Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:21:14 PM
திங்கள் | 29 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1733, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:02Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:24
மறைவு18:27மறைவு10:15
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5005:1505:40
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 7696
#KOTW7696
Increase Font Size Decrease Font Size
திங்கள், டிசம்பர் 12, 2011
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை சுமுகமாகத் தீர்த்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி நகர தி.மு.க. சார்பில் உண்ணாவிரதம்! திரளானோர் பங்கேற்பு!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4545 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

முல்லை பொpயாறு அணை பிரச்சனையை சுமூகமாகத் தீர்த்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில் இன்று காலை 08.00 மணியளவில், காயல்பட்டினம் பெரிய தெரு - பிரதான வீதி முனையில் உண்ணாவிரதம் நடைபெற்றது.

மத்திய முன்னாள் அமைச்சர் வெ.ராதிகா செல்வி நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், திமுக நகரச் செயலாளர் மு.த.ஜெய்னுத்தீன், துணைச் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்ற துணைத்தலைவருமான எஸ்.எம்.முகைதீன் என்ற மும்பை முகைதீன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஐ.காதர் மற்றுமு மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகளும், கட்சியின் முன்னோடிகளும் இப்போராட்டத்தில் முன்னிலை வகித்தனர்.



இதில் உரையாற்றிய அனைவரும், முல்லை பெரியாறு அணை விஷயத்தில் கேரளா அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும், உச்சநீதிமன்றம் துவக்கத்தில் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரியும், மத்திய - மாநில அரசுகள் இது விஷயத்தில் அக்கறை காட்ட வேண்டுமென்றும் வலியுறுத்திப் பேசினர்.

இந்நிகழ்வில், நகர திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.





தகவல்:
மாஷா அல்லாஹ் டிஜிட்டல்,
பிரதான வீதி, காயல்பட்டினம்.


[கூடுதல் படங்கள் இணைக்கப்பட்டது - 12.12.2011 - 17:00]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:முல்லைப் பெரியாறு அணை விவ...
posted by Mohmed Younus (Trivandram) [12 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14399

இத்தகைய உணர்ச்சிபூர்வமான பிரச்சனைகளை தூண்டிவிடுவதில் இரு கழகங்களுக்கும் ஒன்றை ஒன்று சளைத்தது அல்ல. ஹிந்தி எதிர்ப்பு முதல் விடுதலை புலிகள் பிரச்னை வரை....

தன் இனம், தன் மொழி சார்ந்த பிரச்சனைக்காக நடக்கும் போராட்டங்கள் எல்லாம் கழகங்களுக்கு அது மற்றொரு "சுதந்திர போராட்டமே" ஆகும்.

இதில் நடந்தேறும் வன்முறைகளும்,அளிச்சட்டியாங்களும் கழகங்களின் கண்களுக்கு "நியாமான போராட்டமாகவே" தெரியும். இவர்களின் "மொழிப்போர் தியாகிகள்" எல்லாம் தன் உடன் பிறந்த மற்றொரு தமிழனை உயிரோடு எரித்த வீரர்கள்(?)தான்.

ஆனால், இதே வழிமுறையை மற்ற சமூகங்கள்,இனங்கள் கையாண்டால் அதற்கு உடனே "தீவிரவாத" முத்திரை கழகங்களால் குத்தப்படும்.

மலையாளிகளை விரட்டுவது, அவர்களின் வியாபார தளங்களை நாசப்படுத்துவது எல்லாம் இப்போதைக்கு கழகங்களின் ஆசியுடன் நடக்கும்" உரிமை போராட்டங்கள்".

தமிழர்கள் தாக்கபடுவது போன்ற மாயை ஏற்படுத்தி மலையாளிகளை தாக்கி தன் வயிறு வளர்க்கும் கலகங்கள் தமிழ்நாட்டின் ஒரு சாபக்கேடு. என்று இந்த கழகங்களின் பிடியில் தமிழர்கள், சிறுபான்மை சமூகத்தவர்கள் விடுபடுகிண்டர்களோ அன்றுதான் தமிழனக்கு விடிவு காலம் பிறக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:முல்லைப் பெரியாறு அணை விவ...
posted by Mohmed Younus (Trivandram) [12 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14403

அணு விஞ்சானி அப்துல் கலாம் கூடங்குளம் அணு மின் நிலயத்தை சுற்றி பார்த்து பாதுகாப்பு பத்திரம் தந்து விட்டபிறகும் ஐயோ,அம்மா என்று கூக்கிரல் இடுகின்றன அம்மா கட்சியும்,ஐயா கட்சியும்.

ஆனால், இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி இந்த அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என்று கூறிய பிறகும் ஏன் இந்த வன்முறை,ஆர்பாட்டங்கள்?

உங்கள் தமிழரின் உயிர்தான் உயிரா? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது எல்லாம் கழகங்களுக்கு தோலில் போடும் துண்டு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:முல்லைப் பெரியாறு அணை விவ...
posted by PS ABDUL KADER (jeddah) [12 December 2011]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14407

""முல்லைப் பெரியாறு பிரச்னையில் தமிழக மக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் ஒற்றுமையுடன் இருப்பதை நிலைநாட்டும் வகையில், வரும் 15ம் தேதி சட்டசபை விசேஷக் கூட்டம் கூடுவதக்கு மாநிலஅரசு தீர்மானித்து இருப்பதை அறிவீர்கள்.

ஆனால் தி.மு.க .கூட்டணி அங்கம் வைக்கும் மத்திய அரசு ஏன் மவுனம் சாய்த்துவருகிரர்கள்? என்னதான் நிலந்தர தீர்வு எடுக்க போகுதோ.

தி.மு.க MP களுக்கு முல்லை பெரியார் அணை விவகாரமா மத்தியஅரசுவிடம் தீர்வுக்கான அணுகுமுறையை சொல்லிக்கொடுக்கவில்லைய ! எப்படிதான் தீர்வு வரும் பொருது இருந்து பார்ப்போம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. சுயநலப் போக்கை கண்டிக்கிறோம்.
posted by சதக் (இப்னு சாகிப்) (Dammam, Saudi Arabia) [12 December 2011]
IP: 89.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14412

முல்லை பெரியாறு போன்ற உணர்சிபூர்வமான பிரச்சனையை அரசியல் ரீதியாக தூண்டி விடும் கேரள அரசியல்வாதிகள் மிகவும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். பல லட்ச தமிழர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் இவர்களின் சுயநலப் போக்கை தமிழகத்தில் யாரலும் சகித்துக் கொள்ள முடியாது.

DAM999 என்ற படம் எடுத்து மக்களை தூண்டிவிட்டு குளிர்காய நினைப்பவர்களை நிச்சயம் வரலாறு நிந்திக்கும். முல்லை பெரியாறு அணை பற்றிய உண்மை வரலாற்றை அறிய விரும்புபவர்கள், கீழ் காணும் காணொலியை பார்க்கவும்.

PART-1
http://www.youtube.com/watch?v=eXti8xblCLM

PART-2
http://www.youtube.com/watch?v=pDYDBcfziDE


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ரேஆப்பால் :தவிக்கும் நம் மக்கள்!..
posted by OMER ANAS (DOHA QATAR.) [12 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14413

கொஞ்சமும் இது போல் நடக்கும் என்று அறியாமல் அரசியல் மலையாளிகள் ஆரம்பித்து வைத்த காரியம் இப்ப 50 பது சதவிகித மலையாளிகளும், தமிழ் நாட்டை நம்பி போட்ட முதலீட்டை பாதித்து உள்ளது.

ஆடு, மாடு, காய்கறிகள், மீன் வகைகள் வைக்கோல், அரிசி பருப்பு, மற்றும் இரா சுறா இதுகளையெல்லாம் தாராளமாக பெற்றுக் கொண்டு நமக்கே ஆப்பு வைக்க நினைக்கும் இவர்களுக்கு, தமிழன் ஒன்று கூடி வைக்கும் ஆப்பால் தவிக்கும் நம் மக்கள் நிலையினை நாம் ஒருகணம் சிந்திக்கத்தான் வேண்டும். இதன் வெளிப்பாடுதான் முஹம்மத் யூனுஸ் கருத்து!!!

அதே போல் கோவை மலையாளிகள் கருத்தையும் நாம் பார்த்தால் நமக்கு உண்மையான வித்தியாசம் புரியும்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:முல்லைப் பெரியாறு அணை விவ...
posted by jamal (kayalpatnam) [12 December 2011]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 14415

கருணாநிதி நடத்தும் நாடகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தின் காயல்பட்டண நடிகர்கள் இவர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:முல்லைப் பெரியாறு அணை விவ...
posted by Abu Zainab (Hamza) (Al Riyadh) [12 December 2011]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14416

தமிழக கேரள மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு

முல்லைப் பெரியாறு - பிரச்சினையும் தீர்வும். காணொளி.

http://player.vimeo.com/video/18283950?autoplay=1


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இஸ்லாமிய பார்வையில் அமையட்டும்.
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [12 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14417

இந்த விஷயத்தில் இரு அரசுகளும் சொல்வது நேர் முரணாகவே உள்ளது.

ஒரே கொள்கை (?) என்று பீற்றி கொள்ளும் அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் இரு மாநிலங்களிலும் நேர் முரணாகவே உள்ளது.

அப்போது இதுவெல்லாம் அரசியல் விளையாட்டு தான் என்பது மட்டும் அரசியல் சாக்கடையில் மூழ்கி கிடக்கும் அப்பாவி மக்களுக்கு மட்டும் புரிவதில்லை. அரசியல்வாதி ஒருவன் சொல்லும் அதே வார்த்தைகளை அப்படியே பரப்ப முனைகிறார்கள்.

இந்த அணைக்கு ஏதும் சம்பவித்தால் (அப்படி ஒன்னும் நடக்காமல் அல்லாஹு காப்பாத்தட்டும்) எங்களுடைய நிலைமை என்னவாகும் என்று ஒரு மக்கள் சமூகம் ஆதங்க படுகிறது. இந்தியாவின் தலை சிறந்த கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி இந்த அணை பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது என்று கூறியும் உள்ளது என்று சொல்ல படும்போது அந்த மக்கள் ஆதங்க படுவதில் நாம் குறை சொல்லவும் முடியாது.

ஆதலால் அன்பானவர்களே, இந்த விஷயம் பற்றிய நம்முடைய நிலைபாடுகள் எப்போதும் ஒரு இஸ்லாமியன் என்ற நிலையில் இருக்கட்டும். கருத்துக்களும் அப்படியே அமையட்டும்.

அல்லாஹுவின் ஒரு வார்த்தை புனித குர்-ஆனில் உள்ளதை நினைவு படுத்துகிறேன்.

"வானத்தில் இருந்து நாமே அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதை பூமியில் தேக்கி வைத்தோம். நிச்சயமாக அதை போக்கி விடுவதற்கும் நாம் ஆற்ற உடையவர்கள் ஆவோம்." (சூரா 23: ஆயத்து 18)

ஹைதுரூஸ் ஆதில்,கோழிக்கோடு-கேரளா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:முல்லைப் பெரியாறு அணை விவ...
posted by Mohmed Younus (Trivandram) [13 December 2011]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 14431

ஆடு, மாடு, காய்கறிகள், மீன் வகைகள் வைக்கோல், அரிசி பருப்பு, மற்றும் இரா சுறா இதுகளையெல்லாம் தாராளமாக பெற்றுக் கொண்டு நமக்கே ஆப்பு வைக்க நினைக்கும் இவர்களுக்கு, தமிழன் ஒன்று கூடி வைக்கும் ஆப்பால் தவிக்கும் நம் மக்கள் நிலையினை நாம் ஒருகணம் சிந்திக்கத்தான் வேண்டும். இதன் வெளிப்பாடுதான் முஹம்மத் யூனுஸ் கருத்து!!!

இங்கே உமர் அனஸ் கூற்றின் படி மலையாளிகள் வாய்த்த ஆப்பினால் ஏற்பட்ட ஆதங்கம் அல்ல.

இங்கே மலையாளிகளிடம் இருந்து இந்த வித அச்சுரத்தலும் இல்லை. மலையாளிகளோடு கொச்சை மலயாளத்தில்,தமிழன் என்ற அடையாளத்தோடு, முல்லைபெரியார் பிரச்னை பற்றி விவாதிக்கும் அளவுக்கு இங்கு ஆரோயக்யமான சூழ்நிலையே நிலவுகின்றது.

பெரும்பாலான தேயட்டேர்களில் தமிழ் திரைப்படங்களே காண்பிக்கப்படுகின்றது. இங்கே, நடிகர் சூர்யாவுக்கும்,விஜய்க்கும் மலையாள ரசிகர் மன்றங்கள் அதிகம். போத்திஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் எந்தவித அச்சுரத்தலும் இன்றி, அதிக மலையாள வாடிக்கையர்களோடு காணப்படுகின்றது.

கேரளா அரசாங்கம் அறிவாந்த முறையில் தனது வாதத்தை வைத்து அனைத்து தரப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரச்னை எங்கே என்றால், கழகங்களின் தூண்டுதலால்,எல்லையில் உள்ள தமிழர்களுக்கும், அங்கே கழகங்களின் வாடை அடிக்கும் ஒரு சில மலையாளிகளுக்கும் இடையில் தான்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:முல்லைப் பெரியாறு அணை விவ...
posted by seyed mohamed (KSA) [13 December 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14480

அருமை சகோதரர்களே,

இது முற்றிலும் கேரள கம்யூனிஸ்ட்களின் வேலை. பிரச்சினையை விஸ்வரூபம் எடுக்க செய்தது அவர்களே. எந்த மாநிலத்திலும் அவர்களது ஆட்சி இல்லை. கேரளம் மட்டும்தான் துருப்பு சீட்டாக உள்ளது. பிரவம் இடை தேர்தலில் அவர்கள் ஜெயித்தால் ஆட்சியை பிடிக்க வாய்ப்புள்ளது. பதவி சுகம் கண்ட அச்சுமாமன் என்னும் அச்சுதானந்தன் மீண்டும் முதல்வராக துடித்து கொண்டிருக்கிறார். எனவேதான் காலை பத்து மணிக்கு உண்ணா விரதம் தொடங்கி ஐந்து மணிக்கு முடித்துவிட்டு ஆவேசம் பொங்க " கொல்லறது கொல்லறது கொல்லறது வெள்ளம் கொடுகின்னவர கொல்லறது " என்று என்னவோ தமிழ் மக்கள் கேரள மக்களை கொன்று குவிப்பது போலவும் கேரள சகோதரர்களின் பிணங்களின் மேல் படுத்து தூங்குவது போலவும் ஆவேசமான பேச்சை பேசி உசுப்பேத்திவிடுகிறார்.

எனவே தமிழ் ஜனங்கள் அறவழியில் நடத்தும் இது போன்ற நியாயமான போராட்டங்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் அல்லது இதில் திமுக அதிமுக என்று அரசியல் பேசகூடாது. தமிழர்களின் உரிமை எங்கு சென்றாலும் எளிதில் பறிக்கப்பட்டு விடுகின்றன. இந்த அவல நிலை மாறிட வேண்டும் எந்த கட்சியானாலும் தமிழனின் உரிமைக்காக போரடுமானால் அதற்கு முழு ஆதரவு அளிப்போம்.

உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். கேரளம் என்னும் தேங்காய் விளையும் நாடு தமிழ் மன்னர்களால் ஆளப்பட்டு உருவாக்கப்பட்டது. கேரள நண்பர்களிடம் முல்லை பெரியாரின் உண்மை நிலையை ஈமெயில் மூலமும் மற்ற ஊடகங்கள் மூலமும் தெளிவாக எடுத்துரைப்போம் அவர்களின் அரசியல்வாதிகளின் சூழ்ச்சியை வெட்ட வெளிச்சமாக்குவோம். தெளிவு பெற்றால் அவர்கக்கு நல்லது.

இங்கே விளையும் விவசாய பொருகளில் அதிகம் அவர்கள்தான் லாபமடைகிறனர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. புற்று நோயால் சாகும் நமதூர் மக்களுக்காக உண்ணாவிரதம் - ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமா ? இது விஷயத்தில் அக்கறை காட்ட முடியுமா ? நீங்கள் சுயநல வாதிகளே...
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [13 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14492

எங்கோ உள்ள எல்லையில் உள்ள தமிழர்களுக்கு உண்ணாவிரதம் இருக்கும் நீங்கள்.. ஊரில் உள்ள ஒரு தொழிற்சாலையின் விஷ கழிவின் மூலம் புற்று நோயால் சாகும் நமதூர் மக்களுக்காக உண்ணாவிரதம் - ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமா ? இது விஷயத்தில் அக்கறை காட்ட முடியுமா ?

Administrator: Comment edited


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:முல்லைப் பெரியாறு அணை விவ...
posted by OMER ANAS (DOHA QATAR.) [13 December 2011]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 14494

சகோ யூனுஸ் உங்களின் நிலை அறிந்துதான் நானும் கருத்தினை வைத்துள்ளேன். நான் அங்கும் நீங்கள் இங்கும் மாறி இருந்தால் , கருத்துக்கள் இதே மாதிரிதான் இருக்கும் நம் இருவர் பெயர்தான் மாறி இருக்கும்.

நம் நிலை அப்படி! அரசியல் ஒரு சாக்கடை அதன் நிழலில் வாழ்பவன் பிணக்கடை! ஒத்துக் கொள்வோம்! அதே நேரம் மலையாள மீடியா செய்திகளில் கூட, அவர்கள் மக்களை தூண்டி விட்டு SMS அனுப்புங்கள் உங்கள் SMS ஐ நாங்கள் மத்திய அரசுக்கு அனுப்புகிறோம் என்று தினம் தினம் பரப்பி அல்லது மக்களை உசுப்பி விட்டதை எங்களோடு பயணம் செய்யும் மலையாளிகளே அசிங்கமாக பேசினார்கள்!

ஏங்க அணை நன்றாக உள்ளதா ஒழுக்காக உள்ளதா என்று அறிய வெளி நாட்டு கார வல்லுனர்களை அணுகாமல் இருப்பது ஏன்? எது எப்படி என்றாலும்,இழப்பு பிழைப்பு தேடியோ தொழில் செய்தோ வரும் தமிழ்&மலையாளி மக்களுக்கு தானுங்கோ! உங்களோடு நானும் ஆதங்கப் படுகிறேன்!

சேர சோழ பாண்டியன், இவர்களை அரசியல் வாதிகள் மறந்து வெகு நாட்கள் ஆகிவ்ட்டது!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:முல்லைப் பெரியாறு அணை விவ...
posted by seyed mohamed (KSA) [14 December 2011]
IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 14516

இரு மாநில மக்களும் சகோதரத்துவமா வாழ வழி செய்யாமல், தூண்டி விடுவது இருமாநில அரசியல் வாதிகள், அதில் முன்னே இருப்பது கேரளா அரசியல்வாதிகள். IIT கேரளா சார்புடைய அவர்களால் setup பண்ணி பிரச்சனை பண்ண அது வரும், இது வரும் என்று கிளபிவிடுகிரார்கள். பல முறை இரு மாநிலம் சாரா குழு ஆராய்ந்து தான் supreme கோர்ட் தமிழகம் சார்பா தீர்ப்பு கொடுத்துள்ளது.

கேரளா அரசு புதிய அணை கட்டினால் மட்டும் பாதிப்பு வராதா? இறைவன் நாடினால் தண்ணி இல்லா பாலைவனத்தில் கூட ஒரு கோடு போட்டு எல்லோரையும் அமுக்கி விடுவான். அல்லாஹ் தான் எல்லோரையும் பாதுகாக்கணும். கல்லணை போன்ற அணைகள் சரியா பாரமரிப்பினால் 1800 வருடம் உறுதியா உள்ளது. இது வெறும் நூறு வருடம் தான் தாண்டி உள்ளது.

------------------------------------------------------------------------------------------

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நம் அப்துல் கலாம் அவர்கள் நல்ல ஆலோசனை சொல்லி உள்ளார்கள். இதை கேரளா ஏற்றுகொள்ளுமா? மனமிருந்தால் தானே மார்க்கம் இருக்கும். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

கேரளாவுக்கு அதிக மின்சாரம், தமிழகத்துக்கு அதிக தண்ணீர், இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான அணை பாதுகாப்பு, இந்த மைய கருத்தைக் கொண்டு, இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சி மேற்கொள்ள வேண்டும். முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம்.

அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதன் மூலம், தமிழக மக்களுக்கு கூடுதல் தண்ணீரும், கேரள மக்களுக்கு கூடுதல் மின்சாரமும் கிடைக்கும். அணையின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும்.

--------------------------------------------------------------------------------------------

முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு பதிலாக, அணையை பலப்படுத்தும் வகையில், தற்போதுள்ள அணையில் 162 அடி உயரத்துக்கு பக்கவாட்டு சுவர் எழுப்பலாம். இது தான் அருமையான யோசனை.

எது எப்படியோ, எல்லோருக்கும் நன்மை அளிக்கும் வகையும் நல்ல தீர்ப்பு இறை அருளால் கிடைக்க துவா செய்வோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:முல்லைப் பெரியாறு அணை விவ...
posted by K S Muhamed shuaib (Kayalpatinam) [14 December 2011]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 14542

கோடிக்கணக்கான மக்களின் வாழ்வோடு விளையாடும் ஒரு உயிர்நாடியான பிரச்சினையை வெறும் அரசியல்வாதிகளின் சுயநல காய் நகர்த்தலாக மட்டும் பார்க்கக்கூடாது.

மதுரை ராமநாதபுரம் மாவாட்ட ஏழை விவசாயிகளின் வாழ்வில் வசந்தம் வீச ஒரு ஆங்கிலநேயனால் தனது சொந்த பொருட்செலவில் கட்டப்பட்டது முல்லைபெரியார் அணை. கேரளாவில் விவசாயம் குறைவு. எனவே அந்த அணையினால் அவர்களுக்கு பெரிய லாபம் இல்லை என்றே சொல்லவேண்டும்.

அரசியல்வாதிகள் எல்லா இடங்களிலும் ஒன்றுபோல்தான். இதில் கழகம் கம்யூனிஸ்ட் எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். கழகங்கள் எல்லாமும் உத்தமர்கள் அல்லர்தான். அதை நாமும் ஒப்புக்கொள்கிறோம்.

ஆனால் இது விசயத்தில் ஏழை விவசாயிகளின் நலனை முன்நிறுத்திப்பார்க்கும் போது நமது பக்கமே நியாயம் உள்ளது. கோடிக்கணக்கான மக்களின் உயிர்வாழ்வின் ஜீவாதாரமாக இருக்கும் ஒரு அணையை உடைப்பேன் தகர்ப்பேன் என்று சொல்ல்வது கடைந்தெடுத்த அராஜகம். அணை பாதுகாப்பற்றது என்று சொன்னால் அதை இரண்டு பக்கமும் சொல்லவேண்டும் பாதுகாப்பற்ற அணை எல்லோருக்கும் ஆபத்தானதுதான். அனால் இங்கு கேரளத்தவர்கள் மட்டுமே அணையின் உறுதி குறித்து சந்தேகம் கிளப்புகிறார்கள். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் புறம் தள்ளுகிறார்கள்.நிபுணர் குழுவும் அணை பாதுகாப்பாகவே இருக்கிறது என சொல்லி இருக்கிறார்கள். மலையாளிகள் ஒன்றும் தீர்கதரிசிகள் அல்ல.

அதேசமயம் ஒரு குறும் படத்தினால் (டேம் 999 ) ஏதோ தமிழகத்திற்கு ஆபத்து நிகழ்ந்துவிடும் என்று இங்குள்ளவர்கள் பூச்சாண்டி காட்டுவதும் கருத்து சுதந்திரத்தின் குரல்வளையை நெரிப்பதும் முட்டாள்த்தனம். அதிலும் வைகோ போன்றவர்களே இதை முன் நிறுத்துவது ஆச்சர்யம் அளிக்கிறது.

மலையாளிகள் தமிழர்களை தாக்குவதும் பதிலுக்கு தமிழர்கள் மலையாளிகளின் வணிக நிறுவனங்களை அடித்து நொறுக்குவதும் உச்ச கட்ட பாசிசம். ஒரு திராணியுள்ள நெஞ்சழுத்தம் மிக்க மத்திய அரசு இதை தடுத்து நிறுத்தி நியாயம் வழங்கவேண்டும் .எங்கே...?அது காவிரி பிரச்சினையில் விட்ட குறட்டையே இன்னும் கலையவில்லையே....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நகரில் இதமழை!  (13/12/2011) [Views - 3460; Comments - 2]
இன்றிரவிலும் கனமழை!  (12/12/2011) [Views - 2995; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved