Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:54:23 PM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7969
#KOTW7969
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 5, 2012
எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்டு விழா! தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள்!! கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன!!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7115 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (24) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 5)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எல்.கே.மேனிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில், கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற தேர்வுகளில் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு கல்விப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஆண்டு விழா 03.02.2012 வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணிக்கு, பள்ளி தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் தலைமையிலும், பள்ளியின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எம்.ஸதக்கத்துல்லாஹ் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

பள்ளி ஆசிரியர் அஹ்மத் ஏ.ஜே.முஸ்தஃபா நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். பள்ளி தாளாளர் டாக்டர் எஸ்.எல்.முஹம்மத் லெப்பை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா ஆண்டறிக்கை வாசித்தார்.



அடுத்து, விழா தலைவர் டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் தலைமையுரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - தூத்துக்குடி சுங்க இலாகா ஆணையர் சி.இராஜேந்திரன் சிறப்புரையாற்றினார்.



பின்னர், கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற ஆண்டிறுதித் தேர்வில், வகுப்பு வாரியாகவும், பள்ளியளவிலும் சிறப்பிடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினரும், பள்ளி நிர்வாகிகளும், நகரப் பிரமுகர்களும் பரிசுகளை வழங்கினர்.

கடந்த கல்வியாண்டில், பன்னிரண்டாம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்ட அளவில் முதலிடம் பெற்று - தற்போது மருத்துவக் கல்வி பயின்று வரும் மாணவர் ஏ.எச்.அமானுல்லாஹ், அண்மையில் மூன் டிவியில் நடத்தப்பட்ட மாநில அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முதலிடம் வென்ற இப்பள்ளி மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் ஆகியோருக்கு இவ்விழாவில் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டது.







அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினருக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.



பள்ளியின் தலைவர் டாக்டர் அஷ்ரஃப், அண்மையில் தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைப் பாராட்டி, சிறப்பு விருந்தினர் அவருக்கு சால்வை அணிவித்தார்.



நிறைவாக, பள்ளியின் முதுகலை ஆசிரியர் எம்.டேவிட் செல்லப்பா நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவுற்றது.

பின்னர் கலை நிகழ்ச்சிகள் துவங்கின. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற தஃப்ஸ் நிகழ்ச்சி, கிராமிய நடனம், களியாட்டம், இன்னிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.









நிறைவாக, “மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது பழைய திரைப்படப் பாடல்களா? புதிய திரைப்படப் பாடல்களா” எனும் தலைப்பில், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்ற பட்டிமன்றம் நடைபெற்றது.

இவ்விழாவில், பள்ளியின் அனைத்து வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், நிர்வாகிகள், பெற்றோர் மற்றும் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.






Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [05 February 2012]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16540

எல்லாம் அருமை,,, பாராட்டுக்கள்,,,

பட்டிமன்ற தலைப்பு கல்வி சம்பந்தமாக எதாவது வைத்திருக்கலாம்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by mohd.ikram (saudi arabia) [05 February 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16544

பட்டிமன்றம் தலைப்பு மாணவர்களுக்கு பொருத்தமாக அமைந்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும். மாணவர்களுக்கு தேவை இல்லாத ஒரு தலைப்பு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. முகம் சுழிக்க வைத்த பட்டிமன்றம் தேவைதானா...?
posted by M.N.L.முஹம்மது ரஃபீக்,ஹிஜாஸ் மைந்தன். (காயல்பட்டணம்.) [05 February 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 16545

இப் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்வில் என் புதல்வன் ஓவியப் போட்டியில் பரிசு பெறுவதைக் காண்பதற்காக நானும் சென்றிருந்தேன்.பண்பாடு,ஒழுக்கச் சிந்தனை,உயர்வுக்கான வழிமுறைகளைப் போதிக்கும் பள்ளியில்,இது போன்ற சமுதாயச் சீரழிவுக்குத் துணை போகும் விதத்தில் சினைமாப் பாடல்களின் ஆபாச வரிகளைப் பாடி அதற்கு விளக்கமும் அளித்த கொடுமையைக் கண்டு முகம் சுழித்தோரில் நானும் ஒருவன்!

அர்த்த விரசமான புதிய பாடல்களைப் பாடும் போது மாணவர்களிடமிருந்து கைத்தட்டலும்,ஆரவாரமும்,விசில் சத்தமும் வேண்டாத வெறுப்பைத்தான் தந்தது. பிஞ்சு மனதில் நஞ்சை விதைக்கும், இம் முயற்சி பசுமரத்தாணியில் தோய்த்த விஷம் போலத்தான் தோன்றியது.

குர்ஆனை மனனம் செய்த பல ஹாபிழ் மாணவர்களைக் கொண்ட இப் பள்ளியில் இது போன்ற நிகழ்வுகள் ஒரு போதும் விரும்பத்தகாததாகும்.இத் தவறை யார் செய்திருந்தாலும் அது கண்டிக்கத் தக்கதே!இனி வரும் காலங்களிலாவது இது போன்ற தவறுகள் நடக்காத விதத்தில் பள்ளி நிவாகம் கவனம் மேற்கொள்ள வேண்டும்! பயனுள்ள பல நல்ல தலைப்புகளில் பட்டிமன்றம் நடத்தி மாணவர்களின் அறிவுக்கும்,திறமைக்கும் வழி காட்ட வேண்டும்!

மக்களோடு,மக்களாக,
-ராபியா மனாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by mohideen fathima (tirupattur) [05 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16547

பரிசு பெற்ற மாணவ கண்மணிகளுக்கு வாழ்த்துக்கள். இவ்வருடம் நம் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலிடம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Shame!!
posted by Salai. Mohamed Mohideen (USA) [05 February 2012]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 16548

சமீபத்தில் இப்பள்ளி சம்பந்த பட்ட செய்திகளை படித்த பொது, மனதிற்க்கு இதமாக இருந்தது. மற்ற பள்ளிகளுக்கும் ஒரு நல்ல உதாரணம் என்று நினைத்து முடிப்பதற்க்குள்.... “மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது பழைய திரைப்படப் பாடல்களா? புதிய திரைப்படப் பாடல்களா”. ரொம்ப அவசியமான தலைப்பு. இதை படித்தவுடன் பெரிய அதிர்ச்சி. இது ஒரு பள்ளிகூடமா அல்லது சினிமா பட்டறையா அல்லது பொழுது போக்கு கூடமா என்று.

மாணவர்களுக்கு தேவையான நல்ல எவ்வளவோ தலைப்புகள் உள்ளது. ஒரு வேளை, அங்கே இருப்பவர்களுக்கு இதை தவிர வேற எதுவுமே தெரியாதோ அல்லது அங்கே குழுமி இருக்கும் கூட்டத்தை entertain பன்னுவதட்க்காகவா?? அதில் ஆபாச பாடல்களுக்கு இவர்கள் ஒரு புது 'கோனார் விளக்க உரை' வேறு. இது தான்இவர்கள் மாணவர்களுக்கு சொல்லி தருகிற பாடமா. மாணவர்கள் உருப்பட்ட மாதிரிதான். நல்ல பழக்க வழக்கங்களை சொல்லித்தந்து...மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய இடம். ஏற்க்கனவே சினிமா வில் கேட்டு மூழ்கி கிடக்கும் மாணவ/இளைய சமுதாயத்தை கொடிய விஷம் கொண்டு மேலும சீரழிக்க இவர்களும் தங்கள் பங்கை செய்கிறார்கள் போல் தெரிகிறது. இதுமாதிரி செயல்கள் மற்ற பள்ளிகளுக்கு ஒரு கெட்ட முன் உதாரணங்கள் மற்றும் மன்றி இது மாதிரி பள்ளிகளுக்கு பிள்ளைகளை படிக்க அனுப்பும் பெற்றவர்கள் தான் உசாராக இருக்க வேண்டும்.

இதை பள்ளியின் இன்றைய தாளளர்களும் (??). பெரியவர்கள், ஆசிரியர்களும் மற்றும் பெற்றவர்களும் சேர்ந்து தங்கள் பிள்ளைகளுடன் கண்டு களிக்கிறார்கள். காலத்தின் கொடுமை. அதுவும் நமதூரில். நல்ல வேளை பள்ளிகூடத்தை நிறுவியவர்கள் இன்று நம்மில் இல்லை. ஒரு வேளை இருந்திருந்தால், வெட்கப்பட்டு மனம் வெதும்பி இருப்பார்கள். இவர்களை நம்பியா கஷ்டப்பட்டு நிறுவிய பள்ளிக்கூடத்தை ஒப்படைத்தோம் என்று.

சகோதரர்களே..இனி வரும் காலங்களில், பள்ளி விழா என்ற பெயரில் இது போல் மாணவர்களையும் நமதூரின் பண்பாட்டையும் சீரழிக்கும் கலாச்சார சினிமா கூத்துகளை (அது பிள்ளைகளை டான்ஸ் ஆட வைப்பதாக) பள்ளிகளில் அரேங்கேற்றி விடாதீர்கள்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவனாய் வருத்தத்துடன் இதை பதிவு செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by Yasar Arafath (Physio) (KAPV.Govt.Medical college- TRICHY) [05 February 2012]
IP: 49.*.*.* India | Comment Reference Number: 16549

அஸ்ஸலாமு அழைக்கும் ,

Happy To see our school celebration, In this Picture it's remembering me in weakening at obligation of OUR Religion Especially to make privacy for our Sisters( Parents ) in the Session,that's our hereditary in every Function .,

n Add to Administration should be concentrate on Student's obey in Shariyat with the Globel study through our Teachers

May ALLAH make our generation as ROLL MODELING to other People


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [05 February 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16550

பட்டி மன்றத்திற்கு இன்றைய கால சூழ்நிலைக்கு மாணவர்களுக்கு தேவையான & அவசியமான நல்ல கருத்துள்ள நிறைய தலைப்புக்கள் இருக்கும் போது, இது போன்ற பட்டி மன்ற தலைப்பு தேவை இல்லாத ஓன்று தான்.இதை தவிர்த்து இருக்கலாம் .

இனி வரும் காலங்களில் இது போன்ற தவறு மீண்டும் நடைபெறாமல் பார்த்து கொள்வது நல்லது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. படிக்கும் பள்ளி ஆண்டுவிழாவில் சினிமா பாட்டு வேண்டாம்..! இதனால் நமதூரின் கலாச்சார சீரழிவு மற்றும் ஒழுக்க சீர்கேடுகள்...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [06 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 16559

எல்.கே. பள்ளி ஆண்டுவிழா பட்டிமன்றம் என்ற பெயரில் அதில் கலாச்சார ஒழுக்க சீரழிவை ஊக்கவிக்கும் வகையில் சினிமா பாடல்கள்...! அக்கால பாடலா ? இக்கால பாடலா ? என்ற தலைப்பில் ஒரு அசிங்கத்தை நடத்தி பட்டிமன்றத்தை ஆர்வமுடன் கேட்க வந்த பொதுமக்களின் பல பேர் (ஒழுக்கத்தையும் நல்ல கலாச்சாரத்தையும் விரும்பும் மக்கள்) அதிகமானோர் தனது இருக்கையில் இருந்து வெளியே போகும் படி வைத்தன..! பள்ளிகூடங்களில் சினிமா பாடல்கள் ஆடல்கள் கூடாது.. என்று தமிழக அரசு விதிமுறை சொல்லி இருக்கிறது..! அதையும் மீறி செயல் பட்ட ஆசிரியர்களை வன்மையாக கண்டிக்கிறேன்..

நல்ல ஒழுக்கத்தை போதிக்கும் ஆசிரிய பெருமக்கள் பள்ளி மேடையில் பழைய.. புதிய...சினிமா பாடல்களை பாடி வந்திருந்தோரின் முகம் சுளிக்கவும் வெறுப்படையவும் வைத்தனர். நிர்வாகமும் இதை கண்டித்ததாக தெரியவில்லை... இஸ்லாமிய மக்கள் அதிகம் வசிக்கும் நமதூரின் கலாச்சாரத்தை.. ஒழுக்கத்தை சீர்குலைக்க இந்த பள்ளியில் ஒரு ஓரிரு குள்ளநரிகள் இருக்குமோ..? என்ற சந்தேகம் வருகிறது...

இன்று வரை நல்ல பெயர் புகழோடு விளங்கிய நமது எல்.கே. பள்ளி ஆண்டுவிழா இன்று சினிமா மோகத்தில் மாணவர்களை எல் கே பள்ளி ஆசிரிய பெருமக்கள் ஒழுக்க சீர்கேட்டுக்கு ஊக்குவிப்பதை நினைத்து வேதனை அடைந்தேன்.. மாணவர்கள் சீர்கெட்டுபோவதை நினைத்து பல பேர் இதுபோல் மனவேதனை அடைந்தார்கள்...

எத்தனையோ தலைப்புகளில் பட்டிமன்றங்கள் நடத்தலாம் உதாரனத்திற்க்கு அக்கால உணவு வகைகள் - இக்கால உணவு வகைகள் சிறந்ததா...? மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுவது எது... பணமா ? திறமையா ? இப்படி எத்தனையோ தலைப்புகளில் பேசலாம் அதனால் அந்த மாணவனுக்கு நல்ல யோசனை கிடைக்க பெறுகிறான்... பயன் பெறுகிறான்..

இனிவரும் பள்ளி ஆண்டுவிழாவில் இனியாவது நிர்வாகமும் - ஆசிரிய பெருமக்களும் இதுபோல் சினிமா சீரழிவில் இருந்து மாணவ கண்மணிகளை காப்பாற்றுங்கள்... இது எனது தாழ்மையான வேண்டுகோள்..

என்றும் நட்புடன்
எல்.கே. பள்ளி முன்னாள் மாணவன்.
தமிழன் - முத்து இஸ்மாயில்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by saburudeen (dubai) [06 February 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16565

இப் பட்டிமன்றத்தின் தலைப்பு ''முஸ்லிம் பள்ளி நிர்வாகம் ''என்ற நமது பாரம்பரிய பெருமைக்கு முற்றிலும் நேர் எதிரானது .வரும் காலங்களில் இதில் அதிக கவனம் தேவை என்பதை இப்பள்ளியின் முன்னாள் மாணவன் என்கிற முறையில் பதிவு செய்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by hasan (Khobar) [06 February 2012]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16572

கலாசார சீரழிவிற்கு துணைபோகும் எல்.கே.பள்ளி

அன்று நம் எல்.கே.அப்பா அவர்கள் ஒழுக்கதுக்குதான் முன்னுரிமை தருவார்கள். இன்று எம் பள்ளி இவ்வாறான சீர்கேடுக்கு துனைபோகிறதை பார்க்கும் போது உள்ள படி மனம் வெதும்புகிறது.

இரு வாரங்களுக்கு முன் நான் தலைமை ஆசிரியரை சந்திக்க செல்லும் போது அவர்கள் இதுவெல்லாம் பற்றி பேசி பள்ளி ஆண்டு விழாவே பரீட்சை வரும் இத்தருணத்தில் தேவை இல்லை என்று தான் கூறுவதாகவும் ஆனால் சில ஆசிரியர்கள் விடுவது இல்லை என்றும் கூறினார்கள்.

இதில் எனக்கு வேதனை அளிப்பது அடுத்ததாக தலைமை ஆசிரியாராக வர இருக்கும் ஒருவர் அந்த பட்டி மன்றத்தில் இருப்பதுதான். எம் பள்ளி எங்கோ சென்று கொண்டு இருக்கிறது...

இதற்கெல்லாம் பதில்தான் என்ன...

இன்ஷா அல்லாஹ் பொறுத்திருப்போம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [06 February 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16573

"மாணவர் ஹாஃபிழ் கே.எஸ்.முஃபீஸுர்ரஹ்மான் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார்"

ஆனால் மாணவர்களுக்கு ஒழுக்கம் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் “மக்கள் மனதைப் பெரிதும் கவர்ந்தது பழைய திரைப்படப் பாடல்களா? புதிய திரைப்படப் பாடல்களா” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தி விழாவை நிறைவு செய்துள்ளார்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:யானைக்கும் அடிசறுக்கும்
posted by A.R.Refaye (Abudhabi) [06 February 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16589

இதுதான் யானைக்கும் அடிசறுக்கும் என்பார்களோ!!!!!

தரம் மிகுந்த கல்விச்சாலையில் இப்படியான பட்டிமன்ற தலைப்புக்கள் இனி வாராமல் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை ஏற்று செயல்படுத்திட வேண்டுகிறேன். முன்னால் மாணவன் என்ற முறையில் வசைபாடும் விமர்சனகளை படிக்கும்போது உள்ளபடி உள்ளூர வருந்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by Zainul Abdeen (Dubai) [06 February 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16590

இப்படி ஒரு பட்டி மன்றம் நடத்த இருப்பது முன்பே தெரிந்து இருந்தும் இதை அனுமதித்து இருப்பது வேதனைக்குரியது. இஸ்லாமிய பாரம்பரியத்தை பற்றி பேசும் பள்ளிகூடத்தின் நிகழ்ச்சி குர்ஆனின் வசனங்களை ஓதி தொடங்கி சினிமா வசனங்களுடன் முடிவு பெற்றது. இந்த கேவலமான ஒரு நிகழ்ச்சி நடந்தேரியதுக்கு அந்த பள்ளிகூட நிர்வாகிகளே பொறுப்பேற்று இது போன்ற மட்டமான நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் நட்டக்காமல் நம் ஊரின் கண்ணியம் காத்திடவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. நாட்டின் முன்னேற்றத்திற்கு தடைகள் ஊழலா! அந்நியர்களின் ஆதிக்கமா!!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [06 February 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 16596

அஸ்ஸலாமு அழைக்கும்.

நான் பிற பள்ளி மாணவன் என்றாலும் இந்த பள்ளியின் வளர்சிகளை கண்டு ஆனந்தம் அடைந்துள்ளேன்.இருப்பினும் இந்த பட்டிமன்ற தலைப்பு பள்ளியின் ஆண்டுவிழாவின் கரும்புள்ளி.

தற்போதைய சூழலில் " நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரிதும் தடைகள் ஊழலா! அந்நியர்களின் ஆதிக்கமா!!" என்றே இருந்திருக்க வேண்டும்.

இருந்தாலும் வேலைகளின் பளுவிர்க்கிடையில் அறியாமல் ஏற்ப்பட்ட ஒரு தவறாகவே நான் இதை கருதுவதுடன் இனி வரும் காலங்களில் இதுபோன்ற விசயத்தில் மிக மிக முக்கியமான சமுதாய ஒழுக்கம், நகர கலாசாரம், இஸ்லாமிய பண்பாட்டு விசயங்களில் மாணவ சமுதாயத்தை சீர்திருத்துவதுடேன் தாய்மார்களுக்கு என்று இஸ்லாமிய பண்பாட்டுடன் தனி இடவசதி செய்து கொடுக்க மிக்க பணியன்புடேன் நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by mackie noohuthambi (colombo sri lanka) [06 February 2012]
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 16601

எல்கே மேல்நிலய்பள்ளி நிகழ்சிகள் பாராட்டுக்குரியவை. நிகழ்ச்சிகளில் எங்கள் நெஞ்சில் நிறைந்து வாழும் எங்கள் அன்பு தந்தை மக்கி ஆலிம் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்ட செய்திகள் கிடைக்கப்பெற்றேன். "மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்நோற்றான் கொல் எனும் சொல்" என்று வள்ளுவம் கூறுகிறது. எல்லா மாணவ மாணவிகளும் இதை மனதில் கொண்டு முன்னேற்றம்பெற வாழ்த்துக்கள்.

பட்டி மன்றம் தலைப்புதான் தலையை சொரிய வைத்தது. தொலைக்காட்சிகளிலும் திரைப்படங்களிலும் தங்கள் இளமையை தொலைத்து கொண்டிருக்கும் மாணவர்களை திசைதிருப்பி நல்வழியில் கொண்டுவருவதற்கு பகீரத பிரயத்தனங்கள் நடந்து கொண்டிருக்கும் இந்த கால கட்டத்தில் கலா நிதி அஷ்ரப் போன்றவர்களின் தலைமையில் இயங்கும் இந்த பள்ளிக்கூடம் இப்படி ஒரு தலைப்பை தேர்ந்தேடுததை மனம் சரிகாண வில்லை.

மாணவர்களின் வெற்றிக்கு "திரைப்படங்கள் தடையா இணையதளங்கள் தடையா" என்று பட்டிமன்றத்தின் தலைப்பு இருந்திருந்தால் உலகம் இந்த பள்ளிக்கூடத்தை சிறப்பாக பாராட்டி இருக்கும் எனபது என் தாழ்மையான கருத்து. எனினும் EXPERIENCES ARE GATHERED FROM BAD JUDGEMENTS AND JUDGEMENTS ARE GATHERED FROM EXPERIENCES. இனி வரும் காலங்களில் ஆசிரியர்கள் இதை கவனித்துக்கொள்ளுங்கள். குறிப்பாக ஹனீபா சார் அவர்கள் நன்றும் தீதும் பிறர் தர வாரா என்பதை நன்கு அறிவார்கள். வாழ்த்துக்கள். மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by Koos Aboobacker (Riyadh) [06 February 2012]
IP: 195.*.*.* United Kingdom | Comment Reference Number: 16603

இந்த தலைப்பில்தான் பட்டிமன்றம் நடத்த வேண்டும் என்று முனைப்பு காட்டியது யார் என்பதை வெளிப்படையாக தெரிவித்தே ஆக வேண்டும். இதனை "ஆசிரியர் பெற்றோர் கழகத்தினர்" விசாரிக்க முழு உரிமை உள்ளது என நினைக்கிறேன்.

அப்படி ஒரு அமைப்பு இல்லை என்றால், பள்ளியில் படிக்கும் ஒவ்வொரு மாணவனின் பெற்றோரும் இது விசயமாக பள்ளிக்கு சென்று விசாரிக்க வேண்டும். அப்போதுதான் இது போன்ற தவறுகள் இனி நடக்காமல் தடுக்க முடியும்...

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. வெண்ணை திரண்டு வருற நேரத்துல சட்டி உடைந்துவிட்டதே......!!!
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [07 February 2012]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16626

அஸ்ஸலாமு அலைக்கும். எம் பள்ளி எல்.கே.மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா.... கண் குளிரும்வன்னமும், மனம் குளிரும் வண்ணமும் அரங்கேறியது சந்தோசத்தை தருகிறது.

எம் பள்ளி அடுத்தடுத்த கால கட்டம்களில் எல்லா வகையிலும் நல்ல பெயர் எடுத்துவரும் இந்த தருணத்தில்... கலை நிகழ்ச்சிகளுக்கு முடிவில் நம் பள்ளி ஸ்தாபனர்களின் அடிப்படை என்னம்களை கொலை செய்யும் முயற்சி நடந்துள்ளது. இது கண்டிக்க கூடிய ஒன்று.

தாங்கள் அரங்கேற்றிய இது தேனில் விஷம்கலந்து கொடுப்பதுக்கு சமம். பள்ளி ஆசிரியர் ஒருவர் வருத்தம் தெருவித்து இருந்தார் வரவேற்கத்தக்கது. ஆனால் நிர்வாகம் வருத்தம் தெருவித்து காயல் மக்களின் கண்ணியத்தை பெறவும் வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [07 February 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16629

மாணவர்களை பரிசுகள் கொடுத்து ஊக்கபடுத்திய பள்ளியின் நிர்வாகம் மற்றும் நகர பிரமுகர்களுக்கும் நன்றி.

L .K . மாமா வின் பெயரையும் மேடையில் அவர்களது படத்தையும் தாங்கி அதில் சினிமாவை ஆதரிக்கும் வகையில் இப்படி ஒரு பற்றி மன்றமா?

பட்டிமன்ற தலைப்பையும் அதனை ரசித்து சிரிக்கும் மாணவர்கள் மற்றும் பெரியோர்களின் படங்களையும் பார்த்து இது நமதூர்தானா? என்ற சந்தேகம் வரும் அளவிற்கு நகழ்ச்சி அமைக்க பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்க தக்க ஒன்று.

மறைந்த L .K மாமா காலத்தில் நம் சமுதாதயத்தை சார்ந்த மாணவன் சினிமாவிற்கு சென்று வந்தான் என பெற்றோரால் புகார் கொடுக்கபட்டால் அந்த மாணவனை அலுவலகத்தில் அழைத்து தன் மகன், பேரன் போல் உரிமையோடு கண்டித்த அவர்கள் பெயர் சொல்லும் பள்ளியில் சினிமாவை ஊக்குவிப்பது போன்ற செயலா?

சரி அந்த நிகழ்ச்சி தொடங்கியதும் சமூக சிந்தனை உள்ளவர்கள், அங்கு இருந்த பெரியவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? தடுத்து தலைப்பை கல்வி சம்பந்தமாகவோ, அல்லது பொது தலைப்பாகவோ மாற்றி மக்களை சிரிக்க செய்திருக்க்லாமே! இல்லை அதை தொடராமல் அமைதியான முறையில் தடுத்திருக்கலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by peena abdulrasheed (riyadh) [07 February 2012]
IP: 81.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16630

இந்த விசயத்தை காயல்பட்டணம். காம் போடுவதை தவிர்த்து இருந்தால் உலகத்தை சென்று அடைந்து இறுகாது.

பீனா அப்துல்றஷீத்
பதஹா ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by ஹாஜி (Riyadh) [07 February 2012]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16632

ஒழுக்க சீரழிவை ஊக்கவிக்கும் வகையில் பழைய திரைப்படப் பாடல்களா? புதிய திரைப்படப் பாடல்களா” எனும் தலைப்பில் நடத்தியதை பார்க்கும் பொது கலாச்சாரம் எந்த அளவுக்கு சீரழிந்துகொண்டு போகிறது என்பதற்கு உதாரணம்.

மாணவர்களுக்கு பாடங்களை சொல்லி கொடுக்கும் இடங்களிலேயே திரைப்பட பாடல் பட்டிமன்றமா? என்ன கொடுமை இது பாடங்களை படிக்கும் இடமா அல்லது படங்களை படிக்கும் இடமா ?

இன்று வரை நல்ல பெயர் புகழோடு விளங்கியது நமது எல்.கே. பள்ளி, இப்போது ஆசிரியர்களே இதை ஊக்குவிப்பது போல் இருப்பது வருத்தத்துக்குரியது....

இதேபோல் கலாச்சார சீர்கேடு இனிமேல் நடைபெறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் இது கல்லுரி நிர்வாகத்தின் கடமை..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by A.Lukman (kayalpatnam) [07 February 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 16638

நாங்கள் படிக்கும் காலங்களில் சனிக்கிழமை என்றால் பள்ளி வாட்ச் மேன் முருகனை ஆறுமுகநேரிக்கு பகல் வேளையில் அனுப்பிவைத்து மாணவர்கள் சினிமாவுக்கு போகிறார்களா என்பதை எல்.கே.மாமா அவர்கள் கண்காணிப்பார்கள்.

அப்படிப்பட்ட நல்ல கலாச்சாரத்தை மாணவர்களுக்கு போதித்த பள்ளியில் இன்று சினிமாவை ஊக்குவிப்பது போன்ற நிகழ்ச்சிகளா? வேதனையளிக்கிறது. இதற்கு காரணமானவர்கள் மீது நிர்வாகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் மாணவன் என்ற உரிமையில் கோருகிறேன்.

A .லுக்மான்.
கோமான் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [07 February 2012]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16643

நடந்து முடிந்த எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்.

தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.

இங்கு நடைபெற்று முடிந்த பட்டி மன்றத்தை பலரும் பலவகையில் கண்டனம் தெரிவித்து பதிவு செய்தது உண்மையில் பாராட்டதக்கது. ஒரு தவறு நடந்தால் அதை கண்டிக்கனும் என்ற உணர்வுக்கு.

அதற்காக இப்படியா குட்டு குட்டு என்று குட்டனும். தவறு நடந்துவிட்டது. அவர்களும் உணர்ந்து விட்டார்கள். சகோதரர்கள் முஹம்மது லெப்பை, முஹம்மது இகரம் (கமெண்ட் 1&2) ஆகியோர் நன்றாக பதிவு செய்து இருந்தார்கள்.

ஒருவன் தனியாக நூறு மூடைகளில் அரிசியை அளந்து, கட்டி, வண்டியில் ஏற்றி இருப்பான். சிலரிடம் ஒரு பழக்கம் உண்டு, அதாவது பார்த்தீர்களா.. பார்த்தீர்களா.. ஐந்து கிலோ அரிசியை கீழே கொட்டி விட்டான், சிதறடித்து விட்டான், அதன் மேலே மிதித்து விட்டான் என்று குறைபடுவார்கள். அவன் தனியாக கஷ்டப்பட்டு பார்த்த அத்தனை வேலைகளும் கண்ணில் படாது.

அதே போல, இவ்வளவு பாரம்பரிய பள்ளியில் ஒரு சிறு தவறு நடந்து விட்டால், அப்பப்பா... அப்படி.. இப்படி.. அந்த சீரழிவு, இந்த சீரழிவு, கரும்புள்ளி, சிகப்பு புள்ளி என்று ...

இந்த சீரழிவு தான் நம் நாடி நரம்பு வரைக்கும் வந்துவிட்டதே.. டிவி இல் ஆரம்பித்து மொபைல் வரை நம்மை சீரழிக்கவில்லையா.. எந்த பள்ளி விழாவிலாவது சினிமா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது, சினிமா பாடல் பாடுவது இல்லை என்று கூற முடியுமா, சொற்ப பள்ளிகளை தவிர. அதற்காக நான் இதை ஆதரித்து, வக்காலத்து வாங்குகிறேன் என்று என்ன வேண்டாம். நானும் கடுமையாக கண்டிக்கின்றேன். தவறு யார் செய்தாலும் தவறு தவறுதான். அதையே திரும்ப செய்தால் இந்த குமுறல் நியாயம்தான்.

இதே பள்ளி எத்தனை சாதனைகள் புரிந்துள்ளன, எத்தனை நல்ல நிகழ்வுகள் நடந்துள்ளன, அனைத்தும் இந்த வலைதளத்தில் வந்துதானே உள்ளது.. - யாராவது பாராட்டி கருத்து பதிந்தது உண்டா? (ஒரு சிலரை தவிர).

இந்த செய்திக்கு கமெண்ட்ஸ் பதிய வேண்டாம் என்றுதான் இருந்தேன், ஒரு சகோதரர்/ என் நெருங்கிய நண்பர் எனக்கு ஊரில் இருந்து போன் பண்ணி ( வேறு விஷயம் பேசி விட்டு), என்ன எல்லா செய்திக்கும் கமெண்ட்ஸ் அடிப்பாயே, இந்த செய்தி உன் கண்ணில் படவில்லையா? இப்படி ஒரு சீர்கேட்டை நடத்தியுள்ளார்களே, மியூசிக், சினிமா பாடல்கள் ஹராம் இல்லையா என்று கூவிக்கொண்டு இருக்கும்போது, அவருடைய மற்ற மொபைல் போன் அலறும் சப்தம் கேட்டது. அந்த ரிங்க்டோன் "ஜூன் போனால்..ஜூலை காற்றே..." என்ற சினிமா பாடல். நான் உடனே “மவனே உன்னுடைய மொபைல் போனில் இருக்கும் ஹராமை நீக்கி விட்டு, மீண்டும் எனக்கு போன் போடுடா..” என்றதும், உடனே கட் ஆகிவிட்டது தொடர்பு.

யாரையும் புண்படுத்தனும் என்று கருத்து பதியவில்லை. தவறு இருந்தால் மன்னிக்கலாமே.

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைவர்களுக்கும் நல்வழியை காட்டுவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by M.M. Seyed Ibrahim (Chennai) [08 February 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 16648

“மவனே உன்னுடைய மொபைல் போனில் இருக்கும் ஹராமை நீக்கி விட்டு, மீண்டும் எனக்கு போன் போடுடா..”

WELL SAID. CHARITY BEGINS AT HOME.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:எல்.கே.மேனிலைப்பள்ளி ஆண்ட...
posted by முத்துவாப்பா... (அல்-கோபர்) [08 February 2012]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 16650

எமது பள்ளியின் ஆண்டு விழா மற்றும் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.இந்த செய்திற்கு நானும் கருத்து பதிவு செய்ய வேண்டாம் என்று தான் இருந்தேன் ஆனால் காலத்தின் சூழ்நிலை என்னையும் எழுத வைத்துவிட்டது . பல சாதனைகள் கடந்து , பல சாதனையாளர்களை உருவாக்கிய எம் பள்ளிற்கு இந்த குல்குஸ்மா பட்டி மன்றம் ஒரு கரும்புள்ளி என்பதில் மாற்று கருத்திற்கு இடமே இல்லை . மேலும் இணையதள வாசர்களின் கருத்திற்கு மதிப்பளித்து எமது பள்ளியின் ஆசியர்களில் ஒருவரான சகோதர் மீரா தம்பி அவர்கள் இந்நிகழ்விற்கு மண்ணிப்பு கேட்டுள்ளார் மேலும் இது போன்ற நிகழ்வுகள் இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் முற்றிலும் தடுக்க படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

சரி இப்பம் மேட்டருக்கு வருவோம். இங்கு நான் யாருடைய உணர்வையும் குறைத்து மதிப்பிடவில்லை. அதே நேரம் தவறு நடந்துவிட்டது ,அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மண்ணிப்பும் கேட்டு விட்டார்கள் . இதற்கு மேலும் வானத்திற்கும் பூமியிற்கும் தையோ தக்கவென்று குதிப்பது ஒரு ஆரோக்கியமாக தெரியவில்லை. இங்கு கருத்துகளை பதிவு செய்த பெரும்பாலானோர் இந்த பள்ளியில் தான் கல்வி பயின்றிருப்பீர்கள் என்று நம்புகிறேன் என்னையும் சேர்த்து. நாம் படிக்கும் காலத்தில் பல தவறுகளும் ,சேட்டைகளும் பண்ணி இருப்போம் அவற்றை எல்லாம் திருத்தி நம்மை இன்று ஒரு நல்ல நிலைக்கு கொண்டு நம் பள்ளி அறிந்தோ அறியாமலோ ஒரு தவறு செய்துவிட்டது . இதற்கு நாம் சம்பந்த பட்டவர்களை தொடர்பு கொண்டு அதற்கான விளக்கத்தையும் , தீர்வையும் கொடுக்க வேண்டுமே தவிர இப்படி சேற்றை வாரி வீசுவது எந்த விதத்தில் நியாயம் ...??


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved