத்தின் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும், செயலாளரும் பேரவை பொதுக்குழுவில் வந்தால் பேரவை ஊருக்குப் பொதுவான அமைப்பாக இருக்கும். அனைத்து ஜமாஅத்துகளின் உறுப்பினர்களும் கட்டுப்படுவார்கள். யாரோ இருவரை பிரதிநிதிகளாக்குவதால் என்ன நடந்தது என்பது கடந்த காலத்தில் மக்கள் அறியாததா?

கேள்வி 4:

ஊடகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பரிந்துரையைப் பார்க்கும்போது வாய்விட்டு சிரிக்கத் தோன்றுகிறது.

(1) செய்திகள் வெளியிடுவதால் ஒற்றுமை பாதிக்கப்படுமா அல்லது அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வால் பாதிக்கப்படுமா?

“அவங்க என்ன வேணும்னாலும் செய்யட்டும்! நீங்க அதை யாருக்கும் சொல்லாதீங்க” என்று சொல்வது சரிதானா?

(2) நல்ல - கெட்ட செயல்களைக் கண்ணுறும் ஊடகத்தினர் அதை செய்தியாக்குவதை விட்டுவிட்டு நளினமாக அவர்களிடம் பேச வேண்டும் என்று சொல்வதை என்னவென்று சொல்ல? கட்டப்பஞ்சாயத்து செய்யச் சொல்வது போல் இல்லையா இது?

இதுகுறித்து சமாதானக் குழுவின் பதில்கள் என்ன என்பதை அறிய ஆவலாய் உள்ளேன்.

சுருங்கச் சொன்னால், எல்லோருக்கும் பொதுவான ஐக்கியப் பேரவை குறுகிய வட்டத்திற்குள் இருப்பதையும், தனியார் நடத்தும் ஊடகங்களை எல்லோரின் கருத்துக்களை அறிந்தும் செயல்படச் சொல்வதாக அல்லவா உள்ளது இந்தப் பரிந்துரை?

இது நியாயம்தானா?

இக்கேள்விகளை, ஏற்கனவே இதுகுறித்து வெளியான செய்தியிலும் முன்வைத்துள்ளேன்.


posted by: Hameed Rifai (Yanbu KSA) on 28 February 2013
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 25884

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நியாயமா?

ஹாமீத் ரிபாயியின் நியாயமான கேள்விக்கு என்ன பதில்???


posted by: MS MOHAMMED LEBBAI (DXB) on 01 March 2013
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 25889

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:..சாந்தியும் சமாதானமும் உண்டாக வேண்டாமா ...

சமாதான முயற்சியும் வரலாறு சொல்லும் பாடமும் என்ற தலைப்பில் வெளிவந்துள்ள தலையங்கம், அதன் உள்ளே உள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன,

நடந்து முடிந்த விஷயங்கள் பற்றி மீளாய்வு செய்து அந்த தவறுகளில் இருந்து நாம் மீண்டு வர அவை உதவும் என்ற கண்ணோட்டத்தில் பார்த்தாலும். செத்த பொண்ணுக்கு ஜாதகம் பார்ப்பது ஏன் என்று தமிழில் சொல்வது போல், ஒரு புதிய முயற்சி நடந்திருக்கிறது, அது நல்லபடி நடை பெறவேண்டும் என்ற து ஆ வும் தொலை நோக்கு பார்வையும் positive thinking என்ற நேர்மறையான அணுகுதலும் இல்லாமல் இந்த தலையங்கம் எழுதப்பட்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது.

மனம் திறந்து பேசுவோம்.. மனதில் பட்டதை எல்லாம் பேச வேண்டாம். சிலர் புரிந்து கொள்வார்கள், சிலர் பிரிந்து செல்வார்கள். நாம் நெறியூட்டக்கூடியவர்களாக, அறிவூட்டக் கூடியவர்களாக இருக்க வேண்டுமே தவிர வெறியூட்டக் கூடியவர்களாக இருக்க கூடாது.

அல்லாஹ் மிக தெள்வாக அவன் திருமறையில் சொல்கிறான். உங்கள் உள்ளங்களை இணைப்பவன் அவனே. இந்த உலகில் உள்ள எல்லாவற்றையும் செலவும் செய்தாலும் அவர்கள் உள்ளங்களை உங்களால் இணைக்க முடியாது என்று சொல்லும் அழகிய திருமறை வசனத்தை பார்த்தேன். கண்மணி நாயகம் அவர்கள் அய்யாமுல் ஜாஹிலிய்யாத் காலத்தவரை தனது உயர்ந்த் நற்குணங்களால் செம்மைபடுத்தி, மேன்மைபடுத்தி தூய இஸ்லாத்தில் இணைய செய்தார்கள். ஆனாலும் அவர்களை உயிருக்குயிராய் நேசித்த, அவர்களுக்கு உற்ற துணையாக இருந்த அப்துல் முத்தலிப் அவர்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை என்று ஹதீதுகளில் படித்திருக்கிறேன்.

உங்கள் தலையங்கத்தின் சாராம்சம் கடைசி வரிகள் என்னை வேதனையில் ஆழ்த்தியது. ஜூலியஸ் சீசர் கதையிலே கேட்பது போல் நீயுமா புரூட்டஸ், YOU TOO BRUTUS ? நம்ப முடியவில்லை.. இப்படியே போனால் நாம் எதிர் மறையாக சிந்திக்க ஆரம்பித்தால் சாந்தியும் சமாதானமும் நமதூரில் எட்டாக் கனியாகவே இருக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக.

Administrator: Comment edited


posted by: mackie noohuthambi (kayalpatnam) on 01 March 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25895

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...சற்றே விலகி இரும் பிள்ளாய்...

பிரச்சினையே ஒரு தனி ஆளிடமிருந்துதான் தொடங்குகின்றது.

நகராட்சி தொடர்பான நிகழ்வுகள் காட்சிகளின் பின்னணியில் உள்ள அந்த தனி ஆளைப் பற்றி சமாதான முயற்சியில் ஈடுபடும் பெரியவர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றாகவே தெரியும்.

மறைந்து இயக்கும் அந்த கரத்தின் தவறினை சுட்டிக்காட்ட சமாதான குழுவினர் ஏன் தயங்குகின்றார்கள் என தெரியவில்லை.

மரியாதைக்குரிய சமாதான குழு பெரியவர்களே!! உங்களின் நோக்கம் நல்லது. ஆனால் நல்லதை செயல்படுத்த பல தருணங்களில் திடமான நடவடிக்கைகளும் தேவைப்படுகின்றன. உங்களிடம் அந்த திடத்தையும் துணிவையும் ஊர் மக்களாகிய நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

இன்றைய தினம் என்பது நாளைய வரலாறாகும்.

அந்த வரலாற்றின் பக்கங்களில் காயல்பதியானது தனி நபர் ஆதிக்கத்திற்கும் பணத்திற்கும் முன்னால் மண்டியிட்டு விட்டது என்ற அவப்பெயர் இடம் பெற வேண்டாம்


posted by: சாளை பஷீர் (மண்ணடி,சென்னை) on 01 March 2013
IP: 180.*.*.* India | Comment Reference Number: 25906

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...

நகர்மன்ற விவகாரத்தை பொறுத்த மட்டில் பொதுமக்கள் சலிப்புதட்டிபொய் உள்ளனனர். இணையதள செய்திகள் வந்தவுடன் என்னுல்ப்ட பல கருத்தாளர்கள் தங்கள் மன இச்சைப்படி தலைவரையோ உறுப்பினர்களையோ வசை பாடுவதும் பிறகு மறந்துவிடுவதுவும் சகஜமாகிவிட்டது. எங்களது ஐந்தாவது வார்டு உருபினராகட்டும் மற்ற பெரும்பான்மை உருபினராகட்டும் தலைவீயாகட்டும் தங்களது வார்டுக்கும் ஊருக்கும் முடிந்த மட்டில் பணியாற்றுகிறார்கள் என்று எண்ணுகிறேன். அதனால்தான் அந்தந்த வார்டு மக்களிடம் அதிருப்தி இல்லை

இரண்டாவது ஊழலை ஒழிக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் இந்தியாவை பொருத்தமட்டில் ஊழல் ஒரு ஆயிரங்காலத்து கலை பயிர். உலக சரித்திரத்தில் அன்ன ஹசாரே போன்று வேறு யாரும் போராடியதாக சிறு வயது முதல் பத்திரிக்கை படிக்கும் எனக்கு நினைவில்லை. அப்படிப்பட்ட அன்ன ஹசாறேக்கே பின்னடைவு ஏற்பட்டதை அறிவோம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் காயல்பட்டணம் நகராட்சியில் உடனே முழுமையாக ஊழலை ஒழிப்போம் என்று கூறுவது பகல் கனவு. அதற்க்கு நிறைய பொறுமையும் தியாகமும் உழைப்பும் தேவை. அதை நகர்மன்ற உறுப்பினர்கள் மேல் ஆயுதமாக பயன்படுத்துவது நம் தலையில் நாமே மண்ணை வாரிவிட்டதற்கு சமமாகிவிடும்

சற்று நேரம் முன்புதான் அதிகம் படிக்காத ஆனால் அனுபவசாலியான எனது தாயாரிடம் பெசிஒண்டு பேசிக்கொண்டு இருந்தேன். அவர்கள் சொன்னார்கள். குப்பை வண்டி வாரம் ஒரு முறை இன்னும் மோசமாக பத்து நாட்களுக்கு ஒருமுறை வருகிறது. தெரு விளக்குகள் எரியவில்லை. இதுதான் இன்றைய கயலின் நிலை. இது எங்கேய் பொய் விடும் என்றால் அல்லா காப்பாற்றவேண்டும் கொலை திருட்டு ஆள்கொல்லி வியாதிகள்....

இந்த பிரச்சினை பொருத்தமட்டில் ஈகோதான் முக்கிய காரணி என்று நான் கருதுகிறேன். அருமை நாயகம் (ஸல்) நவில்கிறார்கள் ஈகோ எனும் தற்பெருமை கொனடவர்கள் சேரும் இடம் நரக நெருப்புதான் என்று, எனதருமை உறுபினர்களே தலைவி அவர்களே நீங்கள் இணைத்துக்கொண்ட இணைய போவதாக உள்ள திராவிட கட்சிளின் கட்சிகளின் முன்னோடி அறினர் அண்ணா கூறினார் பதவி வந்தால் பணிவுவரவேண்டும் என்று. மேலும் தன்னை சாமானியன் என்று அழைப்பதை விரும்பினார். நபிகளாரின் அறினர் அண்ணாவின் போதனைகளை ஏற்று ஈகோவை தூர எறிந்து மனம்விட்டு பேசி இந்த ஊரின் தலையாய பிரச்சினைகளுக்கு தீர்வு காணுங்கள்.

இரண்டாவது தங்களது உரிமைகளை அதிகார வரம்புகளை பற்றிய போதுமான புரிந்துணர்வு இல்லாமையும் காரணி யாக உள்ளது.நகர்மன்ற தலைவர் உறுபினர்களின் அதிகார வரம்புகள் உரிமைகள் ஒரு தீர்மானம் நிறைவேற்ற சட்ட வழிகாட்டுதல்கள் ஆகியவற்றை குறித்து நல்ல புரிந்துணர்வு கொள்ள வேண்டும். இந்த சட்ட விஷய தகவல்களை அளிக்க நமதூர் வளகரினர்கள் கயால்பட்டன் டாட் காம் ஆகியவை உதவி செய்யலாம்


posted by: nizam (india) on 01 March 2013
IP: 101.*.*.* India | Comment Reference Number: 25911

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Objectionable, unjust, untenable, improbable. indefensible, illegal, impracticable, unrealistic and undemocratic.

First of all we should thank Both Mr. Wavoo Samsuddeen and Mr. Abubacker for their noble effort.

A group of people (Rich, famous and an infamous) selected some among themselves as the members of the peace committee without the approval from the general public.

1) சமாதானக் குழுவில் இடம் பெற்றவர்களில் ஒருவருடைய பெயரைப் பார்க்கும் பொது பிள்ளையை கிள்ளிவிடும் சுபாவமுள்ளவரிடம் தொட்டிலை ஆட்டச் சொல்லியிருப்பது தெளிவாகிறது.

2) ஐக்கிய பேரவையுடை செயல்பாடும் ஒரு காரணம் என்றரிந்த பின்னரும் அப்பேரவையைச் சார்ந்தவர்களை அந்த சமாதானக் குழுவில் தொடர்ந்து இடம்பெறச் செய்வது unreasonable therefore objectionable.

பிரச்சனைகளுக்கு (கண்டறியப்பட்டதாகச் சொல்லப்பட்ட) காரணங்கள் (4) சரியா, தவறா என்ற விவாதத்திற்குச் சொல்லும் முன், சமாதானக் குழு ஏன் 3 காரணங்களுக்கு மட்டும் பரிந்துரைகள் செய்துள்ளது?. 4 வது காரணத்திற்கு பரிந்துரை செய்யாதது ஏன் என்பதை அறிந்தாக வேண்டும்.

மறந்துவிட்டார்களா? தயங்குகிறார்களா? அல்லது தவிர்க்கிறார்களா?

As far as the Peace committee's findings are concern,

1) It has failed to identify and name the person responsible for the root cause and conveniently forgot to advice him not to interfere.

2) Media has nothing to do with current impasse. Allegation against media is biased, unjust and untenable. Above all improbable.

3) Indirect accusation(s) against the chairman for some wrong doing is indefensible.

As far as the Peace committee's recommendation(s) are concern,

1) Coercing an elected body to give up some of its power is Illegal. An elected person who relinquishes his/her given rights to unauthorized committee may invites legal action.

2) Media is the fourth pillar of Democracy. Restricting media from doing its job is undemocratic..

3) Recommendation(s) given to Aikkiya Peravai is a water downed version of the recommendations made 3 years ago by some 6 well known organizations backed by the educated elites of our town.

Present recommendation to peravai is nothing but an appeasement.

In nutshell
The peace committee itself is objectionable.
Its findings are biased, untrue and improbable.
Its recommendations are illegal, impracticable, unrealistic and undemocratic.

Criticizing without offering solution is not a right thing to do.

My finding is that, I have been observing the events unfolding right from the beginning. The problem started during the vice-chairman election. Elected person was blessed and backed by a Chennai based businessman. He become his viceroy and executing the businessman's commands. This businessman started 'horse trade". Now he has seventeen horses in his stable. Since his stable jockey disappeared from the scene, he become the jockey himself. he is boastful of his stable. Some of his steeds are doing all the dirty works with the co-operation from their kind.

Only way to solve the problem is to tell him to mind his business and warn him not to meddle with other people's business.


posted by: Abdul Wahid S. (Kayalpatnam) on 02 March 2013
IP: 123.*.*.* India | Comment Reference Number: 25927

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. தலை இருக்கு..... அதில் அங்கத்தை (மூளையை) காணவில்லை...!!!

அஸ்ஸலாமு அலைக்கும். அன்பு காயல் கண்மணிகளே...... நல்லமாட்டுக்கு ஒரு சூடு என்பார்கள். அது மாட்டுக்கு. நாம் மனிதர்கள் அதிலும் சத்திய மார்க்க விசுவாசி தனி நபர் ஆதிக்கம் என்று சொல்லி..... சைத்தானின் கொள்கையை முருகபிடித்து கொண்டு இருக்கிறது இந்த தலையங்கம்.

இறைவன் சைத்தானை தீயினால் படைத்தான். ஆதம் நபியை மண்ணினால் படைத்து..... மண்ணுக்கு தீயை சுஜூது செய்ய சொன்ன போது..... உண்டானது அகங்காரம், ஆணவம், கருவம், காழ்ப்புணர்ச்சி..... அந்த காழ்ப்புணர்ச்சியை இறைவனிடம் சைத்தான் கக்கிய போது.... அகங்கரிக்கும் சைத்தானை தூக்கி எறிந்தான் எல்லாம் வல்ல கருணையாளன்.

"இது அல்லாஹு சொல்லும் வரலாற்று பாடம்". ஒற்றுமைக்கு வழி விடுவோம்..... ஓங்கி வளரட்டும் காயலின் பெருமை. வஸ்ஸலாம்.


posted by: s.s.md meerasahib (TVM) on 02 March 2013
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25929

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. தடுமாறாத தலையங்கம்!

தவிர்க்க முடியாத,தடுமாற்றம் இல்லாத தலையங்கம். நீதித் தராசு சாயாமல் இருக்க,ஒரு பொறுப்புள்ள ஊடகம் செய்ய வேண்டிய கடமையை,சரியான நேரத்தில் செய்துள்ள, உங்களுக்கு எனது பாராட்டுக்கள்!

ஆரம்பம் முதலே ஒரு சிலர், இந்தத் தளம் ஐக்கியப் பேரவைக்கும், ஊர் ஒற்றுமைக்கும் எதிரானது என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்ற போதெல்லாம்,அந்த மாய வலையில் சிக்காமல், உண்மையை,நேர்மையை நெஞ்சிலேந்தும் ஒரு பெருங்கூட்டம் இந்தத் தளத்திற்கு அடித்தளமாய் அமைந்திருப்பது அல்லாஹ்வின் மாபெரும் கிருபையே!

தனி மனிதர்களுக்கு ஊரின் மானத்தை அடகு வைப்பதும்,உண்மையை உரக்கச் சொல்லும் ஊடகங்களின் மீது முகவரி அற்றவர்களை வைத்து புழுதி வாரித் தூற்றுவதும், ஊழல் பெருச்சாளிகளுக்கு லாவண்யம் பாடுவதும்தான் ஊர் ஒற்றுமையின் இலக்கணம் என்றால் என்னைப் போன்றவர்கள் இலக்கணப் பிழையாக இருக்கவே ஆசைப் படுவார்கள்.

நிறைவாக,விளைவுகள் என்னவாகவிருப்பினும்,தற்போதைய தேவை சமாதானமே என்ற நல்லெண்ணத்துடன் களம் இறங்கியுள்ள நல்லெண்ணம் கொண்ட பெரியவர்களுக்கும், சரியோ, தவறோ, இந்தத் தளத்தின் கருத்துக்களை, இங்கேயே விமர்சிக்கும் நேர்மையும்,நெஞ்சுரமும் கொண்ட நண்பர்களுக்கும், எவ்வளவோ இழிவு படுத்தப்பட்ட போதும் இந்த ஊரின் நன்மைக்காக ,எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டு பணியாற்றும் தலைவி அவர்களுக்கும், எண்ணிக்கையால் சிறிதான போதும் எண்ணத்தால் உயர்ந்து நிற்கும் அல்லாஹ்விற்குப் பயந்து பணியாற்றும் கவுன்சிலர்களுக்கும், தனி மனித விமர்சனங்களுக்கு அஞ்சாமல் ஊடக தர்மத்தை முன்னெடுத்துச் செல்லும் காயல்பட்டணம்.காமின் சமூக ஊழியர்களுக்கும் எனது மற்றும் எனது கருத்துடன் உடன்படும் நண்பர்களின் பாராட்டுதலையும்,நன்றியையும் பதிவு செய்கிறேன்.


posted by: kavimagan m.s.abdul kader (qatar) on 02 March 2013
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 25942

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. நல்ல சூழ்நிலையை நோக்கி,,,,,,,,,,,

நல்ல சூழ்நிலை எட்டிவரும் இந்த தருணத்தில் இந்த தலையங்கம் தவிர்க்கப்பட்டு இருக்கவேண்டும்.இது சமாதான குழு மற்றும் மக்கள் முயற்சி செய்யும் நகராட்சி நல்லிணக்க துக்கு பலவீனத்தை ஏற்படுத்தும்.

சமாதான குழுவின் பரிந்துரை எந்த மறைமுக மின்றி வெளி படையாக ஜலாலியா நிகாஹ் மஜ்லிஸில் வைத்து சமாதான குழுவால் சமர்பிக்க பட்டுள்ளது. இந்த பரிந்துரையை மரியாதைக்குரிய தலைவி அவர்களும்,துணைத்தலைவர் மற்றும் அணைத்து உறுப்பினர்களும் ஏகமனதாக மிகுந்த சந்தோசத்துடன் ஏற்றுகொண்டார்கள்.இன்னும் தலைவி அவர்களே மற்ற உறுப்பினர்களுக்கும் தங்கள் கையால் வழங்கினார்கள்.

எனவே நகராட்சியில் நல்ல இணக்கம் ஏற்பட வேண்டும் இரு தரப்பினரும் விரும்புவது இதன் மூலம் தெளிவாகிறது. இல்லையென்றால் தலைவி மற்றும் உறுப்பினர்கள் சமாதான குழுவினரிடம் இதில் உள்ள பரிந்துரைகள் சரியில்லை என மறுப்பு அல்லவா?தெர்வித்து இருக்கவேண்டும்.

இப்படி ஒற்றுமை மேலோங்கி வரும் இந்த தருணத்தில் பழைய விசயங்களை எடுத்து காட்டும் இந்த தலையங்கம் மீண்டும் தலைவலியை அல்லவா? ஏற்படுத்தும்.

சமாதான குழுவின் பரிந்துரையில் தனி நபர் ஆதிக்கம், மக்காளால் தேர்ந்தெடுக்க பட்ட மன்றத்தினரை சமாதான குழு கட்டு படுத்துதல் போன்ற விசயங்களில் தவறு இருந்தால் அல்லது முரண்பாடு இருந்தால் இந்த சமாதான குழுவினரிடம் இதை பற்றி நேரடியாக விளக்கம் கேட்டு இருக்கலாமே?அதை செய்யாமல் இப்படி தலையங்கம் எழுவது தீர்வாகுமா?

எப்படியாவது தலைவி மற்றும் உறுப்பினர்கள் மத்தியில் நல்ல ஒற்றுமை ஏற்படுத்தி நிறைந்த வருவாய் உள்ள நம் நகராட்சியை நல்ல முறையில் செயல்படுத்தி மக்கள் பணியை மற்றும் கருத்தில் கொண்டு சேவை ஆற்றவேண்டும் என்று என்னை போன்ற எண்ணற்ற நடுநிலை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என்றால் அது மிகையில்லை எனலாம்.நல்ல சூழ்நிலை ஏற்பட இறைவனிடம் இறைஞ்சுவோம்.


posted by: NIZAR (KAYALPATNAM) on 02 March 2013
IP: 101.*.*.* India | Comment Reference Number: 25944

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நகராட்சியில் எந்த தனி மனிதன் குறுக்கீடு - அவர் யார்...?

கடந்த நகர்மன்றதிலும் தனி நபர்கள் ஆதிக்கம் - தற்போதைய நகர்மன்றதிலும் தனி நபர்கள் ஆதிக்கம்...! கடந்த நகர்மன்றதிலும் அந்த தனி நபரை மக்களுக்கு அடையாளம் காட்ட அப்போதைய சமாதான குழுவுக்கு வழியில்லை - தற்போதைய நகர்மன்றதிலும் அதே கதி தானா...? அந்த தனி நபரை மக்களுக்கு அடையாளம் காட்ட முன் வாருங்கள்...


posted by: நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) on 02 March 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25949

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...பொது என்று வந்த பிறகு...

சகோதரர் நிஜார் அவர்களுக்கு !

தனி ஆள் ஆதிக்கம் தொடர்பாக சமாதானக்குழுவினர் முன் அழுத்தமாக பதிவு செய்தாகி விட்டது . அவர்களும் தனது ஆவணத்தை மக்கள் மன்றத்தில் முன் வைத்து விட்டார்கள் .

ஆவணம் பகிரங்கமான பின் அதன் மீதான ஒரு ஆரோக்கியமான விவாதத்தை மக்கள் நடுவில் தலையங்கம் வழியாக துவங்குவதில் என்ன தவறு இருக்க முடியும் ?

நகர் மன்றம் மக்களுக்கு பொதுவானது. அது தொடர்பான விவாதமும் மக்கள் மன்றத்தில் நடப்பதுதான் நியாயமானது.


posted by: சாளை பஷீர் (மண்ணடி,சென்னை) on 02 March 2013
IP: 116.*.*.* India | Comment Reference Number: 25950

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...சமதான குழு உடைய அறிக்கை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை

அஸ்ஸலாமு அழைக்கும்

தனிநபர் குறுக்கீடு எண்டு முதலில் அழுத்தம்மாக சொலிவிட்டு அறிக்கை இல் முதல் மூண்டு பேர்க்கு மட்டும் அறிக்கை சமர்ப்பித்து விட்டு, மெயின் ப்ரொப்லெம் மாக மக்களால் கருதபடும் "தனிநபர்" பற்றி அறிக்கை சமர்ப்பிக்க தவறியது ஏன் ? சமதான குழு உடைய அறிக்கை எங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை.

Administrator: Comment edited


posted by: b.a.buhari (chennai) on 04 March 2013
IP: 117.*.*.* India | Comment Reference Number: 25980

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இத்தலையங்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved