Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:40:22 AM
செவ்வாய் | 30 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1734, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு18:27மறைவு11:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8013
#KOTW8013
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 15, 2012
சிவில் சர்விசஸ் நுழைவு தேர்வு - மே 20 அன்று நடைபெறும்! விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3640 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (10) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மத்திய அரசினால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் சிவில் சர்விசஸ் தேர்வுகள் - இவ்வாண்டு மே 20 அன்று துவங்குகின்றன. துவக்கமாக அன்றைய தினம் நுழைவு தேர்வு (Preliminary Examination) நடைபெறும். இத்தேர்வுகள் மூலம் IAS உட்பட 24 அரசு சேவை துறைகளுக்கான அதிகாரிகள் - தேர்வு செய்யப்படவுள்ளனர்.



கடந்த ஆண்டுகளில் இத்தேர்வுகளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டுள்ளனர். தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உட்பட - நாடு முழுவதும் உள்ள 45 நகரங்களில் இத்தேர்வுகள் நடைபெறும்.



இவ்வாண்டுக்கான தேர்வுகள் குறித்த விபரம் இம்மாதம் 4ம் தேதி வெளியிடப்பட்டது. இத்தேர்வுகளில் பங்கேற்க விரும்புவோர் - www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் - மார்ச் 5 நள்ளிரவுக்குள் பதிவு செய்யவேண்டும்.

இத்தேர்வுகளில் கலந்துக்கொள்ள விரும்புவோர் வயது 21 - 30 க்குள் இருக்கவேண்டும். அதாவது - ஆகஸ்ட் 2, 1982 க்கு முன்னரோ, அல்லது ஆகஸ்ட் 1, 1991 க்கு பிறகோ, பிறந்தவராக இருக்க கூடாது.

இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்த பட்டத்தினையும் பெற்றவராக இருக்கலாம். பட்டப்படிப்பின் இறுதி ஆண்டு மாணவராகவும் இருக்கலாம்.

இத்தேர்வுகளில் வெற்றிப்பெற 4 முயற்சிகளுக்கு அனுமதி வழங்கப்படும். SC/ ST / OBC சமுதாய மக்களுக்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.

(A) நுழைவு தேர்வுகள் (Preliminary Exam)



மே 20 அன்று நடைபெறும் நுழைவு தேர்வுகளில் இரண்டு தாள்கள் (OBJECTIVE TYPE) அடங்கும். ஒவ்வொரு தாளுக்கும் 200 மதிப்பெண்கள் வழங்கப்படும். மொத்தம் 400 மதிப்பெண்கள். தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் (NEGATIVE MARKING).

இவ்வாண்டு சுமார் 1037 காலியிடங்கள் உள்ளதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர் நுழைவு தேர்வினை எழுதினாலும் - மொத்த காலியிடங்களில் 12 - 13 மடங்கு (சுமார் 12,000 - 13,000 பேர்) மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டு, அடுத்தக்கட்ட முக்கிய தேர்வுகளுக்கு (Main Examination) அழைக்கப்படுவர். முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியாகும்.

(B) முக்கிய தேர்வுகள் (Main Exam)



முக்கிய தேர்வுகள் இவ்வாண்டு அக்டோபர் 5 துவங்கும். அவை 21 நாட்கள் நீடிக்கும். இதற்கான விண்ணப்பம் - நுழைவு தேர்வுகள் முடிவுக்கு பிறகே பெறப்படும். முக்கிய தேர்வுகளில் - 9 தாள்களுக்கான பரீட்சை நடத்தப்படும். அவை -

==> மொழிப்பாடம் (300 மதிப்பெண்கள்),
==> ஆங்கிலம் (300 மதிப்பெண்கள்),
==> கட்டுரை (200 மதிப்பெண்கள்),
==> பொது பாடங்கள் (General Studies) - 2 தாள்கள்
   (2 x 300 மதிப்பெண்கள் ) மற்றும்
==> மாணவர் தேர்வு செய்யும் இரண்டு பாடங்களில் -
   தலா இரண்டு தாள்கள் (4 x 300 மதிப்பெண்கள்).





மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலம் தாள்களில் மதிப்பெண்கள் - தரவரிசை தயாரிக்கப்படும்போது கணக்கில் எடுக்கப்படாது. மீதியுள்ள 2000 மதிப்பெண்களில் மாணவர்கள் எடுத்த மதிப்பெண்கள் - அடிப்படையிலேயே - இத்தேர்வுகளின் மூன்றாம் கட்டமான நேர்காணலுக்கு (INTERVIEW) மாணவர்கள் அழைக்கப்படுவர்.

முக்கிய தேர்வு முடிவுகள் பொதுவாக மார்ச் மாதம் வெளியிடப்படும். 12,000 - 13,000 பேர் முக்கிய தேர்வுகள் எழுதினாலும், அவ்வாண்டின் காலியிடங்களில் இரு மடங்கு மாணவர்களே நேர்காணலுக்கு (INTERVIEW) அழைக்கப்படுவர் (சுமார் 2000 பேர்). நேர்காணல்கள் - ஏப்ரல் / மே மாதங்களில் நடைபெறும். நேர்காணலுக்கு 300 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

முக்கிய தேர்வுகளில் உள்ள 2000 மதிப்பெண்களுடன், நேர்காணல் மதிப்பெண்கள் 300 ம் கூட்டப்பட்டு அதன் அடிப்படையிலேயே இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும். இறுதிமுடிவுகள் - பொதுவாக அடுத்த நுழைவு தேர்வுகள் துவங்குவதற்கு முன்னர் வெளியாகும் (மே / ஜூன் மாதம்).

இத்தேர்வுகள் குறித்த முழு விபரங்கள் காண இங்கு அழுத்தவும்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:சிவில் சர்விசஸ் நுழைவு தே...
posted by Mohamed Ali (Kuwait) [15 February 2012]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 16939

நமதூர் மக்கள் இந்த துறைகளில் ஆர்வம் காட்டுவது ரெம்ப கம்மி தான். நாம் எல்லாம் Engg. மற்றும் doctor படிபுகளையே விரும்புகிறோம் இல்லையன்றால் எதாவது ஒரு ஆர்ட்ஸ் அல்லது காமர்ஸ் தான் படிக்கிறோம்.

நமதூரில் உள்ள வசதி படைத்த மக்கள் தங்கள் பிள்ளைகளை இப்படிப்பட்ட படிப்பை தான் படிக்க வைக்கிறார்கள். இந்திய சிவில் செர்விஸ் பணிகளுக்கு ஆர்வம் காட்டுவது இல்லை என்று தான் நான் கருதுகிறேன். அது போக கல்விக்காக உதவி செய்யும் நமதூரில் உள்ள நிர்வனங்களும், நற்பணி மன்றகளும் மற்றும் வெளி நாடுகளில் உள்ள காயல் நிர்வனங்களும், நற்பணி மன்றகளும் இந்த மாத்ரி படிப்புக்கு தான் உதவி செய்கிறது அல்லாமல் சிவில் செர்விஸ் பணிகளுக்கு ஆர்வம் காட்டுவது இல்லை என்று தான் நான் கருதுகிறேன். இல்லை யன்றால் நாங்கள் உதவி செய்ய தயாராக உள்ளோம் ஆனால் யாரும் இந்த படிப்புக்காக போவதும் இல்லை உதவி கேட்பதும் இல்லை என்று சாதரணமாக சொல்லிவிடுவார்கள்.

ஆனால் நல்ல மாணவர்களை தயார் படுத்துவதும் இல்லை அதற்காக முயற்சி எடுப்பதும் இல்லை என்று தான் நான் கருதுகிறேன்.

மாணவர்கள் 9 , 10 படிக்கும்போதே அவர்களில் நல்ல திறமையான மாணவர்களை தேர்ந்து எடுத்து அவர்களுக்கு இதற்காக பயிற்சி அளித்து கல்விக்காக அனைத்து உதவிகளையும் செய்து இந்தத்துறையில் நம் மக்களை கொண்டு வர யார் தயாராக உள்ளார்?

நாம் எடுத்து சொன்னா காது கொடுத்து கேட்பவர்கள் யாரும் இல்லை. அவர்கள் செய்து வரும் பணியை தான் பெரியதாக கறுதுகிறாக்கள்.

முயற்சி எடுப்போம் வெற்றி பெறுவோம். அல்லாஹ் அருள் புரிவான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:சிவில் சர்விசஸ் நுழைவு தே...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [15 February 2012]
IP: 121.*.*.* China | Comment Reference Number: 16943

சென்ற ஆண்டு ஜூலை மாதம் , ஜலாலியா இல் ஒரு நிகழ்ச்சி நடந்தது . சிவில் செர்வீஸ் தேர்வுக்கு எப்படி தயார் ஆகுவது , யாரை அணுகுவது , என்றெல்லாம் சொல்லி தந்தார்கள் . நல்ல நிகழ்ச்சி . பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களின் IAS , IPS கனவை வெளிப்படுத்தினார்கள் . ஆனால் அதன் பிறகு அதுபற்றிய நிகழ்ச்சிகளோ , செய்திகளோ இல்லை . காரணம் , நாமெல்லாம் doctor , engineer கனவில்தான் இருக்கிறோம் . நமதூரில் உள்ள நலமன்றங்களும் பல்வேறு பரிசுகளை அறிவித்து இதுபோன்ற கனவுகளைத்தான் மாணவர்களுக்கு ஊட்டுகின்றனர் .

கல்வி ஆர்வலர்கள் , இனிமேலாவது , இதுவிசயமாக , சம்பத்தப்பட்டவர்களை அணுகி , இதுபோன்ற நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடத்தி , நமதூர் மாணவர்களையும் அரசின் உயர் பதவிகளுக்கு தெரிவுசெய்ய முயலவேண்டும் .

மாணவர்களே ! இந்த செய்தியை நீங்கள் பார்க்கும்போது , doctor , engineer என்ற உங்கள் கனவுக்கு அப்பாற்பட்டு , பலவிதமான படிப்புகள் , அந்தஸ்துள்ள உயர்பதவிகள் நிறைய உள்ளதை நீங்கள் அறிய முடியும் . நீங்கள் விரும்பும் படிப்பு , பதவிகள் ..... சரியான நபரை அணுகி ஆலோசனை கேளுங்கள் . நிச்சயம் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.

Vilack SMA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:சிவில் சர்விசஸ் நுழைவு தே...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [15 February 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16950

அன்பு சகோதரர்களே..

அனைத்து காயல் நல மன்றங்களும் IAS/IPS படிப்புக்கு உதவ ரெடியாக தான் இருக்கின்றார்கள். ஏன் நம் ஊரில் உள்ள தனிநபர்களும் இவர்களுக்கு உதவ ரெடி ஆக உள்ளார்கள், உதவியும் செய்து உள்ளார்கள். குறிப்பாக சகோ. ராவன்னா அபுல் ஹசன் ஹாஜி அவர்களும் பல வருடங்களாகவே அறிவித்து வருகிறாகள்.

அவர்கள் இரண்டு நபர்களுக்கும் உதவி செய்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் IAS/IPS ஆனார்களா, படிப்பை தொடர்ந்தார்களா தெரியவில்லை.

எந்த மன்றமும் இந்த படிப்புக்கு மட்டும் தான் உதவி செய்வோம் என்று கூறவில்லை. IAS/IPS படிப்புக்கு ரெடி என்று கூறினால் போதும், அனைத்து மன்றங்களும் இரத்தின கம்பளம் விரித்து நான் நீ என்று போட்டிப்போட்டு உதவ தயாராக இருக்கின்றார்கள்.

மேலும் நம் மக்களிடம் அதிக விழிப்புணர்வு இல்லாததும் ஒரு காரணம் தான்.

நானும் ஊரில் முதல் IPS ஆகனும் என்று பிரிலிமினரி, மெயின் இரண்டும் பாஸ் ஆகி, வீட்டில் கடுமையான எதிர்ப்பின் காரணமாக (கோட்டான் வேலை என்று) தொடராமல் போகிவிட்டது. ஒரே ஆறுதல் ஊரில் முதல் MCA பட்டதாரி என்பது மட்டும் தான்.

நானும் என் மகனிடம் கூறிக்கொண்டே வருகிறேன், நீ IAS/IPS ஆகனும் என்று, நீங்களும் துஆ செய்யுங்களேன், நன்மையாக இருக்கும் பட்சத்தில்,இன்ஷா அல்லாஹ்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:சிவில் சர்விசஸ் நுழைவு தே...
posted by Mohamed Ali (Kuwait) [16 February 2012]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 16964

ஆம் எல்லா நற்பணி மன்றகளும் சிவப்பு கம்பளம் விரித்து இதை வரவேற்கிறது, படிக்க வைக்க தயாராக உள்ளது இப்படி சொல்லி விட்டு அமைதியா இருந்து விடுவார்கள். அதற்கான முயற்சிகள் யார் எடுப்பா? ஆல் இல்லை

படிக்கும் மாணவர்களை தேர்தெடுத்து அவர்களுக்கு இதனை பற்றி எடுத்து சொல்லி அவர்களுக்கு பயிற்சி அளித்து இந்த துறையில் ஆர்வம் காட்ட வைப்பது யார் ?

நமதூர் நற்பணி மன்றங்கள் இதை செய்கிறதா யன்றால் இல்லை யன்று தான் சொல்ல வேண்டும். வசதி படைதவர்களவது இதை செய்வார்கள யன்றால் இல்லை.

இனியாவது முயற்சி செய்யட்டும் அடுத்த ஆண்டில் பார்போம் எத்துணை நற்பணி மன்றங்கள் இதை செய்து எத்துணை பேர் இத்துறையில் வந்துள்ளார்கள் என்று.

அல்லாஹ் எல்லாவற்றிகும் அருள் புரிவனாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கடலில் பொழிந்த பெரும்மழை...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [16 February 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16976

சகோ. முஹம்மது அலி அவர்களின் ஆதங்கம், கவலை மிகவும் நியாயமானது. பாராட்டுக்கள். இது மாதிரி நம் அனைவர்களும் கவலைப்பட்டு ஒவ்வொருவரும், தங்களின் குடும்பத்திலிருந்து ஒரு IAS/IPS அதிகாரியை உருவாக்கனும் என்பதுதான் அனைவர்களின் ஆசை.

இன்னும் ஒன்றை புரிந்துகொள்ளுங்கள் சகோதரரே, யாரும் அதை செய்கிறோம் இதை செய்வோம் என்று சும்மா இருக்கவில்லை. ஏன் தனி நபர்களும் கூட.

நமது சகோ. ராவன்னா அபுல் ஹசன் ஹாஜி அவர்களை தொடர்பு கொண்டு கொஞ்சம் விசாரியுங்கள். அந்த மனிதரும் 10, 15 வருடங்களாக அலையோ அலை என்று அலைந்து கொண்டு தான் இருக்கின்றார், உதவி செய்து ஊரில் ஒரு IAS/IPS அதிகாரியை கொண்டுவந்துவிடலாம் என்று...ஊஹூம்.

காயல் நல மன்றம் ஒன்று சிவில் சர்வீஸ் சம்பந்தமாக விழிப்புணர்வு மற்றும் உதவி முகாமை, ஜலாலியாவில் நடத்தியது. எத்தனை நபர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டார்கள்.

இது மாதிரியான பிரயோசனமான, முக்கியமான நிகழ்வுக்கு அதிகமான காலி நாற்காலிகளை தான் காண முடிகின்றது.

ஏன், எங்கள் "தம்மாம் காயல் நற்பணி மன்றம்" , நம் மாணவர்களுக்கு முக்கிய மற்றும் அடிப்படை தேவையான ஆங்கில பேசும் பயிற்சி (English Spoken Class) எங்களின் பண உதவியைக்கொண்டு நடத்தனும் என்று பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறோம். பல அறிவிப்புகள் பள்ளிகள் மூலமாகவும், நோட்டீஸ் மூலமாகவும் அறிவித்து, அப்ளிகேசன் பார்ம்மும் கொடுத்ததும் இதுவரை யாரும் வரவில்லை, அக்கறையும் காட்டவில்லை. இன்னும் நாங்கள் முயன்று வருகிறோம். இன்ஷா அல்லாஹ் நடக்கும். இது தான் முதல் படி. இதில் முதலில் நம் பிள்ளைகள் கால் வைக்கட்டுமே.

நாங்க முடி வெட்ட வாங்கோ, ப்ரீ ஆக வெட்டி விடுகிறோம், சாப்பாடும் போட்டு வெட்டிவிடுகிறோம் என்று கூறிவிட்டோம், மண்டையை காட்டினால் தானே முடியும். அதற்காக வருகிறவர், போகிறவர்களை இழுத்து வைத்து வெட்டினால் அதில் அர்த்தம் இல்லை, சகோதரரே. கடைசியில் "கடலில் பொழிந்த பெரும்மழை" மாதிரி ஆகிவிடும்.

நாங்க ரெடி...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:சிவில் சர்விசஸ் நுழைவு தே...
posted by Mohamed Ali (Kuwait) [16 February 2012]
IP: 195.*.*.* Kuwait | Comment Reference Number: 16980

சகோ.சாளை S.I.ஜியாவுத்தீன் அவர்களுக்கு நன்றி மற்றும் பாராட்டுகள்.

நான் சொல்ல வருவது என்ன என்றால் நமதூர் நிலை தற்போது ஆரம்ப நிலையில் தான் உள்ளது. மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் நிறைய civil services பற்றி விழிப்புனர்உ தேவை படுகிறது. இதை யார் செய்வா, நற்பணி மன்றங்கள் செய்கிறதா? நற்பணி மன்றங்கள் தங்களுக்கு என்று சில விதிமுறைகளை வைத்துள்ளது அதற்கு உட்பட்டு தான் உதவுகிறது.

civil services படிப்தற்கு உதவலாம் ஆனால் அதற்கான விழிப்புனர்உ ஏற்படுத்த யார் உதயுவா?

முடி வெட்டி விட தயார் ஆனால் தலை கொடுக்க வேண்டுமே? என்பது உங்கள் கருத்து. நான் சொல்லுவது யார் அதிக முடி வைத்து உள்ளர்கள் என்று பார்த்து அவர்களையும் அவர் பெற்றோர்களையும் பிள்ளைகள் முடி வெட்டி கொண்டால் மிக அழகாக இருக்கும் வெளியில் நல்ல மரியாதையை கிடைக்கும் என்று counselling செய்து முடி வெட்ட அழைத்து வருவது யார் பணி? நற்பணி மன்றகளுக்கு இதற்க்கு செலயு செய்ய அதிகாரம் இருகிறதா? எத்தனை மன்றங்கள் இதை செய்துள்ளது?

நாம் இன்னும் இதே நிலையில் தான் உள்ளோம் முன்னேறி வருவதற்கே நெறைய உழைக்க வேண்டி உள்ளது.

Engg. & Doc. படிப்பு படித்தாலும் Civil services எழுதலாம் ஆனால் யாரும் அதற்க்கு தயாராக படித்து இருக்க மாட்டார்கள்.

அவர்கள் படிக்கும் காலத்தில் அவர்கள் படிப்பின் மீதுதான் கவனம் செல்லுத்த முடியும் அவர்கள் நல்ல படித்து அதிக % வாங்கத்தான் பார்ப்பார்கள் யாரும் அதனுடன் Civil services க்கும் சேர்த்து படிக்கச் மாட்டார்கள்.

அதனால் Civil services காக முயற்சிபவர்கள் Engg. & Doc சேராமல் எதாவது ஒரு ஆர்ட்ஸ் எடுத்து படித்தால் (BA Eco, Social Sce. political Sce. or bcom etc ) இதற்காக ரெம்ப படிக்கச் வேண்டிய அவசியம் இல்லை. சாதாரணமாக படித்தாலே நல்ல மார்க் வாங்கிவிடலாம். அந்த நேரத்திலேயே Civil services க்கு தேவையானதை படிக்கலாம் மற்றும் இதர spoken english, மற்ற பயிர்ச்சிகளையும் மேற்கொள்ளலாம். இது எனது கருத்து.

இப்படி risk எடுக்க யார் தயாராக யுள்ளார்கள். இந்த விளிபுன்ர்வை ஏற்படுத்துவது யார் ? என்று தான் நான் கேட்கிறான்.

அல்லாஹ் நல்லதை நாடுவான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. முயற்சிப்பவன்.........
posted by sam abdul basith (kayalpatnam) [16 February 2012]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 16991

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ.முஹம்மது அலி & சகோ.சாளை S.I.ஜியாவுத்தீன் ஆகியோரின் ஆர்வத்தை பார்க்கும் பொது மனது மிகவும் சந்தோசமாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

நான் 2009 இல் இருந்தே முயசிசெய்து கொண்டு இருக்கின்றேன். coaching சென்டர்-இல் படிக்க saidai duraisamy training institute-இல் வைப்பு கிடைத்தது (after completion of written test & interview) ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக எனது current job-ய் விட்டு விட்டு போக முடியவில்லை.

நான் இதுவரை prelims apply பண்ண வில்லை,ஏனேன்றால் முதல் attempt லயே IAS ஆக வேண்டும் என்பது எனது ஆசை,

now my age is 24. I hailed from KTM street. Can anyone be come forward to help me???????? I hope insha allah, Allah will surely help me!!!!!!!

Wassalam.
With Regards.,
Er.Sam Abdul Basith.S.A.K,
Avail @ +919976937955
E-mail:basith45@gmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:சிவில் சர்விசஸ் நுழைவு தே...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [16 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 17000

Four things are needed for students to become IAS or reach IIT & similar highly coveted institutes

1. INFORMATION: STUDENTS NEED TO KNOW THAT THERE IS SOMETHING CALLED CIVIL SERVICES, IIT-JEE, GATE ETC

2. INTEREST: THEY SHOULD BE INTERESTED TO PURSUE CIVIL SERVICES, IIT-JEE, GATE ETC

3. COURSE / PREPARATION MATERIALS: THEY NEED ACCESS TO MATERIALS

4. GUIDANCE & OTHER HELP: STUDENTS NEED ACCESS TO EXPERTS / PROFESSORS / TRAINERS TO CLARIFY THEIR DOUBTS, NEED DONORS TO PAY FOR EXPENSES, NEED ACCOMMODATION TO STAY (IF THEY HAVE TO GO TO SOME OTHER CITY).

MANY STUDENTS HAVE #1 & #2. THEY BUY POOR QUALITY #3. YOU CAN'T SCORE 99.99 PERCENTILE IN GATE WITH AN OLD SECOND-HAND GUIDE. YOU CANT ACE CIVIL SERVICES PRELIMS WITH A SINGLE "GENERAL STUDIES" BOOK (EVEN IF IT IS 1500+ PAGES).

THE MAIN ISSUE FOR KAYAL STUDENTS IS #4 - GUIDANCE & HELP. EVEN IF WE GET HIGH QUALITY IIT-JEE PREPARATION MATERIALS, UNFORTUNATELY KAYAL PATNAM DOESN'T SEEM TO HAVE TEACHERS WHO COULD CLARIFY DOUBTS AT IIT-JEE LEVEL. ONE OPTION WOULD BE TO SEEK THE ADITANAR COLLEGE PROFESSORS' HELP IN PREPARING OUR STUDENTS FOR CIVIL SERVICES & IIT-JEE.

Er.Sam Abdul Basith.S.A.K HAS MENTIONED THE "saidai duraisamy training institute". IN A KCGC (CHENNAI) MEETING, THIS ONE WAS DISCUSSED - CAN WE BRING A FEW BRIGHT STUDENTS TO CHENNAI, PROVIDE THEM WITH ACCOMMODATION & ENROLL IN saidai duraisamy training institute. INSHA ALLAH, OVER A PERIOD OF TIME, KCGC MAY DO THAT (THIS IS NOT AN OFFICIAL ANNOUNCEMENT. I'M MENTIONING THIS AS JUST AS AN FYI).


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Need Clarification
posted by sam abdul basith (TUTICORIN) [17 February 2012]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 17007

Assalamu Alaikum.

Zazakallah for ur reply Br.M.M. Seyed Ibrahim.

whether KCGC come forward to help me to study IAS?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. KCGC hasn't finalized any IAS coaching
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [17 February 2012]
IP: 103.*.*.* India | Comment Reference Number: 17010

"whether KCGC come forward to help me to study IAS????? "

In a KCGC FORUM THERE WAS ONLY A DISCUSSION ON THIS. NO DECISION HAS BEEN MADE. ALL FORMAL / OFFICIAL DECISIONS WILL BE PUBLICLY ANNOUNCED. TO IMPLEMENT THIS, KCGC NEEDS A PLACE / FLAT / HOUSE IN CHENNAI, SUPPORT FROM KAYAL PRINCIPALS / TEACHERS & MORE.

THAT'S WHY I MENTIONED "NOT AN OFFICIAL ANNOUNCEMENT, AND JUST AN FYI".

IN ADDITION TO KCGC, THERE ARE OTHER KWAs & INDIVIDUALS. BROTHERS HAVE MENTIONED HAJI Ravanna ABUL HASAN AS LOOKING TO SUPPORT IAS ASPIRANTS. POSSIBLY THEY CAN NOW HELP THIS BROTHER.

FOR FURTHER QUESTIONS, PLEASE EMAIL ME. MOVE YOUR CURSOR ON MY NAME, AND THE EMAIL ID WILL BE DISPLAYED IN THE STATUS BAR


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved