Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:33:46 PM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8116
#KOTW8116
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 8, 2012
நகராட்சி சட்டங்கள்: கட்டட அனுமதி 30 நாட்களுக்குள் வழங்கப்படவில்லை என்றால், நகர்மன்ற மனு மூலம் ஒரு மாதத்திற்குள் பெற வழி!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3175 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் நகர்மன்றம் குறித்த சிறப்பு பகுதியில் - பொதுமக்களுக்கு பிரயோசனமான நகராட்சி குறித்த சட்ட வழிமுறைகள் அதற்கான தனிப்பக்கத்தில் விலாவாரியாக விளக்கப்படவுள்ளது. துவக்கமாக கட்டுமான அனுமதிகள் குறித்த வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு நகராட்சியில் புதிதாக கட்டப்படும் கட்டடத்திற்கும், புதுப்பிக்கப்படும் கட்டடத்திற்கும் - நகராட்சியிடம் - கட்டட பணிகளை துவங்குவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். இது போன்ற மனுக்கள் பல மாதங்களாக நிலுவையில் வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழுகின்றன. இது குறித்த சட்ட விதிகள் என்ன கூறுகின்றன?

மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-இன் பகுதிகள் 197, 198, 199 - இவ்விண்ணப்பங்கள் குறித்த வழிமுறைகளை கூறுகின்றன. பார்க்கவும் கீழே.

அவ்வாறு முறையாக சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த முடிவினை செயல் அதிகாரி (இரண்டாம் நிலை நகராட்சியில் ஆணையர்) - 30 நாட்களுக்குள் - எழுத்து மூலம் தெரிவிக்கவேண்டும். இது குறித்த வழிமுறைகள் மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-இன் பகுதி 200, 201 ஆகியவை விளக்குகின்றன. பார்க்கவும் கீழே.

நிராகரிப்பதற்கான காரணங்கள் பிரிவு 203 படி இருக்கவேண்டும்.

குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் எந்த பதிலையும் செயல் அதிகாரி தரவில்லை என்றாலோ, அல்லது நிராகரித்து விட்டாலோ விண்ணப்பதாரர் - நகர்மன்றதிற்கு (Council) மனு வழங்கலாம். நகர்மன்றமானது மனு பெறப்பட்ட ஒரு மாதத்திற்குள் - மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பம் குறித்த தனது முடிவினை - சட்டவிதிகளுக்கு உட்பட்டு - வழங்கவேண்டும். அவ்வாறு தனது (ஏற்பு/மறுப்பு) முடிவை வழங்கவில்லை என்றால் - விண்ணப்பதாரரின் விண்ணப்பம் ஏற்றுகொள்ளப்பட்டதாக கருதப்படும். இது குறித்த வழிமுறைகள் மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-இன் பகுதி 202 -இல் விளக்கப்பட்டுள்ளது. பார்க்கவும் கீழே.

மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920
பிரிவு 197 - கட்டடங்கள் அமைக்க அல்லது புதுப்பிக்க மனு:

(1) குடிசையில்லாத பிற ஒரு கட்டிடத்தை அமைக்க அல்லது புதுப்பிக்க ஒருவர் கருதினால், அவர்

(a) நிலத்தின் மனையிட வரைப்படத்துடன் (Site Plan) சேர்த்து, அந்த மனையிடத்திற்கு ஒப்புதல் பெறுவதற்காக எழுத்துருவிலான விண்ணப்பமொன்றையும்,

(b) தரைப்படம், கட்டட முகப்புத் தோற்றம் மற்றும் அதன் பகுதிகள், கட்டடப் பணிக்கான கட்டுமான அளவுகள் ஆகியவற்றுடன் சேர்ந்து அப்பணியை நிறைவேற்றுவதற்கு அனுமதி பெறுவதற்காக எழுத்துருவிலான விண்ணப்பமொன்றையும் ஆணையருக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

விளக்கம்:
இவ்வுட்பிரிவில் கட்டடம் என்பதில் சுவர் அல்லது யாதொரு உயரம் உடைய வேலி பொதுத் தெருவினை ஒட்டியது உள்ளடங்கும்

(2) 1 ஆம் உட்பிரிவின்படிக் கொடுக்கப்பட்ட ஆவணம் ஒவ்வொன்றும், விதிகளின்படியோ துணைவிதிகளின்படியோ, தேவைப்படக் கூடிய விவரங்களைக் கொண்டிருந்தாலும், தேவைப்படக்கூடிய முறையில் தயாரிக்கப்படுதலும் வேண்டும்.

பிரிவு 198 - மனையை முன்னதாகவே ஏற்பு அளிப்பது அவசியமாதல்:

197 வது பிரிவின்படி மனுச் செய்து கொள்வதன் பேரில் செயல் அதிகாரி மனையை ஏற்பளித்தால் அன்றி மற்றப்படி ஏற்பு அளிக்கும் வரையிலும், ஒரு கட்டடத்தை அமைக்க அல்லது புதுப்பிக்க அனுமதி அளிக்கக்கூடாது.

பிரிவு 199 - அனுமதியின்றி பணி தொடங்கத் தடை:

பணியைச் செய்து முடிப்பதற்காக செயல் அதிகாரி அனுமதி அளித்தாலன்றி, மற்றப்படி அனுமதி அளிக்கிற வரையிலும் ஒரு கட்டடத்தைக் கட்ட அல்லது புதுப்பிக்கத் தொடங்கக் கூடாது.

பிரிவு 200 - செயல் அதிகாரி ஏற்பளிப்பதை அல்லது நிராகரிப்பதை இந்தக்கால அளவுக்குள் தெரிவிக்க வேண்டும் என்பது:

ஒரு மனையை ஏற்பளிக்க 197 வது பிரிவின்படி செய்துக்கொள்ளப்படும் ஒரு மனுவை விதிகள் அல்லது துணை விதிகளின்படி தேவைப்பட்டுள்ள ஒரு தகவல் அல்லது மேற்கொண்டு தகவலையாவது பெற்றுக்கொண்ட பிறகு முப்பது நாட்களுக்குள்ளாக செயல் அதிகாரி எழுத்து மூலமான ஆணையின் மூலம் அந்த மனையை ஏற்பளிக்க வேண்டும். அல்லது 203 வது பிரிவில் கண்டுள்ள காரணங்களில் ஏதேனும் ஒன்று அல்லது பலவற்றின் பேரில் அந்த மனையை ஏற்பளிக்காமல் நிராகரிக்க வேண்டும்.

பிரிவு 201 - பணியை நிறைவேற்றுவதற்கு செயல் அதிகாரி இந்த கால அளவுக்குள் அனுமதி கொடுக்க வேண்டும், அல்லது மறுக்க வேண்டும் என்பது:

ஒரு பணியை நிறைவேற்ற அனுமதி வேண்டும் என்று 197 வது பிரிவின்படி செய்துகொள்ளப்படும் ஒரு மனுவையாவது விதிகள் அல்லது துணை விதிகளின்படி வேண்டியுள்ள ஒரு தகவல் அல்லது ஆவணங்கள் அல்லது மேற்கொண்டு தகவல் அல்லது ஆவணங்களையாவது பெற்றுக்கொண்ட பிறகு முப்பது நாட்களுக்குள் செயல் அதிகாரி எழுத்து மூலமான ஆணை மூலம் மேற்படி அனுமதியைக் கொடுக்க வேண்டும் அல்லது 203 வது பிரிவில் கண்ட காரணங்களில் ஒன்று அல்லது பலவற்றின் பேரில் அதைக் கொடுக்காமல் நிராகரிக்க வேண்டும்.

ஆனால், 200 வது பிரிவின்படி மனை ஏற்பளிக்கப்படும் வரையிற் மேற்படி முப்பது நாள் கால அளவைக் கணக்கிடத் தொடங்கக் கூடாது.

பிரிவு 202 - ஏற்பளிப்புச் செய்ய அல்லது அனுமதி அளிக்க அல்லது மறுக்க செயல் அதிகாரி தாமதித்தால் மன்றத்திற்கு தெரிவிப்பது:

(1) நேர்விற்கேற்ப, 200 வது பிரிவில் அல்லது 201 வது பிரிவில் நிச்சயிக்கப்பட்ட கால அளவுக்குள், செயல் அதிகாரி நேர்வுக்கேற்றப்படி கட்டடத்துக்கான மனையை ஏற்பளிக்காவிட்டாலும், நிராகரிக்காவிட்டாலும், ஒரு பணியை நிறைவேற்ற அனுமதி அளிக்காவிட்டாலும், அளிப்பதில்லை என்று நிராகரிக்காவிட்டாலும், மனுதாரர் எழுதிக் கேட்டுக்கொள்வதன் பேரில், மன்றம் அத்தகைய ஏற்பளிப்பு அல்லது அனுமதியை அளிக்க வேண்டுமா அல்லது வேண்டாமா என்பதை எழுத்து மூலமான ஆணையின் மூலம் முடிவு செய்ய கடமைப்பட்டதாகும்.

(2) மேற்சொன்னப்படி எழுத்து மூலமாகக் கேட்டுக்கொண்ட மனு வந்து சேர்ந்தது முதல் ஒரு திங்கட் கால் அளவுக்குள் மன்றம் மேற்கண்ட ஏற்பளிப்பு அல்லது அனுமதியை அளிக்க வேண்டும் அல்லது அளிக்கக்கூடாது என முடிவு செய்யாவிடின் அத்தகைய ஏற்பளிப்பு அல்லது அனுமதி அளிக்கப்பட்டதாக கருதப்படும். அதன் பேரில் மனுதாரர் பணியை நிறைவேற்றத் தொடங்கலாம். ஆனால் இந்த சட்டத்தின் விதிமுறைகளில் எவற்றையாகிலும், அல்லது எந்த சட்டத்தின் கீழ்ச் செய்யப்படும் எவையேனும் விதிகள் அல்லது துணை விதிகளை மீறி அவர் அந்தப் பணியை நிறைவேற்றத் தொடங்கக்கூடாது.

பிரிவு 203 - கட்டடத்திற்கான மனையை ஏற்பளிப்பதை மறுப்பதற்கான அல்லது கட்டடத்தை அமைப்பதற்கோ புதுப்பிப்பதற்கோ அனுமதி கொடுப்பதை மறுப்பதற்கான காரணங்கள்:

ஒரு கட்டடத்தை அமைப்பதற்காவது அல்லது புதுபிப்பதற்காவது ஒரு மனையை ஏற்பளிப்பதில்லை என்றாவது ஒரு கட்டடம் அமைக்க அல்லது புதுப்பிக்க அனுமதி அளிப்பதில்லை என்றாவது கீழ்க்கண்ட காரணங்களின் பேரில் மட்டுமே மறுக்க இயலும். அவையாவன:

(1) கட்டடப் பணியாவது கட்டடப் பணிக்காக மனையைப் பயன்படுத்துவதாவது அல்லது மனையின் வரைபடம், நிலத்தின் வரைபடம், மட்டங்கள் பிரிவுகள் அல்லது விவரக் குறிப்புகளில் கண்டுள்ள விவரங்களில், ஏதாவதொரு சட்டத்தில் குறிப்பிடப்பட்ட எந்த விதிமுறைகளிலும் ஏதேனும் ஒரு சட்டத்தின் படி செய்யப்படும் குறிப்பிட்ட எந்த ஒரு ஆணை, விதி, உறுதிமொழி அல்லது துணை விதிக்கு எதிராக இருக்கும் என்பது;

(2) அத்தகைய அனுமதிக்காக செய்து கொள்ளப்படும் மனுவில் விதிகளின்படியாவது அல்லது துணை விதிகளின் படியாவது வேண்டியுள்ள விவரங்கள் அடங்கி இருக்கவில்லை அல்லது வேண்டியுள்ள விதத்தில் அது தயாரிக்கப்படவில்லை என்பது;

(3) 197 வது பிரிவில் சொல்லியுள்ள ஆவணங்களில் எதிலாவது விதிகளில் அல்லது துணை விதிகளில் சொல்லியுள்ளபடி கையெழுத்திடப்படவில்லை என்பது;

(4) விதிகள் அல்லது துணை விதிகளின்படி செயல் அதிகாரியால் கேட்கப்படும் ஒரு தகவல் அல்லது ஆவங்கள் முறைப்படி எடுக்கப்படவில்லை என்பது;

(5) தெருக்கள் அல்லது சாலைகள் 175 வது பிரிவில் சொல்லியுள்ளபடி அமைக்கப்படவில்லை என்பது;

(6) கட்டத் திட்டமிடப்பட்டிருந்த கட்டடம் அரசு அல்லது நகராட்சிக்குச் சொந்தமான நிலத்தின் மேல் ஆக்கிரமிப்பாகும் என்பது;

ஒரு கட்டடத்தைக் கட்டுவதற்கான மனைக்கு ஏற்பளிக்க அல்லது ஒரு கட்டடத்தைக் கட்ட அல்லது புதுப்பிக்க அனுமதியளிக்க செயல் அதிகாரி அல்லது மன்றம் மறுக்கும்போதெல்லாம் அவ்வாறு மறுப்பதற்கான காரணங்களை ஆணை மூலம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நகராட்சி சட்டங்கள்: கட்டட...
posted by A.Lukman (kayalpatnam) [08 March 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 17559

இது போன்ற மக்கள் நலப்பணிகள் தொடர வாழ்த்துக்கள்.

A .லுக்மான்
கோமான் தெரு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:நகராட்சி சட்டங்கள்: கட்டட...
posted by Jahir (Chennai) [08 March 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17561

ஷாலிஹ் பாய் இத இததான் செய்யணும். இன்னும் கொஞ்சம் விவரம் தேவை இடம் வாங்குவதில் இருந்து துவங்கினால் இனியும் நன்று


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நகராட்சி சட்டங்கள்: கட்டட...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [08 March 2012]
IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17562

அஸ்ஸலாமு அலைக்கும்.

நமது ஊர் நகராட்சி சட்டங்கள் & கட்டட அனுமதி 30 நாட்களுக்குள் வழங்கப்படவில்லை என்றால், நகர்மன்ற மனு மூலம் ஒரு மாதத்திற்குள் பெற வழி! என்கிற சட்ட முறைகள் இருப்பதை தெரிய படுத்தியதற்கு ரொம்ப நன்றி .

இது போன்று நல்ல செயல்பாடுக நமது ஊர் நகராட்சியில் சிறப்பாக நடை பெற எங்கள் நல் வாழ்த்துகள் வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சட்டபடி எல்லோரும் நடப்பது இல்லையே... அதான் காரணம்..!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (KAYALPATNAM ) [08 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17564

படிக்க என்னவோ நல்லா தான் இருக்கு...! அரசு விதிமுறைகளை மக்களுக்கு தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி..! ஆனால் கட்டட வரைபடத்தில் காட்டியது போல் யாரு வீடு கட்டுகிறார்கள்...?

வரைபடத்தில் காட்டுவது ஓன்று...! கட்டடம் கட்டுவது வேறு ஓன்று...! இது தானே நடக்கிறது... அதனால் தான் நகராட்சியில் கட்டட அனுமதிக்கு மேஜைக்கு கீழ் எதிர்பார்ப்பு அதிகமா இருக்கு ..!

சட்டபடி எல்லோரும் நடப்பது இல்லையே... அதான் காரணம்..!

நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நகராட்சி சட்டங்கள்: கட்டட...
posted by MOHIADEEN (KPM) [08 March 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17570

நகராச்சிபட்டி செய்தி வெளி இட்டதற்கு மிக்க நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:நகராட்சி சட்டங்கள்: கட்டட...
posted by fathimas (kayalpatnam) [08 March 2012]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 17572

அஸ்ஸலாமு அலைக்கும்

மிகவும் அற்ப்புதமான பணி மக்களுக்கு தெரியபடுத்தி தெளிவு படுத்தியமைக்கு மிக்க நன்றி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நகராட்சி சட்டங்கள்: கட்டட...
posted by P.S.AABDUL KADER (jeddah) [08 March 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17580

நகராட்சி சட்ட, விதிகள் விதிமுறைகளை நல்ல தெளிவாக உட்கருத்துகூறு தந்து அறியமக்களுக்கு விழிப்புணர்வு எற்படுத்தியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved