Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
11:40:20 AM
வெள்ளி | 29 மார்ச் 2024 | துல்ஹஜ் 1702, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0812:3015:4118:3419:42
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:16Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:42
மறைவு18:28மறைவு08:48
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0705:3105:55
உச்சி
12:22
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:37
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7776
#KOTW7776
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 27, 2011
ஒருவழிப்பாதை குறித்து நெசவு ஜமாஅத்தாருடன் நகர்மன்றத் தலைவர் சந்திப்பு!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 7374 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (49) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 9)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தில் நிலவும் பேருந்து போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய, ஒருவழிப்பாதை அவசியம் என்று பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அமைப்புகளால் அது தொடர்பான துறைகளில் கோரிக்கைகள் பல்லாண்டு காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து அதிகாரிகளும் அவ்வப்போது வந்து நகரில் ஆய்வு செய்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், ஒருவழிப்பாதையை நடைமுறைப்படுத்த காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெரு பாதை பரிசீலிக்கப்படுவதையறிந்து, அப்பாதை ஒருவழிப்பாதைக்கு உகந்ததல்ல என்றும், மாற்று வழிகளைத் தெரிவித்தும், காயல்பட்டினம் நெசவு ஜமாஅத் சார்பில், ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளிவாசல் சார்பாக அண்மையில் காயல்பட்டணம்.காம் வலைளத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

இதுகுறித்து, நெசவு ஜமாஅத்துடன் நேரில் சந்தித்து, கருத்து கேட்க விரும்புவதாக காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா அந்த ஜமாஅத்திற்கு கடிதம் மூலம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், 26.12.2011 அன்று (நேற்று) மாலை 05.00 மணிக்கு காயல்பட்டினம் நெசவுத்தெரு - ஹமீதிய்யா பெண்கள் தைக்காவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஹாஜி எஸ்.ஏ.ஷாஹுல் ஹமீத் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். புகாரீ நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். ஹாஃபிழ் உமர் ஷாஹுல் ஹமீத் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.

ஹாஜி எஸ்.இப்னு சஊத் கூட்ட அறிமுகவுரையாற்றி, அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா, இந்த ஒருவழிப்பாதை குறித்து ஆய்வு செய்யவும், முடிவெடுக்கவும் சாலை போக்குவரத்துத் துறைக்கே முழு அதிகாரம் உள்ளதென்றும்,

இதுவரை அதிகாரிகளால் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், பெரிய நெசவுத்தெருவே ஒருவழிப்பாதைக்கு உகந்ததாக உள்ளதாக அதிகாரிகள் வட்டத்தில் தெரிவிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.

குழந்தைகள் விளையாட இடையூறு, மின் வினியோகக் கம்பிகள் சாலையில் உள்ளமை, எல்.கே. பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பின்மை போன்ற அச்சங்கள் நெசவு ஜமாஅத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து கருத்து தெரிவித்த நகர்மன்றத் தலைவர், ஒருவேளை பெரிய நெசவுத் தெரு வழியாக ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்தப்பட்டால் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அது தொடர்பானவர்களிடம் கேட்டறிந்த தகவலை இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

மின் வினியோகக் கம்பிகளை தேவையான அளவுக்கு உயரப்படுத்தி, பாதுகாப்பான வகையில் அமைப்பதாக காயல்பட்டினம் மின்வாரிய துணைப் பொறியாளர் தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும், பள்ளி மாணவர்கள் பாதுகாப்பைப் பொருத்த வரை, பள்ளி துவங்கும் நேரம், இடைவேளை நேரம், முடியும் நேரங்களில்தான் இப்பிரச்சினை ஏற்படும் என்றும், அதனை சரிசெய்ய, பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவர்களைக் கொண்டு தினமும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதாக எல்.கே.மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் எம்.ஏ.முஹம்மத் ஹனீஃபா தன்னிடம் தெரிவித்துள்ளதாகவும்,

இப்பகுதியைச் சார்ந்த குழந்தைகள் விளையாடுவதற்கு நகராட்சிக் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி, தனியொரு பூங்கா அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை பாதுகாப்பான வகையில் செய்து தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா மேலும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினத்தில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்கு ஒருவழிப்பாதை நடைமுறைப்படுத்துவதை தாங்கள் எதிர்ப்பவர்களல்லர் என்றும், அதே நேரத்தில் பெரிய நெசவுத் தெரு ஒருவழிப்பாதைக்கு உகந்ததல்ல என்றே தாங்கள் கருதுவதாகவும் ஷேக் தாவூத், நஸீர் அலீ, காயல்பட்டினம் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் கமருல் அஸ்மா ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.



காயல்பட்டினம் திருச்செந்தூர் சாலையில், கே.எம்.டி.மருத்துவமனைக்கு அருகிலுள்ள மின்மாற்றி (ட்ரான்ஸ்ஃபார்மர்) அருகிலுள்ள மழைநீர் வடிகால் ஓடை வழியாக சாலையமைத்து, மேல நெசவுத் தெரு, தட்டார் குடி தெரு, விசாலாட்சியம்மன் கோயில் தெரு வழியாக பேருந்து நிலையம் வரை ஒருவழிப்பாதைக்குரிய பாதையை நிர்ணயிக்கலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டு, அதற்காக ஆயத்தம் செய்யப்பட்ட வரைபடமும் பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது.









பின்னர் அந்த வரைபடத்தையும், கோரிக்கை மனுவையும் காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதாவிடம், நெசவு ஜமாஅத் சார்பில் ஹாஜி எஸ்.ஏ.ஷாஹுல் ஹமீத் கையளித்தார்.





துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. கூட்டத்தில், நெசவு ஜமாஅத்தைச் சார்ந்த பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.







முன்னதாக, 25.12.2011 அன்று மாலை 04.30 மணியளவில் நெசவு ஜமாஅத் சார்பில் ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளியில் சாதாரண கூட்டம் நடைபெற்றுள்ளது. அக்கூட்ட நிகழ்வுகள் பின்வருமாறு அமைந்திருந்தன:-





செய்தி திருத்தப்பட்டது. (27.12.2011 - 22:11hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [27 December 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 15127

எப்படியும் விரைவில் ஒருவழி பாதை வருவது உருதி (இன்ஷாஅல்லாஹ் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Mohamed Adam Sultan (kayalpatnam) [27 December 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 15129

மரியாதைக்குரிய பெரிய நெசவு ஜமாத்தார் சொல்லும் மாற்றுவழி பாதையான L.K. மேல்நிலை பள்ளி வழியில் ஏகப்பட்ட வீடுகள் அடர்த்தியாக இருப்பது இந்த ஜமாதினருக்கு தெரியாதா?

ஒரே நேரத்தில் பேருந்து போவதற்கும்,வருவதற்கும் வசதி செய்து கொடுத்து ஊருக்காக தியாகம் செய்வோம் என்ற நல்ல எண்ணத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் KTM தெரு கண்ணியமானவர்களையும் சற்று எண்ணி பார்க்க வேண்டும். அவர்களுக்கும் பிள்ளைகள் இருக்கிறது,அவர்கள் வீட்டிலும் கல்யாண காட்சிகள் நடக்கின்றன, அதை தெருவில் வைக்கமுடியாத துர்பாகியவதியாக இருபதற்கு காரணம் ஊர் நன்மைக்காகதானே

இரு பேருந்து (போவதற்கும்,வருவதற்கும்) வேண்டாம் ஒரு பேருந்தையாவது பெருந்தன்மையோடு செல்ல அனுமதிப்பது தான் ஊருக்கு செய்யும் தியாகமாக பெரிய நெசவு தெரு ஜமாஅத் நினைக்கவேண்டும்.

தொடர்ந்து பிடிவாதம் பிடிப்பீர்கலேயானால்,

நாம் மட்டும் பேமானிகளா? நம் தெருவளியாகவும் பேருந்து செல்ல கூடாது என்று KTM தெருவாசிகள் சாலை மறியலில் ஈடுபட்டால் நிலைமை என்னவாகும்?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by mohamed abdul kader (dubai) [27 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15130

கே.எம்.டி.வழியாக ஏழு வளைவுகளை கொண்ட பாதையை காண்பிப்பார்களாம் ஆனால் தங்கள் தெருவுக்குள் ஒருவளிபாதை வாரக்குடாதாம்.

ஒருவளிபாதையை அமுல்படுத்துவது நெறிசலை குறைபதற்கும் குறைவான நேரதில் சீரானமுறைஇல் நம்தூரை கடந்து செல்வாதர்ககதான் ஆனால் இவர்கள் காட்டும்வழிஇல் வாகனம் செல்வது என்றால் நம்தூரை கடந்து செல்ல 1/2 மனிதேரம் ஆகும் இவர்கள் காட்டும் வழிஇல் ஏழு வளைவுகல் ஆனால் தாயும் பள்ளி மூப்பனார் ஓடை ,பெரிய நேசவு தெரு வலி 3 வளைவு மட்டுமே!

இவ்வாறு ஒடுனர்களை கஷ்டபடுதினால் நம்தூருக்கு வந்து செல்லும் பஸ் எண்ணிக்கையை குறைதுவிடுவாகலே என்கிற எண்ணம்கூட இல்லதவர்கலாய் ஆகிவிட்டவர்களே என்ன செய்ய?

mohamed abdul kader
k.t.m.street

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Farook (Jeddah) [27 December 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15131

என்ன இருந்தாலும் அரசு எடுக்கும் முடிவே இறுதி. இதை காலாகாலத்துக்கு தள்ளி போடாது. ஹாஜி அப்பா தைக்கா தெருக்கும் பஸ் வராம இருந்தால் அங்குள்ள பிள்ளைகளும் ரோட்டில் இனி விளையாடலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Mohmed Younus (trivandram) [27 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 15133

அனைத்து பிரச்சனைகளையும் ஆற தீர அமர்ந்து பேசி இதற்கு ஒரு உருப்படியான முடிவு காண வேண்டும்.

அதை விடுத்து "நாங்கள் பேய்மானிகளா" என்று தடித்த வார்த்தைகளை உபயோகப்படுத்துவதும், "கே.டி.எம் தெருவாசிகள் நினைத்தால்" என்று முல்லைபெரியாறு, காவிரி ரேஞ்சுக்கு பேசுவதும் இந்த பிரச்சனைகளை மென்மேலும் சிக்கல் ஆக்கும்.

தலைவி அவர்கள் நெடுஞ்சாலை பிரிவு பொறியியல் வல்லுநர்களோடு இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தால் அந்த மக்களுக்கு மென்மேலும் விளக்கம் அளிக்க எதுவாக இருந்து இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by M.N Seyed Ahmed Buhari (Chennai(Mannady)) [27 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15136

அஸ்ஸலாமு அழைக்கும்....

அன்பின் காயல் வாசிகளே இந்த ஒரு வழி பாதை திட்டம் நமக்கு அவசியம் தான்.... ஆனால் அதில் உள்ள நன்மை தீமைகளை நன்கு அலசி ஆராய நாட்கள் அதிகமாகும்,,, அதுக்க ஒரு ஜமாஅதினரை குறை சொல்ல வேண்டாம்.

அதுக்க ஊருக்கு வரும் பஸ்ஸை KTM தெரு மக்கள் வழி மறைத்தல் யாருக்கு நட்டம்.... உணர்வுகளை அடக்குங்கள்.. அல்லாஹ் நமக்கு அருள் புரிவான்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by A.M.Syed Ahmed (Riyadh) [27 December 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15137

Excellent Sultan Kaka....

வரக்கூடாது என்று சொல்லும் இவர்களிடம் இருக்கும் ஒற்றுமை,

வரவேண்டும் என்று சொல்லும் நம்மிடமும் வரவேண்டும் அப்போதுதான் பஸ் இருவழி பாதையில் வரும்..

நெசவு தெரு ஜமாத்தார்களே மனதுவையுங்கள் பஸ் வரும் & நீங்கள் உங்கள்வீட்டு வாசலில் இருந்தே ஏறிக்கொள்ளலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. நிச்சயமாக வழி பிறக்கும்...!!!
posted by M.N.L.முஹம்மது ரஃபீக், (காயல்பட்டணம்) [27 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 15139

ஒரு வழிப்பாதையை நடைமுறைப்படுத்தும் போது அத்தெருவாசிகளுக்கு பல சிரமங்கள் ஏற்படத்தான் செய்யும். காரணம் காலங்காலமாக ஒர் முறையில் வாழ்ந்து விட்டு இருந்து விட்டு இப்போது வேறு ஓர் முறைக்கு உந்தப்படும் போது அதனால் வரும் சாதகங்களையும்> பாதகங்களையும் எண்ணி அம் மக்கள் தயங்குவதில் நியாயம் இருக்கின்றது.

வளர்ந்துவிட்ட நிலையில் ஊர் நலன் மற்றும் வசதிக்காக நாம் சில மாற்றங்களை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். எனவே பக்குவமாக அத்தெருவாசிகளைப் பகைக்காமல், புண்படுத்தும் வார்த்தைகளால் அர்ச்சிக்காமல் எடுத்துச் சொன்னால் வழி பிறக்க வாய்ப்புள்ளது.

-ராபியா மனாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by SEYED ALI (ABUDHABI) [27 December 2011]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15140

இன்ஷா அல்லா ஊர் நன்மையை கருதி அனைவரும் ஒன்றுபட்டு சிறிது விட்டுக்கொடுத்து காரியமாற்றவும். ஏற்கனவே ரயில் நிலையத்தை பறிகொடுத்தோம். இப்போது பஸ் பாதையையும் அடைக்கலாபுரத்திர்க்கு தாரைவார்க்கக்கூடிய ஆபத்தில் இருக்கிறோம்.

அரசாங்கமும் நிலைமையை பசப்பிக் கொண்டிருக்காமல் வீதியில் தனக்குரிய அதிகாரத்தை நீதமாக பயன்படுத்தி காரியமாற்றவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [27 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15145

ஒருவழிப்பாதை குறித்து மரியாதைக்குரிய நெசவு ஜமாத்தார்கள். பெரிய மனது பண்ணி ஊர் நலன் கருதி தங்களது பிடிவாதத்தை சற்றே தளர்த்தி கொள்ளவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். அவர்கள் சமர்ப்பித்துள்ள மாற்றுவழி வரைபடமெல்லாம் தற்போதைய நிலையில் வேலைக்காகுமா.. என அவர்களே சிந்தித்து பார்க்கவேண்டும்.

இது விஷயம் குறித்து கருத்து சொல்பவர்கள் தயவு செய்து பிறர் மனம் புண்படும வகையில் எதுவும் சொல்லவேண்டாம்.
ஒரு குறிப்பிட்ட விஷயம் குறித்து தங்கள் பாதிக்கப்படலாம் என்று அச்சம் கொள்பவர்களை எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசுவது எந்த வகையிலும் முறையாகாது.
அவர்களின் முறைப்பாடுகளை தயவு கூற கேட்டு அதற்கு பதில் சொல்வதே முறையாகும்.

நெசவு ஜமாத்தார்களுக்கு இறைவனின் பூரண ஆசி என்றும் உண்டு. அவர்கள் பொது நலன் கருதி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [27 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15149

மரியாதைமிகு நகர் மன்ற தலைவியவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டத்தில் அதிகமாக வாலிப நண்பர்கள் கலந்து கொண்டதை காண முடிகிறது.

முற்போக்கு சிந்தனையுடைய, செயல் வீரர்களாகிய தாயும் பள்ளி ஜமாத்தை சார்ந்த வாலிப நண்பர்கள் இந்த ஒரு வழி பாதைக்கு ஊரின் நலன் கருதி அவர்களே முன்னின்று ஒத்துழைக்க வேண்டும்.

"தனக்கு விரும்புவதை தன் சகோதரனுக்கும் விரும்பாத வரை உங்களில் எவரும் உண்மை மு'மினாக ஆக மாட்டார்கள்' என்ற நபி மொழிக்கொப்ப நம் சகோதரர்களின், நமதூர் மக்களின் போக்குவரத்து வசதிகள் இலகுவாக அமைய இந்த வாலிப நண்பர்கள் உறுதுணை புரிய வேண்டும் என அன்பாய் வேண்டுகிறோம்.

Moderator: கருத்தாளர் தாயிம்பள்ளி ஜமாஅத் என்று குறிப்பிட்டுள்ளார். அது ஹாஃபிழ் அமீர் (ஒலி) பள்ளி என்பதே சரியாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by abbas saibudeen (kayalpatnam) [27 December 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15150

அஸ்ஸலாமு அழைக்கும்.

சகோதரர் ஸாலிஹ் அவர்களே தாங்கள் அளித்த வரைபட விளக்கம் தவறு .kmt ஹாஸ்பிடல் டிரான்ச்போர்மேர் வழி சிறியது இல்லை. அகலமானது. எங்கள் ஜமாத்தார் அளித்த propose வரைபடத்தில் அந்த இடத்தின் அடி கணக்கு உள்ளது. செய்தியே திருதிக்குள்ளவும்.

மேலும் வழியானது kmt ஹாஸ்பிடல் அருகில் உள்ள வழியில் திரும்பி மேல நெசவு தெரு வழியாக நேரே சென்று வளைந்து தட்டர்குடி தெரு கடந்து விசாலாட்சி அம்மன் கோயில் தெருவில் வளைந்து நேரே சென்று புதிய பஸ் ஸ்டாண்ட் இ அடையும். அதுவே எங்கள் ஜமாத்தார் அளித்த வரைபட விளக்கம் .........வுங்கள் செய்தியே சரியாக திருதிக்குள்ளவும். சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்.

Moderator: திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [27 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15155

இன்ஷா அல்லாஹ். நிச்சயம் நம் ஊருக்கு ஓரு வழி பாதை வரும் என்று நாம் முழு மனதுடன் நம்புவோமாக. காரணம்.

நம் அருமை தலைவி ஆபிதா அவர்கள் ஈடுபட்டு உள்ளார்கள் அல்லவா. அது போதும்.......... ஜமாதுக்கும் & ஊர் பொது மக்களுக்கும் பாதிப்பு இல்லாமல் நிச்சயமாக செயல்படுவர்கள்..... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Ibrahim Ibn Nowshad (Chennai) [27 December 2011]
IP: 58.*.*.* India | Comment Reference Number: 15156

Everything is right.

I am hail from KTM Street exactly middle. If suppose I need to go to Main Road (Bazar). Should I accelerate my vehicle to KMT Hospital and take right navigation is easy or take right at the Tayim Palli is easy? Please clarify.

Or in either way if suppose opposite direction.

Suppose I want to go to KMT. I should have to go to New Bus stand and reach KMT or go to Bazar and take left at Big Weaver Street is easy navigation?

Expecting answers from Fellow moslem brothers and sisters of concerned location.

Can anyone answer my suppose questions suppose if you have logic? I am ready to clarify my doubts.

If this plan executes Auto Ricksaw fares may tripled.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by saburudeen (dubai) [27 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15159

ஒரு வழி பாதை விசயத்தில் சகோதரி ஆபிதாவின் பேச்சு சிறந்த நிர்வாக திறமையை காட்டுகிறது. உங்கள் முயற்சிகள் தொடரட்டும்.

சகோதரி ஆபிதா அவர்களின் பதவி காலத்தில் ஒரு வழி பாதையை பெற்றோம் .என இன்ஷா அல்லாஹ் மக்கள் சொல்லட்டும் அது வரலாற்றில் இடம் பெறட்டும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. One-way routing options
posted by Salai.Mohamed Mohideen (USA) [27 December 2011]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 15161

I've been watching the news on one-way through Nesavu st for a while. Our Chairman has taken a good step to to address their concerns. But after reading their resolution #1, my gut says that our Nesavu jamath is very strong on their decision & bit adamant(?)...not at all ready to consider one-way through their street even as a last option.

Our Nesavu jamath thrown some options to the table... one of them is, route through visali amman kovil & thattar kudi st. I'm not sure whether these streets are broad/narrow & viable option to consider. Still, it sounds me fishy & surprised with this recommendation since our fellow muslims populated st is not at all ready to consider one-way through their street but recommending options through other streets... that too non muslim brothers living area. would it be fair to ask them? Don't their childrens play in their streets & their safety wont go for a toss???

Incase if am not wrong, the recommended option 1 (i.e. encroachments.. not sure how true is this) is not going to solve the problem completely since I dont think roads will be more broad enough even after clearing the 'so-called' encroachments.

There is no doubt that, our nesavu jamath's concerns (even though its a very common concerns which KTM/Main/Haji appa st folks came across) shouldn't be overlooked and addressed appropriately to make an amicable solution. We all can understand that, there are some inconveniences to Nesavu jamath folks. They will not be requested like this, if Nesavu st is somewhere in the corner of kayal. As most of us think, one way through Nesavu st is the convenient & closest/best alternative route to settle down this traffic issue.

I understand that, our nesavu jamath is very fame for their unity and one of the greatest jamath in kayal. As we all wish, they also should be open and ready to consider (i.e. one way through their st) incase if there is no way out for this one-way problem. Any how, decision is with PWD(?) & gonna impose something based on their analysis. Before they do, our Nesavu jamath can voluntarily (or atleast after making a better guess on what PWD's decision would be) come forward which will be praised & remembered in kayal history.

After seeing the progress, Dawn is not far away to this one-way traffic problem

PS: I'm not hailing from KTM/Hajji appa st


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Kaleel Rahman (Chennai) [27 December 2011]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 15162

Regarding Comment Reference Number: 15156

No need to go KMT and Tayim Palli because both are two long. You can easily or directly go to Main Road if there is no encroachment of Govt. property in KMT Street and Main road.

Vice versa for your next question also. I assure no encroachment of Govt. property on SINNA NESAVU STREET.

And we are all discussing about the Broad Kayal. Not only for tomorrow remedies & narrow Kayal.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by N.T.SSULAIMAN (YANBU) [27 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15164

பாசதிற்குரிய பெரிய நேசவுதெருவு ஜமாஅதார்களே ஊரின் நலனில் அக்கறைகொன்று ஒருவழி பாதையில் விட்டுகொடுத்து நமதூரின் வளர்சிக்கு வழிகாட்டுதலாய் வாருங்கள். ஒருசில கஷ்டங்கள் இருகிறது அதை நமது நகராட்சி நிச்சயம் நிவர்த்தி செய்து தரும்

விட்டு கொடுப்பவர் -------- கெட்டுபோவதில்லை


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Farook (Jeddah) [28 December 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15169

சகோ. கலீல் சொன்னது we are all discussing about the Broad Kayal .

"broad காயல்" என்று சொன்னால் KTM , ஹாஜி அப்பா தெருவுக்கும் பஸ் வராம இருக்க சொல்லுங்க. உங்க கருத்து படி அங்கும் வர கூடாதுதானே.

நெசவு தெரு அன்பர்கள் மாற்று வழி தருகிறார்களே, அந்த மாற்று தெரு சகோதர்களிடம் பேசிவிட்டா recommend பண்ணுகிறார்கள். அப்படி செய்தால், ஒரு வகையில் பாராட்டலாம். இல்லாவிட்டால் சகோ. முஹ்யிதீன் சொல்லுவதுபோல், அங்கும் குழந்தைகள், நீங்க சொல்லும் எல்லா காரணமும் பொருந்தும்.

சகோ. புஹாரி அவர்களே, இது இன்று நேற்று உள்ள சமாசாரம் இல்லை, இது பலவருசமா பேசி பேசி நிலுவையில் உள்ள விஷயம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by A.M.Syed Ahmed (Riyadh) [28 December 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15171

நீங்கள் சொல்லும் பாதையில் (எல்லோரும் போட்டோவை பாருங்கள்) பஸ் விட முடியாது, கப்பல் வேண்டால் விடலாம்..... நம்ம்ம மத்திய மந்திரி வாசனிடம் பேசி பாருங்கள்....

மச்சான் சீனா, நாங்கள் குரல் கொடுக்கிறோம் இதுவரை உன்னுடைய கமெண்ட்டை காணமே,

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. பொது நலத்தில் தெரு நலம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [28 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15172

நெசவுத்தெரு ஜமாத்தார்கள் இன்னும் இறங்கி வராதது வேதனைக்குரிய விஷயமே.

மாறாக,

அவர்களாகவே ஒரு வரைபடத்தை தயாரித்து ஊரின் ஒரு வழிப்பாதை இப்படித்தான் இருக்கவேண்டும், பேருந்து நிறுத்ததிற்க்காக மக்கள் எவ்வளவு தூரம் பயணிக்கவேண்டியது வந்தாலும் பரவாஇல்லை என்று அடம்பிடிப்பது உகந்ததாக இல்லையே.

நல்லது கெட்டதுகளை ஆராய சமயம் எடுக்கும் என்று எடுத்துக்கொண்டாலும், கொடுக்கப்பட்ட வருடங்கள், எடுக்கப்போகும் முடிவிற்கு மிகவும் அதிகமே.

அப்போ, ஊர் நலம், பொது நலம் எனபது உங்களை தவிர மற்ற தெருக்காரர்களுக்கு மட்டும் தான் பொருந்துமா? ஏன் இந்த பிடிவாதம்? நீங்கள் விட்டுக்கொடுத்து ஊர் ஒற்றுமையை நிலை நாட்டுங்கள், இப்படியே ஊர் நலத்தை கருத்தில் கொள்ளாமல் பேசிக்கொண்டிருந்தால், தேவையில்லாத கருத்து வேறுபாடுகள் மற்றும் பிளவுகளுக்குதான் வழிகோலும்.

அப்படி விட்டுக்கொடுக்கும் பட்சத்தில், நமது நகராட்சி மன்றம் சம்பந்தப்பட்ட தெருக்காரர்களுக்கு சில சலுகைகளை அறிவிக்கலாமே? இழப்புக்கு ஈடு செய்வதாக இருக்கட்டுமே.

பொதுநலத்திலும் உங்கள் மக்களின் நலனையும் பேணியதாக சரித்திரத்தில் எழுதப்படட்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Hassan (Singapore) [28 December 2011]
IP: 165.*.*.* Singapore | Comment Reference Number: 15175

Assalamu alaikum,

Its a big debate on our kayalpatnam.com regarding one way traffic diversion. i would like to highlight few points on this:

why whole kayalpatnam people wants one way thru nesavu st?

1. Its the nearest possible route to the existing main road. people from all streets of kayal go to main road to get bus to go anywhere. Having the one way implemented thru nesavu street, they are going to travel almost the same distance from their street to get bus rather going to KMT hospital route.

2. where ever you go in this world, both direction one way road will be always the parallel roads which can be crossed easily from one to another. Having one way thru main road and the other way thru KMT hospital is really far and very inconvenient to all people.

3. Regarding KTM street, i am not sure, whether people started to live there first then the road was structured or initially road was there and then people started to live. whatever it may be, but people over there already adapted to that environment. similarly, though it may be difficult for the nesavu street people initially but soon you will get adapted too.

Above are just few points. Another thing to highlight, give and take should be within ourself brothers, rather asking people from visalachi ammam koil street to sacrifice for us. personally i don't feel thats right and it may lead this issue to a different stage.

with support from our chairman and help from EB & LK school we can get get the one way implemented easily Insha Allah. I hope Nesavu jamaath will re-consider their decision. Let everybody be rewarded by Allah for this kind co-operation.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [28 December 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15177

மரியாதைக்குரிய பெரிய நெசவு ஜமாத்தார்களே,

தயவு செய்து உங்கள் மனதுகளையும் ஒருவழி பாதை போல் குருகியது இல்லாமல், இருவழி பாதை போல் சற்று விசாலமாக மாற்றினால் நமது ஊரு மக்கள் அதன் மூலம் பயன் அடைவார்கள். நாளைய நமது தலைமுறைகள் உங்களை மறக்க மாட்டார்கள். சற்று சிந்தியுங்கள். நல்ல முடிவை தாருங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Cnash (KTM Street) (Makkah ) [28 December 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15178

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பு சகோதரர்கள் நெசவு தெரு சார்பாக முன்பு இங்கே கருத்து தெரிவுக்கும் போது எங்களிடம் யாரும் கலந்தாலோசிக்கவில்லை நியாயமா மனிதநேயம் எங்கே வாழ்கிறது என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார். அவர்களுடைய கேள்வியில் உண்மை இல்லை என்று அவரது உள்மனது சொன்னாலும் அவர்கள் செயலை நியாயபடுத்த கேள்வி கேட்டனர்!! அதற்க்கும் சிலர் நடுநிலையில் பேசுகின்றோம் என்று நினைத்து கொண்டு வக்காலத்து வாங்கினார்கள்..

அன்றைய நகரமன்ற தலைவர் அவர்களை நகர்மன்றத்திர்க்கு அழைத்து பேசினார், இன்றைய நகரமன்ற தலைவி அவர்கள் இடம் தேடிபோய் பேசி இருக்கிறார்.. எப்படி பேசினாலும் தீர்வு ஒன்றுதான்!! அவர்கள் முடிவும் ஒன்றுதான்!!

யாரும் பாதிக்கலாம் அது விசாலாட்சி அம்மன் கோயில் தெருவாக இருக்கலாம் இல்லை தட்டார்குடி தெருவாக இருக்கலாம்!! எவரும் பாதிக்கபடட்டும் ஆனால் எங்கள் தெருவை ஊர் மக்கள் போக்குவரத்து வசதிக்கு உபோகிக்க கூடாது!!

அதுதான் ஆண்டாண்டு காலமாக அவர்கள் நிலை!

அன்று வார்த்தைகள் மூலம் நேரில் அறியபட்டது இன்று விவாதங்கள் மூலம் இணையதளத்தில் அறிவிக்கபடுகிறது!! மற்றபடி அவர்கள் நிலையில் எந்த மாற்றமும் வர போவதில்லை (அல்லாஹ் நாடினாலே அன்றி) !!

அந்த தெருவில் ஒன்றும் அணு மின் திட்டம் கொண்டு வர போவதில்லை...வெறும் போக்குவரத்து சாலைதான் கேட்கிறார்கள் ஏன் இப்படி வரிந்து கட்டி கொண்டு எதிர்கிறார்கள் என்று தெரியவில்லை? எப்படி இருந்தாலும் இது அரசின் முடிவு!! பொறுத்திருந்து பார்ப்போம்.!!

சகோ. சுல்தான் காக்கா சொன்ன வார்த்தைகள் கடினமாக இருந்தாலும் அது ஆத்திரத்தின் வந்ததல்ல ஆதங்கத்தின் வெளிப்பாடே!! அவரது ஆதங்கத்தின் பின்னே உள்ள அவசியத்தையும் அவதிகளையும் அருகில் இருந்து அனுபவம் மூலம் உணருபவர்கள் நாங்கள்!!

சில வலிகளை தாங்கிக்கொண்டு மற்றவர்களுக்காக வழி ஏற்படுத்தி கொடுத்தவர்கள் எங்கள் தெரு மக்கள்!! அந்த வார்த்தைகளை சொல்ல எங்களுக்கு எல்ல உரிமையும் இருந்தும் சொல்லாத, செயலில் காட்டாத பெருந்த்தன்மையாளர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. யானை காரியம் பேசினா...... சேனை காரியம் பேசுறாங்கப்பா......!
posted by s.s.md meerasahib (zubair) (riyadh) [28 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15179

அஸ்ஸலாமு அலைக்கும். என் அன்பு நெசவு தெரு ஜமாத்தார்களே.... தாங்களின் நிலையில் நின்று நாங்கள் யோசித்தால் தாங்களின் கஷ்ட்டங்கள் புரியத்தான் செய்கிறது. ஆனால் தாங்கள் குறிப்பிட்டது போல தாங்களின் தெரு ஒரு வழி பாதைக்கு ஏற்றதல்ல என்பது ஏற்கத்தக்க காரணம் இல்லை. ஊரின், பொது நலம் கருதி அனுமதி கொடுக்கணும்.

அன்பின் நகர்மன்ற தலைவர் அவர்களுக்கு......

தாங்கள் ஒருவழிப்பாதை குறித்து நெசவு ஜமாஅத்தாருடன் கலந்துரையாடியது சந்தோசத்தை தருகின்றது.... மேலும் தாங்கள் என்னுடைய ஒரு சின்ன புத்தியில் தோன்றியதும் பரிசீலினைக்கு எடுக்கவும். நெசவு தெருவில் வீடுகளை ஒட்டி கிழக்கு, மேற்கு பாகம்களை ஒரு மீட்டர் விட்டு foot path அமைத்து பிள்ளைகள் விளையாட்டை தடுக்க வன்னம் இடை, இடையே... ரோட்டின் ஓரம் கிரில்கள் அமைத்து பிள்ளைகள் ரோட்டில் இறங்குவதை தடுக்கலாம். ஊரின், தெருவின் அழகும் கூடும். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by M.S.SABDULAZEEZ (Guangzhou) [28 December 2011]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 15180

மச்சான் சீனா supeer . கண்டிப்பா ஒரு வழி பாதை வரும் விரைவில்.....( இன்ஷா அல்லாஹ் )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Seyed Mohamed (KSA) [28 December 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15182

சகோ மீரா சாஹிப் கருத்தை பரிசிலிக்கலாம். சகோ. சீனா மற்றும் சகோ ஹசன் (சிங்கை) நல்ல கருத்து சொல்லி இருக்கிறார்கள். ஒரு வழி பாதை வந்தால், இப்போது என்ன நெரிசல் KTM பாடுபடுதோ அதில் பாதி தான் நெசவு தெரு பக்ரிந்தளிக்கும். KTM தெருவாசிக்கும், KMT அதன் வழி செல்வோருக்கும் இலகுவாக இருக்கும். அரசு நல்ல முடிவு எடுக்கும். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. The One-way Issue
posted by Abdul Kader (USA) [28 December 2011]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 15183

In their statement in this website a few weeks ago, the Nesavu Street Jamaathars lamented for not having consulted them in this contentious issue of one-way. Now that they have brought out a Blueprint for an alternate one-way route, that is unviable and absolutely impossible in present norms.

Moreover, did they consult with our fraternal community members living in Visalatchi Amman Koil Street & Thattarkudi Street? This very Jamaathars complained about, they being not consulted, despite the facts to the contrary.

There are certain recent goings on that were suppressed by the Nesavu Jamathars and as a last resort are trying to whip up demagogic vehemence in this issue.

After using various undesirable influences to stop the one-way being implemented through their Street they resorted to take this issue through the court. The honorable court had dismissed their petition and had ordered the relevant authority to proceed with the implementation. This fact is being suppressed by the Jamaathars who are now using propagandist tactics to derail the implementation.

It is an irony to note Janab Ibn Saud lending his support to the Jamaathars’ Narrow-mindedness. I have heard various lectures and discourses delivered by him on sacrificing for the community and advocating broadmindedness. He should enlighten the people of his Jamaath and take steps to ally their unfounded anxieties.

How many of us know that the Road in the Main Road does not exist in the earlier blueprints of our Panchayath and that Main Road which we are currently using is not in the Highways Map as well? The residents of Hajiappa Thaika Street, Arampalli Street and KTM Street have in the old days have contributed their pieces of lands for the traffic flow and hence the Main Road is Narrow. There are no Encroachments as claimed by the Nesavu Jamaathaars.

What, if the residents of the above mentioned Streets Join hands and protest against the traffic flowing through their streets for the same reasons? Our town would be totally cutoff from the traffic. So let people who are known to Janab Ibn Saud talk to him and ask his help in convincing his Jamaathars to settle this matter amicably with no further delay.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by AbdulKader ThaikaSahib MSS (Riyadh, KSA) [28 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15184

"நெசவு தெருவில் வீடுகளை ஒட்டி கிழக்கு, மேற்கு பாகம்களை ஒரு மீட்டர் விட்டு foot path அமைத்து பிள்ளைகள் விளையாட்டை தடுக்க வன்னம் இடை, இடையே... ரோட்டின் ஓரம் கிரில்கள் அமைத்து பிள்ளைகள் ரோட்டில் இறங்குவதை தடுக்கலாம். ஊரின், தெருவின் அழகும் கூடும்."

சகோ. மீரா சாஹிப் அவர்களின் ஆலோசனை நன்றாக உள்ளது, இத்துடன் ஒரு சிறிய இணைப்பாக, அவ்வாறு அமைக்கும் கிரில்களில் நகரில் உள்ள கடைகளின் விளம்பர பலகை வைக்க அனுமதிக்கலாம், இதன் மூலம் நகர்மன்றதிர்க்கு வருமானம் வரும்.

இன்ஷா அல்லாஹ் விரைவில் ஒருவழி பாதை எதிர்பார்கின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Mohamed Adam Sultan (kayalpatnam) [28 December 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 15187

மரியாதைக்குரிய பெரிய நெசவு ஜமாதார்களே உங்களுடைய கோரிக்கைகளை இதே வெப்சைட்டில் தெரிவித்தீர்கள் இதே வெப்சைட்டில் உங்கள் கோரிக்கையை மறு பரிசீலனை பண்ணுங்கள் என்று பெரும்பான்மையர்கள் சொல்கிறார்கள். அவர்களின் கருத்துக்களை பெருந்தன்மையுடன் பரிசீலித்து, ஊர்நலன் கருதி விட்டுகொடுபீர்கலேயானால்,

காயல் கண்மணிகள் உங்கள் கண்ணியத்தை காலம் காலமாக வாயார, மனதார புகழ்ந்து துஆ செய்வார்கள்.

விபரம் தெரிந்தவர்கள் நாங்கள்தான் என்று சொல்லும் சில பேர்கள் சரியான யோசனைதான் சொல்கிறோம் என்ற போர்வையில் உங்கள் கவனத்தை ஊர் நலனுக்கு எதிராக திருப்பும் முயற்சியில் மூகடிக்க முனைவதாக கேள்விபட்டேன்.

முதிர்சியும், முன் அனுபவமும் கொண்ட ஜமாஅதார்களே ஊர் நன்மைகருதி உங்களை திசை திருப்புவர்களை சட்டை செய்யாதீர்கள். அவர்கள் தீவரமாக பேசினாலும் சரி. தவ்ஹீத் பேசினாலும் சரி..

இப்படி ஊர் நலனுக்கு மாற்றமாக வழிநடத்துகிரோமே என்ற இறை அச்சம் இல்லாதவர்களை எல்லாம் வல்ல அல்லாஹ் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Habeeb Rahman (Abu Dhabi) [28 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15199

இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டது, நெசவு தெரு வழியாக ஒரு வழி பாதை அமைக்கும் திட்டம் உருவாகி! இதோ இப்போது இன்னும் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி, மன்றாடி வாதாடி கொண்டு இருக்கின்றோம். இப்போது அவர்களாகவே வேறு ஒரு பாதை திட்டத்தை பரிசீலிக்க சொல்கின்றார்கள். பரிசீலிப்போம்.

ஒரு உதாரணத்திற்கு எல்லா தடங்களையும் மறந்து முழு பூசணிக்காயை மறைப்பது போல் முழு ஓடையையும் மண் மூடி புதைத்து பார்முலா ஒன் ஏழு வளைவுகளையும் தாண்டி ஒற்றை அடி பாதையை கடந்து ஒரு பாதையை உருவாக்கும் திட்டம் வர இனியும் எத்தனை வருடங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும்?

நல்ல வேலை, சம்பந்த பட்டவர்கள் இந்த வலை தளத்தை அவ்வளவாக பார்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் என்பதால் இது வரை எதிர்பொன்றும் கிளம்ப வில்லை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by suaidiya buhari (chennai) [29 December 2011]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 15205

assalamualikum

ஊர் நன்மையை கருத்தில் கொண்டு நல்லதொரு முடிவு எடுக்கவும், முக்கியம் இதில் கவனிக்க வேன்டிய விசயம் நெசவு தெரு முழுவதும் போக்குவரதுக்கு பயன் படுத்த போவதில்லை (தாயம் பள்ளி வலைவில் இருந்து ,ஹாபிள் அமீர் பள்ளி வரை உள்ள ரோடயை) அவர்கள் தாரளமாக திருமணம் போன்ற காரியம் களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம் தேவை பட்டால், நகர் மன்ற தலைவி மூலம் அந்த ஏரியாவில் ஒரு பெர்மனெட் கூரை செட் பண்ணி நெசவு தெரு ஜமாது சார்பாக கோரிக்கை வைக்கலம் என்பது என் உடைய கருத்து


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:நெசவுதெரு ஜமாஆத்தின் ஒருவழி மாற்றுபாதை திட்டம், இல்லாத ஊருக்கு வழி காட்டுவது போல் உள்ளது.
posted by மு.அ.பஷீர் மரைக்கார். (காயல்பட்டணம்) [29 December 2011]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 15206

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அன்பின் காயல் சகோதரர்களே, நெசவுதெரு ஜமாஆத்தின் ஒருவழி மாற்றுபாதை திட்டம், இல்லாத ஊருக்கு வழி காட்டுவது போல் உள்ளது. இதை யோசிசாலும் இது இப்போ நடக்கக்கூடிய விஷியமா?

கே.எம்.டி. அருகில் மேற்கே சாலையை திருப்பத்தை ஏற்படுத்த நெடுஞ்சாலையில் உள்ள பாலத்தை அகற்றவோ அல்லது வடக்கே 5 மீட்டர் தாண்டியோ அமைக்க வேண்டும், இப்போது புதிய சாலை மேற்கொள்ள போகும் சாலையை ஒட்டி அகலமான மழைநீர் வடிகால் கட்ட வேண்டும். தற்போதுள்ள ஓடையை மூடி அகன்ற சாலைகள் அமைக்கப்பட வேண்டும்.

தட்டார்குடி சந்திப்பு திருப்பம் மற்றும் பெரிய நெசவு தெரு ரைஸ் மில் சந்திப்பு திருப்பங்களில் உள்ள சிறிய பாலங்களை அகற்றி விட்டு பதிய வழுமிக்க பாலங்கள் அமைக்கபட வேண்டும், இப்பணி அனைத்தையும் செய்வதற்கு சுமார் 2 கோடி அரசு ஒதிக்கீடு செய்ய வேண்டும்.

மிக முக்கியமாக விசாலட்சி அம்மன் கோயில் தெரு திருப்பத்தில் விசாலட்சி அம்மன் கோயில் தெருவின் நடுவே கோயில் உள்ளது இக்கோயில் சந்திப்பில் சாலைதிருப்பத்திற்கு போதுமான இடவசதிகிடையாது கனராக வாகனங்கள் செல்ல இயலாது.

இது ஒன்று போதும் இம்மாற்று ஒருவவழிபாதையை செயல்படுத்த முடியாது என்பதற்கு மற்றும் இப்பாதையில் வசிக்கக்கூடிய மேல நெசவு தெரு, தட்டார் குடி, வீரசடச்சி அம்மன் கோயில் தெரு, அன்னா நகர்காலனி, விசாலட்சி அம்மன் கோயில் தெரு, வன்னார்கடைகுடி தெரு மக்களின் மனநிலை அறிய வேண்டும்.

பெரிய நெசவு தெருவாசிகள் நிராகரித்த ஓருவழிபாதையை அவர்கள் சொன்ன மாற்று ஓருவழி பாதையில் செயல்படுத்திட இம்மக்கள் வழிவகுப்பர்களா என்பது ஜயமே.

ஆகவே இம்மாற்று வழிபாதை அமலுக்கு வருவது மேலும் பல வருடங்கள் ஆகலாம். ஆகையால், நகராட்சியும், சாலை போக்குவரத்து துறையும், மாவட்ட வருவாய் துறையினரும், மாவட்ட காவல் துறையினரும். மாவட்ட ஆட்சியரும் காயல்பட்டணம் போக்குவரத்து நெரிச்சலை தவிர்பதற்கு மிக விரைவில் ஒருவழிபாதையை போக்குவரத்திற்கு சிரமமில்லாத ஒருவழிபாதை தடத்தை கண்டறிந்து இன்னும் ஒருசில நாட்களில் அமல்படுத்திட வேண்டுகிறோம்.

அன்புடன்.
மு.அ.பஷீர் மரைக்கார்.
காயல்பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. அதிக பட்ச மரியாதையை கொடுத்தது போதும். இனிமேலும் பேசி பேசி நேரத்தை வீண் செய்ய வேண்டாம்
posted by S.A.Muhammad Ali (Dubai) [29 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15211

இந்த செய்தியில் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதை KTM தெருவாசி என்ற முறையில் நான் கடுமையாக எதிர்கிறேன். அவர்களிடம் எந்த எந்த இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற ஆதாரம் (பத்திரத்துடன்) இருந்தால் கொடுக்க வேண்டியதுதானே. போக்குவரத்தை அகல படுத்ததான் எங்கள் சொந்த இடத்தை இழந்து இருக்கிறோம். இன்னும் இழக்க எங்கள் வீட்டையும் கொடுக்க சொல்லுவார்கள் போல இருக்கு.

KTM தெருவிற்கும் நெசவு தெருவிற்கும் நடுவில் உள்ள மூப்பனார் ஓடை 90 % நெசவு தெருவாசிகளால் ஆக்கிரமிப்பு செய்யபட்டுள்ளது. முதலில் அவர்கள் தன் தலையில் உள்ள குப்பையை அகற்றி விட்டு மற்றவர்களை பார்க்கட்டும்.

இவர்கள் காட்டிய புதிய பாதையை (ஓடையை) பார்த்தால் தூண்டியில் சிக்கிய மீன் தான் ஞாபகம் வருகிறது. அப்புறம் மழை காலங்களில் தண்ணீர் போக வழி இல்லை என்று இன்னொரு பிரச்னை வரும்.

ஒரு வழி பாதையை பற்றி இவர்களுடன் பேசி பேசி நமக்கு தலை வலிதான் மிச்சம். இவர்களிடம் கையை நீட்டினால் நமக்கு காற்று மட்டும்தான் மிச்சம்.

ஒரு வலி பாதை வருதோ இல்லையோ, இவர்கள் கூறும் காரணங்கள் எல்லாம் தவறு என்று நினைபவர்கள், ஆட்டோ, டாக்ஸி டிரைவர்கள் தாங்கள் KMT, திருசெந்தூர் செல்லும் போது நெசவு தெருவை உபயோகிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

S.A.Muhammad Ali (Velli Mahal)
K.T.M.Street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. கப்பல் பாதை
posted by MAHMOOD HASAN (mammaash) (QATAR) [29 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 15214

என்ன அழகான சிந்தனை ... இவர்கள் ரோட்டில் பஸ் விட வேண்டாமாம் ... மற்ற முடுக்கு போன்ற தெருக்களில் பஸ் விடுவதற்கு வரைபடம் காட்டுவார்கலாம்...

இவர்கள் காட்டிய இந்த பாதையில் போட் வேண்டா கன்டிப்பாக விடலாம்... இவ்வளவு அகலமான வசதியான தெருவில் இருக்கும் இவர்களே (நம்மவர்கள்) முடியாது என்று சொல்லும்போது அந்த தெருவில் இருக்கும் மற்றவர்கள் சம்மதிப்பார்கள?

இவர்கள் காயல்பட்டினத்தை அவர்கலது ஊர் என்று என்னுகிரார்கலா இல்லையா என்பதே தெரியவில்லை... கன்டிப்பாக இது மற்ற தெருவாக இருந்தால் இவ்வளவு பிரச்னை வர வாய்ப்பில்லை...

அடுத்தது அலியார் தெரு, ஆசா தெரு, அந்த குறுக்கு சந்து வழிய குறுக்கு தெரு ,மோஹுதும் தெரு, பிறகு தைக்கா தெரு வழியாக பஸ் ஸ்டான்ட் போவதற்கு வரை படம் கொடுப்பார்கள்.. நல்ல ஒரு ஊர் பற்று ....

பிறகு இவர்கள் மீண்டும் மீண்டும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். இதை KTM தெருவாசி என்ற முறையில் நான் கடுமையாக எதிர்கிறேன். அவர்களிடம் எந்த எந்த இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என்ற ஆதாரம் (பத்திரத்துடன்) இருந்தால் கொடுக்க சொல்லுங்கள். போக்குவரத்தை அகல படுத்த தான் எங்கள் சொந்த இடத்தை இழந்து இருக்கிறோம். இன்னும் இழக்க எங்கள் வீட்டையும் கொடுக்க சொல்லுவார்கள் போல இருக்கு. .

ஏன் இந்த பிரச்சனையில் எல்லா ஜமாத்தும் ஒன்று சேர்ந்து ஒரு முடிவு எடுக்க கூடாது ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by A.M.Syed Ahmed (Riyadh) [29 December 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15216

Kind appeal to the great "kayal Imams" request & convins the (NESAVU -Jamath) to give the path for the sake of public interest.

நெசவு தெரு மக்களே? நீங்கள் இடம் கொடுங்கள், வரலாற்றில் எழுதபடுவீர்கள்.. Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Cnash (KTM Street) (Makkah ) [29 December 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15225

கே.டி.எம் தெரு ஆக்கிரமிப்பை அகற்றவேண்டுமாம்!!!

ஆக்கிரமிப்பு என்று சொல்ல உங்களுக்கு அதிகாரம் தந்தது யார்? அதை சொல்லுவதற்கு தங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை உங்களின் இந்த பரந்த(!) பெருந்தன்மையான(?) மனப்பான்மையை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

KTM தெரு இதுவரை ஊருக்காக இழந்தது என்ன? செய்த தியாகம் என்னென்ன? என்பதை அறிந்து கொண்டு இது போன்ற தீர்மானத்தை போடுங்கள். அரசாங்கத்தின் அப்பன் வீட்டு சொத்தை ஆக்கிரமித்து நாங்கள் வீடு கட்டிக்கொண்டு இருக்கவில்லை, எங்கள் அப்பன் பாட்டன் சொத்தைதான் அரசுக்கு தாரைவார்த்து இருப்பதை அரசின் ஆவணங்களை பார்த்து தெரிந்து வந்து தீர்மானம் போடுங்கள். இன்னும் இருக்கிற வீட்டையும் இழந்து இடம் தரணுமா? நீங்கள் சொகுசாக போறதுக்கு!! செய்கிற உதவியை பாராட்டும் மனப்பக்குவம் இல்லாவிட்டாலும் களங்கபடுத்தாமல் இருப்பது உங்களுக்கு நல்லது. தம்மை விட்டு விட்டு இவர்கள் வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்?

மற்றவர்களின் நற்செயல்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையாதவனால் நற்செயல்களை செய்ய இயலாது. எனவே இவர்கள் தானாக ஊருக்கு நன்மை செய்வார்கள் என்று இனி நகர் மன்றம் பகல் கனவு காணவேண்டாம் . இன்ஷா அல்லாஹ் இதில் அரசாங்கம் உறுதியான முடிவெடுத்து நடத்திகாட்டினால் மட்டுமே வலிகள் எல்லாம் வளியாய் போய் வழி பிறக்கும் . பொறுப்பானவர்கள் என்று தங்களை காட்டி கொள்ளும் சிலர் தவறான வழிகாட்டி உண்மைக்கும் சத்தியத்திற்கும் உங்களை நீங்களே வெறுப்பானவர்களாக ஆக்கி விடாதீர்கள்.

இவர்கள் பாதை தருவார்கள் என்று இனியும் எதிர்பார்க்க வேண்டாம்; எதிர்பார்த்தால் இறுதிவரை எதையும் சாதிக்காமலே போய் விடுவோம் சட்டத்தின் மூலம் சாதித்து காட்டுங்கள். நாளைய சமுதாயமாவது சந்தோசப்படும்.

சிக்கல்கள் என்பவை, ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும் மரங்களைப் போன்றவை. அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும். அவற்றைக் கடந்து சென்றால்அவை சிறிதாகிவிடும். எனவே இவர்கள் தரும் சிக்கலில் சிக்கி கொண்டிருக்காமல் சீக்கிரமாக செயலாற்றுங்கள்!!

இந்த கூட்டத்தால் நகரமன்ற தலைவருக்கு நேரம் தான் விரயம்!! அவர்கள் அளித்த வரைபடத்தை சட்ட நடைமுறை படுத்த இயலாது, வேண்டும் என்றால் சட்டம் (FRAME ) போட்டு நகர் மன்றத்தில் மாட்டி வையுங்கள்!! அடுத்த தலைமுறை கண்டு ரசிக்கட்டும். இவர்களிடம் இறைஞ்சுவதை விட்டு விட்டு நடக்கின்ற வேலைகளின் கவனம் செலுத்துங்கள்...நல்லதை எதிர்பார்க்கிறோம்!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. சபாஷ் சரியான யோசனை
posted by DR D MOHAMED KIZHAR (chennai) [29 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 15230

நெசவு தேர்வு ஜமாஅத் சொன்ன வழியில், ஒரு படகு சர்வீஸ் ஏற்படுத்தி, புதிய சேவை தொடங்கினால் நல்லா இருக்கும்.. அந்த வளைவிலும் KMT மருத்துவ மனைக்கு நோயாளிகளும், மற்றவர்களும் சென்று வருகிறார்கள் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.. போகாத ஊருக்கு வழி செல்வது போல் உள்ளது..

அந்த பாதைக்கு, highways இடன் அனுமதி பெற்று, டெண்டர் விட்டு , தண்ணீரை அப்புரபடுத்டி, அப்புறம் டெண்டர் விட்டு ரோடு போட்டு, அப்புறம் அந்த வழி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கூட்டம் போட்டு, சொல்கிற யோசனை ஒரு வழி பாதை வேண்டாம், எப்போதும் KTM தெரு வாசிகளே முழு கஷ்டமும் அனுபவிக்கட்டும் என்பது போல் உள்ளது.. நீங்கள் யோசிப்பது போல் தானே அந்த ஏரியா பொது மக்களும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மாமியார் ஒடைச்சா மண்குடம்,.. மருமகள் ஓடித்தால் பொன்குடமா

நோவாம நொங்கு திங்க முடியாது... இதை விட நல்ல ஒரு மாற்று யோசனை உள்ளது.. பேசாம வீரபாண்டிய பட்டினத்தில் இருந்து அடைக்கலாபுரம் வழியாக ஆறுமுகநேரி நோக்கி பேரூந்து சென்றால், டிராபிக் குறையும், ஊரில் வாகன மாசுக்கள் மிகவும் குறையும்.நாம் ஊரில் இருந்து ஆட்டோ மூலம் நூறு ரூபாய் கொடுத்து ஆறுமுகநேரி போய், அங்கிருந்து ஐந்து ரூப குடுத்து நாசரேத் போகலாம்...

முடிவாக KTM தெருவுக்கு மாற்றாக, சுலபமாக , சுற்று அதிகம் இல்லாமல், அனைவருக்கும் ஏற்ற பாதை நெசவு தெரு தான் என்பதில் நெசவு தெரு வாசிகளை தவிர, எல்லோரும் ஏற்புடையா கருத்து..

நெசவு தெரு வழியாக ஒரு வழி பாதை அமையும் பட்சத்தில் , நகர்ம்றம் அந்த தெருக்கு செய்யும் எல்லா ஏற்பாடுகளையும், வசதிகளையும் KTM தெரு வாசிகளுக்கு செய்வதுதான் முறையாக இருக்கும். மாறாக புதிய வழிதடம் வந்த தெருவுக்கு மட்டும் செய்தால், KTM தெரு வின் தியாகத்தை கொச்சை படுதுவாதாகவாய் அமையும். அதுதான் பாரபட்ச்மற்ற நடவடிக்கை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. மயிலே... மயிலே... இறகு போடுண்டா.... போடாது.!
posted by s.s.md meerasahb (zubair) (riyadh) [30 December 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15243

அஸ்ஸலாமு அலைக்கும். என் அன்பு காயல் சகோதரர்களே.... இந்த பிரச்சனை இருபது வருட காலம் நீண்ட பிரச்சனை என்பதும், அன்று முதல்.... இன்று வரை காயல் வாசிகளும், போக்குவரத்து ஊழியர்களும் பொறுத்ததே... பெரிய விசயம்.

நம்முடைய இளைய தலைமுறைக்கு வழிகள் அமைத்து கொடுப்பதும், நம் சகோதரர்களான KTM தெரு வாசிகளுக்கு கஷ்ட்டத்தை குறைப்பதும் ஏனைய காயல்பட்டின தெரு வாசிகளுக்கு கடமை என்பதையும் உணரவேண்டும்.

பஸ் செல்ல தாராளமான இடம் இருந்தும்..... மனதில் தாராள இடம் இல்லை என்போர்கள் நம் காயல் மூதாதையர்களின் மனதையும் ஃப்ளாஷ் பேக் அடித்து பார்க்கவும். காயலின் வரலாற்றை ஒருகணம் திருப்பி பார்க்கவும். வரலாறு தெரிந்த T.M.Rahmathullah haji, Makki noohu thambi மாமாமார்கள் இந்த வலைதள கமாண்ட் பகுதியை உபயோகபடுத்துவதால் சொல்லிக்காட்டினால் எங்களுக்கும், அவர்களின் சிறியவர்களுக்கும் தெரிந்தால்..... நம் காயல் பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் வித்தியாசம் தெரியும்.

யாருடைய மனதையும் புண்படுத்த அல்ல.... சரித்திரம் தெரிந்துகொள்ள மட்டுமே....

மயிலே... மயிலே... இறகு போடுண்டா.... போடாட்டாலும் பரவா இல்லை..... பக்கத்தில் நிற்கும் மயிலின் மயிறை பிடிங்கி போடுவதுதான் ஆச்சரியமாக உள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Mohamed Adam Sultan (kayalpatnam) [30 December 2011]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 15248

மரியாதைக்குரிய பெரிய நெசவு தெரு ஜமாதார்களே ஒருவழி பற்றிய உங்களுடைய தீர்மானத்தில், எங்கள் தெருவழியாக போக்குவரத்து கூடாது ,அதை எதிர்கிறோம் என்று சொல்லி இருக்கிறீர்கள். சரி அது உங்கள் விருப்பம், உங்கள் உரிமை. அதே நேரத்தில் மாற்றுவழியை சொல்ல உங்களுக்கு என்ன உரிமை?.

அந்த மாற்றுவழி தெருவாசிகள் உங்களை சொல்லசொல்லி பட்டயம் எழுதி உரிமை தந்து இருக்கிறார்களா?

அதோடு மட்டும் உங்கள் தீர்மானம் நிற்கவில்லை. KTM தெரு,மெய்ன்பஜார் HAT தெருவிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றுங்கள் என்று கட்டளை இட்டு இருக்கிறீர்கள் உங்கள் வாதப்படி ஊரில் இந்த மூன்று தெரு வாசிகள் மட்டும் தான் ஆக்கிரமித்து இருக்கிறார்கள் என்று அடயாளம் காட்டி இருக்கிறீர்கள்.

உங்கள் சிந்தனை {புத்தி) எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. KTM தெருவாசிகலையே குறிவைக்கிரீர்களே அதன் உள் நோக்கம்தான் என்ன?

ஊரின் போக்குவரத்திற்கு உதவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் பல வருடங்களுக்கு முன்னாலேயே தங்கள் வீட்டின் காபவண்டு சுவரை எல்லாம் இடித்து இடம் கொடுத்தது தான் அவர்கள் குற்றமா?

தங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்பாமல் வீட்டிலேயே விளையாட பழக வைத்து ஊருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தது அவர்கள் குற்றமா?

கல்யாண காட்சிகளை தன் வீட்டுமுன் பந்தல்போட்டு பரவசம் அடைய வேண்டும் என்ற ஆசை அனைத்தையும் அடக்கி நம்மூர் மக்களுக்காக தியாகம் செய்வோம் என்ற தியாக உணர்வு குற்றமா?

ஊர் போக்குவரத்திற்கு KTM தெரு ஜமாஅத் மக்கள் மட்டும் உதவினால் போதுமா, அந்த ஜமாஅத் பள்ளியாகிய தாயும்பள்ளிவாசலும் தன் பங்க்கிற்கு செய்யவேண்டுமே என்று. பெருந்தன்மையுடன் ரோட்டு புரதிலுள்ள தங்கள் சொந்த இடத்தை சுமார் இரண்டாயிரம் சதுரடியை விட்டு கொடுத்து ,ஏற்கனேவே உள்ள சுவரை இடித்து விட்டு உள்ளே இழுத்து புது சுவரை கட்டி இருக்கிறார்கள் கண்யமிகு தாயும் பள்ளி வாசல் ஜமாத்தார்கள்

இச்செயல் அவர்களின் பெருந்தமை கலந்த கண்ணியத்தை காட்டுகிறதா அல்லது அவர்களின் குற்றத்தை காட்டுகிறதா?

ஊருக்கு ஒருவழி பாதை வேண்டும் என்ற கோரிக்கையை தாயும் பள்ளி ஜமாஅத் மனுவாக கொடுத்ததே தவிர இந்த வழியாகத்தான் வரவேண்டும் என்று எந்த திசையையும் இமியளவும் கண்யகுறைவாக குறிபிட்டு காட்டவில்லை . .

பெரிய நெசவு தெருவாசி பிள்ளைகள் உயிர் தான் விலை மதிக்க முடியாத உயிர், அவர்களை பொன் போன்று போற்றி பாதுகாக்க வேண்டும் என்று ஜமாத்தார்கள் நினைத்தால், ஒரு சைக்களை கூட செல்ல அனுமதிக்ககூடாது, ஏனனில் சைக்கிள் மோதி கூட மரணம் சம்பவித்திருக்கிறது

என்னுடைய யோசனை என்னவெனில் பெரிய நெசவு தெரு ஆரம்பிக்கும் பகுதியின் குறுக்கே ஒரு பெரிய சுவரும்,அத் தெரு முடியும் இடத்தில ஒரு பெரிய சுவரும் கட்டி,தெருக்குள்ளே செல்வோர்கென்று மூன்றடி வாசல் மட்டும் அமைத்து தெருவை பாதுகாத்தால்,

தெருவாசிகள் அனைவரும் ஜமாஅத்துனுடைய பாதுகாப்பை பெரிதும் போற்றுவார்கள். இது என்னால் இயன்ற சிறு யோசனைதான்.

சரி, சரி பெரியநெசவு தெருவுக்கு இப்படி செய்துவிட்டோம். சின்ன நெசவு தெருவுக்கு ????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by ஹைதர் அலி (ரியாத் ) [30 December 2011]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15259

அன்பிற்குரிய சகோதரர்களே அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ......

ஆணவத்தினாலும் ஆத்திரத்தினாலும் ஆரோக்கியமற்ற மனப்போக்கினாலும் என்ன எழுதுகின்றோம் என்று உணராமலும்,

ஊர் மக்களுக்குள் கசப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தெருவில் இறங்கி போராட கொம்பு சீவிவிட்டு அதில் குளிர்காய நினைப்பதும்,

ஒரே தெரு வாசிகளுக்கு மத்தியிலே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக ஒருவருகொருவரை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைப்பதும்,

ஒரு ஜமாத்தையே கண்ணியக்குறைவாக எழுதுவதும்,

ஆற அமர அமர்ந்து சகோதர உணர்வுடன் யோசித்தால் வழி பிறக்கும் என்று பலரும் கோரிக்கை விடும் பொழுது இந்த பிரச்சினைக்கு தீர்வு வந்து விடக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தில் (?) சம்பந்தப்பட்ட ஜமாத்தை சார்ந்தவர்கள் படித்தால் ஆத்திரப்பட்டு பிரச்சினை பெரிதாக வேண்டும் என்று சிலர் வக்கிரத்தனமாக பொழுது போகாமல் எழுதுவதும்,

அம்மாதிர்யான கருத்துக்களை எந்த வித மாடரேஷனும் இல்லாமல் இந்த இனைய தளத்திலே வெளியிடப்படுவதும்,

நெசவு ஜமாஅத்துடைய நியாயமான கருத்துக்களுக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்காமல் அதை பரிசீலனை செய்யக்கூட செய்யாமல் அதன் சாதக பாதகங்களை ஆராயாமலும்,

ஆய்வுக்கு வந்த காவல் துறையினராலேயே பரிந்துரைக்கப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றினால் கிடைக்கும் தீர்வை, ஆக்கிரமிப்புக்களுக்கு துணை போகும் விதமாக பரிசீலனைக்கு எடுத்துகொல்லாமலிருப்பதும்,

ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னரே பேரூராட்சி நிர்வாக அதிகாரியால் பரிந்துரைக்கப்பட்டதென்று சொல்லப்படும் மாற்று வழிகளையும் உதாசீனப்படுத்தியும்,

எங்களது என்னத்தை நிறைவேற்றியே திருவோம என கங்கணம் கட்டி கொண்டு கருத்துக்களை பதிவு செய்வதும்,

இந்த பிரச்சினைக்கு ஓர் தீர்வு கிடைப்பதற்கு எந்த அளவுக்கு உதவியாக இருக்கும் என்று தெரியவில்லை.

இந்த இணைய தளத்தை மட்டுமே வாசிக்கும் சகோ. சீனா "நமதூருக்கு வருகைபுரிந்த டி.எஸ்.பி. திரு.ஞான சேஹரன், நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் திரு.சேகர், ஆறுமுகநேரி காவல் ஆய்வாலர் திரு.பார்த்திபன், ஆர்.டி.ஓ. S.I திரு.K.சந்திர சேகர், காயல்பட்டணம் கிராம நிர்வாக அதிகாரி திரு.செல்வலிங்கம், காயல்பட்டணம் நகராட்சி ஆணையர் (பொ) திரு.கண்ணையா, நகராட்சி பொறியாளர் திரு.செல்வமணி, சர்வேயர் திரு.கந்தப்பன் ஆகியோர்கள்".. "கே.டி.எம்.தெருவில் உள்ள சில பகுதிகளை ஆக்கிரமிப்பு என்று கூறிய அதிகாரிகள் அவைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் கூறினார்கள்." என்று நமதூரின் மற்றொரு வலைதளத்தில் வந்த செய்தியை படிக்கவில்லை போலும். அந்த செய்தியை இந்த வலை தளத்தில் பதிவு செய்த சகோதரர் அச்செய்தியை அதிகாரிகள் சொன்னபோது எங்கு சென்று விட்டார் என அவரைத்தான் கேட்க வேண்டும்.

ஏற்கனவே பேருந்து செல்லும் வழித்தடத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரச்சினை இல்லை என்று சொல்லவில்லை; அவர்களின் தியாகத்தை நாம் குறைவாக மதிப்பிடவும் இல்லை,

அதிகார்களின் பரிந்துரைப்படி ஆக்கிரமிப்புகள் என்று சொல்லப்படுபவை சீர் செய்யப்பட்டால் இதற்கு ஒரு தீர்வு கிடைத்துவிடாதா என்ற எண்ணம் தான் சில ஆலோசனைகளில் வெளிப்பட்டுள்ளது.

இந்த வலைதளத்தின் மீது நமக்கு மிக நன்றாகவே உயர்ந்த மதிப்புள்ளது, ஒரு வலைதளம் மட்டுமே இருந்த நிலை மாறி இன்று பல வலைதளங்கள் காயல் பெயரை சுமர்ந்துள்ள நிலையில் வாசகர் எண்ணிக்கை கூட்டுவதற்கு இது போன்ற சென்சிடிவான பிரச்சினைகளுக்கு வாசகர் கருத்துக்கள் என்ற பெயரில் பொழுது போகாத சிலர் வலைதளத்திலே வாந்தி எடுப்பதை அனுமதிப்பது ஊர் நலனுக்கு உகந்தது அல்ல என்பது நாம் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.

பலரும் நெசவு ஜமாத்திடம் கோரிக்கை வைத்திருகிறீர்கள். நெசவு ஜமாஅத்தினரும் அவர்களது கோரிக்கையை வைத்திருகிறார்கள், நாம் அனைவரும் சேர்ந்து இறைவனிடம் கோரிக்கை வைப்போம்.

யா அல்லாஹ! எந்த தீர்வினை நன்மை என்று நீ கருதுகின்றாயோ அந்த தீர்வின் மூலம் எங்களுடைய இந்த பிரச்சினைக்கு நல்லதொரு முடிவை தருவாயாக .- ஆமீன்

உங்கள் சகோதரன்
ஹைதர் அலி
ரியாத்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by AM. Syed Ahmed (Riyadh) [31 December 2011]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15266

மைக்கும், பதவியும் தந்தால் மட்டும் பேசுவார்கள் என்று நினைத்தோம், பரவாஇல்லை........ நாங்கள் எல்லாம் பொழுது போகாமல் எழுதவில்லை...... பஸ் போகணும் என்று எழுதுகிறோம்...... மற்றதை சுல்தான் காக்கா, சீனா, DR. KISAR, Mohd. அலி. இவர்கள் எழுத விட்டு விடுகிறேன்....

The only way is possible, pass a special resolution in the Tayiim palli Jamath - regarding the heavy traffic Jam & Take a VIDEO suit during the Jam and forward to the CM cell & all concerned or knock the door of the court with VIDEO recording, Let COURT or Authority dicides which is the best way....

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by mohamed abdul kader (dubai) [31 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15267

நண்பர் ஹைதர் அலி அவர்களே தங்களின் வாதத்தில் இருந்தே வருகிற வார்த்தை (ஏற்கனவே பேருந்து செல்லும் வழித்தடத்தில் வசிக்கும் மக்களுக்கு பிரச்சினை இல்லை என்று சொல்லவில்லை) இதனை வலைதளத்தில் கருத்து எழுதுபவர்களுக்கு சொல்வதை விட்டு விட்டு தங்கள் ஜமாஅத் மக்களிடம் கூறுங்கள் மற்ற மக்களின் பாரத்தை நாமும் கொஞ்சம் சுமக்கலாமே என்று எங்களது வீடு, கோட்டை சுவர், பால்கின்னி போன்று எங்களது பள்ளிஇன் கோட்டை சுவர் போன்றவற்றை முன்பே நாங்கள் தியாகம் செய்தாகிவிட்டாச்சு. இதற்கு மேல் நாங்கள் தியாகம் செய்ய ஒன்றும் இல்லை.

மீண்டும் மீண்டும் k.t.m. தெரு ஆக்கிரமிப்பு என்று எழுதுவதை தவிர்த்து கொள்ளுங்கள். ஏன் உங்கள் தெரு வழியாக போக்குவரத்து வந்தால் உங்கள் ஆக்கிரமிப்பு மக்களுக்கு தெரிந்து விடும் என்று பயப்பிடுகிரிர்களா?

mohamed abdul kader
k.t.m.street


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by MAHMOOD HASAN (mammaash) (QATAR) [31 December 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 15268

அன்பிற்குரிய சஹோ ஹைதர் அலி.....

இங்கு ஆனவதினாலும்,ஆத்திரத்தினாலும் ஆரோக்கியமற்ற மனப்போக்கினாலும் என்ன எழுதுகின்றோம் என்று உணராமலும், ஊர் மக்களுக்குள் கசப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தெருவில் இறங்கி போராட கொம்பு சீவிவிட்டு அதில் குளிர்காய வேண்டும் என்றும், ஒரே தெரு வாசிகளுக்கு மத்தியிலே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக ஒருவருகொருவரை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்க நினைக்கவேண்டும் என்று யாருக்கும் அவசியம் இல்லை... அப்படி நினைப்பவர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக அதனை நாம் அனைவரும் எதிர்போம்.

ktm தெருவில் ஆக்கிரமிப்பு இருந்தால் கன்டிப்பாக அகற்றப்படவேண்டும். அனால் அதனால் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலுக்கு எந்த தீர்வும் கிடைக்காது. மேலும் நீங்கள் கூறி இருக்கும் மாற்று வழி நடை முறைக்கு சாத்தியம் என்று யாரும் கூறமாட்டார்கள். அதன் வெளிப்பாடே இத்தனை அதற்கு எதிர்ப்பான கருத்துகளே தவிர எந்த உள்நோக்கமும் கிடையாது.

மாறாக நமது ஊருக்கு மக்கள் அனைவராலும் விரும்பப்படும் வழி, நடை முறைக்கு ஏற்ற வழி ,பாதுகாப்பான வழி ,ஒரு நல்ல மாற்று வழி அது நமது சகோதரர்கள் தெருவான நேசவுதெரு வழியாக இருக்க வேண்டும் என்பதும் நமது சந்ததியினர் நெசவு தெருவினை இகழாமல் புகழ வேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கம், ஆசை... அதை வல்ல அல்லா நமக்கு ஆகிதருவனாக அமீன்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
46. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Javed Nazeem (Chennai) [31 December 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 15271

செய்தி: http://kayalpatnam.com/shownews.asp?id=7714

கருத்து குறிப்பு எண்: 14739

சகோதரர் ஹைதர் அவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்.

ஆக்கிரமிப்புக்கள் மட்டும் அகற்றப் பட்டால் கிடைக்கும் தீர்வு தற்காலிகமானதாகவே இருக்கும். வளரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து - இதன் அடிப்படையில் தொலை நோக்கு பார்வையில் சிந்தித்தோமானால்:

1. ஆக்கிரமிப்புக்கள் நிச்சயம் அகற்றப் பட வேண்டும்
2. ஒரு வழிப் பாதையும் வேண்டும்.

இதன் கஷ்டம் உணர்ந்த பின்னும் இன்னொரு தெருவினரை அனுபவிக்கச் சொல்லலாமா என்பது மிகவும் நியாயமான கேள்வி. ஆனால் ஒரு வழிப்பாதையின் மூலம் 50 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இரண்டு தெருவிலும் செல்லும். அதுவும் ஒரே திசையில். அந்த சூழ்நிலையிலும் நெசவுத் தெருவின் பரந்த அமைப்பின் படி அங்கே ஆபத்துக்கள் குறைவு (comparatively).

போதுமான மற்றும் சரியான அளவிலான ஸ்பீட் பம்ப்கள் மூலம் இன்னும் பாதுகாவலான சூழ்நிலையை உருவாக்கலாம். இன்னொரு தெருவினருக்கும் மற்றும் ஊரின் வருங்கால தேவைகளுக்கும் உதவும் முகமாக இதை தாங்கள் ஏற்றுக் கொள்ள முன் வரலாமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
47. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by Cnash (Makkah ) [31 December 2011]
IP: 91.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15276

அஸ்ஸலாமு அலைக்கும்!

இந்த இணையதள செய்தியும் அதன் கருத்துகளும் உண்மையை எடுத்துசொல்லும் போதெல்லாம் தங்களுக்கு உடன்பட்டதாக இருக்கும் போது வாசமாக விசியது. இன்று உங்களுக்கு பாதாகமாக தெரியும் போது வாந்தியாக மாறி விட்டதோ? இதன்மூலம் சந்தர்ப்பவாதம் சந்திக்கு வருவதற்கு இந்த இணையதளம் காரணம் ஆகிவிட்டது என்ற ஆதங்கமா?

(Moderation பற்றி பேசி இருக்கும் நீங்கள், நியாப்படி பார்த்தால் புதிய கருத்தாளர் என்ற நிலையில் உங்கள் முந்தைய கருத்துக்களை கூட அட்மின் நிராகரித்திருக்க வேண்டும். மறுக்காமல் வெளியிட்டது கூட உங்கள் பக்கம் உள்ள நியாயம் மற்றவர்களுக்கு தெரியட்டும் என்ற நோக்கில்தான் இருக்கும் என்று நினைக்கிறன்.)

யார் சொல்லுவது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம் . இதுவரை ஊர் நன்மைக்காக பாதிக்கப்பட்டோம், படுகிறோம், இனியாவது எங்கள் சுமையை கொஞ்சமாவது குறையுங்கள் என்று நாங்கள் சொல்லுவது உங்களுக்கு ஆணவமாகவும் ஆரோக்கியமற்றதகவும் தெரிகிறதா ?

ஆத்திரம், ஆணவம், ஆரோக்கியம் பற்றி பாடம் நடத்திய சகோ. ஹைதர், அவை எதற்கும் பஞ்சம் இல்லாமல் கருத்தில் கொட்டி தீர்த்திருக்கிறார். முந்தைய கருத்தில் எங்கள் மக்களை கலந்தாலோசிக்கவில்லை, மனித நேயம் மரணித்துவிட்டது என்றெல்லாம் உண்மையை மறைத்து கூறியவர், அன்று நாம் KTM தெருவை கூறவில்லை மாறாக ஆக்கிரமிப்பு அதிகம் உள்ள மெயின் ரோட்டைத்தான் கூறுகிறோம்... என்றெல்லாம் கருத்து சொன்னவர் இன்று நிலைதடுமாறி அவர் ஜமாத்தின் நிலைக்கேற்ப தன் கருத்தின் நிலையையும் மாற்றி இருக்கிறார்! அன்று சொன்னது ஒன்று.. இன்று உங்கள் ஜமாத் KTM தெரு ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும் என்ற ஆணவ தீர்மானத்திற்கு வக்காலத்து!!

எல்லோரும் சொகுசா போய்வர இதுவரை KTM தெருவில் இருந்து பிடிங்கினது போதாது இன்னும் மிச்சம் இருபதையும் பிடுங்குங்கள் என்கிற மாதிரி KTM தெரு ஆக்கிரமிப்பை அகற்றவேண்டும் என்ற உங்கள் கோரிக்கையில் மரியாதையும் மனிதாபிமானமும் மிளிருகிறதா?

ஒரு பொய்யை திரும்ப திரும்ப கூறினால் உண்மை ஆகிவிடாது!! காவல்துறை ஆய்வாளர் அன்று மாற்றுவழியையும், ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும் என்று பரிந்துரைப்பதற்கு காரணம் உங்கள் தெரு வழியாக இடம் கொடுக்க மறுக்கும் பட்சத்தில்தான் என்பதையும், உங்கள் தெருவழிதான் முதன்மை வழி என்று பரிந்துரைக்கபட்டதையும் உங்கள் வசதிக்கு மறப்பதுதான் ஆரோக்கியமா? அதை சுட்டிகாட்டினால் ஆணவமா?

பல இணையதளங்களை அலசி ஆராய்ந்து கருத்து எழுவதாக காட்டிகொள்ளும் சகோ. ஹைதர், அந்த இணையதளங்களின் கூறி உள்ள KTM தெரு ஆக்கிரமிப்பு பற்றிய செய்தி என்ன என்பதாவது தெரியுமா? இல்லை தெரிந்தும் தெரியாத மாறி பாசாங்கா?.

முன்பு இரண்டு வருடங்களுக்கு முன் சில கோட்டை பால்கனி, படிகட்டுகள் போன்றவற்றை அகற்ற சொல்லி உத்தரவு போட்டார்கள், அதன்படி நாங்களும் அகற்றிவிட்டோம் அதனால் போக்குவரத்திற்கு எந்த நன்மையையும் இல்லை, சில வீட்டின் முன் அவர்கள் பாதுகாப்பிற்காக மீண்டும் தற்காலிக வேலிகள், படிகட்டுகள் அமைக்கபட்டதைதான் மீண்டும் அகற்ற வேண்டும் என்று அடையாளமிட்டு சென்றிருக்கிறார்கள். உங்கள் ஜமாத்தினர் சொல்வது போல், நீங்கள் நினைப்பது போல் KTM தெருவில் அகற்றுவதற்குரிய வேறு எந்த ஆக்கிரமிப்பும் இல்லை.

நியாயத்தின் பொருட்டு எங்கள் உரிமைக்காக விவாதிப்பது சிறந்தது என்ற அடிபடையில்தான் விவாதிக்கிறோமே தவிர நேரப் போக்கிற்கு இல்லை. உங்கள் கருத்தில் நியாமும் இல்லை ஒத்துகொள்ளும் மனப்பக்குவமும் இல்லை. இதை மறுக்க அடுத்தவரை பலிப்பது!!

இறுதியாக ஒன்று சொல்லுகிறோம், இது நானோ நீங்களோ முடிவெடுக்க கூடிய பிரச்னை இல்லை, மாறாக அதிகாரத்தில் உள்ளவர்கள் முடிவே இறுதியாக இருக்கும்? அல்லாஹ் எதை நன்மையாக நாடி இருக்கிறானோ அது கிடைக்கும்.. இன்ஷா அல்லாஹ், அது எங்கள் தெருவை பாதிப்பதாக இருந்தாலும் சரி!! அல்லாஹ்வின் நாட்டம் என்று முன்பு ஏற்றுகொண்டது போல் இனியும் ஏற்றுகொள்ள தயாராகவே இருக்கிறோம்!! எங்களிடம் பரந்த மனதும், ஊர் நலனும் இருக்கிறது.. அதை மீண்டும் மீண்டும் பல சந்தர்ப்பங்களின் நிருபித்து கொண்டிர்ப்போம்!

இது பற்றி இனி எந்த விவாதம் பண்ணியும் எந்த பலனும் நியாமும் உங்களை போன்றோர் இடம் இருந்து எதிர்பார்க்க முடியாது? அதே சமயம் எங்கள் தெருவை மீண்டும் மீண்டும் குற்றம்சாட்டும்முகமாக ஆக்கிரமிப்பு, ஆணவம் என்றல்லாம் சொல்லும்போது அதை மறுப்பதும் எதிர்ப்பதும் எங்கள் கடமை.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
48. மலைக்கு சானை பிடிக்க சொல்றாங்கோ
posted by S.A.MUHAMMAD ALI (Dubai) [31 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 15281

இங்கே யாரும் நேரம் போகாமல் கருத்து கூறி பிரச்னை பண்ண வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதவில்லை. தலைவலியும் காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும்.

எங்கள் வீட்டில் உள்ள பிள்ளைகளை சைக்கிள் ஓட்ட கூட அலியார் தெருவிற்குதான் அனுப்புகிறோம். தற்போது உள்ள வாகன நெருக்கடியில் இரண்டு பக்கமும் வாகனம் வரும் போது KTM தெருவில் நடந்து செல்கின்ற மனிதரின் மன நிலை எப்படி இருக்கும் என்று அனுபவ பட்டவர்களுக்குதான் தெரியும். ஒரு நிமிடம் இதய துடிப்பு நின்று விடும். இதில் காது கேட்காதவர்கள் என்றால் ஆண்டவனா பார்த்து டிரைவருக்கு பொறுமையை கொடுத்தால் தான் உண்டு.

S.A.MUHAMMAD ALI (VELLI MAHAL)
K.T.M.STREET

KTM தெருவில் நான் சிறுவனாக இருந்த போது எங்கள் வீட்டின் முன் இருந்த வேப்ப மரத்தை இழந்தேன். 10 வருடம் முன் எங்கள் வீட்டின் முன் கோட்டையை இழந்தேன். இவர்கள் சொல்லும் ஆக்கிரமிப்பு படி பார்த்தால் எங்கள் வீட்டு பத்திரத்தில் உள்ள அளவில் 5 அடி ரோட்டில்தான் உள்ளது.

அரசாங்க அதிகாரி ஆக்கிரமிப்பு என்று கூறினாராம். அவங்க கண்ணால் அளவு எடுத்து ஆக்கிரமிப்பு என்று கூறுவார்கள். நாங்கள் நினைத்து இருந்தால் எங்கள் வீட்டின் கோட்டையை இழந்து இருக்க தேவை இல்லை. கோர்ட்டில் STAY ஆர்டர் வாங்கி இருக்கலாம்.

எத்தனை வீட்டில் கோட்டை சுவர் இடிக்கபட்டது. நாங்கள் அந்நேரத்தில் இது மாதிரி வீம்பு பிடித்து இருந்தால் இப்படி ஆக்கிரமிப்பு என்று வாய் கூசாமல் சொல்லுபவர்களின் வாயை அடைத்து இருக்கலாம் என எண்ண தோன்றுகிறது.

மாற்று திட்டம் சொல்லும் இவர்கள் புதிய பாதை அமையும் வரைக்கும் தற்காலிகமாக தங்கள் தெருவில் அனுமதிப்பார்களா? என்று கேட்டு பாருங்கள்.

இவர்களை இப்படியே விட்டால் மலைக்கு சானை பிடிக்க சொல்லுவார்கள். பேசாம ONEWAY திட்டம் அமுல்படுத்தினால் 1 வாரம் அல்லது 2 வாரம் புலம்பிட்டு அப்புறம் அமைதியாக அவரவர் வேலையை பார்க்க கிளம்பி விடுவார்கள்.

ஆண்டவன்தான் இதற்கு ஒரு தீர்வை தரனும். எல்லோருடைய மனதிலும் ஊர் நன்மை ஒன்றே குறிக்கோள் என்று இருந்தால் சில துன்பங்களை தாங்கி கொள்ளும் மன பக்குவம் தானாக வரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
49. Re:ஒருவழிப்பாதை குறித்து நெச...
posted by ஹைதர் அலி (ரியாத்) [01 January 2012]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 15333

சகோ. மஹ்மூது ஹசன் அவர்களே,
சகோ. செய்யது அஹமது அவர்களே,
சகோ. ஜாவித் நசீம் அவர்களே,
சகோ. முஹம்மது அப்துல் காதற் அவர்களே,
சகோ சீனா அவர்களே
சகோ முஹம்மது அலி அவர்களே

Assalamu Alaikkum WRWB

With due respect to all of you, I am not at all pointing to your postings. I am seeing very much maturity in many of yours and sincerity, also pain in the postings to find a solution to this long time issue.

Even though one of our brother Syed Ahamed is pointing at me by saying "மைக்கும், பதவியும் தந்தால் மட்டும் பேசுவார்கள் என்று நினைத்தோம், ", I am not having anything to say, as it is against me only. He has all the right to say against me as an individual.

சகோ. சீனா அவர்களதும் சோ. முஹம்மது அலி அவர்களதும் கருத்துக்களில் ஆக்ரோஷம் இருந்தாலும் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வந்து விடாதா என்ற நல்ல எண்ணத்தையும் பார்க்க முடிகிறது.

தாங்கள் இந்த ஒரு வழிப்பாதை விசயத்தில் பகரப்பாட்ட கருத்துக்களை ஊன்றி கவனித்தால் உங்களுக்கு புரிய வாய்ப்பிருக்கிறது. நான் எந்த கருத்துக்களை கடின வார்த்தைகளால் விமர்சனம் செய்திருக்கின்றேன் என்று.

பேருந்து செல்லும் வழித்தடத்தில் இருக்கும் சகோதரர்களுக்கு அவர்களுடைய உணர்வுகளை பகர முழு அதிகாரம் உள்ளது. அவர்கள் படும் சிரமும், செய்யும் தியாகமும் அதற்கான உரிமையைத்தருகிறது.

அதே நேரத்தில் மற்ற தெருவில் வசிக்கும் சகோதரர்களுடைய கருத்துக்கள், எடுத்தேன் கவிழ்த்தேன் என்றில்லாமல், சகோ. ஜாவித் நசீம், சகோ. சுலைமான் சகோ. முஹம்மது ரபீக், சகோ. செய்யது அலி சகோ. செய்யது சஹாமது புஹாரி அவர்களது கருத்துக்களை போன்று, நமது கருத்துக்களும் கோரிக்கைகளும் தெரியப்படுத்தப்பட வேண்டும் அதே நேரத்தில் உணர்வுகளும் புன்படுத்தப்படக்கூடாது, சகோதர உணர்வோடு கருத்துக்கள் தெரியப்படுத்தப்ப்பட்டால் தான் புரிதுனர்தல் ஏற்படும் என்ற எண்ணத்துடன் இருந்தால் தான் நாம் என்றென்றும் சகோதரர்களாய், ஊர் சந்திக்கும் எல்லா பிரச்சினைகளையும் (இந்த ஒரு வழிப்பாதை பிரச்சினை உட்பட) சந்திக்க உறுதுணையாக இருக்கும்.

சகோ. முஹம்மது அப்துல் காதற் அவர்கள் கேட்பது போன்று "ஏன் உங்கள் தெரு வழியாக போக்குவரத்து வந்தால் உங்கள் ஆக்கிரமிப்பு மக்களுக்கு தெரிந்து விடும் என்று பயப்பிடுகிறீர்களா?", இல்லை சகோதரரே. ஒரு வழிப்பாதை வருவதன் மூலம் தான் எங்கள் தெருவில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் தெரியும் என்றால், உளமார மனதார வரவேற்கிறேன். ஏனென்றால்

3195. அபூ ஸலமா இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) அறிவித்தார் ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் 'எவன் அநியாயமாக ஒரு சாண் அளவு (நிலத்தை) அபகரித்துக் கொள்கிறானோ அவனுடைய கழுத்தில் ஏழு பூமிகள் அளவுள்ள நிலப்பகுதி (மறுமை நாளில்) வளையமாக மாட்டப்படும்' ஹதீஸ்: புஹாரி Volume :3

இந்த ஹதீதை தெரிந்த எந்த ஒரு மனிதனும் அச்செயலுக்கு உடந்தையாக இருக்க மாட்டான்.

கடந்த பல வாரங்களாக பல அதிகாரிகளும் இது விசயமாக நமதூருக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றார்கள். சகோ. சீனா அவர்கலுடன் நானும் சேர்ந்து "அல்லாஹ் எதை நன்மையாக நாடி இருக்கிறானோ அது கிடைக்கும்.. இன்ஷா அல்லாஹ்," என்று பிரார்த்திக்கிறேன்.

உங்கள் சகோதரன்

ஹைதர் அலி
ரியாத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமழை!  (31/12/2011) [Views - 2512; Comments - 2]
தல கால் புரியல... (?!)  (27/12/2011) [Views - 7088; Comments - 27]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved