Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:10:30 PM
வெள்ளி | 3 மே 2024 | துல்ஹஜ் 1737, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:59
மறைவு18:27மறைவு14:06
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4805:1405:39
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1519:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7731
#KOTW7731
Increase Font Size Decrease Font Size
சனி, டிசம்பர் 17, 2011
குருவித்துறைப்பள்ளி, புகாரிஷ் ஷரீஃப், அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிகல்லூரி தலைவர் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 5523 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (45) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி, மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை, அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி ஆகியவற்றின் தலைவரான மவ்லவீ அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ அவர்கள் இன்று நள்ளிரவு 02.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 85. கடந்த சில காலமாக உடல் நலம் குன்றியிருந்த அவர், சில தினங்களுக்கு முன் காயல்பட்டினம் கே.எம்.டி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இவர், நாகர்கோவில் டாக்டர் ஜெயசேகரன் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

காயல்பட்டினம் தீவுத்தெருவைச் சார்ந்த இவர், மர்ஹூம் ஷெய்கு சுலைமான் அவர்களின் மகனும், முன்னாள் “முத்துச்சுடர்” மாத இதழின் நிறுவனரும், ஆசிரியருமான மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எஸ்.கே.எம்.நூஹுத்தம்பி ஆலிம் ஜுமானீ அவர்களின் இளைய சகோதர்ருமாவார். இவரது மனைவி கடந்த ஏழாண்டுகளுக்கு முன் காலமாகிவிட்டார். இவரது மகன் ஹாஃபிழ் எஸ்.ஏ.முஹம்மத் இஸ்மாஈல் குருவித்துறைப்பள்ளியின் இணைச் செயலாளராக சேவையாற்றி வருகிறார். மற்றொரு மகன் எஸ்.ஏ.ஷெய்கு சுலைமான் வணிகம் செய்து வருகிறார். இவர்கள் தவிர்த்து, மூன்று பெண் மக்களும் உள்ளனர்.

அரபி மொழியில் பண்டிதரான இவர், காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனம், மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபை ஆகிய மார்க்கக் கல்வி நிறுவனங்களின் பைத் பிரிவுகளுக்கு பல அரபி பைத்துகளை இயற்றியளித்துள்ளார். பல்வேறு மர்ழிய்யா - புகழ்மாலைகளையும் இயற்றிள்ளார்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 04.30 மணியளவில் குருவித்துறைப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

10.08.2008 அன்று, காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃப் ஸபை முன்பகுதியில் நடைபெற்ற அரூஸுல் ஜன்னஹ் மகளிர் அரபிக்கல்லூரி பட்டமளிப்பு விழாவின்போது, கல்லூரியால் உருவாக்கப்பட்ட ‘ஜஹ்ருல் ஜன்னஹ்‘ என்ற நூலை, அதன் தலைவரான - மறைந்த ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ வெளியிட, கடந்த சில தினங்களுக்கு முன் காலமான - கல்லூரியின் துணைத்தலைவர் ஹாஜி பி.மஹ்மூத் அதைப் பெற்றுக்கொள்ளும் காட்சி:-



தகவல்:
M.A.K.ஜெய்னுல் ஆபிதீன்,
காயல்பட்டினம்.


செய்தியில் சில தகவல்களும், படமும் இணைக்கப்பட்டுள்ளன. (17.12.2011 - 15:54hrs)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Mohideen - PS (Guangzhou) [17 December 2011]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 14695

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by shaik dawood (Hong Kong ) [17 December 2011]
IP: 141.*.*.* United States | Comment Reference Number: 14696

Inna lillahi wa Inna ilaihi rajioon

May Allah accepts all his good deeds & forgive all his sins... may He gives saboor to all his family members & friends & students

Dawood bin Shaffie
Hong Kong


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. குல்லு நப்ஸின் தாயிக்கதுள் மௌத்
posted by K.A.FAIZAL (madurai) [17 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14698

அஸ்ஸலாமு அலைக்கும்.

ஓர் ஆலிமின் (அறிஞரின்) மரணத்தை விட ஓராயிரம் பொதுமக்கள் மரணிப்பது சிறந்தது என்பது ஒரு நபிமொழியின் கருத்து.

மவ்லவி அல்ஹாஜ்,அல்ஹாபிழ் எஸ்.கே .செய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மரண செய்தி அறிந்து கவலை அடைந்தோம். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பத்தியை கொடுப்பானாக!ஆமீன்.

அன்னாரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. மார்க்க கல்விக்கடல் மறைவு.... إنا لله وإنا اليه راجعــون
posted by s.s.md meerasahib (riyadh) [17 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14700

அஸ்ஸலாமு அலைக்கும். எங்களின் அப்பாவும், குருவித்துறைப்பள்ளி, புகாரிஷ் ஷரீஃப் தலைவரும், மார்க்க கல்விக்கடல் மவ்லவீ அல் ஹாஜ், அல் ஹாபிழ் எஸ்.கே. செய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்கள் வபாத் செய்தி அறிந்து கவலையுற்றோம். "இன்னல்லாஹ மஆ சாபிரீன்" என்ற இறைவசனத்தை மனதில் நிறுத்தி பொறுமையை கையாளுகிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ்.... للهم اعفر له وارحمه واجعل قبره روضة من رياض الجنة அன்னவர்களின் பிழைகளை மன்னித்து, அவர்களின் கபுரை சுவன பூங்காவாக மாற்றி அருள்வானாக ஆமீன். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கு ‘ஸப்ரன் ஜமீலா‘ எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன். வஸ்ஸலாம்.

இங்ஙனம்.
S.S.Md Meerasahib
B.A.Fathima beevi
Riyadh.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) [17 December 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14701

இன்ன லில்லாஹி , வ இன்ன இலைஹீ ராஜி ஊன்.

எங்களது மரியாதைக்குரிய மாமா அவர்களின் மரண செய்தி அறிந்து மிகுந்த கவலை அடைகிறோம். வல்ல நாயனின் முடிவே இறுதியானது என்ற இறைவனின் கட்டளைக்கு அடி பணிந்து நாங்கள் சபூர் செய்து கொள்கிரோம்.

வல்ல நாயன் அவர்களின் பிழைகளை மன்னித்து அவர்களுக்கு மேலான சுவனபதியை அருள்வானாக.ஆமீன். அனைகர்களும் அவர்களது ஹக்கில் இறைவனிடம் துஆ செய்யயும். .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Vilack SMA (Hong Shen , Siacun) [17 December 2011]
IP: 218.*.*.* China | Comment Reference Number: 14702

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...

Vilack Syed Mohamed Ali


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Mohamed Salih (Bangalore) [17 December 2011]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 14704

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...

பெங்களூர் ரில் இருந்து
முஹம்மத் ஷாலிஹ் மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by NOOHU SAHIB (DUBAI) [17 December 2011]
IP: 80.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14705

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை அளிப்பானாஹா ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by mohamed abdul kader (dubai) [17 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14706

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பத்தியை கொடுப்பானாக!ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by mackie noohuthambi (kayalpatnam) [17 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14707

கடந்த 4m திகதி அவர்களை வீட்டில் சந்தித்து நலம் விசாரித்து வந்தேன், நாம் 1999 இல் அரபாத்தில் சந்தித்து பேசிக்கொண்ட செய்தி எல்லாம் நினைவில் கொண்டுவந்து அரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தேன். நான் து ஆ ஓத அவர்கள் ஆமீன் சொல்ல அவர்கள் து ஆ ஓத நான் ஆமீன் சொல்ல, மாஷா அல்லாஹ், இருவருக்குமே ஒரு மன திருப்தி சந்தோஷம் ஏற்பட்டது.

எனது தந்தை மக்கி ஆலிம் அவர்களுக்கு மிக உகப்பான ஆலிம் அவர்கள் மறைந்த செய்தியிலும் எனக்கு அவர்களை சந்தித்துப்பேச முன்கூட்டியே அல்லாஹ் வாய்ப்பளித்தது மன நிறைவு தந்தது. . மர்ஹூம் அவர்களின் நல அமல்களை அல்லாஹ் கபூல் செய்வானாக, அவர்கள் செய்த பாவங்களை அல்லாஹ் மன்னித்து மேலான சுவர்க்க வாழ்வை கொடுப்பானாக. அவர்கள் குடும்பத்தினருக்கு நல்ல பொறுமையையும் அவர்கள் போல் சிறப்புடன் வாழும் நல பாக்கியத்தையும் கொடுப்பானாக ஆமீன். மக்கி நூஹுதம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by SUBHAN N.M.PEER MOHAMED (abu dhabi) [17 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14708

இன்னா லில்லாஹி வ இன்னா இலைய்ஹி ராஜிஊன்

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை அளிப்பானாக ஆமீன்

சுபான் அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [17 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14710

ஒரு ஆலிம் மரணிப்பதை விட ஒரு பெரும்கூட்டம் மரணிப்பது மிக லேசானது. ( நபி மொழி )

புன்னகை தவழும் முகத்துடன் பேசும் இனிய பண்பாளர் . அரபி கவிதை புனைவதில் வல்லவர். மார்க்க சட்டங்களை நுணுக்கமான முறையில் தெளிவு படுத்துவதில் வல்லவர். யம் ஜமாத்தின் தலைவர். தொழில் துறையிலும் முத்திரை பதித்தவர். அப்படி பட்ட மார்க்க பேரறிவாளர். ஹாஜி ஹாபிள். S .K .ஷைக் அப்துல்லாஹ் ஜுமானி அவர்கள் வபாத்தாகி விட்டார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தோம்.

அன்னாரின் இழப்பு எம் ஜமாத்திற்கு, சமுதாயத்திற்கு பேரிழப்பாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து மேலான ஜென்னதுள் பிர்தௌஸ் என்னும் சுவன பதியில் நுழைய செய்வானாக.அன்னாரை இழந்து வாடும் ஆலிம் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு மேலான பொறுமையை கொடுப்பானாக. ஆமீன்

நுஸ்கி முஹம்மத் ஈஸா லெப்பை
மற்றும் ரியாத் வாழ் காயல் மக்கள்
ரியாத் - சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [17 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14711

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்".

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Habeeb Nasrudeen (Doha - Qatar) [17 December 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 14713

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by abbas saibudeen (kayalpatnam) [17 December 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 14714

இன்னா லில்லாஹி வ இன்னா இழைகி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by M.N Seyed Ahmed Buhari (Chennai(Mannady)) [17 December 2011]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 14715

அஸ்ஸலாமு அழைக்கும்..

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்... எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களுக்கு மேலான சுவன பததியை உயர்ந்த பதவியை கொடுப்பனஹா...

மர்ஹூம் அவர்களை இழந்து வாடும் குடும்பதர்களுக்கு சபுரன் ஜமீல என்னும் அழகிய பொறுமையை கொடுப்பனஹா.... ஆமீன்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Abu Huraira (Abu Dhabi) [17 December 2011]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14716

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ... எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜென்னதுள் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன்.

அன்னாரின் குடம்பதாருக்கு பொறுமையை வல்ல நாயன் கொடுப்பானாக

வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by PS ABDUL KADER (JEDDAH) [17 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14717

அஸ்ஸலாமு அலைக்கும்.

குருவித்துறைப்பள்ளி, புகாரிஷ் ஷரீஃப் தலைவர் அல்ஹாஜ் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியைக் கொடுப்பானாக ஆமீன்.

மர்ஹூம் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, எனது சலத்தை தெரிவித்துக்கொள்கிறோம் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by SUPER IBRAHIM S.H. (RIYADH - K.S.A.) [17 December 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14723

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்னாலிள்ளஹி வ இன்னாஇளஹி ராஜ்ஹீன்!!!!

மவ்லவி அல்ஹாஜ்,அல்ஹாபிழ் எஸ்.கே .செய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மரண செய்தி அறிந்து கவலை அடைந்தோம்.எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுப்பானாக!ஆமீன்.

மற்றும், அவர்ஹ்ளது மக்கள், ஹாபிள். இஸ்மாயில் ஹாஜியார், ஹாஜி. ஷேய்க் சுலைமான், மருமக்கள், குடும்பத்தார் அனவர்ஹளுக்கும் அல்லாஹ் பொறுமையை தருவனஹவும் ஆமீன்!!! நேற்று இரவுதான் அவர்ஹளைபற்றி எதற்தமஹா பேசிக்கொண்டு இருந்தேன். இரவில் கணவும் கண்டேன். சுபுஹனல்லாஹ்!!!

அன்னாரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

மீளாத் துயரமுடன்,

சூப்பர் இப்ராகிம் ச.ஹ. + குடும்பத்தினர்
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Muhammadh Ismail S.A (dubai) [17 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14724

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு சுவனத்தில் மிக உயர்ந்த தரஜாவை கொடுத்தருள்வானாக!ஆமீன்.

மர்ஹூம் அவர்களை இழந்துவாடும் அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுக்க போதுமானவன், ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. ஆலிம் பெருந்தகையின் மறைவு நம் நகரின் பேரிழப்பு!
posted by K.V.A.T.HABIB MOHAMED (QATAR) [17 December 2011]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 14725

நம் நகரில் ஒரு காலத்தில் வீணான பொழுது போக்கு, பாட்டுக்கள் என்று இருந்த சமயத்தில் அரபுக்கவி மூலம் அழகான மர்ளியாக்களையும்,பைத்துக்களையும் இயற்றி தந்து வலிமார்களின் கந்தூரி வைபவங்களை அவர்களின் மர்லியா ஓதுவதன் மூலம் இறைநேசர்களின் வாழ்வை நினைவு கூர்ந்து இறைவனின் உகந்த மஜ்லிசாக மாற்றி அதன் மூலம் வீண் பொழுது போக்கை மறக்கடித்ததோடு மட்டும் அல்லாது , கல்யாணம் ,சுன்னத் போன்ற வைபவத்தின் போது , பைத்து சபை யினருக்கு அரபு பைத்துக்கள் அதிகம் அதிகம் இயற்றிக்கொடுத்து அந்த அரபு பைத்துகள் மூலம் ஆட்டம் பாட்டம் மியூசிக் கொட்டு குழல் போன்றவற்றை அடியோடு ஒழித்து காட்டியதில் அதிக பங்கு , இந்த மர்ஹூம் அவர்களுக்கும் , அவர்களின் அருமை சகோதரர் மறைந்த மர்ஹூம் முத்துச்சுடர் ஜுமானி ஆலிம் அவர்களுக்கும் உண்டு என்பதை இந்த தருணத்தில் நினைவு கூறுகிறேன்.

அல்லாஹ்வின் நாட்டப்படி மண்ணுலக வாழ்வை துறந்து மறு உலக வாழ்வை அடைந்த , மறைந்தும் மக்கள் மனதில் நிறைந்து வாழும் மர்ஹூம் அவர்களை பிரிந்து தவிக்கும் உற்றார் உறவினரின் இதயங்களை வல்ல ரஹ்மான் அழகிய பொறுமையை கொண்டும் ஆறுதல் அடைய செய்வானாகவும் ... மர்ஹூம் அவர்களின் நல்ல அமல்களை வல்ல ரஹ்மான் பொருந்தி(கபூல் செய்து) , மறுமையில் நபிகளாரின் சபா அத்துடன் மேலான சுவன பதியாம் ஜன்னத்துல் பிர்தவ்சில் நுழையச் செய்வானாகவும் , ஆமீன் !

மர்ஹூம் அவர்களின் வேதனையில் நாங்களும் பங்கு கொள்வதோடு , குடும்பத்தார் அனைவருக்கும் எங்களின் அன்பு கனிந்த சலாத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம் (அஸ்ஸலாமு அலைக்கும்) .

அன்புடன் ,
K.V.A.T. குடும்பத்தினர்
குறுக்குத்தெரு
காயல் பட்டணம் மற்றும் கத்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. காயல் மாநகர் ஒரு தலைச் சிறந்த ஆலிம் பெருந்தகையை இழந்து விட்டது........
posted by A.W.Abdul Cader Aalim bukhari (Mumbai) [17 December 2011]
IP: 114.*.*.* India | Comment Reference Number: 14727

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

காயல் மாநகர் ஒரு தலைச் சிறந்த ஆலிம் பெருந்தகையை இழந்து விட்டது. வல்ல அல்லாஹ் அலிம் பெருந்தகையின் சிறிய பெரிய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவர்களுக்கு உயர்ந்த சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவுஸை கொடுத்து அருள் புரிவானாக! ஆமீன்.

மேலும் அன்னாரை பிரிந்து வாழும் நமதூர் மக்கள் குறிப்பாக அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் சபுரை கொடுப்பானாக !ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH K.S.A) [17 December 2011]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14728

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லோருடனும் சிரித்த முகத்துடன் பழகும் ஒரு ஆலிம் பெருந்தகை யை நாம் இழந்துள்ளோம்.

வல்ல நாயன் அவர்களின் பிழைகளை மன்னித்து கப்ரை சுவனமாக்கி ஆகிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னத்துல் பிர்தௌஸில் சேர்த்தருள் வானாக - ஆமீன்

அன்னாரின் குடும்பத்தாருக்கு சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருளி அவர்கள் விட்டுசென்ற நல்ல பொது சேவைகளை தொடரும் சக்தியை கொடுத்தருள் புரிவானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by suaidiya buhari (chennai) [17 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14729

assalamualikum

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...

மர்ஹூம் அவர்கள் குடும்பத்திற்கு என் உடைய சலாதினை தெரிவித்து கொல்கிறேன்.சபூரை கடைபிடிக்கவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by A.R.Refaye (Abudhabi) [17 December 2011]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14730

மர்ஹூம் அவர்களின் நல்ல அமல்களை வல்ல ரஹ்மான் பொருந்தி,வல்ல நாயன் அவர்களின் பிழைகளை மன்னித்து கப்ரை சுவனமாக்கி ஆகிரத்தில் உயரிய சுவன பதியாகிய ஜன்னத்துல் பிர்தௌஸில் சேர்த்தருள் வானாக – ஆமீன்

குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Kudack Mohudoom Mohamed (Kuwait) [17 December 2011]
IP: 213.*.*.* Kuwait | Comment Reference Number: 14731

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Mohamed Thamby (Dubai) [17 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14732

"அஸ்ஸலாமு அலைக்கும்."

குருவித்துறைப்பள்ளி, புகாரிஷ் ஷரீஃப் தலைவர் அல்ஹாஜ் ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் வபாத் செய்தி கேட்டு கவலை அடைந்தேன்.இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவங்களை மன்னித்து மேலான சுவனபதியை அளிப்பானாக ஆமீன். அன்னாரை இழந்து வாடும் ஆலிம் அவர்களின் குடும்பத்தினர்களுக்கு மேலான பொறுமையை கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
28. குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Solukku M.I. Seyed Mohamed Sahib (Jeddah, KSA.) [17 December 2011]
IP: 168.*.*.* United States | Comment Reference Number: 14735

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகள் இருப்பின் அவற்றை பொறுத்து அவர்களின் மறைவிடத்தை ஒளிவாக்கி வைத்து மறுமையிலும் நல்லதொரு பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தாருக்கு பொறுமையை அல்லாஹ் தந்தருள்வாங்க, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
29. குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Shaik Noordeen (AL Khobar) [17 December 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14740

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ... எல்லாம் வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஜென்னதுள் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பதாருக்கு பொறுமையை வல்ல நாயன் கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
30. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by sms mdlabbai MFB (qatar) [17 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14741

அஸ்ஸலாமு அலைக்கும் என்அன்பின் சின்னப்பா மறைவு அறிந்து மிக மனவேதனை அடைந்தேன். வல்ல அல்லாஹ் அவர்களுக்கு மணக்கும் ஜன்னதுல் பிர்தௌஸை நசீபாகுவானாக ஆமீன்.

நான் இங்குஅவர்களுக்காக பொறுமைகொள்கிறேன். இன்னும் என் குடும்பத்தார் அனைவர்க்கும் ஆழ்ந்த இரங்கலை பகிர்ந்து கொள்கிறேன்.

இவர்கள் பெருமைமிக்க அபூபக்கர் சித்தீக்(ரலி)அவர்களின் பரம்பரயில் வந்தவர்கள். ஹல்ரத் பெரிய முத்துவாப்பா (ரலி) அவர்களின் பேரரும் ஆவார்கள்;

எல்லாம் வல்ல அல்லாஹ் இவர்களின் பிழைகளை பொருத்து மேன்மைமிகுந்த நபிகலாரோடு சேர்த்து வைப்பானாக .ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
31. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்........
posted by Shameemul Islam SKS (Chennai) [17 December 2011]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 14742

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கல்வியை சுமந்தவராய் இருந்தாலும் ஒரு ததும்பாத குடமாகவே திகழ்ந்தார்கள்.

பெரியவர் முதல் சிறியவர் வரை புன்னகைத்தே பேசுவார்கள்.

இறை வழிபாட்டில் தாமும் சிறந்து விளங்கி தமது குடும்பத்தவருக்கும் சமூகத்தவருக்கும் முன்னுதாரணம் தந்தார்கள்.

வியாபாரத்தின் மூலம் தம் வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டவர்கள்.

தலைமைப் பொறுப்பிற்கும் தகுதியாய்த் திகழ்ந்தார்கள்.

அழகான குரல் வளத்தில் ஓர் அக்காலத்து புல்புல்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மன்னறை மற்றும் மறுமை வாழ்வில் இவர்களுக்கு மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக, ஆமீன்.

புகைப்படத்தில் இவர்களையும் மர்ஹூம் மஹ்மூத் ஹாஜி அவர்களையும் ஒரு சேர பார்க்கும்போது உருக்கம் ஏற்படுவதை மறைக்க முடியவில்லை.

தீவுத்தெருவின் இரண்டு மாணிக்கங்கள் அடுத்தடுத்து சரிந்தது மிகப்பெரும் இழப்பே. அல்லாஹ் மர்ஹூம்களின் குடும்பத்தவருக்கு பொறுமையையும் சாந்தத்தையும் வழங்குவானாக.

மர்ஹூம்கள் இருவரும் விட்டுச்சென்ற சமூகக் கடமைகளை அவர்களின் குடும்பத்தவர்கள் தொடர்ந்து செய்வதற்கு அல்லாஹ் அவர்களுக்கும் அருள் செய்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
32. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by M.S.M சம்சுதீன் - 13வது வார்டு உறுப்பினர். (காயல்பட்டினம்) [17 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14743

வ‌ல்ல‌ ர‌ஹ்மான் அன்னாரின் பிழைக‌ளை பொறுத்து ஜ‌ன்ன‌த்துல் ஃபிர்த‌வ்ஸ் என்னும் மிக‌ உய‌ர்ந்த‌ பாக்கிய‌த்தை அவ‌ர்க‌ளுக்கு அளிக்க‌ எல்லாம் வ‌ல்ல‌ இறைவ‌னை வேண்டுகிறோம். அன்னாரை இழ‌ந்து வாடும் அவ‌ர்த‌ம் குடும்ப‌த்தின‌ருக்கு காயல்பட்டிணம் ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தார்கள் (பங்குதாரர்கள்) த‌ன‌து ஆழ்ந்த‌ இர‌ங்க‌லை தெரிவிப்ப‌தோடு இந்த‌ பேரிழ‌ப்பை தாங்கும் அழ‌கிய‌ பொறுமையையும் ம‌ன‌ வ‌லிமையையும் வ‌ல்ல‌ இறைவ‌ன் அவ‌ர்க‌ளுக்கு த‌ந்த‌ருள‌ ‌ஏக‌ வ‌ல்லோனை பிரார்த்திக்கிறோம்.

எம்.எஸ்.எம். சம்சுதீன் - 13 வார்டு உறுப்பினர்.
ஸ்டார் டெக்ஸ்டைல்ஸ் - காயல்பட்டிணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
33. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by ZubairRahman (Doha-Qatar) [17 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14746

இன்னாலில்லாஹி வ இன்னா இலையி ராஜிவூன்.

அன்னாரின் பிழைகளை பொறுத்து மறுமை வாழ்வை சிறப்பாக்கித்தர வல்லோனிடம் வேண்டியவனாக அன்னாரின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களுடைய ஸலாத்தினை தெரியப்படுத்துவதுடன்(அஸ்ஸலாமு அலைக்கும்) பொறுமை காக்கவும் வேண்டுகிறேன்.

மர்ஹூம். அபூ லியாகத் அலி குடும்பத்தினர் சார்பாக.
அபூ ஜுபைர் ரஹ்மான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
34. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by N.T BAAZUL ASHAB (Riyadh -KSA) [17 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14749

ஒரு ஆலிமுக்காக வேண்டி வானம், பூமி அனைத்திலும் உள்ள உயிர் இனங்கள், கடலில் வாழும் மீன் இனங்களும் பிழை பொறுக்க வேண்டுகின்றன ( நபி மொழி )

எங்கள் குடும்ப தலைவர் அருமை சாச்சப்பா நெஞ்சில் நிறைந்த S.K.ஷைக் அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானி அவர்களின் இழப்பு எங்களுக்கு பேரிழப்பாகும். அல்லாஹ்வின் கட்டளை படி நிகழ்ந்து விட்ட சம்பவத்துக்கு நாங்கள் யாவரும் சபூர் செய்து கொண்டோம். நம் குடும்பத்தினர் முஹல்லா வாசிகள் யாவரும் சபூர் செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எங்கள் சாச்சப்பா அவர்களின் மண்ணறையை பிகாசமாக்கி மேலான சுவன பதியில் நுழைய செய்வானாக. ஆமீன்

N .T .பாசுல்அஸாப்
டிசைன் பார்க்
பாத்தா, ரியாத், சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
35. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by A.M.Noor mohamed zakariya (SAUDIARABIA MAKKAH) [17 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14751

அஸ்ஸலாமு அலைக்கும்.
இன்ன லில்லாஹி , வ இன்ன இலைஹீ ராஜி ஊன்.

மவ்லவி அல்ஹாஜ், அல்ஹாபிழ் எஸ்.கே .செய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மரண செய்தி அறிந்து கவலை அடைந்தோம். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பத்தியை கொடுப்பானாக!ஆமீன்.

அன்னாரை இழந்து வாழும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

A.M.Noormohamed Zakariya &
R.Ahamed mohiadeen
MAKKAH K.S.A


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
36. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by S.S.SAHUL HAMEED (Riyadh -KSA) [17 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14752

எனது அன்பு மாமா சிறந்த மார்க்க ஜீவி. அல்ஹாஜ். அல்ஹாபிள் S .K .ஷைக் அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானி அவர்கள் தாருல்பகா அளவில் சேர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்து ஆற்றலென்ன துயரம் அடைந்தோம். அல்லாஹ்வின் கழாகத்ரு படி நிகழ்ந்து விட்ட சம்பவத்துக்கு நாங்கள் யாவரும் சபூர் செய்து கொண்டோம்.

நம் குடும்பத்தினர் யாவருக்கும் அல்லாஹ் மேலான பொறுமையை தந்தருள்வானாக. எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் கப்ரை ஒளிமயமாக்கி மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் இல் நுழைய செய்வானாக. ஆமீன்

S . S .சாகுல்ஹமீத்
சிங்கபூர் பிளாசா
பத்தா- ரியாத், சவுதி அரேபியா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
37. انا لله وانا اليــه راجـعـــــــون
posted by Syed Muhammed Sahib SYS (Dubai, U.A.E.) [17 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14754

எல்லாம் வல்ல அல்லாஹ் மறைந்த ஆலிம் அவர்களை மேலான சுவர்க்க பதியில் சேர்த்தருள்வானாக அமீன்.

அன்னாரை பிரிந்து துயரத்தில் வாடும் சொந்தங்களுக்கு அழகிய பொறுமையை கொடுத்து அருள் புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
38. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Mauroof, S/o. Mackie Noohu Thambi (Dubai) [17 December 2011]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14756

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

நிமிர்ந்த நடையும் நேரிய பார்வையும் தன்னடக்கமும் ஒரு சேர பெற்ற ஆலிம் பெருந்தகையாகவே நான் மர்ஹூம் அவர்களை கண்டிருக்கிறேன்.

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மண்ணறையை சுவனத்து பூங்காவாக அமைத்து கொடுத்து மேலான மறுமை வாழ்வை கொடுப்பானாக-ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களது பிரிவால் துயருறும் குடும்பத்தினர் உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
39. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Abdul Azeez (chennai) [17 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14758

அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணரை மற்றும் மறுமை வாழ்வில் மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக, ஆமீன்.

மேலும் அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் குடும்பத்தவருக்கு பொறுமையையும் சாந்தியும் வழங்குவானாக.ஆமீன்.

A .G . அப்துல் அஜீஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
40. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by N.Tsulaiman (YANBU) [17 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14772

இன்னா லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன் எங்கள் ஜமாதின் தலைசிறந்த மார்க்க மேதை அவர்களின் பிழைகளை பொருத்து எல்லாம்வல்ல இறைவன் அவர்களின் மண்ணறையை வெளிச்சமாக்கி மேலான ஜன்னத்துல் பிர்டௌசை கொடுபானாக ஆமீன் அண்ணாரை பிரிந்து வாடும் குடும்பத்தார் அனைவர்க்கும் இறைவன் பொறுமையும் சாலமதையும் கொடுபனாக .

N.T.சுலைமான் & Z .A .சுல்தான் லெப்பை YANBU.KSA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
41. கண்ணீருடன்...
posted by Ansari YentY (K S A) [17 December 2011]
IP: 109.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14773

எனது பாசத்திற்குரிய அன்பு மாமா அல்ஹாஜ்.அல்ஹாபிழ், எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் வபாத்து செய்தி அறிந்து மிக்க வேதனை அடைந்தேன்.

அல்லாஹ்வின் நாட்டப்படி நடப்பவைகளுக்கு நாம் பொறுமையாக இருக்க கடமைப்பட்டுள்ளோம்..அல்லாஹ்,மர்ஹூம் அவர்களின் பிழைகள் இருப்பின் அவைகளை மன்னித்து அண்ணல் நபிகள்(ஸல்)அவர்களின் அழகிய ஷபாஅத்தோடு மேலான சுவனபதியில் சேர்த்து அருள்புரிவானாக..ஆமீன்...

மர்ஹூம் அவர்களை பிரிந்து வாடும் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் அல்லாஹ் அதிக பொறுமையை கொடுத்தருள்வானாக..ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
42. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by M.I.Khaleelur Rahman (Bangalore) [18 December 2011]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 14780

அன்பிற்குரிய மவ்லானா குடும்பத்தினரே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.

எனது பாசமிகு மரியாதைக்குரிய ஹஸ்ரத் மவ்லானா உடைய வஃபாத் செய்தி பார்த்து மிகவும் கவலை அடைந்தேன். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

ஆலிம் உடைய மவ்த் ஆலமுடைய மவ்த் என்பார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மஃபிரத்தை நல்கி, மேலான சுவன பாக்கியம் ஆகிய ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் நபிமார்களோடும், சித்தீக்கீன்களோடும் சேர்த்து அருள் புரிவானாக.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஊர் மக்களுக்கும் அல்லாஹ் நல்ல பொறுமை எனும் ஸப்ரன் ஜமீலாவை கொடுத்து அருள்வானாகவும், ஆமீன். வஸ்ஸலாம்.

இப்னு எஸ்.எம்.எஸ். முஹம்மது இபுறாஹீம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
43. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by Salai Sheikh Saleem (Dubai) [18 December 2011]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14790

காயல் மாநகர் ஒரு தலைச் சிறந்த ஆலிம் பெருந்தகையை, எல்லோரிடமும் கனிவுடன் பேசும் ஒரு பண்பாளரை இழந்து விட்டது. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். வல்ல அல்லாஹ் ஆலிம் பெருந்தகையின் சிறிய பெரிய பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அவர்களுக்கு மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவுசில் உயர்ந்த அந்தஸ்த்தை கொடுத்து கௌரவிக்க அருள் புரிவானாக! ஆமீன்.

அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவர்களது மக்கள், எனது பேரன்பிற்கும் பேரு மரியாதைக்குமுரிய ஹாபிழ். இஸ்மாயில் ஹாஜியார் , ஹாஜி. ஷேய்க் சுலைமான், மருமக்கள், குடும்பத்தார் அனைவர்களுக்கும் அல்லாஹ் சப்ரன் ஜமீல என்ற அழகிய பொறுமையை தந்தருள்வானாகவும் ஆமீன்!!!

சாளை ஷேக் ஸலீம் மற்றும்
குடும்பத்தார்கள்
அமீரகம்

ரியாத் NTB காக்கா, தயவுசெய்து இஸ்மாயில் காக்காவின் அலைபேசி எண்களை எனக்கு தரவும் (00971507740302 )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
44. Re:குருவித்துறைப்பள்ளி, புகா...
posted by abdul wadood (Bangkok) [18 December 2011]
IP: 58.*.*.* Thailand | Comment Reference Number: 14796

மவ்லவி அல்ஹாஜ், அல்ஹாபிழ் எஸ்.கே .செய்கு அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மரண செய்தி அறிந்து கவலை அடைந்தோம். எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான சுவன பத்தியை கொடுப்பானாக!ஆமீன்.

اعظم الله اجركم واحسن عزائكم وغقر لميتكم اللهم اغفر له وارحمه وعافه واعف عنه واكرم نزله ووسع مدخله واعذه من عذاب القبر عذاب النار


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
45. மனமார்ந்த நன்றி!
posted by Sheik Abdullah (Kayalpatnam) [19 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14878

அன்பிற்கினிய சகோதர, சகோதரிகளே!

மர்ஹூம் அவர்களின் குடும்பத்தினரான எங்களன்பு சொந்தங்களே!!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.

தன் வாழ்நாளெல்லாம் இறைவனுக்காக வாழ்ந்து, நம் யாவரின் நெஞ்சங்களிலும் நீங்காவிடம் பெற்று, இன்று நம்மை விட்டும் பிரிந்து சென்றுவிட்ட பெருமதிப்பிற்குரிய பெருமகனாரும், நமது அன்பிற்கு என்றும் சொந்தக்காரருமான

மர்ஹூம் அல்ஹாஜ் அல்ஹாஃபிழ் எஸ்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் ஆலிம் ஜுமானீ

அவர்களின் மறைவையொட்டி, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இரங்கல் தெரிவித்தும், இனிய துஆக்களை இறைஞ்சியும் கருத்து தெரிவித்துள்ள தங்கள் யாவருக்கும், மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாராகிய நாங்கள் எமதன்பான நன்றியை அகங்குளிர தெரிவித்துக்கொள்கிறோம்.

அல்லாஹ்வின் மேலான கட்டளைக்கிணங்க நாங்கள் யாவரும் ஸபூர் எனும் பொறுமையை மேற்கொண்டோம். தாங்களனைவரும் ஸபூரைக் கடைப்பிடிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

உங்களில் யாருக்கும் சொல்லலோ - செயலாலோ, அறிந்தோ - அறியாமலோ மர்ஹூம் அவர்களால் ஏதேனும் தங்கடம் ஏற்பட்டிருந்தால் அவற்றையெல்லாம் பொருந்திக்கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

அத்துடன், கொடுக்கல் - வாங்கலில் தங்களில் யாருக்கேனும் மர்ஹூம் அவர்கள் நிலுவை செய்திருந்தால், எங்களை உரிமையுடன் அணுகுமாறு அன்புடன் வேண்டி நிறைவு செய்கிறோம்...

வல்ல அல்லாஹ் நம் யாவருக்கும் நல்லருள் புரிவானாக, ஆமீன்.

என்றும் அன்புடன்,
S.A.முஹம்மது இஸ்மாயில் (மகன்),
S.A.ஷெய்கு சுலைமான் (மகன்)

S.A.முத்து ஹலீமா பீவி (மகள்)
S.A.ஃபாத்திமா பீவி (மகள்)
S.A.ஆஷிகத்து துர்ரிய்யா (மகள்)

S.S.ஷாஹுல் ஹமீது (மருமகன்)
K.S.கிழுறு முஹம்மது (மருமகன்)
A.S.L.சுலைமான் லெப்பை (மருமகன்)

M.J.ஃபாத்திமா பீவி (மருமகள்)
K.S.மின்ஹத்துல் பாரீ (மருமகள்)

மற்றும் உற்றார் - உறவினர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
இரவில் சிறு சாரல்!  (19/12/2011) [Views - 2566; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved