Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:54:32 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7707
#KOTW7707
Increase Font Size Decrease Font Size
புதன், டிசம்பர் 14, 2011
விளையாட்டுத் துறை மாணவர்களுக்கு, எல்.கே.மேனிலைப்பள்ளியின் ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் விருந்து!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3670 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எல்.கே.மேனிலைப்பள்ளியின் பணி ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ், அப்பள்ளியின் விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு விருந்து வழங்கி உபசரித்தார்.

காயல்பட்டினம் எல்.கே.மேனிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஜெபராஜ் ராஜநாயகம் அண்மையில் பணி ஓய்வுபெற்றார். பள்ளி நிர்வாகத்தின் சார்பில் 07.12.2011 அன்று மாலை 04.30 மணிக்கு அவருக்கு வழியனுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

முன்னதாக தனது பணி ஓய்வை முன்னிட்டு, 04.12.2011 அன்று மதியம், பள்ளியின் விளையாட்டுத் துறை மாணவர்களுக்கு அவர் விருந்து வழங்கினார். காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு அனைவருக்கும் விருந்தாகப் பரிமாறப்பட்டது.





இவ்விருந்தில், பள்ளியின் விளையாட்டுத்துறை இந்நாள் - முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.







விருந்தின் நிறைவில், மாணவர்கள் பலர் ஆசிரியர் ஜெபராஜுக்கு சால்வை அணிவித்து, குழுப்படம் எடுத்து, நினைவுப் பரிசுகளையும் வழங்கி தமது மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.











விருந்து ஏற்பாடுகளை, எல்.கே.மேனிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்களான - ஐக்கிய விளையாட்டு சங்க மேடைக்குழுவினர் செய்திருந்தனர்.




Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:விளையாட்டுத் துறை மாணவர்க...
posted by Mohmed Younus (Trivandram) [14 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14514

"பஸ் சிநேகம்","ரயில் சிநேகம்" என்று ஒரு மணிநேர பயணத்திற்கு இடையிலே மனிதர்களுக்கு இடையில் ஏற்படும் சினேகத்திற்கு மத்தியில், இந்த ஆசிரியரின் 27 வருட காயல் சிநேகிதம் எளிதில் பிரிய முடியாததுதான்.

இதன் விளைவுதான் இந்த தட புடல் விருந்து என்று என்ன தூண்டுகின்றது. பொதுவாக,நமதூரின் சிநேகம் எளிதில் யாரையும் விட்டுவிடாது. இங்கு பேணப்படும் கலாசாரம்,அமைதி,விருந்தோம்பல்,நட்போடு பழகும் தன்மை-இவற்றின் விளைவால்,நமதூர் கலாச்சாரத்தோடு எளிதில் கலந்து விடுகின்றனர். ஒரு சில நபர்கள்,சம்பவங்கள் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம். "லெப்பையிடம் ஓத போக வில்லையா"?, "அஷர் தொழுதிட்டியா"? "வாப்பா எப்பொழுது சபர் வருகிறார்கள்"? என்று கேட்கும் நம் வீட்டில் தலை முறை,தலை முறையாக இருக்கும் வேலைக்கார அம்மாக்களை பார்த்து இருக்கின்றோம்.

ஐம்பது வருடங்களாக ஊரில் பெட்டிக்கடை வைத்து வியாபாரம் செய்யும் கே.டி.எம்.தெரு ஆதிலிங்கம், சதுக்கை தெரு முத்து நாடார்,சமீபத்தில் மரித்த கறிக்கடை பெரிய நாடார்,எவர்கள் எல்லாம் இதற்கு உதாரணங்கள்.

" தம்பி ஐந்து ரூபாய் வியாபரம் நடந்தாலும் பரவாஇல்லை,எனக்கு இங்கு வந்து கடை தொறந்தால் தான் நிம்மதி ஏற்படுகின்றது" - இது முத்து நாடார் என்னிடம் மூன்று வருடத்திற்கு முன்பு கூறியவை. இவர்களை பற்றிய கேலி,கிண்டலுக்கு உரிய சில சுவராசியமான சம்பவங்களும் உண்டு.

காயல்பட்டினதிற்கு மாற்றம் வேண்டும் என்று விளைந்து கேட்கும் அரசு ஊழியர்களை பார்த்து இருக்கின்றோம். இதற்கு வேறு காரணங்கள் இருந்தாலும்,தலையாய காரணம் அவர்கள் நமூதரை பற்றிய நல்ல எண்ணம் தான். எந்த சூழ்நிலை தொடர்ந்து நிலை பெற இறைவன் உதவி செய்ய வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. ஒரு மாறுதலான நிகழ்வு...
posted by சாளை S.I.ஜியாவுதீன் (அல்கோபார்) [14 December 2011]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14517

புல்லரிக்கின்றது.. ஆசிரியர் ஜெபராஜ் அவர்களின் இந்த விருந்தை நினைத்து..

ஒரு மாறுதலான நிகழ்வு... ஆசிரியர் தன் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களுக்கு விருந்து கொடுப்பது, இதுவரை நான் பார்க்காத நிகழ்ச்சி இது. பாராட்டுக்கள் ஐயா.

நாங்கள் +2 படிக்கும் காலம் தான் இவர்கள் பணியில் சேர்ந்தார்கள். ஒரு நல்ல, அமைதியான ஆசிரியர். அவர்களின் வாழ்வு செழுமையாக இருக்க வாழ்த்துகிறேன்.

** இன்ஷாஹ் அல்லாஹ்.. அடுத்த வருடம் என் ஆசான். தலைமை ஆசிரியர், மரியாதைக்குரிய ஹனிபா சார் அவர்களை பணி ஓய்வு பெறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு பாராட்டு விழா இப்போதே நடத்தலாமே... **

<<<<<< இவர்களும் தங்களின் முன்னாள் மற்றும் இந்நாள் மாணவர்களுக்கு விருந்து கொடுத்தால் அது "ஊர் சாப்பாடாக" அல்லவா ஆகிவிடும், கொடுப்பாங்க, கொடுப்பாங்க..லீவு போட்டு வந்துவிடுவேன்ல..இன்ஷாஹ் அல்லாஹ். >>>>>>>

சாளை S.I.ஜியாவுதீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:விளையாட்டுத் துறை மாணவர்க...
posted by Vilack SMA (Yi Li , Hetang ) [14 December 2011]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 14529

ஓய்வு பெற்றபோதிலும் இந்த ஆசிரியரின் அணுகுமுறை சற்று வித்தியாசமாகவும் , பாராட்டும்படியாகவும் உள்ளது . இவருடைய ஓய்வு காலங்கள் சிறப்பாக அமைய இறைவனை வேண்டுகிறேன் .

Vilack SMA
( சென்ட்ரல் பள்ளி முன்னாள் மாணவர் 1982 )


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:விளையாட்டுத் துறை மாணவர்க...
posted by MOHAMMED LEBBAI MS (dxb) [14 December 2011]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 14535

இதுபோல ஒரு ஆசிரியரை எங்களின் ஸ்கூல் நாட்களில் பார்க்கமுடியாமல் போயிடிச்சே? நான் இந்த ஸ்கூலில் இருந்து படித்து முடித்து வெளியேறிய வருடம் இவர் joind பண்ணிருக்கார்,,, ஒரு நல்ல ஆசிரியரை நாங்கள் மிஸ் பண்ணிருக்கோம்,,,

இப்ப இருக்கும் ஆசிரியர்களும்,,,,,, புதியதாக வரஇருக்கின்ற PT ஆசிரியரும் இவரை ஒரு முன்மாதிரியாக கொண்டு செயல்புரியவேண்டும்,,,,,,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:விளையாட்டுத் துறை மாணவர்க...
posted by Mohmed Younus (Trivandram) [14 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14539

முஹம்மத் லெப்பை ஒன்னும் கவலை இல்லை. விருப்பம் இருந்தால் இருவரும் மீண்டும் சேரலாம். அப்ளை பண்ணுங்கோ....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் இதமழை!  (13/12/2011) [Views - 3460; Comments - 2]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved