| 
 காயல்பட்டினம் மகுதூம் தெருவில் இயங்கி வரும் ரஃப்யாஸ் ரோஸரி மழலையர் பள்ளியில் விளையாட்டு தின  மற்றும் Rafyas Moms & Grand Moms தின நிகழ்ச்சிகள்  அண்மையில் நடைபெற்றன. இது குறித்து அப்பள்ளிக்கூடம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:-
  
மகுதூம் தெருவில் அமைந்துள்ள ரஃப்யாஸ் ரோஸெரி மழலையர் பள்ளியில் குழந்தைகளின் தனித்திறமைகளை ஊக்கப்படுத்தும் நோக்கமாக ஒவ்வொரு வருடமும் IQ-வை வளர்க்கும்  அறிவார்ந்த போட்டிகளும் ஆரோக்கியத்தை வளர்க்கும் விளையாட்டு போட்டிகளும், நடத்தப்பெற்று வருகிறது. 
  
அதே போல் இவ்வருடம் மார்ச் முதல் வாரத்தில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் சின்னச்சிறு மழலைகள் ஆர்வத்துடனும், உற்சாகத்துடனும் பங்கு கொண்டு வெற்றிக்கு முனைந்தும் வெற்றிகளை பெற்றும் மகிழ்ச்சி கொண்டனர். 
  
Rafyas Moms & Grand Moms Day யினையொட்டி ரஃப்யாஸின் தாய்மார்களுக்கும், கம்மாமார்களுக்கும். விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது. மலரும் நினைவுகளுடன் மகிழ்ச்சியாக போட்டிகளில் கலந்து கொண்டு குதூகலத்துடன் விளையாடி வெற்றிகளை பெற்றனர். மூன்று 
தலைமுறையினர் (பேத்தி,உம்மா,கம்மா) கலந்து சிறப்பித்தது மறக்கமுடியாத நிகழ்வாக அமைந்தது. மகள்களுடன் பேரன் பேத்திகள் கைத்தட்டி உற்சாக படுத்தியத்தியதில் கம்மாமார்கள் வயதினை மறந்து விளையாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சி  ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் ஆபிதாஷேக் B.Sc.,B.Ed. ஏற்பாடு செய்திருந்தார். 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
 
  
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
செய்தி திருத்தப்பட்டது @ 24.3.2012/8:15pm  |